வில்லனின் வீணையவள் -06

Screenshot_2020-09-30-16-03-02-1-c40747e4

வில்லனின் வீணையவள் -06

“பட்டு அன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தியா இருக்கும்டா.நீ வேணும்னா வீட்ல இரேன். நான் எல்லாம் மேனேஜ்  பண்ணிப்பேன். “

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நானும்  வரேன்.உங்க பிரென்ட் வராங்கன்னு என்னை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து   அவொய்ட் பண்ரீங்க.ஹாப்பிக்கா நைட் கால் செய்து போகாதே சொல்ராங்க. உங்க பிரண்டு என்ன அவ்ளோ பெரியாளா?  நானும் தான் பார்குறனே அவங்களை ஒரு வாட்டி… “

 

கிருஷ்ணா நாளை நடக்கவிருக்கும்  அவர்களின் அங்காடி சிறப்பு விழாவில்  வீணாவை கலந்திட செய்ய விடாது இருக்கப் பார்க்க அவளோ அடம் செய்துக் கொண்டிருந்தாள். 

 

“கிச்சா எதுக்குடா அவளை வேணாம்  சொல்ற. இவ்ளோ அந்த கடையை டேவலப் பண்ணிருக்கா, நாளைக்கு அவ இல்லாம எப்படி? அதோட மித்ராவும் கேட்பான் தானே.”

வாசுகி வீணாவின் சார்பாய் பேச, 

 

“அதானே நான் இல்லாம எப்படி? ” வீணா அவர் தோள்களில் வாகாய் சாய்ந்த படி கேட்க, 

‘அச்சோ இந்த அம்மா வேற என் நிலை புரியாம… ‘ மனத்தில் பேசிக்கொண்டவன், 

 

“சரி, நான் கிளம்புறேன்.’

‘ ஏதோ பண்ணிக்கோ என் தலைதான் கடைசில உருளப்போகுது… “

புலம்பியவாரே கிளம்பினான் கிருஷ்ணா. 

 

நாளைய விடியல் பலருக்கும் பலவாறு  அமையப் போக இது நம் நாயகன், நாயகி வாழ்வினில் எங்கனம் மாற்றி அமைக்கும் பார்க்கலாம். 

 

நேற்று இரவு தான், பல மாதங்கள் கடந்து  அத்தோடு கடந்து போன வலிகளின் சுவடுகள் மறந்து வந்திருந்தான் மித்ரன். 

 

தன் உயிர் நண்பனைக்காணவுமே தோளோடு அணைத்துக்கொள்ள, இருவருக்குமே பேச்சில்லை. அந்த அணைப்பின் நெருக்கம் நண்பர்கள் இருவரினதும் மனக்கஷ்டங்கள், பிரிவு என ஒட்டு மொத்தத்தையும்  கடத்திக்கொண்டனர். ஆண்கள் அல்லவா இலகுவில் மனம் இலகப்போவதுமில்லை, மனதில் உள்ளதை பிறரிடம் பகிரப்போவதுமில்லையே…  

 

இத்தோடு இரண்டு நாட்களாய் கிருஷ்ணாவின் மனதை அரிக்கும் வீணாவும் சேர்த்துக்கொள்ள அவனுமே  என்னதான் செய்வான்.அவள் நாளைய நிலை, காதல் கொண்டவனுக்கு அவள் நிலை புரியாமலா இருக்கும். சரி எதுவாகினும் எதிர்கொள்ளலாம், நிலைமையை பொறுத்து சூழ்நிலையை  சமாளிக்கலாம் என நினைத்துக்கொண்டான். 

