VVP-9B

அத்தியாயம்-9(2)

நம்பகமான நீலம்(5):

“மேடம்… அப்பறம் என்னாச்சுன்னு சொல்லுங்க… சொல்லுங்க” ஆவலாக மங்கை கேட்க, புன்னகையுடன் தொடர்ந்தாள் மிதுலா.

———————

கொஞ்ச நேரம் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு, மிதுலாவும் சக்தியும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இருவரும் அங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஏற, அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்த அடுத்த விஷயத்தை எப்படி ஆரம்பிக்கலாம் என்ற யோசனையுடனே ஆரம்பித்தான்.

“மிது… கூட்டிட்டு போனேன் தெரியுமா?” மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

அவள் ‘எதற்கு’ என்பதை போல பார்க்க “நாம அந்த டேகேர் பிராண்ட் அக்வயர் பண்ணப்போறோம் பொறுமையாக அவன் சொல்ல, அவள் புருவங்கள் சுருங்கியது.

“அப்பறம் இப்போ நாம பாண்டிச்சேரி போறோம்” அடுத்த தகவலை சொல்ல, அதிர்ந்தாள் மிதுலா.

“என்கிட்ட எதுவுமே கேக்க மாட்டியா சக்தி? நீயே முடிவு பண்ணுவியா?” பொறுமையாக கேட்டாள் ஆனால் அதில் அவ்வளவு கோவம் இருந்தது.

“சொன்னா நீ கிளம்ப மாட்ட மிது. உன்கிட்ட சொல்றதுக்கு நிறைய இருக்கு. உன் அப்பா ஆசை என்னனு தெரியுமா உனக்கு? அவங்கள பத்தி நீ எதுவுமே கேட்கலயே” வருத்தத்துடன் சொன்னான் சக்தி. கோபத்தில் அவளின் முகம் சிவந்தது.

ஒரு ஏளனப்புன்னகையுடன் “தெருஞ்சுட்டு என்ன செய்ய சொல்ற? பொண்ணு காணாம போய்ட்டா… என்ன ஆனான்னு யோசிச்சாங்களா அவங்க? இன்னிக்கி என்ன தேடி வருவாங்க நாளைக்கி வந்துடுவாங்கன்னு எவளோ நாள் நான் ஏங்கிருப்பேன் நா…” வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது அவளுக்கு.

“புரிது மிது. ஆனா நீ ஒரு விஷயம் யோசிச்சயா? யார்கிட்ட போய் என்னனு கேட்கமுடியும்? யார் உன்ன கூட்டிட்டு போனாங்கன்னு தெரியும்? நீ தொலைஞ்சு போனவுடனே போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்தாங்க. ஆனா ஒரு தடயம் கூட கிடைக்கல

உன்ன பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் அந்த மேனேஜர், அதுவும் நீ சொல்லி தான் எனக்கே தெரியும், அவன் இதுல இன்வால்வ் ஆயிருந்தான்னே நீ காணாம போன ரெண்டாவது நாள் குடும்பத்தோட தற்கொலை பண்ணிகிட்டான். யோசிச்சு பாரு? ஸார் ஆண்ட்டி என்ன பண்ண முடியும்” விரக்தியுடன் சொன்னான்.

மிதுலா மனதில் ‘அந்த மேனேஜர் செஞ்சதுக்கு கடவுள் குடுத்த தண்டனையா இருக்கனும். பாவம் அவங்க பொண்ணும் மனைவியும் இவரு செஞ்ச தப்புக்கு பலி ஆக வேண்டியதா போச்சு வருந்தினாள் அவர்களுக்கு.

அவள் மெளனமாக இருக்க, அவன் தொடர்ந்தான். “உன்ன நாங்க ரொம்ப தேடினோம். ஸ்கூல்ல இருந்து அங்கன்வாடி வரல. வீட்டுக்கும் போல. ஸார் சுத்திட்டே இருந்தாரு ஏதாச்சும் தடயம் கிடைக்குமான்னு. ஆண்ட்டி சுத்தமா ஒடைஞ்சுபோய்ட்டாங்க”

“எனக்கு சென்னைல காலேஜ் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னு வலுக்கட்டாயமா தமிழ் ஸார் அனுப்பிவெச்சுட்டாரு. ஆனா எல்லா விதத்துலயும் தேடினாங்க. அப்படியே ஒரு வருஷம் போய்டுச்சு

ஆண்ட்டி உடம்பு ரொம்ப வீக் ஆயிடுச்சு. படுத்தப்படுக்கை ஆயிட்டாங்க. கிட்டத்தட்ட கோமாக்கு போய்ட்டாங்க” இதை கேட்டபோது மிதுலாவின் கண்கள் கலங்கியது.

