காதலின் விதியம்மா 9

KV -0a90a2b6

வர்மா ரெசிடென்சி,

 

பூமகள் “ஏங்க முன்னோர்கள் பூஜை பண்ணணும்ங்க நீங்க உங்க தங்கச்சி கிட்டவும் மச்சான் கிட்டவும் இதை பற்றி பேசுங்க” என 

 

“கண்டிப்பா சொல்றேன் மா அப்படியே உன் மகனையும் கூப்பிட்டு போகணும். அவனுக்கு தான் பண்றது அவன் வந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று நாராயணன் தன் மனதில் இருப்பதை சொல்ல,

 

“கண்டிப்பா வருவான் அங்கவே ஒரு வாரம் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்ங்க. அங்க போய் பல வருடம் ஆகுதுங்க. நம்ம பூர்விகத்தை மறந்து நாகரிகத்தை தேடி ரொம்ப தூரம் ஓடி வந்துட்டோம்” என்று கவலையோடு சொல்ல,

 

“எதுமே நம்ம கையில் இல்லமா விதி நம்மை அங்க இருக்க விடலை. பைரவ் எப்ப பிரீ ஆ இருப்பான் னு கேட்டு போயிட்டு வந்துடுவோம்” என்று அங்கு சென்றால் நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல் சொல்ல அதே நேரம்,

 

“சார்….. சார் ப்ளீஸ் என்னை விட்ருங்க நான் ஆபீஸ் கே போயிடுறேன்…… ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்று தன்னால் முடிந்த அளவு கெஞ்சி கொண்டு இருந்தால் தேஜஸ்வினி.

 

“ஷுட் அப் உன்னை யாரும் கடத்திட்டு போகலை கத்தாமல் வா…… ஹோட்டல் ல சாப்பிட்டு உன்னை நேரா ஆபீஸ்ல விட்டுடுவேன் இப்படியே கத்திட்டு இருந்த நேரா உன்னை கடத்திட்டு காட்டு பக்கம் போயிடுவேன்” என்று காரை ஒரு கையில் ஓட்டி கொண்டு மறுகையில் அவளை எச்சரிக்க,

 

‘கேட்கலாமா வேண்டாமா வேண்டாம் கோபமா இருக்காரு…. இல்ல இல்லா கேட்டா தான் எனக்கு ரிலீபா இருக்கும்’ என்று சில நிமிட அமைதிக்கு பின் “சார் அங்க மீட்டிங் ஹால் ல ஒருத்தர் இருந்தாரே நெற்றி ல பட்டை போட்டு காமெடி ஆ ஆரஞ்சு கலர் ஷர்ட் போட்டு இருந்தாரே அவர் யாரு” என்று தன் சந்தேகத்தை கேட்க,

 

“உன்னை அமைதியா இருக்க சொன்னேன்” என்ற சிறிது வினாடியில் திரும்பி “இப்ப என்ன கேட்ட” என்றான் சந்தேக பார்வையுடன்.

 

அவளோ “அதான் சார் நம்ப மீட்டிங் ஹால் லை விட்டு வெளியே வரும் போது எதிரே ஒருத்தர் நம்பலை முறைச்சிட்டே இருந்தாரே அவரை தான்” என

 

“விளையாடாத தேஜ் நம்ம வரும் போதே  யாருமே எதிரே இல்லை” என்னும் போதே ஹோட்டல் வந்து விட காரை பார்க் செய்து விட்டு கீழே இறங்கினான்.

 

‘இல்லையே நான் பார்த்தேனே அப்ப நான் பார்த்தது யாரை’ என்று குழம்பி கொண்டே இறங்கினாள். இருவரும் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இந்த விவாதத்தில் தங்கள் பின்னால் வந்தவனை இருவரும் கவனிக்க தவறினர்.

 

 இது வரை படத்தில் மட்டுமே பார்த்த பிரம்மாண்டத்தை கண்டு ஒரு நிமிடம் அரண்டு தன்னை அறியாமல் பைரவின் கையை பற்றி கொண்டாள்.

