யாகம் 15
யாகம் 15
யாகம் பதினைந்து
கோடி ரகசியங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆழியை, ஆவேசமாக பார்த்துக் கொண்டிருந்தான், பிரசாத்.
ஊழிக்காலம் போல கருத்து இருண்ட மேகங்களின் நிறத்தைப் பிரதிபலிக்கும் சமுத்திர அரசனின் மேணி போலவே, அவனுடைய முகமும் இறுகி, அழுத்தமான அதரங்கள் மீசைக்கடியில் துடிக்க,
கண்களும் கோவைப்பழ நிறத்தில் சிகப்பாக வெதும்பி, காற்றுக்கு அலைபாயும் முடியினைக்கூட கைகளால் வாரி அடக்காமல், தனது பால்கனி கண்ணாடி கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்றவனின் உள்ளம், உலையெனக் கொதித்துக் கொண்டிருந்தது.
மங்கிய ஔியிலும் அவன் உருவம், போருக்குச் செல்லும் யுத்தவீரனாக முறுக்கி உரமேறி விரைத்திருக்க, அச்சமயம் அவனை யார் நோக்கினாலும் நடுங்குவது நிச்சயமே என்பது போலல்லவா, நின்றிருக்கிறான்.
இசையுனுடைய திருமணக்கலை எப்போது வீட்டைத் தொற்றியதோ அன்றிலிருந்து, அவ் இல்லம் சற்று சண்டைகளிலிருந்து ஓய்ந்தேயிருந்தது.
உட்பூசல்கள் ஏதுமின்றி வாழ்க்கை தொடரவே, பிரசாத்தும் அதிகமாக அமராவைக் கவனிக்கலானான். இருவரின் வேலைகளுக்கிடையிலும் நேர இடைவெளி அதிகமாக இருப்பினும், மிகக் குறைவாகக் கிடைக்கும் நேரங்களில் அவளுடன் ஒன்றிப் போகவே சிரத்தைப்பட்டான்.
அலுவலக பணியுடன், வீட்டின் மருமகள் பணியையும் திரம்பட நிறைவேற்றியவளின் மீது சிவகாமிக்கு கூட நல்லபிப்ராயமே.
இந்தருக்கும் அவனின் மேகத்திற்கிடையிலும் புரிதலொன்று மலர்ந்ததாகவே சிவகாமி, பிரசாத் எண்ணிக்கொண்டிருக்க, வேலுப்பாண்டியின் ஆராய்ச்சி வேறாக இருந்தது, யாருக்கும் கருத்தில் படவில்லை.
திருமணநாள் நெருங்க, இன்னும் மூன்று நாட்களில் திருமணம் எனும் சந்தர்பத்தில், ஹஸ்வந்தின் பெற்றவர்கள் மற்றும் அவனின் தமக்கை ஹிருசாலினியும் அவளின் கணவரும் கூட வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வருகைதந்து,
சென்னையில் ஹஸ்வந் தங்கியிருந்த வீட்டில் தங்கிக் கொண்டு சடங்குகளைத் தொடர்ந்தனர். ரகு, கெளரி இருவரும் பிரசாத் வீட்டில் தங்கிக் கொண்டனர்.
நிச்சயத்தினத்தன்று, அமரா மற்றும் கவி இருவருக்குமே, இந்தரே ஒரே புடவையை தெரிவு செய்திருந்தான்.
மாம்பழ வர்ணக் காஞ்சிப்பட்டில் கருநீல நிற ஜரிகையிடப்பட்ட புடவை என்னவோ இருவருக்கும் பாந்தமாக ஒட்டிக் கொள்ள, தாம்பூலத் தட்டினை அடுக்குவது, பொருட்களினை சரிபார்த்து விட்டு ஏதும் குறையிருக்குமா என தலையில் தட்டி யோசிப்பதுமாக வேலையிலிருத்த தன்னவளை,
பிரசாத் முதல் தடவையாக கணவன் எனும் உரிமையான பார்வையில் ஏறிட்டான், அவனுக்குள்ளும் சில நாட்களாக இனம்புரியாத அலை ஒன்று இதயத்தை தட்டித் தட்டிச் செல்ல, அமராவை தன்பத்தினியாக ஒப்பித்துக் கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தான்.
