சமர்ப்பணம் 14

சமர்ப்பணம் 14

(பிப்ரவரி 2017 இல், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் “சத்தியா” எனப்படும் நாடு தழுவிய பருவ வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான வளப் பொருள்களை வெளியிட்டது.உறவுகள் என்பதை இளம் பருவத்தினர் புரிந்துகொள்வது முக்கியம் பரஸ்பர ஒப்புதல், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது)    

(பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வின் இழப்பீட்டு பகுதி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 357 ஏ விதியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, இது மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொரு மாநில அரசும் நிதி வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்கும் என்று கூறுகிறது.. இதுவரை 24 மாநிலங்களும் 7 யூ.டி.க்களும் பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டத்தை வகுத்துள்ளன.)

தனு தன் கோவா ட்ரிப் முடிந்து வந்ததும் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இதை சொல்லலாம் என்று கௌதம் குடும்பம் நினைத்திருக்க, தனுவோ அவர்களுக்கு பெரிய ஷாக்கே கொடுத்தாள்.

கெளதம் வீட்டுக்கே வந்து இறங்கியிருந்தது திருமண அழைப்பிதழ் மாடல், தங்க, வைர நகைகடை, அலங்கார catelogue, சிறந்த ஆடை வடிவமைப்பாளர் யார் என்ற ரிப்போர்ட் ஒரு அறை முழுவதும் டிஸ்பிலே போல் வைக்கப்பட்டு இருந்தது.

“என்னடா இது?”என்றவாறு வந்தார் வைரவேல்.

“பிரபா தான் தாத்தா இதை எல்லாம் கொண்டு வரச் சொன்னார்… தனு வரும்போது இதெல்லாம் அவங்க பார்த்து ஒகே சொல்லணுமாம்.” என்றான் லாரன்ஸ் கெளதம் குடும்பத்தின் பாதுகாவலன், நண்பன், ஆல் இன் ஆல்.

“அய்யோ ராமா!… டேய் முரளி! பாருடா உன் பையன் ஆரம்பிச்சுட்டான் மறுமடியும்…

அவ டிரஸ் எடுக்கவே ஒரு வாரம் இழுத்து அடிப்பான். ஸ்கூல், காலேஜ், தனுவின் போன், செருப்பு வரை எல்லாம் பெஸ்ட் மட்டும் தான் என் தங்கைக்கென்று அத்தனை அலம்பல் செய்வான்….

இப்போ திருமணம் கேட்கவா வேண்டும்!… இந்தத் திருமணம் முடிவதற்குள் நமக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கப் போறான் உன் மகன்.” என்றார் வைரவேல்.

“அது தெரிந்த விஷயம் தானே மாமா!… பெற்றது நாங்க ரெண்டு பேர் என்றாலும், கெளதம் தான் தனுவின் அம்மா, அப்பா எல்லாம்.

தனு பிறந்ததிலிருந்து அவளைக் கீழே கூட விடாமல் உள்ளங்கையில் வைத்துத் தாங்கி வளர்க்கிறான்.” என்றார் ரேணுகா பெருமையுடன்.

தங்கள் பங்களாவை சுற்றி ஓடி ஜாகிங் முடித்து, உடற்பயிற்சி அறையில் அன்றைய உடற்பயிற்சியை முடித்து விட்டு வேர்க்க விறுவிறுக்க வெளியே வந்த கெளதம் காதில் வீட்டினரின் பேச்சு எல்லாம் விழப் புன்னகையுடன் வெளியே வந்தான்.

varun tej in sportswearக்கான பட முடிவுகள்

“தாத்தா! என் தங்கை எனக்கு முதல் மக… அவளுக்கு உலகத்தில் எல்லாமே பெஸ்ட்டா தான் கிடைக்கணும். தனு இந்த வீட்டின் இளவரசி தாத்தா. அவளுக்கு இல்லாதது என்று எதுவுமே நம்மிடம் இல்லை.” என்றவாறு வந்து அமர்ந்த கௌதமை புன்னகையுடன் பார்த்து இருந்தார்கள் அந்த வீட்டினர்.

“ஹாய்!…” என்ற சத்தம் வாயிலிலிருந்து கேட்க, புன்னகையுடன் நால்வர் வாயிலுக்கு ஓடினார்கள் அந்த வீட்டு இளவரசி தனுஸ்ரீயை  உள்ளே வரவேற்க.

“தனு!.” என்றவாறு அவளை அணைத்து கொண்டனர்.

“எப்படிடா கண்ணா இருக்கே!…சரியா சாப்பிட்டியா”

“இடம் எல்லாம் எப்படி இருந்தது”

“என்னமா! இப்படி இளைச்சி போய் இருக்கே.”

ஒரு டூர் போய்விட்டு வந்தால் முகத்தில் இருக்கும் இயற்கையான சந்தோசம் தனுவிடம் இல்லை.

குடும்பத்தினரின் அன்பில், பாசத்தில் அவள் கண்கள் கலங்கி, தலை நிலம் பார்த்தது.

பாவம் அந்த அப்பாவி குடும்பம் அறியவில்லை அவர்கள் வீட்டுப்பெண் சென்றது ஒரு டூருக்கு இல்லை என்பதை.தனுவின் அந்தச் சிரிப்பும் இயற்கையானது இல்லை என்பதை.

இனிமேல் தான் அந்த வீட்டில் புயல், பூகம்பம், சுனாமி எல்லாம் வீசப்போகிறது என்பதை.

கெளதம் மட்டும் அமைதியாக இருக்க, “போ, தனு, அவன் கோபத்தில் இருக்கான். நீ சொல்லாமல் டூர் போயிட்டே என்ற கோபம்.” என்றார் ரேணுகா.

“அண்ணா! கோபமா…” என்றாள் தனு.

“இது என்னடா புது பழக்கம்… என்னிடம் சொல்லாமல் நீ எதையும் செய்தது இல்லையே!… நானும் மூன்று நாளாய் உன் மொபைல்க்கு அழைச்சிட்டே இருந்தேன்… நாட் ரீச்சபிள் என்று வருது.

உன் தோழி, அந்த வெண்கல கடை யானை போன் செய்தால், நீ குளிச்சுட்டு இருக்கே, வெளியே இருக்கே என்று உன்னிடம் போன் கொடுக்கவேயில்லை.

இன்னைக்கு மட்டும் நீ திரும்பியிருக்கவில்லை என்றால் நாங்க எல்லோரும் கோவாவில் வந்து இறங்கி இருப்போம்.” என்றான் கெளதம்.

அவன் குரலில் கோபம் இல்லை. எதையோ புரிந்து கொள்ள முடியாத குழப்பம் தான் மிஞ்சியது.தங்கை வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“அது அது வந்து அண்ணா… போன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு.ரிப்பேர்ருக்கு கொடுத்து இருந்தேன்… தவிர டூர் போன இடத்தில போன் யூஸ் செய்யக் கூடாதுன்னு எல்லோரும் முடிவு செய்து இருந்தோம்.” என்ற தனுவின் கண்கள் கெளதம் கண்களைச் சந்திக்கவில்லை.

“சரி சரி…. எங்களுக்கு என்ன வாங்கி வந்தே!” என்றான் கெளதம்.

தனு பேய் விழி விழித்தாள்.

“என்னடீ!.. எங்கே டூர் போனாலும் எனக்கு எதையாவது வாங்கி வருவாய் தானே!… ‘அண்ணா, இதைப் பார்த்தேன் உன் நியாபகம் தான் வந்தது என்று ஒருகார் பத்தாத அளவிற்கு வாங்கி வருவேயே!… அதான் கேட்டேன், என்ன வாங்கி வரலையா!….” என்றான் கெளதம் பரிசு கிடைக்காத குழந்தைபோல் அவன் முகம் வாடிப் போனது.

தனு கையில் இருப்பது அவன் பணம். அவனே வாங்கி கொள்ள முடியும். ஆனால் தங்கை வாங்கி தரும் பரிசுக்கு ஈடு இணை ஏது.

பிள்ளையாரின் தோப்பிலிருந்து காய் எடுத்து அவருக்கே உடைப்பது போன்றது தான் என்றாலும், அந்த அண்ணனுக்குத் தங்கை கையால் வாங்கி கொள்வதில், வெளியே போனாலும் ஒரு பொருளைப் பார்க்கும்போது,   உன் நியாபகம்  வந்துச்சு அண்ணா என்று தனு சொல்லும் அந்த அன்பிற்கு ஈடு ஏது.