நண்பர்கள் இருவரும் வீடு வரும் வரையிலும் நாளைய விழா பற்றி பேசிக்கொண்டே வந்தனர். சமீபமாய் தம் புது அங்காடி நல்ல வரவேற்பை பெற  வீணாவே காரணம் என்பதை உணர்ந்த மித்ரன், 

 

“கிருஷ்ணா நாளைக்கு கண்டிப்பா மிஸ்.வீணாக்கு நம்ம சார்புல தேங்க்  பண்ணனும்டா அதோட அவங்களுக்கு எதாவது கிபிட் அரேஞ் பண்ணிரு கொடுத்துறலாம். அப்போதான் இன்னும்  திறமையா உட்சாகமா பண்ணுவாங்க.”

 

“ஹ்ம்ம், அதானே பார்த்தேன். நம்ம  பிஸ்னஸ் மேன் சும்மா கிப்ட் கொடுக்குறதாவது. “

 

“நமக்கு இலாபம் வருதா,அதுக்காக  கொஞ்சம் செலவு பண்ணலாம் டா கிருஷ்ணா. தப்பில்லையே? “

 

“ச்சே ச்சே தப்பே இல்லை… “கிருஷ்ணா  கூறிகிச்சிரிக்க, 

 

இருவருமாக இப்படி பலநாள் சென்று  பேசிக்கொண்டே வீடு வந்தனர்.

 

மித்ரன் வீட்டினில் நுழையவும் வீட்டினர்  அனைவரும் இவன் வரவுக்காக காத்திருந்தனர் ஒருவரைத் தவிர. கண்களால் அவரிருந்த அறையை  பார்த்தவன், பின் வீட்டினரோடு உரையாடி விட்டு அவ்வறையினுள் நுழைந்தான். 

 

கட்டிலில் ஒரு பக்கமாய் ஒடிந்து கண்கள்  மூடி சாய்ந்திருந்தார் மித்ராவின் அன்னை மஞ்சுளா.  

 

“ம்மா,’ மெதுவாக அவர் தலைக்கோதி  அழைக்க, 

இமைகளுக்கு வலிக்காதவாறு கண்களை த்திறந்தார். 

 

“மித்ரா…” குரல் கமர அழைத்தவரின் நெற்றியில் இதழ் ஒற்றி எடுக்க, 

எழப்பார்த்தவரை, 

 

“ஸ்ட்ரைன் பண்ணிக்க வேணாம் ம்மா. அப்படியே இருங்க என்றவன் அவரருகே  அமர்ந்துகொண்டான்… 

 

மித்ரனின் அன்னை பல வருடங்களுக்கு  முன்னர் பக்கவாதம் ஏற்பட்டு கால்கள் செயலிழந்து கிடக்கிறார்.எனவே அவரின்   அதிகப்பொழுதுகள் கட்டிலோடு கழிந்து விடும். சில நிமிடங்கள் அவரோடு செலவிட்டவன் நாளைய நிகழ்வுக்கு  அனைவரையும் முன்னமே கிருஷ்ணா வந்து அழைத்திருந்தாலும் அவன் சார்பாய் அழைப்பு விடுத்தான். அவனின் சிரித்த முகமும் பேச்சும் அனைவருக்கும் மிக நீண்ட நாளைக்கு பிறகு மகிழ்வை அள்ளி வழங்கியிருந்தது. 

 

இரவு வரை கிரிஷ்ணாவோடு இருந்து நாளைய நிகழ்வுக்கான வேலைகளை பார்த்தவள் மிகவும் ஒய்ந்து போய் வண்டியில் அமரவும் வண்டியை கிளப்பிய கிருஷ்ணா, 

“நாளைக்கு இன்னும் ஜாஸ்தியா வேலை இருக்கும் பட்டு. பேசாம ரெஸ்ட் பண்ணிக்கோ. “

 

அவனை திரும்பி பார்க்காமலேயே, “நாளைக்கு எனக்கு பிவெர்னா கூட மாத்திரை போட்டுட்டு வரத்தான் போறேன்.’ 