“இவ என்ன, நம்ம கண்ணுக்கு அழகா தெரியுறா? அப்போ அந்தப் பொண்ணு” முன்னாள் காதலியின் யோசனை வர “முகம் தெரியாத பொண்னை மறந்துட்டு உன் வாழ்க்கையைப் பாரு” ருத்ரேஷின் கூற்று நியாபத்துக்கு வந்தது.
ரசிப்பதும், விழிகளால் ருசிப்பதுமென நிச்சயம் நல்லபடியாக சீரும்சிறப்புமாகவே முடிந்தது. ஹஸ்வந்தின் பெற்றவர்களும் இந்தரின் பெற்றவர்களும் நன்றாக பழகிக் கொள்வதும் ஒரு வகையில் திருப்தியாக இருக்கவே யார்மீதும் குற்றமுள்ளதாக காணவில்லை.
முகூர்த்தம் என்பதாலும் திருமணம் வீட்டிலேயே நடைபெறுவதாலும் சடங்குகளை முடித்து, துயில் கொள்ளவே நள்ளிரவாகியிருக்க, அதிகாலையிலேயே எழுந்த அமரா,
பிரசாத் இன்னும் எழாமலிருக்கவே, “தேவா, தேவா” தட்டித் துயிலெழுப்பினாள். முகத்தில் நீர் திவலைகள் கோலமிட நின்றிருந்த மனைவியின் முகத்தை விழிகளால் பருகியவாரே எழ, வாழ்வில் புதுவிடியலாகவே அந்நாள் அவனுக்குத் தோன்றியது.
“இசையைப் பார்த்துட்டு வந்திடுறேன், நீங்க முதல்ல தயாரானா வசதியாக இருக்கும்” என்றவள், தன் கூந்தலினைக் கொண்டையிட்டுக் கொண்டே வெளியேற,
‘பிரசாத், அவள் மீதான உன்பார்வை சரி கிடையாது’ என ஒருமனது எடுத்துக் கூற மற்றையதோ, ‘உன் மனைவி, உன் உரிமை’ வேட்கையிட்டது.
தலையினை இடவலமாக ஆட்டியவனின் அதரங்களில் இரகசிய புன்னகை உதயமாக, குளியலறைக்குள் புகுந்து கொண்டவன், வேட்டி சட்டையில் தயாராகி கீழே வரும் வரையிலும் அவன் துனைவி அறைக்குத் திரும்பவில்லை.
மணமகனுக்கு அணிவிக்க வேண்டிய தங்கசங்கிலியை அறையில் மறதியாக வைத்திருந்த பிரசாத், அரைமணி நேரத்தின் பின் அறையை அடைந்து கதவினைத் திறக்க,
அதே கதவிற்கு நேர் எதிரேயிருக்கும் உடைமாற்றும் அறையின் கண்ணாடிக் கதவினைத் தள்ளிக்கொண்டு அமராவும் சரியாக வெளியே வந்தாள்,
இருவருக்கிடையிலும் நான்கு ஆள் தூரமிருக்க, பிரசாத்தின் பார்வையோ, துச்சமாக இடைவெளிகளை அடைத்து அவளை மொய்த்துக் கொண்டது.
வாடாமல்லி நிறத்தில் சாண் அளவு சந்தன நிற சரிகை வைத்து அதே நிறத்தில் உடல் முழுவதும் தாமரைக்கொடியாக வேலைப்பாடு செய்யப்பட்ட கலிங்கத்தினை உடுத்தி கொசுவமேதுமில்லாமல் தனியாக தோளில் விட்டு, அதற்குப் பொருத்தமான கையில்லாத சட்டையும் அணிந்து, பழங்கால முறைப்படி வடிவகைப்பட்ட எமரலில்; ஆரம், கழுத்து அட்டிகை, குடைஜிமிக்கி, வளைவி என நகைபூட்டியவள்,
மிதமாக ஒப்பனையுமிட்டு விஸ்வரூபினியாக ஜொலிக்க, லக்ஜையில்லாமல் அவள் அங்கங்களை அளந்து கொண்டிருந்தான் பிரசாத்.