 

‘இவ என்ன பண்ற’ என்று அவளை பார்த்தவன் அவளின் பதற்றத்தை குறைக்க, அவளின் பற்றிய கையில் அழுத்தம் கொடுத்து “பீ ரிலாக்ஸ்” என்றான்.

 

“சார் நீங்க சொன்ன ஆளு இங்க தான் இருக்கான். அவனோட ஒரு பொண்ணு மட்டும் இருக்கா சார் மத்த படி வேற யாரும் இல்ல” என்று போனில் யாரிடமோ பேசினான் அவர்களை தொடர்ந்து வந்த மர்ம நபர்.

 

………………

 

“சரிங்க சார் முடிச்சிட்டு கால் பண்றேன்” என்று தான் கொண்டு வந்த கத்தியில் கொடிய விஷத்தை தடவினான்.

 

“என்ன சாப்பிடுறிங்க தேஜ்” என்று அவளிடம் கேட்க “சார் என்னை எல்லாரும் மாதிரி அஸ்வினினு கூப்பிடுங்க இல்ல தேஜு னு கூப்பிடுங்க அதை விட்டு புட்டு தேஜ் தேஜ் னு ஆம்பள பிள்ளையை கூப்பிடுறா மாதிரி இருக்கு” என்று தயங்கி கொண்டே கேட்க,

 

“ஹா ஹா ஹா” என்று சிரித்து கொண்டே “கொண்டே “ஐ லைக் யு தேஜ்” என   “என்னது” என்று வாய் திறந்து அதிர்ச்சியாக கேட்க,     

 

அவள் வாயை முடி விட்டு “ஐ லைக் யுவர் நேம் தேஜ்” என்றான். “ஓ…..” என்று விட்டு “சார் நீங்களே ஆர்டர் பண்ணுங்க நான் வாஷ் ரூம் போயிடு வரேன்” என்று கிளம்ப அவள் செல்வத்தையும் பைரவ் தனியாக இருப்பதையும் பார்த்த அந்த மர்ம நபர் அவனை நோக்கி வந்தான் கையில் விஷம் தடவிய கத்தியுடன்.

 

 

தஞ்சாவூர் 

 

மூவரும் தஞ்சாவூரின் புகழ் பெற்ற கோவிந்த சாஸ்த்திரி அவர்களை பார்க்க வர, அவர்களின் நேரமோ அல்லது விதியின் விளையாட்டோ அவர் இல்லாமல் அவரின் சீடர் இருக்க,

 

ஊர்வசி “சாஸ்த்திரி இல்லையா” என்றது “இல்லங்க மா அவங்க யாத்திரைக்காக காசி போய் இருக்காங்க வர ஒரு மாசம் ஆகும். நீங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க” என

 

“பசங்களுக்கு கல்யாணத்திற்கு பெயர் பொருத்தம் பார்த்து தேதி குறிக்கனும்” என்றதும் “ஜாதகம் இல்லையா மா” எண்றதுக்கு பொன்னி “இல்லங்க நாங்க அவளுக்கு ஜாதகம் எழுத்தவே இல்லை” என்று இழுக்க

 

“அதில் என்னமா இருக்கு பிறந்த நேரத்தை சொல்லுங்க பேஷா பொருத்தம் பார்க்கலாம்” என்று ஆர்யாவின் ஜாதகத்தை பார்த்து கொண்டே சொல்ல,

 

பொன்னியும் ரகுபதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பின் “பெயர் தேஜஸ்வினி பிறந்த நேரம் காலை 5.59 பிறந்த கிழமை வெள்ளி” என்று மேலும் சில தகவல்களை சொல்லிய பின்,

 

ஜாதகத்தை ஆராய்ந்து பின் “நல்லது மா….. பையனோட ஜாதகம் அமோகமா இருக்கு தொட்டது எல்லாம் தங்கம் ஆகிற ராசி கல்யாண யோகம் வேற கூடி வந்து இருக்கு. பொண்ணு ஜாதகமும் ரொம்ப நல்ல இருக்கு பத்துக்கு எட்டு பொருத்தம் பொருந்தி இருக்கு. இவங்களுக்கு இந்த இந்த நாளில் கல்யாணம் பண்ணலாம்” என்று ஒரு மாத இடைவெளியில் இரண்டு நாட்கள் குறித்து கொடுக்க,