 

‘எதுக்கு கிச்சா இவ்ளோ சொல்ற. ரொம்ப கோவப்படுவாங்களா உங்க பிரென்ட்? இல்லன்னா என்னை இன்றோ பண்ண  பிடிக்கலையா “

 

“பட்டு,என்ன பேசுற… அப்டில்லாம் இல்ல.உனக்கு கஷ்டம்னு தான்… “

 

‘எனக்கொன்னும் கஷ்டமில்லை…’ புலம்பிவாறு வரவும் மகிழின் வைத்தியசாலை அருகே வண்டி நின்று அவளையும் ஏற்றிக்கொண்டு சென்றான்.

 

“பட்டு, இன்னும் ரெண்டு நாளைல நான் ஊட்டி போறேன் ஒரு காண்பிரன்ஸ் இருக்கு, அதோட சின்னதா கேம்ப் ஒன்னு அரேஞ்  பண்ணிருக்கோம்.” மகிழ் வீணாவிடம் கூற அவளோ முந்திக் கொண்டு, 

 

“நானும் வரேன்,செம கிளைமேட் சூப்பர் இருக்கும் ஹாப்பிக்கா. “

 

“நீ வர்றது சுவர்னா நான் சீட் ரெசெர்வ்  பண்ணுவேன்,பை ரோட் தான் போறோம். அப்புறம் முடியாதுன்னு சொல்ல இயலாது. ” 

 

மகிழ் கூற சரியென்றவள், நாளைய விழா முடிய இதற்க்கு ஆயத்தமாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே மகிழை  இறக்கி விட்டு வீடு வந்தார்கள்.

கிருஷ்ணா, மகிழ் இருவரும் பேசிக்கொண்டாலும் அவர்கள் பிரிவு முடிவடைய ஏதோ ஒரு தடங்கல் இருப்பதாகவே தோன்றியது வீணாவுக்கு. அதனால் தான் இவர்களது நண்பனை சந்தித்து பார்க்கலாம் என்று நினைத்திருந்தாள். அவர்கள் இருவரும் நாளைய விழாவில் தன்னை கலந்துகொள்ளாது தடுக்க இவர்களிடையே ஏதோ ஒன்று இருபதாய் உறுதியாக நம்பினாள். 

 

காலையும் அழகாய் புலர ஒரு வித உட்சாகத்துடனேயே கிளம்பிக்கொண்டிருந்தான் மித்ரன். உதடுகள் ஏதோ ஒரு பாடலை ஹம் செய்தபடி உடையும் அவனை அம்சமாய் எடுத்துக்காட்டும் வகையில் தயாரானவள் 

படிகளில் இறங்கி வர வீட்டினர் உணவுண்ண அமர்ந்திருந்தனர்.முன்பானால் கூறிக்கொண்டு கிளம்புபவன்  இவர்களோடு அமர்ந்து உண்டு விட்டே இன்று கிளம்பினான். 

 

வழியில் தான் வந்துக்கொண்டிருப்பதாக மித்ரன் கூற க்ரிஷ்ணா முன்னமே வந்து காத்திருப்பதாகக் கூறினான். 

 

அங்காடி வாயில் முதல் சிறு அலங்காரமாக  

கண்ணை உறுத்தாத அடர் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்து பூங்கொத்துகள் ஆங்காங்கே தூண்களில் அலங்காரமாய்  வைக்கப்பட்டிருக்க, அத்தோடு மித்ரனுக்காய் மித்ரன் உள்ளே நுழைந்து வந்ததுமே அவனுக்கு சர்ப்ரைசாக இருக்கட்டும் என தயாரித்திருந்த நிகழ்வொன்று கிருஷ்ணாவும் அறிந்திருக்கவில்லை. 

 

அவர்களின் அங்காடி அமைப்பானது உள்ளே நுழைய ஒரு பக்கமாக மேல் நோக்கி செல்லும் பிறை போன்ற படிகளும் அடுத்த பக்கம் லிஃப்டும் இருந்தது. ஒரு பக்கமாக  தேநீர் அருந்த ஏதுவாக ஒரு ஐந்து அல்லது ஆறு மேசைகளுடன் சிறு உணவகமொன்றையும் ஆரம்பித்திருந்தாள் வீணா. வேலை செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் ஷாப்பிங் செய்பவர்களுக்கும் அது இலகுவாக அமைந்திருந்தது. அத்தோடு  இன்னுமொரு பகுதி அலங்கார பொருட்கள், பரிசு பொருட்களுக்காணது.

