வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 7.1

Screenshot_2020-09-30-16-03-02-1-a79d6f3f

அத்தியாயம் 6 இன் தொடர்… 

“… அங்கே விழா அறையில்,

“கிருஷ்ணா,மிஸ்.வீணா அவங்களை எங்கோ பார்த்திருக்கேன்டா.ஆனா  எங்கன்னு சரியா நினைவில்லை. உனக்கு எப்படி அவங்களை?… 

கேள்வியாக நண்பனை ஏறிட்டு மித்ரன் பார்க்க அவனோ… 

 

 

அத்தியாயம் 7.1

“மித்ரா, அவ எங்களோட ரிலேட்டிவ்… இப்போ எங்க வீட்லதான் தங்கி இருக்கா. உனக்கு தெரிஞ்சிருக்கு வாய்ப்பில்லை டா. நம்ம ஊர் கூட இல்லை… “

 

“ஓஹ்! ஆனா ரொம்ப பரீட்சயமான, நல்லா  பழகுன பீல் அதான்… வேறொன்னுமில்லை… “

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே அறை விட்டு வெளியே வர,

 

“ஹாய்! மீட்டிங் முடிஞ்சுதா? ” கேட்டுக்கொண்டே வந்தாள் மகிழ்… 

 

“ஹாய்  மகி…” மித்ரன் இன்முகமாகவே  அவளை வரவேற்று பேச, மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ட நண்பனின் இன் முகத்தில் கண்கலங்க அவனை பார்த்தவள்  பின் சகஜமாய் பேசிக்கொண்டனர்… அவ்விடம் விட்டு கிருஷ்ணா மெதுவாக நழுவி வீணாவின் அறை நோக்கி விரைந்தான்.

 

தனதறைக்கு வந்தவள் வாய் மூடி தன் அழுகையை உள்ளுக்குள்  அடக்கிக்கொண்டவள் எவ்வளவு அடக்கியும் முடியாது போக பெரும் கேவல்களாய் வெளிவந்தன அவள் கதறல். தரையில் மடிந்து அமர்ந்தவள் கண்ணாடி சுவரில் சாய்ந்து தன் முழங்கால்களுக்குள் தலை  புதைத்துக்கொண்டவள் தன் வலி தீர மட்டும் அழுது கரைந்தாள். 

தன்னை நினைவிருக்காது என்பது தெரிந்ததுதான்… அதுவே இருவருக்கும்  நன்மையும் கூட. 

ஆனால்… ‘தன் கண்ணாளனே தன் முன்னே வந்து நிற்க, கண்முன்னே காண்பது நிஜமாய் இருந்தும் நானோ அவனுக்கு நிழலும் இல்லை’ 

எனும் போதும் மனமோ கண்ணாடி துகள்களாய் சிந்திச்சிதற பெண்ணவளுக்கு இதயம் தாங்கவில்லை. 

அத்தோடு இது அவனுக்கும் சொந்தமான அங்காடி என பெண்ணவளோ அறிந்திருக்கவில்லையே. 

அறியும்படி  கிருஷ்ணா நடந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. 

 

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிய அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே  வந்த கிருஷ்ணா கண்டது தரையில் மடிந்து அமர்ந்த வாடிய கொடியினை… 

 

“பட்டு… ஹேய்  பட்டுமா…”

அவளருகே மண்டியிட்டமர்ந்தவன் அவள் தலையில் கைவைத்திட்ட மறுநொடி அவன் கைகளை தட்டிவிட்டவள் நிமிர,

கன்னங்கள் இரண்டும் சிவந்து மூக்கு விடைத்து  இன்னுமாய் சிவந்த நாசியுமே கண்ணீர் விட கண்களோ வழிந்துக்கொண்டே இருந்தது.