 

மூவரும் அதில் மனநிறைவுடன் செல்ல அவர்கள் சென்ற அந்த பின் அந்த சீடனோ போனில் “நீங்க சொன்ன மாதிரியே அவங்க இரண்டு பேருக்கும் பொருத்தம் இருக்குனும் கல்யாண தேதியும் குறிச்சி கொடுத்துட்டேன்” என 

 

“சரி அதுக்கு பணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கையில் இருக்கும்” என்றதும் அந்த அழைப்பு துண்டிக்க பட்டது.

 

வெளியே வந்த மூவரில் பொன்னி “வந்தது தான் வந்துட்டோம் பக்கத்தில் இருக்கிற அம்மன் கோவிலுக்கு போயிடு கிளம்பலாம்” என்று மனதில் தோன்றியதை சொல்லி இருவரையும் பார்க்க,

 

ஊர்வசி “அதுக்கு என்னங்க போய்ட்டா போச்சு” என்றதும் மூவரும் கோவிலுக்கு சென்று தங்கள் பிள்ளைக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிராகாரத்தை சுற்றி வர அங்கே இருந்த சித்தர் ஒருவர்,

 

“தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காத வரம் கிடைத்தது உனக்கு. கொடுத்ததை நீ மறக்கலாம் ஆனால் கொடுத்தவன் மறப்பானா மனிதன் பல கணக்கு போடலாம் ஆனால் வெல்வது இறைவனின் கணக்கே. சிவனின் பிரசாதம் கிடைச்சிருக்கு உனக்கு. ஆனால் கிடைச்ச பொக்கிஷத்தை இழக்க போற. சொந்தம் கொண்டாட வர போறாங்க. மாற்ற முடியாத விதியை மாற்ற இழக்க போவது பல மனசை கல்லாக்கிகோ” என்று பொன்னியை பார்த்து சொல்ல,

 

அதை கேட்டு புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ரகுபதி “என்ன சாமி சொல்லுங்க” எண்றதுக்கு 

 

“குலம் காத்து குவலயம் காத்த வேந்தனது மகவு மேதகத்தை காக்க தன்னவளை இழந்து புது உறவையும் இழந்தவனது விதி மாற போகிறது. தன்னவனுக்காக உயிரை இழப்பதே அவளது விதி” சொன்ன அடுத்த நிமிடம் தியானத்துக்கு சென்றார்.

 

பொன்னி “எங்க இவர் சொல்லறது எதுமே புரியலை ஆனா அவர் சொல்றதுக்கு நம்ம ஆச்சுக்கும் சம்மந்தம் இருக்குமோனு பயமா இருக்குங்க” என 

 

ரகுபதி மனதும் அவர் சொன்னதை கேட்டு பதறினாலும், அதை சமாளித்து கொண்டு “அவங்க வேற எதோ சொல்லறாங்க மா நமக்கு இல்ல” என 

 

ஊர்வசி “கோவிலுக்கு வந்து நல்லதை மட்டும் நினைங்க மதினி நல்லதே நடக்கும் அண்ணா நீங்களும் நல்லதே நினைங்க. நம்ம கிளம்பலாம். ஜோசியர் சொன்ன மாதிரியே இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை வெச்சுக்கலாம்” என்றதும் அவர்களுக்கும் அது சரியாக பட சரி என்று கிளம்ப,

 

இவர்கள் பேசியதை கேட்ட சித்தர் தியானத்திலும் மெலிதாக சிரித்து வைத்தார். 