 

முதல் தளத்தில் ஒரு பக்கமாக ஆண்களுக்கு தேவையான உடைகள் பகுதியும் மற்றையதில் சிறுவர் குழந்தைகளுக்கான உடைப்பகுதியும் அதோடு விளையாட்டு பொருட்களுமாக இருந்தது.இரண்டாவது தளம் முழுதும் பெண்களுக்கானது. ஒருபக்கம் சாதாரண,வேலைக்கு தேவையான வகையில் உடைகள், ஒருபக்கம் உயர்ரக ஆடைகள், அடுத்து திருமணதிற்கு,முக்கிய நிகழ்வுகளுக்காக சாரி, மற்றையது பெண்களுக்கான உள்ளாடைப்பிரிவு, பெண்களுக்கான  காலணி என பல பிரிவுகளாக அங்காடியின் தோற்றம் ஆங்காங்கே நிலைக்கண்ணாடிகள் வேறு இருக்க இன்னும் பெரிதாய் காட்டி நேர்த்தியாக இருந்தது. 

 

அத்தளத்திலேயே வீணாவின் அறையும்  இருக்க அவள் அறை அத்தளத்தை முழுமையாக பார்க்கும் அமைப்பில்  இருந்தது.மூன்றாவது மாடியில் ஹால் அமைக்கப்பட்டு முக்கிய நிகழ்வுகளுக்காக இருக்க, இன்று அதில் தான் இன்றைய நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. அதற்கான லிப்ட் வீணாவின் அறையோடு அமைக்கப்பட்டிருந்தது. 

கிருஷ்ணா மித்ரன் வந்துவிட்டதாகக் கூறிய  நேரம் வீணா அவளறையில் இருக்க, அவசரமான ஓர் வாடிக்கையாளரோடு அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். எழுந்து செல்ல முடியா நிலை. அவசரமாக முதல் தள கமெராக்களை தன் கணினித் திரையில் ஓடும் படி வைத்தவள்,தான் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பை  சிலவினாடிகளுக்கு காத்திருக்க வைத்துவிட்டு, மூன்றாம் தளத்தில் இருந்த அவள் ஏற்பாடு செய்திருந்த வேலையாளுக்கு அழைப்பு விடுத்து ‘தயாரா?” எனக்கு கேட்க, அவனும் ‘ஆம் ‘ என்றிட, 

அவசரமாக கிருஷ்ணாவை அழைத்தாள். 

 

“கிச்சா, உங்க  பிரென்டை பேசிட்டே சரியா  தளத்துல நடுவில் வந்து நிட்குற போல  செய்ங்க சீக்கிரம்…”எனவும்,

இவன் எதுவோ பேச முன்னர் மித்ரனே தளத்தை கண்களால் துளாவி மெச்சியப்படி நடுவில் வந்து நின்றிருந்தான். அவன் எதிர் பாரா நொடி அவன் மீது ரோஜா இதழ்களும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ண பலூன்களும் அவனை நனைக்க ஒருகணம் தடுமாறி அந்நிமிடத்தை  உள்வாங்கிக்கொண்டான். 

அவன் ஒரு பக்க கன்னக்குழி சிரிப்போடு  கிருஷ்ணாவை நோக்கியவன், 

“என்னடா இதெல்லாம்…? “

 

கண்களில் சிரிப்போடும் முகத்தில்  பொய்யான முறைப்போடும் கேட்க, 

அவ்வழகை பார்த்திருக்க வேண்டுமே… அழகன் அவன்.அந்த சிரிப்பில் தன்னை தொலைத்தோர் மீள்வதென்னவோ கடினம் தான். 