“நீ தொலஞ்சுபோன அன்னிக்கி தமிழ் ஸார் ஸ்கூலுக்கு வரலன்னு சொன்னயில்லயா அவரு பாண்டிச்சேரில ஒரு மீட்டிங்க்கு போயிருந்தாரு. எதுக்குன்னு தெரிமா???”

புதுவை அரசாங்கத்தோட இணஞ்சு அங்கன்வாடில நல்ல தரமான சேவைகளை செய்யணும்ன்னு. அது நம்ம NGO வழியா உதவற மாதிரி செய்யணும்ன்னு தான் அந்த மீட்டிங்”

“நீ போனதுல ஒரு வருஷம் அந்த வேல அப்படியே நின்னுடுச்சு. ஆண்ட்டி உடம்பு சுத்தமா முடில ஒரு நாள் தவறிட்டாங்க” மிதுலா கண்கள் மூட, கண்ணீர் கண்களிலிருந்து கரை இறங்கியது.

“தமிழ் ஸார் ஏற்கனவே, நீ இல்லாம நடைபிணமா இருந்தாரு, ஆண்ட்டி போன துக்கத்துல எதுலயுமே கலந்துக்காம வீட்டுக்குள்ளயே இருந்துட்டாரு. அடுத்த வருஷமே அவரும் போய்ட்டாரு” கேட்டுக்கொண்டிருந்த மிதுலா கண்களை திறக்கவில்லை ஆனால் கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது.

நான் படிக்கிறப்ப, NGO’க்காக சில நிகழ்ச்சிகள் நடத்தினேன் என் ஃபிரின்ட்ஸ் கூட சேர்ந்து. அப்பறம், நிறைய பேர்ட்ட உதவிகள் வாங்கினோம். ஜோசப் ஸார் எப்போவுமே என்மேல நிறைய நம்பிக்கை வெச்சுருந்தாரு

அவரோட உடம்பு சரியில்லாதப்ப, என்ன ஆக்ட்டிங் செக்ரெட்டரியா இருக்க சொன்னாரு. அதையேதான் இன்னமும் கண்டின்யு பண்றேன்

அப்போதான் தெரியவந்துச்சு… தமிழ் ஸார்’ரோட அங்கன்வாடி ப்ராஜெக்ட் பத்தி… அவர் போறதுக்கு முன்னாடி லாயர்கிட்ட ‘என் மக காணாம போனப்ப சின்னப் பொண்ணு. ஆனா அவ வளர்ந்தவுடனே கண்டிப்பா எங்கள தேடிட்டு வருவா. அப்படி அவ வந்தான்னா எல்லா சொத்துக்கும் அவளை பொறுப்பாக்கிடுங்க. அவ அடுத்த பத்து வருஷத்துக்குள்ள வரலைன்னா, NGO குடுத்துருங்க’ன்னு சொல்லியிருந்தாரு மிது”

இதை அனைத்தையும் கேட்க கேட்க மூடியிருந்த அவள் கண்களில் கண்ணீர் மட்டும் வெளியேறியது.

“அவர் நினச்ச மாதிரி நீ வந்துருக்க ஆனா யாரையும் பாக்காம போயிட்ட” என்றான் விரக்தியுடன்.

கண்களை மெதுவாக திறந்த மிதுலா

“என்னாலயும் என்ன பண்ணமுடியும் சக்தி? அம்மா அப்பா தாத்தா பாட்டி யாருமே இல்லையே” சோகத்துடன் சொன்ன அவளிடம் “ஏன்… என் ஞாபகம் வரவேயில்லையா மிது?” அவள் முகம் பாராமல் ஜன்னல் பக்கம் பார்த்து அவன் கேட்க, ஸ்தம்பித்துப்போனாள் மிதுலா.

உண்மைதான் அவன் நினைவு வரவேயில்லை. அவளின் நிலைமை அப்படி. கவசம் சொல்லிக்கொடுத்தது அவனாக இருக்கலாம். ஆனால் அவனின் நினைவு வரவேயில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

விடு மிது அம்மா பொலம்பிட்டே இருப்பாங்க. ‘சின்ன பொண்ணு. எங்க போய் என்ன கஷ்டமெல்லாம் பட்டுட்டு இருக்கோன்னு. எனக்கும் அம்மாக்கும் எங்க வீட்டுப் பொண்ணு காணாம போனமாதிரி இருந்துச்சு

நான் காலேஜ் போய் சேர்ந்தப்பறம் கூட, நீ சென்னைல எங்கயாச்சும் இருப்பயோன்னு நிறைய இடத்துல போட்டோ வெச்சு தேடினேன். ஆனா ஒன்னுமே நடக்கல”

யாருமே தன்னை தேடவில்லை யாருக்கும் தான் தேவையில்லை என்கிற எண்ணம் தான் இருந்தது.