சிகையலங்காரம் செய்வற்காக, நிலைக்கண்ணாடி முன் அமர்ந்து சீப்பை அவள் கையிலெடுக்க, அவளின் பின்னால் அவன் விம்பம் கண்ணாடியில் தெறிந்தது.
அவர்களின் திருமணத்தன்று
எப்படியிருந்தானோ அதே தோற்றம். இதழின் மேல் உராயும் மீசை, கூறாக நிமிர்ந்து நிற்கும் நாசி, இமைமுடிகள் அடர்ந்த காந்தக் கண்கள், ‘தீ மொஸ்ட் ஐகனிக் ஹேன்சம் ஹீரோ’ திரையுலகில் அவனுக்கு கிடைத்த முதல் அங்கிகாரம்.
அமரா, அவனின் விம்பத்தை ஒரு நொடி ரசனையாக ஏறிட்டாள், அடுத்த நொடியே பார்வையைத் தாழ்த்தி கொண்டு தன் பணியைத் தொடர முயற்சிக்க,
‘பிரசாத், டேய் பிரசாத் அவ உன் மனைவிடா’ மனது மீண்டும் மீண்டும் உருப்போட, ‘இவ அப்படி என்னத்தை சீவி சிங்கரிக்கப் போறா? இவ அத்தை மகன் தானே தினத்துக்கும் ரப்பர்பேன்டோட சுத்துவான். சரிதான் இப்போவெல்லாம் அவனுக்கு கவியைப் பார்க்கவே டைம் சரியா இருக்கும்’ அங்கலாய்க,
“கொடு” அவளின் கையிலிருந்த சீப்பை பறித்து, முடியை சீவி விட்டவன் கண்கள் அவளின் சட்டை மறைக்காத சந்திரவட்டம் போன்று தெரிந்த முதுகில் திளைத்தது. கபிலத்தலை மயிர்களை கொண்டையாக கட்டி, அதினைச் சுற்றி மல்லிகைச் சரத்தை வளையாக வைத்துவிட்டவன்,
கரங்கள் மெல்ல இறக்கி, அவள் முகத்தினருகே தன் முகம் கொண்டு வந்து, இடையோடு வலது கரத்தை சுற்றவிட்டவனின் வெப்ப மூச்சுக் காற்று அமராவின் கழுத்து, கன்னம், முதுகு என சூடு பரப்பியது. மேலும் முன்னேறி இதழ் குவித்து அவள் காதணியில் ஊத அதுவோ மென்னிசையாக முத்துக்கள் குலுங்க சினுங்கியது.
பிரசாத்தின் இத்திடீர் உணர்வு பிரவாகத்தை எதிர்பார்க்காமல் போன அமராவோ, இத்தனை நாள் கட்டிவைத்த வைராக்கியம் மடைதிறக்கும் நிலையை தணிக்க முடியாமல் பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தாள்.
மீட்டிய இசைவீணை நாண் துண்டிக்கபட மனம்கேளாமல், எழுந்தவளின் புடவை முந்தியை கைகளுக்குள் சுருட்டியிழுத்த பிரசாத், அவளின் முதுகில் இரேகைகள் படுமளவு அழுத்தி தனக்குள் வளைக்க,
“பார்பி கேள்” கதவை தட்டிக் கொண்டிருந்தான் இந்தர். அமராவோ அதனை சாக்காக வைத்து அவனிடமிருந்து விலகியவள், பிரசாத்தின் கண்ணத்தில் அடிக்க ஓங்கிய கையை அவனது வேஷ்டியின் பக்கம் உருவுவது போல கொண்டு சென்றுவிட்டு பின்இழுத்தவள்,
“நீ பண்ணின அதே காரியத்தை நான் பண்ணியிருந்தா எனக்கு பெயர் என்னனு தெரியுமா? கலவி காதலில் இருந்து வரவணே்டியது. பெண்னைத் தொடுறதுக்கு முதல் பெண்மையை நேசிக்க பழகுங்க நடிகரே” விடுவிடுவென அறையை விட்டு வெளியேரியவள்,
‘ஜஸ்ட் மிஸ், இல்லைனா இன்னைக்கே உண்மை எல்லாம் சொல்ல வேண்டி வந்திருக்கும், தேவா கிட்டயிருந்து தள்ளியிரு அமரா. இல்லைனா உன் ஐந்து வருச யாகம் ஐந்து நிமிச தேடல்ல அணைஞ்சு போயிருக்கும்’ தன்னைத் தேற்றியவளாக நடைபோட்டாள்.