‘மூன்று நாளில் எந்த பொருளைப் பார்க்கும் போதும் தங்கைக்குத் தான் நினைவு வரவில்லையா ஒரு கணம் கூட?’ என்று முரண்டியது கெளதம் மனம்.

“கெளதம்!… சின்ன பிள்ளாய் போல் முகத்தை தூக்கி வச்சுட்டு என்ன இது! அவ ஏதாவது வாங்கி வந்தாலும் எதுக்கு இது என்று ராகம் இழுப்பது, வாங்கி வரவில்லை என்றால் இப்படி முகத்தை தொங்க வச்சிட்டு.

அவளே டயர்ட்டா வந்து இருப்பா…. தனு போய் குளிச்சிட்டு வா கண்ணா… டிபன் சாப்பிட்டு ரெஸ்ட் எடு. உங்க அண்ணன் உனக்கு மிக பெரிய சர்ப்ரைஸ் வைத்து இருக்கான். இதுவரை நீ கொடுத்த கிபிட் எல்லாவற்றையும் விட இது மிக பெரிய கிப்ட்.” என்றார் ரேணுகா.

அன்னை சொல்வது புரிந்தாலும் கெளதம் மனம் சமாதானம் அடையவில்லை. எதோ ஒன்று முரண்டியது.

“போடா கண்ணா… போய் குளிச்சிட்டு வா… சாப்பிடலாம்.” என்று தங்கையை அனுப்பி வைத்தாலும் மனம் ஆறுதல் அடையவில்லை.

தன் அறைக்கு மாடி ஏறி போன தங்கையிடம் ஏதோ ஒன்று புதிதாய் இருப்பது போல் தோன்றியது கௌதமிற்கு.

தனுவும், கௌதமும் ரெடியாகி வர, ரேணுகா பரிமாற, பேசி கொண்டே உண்டு முடித்தார்கள் அந்த குடும்பம்.

அவர்கள் நிம்மதியாய், மனநிறைவோடு சிரித்தது, வயிறு நிறைய உண்டது அது தான் கடைசி.

சாப்பிட்டு முடித்ததும் தனு கண்களைக் கைகளால் மூடி, அவளை    டிஸ்பிலே வைக்கப்பட்டு இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

அந்த அறையின் சுவரில், விஷ்ணு ப்ளோ அப்  மாட்டப்பட்டு இருக்க, அதன் கீழ் தனுவை கொண்டு போய் நிறுத்திய கெளதம் தங்கையின் கண்களிலிருந்து கையை எடுத்தான்.

ganesh venkatramanக்கான பட முடிவுகள்

கண்ணைத் திறந்து தனக்கு முன் உள்ள போட்டோ பார்த்த தனு திகைத்தாள்.

“இங்கே பாருடா கண்ணா… அண்ணா என்னவெல்லாம் செய்து இருக்கான் என்று…” என்று அந்த அறை முழுவதும் குவிந்து இருந்த பொருளைக் காட்ட தனுவின் தலை சுழன்றது.

கௌதமும் அவளின் குடும்பமும் விஷ்ணு பற்றியும், அவன் குடும்பம் பற்றியும், அந்தப் பொருட்களைப் பற்றியும் சொல்ல அது அவள் காதில் நாராசமாக விழுந்தது.

தனுவின் முகம் போகும் போக்கைப் பார்க்காத அந்தக் குடும்பம் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே போகத் தனுவின் கோபம் எல்லை கடந்தது.

“நிறுத்துங்க…. ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஐ சே…” என்று உச்சஸ்தாயில் தனு கத்தி விட மற்ற நால்வரும் திகைத்தார்கள்.

அங்கே இருந்த புடவை, நகை, catalogue ஆட்களை லாரன்ஸ் வெளியேற்ற, கெளதம் குடும்பம் திகைப்பில் நின்றது.

“என்ன தனு மா.”  என்றான் கெளதம் ஒன்றும் புரியாதவனாய்.

“என்ன கன்றாவி இதெல்லாம்….” என்று எகிறினாள் தனு.

“என்னமா கன்றாவி அது இதுன்னு பேசறே…” என்றான் கெளதம் திகைப்புடன்.

“பின்னே இதை எல்லாம் வேற என்ன என்று சொல்லச் சொல்றே அண்ணா… யாரை கேட்டு இதையெல்லாம் ஏற்பாடு செய்தாய் நீ…” என்றாள் தனு கோபத்துடன்.

முகத்தில் அடி வாங்கியது போல் தள்ளாடிய கெளதம் அவனே அறியாமல் ஒரு அடிபின் நகர்ந்தான்.

தங்கை பேசும் மொழியே புரியாதவன் மாதிரி கெளதம் பார்க்க, அவன் நிலை கண்டு தனு உள்ளுக்குள் வருந்தினாலும், இதை எல்லாம் அவளால் ஏற்க முடியாத ஒன்று ஆயிற்றே

“ஏய்! என்னடி புதுசா இப்படி எல்லாம் பேசுறே!….” என்றார் ரேணுகா மகன் நிலையைக் கண்டு.

மூன்று நாளாய் தங்கைக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும் என்று கெளதம் அலைந்து கொண்டிருப்பதை அறியாதவர்களா என்ன.

“நீங்க இப்படி புதுசா செய்தால், நானும் அப்படி தான் கேட்க வேண்டி வரும். எவனோ ஒரு தெரு நாய் போட்டி எடுத்து வந்து மாட்டி வச்சிட்டு, என்ன இது வீடு முழுக்க….” என்றாள் தனு.

தனுவிற்கு எது பிடிக்கும், எது சூட் ஆகும் என்று தனுவை விடக் கௌதமிற்கு தான் நன்கு தெரியும்.

இதுவரை அவன் சாய்ஸ் எல்லாம் சோடை போனதும் இல்லை. ‘தி பெஸ்ட்’ மட்டுமே அவன் தங்கைக்குக் கொடுத்து வந்தான்.

அது பொருளாய் இருக்கும் வரை பிரச்சனை வரவில்லை. அவன் உயிருள்ள ஒன்றை, வாழ்நாள் முழுவதும் துணை என்று கடைசி மூச்சு வரும்போது, அதுவரை எல்லாவற்றிக்கும் தலை ஆட்டிய தங்கை போர்க்கொடி உயர்த்த யுத்த களத்தில் நிராயுத பணியாய் நின்றான் அந்த அண்ணன்.

“கண்ணா!…. விஷ்ணு யாரோ இல்லைம்மா… நம்ம பாண்டியன் அங்கிள் சன். அப்பா நிறைய முறை சொல்லி இருக்கார் இல்லை.என் க்ளோஸ் நண்பன் கூட டச் விட்டுப் போச்சுன்னு.அந்த அங்கிள் சன். டாக்டர்.

உனக்குப் பார்த்து இருக்கும் மாப்பிள்ளை…  மூன்று நாள் முன்பு நல்ல நாள் இருந்தது என்று விஷ்ணு குடும்பத்துடன் பேசி முடிச்சிட்டோம். நம்ம ஜோசியர் கிட்டே திருமண நாள் பார்க் சொல்லி இருக்கோம்…” என்றான் கெளதம்.

“அதைத் தான் யாரை கேட்டுச் செய்தே என்று கேட்கிறேன் கெளதம்.”  என்ற தனுவின் குரலில் அடுத்து என்ன சொல்வது என்று புரியாமல் நின்றான் கெளதம்.

அதுவரை, ‘அண்ணா அண்ணா, அண்ணன் ஒரு கோயில்’  என்று உருகி கொண்டு இருந்த தங்கையின் குரலிலிருந்து மரியாதை மட்டும் அல்ல, பாசமும் ராக்கெட் ஏறி விடை பெற்று இருக்க ஒட்டுமொத்த குடும்பமும் திகைப்பில் தான் இருந்தது.

“ஏய்! என்னடீ…. யாரை கேக்கணும்… பேச்சு எல்லாம் தினுசாய் இருக்கு… அண்ணா என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல்…”என்றார் ரேணுகா.