 

சென்னை 

 

அதிக ஆட்கள் இல்லாமல் கார்னெர் டேபிளில் இருந்தான் பைரவ். தனக்கும் தேஜுக்கும் ஆர்டர் கொடுத்து விட்டு போனில் முழுக,

 

அந்த மர்மநபர் பின் பக்கமாக கத்தியுடன் அவனை நெருங்க, அதை அறியாமல் வலைத்தளத்தில் உலக செய்தியை தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தான்.

 

அந்த நபர் அவனை குத்த கத்தியை ஓங்க, சரியாக அதே நேரத்தில் “பைரவ்” என்ற ஒருவரின் குரலில் பைரவ் நிமிர்ந்து பார்க்க, அவனை குத்த வந்தவனோ பக்கத்தில் இருந்த தடுப்பில் மறைந்து கொண்டு “ச்சை” என்றான். 

 

பைரவ் “ஹாய் நீங்க” என்று இழுக்க “யூ.எஸ்ல கிளொபல் இன்வெஸ்டர் மீட்டிங் ல மீட் பன்னோமே கேஷவ் குமார்” என்று தன்னை பற்றி சொல்ல 

 

அவர் சொல்லவும் நியாபகம் வர “எஸ்….. மிஸ்டர். குமார் எப்படி இருக்கீங்க என்ன இந்த பக்கம்” என

 

“அதை நான் கேட்கணும் சார். இது என்னோட ஹோட்டல். நீங்க தான் ஸ்டேட்ஸ் ல இருந்து இங்க வந்திருக்கீங்க எனி வெகேஷன்” என   

 

“இல்ல மிஸ்டர் குமார் நான் அங்க இருக்கிற பிசினஸ் ஆ பார்த்துக்க ஆள் போட்டு இப்ப இங்க தான் இருக்கேன் அப்படியே அப்பா பிசினஸை பார்த்துகிறேன்” என 

 

“எனக்கும் உங்களுக்கும் ஒரே வயசு தான் இருக்கும் நீங்க மிஸ்டர் குமார் மிஸ்டர் குமார்னு கூப்பிட்டு வயசான பீலுக்கு கொண்டு போகாதீங்க கேஷவ்னே சொல்லுங்க. சடனா இந்தியா வர காரணம் என்ன” என்று கேட்கும் போதே அங்கு வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்தால் தேஜஸ்வினி.

 

அவளை பார்த்ததும் “ஹே என்ன ஆச்சு டி எதுக்கு இவளோ வேகமா வர ஏதாச்சு பிரச்சனையா யாரவது எதாவது சொன்னார்களா” என்று அவனையும் அவளின் பதட்டத்தை கடன் வாங்கி கொண்டு கேட்க,

 

அவளுக்கோ பயத்தில் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் தொண்டை அடைக்க அவனே “ஒகே ஓகே கூல் ஒன்றும் இல்ல நான் இங்க தான் இருக்கேன்” என்று அவளை உட்கார வைத்து குடிக்க தண்ணி குடுத்தான்.

 

கேஷவ் “என்ன ஆச்சு மேடம்” என பைரவ் தான் “நத்திங் சீரியஸ் அவ இப்படி தான் எதாவது பல்லி, இல்ல கரப்பான்பூச்சியை பார்த்து கூட பயந்து இருப்பா நான் மனோஜ் பண்ணிகிறேன்” என்றதும் 

 

“ஓகே பைரவ் நான் கிளம்புறேன் இது என்னோட கார்டு எதாவது ஹெல்ப் வேண்டும்னா கூப்பிடுங்க” என்று அவன் கிளம்பியதும் “என்ன ஆச்சு தேஜ்” என்றவனை பார்த்து 

 

“அங்க வாஷ் ரூம் ல நான்…. நான் மூஞ்ச கழுவிட்டு கண்ணாடியை பார்க்கும் போது அதில் நான் தெரியல” என்னும் போதே 

 

“எதாவது பேய் பிசாசு இல்ல சம்திங் நியூ” என்று கிண்டல் செய்தவனை அதிசயமாக முறைத்து கொண்டே “இல்ல நான் ஒருத்தரை மீட்டிங் ஹால் கிட்ட பார்த்தேன்னு சொன்னேனே அவரை பார்த்தேன் ஆனா திரும்பி பார்த்தா அவர் இல்ல” என்று மேலே சொல்லும் முன்பே 

 

ஆர்டர் செய்த உணவுகள் வர பைரவ் “அப்புறமா சொல்லு முதல சாப்பிடு” என்றான் அவளின் பசியை உணர்ந்து.     