பிரசாத்தோ, அவள் கூறிச்சென்ற வார்த்தையின் கணத்தை அப்போதுதான் அறிந்து கொண்டான். “அறிவுகெட்டவனே! அவ இந்தருக்காக தான் உன் மனைவியாக சம்மதிச்சிருக்கா. எப்போ அவ மனசுல நீ கணவன்னு பதியுதோ, அதுவர நீ அந்நியன் தான். ஷாே முதல்ல அவள காதலிக்க வை, அத விட்டுட்டு இப்படி பாயாத” சத்தமாகவே புலம்பிவிட்டு கீழே சென்றான்.
அடுத்தடுத்து, சாஸ்திரங்கள் இடம்பெற, தாலிகட்டவேண்டிய முகூர்த்தமும் நெருங்கியது. இசை கழுத்தில் ஹஸ்வந் முடிச்சிட, மூன்றாவது முடிச்சையிடுவதற்கு சிவகாமி ஹிருசாலினியைப் பணிக்க அவளோ அமராவை நோக்கினாள்,
“அமரா, வாடா நீதானே நாத்தனார் முடிச்சிடனும்” அழைத்தது வேறு யாருமல்ல, ஹஸ்வந்தின் தாய் வசுந்தராதேவி. “அம்மா…நான் எப்படி…அக்கா” அமரா இழுகவும்,
“அக்கா! போதும் உன் தங்கச்சிய முடிய சொல்லுரியா? இல்ல நானே கட்டட்டுமா? அவசரம் புரியாமா…” என்றான் ஹஸ்வந்.
இந்தரும் “போ” என கண்காட்ட, “அம்மு வாடா. உன் அண்ணனுக்கு எதுக்கோ அவசரம் போல” கிடைத்த சந்தர்பத்தில் ஹஸ்வந்தின் தலையில் குட்டு வைத்தாள் சாலினி.
“சீ..பே” என்று ஹஸ்வந் பளிப்புக்காட்ட, “யாராச்சும் முடிச்சப் போடுங்கமா நாளியாகுது” ஐயர் வசைப்பாட்டு பாடவே, அமரா நாத்தனார் முடிச்சிட்டாள்.
பிரசாத் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி. ‘எப்படி’ இதே கேள்வி ஒவ்வொருத்தர் மனதிலும் வேறு வேறு விதமாக ஒலிக்க, இசையின் மனதினுள் அப்பொழுதும் ஹஸ்வந் மீதான நம்பிக்கை குறைந்த பாடில்லை. ‘எதுவும் வெளிப்படுத்த முடியாத காரணமிருக்கும். என் ஹஸ்வந் நல்லவன்’ என்ற மந்திரம் வேதமாக அவளுள் ஓதிக்கொண்டிருக்க,
தன் திருமணத்தின் ஒவ்வொரு சடங்கினையும் நுண்ரசனையுடனே நிறைவேற்றினாள். ஆனால் அவள் நம்பிக்கையும் சுக்கு நூறாக வருங்காலத்தில் அவள் நம்பியவனே உடைப்பான் என்பதை அவள் அறியாள்.
அதன்பின் தம்பதிகள் ஆசீர்வாதங்களை வாங்குதல், பந்தி பரிமாறல் என நிகழ்வு தொடர, கடைசியாக மறுவீட்டு அழைப்பு இடம் பெற்றது. ஹஸ்வந்தின் சென்னை வீட்டிற்கே மணமக்களை அழைத்துச் செல்ல, ஆலம் சுற்றப்பட்டு, பூஜையறைக்குச் சென்றவர்கள் விளக்கிணை ஏற்றி முடித்து முன்னறையில் அனைத்து பெரியவர்களும் அமர்ந்து கொண்டனர்.
சிவகாமியே சந்தேகமாக ஆரம்பித்தார், “உங்களுக்கு எம் மருமகளத் தெரியுமா?” தேவியிடம் வினவ, “அவ எங்க பொண்ணுங்க…” என்றவர் விடயத்தை விளக்கினார்.