“என்னைக் கேக்கணும்… என் திருமணத்திற்கு என்னைக் கேக்காமல் முடிவு செய்ய இவன் யாரு… இவன் ஒழுங்காய் நடந்தால் என் மரியாதை ஏன் குறைய போகுது?

என்னைக் கேக்காமல் எப்படி என் திருமணத்தை நீங்க முடிவு செய்யலாம்?” என்று தனு கத்த, கௌதமுடன் மற்றவர்கள் அவள் பேச்சும் மொழியே புரியாதவர்கள் போல் நின்றார்கள்.

“நீ தானே தனு சொன்னே… உன் திருமணத்தைப் பற்றி உனக்குக் கெளதம் என்ன ஐடியா இருக்குன்னு கேட்டபோது, அவன் கைப்பிடித்து இழுத்து பூஜை அறைக்கு அவனை இழுத்து சென்று, ‘பெற்றவங்க அவங்க தான் என்றாலும் எனக்கு இன்னொரு அப்பா, அம்மா நீ தான் அண்ணா. நீ ஒரு கழுதையை கூடி வந்து இது தான் மாப்பிள்ளை என்று சொன்னால் கூட எனக்கு ஒகே தான்.

மணமேடைக்கு கைப்பிடித்து நேராகக் கூட்டி போ. அவன் கருப்பா, சிகப்பா, ஒல்லியா, குண்டா, படித்தவனா, படிக்காதவனா எதுவும் எனக்கு முக்கியம் இல்லை.

என் அண்ணா எனக்கு நல்லதை தான் செய்வான். உலகத்தில் பெஸ்ட் தான் கொண்டு வருவான்.’ என்று இதே வாய்யை வைத்துத் தானேடீ சொன்னே. சத்தியம் வேறு செய்தே!.” என்றார் ரேணுகா.

“அது அப்போ சொன்னேன்… அதையே பிடித்துத் தொங்கிட்டு இருப்பீங்களா என்ன!…. ஒரே நாளில் கூட நம்ம எண்ணம் எல்லாம் மாறும் என்று கூடவா உங்களுக்குத் தெரியாது? எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. கான்செல் திஸ்.” என்றவள் அங்கிருந்து வெளியேற, கால் தோய்ந்து விட, அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான் கெளதம்.

விஷ்ணு நல்லவன், அவன் குடும்பம் நல்லவர்கள் என்று எந்தச் சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை.

“என்னங்க!… என்ன இப்படி எல்லாம் பேசிட்டு போறா… அப்படியே நிக்கறீங்க.?” என்றார் ரேணுகா.

“இப்போ பேச வேண்டாம் ரேணு… ஆற போடுவோம்…. இப்போ பேசினால் வார்த்தை தான் தடிக்கும்… கெளதம், அவ பேசியதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாதே… ரிலாக்ஸ்.” என்ற முரளியுடன் மற்றவர்கள் வெளியேற தலையை பிடித்து கொண்டு அங்கேயே அமர்ந்து இருந்தான் கெளதம்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தானோ, லாரன்ஸ் வந்து அவன் தோளை தொட, திடுக்கிட்டு நடந்தது கனவா நினைவா என்று ஒன்றும் புரியத்தவனாய் விழித்தான் கெளதம்.

“கெளதம்!… உன் கிட்டே சில விஷயம் சொல்லணும்.” என்றான் லாரன்ஸ்.

“இல்லை லாரன்ஸ் எனக்கு இப்போ மனசு சரியில்லை. வி டாக் லேட்டர்.” என்றவன் அறையை விட்டு வெளியே செல்ல முயல, “தனுவை பற்றி.” என்ற லாரன்ஸ் குரல் கேட்டு, திறந்த கதவை மூடி விட்டு திகைப்புடன் திரும்பினான்.

“சாரி கெளதம். இதை முன்னரே உன் கிட்டே சொல்லணும் என்று நினைத்தேன். வி ஷயம் என்ன என்று எனக்கும் தெரியலை…  உன்னிடம் சொல்லாமல் விசாரிக்கவும் எனக்கு மனம் இல்லை. தனு  எனக்கும் தங்கை தான். அதான்… என்னாலும் இந்த கோணத்தை சந்தேகிக்க முடியவில்லை.”என்று இழுத்தான் லாரன்ஸ்.

“என்ன சொல்லு…” என்றான் கெளதம்.

“தனு ஒரு பையன் கிட்டே ரொம்ப க்ளோஸ்சகா பழகிட்டு இருக்கா… அவங்க ஒன்றாய் சுற்றுவதை நானே பலமுறை பார்த்து இருக்கேன்.” என்றான் லாரன்ஸ்.

“ச்சு… நம்ம தனு குழந்தைடா லாரன்ஸ்…  சூது வாது எதுவும் இல்லாமல் எல்லோருடனும் ரொம்ப சகஜமாய் நட்புடன் பழகுவா என்று உனக்கு தெரியாதா!

எத்தனை பெண்கள் தோழிகளாய் இருக்காங்களோ, அதே அளவிற்கு ஆண் நண்பர்களும் அவளுக்கு உண்டு. இங்கே வீட்டுக்கே அவங்களை எல்லாம் அழைத்து வந்து இருக்கா….

‘இதில் யார் உன் ஆள்?’ என்று நானே அவளை கேட்டு இருக்கேன் லாரன்ஸ்.

‘இவங்க எல்லாம் என் நண்பர்கள் மட்டுமே. யாராவது இம்ப்ரெஸ் செய்தால் உன் கிட்டே சொல்றேன் அண்ணா.’ என்று சொல்லியிருக்காடா.” என்றான்.

“எந்த பெண்ணும் நண்பன் என்று சொல்பவனை காற்று கூட புக முடியாத அளவுக்கு கட்டி பிடிக்கவோ, லிப் டு லிப் எல்லாம் கொடுக்க மாட்டாங்க கெளதம்.” என்றான் லாரன்ஸ் எங்கோ பார்த்து கொண்டு.

“ஏய்!.” என்று கர்ஜித்த கெளதம், லாரன்ஸ் சட்டையை பிடித்தான்.

யாரை பற்றி யாரிடம் என்ன வந்து பேசுறே லாரன்ஸ்… உயிரோடு புதைச்சுடுவேன். நீயும் தான்டா அவளை தூக்கி வளர்த்த!

நம்ம வளர்த்த பெண் பொது இடத்தில் காலேஜ்ஜில் இப்படி எல்லாம் நடப்பா என்று நினைக்கறியா…. அது வேறு யாராவது இருக்கும்… வேண்டாம் இப்படி எல்லாம் பேசாதே.” என்றவன் நெற்றியை தேய்த்து கொள்ள, கெளதம் தோளில் கை வைத்து ஆறுதலாய் அழுத்தி விட்டான் லாரன்ஸ்.

“கெளதம்!… நான் இந்த வீட்டு உப்பை தின்னவன்டா… அனாதையான என்னை போல் பலருக்கு அட்ரஸ் இந்த வீடு தாண்டா.

எவன் கிட்டேயோ ஏமாந்தோ, எவனால் பாலியல் வன்முறைக்கோ ஆளாகி என்னை குப்பை தொட்டியில் போட்டு சென்றாள் என்னை பெற்றவள். என் உயிரை காப்பாற்றியது நீங்க தான்டா.

அப்பா, அம்மா, தாத்தா என்று கூப்பிட்டு வளர்ந்தது இந்த குடும்பத்தை தான்டா. அங்கங்கே குழந்தை இல்லை என்று கோயிலை, மருத்துவமனையை சுற்றிட்டு இருப்பாங்க.

நாங்க அம்மா,அப்பா இல்லாமல் இருக்கோம் டா… நாங்க எல்லாம் இவங்க கண்ணுக்கு தெரிய மாட்டோம்…. உங்களை மாதிரி ஒவ்வொரு குடும்பமும் தாங்கள் சாப்பிடும் ஒருவேளை உணவில், அணியும் ஒரு ஆடையில் அனாதை ஆசிரமத்தில் இருக்கும் என்னை போன்றோர்களை தத்து எடுத்தாலே நாட்டில் இது போன்ற இல்லங்களை மூடி விடலாம்.

ஊருக்கு தெரிவது சில அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மட்டும் தான். ஒவ்வொரு தெருவிலும் என்னை போல் லட்சம் அனாதைகள் சுற்றிட்டு தான் இருக்காங்க.