 

அவனை குத்த வந்தவனோ வேறு ஒரு பிளான் செய்து அதை செயல் படுத்த காத்திருந்தான்.

 

சாப்பிட்டதும் இருவரும் கார் பார்க்கிங்யை நோக்கி நடந்தனர். மதிய நேரம் என்பதால் மக்கள் யாருமின்றி வெறிச்சோடி இருந்தது. இன்னும் பதட்டத்தில் இருக்கும் தேஜுவை பார்த்து “தேஜ்” என அது வரை கனவில் இருந்தது போல விழித்து அவனை பேந்த பேந்த முழித்தாள்.

 

அவளின் பார்வையில் தன்னை தொலைத்தவன் அவளை நெருங்க, அதை எதுவும் கவனிக்காமல் பைரவ் பின்னே பார்த்து “அய்யோ சார்” என்று அவனை இழுக்க, அவனை இழுத்த வேகத்தில் மயங்கி சரிந்தாள்.

 

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல் பார்க்க அங்கோ அவனை கொலைவெறியோடு ஒருவன் கத்தியால் குத்த வருவதை பார்த்து,

 

“யாருடா நீ” என்று அவனை அடிக்க கையில் வைத்து இருந்த கத்தியோ பல கிலோமீட்டர் தூரம் சென்று விழுந்தது. அதில் கோபம் கொண்டே பக்கத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவனை அடிக்க வர, அவனோ அதை எளிதில் தடுத்து 

 

“டேய் நான் சண்டை போடுற மூடில் இல்ல அங்க வேற அவ மயக்கத்தில் இருக்கா” என்று அவன் வைத்து இருந்த கம்பியை பிடிங்கி அவனை சரமாரியாக தாக்கினான்.

 

‘தனியா வந்து தப்பு பண்ணிட்டோம்’ என்று நினைத்து வேகமாக அவனை தள்ளி விட்டு அந்த இடைவேளையை பயன் படுத்தி வேகமாக ஓடி விட்டான். அவன் ஓடுவதை பார்த்து ‘அப்புறமா உன்னை பார்த்துகிறேன்’ என்று விட்டு மயங்கி கிடக்கும் தேஜு விடம் சென்றான்.  அவளோ பேச்சு மூச்சின்றி வாடிய கோடி போல் தரையில் கிடந்தாள்.

 

“ஹே தேஜ்” என்று அவளின் கன்னத்தை தட்ட ஒரு அசைவும் இல்லை. கையை மூக்கின் அடியில் வைத்து பார்க் மெலிதாக வந்தது அவளின் மூச்சு காற்று. ஏற்கனவே பயத்தில் பதட்டத்தில் இருந்தவள் இன்னும் பயந்ததால் அவளின் இதய துடிப்பு நின்று நின்று துடிப்பதை உணர்ந்த பைரவ்,

 

‘தப்பு தான் உன்னை சேவ் பண்ண தான் இப்ப இதை பண்ண போறேன். ஐ அம் சாரி’ என்று மனதிலே மயங்கி இருந்தவளிடன் பேசி விட்டு மென்மையாக அவளின் இதழை தன் இதழால் சிறை பிடித்தான்.

 

அவளை காப்பாற்ற வேண்டும், மூச்சு கொடு வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த இதழ் அணைப்போ அவளின் மென்மையில் கரைந்து முடிவில்லா தொடக்கமாக செல்ல,

 

அவனின் மூச்சு காற்று உள்ளே சென்ற சில நொடிகளிலே நினைவு வந்த தேஜு தான் இருக்கும் நிலையை கண்டு அதிர்ந்தாள். 

 

விதிகள் தொடரும்…                                                                                                                                            நிலா