நான் உன் அடிமையடி special

 

 

 

 

 

 

 

 

 

ஓர் விமர்சனம் 

 

“நான்  உன்  அடிமையடி… “

 

உலகில் பிறந்த  ஒவ்வருவனுமே  யாருக்கேனும் அடிமைதான்  இம்மண்ணுலகில். 

 

அதில் ‘காளை’ எனும் முத்துக்காளை மட்டும் எப்படி தப்பிக் கொள்வான்  அவனுமே மாட்டிக்கொண்டான்,அதுவும்  அன்பை தேடி ஏங்கி தவிக்கும் ஓர் மங்கையிடம் அவளே ‘தவமங்கை’  அவனின் ‘காதல் எலிசு’. 

 

காளை 

தன் குடும்ப கஷ்டம் தீர தன் அன்னை தந்தைக்கு துணையாய் மண்ணில் கால் பாதித்தவன் நன்கு படிக்க ஆர்வம் இருந்தும் அவன் செல்ல அக்காவை நன்கு படிக்கவைத்து குடும்ப சுமையை  தன் தோளில் சுமந்ததோடு அக்காளுக்கும் அவள் விரும்பிய வாழ்க்கையை  அமைத்துவைத்தவன்.அவன் அக்காவிடம் அம்மா  செல்லமா அப்பா  செல்லமா எனக் கேட்டால் இவள்  சொல்வதென்னவோ தன் தம்பி  செல்லம். 

 தான்  படிக்கா விட்டாலும்  படித்த பெண்ணாக கட்ட வேண்டும் எனும்  கொள்கையோடு வாழும்,யாருக்கும் அடங்கா காளை அவன்.அன்புக்கு  அடிபணியும் கன்றவன். 

 

தவமங்கை 

 

தவமிருந்தாலும்  கிடைக்கமாட்டாள் எனும் பொக்கிஷம் அவனுக்கு.அவள்  முகம்  கண்டதும் காதல்  கொண்டவன்,பின் அதற்கு  தான் தகுதி  குறைந்தவன் என்று எண்ணி தன்னையே தாழ்த்திக்கொண்டு காதலை  மறைக்க போராடியவன். வெள்ளிக்கிழமைகளில் முரட்டுக்காளையாய் உருமாறி அவள் முன்னே தன் காதலை கொட்டித்தீர்ப்பவன். 

முரட்டுக்காளை :காளை வெறுக்கும் ஒருவன், ஆனால் இவனைக்கொண்டே  தன் காதலையும்  அடைந்துக்கொண்டவன்.

 

அஜய்குமார் 

பாசமான தந்தை,அம்முக்கு பிடித்த தந்தை.எந்த மனைவியும் தனக்கு  கிடைக்கவேண்டும் என ஆசைக்கொள்ளும் கணவர்.தன்னால்  தன் பிள்ளையை சரிவர வளர்க்க  முடியாத சூழலிலும் அதற்கான  பாதுகாப்புடன் தனிமரமென தன் பெண்ணை வளர்த்து விட்டவர். 

 

 அரசி 

குழந்தை பருவம் முதல் பாசமனைத்தும் இழந்த பெண்ணிவர்,தனக்கு  கிடைத்த கணவனின் அன்பை எதற்காகவும் யாருக்காகவும் இழக்க விரும்பாத மனதால் சிதைந்தவர். 

 

தன் பிள்ளையோடும் கணவனின் அரவணைப்பை, அன்பை பகிர விரும்பா  இவள்,  பாசமில்லா தாய் என முதலில்  மங்கைக்கு  தெரிந்தாலும், அவரின் மனநிலை அவரின்  நிலை  விளக்க, 

 என் கண்களில் அவருக்காய் சில துளிகள்.

காலம் அவரின்நிலை உணர்த்த அன்னைக்காய் அவரை விட்டு தூரமாக நின்று பாசம் வைபவள் மங்கை. 

 

அஜய் போன்ற ஓர் கணவன் அமையாது, தன் பிள்ளையையே ஒதுக்கும் மனைவியை சரியான முறையில் நாடியிருக்காது  விட்டிருந்தால் இன்று அவரின் நிலை!

 

தந்தையாய், கணவனாய் அனைத்தையும் ஒருநிலை  படுத்தி இருந்தாலும் மங்கை அவளின் பள்ளிப் பருவதில், இளம்வயதில் அவள் நிலை, பாசத்துக்காக ஏங்கியது  மனதுக்கு கஷ்டம் தான்.

 

காமாட்சி  ஆத்தா 

 காளைக்கு  அம்மாவாக, மங்கைக்கு  தாயுமானவராக. மாமியார் எனும் போது  பெண்களுக்கு எழும்  குணங்கள் கொண்ட  பெண்ணுக்கு எதிர் துருவம்  இவர்.பாசமிகு அன்னை. பாசாங்கு காட்டாத அன்பானவர், அரவணைப்பானவர்.தாய் பாசம்  கிடைக்காத மங்கைக்கு  தாயுமானவர். அடிக்கடி முத்தம் கேட்கும்  மருமகளுக்கு பாசத்தோடு  சோறூட்டி சீராட்டும் அன்பு ஆத்தா இவர்.  

 

அனைத்தும்  ஈடு  செய்ய வந்தான்  பாசக்கார காளை  அவளின் காளை. 

 

( ‘முத்து மாமா ‘… எல்லோருக்கும்  காளை  தானே  சோ நான்  அப்படி  கூப்பிடணும்னு ஆசை படறேங்க )

 

டீச்சரின் அடக்கமான  மாணவன், அவளிடம் மட்டும்  அடங்கிப்போகும் காளையிவன்.

எலிசுவின்  காதல் தேவன். 

 

மொத்தத்தில்  மங்கையின்  அடிமையிவன்…