உன் குடும்பத்தை மாதிரி தெருவில் இருந்த எங்களையும் உங்களுக்கு    ஈடாக வளர்த்த நானா என் தங்கையை பற்றி தவறாக சொல்வேன் கெளதம்… தனு எனக்கும் தங்கை தான்டா.

மூன்று நாள் முன்னாடி கோவா டூர் என்று தனு  சொன்னதும், அம்மா என்னை தான் ட்ராப் செய்ய சொன்னாங்க. காலேஜில் நான் தான் ட்ராப் செய்தேன்.

காலேஜ் விட்டு வெளியே வந்ததும் தான் அவ பாக் ஒன்று காரில் இருப்பதை பார்த்துட்டு ரிட்டர்ன் போனேன் பாக் கொடுக்க…. அங்கே தான் அவ ஒருத்தனை கட்டி பிடிச்சுட்டு நின்னா… லிப் டு லிப் அவனுக்கு தான் …” என்றவன், “இப்போ தனு பேசி விட்டு போவதற்கு அவன் தான் காரணம் என்று நினைக்கிறன் கெளதம்.” என்றான்.

“அவன் யார் என்ன என்ற முழு டீட்டைல் மாலைக்குள்  எனக்கு வரணும் லாரன்ஸ். அவன் ஆதி முதல் அந்தம் வரை எனக்கு ஒன்று விடாமல் தெரியணும்.” என்றான் கெளதம் முக இறுக்கத்துடன்.

“சாரி டா… எனக்கு என்னவோ மனசு சரியில்லை கெளதம். ஏதோ பெருசா நடக்க போகுதுன்னு நினைக்கறேன்.” என்றவன் தனு பின்னால் சுற்றும் அவன் தகவலை திரட்ட சென்றான்.

கண்கள் கலங்கி இருக்க, தோட்டத்தை வெறித்தவாறு நின்ற கெளதம் தோளில் கை வைத்தார் தாத்தா வைரவேல்.

“என்னடா கண்ணா… இதுக்கு எல்லாம் கலங்கிட்டு… அவ சின்ன குழந்தைடா!” என்றார் கெளதம் தவிப்பதை காண சகியாதவராய்.

“நான் தப்பு செய்துட்டேனா தாத்தா!… தனு வரும் வரை காத்து இருந்திருக்கணுமோ!

அவ கடவுள் முன் சத்தியம் செய்ததை மனதில் கொண்டு தான் தாத்தா ஐயர் கோயிலில் சொன்ன போது கூட உடனே சரி என்றேன். அஞ்சலி மேல் எனக்கு இருக்கும் காதலும் தான் காரணம்.

திருமணம் முடிந்தால், கொஞ்ச நாளில் அஞ்சலியை கரம் பிடிக்கலாம் என்று நினைச்சுட்டு இருந்தேன்…. அப்படி நினைத்தது தப்பா தாத்தா…. என்னை அப்பா ஸ்தானத்தில் வைத்து சத்தியம் செய்தாலே தாத்தா… அதனால் தானே!… அவளுக்கு பெஸ்ட் கிடைக்கணும் என்று தானே!…” என்று கெளதம் அவரை கட்டி பிடித்து கண் கலங்கினான்.

கலங்கிய அவனை அணைத்து ஆறுதல் கொடுத்த வைரவேல், அவன் சமாளித்து கொண்டதும், தண்ணீர் பருக கொடுத்து, அவன் கையை பிடித்து கொண்டார்.

“கெளதம்!… தப்பு உன்னுடையது மட்டும் இல்லை கண்ணா… நாங்களும் சேர்ந்து தனு கொடுத்த வார்த்தையை நம்பி தான் கோயிலில் சரி என்றோம்.

வாக்கு கொடுத்த தனு தன் மாறி இருக்கும் மனதை நம்மிடம் சொல்லாமல் இருந்து தவறு செய்து இருக்கிறாள். இங்கு எல்லோரும் குற்றவாளிகள் என்று சொல்லி விட முடியாது… நார்மல் மனிதர்கள் நாம். தவறு செய்வது மனித இயல்பு கண்ணா.

வயதுக்கு வந்த பெண்ணிற்கு அவளுக்கு பிடித்த வாழ்க்கை துணையை  தேர்ந்து எடுக்கும் சுதந்திரம்   கொடுக்க வேண்டியது நமது கடமை. காலம் முழுக்க வாழ போவது அவ தானே!

மனதில் ஒருவனை நினைத்து கொண்டு இன்னொருவனை கணவனாய் நினைப்பது எல்லாம் நரகம் கெளதம். ஆனால் உலகில் பாதி மக்கள் அப்படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நம்மால் முடிந்தது அந்த நிலை நம்ம தனுவிற்கு வராமல் பார்த்து கொள்வோம். விஷ்ணு நல்லவன் தான். அவன் கிடைத்தால் தனு வாழ்க்கை சுவர்க்கம் தான். ஆனால் அவள் மனம் இன்னொரு இடத்தில் இருக்கும் போது வாழ போகும் காலம் அவள் நிம்மதியாய் இருக்கட்டும்.

ஆனால் தன் மனதை நம்மிடம் சொல்ல முடியாத அளவிற்கா நாம் தனுவை வளர்த்து இருக்கிறோம்! ஒரு பென், தோசைக்கு கூட நம்மிடம் அத்தனை யோசனை கேட்கும் அவள், காதல் என்று ஒன்று வந்த உடனே நம்மிடம் சொல்ல வேண்டும் என்று கூடவா    தோன்றவில்லை.. அந்த அளவிற்கு எல்லாம் அவளை ராணுவ பயிற்சி பள்ளி மாதிரி ஸ்ட்ரிக்ட்டா நாம் வளர்க்கவில்லையே கண்ணா.

என்னவோ… லாரன்ஸ் விசாரித்து வந்து சொல்லட்டும்… நல்லவனாய் இருந்தால் அவனையே பேசி முடித்து விடலாம். நீ கலங்காதே கெளதம். இதுவும் ஒரு பாடம்.

பெண் குழந்தையை பெற்றவர்கள் பென், ஆடைக்கு அவள் சாய்ஸ் விட்டு,  மாப்பிள்ளை என்று வரும் போது அவளுக்கு பிடித்து இருக்கிறதா என்று அவள் மனம் அறிய தவறும் போது   பிரச்சனை தான் ஏராளம்.” என்றவர் கிளம்ப, சுவற்றை பார்த்து கொண்டு உள்ளுக்குள் பதறி கொண்டு அமர்ந்திருந்தது அந்த குடும்பம்.

லாரன்ஸ் அலைந்து திரிந்து தனுவின் மனம் கவர்ந்தவனை பற்றி ரிப்போர்ட் கொண்டு வந்து கொடுத்தான்.

தனு பழகி கொண்டு இருப்பது அஞ்சலியின் ரெண்டாவது அண்ணன்  ராம்சந்தர்.

actor shyamக்கான பட முடிவுகள்

சரி, ‘ஒரே குடும்பம் தானே, தனுவிற்கு பிடித்து இருந்தால் ஒகே’ என்று மனதை தேத்தி கொண்டு, ராம் பற்றிய தகவல் படிக்கச் அவர்கள் தலையில் இடியை இறக்கியது.

ராம்சந்தர் ஒரு ட்ரக் அட்டிக். பார்ட்டி, பப், ட்ரிங்க்ஸ் பெண்கள் தான் அவன் உலகம்.

அவன், ‘அந்தப்புர தாரகைகளின் லிஸ்ட் ரொம்ப பெருசு’ என்ற தகவல் கெளதம் குடும்பத்தை நிலைகுலைய வைத்தது.

இதய துடிப்பே நின்று இருக்க, அடுத்து என்ன செய்வது என்று கூட புரியாமல் அமர்ந்திருந்தான் கெளதம்.

பயத்தில், திகைப்பில், குழப்பத்தில், அடுத்து என்ன என்று குழம்பி போய் அமர்ந்திருந்தவனை மீட்டது அஞ்சலியின் அழைப்பு.

“பேபி!” என்றான் கெளதம் அவளிடம் தான் விடை இருப்பது போல்.