அதேநேரம், மாடியில் நீள்விருக்கையில் ஹஸ்வந் அமர்ந்திருக்க, இந்தரோ, “அடேய், இன்னும் ஏன்டா முகத்தைத் தூக்கி வைச்சிருக்க. பார்க்க சகிக்கல” முகத்தை சுழிக்க,
“ஆமா, இவரு ரொம்ப நல்லவரு, பாரு” அவனும் முகத்தைச் சுழித்தான்.
“பார்பி கேர்ள்! நீயே சொல்லேன்” இந்தர், அமராவைத் துணைக்கு அழைக்க,
“என்னக்கா நடக்குது” மேகவி சாலினியிடம் ரகசியமாக கேட்டாள், அதே கேள்வியை நயனத்தினாள் எழுப்பினாள் இசை.
“ஸ்ஸூ, கொஞ்சம் பொறுமா” சாலினி கிசுகிசுக்க,
“குட்டா நீயே பாத்துக்கேயேன்” கண்களைச் சுருக்கி அமரா கூற,
“வளந்தவனே!” என்று ஹஸ்வந்தின் தாடையை இந்தர் பிடிக்க, “போடா, உங்க மேரெஜ் அப்போ என்னையக் கலட்டி விட்டிங்க இப்போ வெட்கமில்லாம, என் கல்யாணத்துக்கு வந்து நிக்குற” என்று இந்தரின் கையைத் தட்டிவிட,
“ப்ச், சாரிடா…மச்சான்” அவனை இந்தர் அணைத்துக் கொள்ள, ஹஸ்வந்தின் வீம்பு பிடிவாதம் எல்லாம் தகர்ந்து போனது.
“இந்துமா ஐ லவ் யூடா” ‘இச்’ என்று அவன் கன்னத்தில் முத்தத்தை வைத்தான் ஹஸ்வந்,
“அடங்குடா” என்றவன், அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டே “லவ் யூ டூ டா ஹர்சு” என்று அவனை இறுக்கிக் கொண்டான் இந்தர்.
“அப்போ நானு” குழந்தைக் குரலில் அமரா கேட்ட அடுத்த நொடி, இருவரும் கைகளை சிறகு போல் விரித்துக் கொள்ள, அதில் தஞ்சம் புகுந்த அமராவோ,
“குட்டா, சின்னு லவ் யூ போத்” என்று இருவருக்கும் முத்தமிட்டாள். அடுத்து என்ன என்பது போல் மேகவி பார்க்க,
“என் பார்பி கேர்ள், என் டெட்டி” என இருவரும் அமராவைக் கொஞ்சுவதும், மிஞ்சுவதுமாக கேளிக்கை பண்ணிக் கொண்டிருக்க, அவர்கள் மூவரின் ஆரவாரமும் வீட்டை அதிரச்செய்தது.
பிரசாத்தோ, பொங்கியெழும் கோபத்தை கைகளை முஷ்டியாக மடித்து அடக்கிக் கொண்டே, தடதடவென படிகளில் இறங்கிச் சென்று வேலுவிடம் விடயத்தை அறிந்து கொண்டான்.
ஹஸ்வந், வழக்கறிஞர் மட்டுமல்லாது, அமராவின் நிறுவனத்தில் ‘லீகல் அட்வைசர்’ எனும் பதிவியையும் வகித்து வருகிறான். இதனால் நட்பென பழகிய குடும்பத்தில் இந்தர் மற்றும் அமரா இருவரும் உறவினராகவே காலப்போக்கில் மாறிவிட்டனர். மேலும் ஹஸ்வந்தினை அழைக்காமல் அவனிடம் தெரியப் படுத்தாமலும்,
இந்தர், அமராவின் திருமணம் முடிந்திருந்ததால், தன்னுடைய திருமணத்தில் அவர்களிருவரும் எந்தப்பங்கும் வகிக்க கூடாது என சண்டையிட்டு பேச்சுவார்தையில்லாமல் இருந்தார்கள். என சில பல சாயங்கள் மீண்டும் உண்மை மீது பூசப்பட்டே,
பெரியவர்களிடம் தேவியும், சிறியவர்களிடம் சாலினியும் எடுத்துக் கூறினர். இதை அனைத்தையும் இசை உட்பட அனைவரும் நம்பியிருக்க, மீண்டும் ஏமாறுவதற்கு பிரசாத் ஒன்றும் அடி முட்டாள் அல்லவே!