 

“என்னை ஏமாத்திட்டிங்கல்ல?… அவங்க  வர்றதா முன்ன…மே…. சொல்லி…ருந்தா…  நான் வீட்ல… “

வீணாவினால் தொடர்ந்து பேசிட முடியாது  வார்த்தை திக்கி விக்கல் ஏற்பட…

 

“பட்டு… எந்திரி முதல்ல… “

அவளை பிடித்து எழுப்பியவன்  இருக்கையில் அமர வைத்து அவளுக்கு அருந்த நீரை பெற்றுக்கொடுத்தவன், குவளையை பிடித்து அருந்த கை நடுக்கத்தில் தன் ஆடையில் சிந்திச்சிதற பருகினாள்.  

 

“பட்டு, நாம வேணும்னே உன்கிட்ட மறைக்கல. உனக்கு திரும்ப நினைவு படுத்த விரும்பலை அதான் உண்மை.”

 “அப்போ உங்களுக்கு அவங்கதான்  என்னை… “

 

“தெரியும்டா… நீ அன்னைக்கு என்னை போய் பார்க்கச் சொல்லவும் அங்க நான் போனதுமே புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அவனுமே எதுனால இப்டி பன்னன்னு புரில. அவன் சுயநினைவுல கூட அதை பண்ணல பட்டு.அதுக்கப்புறம் கிட்டத்தட்ட  ஆறு மாதம் ட்ரீட் மென்ட் முடிய அவனை இப்டி சிரிச்சு பார்க்கிறேன். கிட்டத்தட்ட 100நாட்கள் அவனோட வாழ்க்கைல அழிஞ்சு போச்சு. அவன் அவனாகவே இல்லாத நாட்கள் அது. அதுக்குள்ளதான் உன்னுடனான நாட்கள் அமைஞ்சிருக்கு.’

 

‘அவனுக்கு  அந்த நாட்கள்  திரும்ப நினைவுக்கு வரலாம்.ஜஸ்ட் கனவு மாதிரி  தோணும்னு டாக்டர் சொல்லிருக்காங்க. “

 

“அப்போ அவங்களுக்கு என்னை ஞாபகம் வருமா? “

அவள் பார்வையில் என்ன இருந்தது  கிரிஷ்ணாவினால் உணர முடியவில்லை 

 

“உன்னை ஞாபகம் வரணும்னு நினைக்குரியா பட்டு? “

 

“அச்சோ வேணாம் வேணாம்… வரவே  வேணாம்.அவங்களால தாங்கிக்கவே முடியாது… அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க தினம் அதை நினச்சு. என் வலி என்னோடு போகட்டும். அவங்களுக்கும்  வேணாம்… ” கண்ணீர் ஒழுக வீணா கூறிக்கொண்டிருக்க,

வீணாவின் உள்ளம் மித்ரனுக்காய்  துடிப்பதை உணர்ந்தான் கிருஷ்ணா. சந்தோஷம் தான்ஆனால் இப்போதே இவளை எங்கோ  பார்த்த, பழகிய உணர்வு என்கிறான், இதில் இவளை நினைவு வந்தால்? வேண்டாம் இவர்கள் இருவழியில்  இருப்பதே சரி. ஒரு விழியில் பயணித்து சந்தித்துக்கொள்ள வேண்டாம் என மனதில் நினைத்துக்கொண்டவன், 

“இங்கப் பாருடா பட்டு,’

அவளை நிமிர்த்தியவன் அவள் கண்களை துடைத்து விட்டு,

‘அவனுக்கு உன்னை தெரியாது.அவன் அடிக்கடி இங்கு வரப்போவதும் இல்லை. இப்டி எதாவது மீட்டிங் ஒண்ணுன்னா மீட்டாகலாம் மத்தபடி உனக்கு அவனை பார்க்குற சந்தர்ப்பம் குறைவு தான்.அப்போவும்  உனக்கு விருப்பம் இல்லைன்னா வேற வேலை வேணும்னாலும் அரேஞ் பன்றேன்.ப்ளீஸ் டா உன்னை கஷ்டப்படுத்திக்காத. “