“என்னங்க சார் செய்துட்டு இருக்கீங்க… என்ன காலையில் இருந்து ஒரு மெசேஜ், கால் இல்லை… தங்கச்சி வந்த உடனே இந்த பொண்டாட்டி மறந்து போச்சா…. இருங்க இருங்க… உங்க வீட்டுக்கு வந்து குடுமி பிடி சண்டை போடறேன்.” என்றாள் அஞ்சலி.

‘நான் இருக்கும் நிலையில்….’ என்று தன்னை தானே நொந்து கொண்டவன், கைகளில் இருந்த  ரிப்போர்ட், போட்டோ, வீடியோ எல்லாம் அவனை பார்த்து கை கொட்டி சிரித்து கொண்டு இருந்தது.

“என்ன கெளதம்!… என்ன ஆச்சு…. குரல் சரியில்லை… எனி ப்ரோபிளாம்.?”என்றாள் அஞ்சலி.

“ஹ்ம்ம்… உங்க அண்ணா யாரையாவது லவ் செய்யறானா?” என்றான் கெளதம், ராமினை மனதில் நினைத்து கொண்டு.

“ஒஹ்ஹ!… யெஸ் கெளதம் இந்த விஷ்ணு லூசு ஐந்து வருடமாய் தனுவை தான் லவ் செய்துட்டு இருக்கான்.” என்றவள் விஷ்ணு பேசியதை எல்லாம் சொல்ல,

‘இப்படி ஒருவனை வேண்டாம் என்று சொல்லிட்டு பெண்மையை மதிக்காத சாக்கடை புத்தியுள்ள ஒருவனை     தன் தங்கை தேர்ந்தெடுத்து இருக்கிறாளே!’ என்று நொந்து போனான்.

“உங்க அம்மா, அப்பா, விஷ்ணு, ராம் எங்கே?” என்றான் கெளதம்.

“டாட், மாம், விஷ்ணு, நான் வீட்டில் தான் இருக்கிறோம்… இந்த ராம் குரங்கு தான் எங்கேயோ போய்டுச்சு… காலையில் தான வந்தான். உடனே மயமாகிட்டான்.

‘வர வர வீட்டில் தங்கறதே இல்லை’ என்று ஹிட்லர் கூட டென்ஷன் ஆகி கத்திட்டு இருக்காங்க…. யார் என்ன சொன்னாலும் ராம் மட்டும் அவனுக்கு எது சரியோ அதை மட்டும் தான் செய்வான். அவன் ஒரு விதம். அவன் ஒரு கேள்விக்குறி கெளதம்.” என்றாள் அஞ்சலி சிரிப்புடன், கெளதம் இதய துடிப்பு எகுறுவதை அறியாதவளாய்.

“என்ன செய்யறே… அங்கிள், ஆன்டி, விஷ்ணு கூட்டிட்டு உடனே எங்க வீட்டுக்கு வா அஞ்சு…” என்றான் கெளதம் குரல் ஒரு மாதிரியாக.

“என்ன கெளதம்… என்னடா ஆச்சு… உன் குரலே சரியில்லை… என்ன ஆச்சு.” என்றாள் அஞ்சலி பதட்டத்துடன்.

“எதையும் என்னை கேக்காதே அஞ்சு. இங்கே கிளம்பி வா.” என்றவன் அழைப்பை துண்டித்து விட, குழப்பத்துடன் அஞ்சலி தன் வீட்டினரிடம் விஷயத்தை சொல்ல, அவர்களையும் பதற்றம் தொற்றி கொண்டது.

“என்னடி… டூர் போன இடத்தில், ‘என் தனுக்கு’ ஏதாவது ஆகிடுச்சா என்ன?” என்றான் விஷ்ணு பதட்டத்துடன்.

“தெரிலை அண்ணா…. கெளதம் எதையும் சொல்ல மாட்டேன் என்கிறார்…. குரல் வேறு சரியில்லை.” என்று அஞ்சலி கையை பிசைய, விஷ்ணு மனம் பிசைந்தது.

அடுத்த அறை மணி நேரத்தில் அவர்கள் கெளதம் வீட்டை அடைய, வாயிலில் காத்து இருந்த கெளதம் அவர்களை உள்ளே அழைத்து சென்றான்.

அந்த மாளிகையின் பிரம்மாண்டம், அதன் கலை அமைப்பு, அழகு, கம்பீரம் இது எல்லாவற்றையும் ரசிக்கும் மனநிலை அஞ்சலிக்கு சுத்தமாய் போய் விட்டது கெளதம் முகத்தை கண்டதும்.

சுமக்க முடியாத பாரம் சுமப்பவன் போல் இருந்தது அவன் முகம். இவளை கண்டதும் மின்னும் கண்கள், கண்ணீரை தான் சுமந்து இருந்தது.

அஞ்சலியை கண்டதும் அவர்களுக்கு மட்டுமே பிரத்தியோகமாக உருவாகும் கௌதமின் ரகசிய சிரிப்பு மிஸ்ஸிங்.

கம்பீரமாய் நிற்கும் அந்த ஆண்மகன் தோள்கள் தளர்ந்து போய் இருந்தது.

ஒரே பார்வையில் இது அனைத்தையும் கிரகித்து கொண்ட அஞ்சலியின் இதய துடிப்பு வேகமாகியது.

அஞ்சலி குடும்பம் உள்ளே நுழைய, அங்கே இவர்களை வரவேற்க கூட எழுந்து வராமல் கெளதம் குடும்பத்தினர் ஆளாளுக்கு ஒரு திசையை பார்த்து கொண்டு இருந்தனர்.

‘என்னங்கடா நடக்குது இங்கே!…. டைட்டானிக் கப்பல் முழுகியது போல் இவ்வளவு சோக கீதம் வாசிச்சிட்டு, கறுப்பு வெள்ளை படம் போல் சோகத்தை லிட்டர் கணக்கில் வடிச்சுட்டு இருக்காங்க.’ நினைத்த  அஞ்சலி,  ‘நண்பன்  படத்தில் ஜீவா குடும்ப கதை பிளாக் அண்ட் வைட்’  ஓட்டுவது போல் இங்கே கெளதம் வீடு இருப்பதை கண்டு திகைத்தாள்.

“அம்மா!… அப்பா! … தாத்தா!.” என்று கெளதம் குரல் கொடுக்க, தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் போல் அவர்கள் விழித்து, அஞ்சலி குடும்பத்தை கண்டு பதறி எழுந்தார்கள்.

“வாங்க… வாங்க..” என்று வரவேற்று உபசாரம் எல்லாம் முடிய, அவர்களை தன் அறைக்கு அழைத்து சென்றான் கெளதம்.

“கொஞ்சம் இருங்க… தனுவை அழைச்சிட்டு வரேன்.” என்று கெளதம் மாடியேற, பொதுவாக பேசி கொண்டு இருந்தது அந்த குடும்பம்.

தனு அறைக்கு வெளியில் நின்ற கெளதம், கதவை தட்டி நின்றான்.

கதவை திறந்து வெளியே வந்த தனு, அழுது அழுது கண்கள் வீங்கி சிவந்து பார்க்கவே பாவமாய் இருந்தாள்.

தனு முகத்தை கண்ட கெளதம் கண்களில் ரத்தமே வடிந்தது. பாவம் அந்த அண்ணன் அறியவில்லை அன்றிலிருந்து தனு கண்கள் கண்ணீரை தவிர வேறு எதையும் அறிய போவதில்லை என்று.

“கொஞ்சம் உன் கூட பேசணும் தனு. கீழே என் ஆஃபீஸ்சுக்கு வா… முகத்தை போய் அலம்பிட்டு வா..” என்றவன் அங்கே நில்லாமல், கீழே இறங்கி விட்டான்.

வாயிலில் விழி வைத்து காத்திருந்த அஞ்சலியும், விஷ்ணுவும் பார்வை பரிமாறி கொண்டனர். இவர்களை வீட்டிற்குள் அழைத்து வந்தவனை விட  இப்போ தோட்டத்தை வெறித்து நிற்பவன் முகம் இறுகி கிடந்தது.

அஞ்சலி எதையோ கேட்பதற்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த தனு அங்கே இருப்பவர்களை கண்டு திகைத்து நின்றாள்.