காலையில் எத்தனை இனிமையாக விடிந்த பொழுது, இப்போது பிரசாத்தினுள் நரக அசௌகரியத்தைக் கொடுத்தது.
எந்த முகத்தையும் எந்த உருவத்தையும் மனைவி எனும் அந்தஸ்தில் அடையத்துடித்தானோ, இப்போது அவள் வனப்புக்கள் மாயமோகினியாகவே அவன் விழிகளில் விம்பமிட்டது.
இதில் பேரிடி என்னவென்றால், இசை ஹஸ்வந்தை பரிசுத்தமாக, கண்மூடித் தனமாக விரும்புவதே.
எப்படியாவது முதலிரவைத் தடுக்கலாம் என்று பார்த்தால், அதுவும் பிரசாத்தினால் முடியாமல் போகவே, தன் அறையில் கடலை வெறித்துக் கொண்டு, நிலைகுழைந்து இதயம் ‘தாம்தூம்’ என ஏகத்துக்கும் துடிக்க நின்று கொண்டிருக்கிறான்.
“ஏன், ஏன், ஏன்” இந்தக் கேள்வியை யாரிடம், எப்படி, எதற்காக கேட்பது என்றே அவனுக்கு புரியவில்லை.
“ஒரு வேளை, அந்த டிடக்டிவ் ரிபோர்ட் சரியாக இருந்தால், இவர்கள் மூவரும் நல்லவர்களே. இல்லை எனின், கெட்டவர்களாக இருக்கவேண்டும். ஆனால் இந்தர் காதலாக மேகவியை நோக்குவதை எத்தனையோ முறை அவதானித்து இருக்கிறேன்,
அது போலவே ஹஸ்வந் அன்று வைத்தியசாலையில் இசை வெடித்து அழும் போது அவன் துடித்ததும், இன்று மங்கள நாணை அவள் கழுத்தில் ஏற்றும் போதும் காதல் பொங்கி வழிந்தானே?” யோசனையைத் தொடர்ந்தவன்.
“ஆக அமரா, மனைவியாவும் இல்லை, காதலியாகவும் இல்லை. நடிக்கிறாள் ஏதோ ஒன்றுக்காக இந்த நடிகனிடமே நடிக்கிறாள். அவளிற்கு கட்டுப் பட்டே அவ் ஆண்களிருவரும் காதலிருந்தும் ஏதோ கண்ணாம்பூச்சியாடுகின்றனர்” யோசனையை சரியான இடத்தில் முடித்துக்கொண்டான்.
“முதலில் அவளை அடையாளத்தை தோலுறிக்க வேண்டும், பின்பே ஆண்களிருவரையும் சரி செய்து என் வீட்டுப் பெண்களின் வாழ்வை மீட்டுக் கொடுக்க வேண்டும்” அடுக்கடுக்காக மூளைக்குள் பட்டியலிட்டுக் கொண்டான்.
அதே நேரம், வீட்டின் நுழைவாயினுள் சருக்கிக் கொண்டு நுழைந்தது அமராவின் ரோல்ஸ் ராயிஸ் கார், அதிலிருந்து முகம் கொள்ளப் புன்னகையுடன் வீட்டை நோக்கி இறங்கி நடந்துவந்தவளை,
வேட்டையாடும் சிறுத்தையின் வெறிகொண்டு, கண்களை இடுக்கி ருத்ரதாண்டவ மூர்த்தியாக வெறித்த பிரசாத்,
“சிரிப்பா சிரிடீ, இனித்தானே இந்த நடிகரோட நடிப்புத் திறமையை பார்க்கபோற. உன் கொட்டத்தை அடக்கலனா, நான் தீ கிரேட் ஆக்டர் தேவ் பிரசாத் நடராஜன் இல்லைடீ” கோரமாக சிரித்தே சபதமிட்டுக் கொண்டான்.
எரிக்கும் குழம்பு நானடா,
எனையே தகிக்க துடிப்பாய் நீயடா,
தீக்குள் தீயாய் நீ வீழ,
உனையே குடிப்பேன் நான்!
அவள் வீழ்த்தினாள்….