 

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கவுமே வீணாவின் அறையில்  இருந்த அலுவலக அலைபேசி ஒலிக்க, எடுத்தவன், 

“இதோ வந்துட்டே இருக்கேன், ஜஸ்ட் இன்அ மினிட்” என்று அலைபேசியை வைத்தவன், 

 

“அச்சோ, ரொம்ப நேரமாச்சு அவன்ட சொல்லவும் இல்லை,மகி வேற வந்திருக்கா திட்டப்போறா. பட்டு வா போய் ஜஸ்ட் கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு நீ போ. நான் மற்றையதை பார்த்துக்கொள்றேன்” 

என அழைக்க இவள் அவனை முன்னே செல்லுமாறு கூறி விட்டு சற்று நேரத்தில்  வருவதாக கூறினாள். 

 

தன்னை சமன் படுத்திக்கொண்டவள், முகம் கழுவி முகத்தை சற்று சீர்செய்துக்கொண்டு பார்ட்டி அறைக்கு சென்றாள். 

 

இவள் உள்நுழையவும் மகிழைக் கண்டவள் அவளருகே சென்று அவள் கை பிடித்துக்கொள்ள, 

“ஹேய்  பட்டு…எங்க போயிட்ட வந்ததுல  இருந்து தேடறேன். 

 

நிலம் பார்த்தவாறே அவளருகே அமர்ந்திருக்க “பட்டு…” என்று அவள் முகம் பார்க்க  வீங்கி சிவந்திருந்த அவள் முகத்தைக் கண்டவள் ‘என்னாச்சு?’ என கேட்டுக்கொண்டே கண்களால் கிருஷ்ணாவை தேடினாள். அவனைக்காணுவும் அவனுமே  இவர்களைத்தான் மித்ரனுடன் பேசிக்கொண்டே பார்த்திருந்தான். கண்களால் இவள் வீணாவை காட்டி கேட்க அவனும் மித்ரனைக் கண்களால் காட்டவும் புரிந்துக்கொண்டவள், அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு  தட்டிக்கொடுத்தவரே அவளுடன் பேசினாள். 

 

“வீணா, ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்  யூ.ப்ளீஸ் ட்ரை டு… “

 

“என்னால முடில ஹாப்பிக்கா…’

வீணாவினால் இதற்கு மேலும் அங்கிருக்க முடியும் என்று தோன்றவில்லை.

 

‘நான் கிளம்புறேன். கிச்சாக்கிட்ட  சொல்லிருங்க நான் வரேன். கூறியவள் கிளம்பி விட்டாள். 

 

அங்கிருந்து இவர்களை பார்த்திருந்த கிருஷ்ணா மகிழை பார்க்க அவள் செல்வதை காட்டவும்,’சரி போகட்டும் விடு’ என்பதாய் கண்கள் கூறினான். 

 கூறியவன் திரும்ப இவனையே  

பார்த்திருந்த மித்ரனோ, 

 

“என்னடா, இன்னுமா ரெண்டு பேரும் ரெண்டு பக்கமா நின்னு கண்ணாலேயே பேசிக்குறீங்க.வீட்லயும் இப்டித்தானா? “

 

“வீட்டுக்குள்ள விட்டா தானே பேசிப்பாங்க.. அதுக்குதான் வழியே இல்லையே… “

கூறியவாறு வந்தார் ராஜ்.  

 

“ப்பா… ” கிருஷ்ணா முறைக்க, 

 

“ஹாய்! ப்பா இப்டியே பார்ட்டி முடிய அங்க வரலாம்னு தான் இருக்கேன்…”

அவரை தோளோடு அணைத்துத்துக்கொண்டே கூறினான். 