“நான் என்ன சொன்னேன்… நீ என்ன செய்து வைத்து இருக்கிறே கெளதம்!… அறிவு என்பது கொஞ்சமாவது உனக்கு இருக்கா, இல்லையா!… நான் தான் எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை…

எல்லாவற்றையும் நிறுத்து என்று சொன்னேன் தானே!… இவனை எதுக்கு இங்கே கூட்டி வந்து உட்கார வைத்து இருக்கே!…” என்று உச்சஸ்தாயில் கத்த, அஞ்சலி குடும்பம் திகைத்து எழுந்தது.

கத்திவிட்டு தனு வெளியேற போக, “நில் தனு. கொஞ்சம் இங்கே வந்து முதலில் உட்கார்.” என்றவன் தனு முறைத்து கொண்டு நிற்க, “சொல்றேன் இல்லை. கம் அண்ட் சிட் ஹியர்.” என்று குரல் இறுகி சொல்ல, அதில் இருந்த ஏதோ ஒன்று அங்கிருந்தவர்களின் தண்டு வடத்தில் குளிரை பரப்பியது.

எதையும் பேசாமல் தனு கெளதம் காட்டிய சேரில் அமர, தன் இருக்கையில் அமர்ந்த கெளதம், “இவர் விஷ்ணு. இது விஷ்ணு அம்மா, அப்பா, இது தங்கை அஞ்சலி.” என்றவன், “இவர்கள் தான் ராம்சந்தரின் குடும்பமும் கூட.” என்று சொல்லி முடிக்க, விருட்டென்று நிமிர்ந்தாள் தனு.

அதுவரை யாருக்கு வந்தோ விருந்தோ என்று அமர்ந்து இருந்தவள், அங்கு இருந்தவர்களையும் தன் குடும்பத்தையும் திரும்பி திரும்பி பார்க்க, கெளதம் விழிகள் தனுவை வெறித்தது.

“இவர் விஷ்ணுசந்தர். இவர் உன்னை ஐந்து வருடமாய் லவ் செய்துட்டு இருக்கார்.” என்ற கெளதம் அஞ்சலி தன்னிடம் சொன்ன விஷ்ணு பேச்சை சொன்னவன்,

“உனக்காக இவர் இது நாள் வரை விலகி நின்றார் தனு. இப்பொழுது கூட தன் குடும்பத்திடம் சொல்லி முறையாக தான் உன்னை பெண் கேட்டு நிச்சயம் செய்து உள்ளார்.

உன்னை என் சொந்த மகள் போல் வளர்த்த இந்த அண்ணன், ‘உனக்கு அப்பா’ என்று நீ சொல்லிட்டு இருக்கும் நான் உனக்கு ஏற்படுத்தும் வாழ்க்கை இதோ இவர் தான்.

உன்னை விட உனக்கு எது நல்லது என்று தெரிந்து உனக்காக நான் பார்த்து இருக்கும் உன் வருங்காலம் இதோ விஷ்ணு தான்.” என்றான் கெளதம்.

“தன் கையில் இருந்த பைல், ரிப்போர்ட், வீடியோ காஸ்ட் எடுத்தவன், “இது நீ உனக்காக நீ தேர்ந்து எடுத்து இருக்கும் வாழ்க்கை தனு…. இதில் உள்ள எதுவும் சரியாக இல்லை.

இந்த பாதையில் போவது உன் வாழ்வை அழித்து விடும்…. இது ரெண்டில் உன் சாய்ஸ் எதுவோ அதை நீ தான் சொல்லணும்.” என்றவன் விஷ்ணு முகம் இருக்கும் நிலையை பார்த்து,

“சாரி விஷ்ணு… என் தங்கையும், உங்க தம்பி ராமச்சந்தரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. இது எனக்கு இன்று தான் தெரியும்.

‘இவ என்னிடம் நீங்க யாரை சொன்னாலும் எனக்கு ஒகே.’ என்று என்னிடம் சொல்லியிருந்த ஒரே காரணத்தினால் தான் அன்று கோயிலில் கூட ரஷ் அப் செய்தேன். சாரி…” என்றான் கெளதம்.

“இதில் என்னுடைய தவறும் இருக்கு. சாரி தனு. உன்னிடம் ஒரு வார்த்தை நானாவது கேட்டு இருக்கணும். சாரி மா… என்னால் உனக்கு எந்த பிரச்னையும் வராது. ஹாப்பி மாரீட் லைப்.” என்றவன் உடனே வெளியேறி விட,அவன் பின்னால் ஓடியது அவன் குடும்பம்.

“அண்ணா!… அண்ணா!…” என்று ஓடி வந்த அஞ்சலியை பார்த்து, “என்ன மா…” என்றான்.

விஷ்ணு முகத்தில் எதையும் காட்டவில்லை என்றாலும் அவன் உடைந்து இருப்பதை அங்கிருந்தவர்களுக்கு மிக நன்றாக புரிந்தது.

“அண்ணா வா கிளம்பலாம்…” என்ற அஞ்சலியின் தலையை தடவி கொடுத்த விஷ்ணு,

“ராம்சந்தரும் உன் அண்ணா தான் அஞ்சு. அந்த பெண் அவனை விரும்புது….

நான் யாரை காதலித்தேன் என்பது முக்கியம் இல்லை .ஒரு பெண் யாரை கணவனாய் மனதில் பதிய வைத்திருக்கிறாள் என்பது தான் முக்கியம்….

நடக்க வேண்டியதை பாருங்க… ஐ வில் பி ஒகே.நான் கிளம்பறேன். நீங்க வந்துருங்க.” என்றவன் காரில் கிளம்ப, கௌதமுடன், அஞ்சலி குடும்பமும் திகைத்து போய் நின்றது.

இரு குடும்பத்தையும் வைத்து கொண்டு தனுவிடம் போட்டோ, வீடியோ ஆதாரம் காட்டி கெளதம் பொறுமையாய் அனைத்தையும் விளக்கி சொல்ல அங்கிருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.

ராம் நல்லவன் என்று நினைத்து தான் தனு உடல், பொருள் ஆவி என்று எல்லாவற்றையும் அவனுக்கு என்று கொடுத்து விட்டாள்.

அவன் கரம் தானே பிடிக்க போகிறோம் என்ற நம்பிக்கை.

ராம் கொடுத்த நம்பிக்கை நிலைக்குமா?

தனு ராம் செய்ததை எந்த விதத்திலும் நியாய படுத்தவே முடியாது தான் என்றாலும், சிலவற்றுக்கு யாரும் நீதிபதியாக இருக்க முடியாது.

“இது பொய் என்று நினைத்தாலும் இது தான் உண்மை. இது தான் நீ தேர்ந்து எடுத்த ராம் முகம். பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை.

உன்னை கேட்காமல், நீ இன்னமும் வாக்கு கொடுத்த எங்கள் வீட்டு பெண்ணாய் இருப்பாய் என்று நினைத்து தான் உன்னை கூட கேட்காமல் விஷ்ணு உடன் நிச்சயம் செய்தோம்.

தவறு எங்களுடையது தான். என்னை மன்னித்து விடு தனு. நீ எந்த முடிவு எடுத்தாலும் உனக்கு துணையாய் நான் இருப்பேன். இனி முடிவு உன் கையில்.” என்றவன் ரிப்போர்ட், வீடியோ, போட்டோ கொடுத்து விட்டு செல்ல அவனை பின் தொடர்ந்து மற்றவர்களும் வெளியேறினார்கள்.

அஞ்சலி குடும்பத்திடம் கெளதம் குடும்பம் மன்னிப்பு வேண்ட, அஞ்சலி ககுடும்பம் கெளதம் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டது.

“ரெண்டுமே நம்ம பிள்ளைங்க தான்…. அவங்களே முடிவு எடுக்கட்டும். நாம் துணையாய் நிற்போம்.” என்றார் வைரவேல்.

அஞ்சலி குடும்பம் ராம்மிற்கு ட்ரை செய்ய, அவன் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்தது.

“எங்கேடா போய் தொலைந்தே…” என்று அவர்கள் திட்ட, ராம் அடுத்த ஒரு வாரத்திற்கு யாராலும் காண்டாக்ட் செய்யவே முடியவில்லை.

தனுவிற்குமே உள்ளே பயம் பிடித்து கொண்டாலும், எல்லாமே கை மீறி போன பிறகு அவளுக்கு அவனை மணந்தே ஆகவேண்டிய நிலை.