ஆனால் இவர்கள் இருவரும்கூட தனக்காக வருத்தப்பட்டிருக்கிறார்களே என்று நினைக்கும் போது தன்னைச் சுற்றி நல்லவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றியது மிதுலாவிற்கு.

அவனே தொடர்ந்தான்.

“உன்ன இங்க பாதப்ப ரொம்ப கோவம் வந்துச்சு. தமிழ் ஸார் நீ கண்டிப்பா வருவன்னு சொன்னாரு. உன்ன நினைப்புலயே ரெண்டு பேரும் போய் சேர்ந்துட்டாங்க. ஆனா நீ அவங்க நினைப்பு கூட இல்லாம இங்க வாழ்ந்துட்டு இருக்கன்னு கோவம். அதான் ‘நீ எப்படி இருக்கன்னு கேட்க மாட்டேன்’னு உன்ன பார்த்தப்ப சொன்னேன்” தன்னிலை விளக்கம் அவன் கொடுத்தான்.

அவன் தோளில் சாய்ந்துகொண்டவள் “உன்ன பாத்தப்ப மனசோரத்துல நிம்மதி துளிர் விட்டுச்சு சக்தி. என்ன ஞாபகம் வெச்சுட்டு ஒரு ஜீவன் வந்து பாத்தது என்னவோ சொல்லத்தெரியாத சந்தோஷம். ஆனா நான்… என்னோட பாஸ்ட்… யாரும் வேணாம்ன்னு தோணுச்சு” என்றவள் திடீரென அவன் மேலிருந்து எழுந்து

“இப்பவும் வேணாம் சக்தி இதெல்லாம். நான் என்னோட வேல. என்னோட வீடுன்னு இருந்துடறேனே. வீட்டுக்கு போய்டலாமே ப்ளீஸ்” கண்கள் கலங்க கெஞ்சினாள் அவனிடம்.

“மூணு வாரம் மிது எனக்காக. உன் அப்பா அம்மாக்காக தாத்தா பாட்டிக்காக… இன்னமும் சொல்லப்போனா கிறிஸ்டி பசங்களுக்காக” என்றதும் கலங்கிய கண்கள் முடிச்சிட்டன.

“ஆமா மிது அந்த மிருகம் சிபாரிசு பண்ண இடத்துல பசங்க படிக்கணுமா? இந்த வருஷத்துக்கு பணம் சேர்த்துட்டேன்னு சொன்ன. வேற இடத்துல படிக்கவெக்கலாமே? ஏன் கூடவே வெச்சுட்டு படிக்க வெக்கலாமே?” அவன் கேட்க

“வேற இடத்துல சேர்க்கலாம் சக்தி ஆனாக் கூட வேணாமே” என்றாள் மறுபடியும் கலங்கிய கண்களுடன்.

ஏன் என்பது போல் அவன் பார்க்க “அவங்களுக்கு அப்பா அம்மா இல்லன்னு வாழ்ந்துட்டு போகட்டும். இப்படிப்பட்ட அம்மான்னு தெரியவேணாம். என்கூடவே  இருந்தா எப்பவாச்சும் உண்மை தெரியற நிலைமை வந்துடுமோன்னு பயம்மா இருக்கு”

“அப்படி தெரியறப்ப, அவங்க நல்ல விதத்துல எடுத்துட்டா பரவால்ல. ஆனா தப்பா நினைச்சுட்டா? அவங்க வாழ்க்கையே ஸ்பாயில் ஆகிடும். அதுனாலதான். ஆனா, நீ சொல்றமாதிரி வேற இடத்துல சேர்த்துடலாம்” என்றாள் முடிவாக.

“திரும்பவும் சொல்றேன் சக்தி. அம்மா அப்பாவோட சொத்தெல்லாம் வேணாம். NGO’க்கே கொடுத்துடலாம். நான் வெச்சு என்ன செய்யப்போறேன்?” மறுபடியும் அவள் கெஞ்ச

“இங்க பாரு மிது எனக்கு நம்பிக்கை இருக்கு. எதையும் நல்லபடியா நடத்துற திறமை உன்கிட்ட இருக்குன்னு. நீ சொத்தை என்னவேனும்னாலும் பண்ணிக்கோ, நான் எதுவும் சொல்லல

ஆனா இனி நீ தான் நம்ம NGO’வ பாத்துக்கணும். நீ அப்படி பண்ணாத்தான் உன் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா எல்லாரோட ஆத்மாவும் சாந்தி அடையும்” என்றான் திடமான குரலில்.

மறுக்கவும் முடியமால் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திணறினாள் மிதுலா!

———————

“மேடம் சக்தி ஸார்ட்ட உடனே சரின்னு சொல்லிடீங்க தானே” புன்னகையுடன் மங்கை கேட்க, ஹ்ம்ம் என்றாள் அதே புன்னகையுடன் மிதுலா.