 

“ஓஹ் கண்டிப்பா போலாம் மித்ரா.ஆண்ட்டி கூட உன்னை பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவா… “

 

“ஹேய் ஹாண்ட்சம்…இப்போதான்  வந்தீங்களா? “மகிழ் கேட்கவும், 

 

“ஆமாடா, எங்க பட்டு காணோம்…? “

 

“நானுமே கேட்கணும்னே இருந்தேன். எங்க மிஸ்.வீணா, மீட்டிங் முடியவும் அவங்களை பார்க்க முடியல. “மித்ரனும் கேட்டுவிட, 

 

“அது… அவக்கு கொஞ்சம் உடம்புக்கு முடில  அதான் மீட்டிங் மட்டும் அட்டென்ட் பண்ணிட்டு போக சொல்லிட்டேன்.” என கிருஷ்ணா பதிலளித்தான். 

 

“ஓஹ் தட்ஸ் ஓகே. ரொம்ப பிரில்லியண்ட்  கேர்ள் ப்பா.உங்க சொந்தம்னு கிருஷ்ணா சொன்னான். நான் முன்ன பார்த்ததே இல்லையே… “

“அது… என்…” ராஜ் வார்த்தைகளுக்காய்  தடுமாறி கிருஷ்ணாவை பார்க்க, 

 

‘இதுக்கெல்லாம் தடுமாறுவீங்க என்னை கோர்த்து விடமட்டும் நல்லா வார்த்தை கோர்வையா வந்துரும்… ‘வாய்க்குள்ளேயே  முனங்கியவன், 

“மித்ரா, வீணா நம்ம அம்மாக்கு சொந்தம்… “

 

“அப்டியா “என்றவன் வாசுகியின் சொந்தம்  என்றதுமே அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. கிருஷ்ணாவும் அதை தெரிந்தே கூறினான்.பின்னர் மித்ரனின்  வீட்டினரும் வர இவர்களது அங்காடியில் சிறப்பு விழா இனிதாய் முடிய,ராஜ் மற்றும் குணசீலன் வைத்தியசாலை கிளம்ப மகிழ்  கிரிஷ்ணாவோடும், மித்ரன் அவனது வண்டியிலும் வாசுகியை பார்ப்பதற்காக கிருஷ்ணாவின் வீட்டுக்கு கிளம்பினர்.

 

வீட்டுக்கு வந்த வீணா உடை கூட மாற்றாது அப்படியே கட்டிலில் விழுந்தவள் தன் மனபாரம் தீருமட்டும் அழுதுகரைந்தாள். அப்படியே உறங்கியும் போயிருந்தாள். 

 

அவள் எழும் போதும் முன்னறையில் பேச்சும் சிரிப்புமாக கேட்டுக்கொண்டிருக்க மகிழ் குரல் கேட்கவும் அவள் வந்திருப்பதை  உணர்ந்தவள் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு அறைவிட்டு வெளியில் வந்தாள். முகம் தூங்கி எழுந்ததினால் இன்னும் சற்று கண்கள் வீங்கி முகம் கலையிழந்திருந்தாள். 

முன்னறையில் வாசுகியோடு மகிழ் பேசிக்கொண்டிருக்க வந்தவள் வாசுகியின் மடியில் தலைவைத்து  படுத்துக்கொண்டாள்…

சமயலறையில் பாத்திரங்களின் சத்தமும், 

இரு ஆண்குரலும் கேட்க ஒன்று  கிரிஷ்ணாவினுடையது மற்றையது… 

 ‘ வீரா… ‘

உணர்ந்த மறுகணம் வாசுகியின் மடியிலிருந்து சட்டென்று எழுந்து விட அவரும் அவளை கேள்வியாக பார்க்க, அதே நேரம் சமயலரைப்பக்கம் இருந்து குரல் வருகிறது இவர்களுக்காய்…

 

“ஹேய்… ஈவினிங் ஸ்னாக்ஸ்  ரெடி வித் யுவர்  லவப்பில் மித்ரன்… ” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!