இதை யாரிடம் என்ன என்று அவளால் சொல்ல முடியும்!

காதல் வந்து விட்டது.

ராம் மட்டும் தான் உயிர், உடல் சகலமும் என்று அவனே கதி என்று அவனை கணவனாய் நினைத்து வாழ்ந்தாகி விட்டது.

இனி அவனை விட்டு வேறு யாரையும் தனுவால் கணவனாய் நினைக்க முடியாது.

ஒரு வாரத்திற்குள் தனுவிற்கு பைத்தியம் பிடிக்காத குறை.

ராம் எங்கே போய் தொலைந்தான் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

அஞ்சலி, ராம் வீட்டு லேண்ட்லைன் என்று மாற்றி மாற்றி அழைத்து அவள் விரல் ரேகை மட்டும் இல்லை, அவளே தேய்ந்தது தான் மிச்சம்.

தனு நிலையை கண் கொண்டு ரெண்டு குடும்பத்தாலும் பார்க் முடியவில்லை என்பது தான் உண்மை.

ஒரு வாரம் எல்லார் உயிரையும் வாங்கி விட்டு, எங்கே சென்றான், என்ன ஏது எந்த விவரமும் சொல்லாமல் வந்து நின்றான் ராம்.

ராம் சந்தரும் பக்கம் பக்கமாய் டயலாக் விட்டு, ‘என் தனுவிற்காக இதை செய்ய மாட்டேனா, இதை செய்யமாட்டேனா?’ என்று கேட்டு இறுதியில் நன்றாகவே ரெண்டு குடும்பத்தையும் வைத்து செய்தான்.

பாண்டியனுக்கும், ஹேமாவுக்கு மகனின் நிலையற்ற தன்மை நன்கு தெரியும் என்பதால், அவன் சரியாக முடிவு எடுக்க மாட்டான் என்று தெரிந்து அவனிடம் பேசினார்கள்.

அவனும், ‘மணந்தால் அது தனுவை தான்’ என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தான்.

அதற்குள் விஷ்ணு அங்கிருந்து வெளிநாடு சென்று விட முடிவு செய்து விட்டான்.

கெளதம், அஞ்சலி எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாய் இல்லை.

“நான் யாரை வேண்டும் என்றாலும் காதலிக்கலாம். என் தம்பியும், அவளும் விரும்பும் போது அவளுக்கு நான் சொந்தம் கொண்டாடினால் அது கேவலம். ராம் கூட நல்லவன் தான். என்ன கொஞ்சம் பொறுத்து போக வேண்டி வரும்…

விட்டு கொடுக்கும் அளவிற்கு தான் எனக்கு மனசு இருக்கு அஞ்சுமா…. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று தூர இருந்து தான் சொல்ல முடியும்.

அட்சதை தூவி அவர்கள் ஒன்றாய் வாழ்வதை எல்லாம் பார்த்து கொண்டு உடன் இருக்க முடியாது… நானும் மனிதன் தான்.” என்றவனின் மனம் அவர்களுக்கு புரியாமல் இல்லை.

அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டான் விஷ்ணு.

திருமண நாளும் வந்தது. அதற்க்கு முன் தனு, ராமிற்கு அடிக்கடி சண்டையும் வந்தது.

முதல் பிரச்சனை கெளதம் ராம் பற்றி சேகரித்த தகவல்கள் பிளவை உண்டாக்கியது.

“எவனோ கொடுக்கும் ரிப்போர்ட் நம்பும் நீங்கள் என்னை நம்பவில்லையா?  ‘போட்டோ, வீடியோ மார்ப்’ செய்ய முடியும் என்ற பேசிக் அறிவு கூட இல்லாமல் என்னை நிற்க வைத்து குற்றம் சாட்ட யார் உங்களுக்கு உரிமை கொடுத்தது.” என்று ரெண்டு வீட்டிற்கும், குறிப்பாக தனுவிற்கு ராம் பொங்கலே வைத்து விட்டான்.

கெளதம் பெண் வீட்டு ஆளாக ராம் பற்றி விசாரித்ததையும் குற்றம் சொல்ல முடியாது. இப்படி தீர விசாரிக்காமல் பொம்பளை பொறுக்கிக்கும், குடிகாரனுக்கும், சிகப்பு விளக்கு பகுதியில்   விற்பவனுக்கும், ஏற்கனவே திருமணம் ஆனவனுக்கும், ரெண்டாம் லைன் ஒட்டி கொண்டு இருபவனுக்கும் வாழ்க்கை பட்டு நிர்கதியாக நிற்கும் பெண்கள் ஏராளம்.

ராம் கூற்றையும் மறுக்க முடியாது.

இல்லாத ஒரு உலகத்தையே, ‘அவதார்’ மாதிரி உருவாக்கவும், ‘தனோஸ் மாதிரி அழிக்கவும்’ கூடிய மாஜிக் இருக்கும் போது பழகி பார்த்து நம்பிக்கை வராமல், ரிப்போர்ட் எது வேண்டும் என்றாலும் சொல்வதை நம்புவீர்கள் என்றால்…. அவன் மனக்குமுறல் சரி தானே!

“காதல், திருமணம் எல்லாம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்னும், என்மேல் நம்பிக்கை வைக்காமல் எவனோ கொடுக்கும் ரிப்போர்ட்டை தான் நம்புவேன் என்றால், நீங்க உங்க வழியை பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்க கிட்டே நான் நல்லவன் என்று ப்ரூப் செய்தால் தான், தனு எனக்கு மனைவியாக முடியும் என்றால் அப்படியொரு வாழ்வே எனக்கு வேண்டாம்.

அவங்க தான் இன்வெஸ்டிகேட் செய்யறாங்க என்றால், ‘என் ராம் பற்றி எனக்கு தெரியும். ரிப்போர்ட் எல்லாம் நம்ப முடியாது என்று ஸ்டெடியாக நின்று சொல்வதை விட்டுட்டு, ‘இப்படி ரிப்போர்ட் வந்திருக்கு ராம்….’ என்று நீட்டி முழக்கறே!…

சோ நீயும் என்னை நம்பலை அப்படி தானே…’ என்று கோபத்துடன் கத்தினான்.

இதை எல்லாம் பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் ஒரு பார்வையாளர்களாய் மட்டுமே மற்றவர் நின்றனர்.

இதற்கிடையில் கெளதம், ராம் WWF, கிக் பாக்சிங், மல்யுத்தம் எல்லாம் நடந்தது.

பிரச்சனை பெரிசு ஆகாமல் இதை எல்லாம் முடித்து வைத்தது என்னவோஅஞ்சலி  தான்.

இவர்கள் எல்லோருக்கும் பாலமாய் நின்று அந்த ரெண்டு குடும்பமும் சிதறாமல் அனைவரையும் சமாதானம் செய்து, ராம் தனுவை மேடையேற்றியது அஞ்சலி தான்.

அஞ்சலி மட்டும் இல்லையென்றால் ரெண்டு குடும்பமும் பிரிந்து இருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

சண்டையிடும் ரெண்டு பக்கமும்      அவர்கள் தரப்பு மட்டுமே சரி என்று பேசுவார்கள். மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிக்க வேண்டும் என்று கூட இருக்காது.

கோபம் மனிதனின் உடன் இருந்தே கொல்லும் விஷம்.

‘தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.”

தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.”

சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.”

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.’என்று சிறு வயதில்  நம் ஆசிரியர்கள் அடித்து சொல்லி கொடுத்ததை எல்லாம், எல்லோரும் வாழ்க்கையில் பயன்படுத்தினால் உயிர்கள் ஏன் போக போகிறது.

முன்னால் இரவு வரவேற்பில் முகம் நிறைய புன்னகையுடன் நின்ற ராம்சந்தர், காலையில் எங்கு தேடியும் கிடைக்காமல் போனான்.

அவன் எங்கு போனான் என்று யாருக்கும் தெரியவில்லை.

வழக்கம் போல் ஒரு நிலையாய் நின்று முடிவு எடுக்க தெரியாமல், வாழ்கையை விளையாட்டு பொருளாய் நினைத்து வாழும் ராம்சந்தர், தனுவின் வாழ்க்கையிலும் விளையாடி விட்டு, அவர்கள் முகத்தில் கரியை பூசி விட்டு சென்றிருந்தான்.