 

அந்தப்பக்கம் அலைபேசியில்

 

 “கிச்சா…?’ என்ற சத்தத்தில் மீண்டவன், 

‘எப்படி  சர்ப்ரைஸ்?” எனக வீணாவின் கேள்விக்கு  

 

“சூப்பர்டா பட்டு.ஆனா அவன் என்னை முறைக்குறான்டா…” என்றான். 

 

“அச்சோ… என்னால பார்க்க முடியல. என் கேமரால பின் பக்கமா தான் தெரியுறாங்க  உங்க பிரென்ட்.” கூறினாள் வீணா. 

 

“ப்பா தப்பிச்சேன்டா சாமி.இன்னும் கொஞ்ச நேரம் தாங்கலாம்.’கடவுளுக்கு நன்றி கூறியவன், 

 

‘வீணா மீட்டிங் ஹாலுக்கு வந்துரு.நாங்க  செக்கண்ட் பிலோர் பார்த்துட்டு ஜோஇன் ஆகிக்கிறோம்” கூறிவிட்டு அலைபேசியை  அணைத்தான்.

 

வீணாவுக்கு ஏதோ ஓர் படபடப்பு. இன்னதென்று கூறமுடியா நிலை அவளது.காலை உணவு இன்னும் எடுக்கவில்லை அதனால் தான் போல என்று தன்னை சமன் படுத்திக்கொண்டவள், மூன்றாவது தளத்தில் அறையை கண்களால் சரியாக உள்ளதா என பார்வையிட்டவாரே அவ்வங்காடியின்  பொறுப்பாளினியாக வந்து அமர்ந்தாள் அங்கிருந்த நீல் மேசையின் இருக்கையில்.

 

இருபது பேர் போல இருப்பார்கள். அனைவரும் இவ்வங்காடியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.வீணா வந்திருக்க இன்னும் இரண்டு இருக்கைள் மித்ரன் மற்றும் கிருஷ்ணாவிற்காக காத்திருந்தது. ஏனையோர் சற்று வீணாவிற்கு பழக்கம் தான். ஓரிரு முறை சந்தித்து பேசியவர்கள்.

மேசையின் பிராதான இருக்கை  மித்ரனுக்காகவும் அதை அடுத்து கிருஷ்ணா வுக்காக விட்டு அதை அடுத்துள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள் வீணா. 

 

இவர்களது கலந்துரையாடல் முடிய இதனை ஒட்டி அமைந்திருந்த வரவேற்பறையில் சிறு விருந்து ஏற்பாடாகி இருந்தது.

 

அறையின் கதவுகள் திறக்கப்பட தமக்குள்  பேசிக்கொண்டிருந்தவர்கள் அமைதியடைய கணினித்திரையை ஏதோ சரி செய்துகொண்டிருந்தவள் நிமிர்ந்ததும்  கண்டது, முன்னே இவளை பார்த்தவாறே வந்த கிருஷ்ணாவை அல்ல.

 

தன் உயிர் தீண்டி, தன் உள்ளத்தை முழுதும் தனதாக்கி, தன்னை பித்தாகிய, தன்  உணர்வுகளை தனக்கே பாடம் நடத்திய மறக்கவேண்டும் என்று தினம் நினைக்கும் முகம்,தலையக்கோதி ஓர் நாள் தன் மடிதாங்கிய பிள்ளை, தன்னை கொள்ளாமல் தினம் கொன்று தின்பவனை.தன்னை சிலகாலம் சிறை செய்து ஏனென்றே தெரியாமல்  வஞ்சித்தவனை, தன்னை மறந்த நிலையில் தன்னை நோக்கி வரும் அவனை விழியகளாது பார்த்திருந்தாள். 

 

உள் நுழைந்தவன் உள்ளமோ தன்னை ஏதோ ஓர் விசை அதன் திசை நோக்கி இழுப்பதாய் ஓர் உணர்வு… ஏதோ தான் இழந்த ஒன்று தன்னை நோக்கி வருவதாய்  உணர்வு… ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உள்ளே வந்துகொண்டிருந்தான். 