தன் எண்ணங்களில் உழன்று கொண்டிருந்த கௌதமிற்கு கண்கள் சிவந்தது, தங்கையின் வாழ்வை நினைத்து. ஒவ்வொரு முறை நினைக்கும் போதும் அவன் கண்களில் ரத்தமே வடிந்தது.

ராமச்சந்தர் காணாமல் போன பிறகு படுத்த படுக்கையாகி விட்ட தனு, அவன் காணாமல் போன ஏழாம் மாதம் மயங்கி விழுந்தாள்.

அந்த நேரம் கௌதமை தவிர வீட்டில் யாரும் இல்லாது போனது தனுவின் துரதிஷ்டமே.

அலுவலகம் செல்ல கிளம்பியவன், தனுவிடம் சொல்லி விட்டு செல்ல அவள் அறைக்கு வர, ரத்த வெள்ளத்தில் இருந்த தங்கையை கண்டு சப்த நாடியும் அடங்கி நின்றான்.

“தனு!… தனு!…” என்று அவளை எழுப்பியவனின் கண்கள் ரத்தம் வரும் இடத்தை பார்த்து அதிர்ந்தது.

ஒரு ஆண்மகனாய் தங்கையை காண கூடாத கோலத்தில் கண்ட அவன் இதயம் நின்று போகாதது அதிசயமே.

காலின் வழியாக வழிந்த ரத்தம், படுக்கையை சிகப்பாக்கி கொண்டு இருந்தது.

புரிந்தும், புரியாமலும் அவன் இதயம் துடிப்பதை நிறுத்த, தங்கையை வாரி எடுத்து ஓடினான்.

இப்பொழுது நினைத்தாலும் அந்த கோர காட்சி அவனை நிலைகுலைய வைத்தது.

ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு, பெற்றோர் வர அவன் காத்திருக்க, டாக்டர்கள் அவன் தலையில் இடியை இறக்கினார்கள்.

‘அவன் தங்கை கர்ப்பவதி. குழந்தை முழு வளர்ச்சி அடையவில்லை. தாய் அல்லது சேயை தான் காக்க முடியும்’. மருத்துவர்கள் பேசும் பாஷையே புரியாதவனாய் உறைந்து நின்றான், தங்கையை மகளாய் வளர்த்த அந்த அண்ணன்.

“இல்லை என் தங்கை அப்படிப்பட்டவள் இல்லை….” என்று அவன் மனம் எத்தனை தடவை சொன்னாலும், சாட்சி வேறுவிதமாய் இருக்க, துடிதுடித்து போனான்.

விஷயம் கேள்விப்பட்ட அவன் அன்னை மயங்கி சரிந்தார்.

ராமச்சந்தர் செய்த துரோகம் எத்தகையது என்பது அந்த நொடி அவர்களை புரட்டி போட்டது.

ஒரு முறை தான் ஒரு முறை தான்

ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்

ஒரு முறை தான் தவறியதால்

அடைகிற வேதனை பலமுறைதான்..

ஊரை வந்து பூ தூவ

ஊர்வலம் போகும் கல்யாணம்

அம்மா அப்பா கை செர்த்து

அட்சதை போடும் சந்தோசம்

ஒரு முறை தான் ஒரு முறை தான்

ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான்

பெற்றவர்க்கு பிள்ளைகளாள்

சந்தோசம் சில முறைதான்

எவ்வளவு நிஜமான வரிகள்.

உணர்ச்சிகளின் பிடியில் தவறும் போது எதுவும் தெரிவதில்லை.

ஆனால் அதன் விளைவு நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி உள்ளவர்களையும் தானே மனதளவில் கொன்று விடுகிறது.

ராம் மாதிரியான அரக்கனின் ஒருவனின் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து, தனுவை மட்டும் காக்க சொன்னார்கள்.

நல்லவேளையாக அவர்களுக்கு தெரிந்த திலீப், அங்கே டூட்டியில் இருக்க அவர்களுக்கு பெரிதும் உதவினான்.

தனுவிற்கே தான் தாய்மை அடைந்து இருந்தது தெரியவில்லை. அப்படி தனக்குள் உறைந்து போய் இருந்தாள்.

சரியான உணவு, உறக்கம் இல்லாமல் பித்து பிடித்தவள் மாதிரி இருந்த அவள் நிலை குழந்தையின் உடல் நலத்தை பாதித்ததை அவர்கள் யாருமே அறியவில்லை.

ஒருவேளை அவள் கருவுற்று இருப்பது தெரிந்திருந்தால், உடல் நலத்தில் அக்கறை செலுத்து இருந்திருப்பார்களோ என்னவோ, காலம் கடந்த நிலை.

அந்த பிஞ்சு உயிர், அந்த வீட்டின் மூத்த வாரிசு தங்காமல் போய் விட்டது.

ரெண்டு குடும்பமும் சிதைந்து போய் இருக்க, தனு பலமுறை தற்கொலைக்கு முயல அவளை காப்பாற்றுவதே கெளதம் குடும்பத்தின் வேலையாய் போனது.

உடைந்து போய் உருக்குலைந்து போய் இருந்த தனுவை மீட்க திரும்ப வந்தான் விஷ்ணு, கடவுளே அனுப்பிய தேவதூதனாய்.

குற்ற உணர்வில், தன்னிரக்கத்தில் முழுகி மனசிதைவில் இருந்த தனுவை மெல்ல மெல்ல மீட்டான்.

நீண்ட ஒரு வருடம் தனு மெல்ல நிமிர அவன் மட்டும் காரணம் இல்லை, ‘லைப் கேர் தொண்டு நிறுவனர் சிவசாமி அய்யா’ அவர்களும் தான்.

ராம் தனுவை மணமேடையில் விட்டு சென்ற மூன்றாவது வருடம், அவர்களுக்கு விஷ்ணு மூலம் அறிமுகம் ஆனவர் தான் லைப் கேர் நிறுவன உரிமையாளர் சிவசாமி அய்யா.

தனுவை போலவே, ‘காதல் என்ற பெயரால் ஏமாற்றப்பட்டு’ சிகப்பு விளக்கு பகுதிகளிலும், ஹோட்டல்களில் கால் கேர்ள் ஆகவும், அடிமைகளாக வீட்டு வேலைகளுக்கு வெளிநாட்டில் விற்கப்படும் பெண்களை மீண்டும் காப்பாற்றி அவர்களுக்கு புணர் வாழ்வு அளிக்கும் தொண்டு நிறுவனத்தை நடத்தி கொண்டிருந்தார் சிவசாமி.

இவரின் நிறுவனத்தை தான் சுமித்ரா இப்பொழுது எடுத்து நடத்துவது.

விஷ்ணுவின் வரவை எதிர்நோக்கும் அளவிற்கு தனு தேறி இருந்தாள்.

ஆனால், அவளை அத்தோடு விட முடியாதே!

ராம்மை மறந்து, விஷ்ணுவை கணவனாய் ஏற்று அவனுடன் மனம் ஒன்றி வாழ வேண்டும்.

அதற்கு தனுவிற்கு தேவைப்பட்டது, ‘இரு கோடுகள் தத்துவம் மட்டுமே.

‘தங்கள் துக்கம், துயரம், வலி, வேதனை, அவமானம் மட்டுமே மட்டுமே பெரிது’ என்று நினைத்து தான் பலர் தங்களுக்குள் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.

‘நம்மிலும் உண்டு கேடு நாட்டில் பல கோடி.’ என்ற உண்மை பலருக்கு தெரிவதில்லை.

யாரின் வீட்டில் தான் பிரச்சனை என்று ஒன்று இல்லாமல் இல்லை.

யார் தான் தவறு என்ற ஒன்றை தெரிந்தோ, தெரியாமலோ செய்யாமல் இருக்கிறார்கள்!

ஏசுபிரான் சொன்ன முதல் கல், இன்னும் அப்படியே தானே இருக்கிறது… எடுக்க ஆள் இல்லாமல்.

இதெயெல்லாம் சுட்டி காட்ட, சிவசாமி அய்யா தனு குடும்பத்திற்கு தெய்வமாய் வந்தார்.

இதயம் சமர்ப்பிக்கப்படும்.

 

 

 

 

error: Content is protected !!