 

இன்முகமாய் அனைவரையும் பார்த்து வாழ்த்தி சிரித்தவன் உட்கார முன்  கிருஷ்ணாவின் அருகே நின்றிருந்த பெண்ணவளை நோக்கியவன் கிருஷ்ணாவை கேள்வியாக ஏறிட, நிலைமையை கையிலெடுத்தவன் அருகே இருந்த பூங்கொத்தை வீணாவின் கையில்  திணிக்க இவ்வுலகம் மீண்ட வீணா அவனை ஏறிட, 

 

“மிஸ்.வீணா, மீட் மிஸ்டர்.வீரமித்ரன் எனதர் பார்ட்னர் ஒப் பொதிகை..” என்றிட, 

 

தன்னை சமன்படுத்திக்கொண்டவள்  “வெல்கம் சார்.” என்று அவனுக்கு  பூங்கொத்தை கையளித்தாள்…

 

இன்முகமாய் ஏற்றவன் எவ்வித மாற்றமும்  இன்றி அவளை எதிர் கொண்டவன்,

“கிளாட் டு மீட் யூ மிஸ்.வீணா.உங்களை பாராட்டியே ஆகணும். யூ ஆர் டூயிங் சச் ஏ  வொண்டர்புல் ஒர்க் என்று பாராட்டியவன் கை நீட்ட நடுங்கும் கைகளால் அவன் கைகளை  தொட உடலில் மின்சாரம் தாக்கி மீண்டுமாய் உயிர்த்தாள் பெண்ணவள். 

அவனுக்கு எதுவே இல்லை போல மிக மிக்ச் சாதாரணமாக இருந்தான். நன்றாக பேசினான். இவளால் தான் எவ்வித  கேள்விக்கும் பதிலளிக்க முடியா நிலை. 

 

கிருஷ்ணாவுக்கு அவள் நிலை புரிந்தாலும்  அப்போதியிருந்த நிலையில் அவளோடு பேச சந்தர்ப்பம் அமையவில்லை.கலந்துரையாடலை முடித்துக்கொண்டவன், 

“சோ கைஸ் மிஸ்.வீணாக்கு நம்ம கம்பனி சார்பாக அவங்களுக்கு ஒரு சின்ன கிப்ட்” ‘என எழுந்தவன் கையில் கிருஷ்ணா  வைத்த பரிசிலை வழங்கினான். 

 

கிருஷ்ணாவை பார்த்தவள்  ஒன்றும் கூறாது எழுந்து மித்ரன் தந்த பரிசினை பெற்றுக்கொண்டவள், அவன் முகம் நோக்க இருவரது பார்வையும்  ஒன்றையொன்று ஈர்த்ததென்னவோ உண்மை.இவள் விழி ஏக்கமாய் அவனை நோக்கியதென்றால் அவனது விழிகளிலோ அவ்விழி வழியே தன் ஏதோ ஒன்றை தேட முயன்று  தோற்றுக்கொண்டிருந்தது…

உள்ளம் வெடித்துச் சிதறும் நிலை  பென்னவளுக்கு.தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள். 

 

அனைவரும் உணவருந்த விலகிச்செல்ல அவ்வறை விட்டு வேகமாய் வெளியேறிய வீணா தன் அறைக்கு வந்து பூட்டிக்கொண்டவள் அடக்கி வைத்திருந்த  அணையை உடைக்க கண்ணீர் பெருகெடுத்து ஆறாய் அவள் வடுவுக்கு மருந்தாய் நில்லாமல் வழிய ஆரபித்தது. 

 

அங்கே விழா அறையில்,

“கிருஷ்ணா,மிஸ்.வீணா அவங்களை எங்கோ பார்த்திருக்கேன்டா.ஆனா  எங்கன்னு சரியா நினைவில்லை. உனக்கு எப்படி அவங்களை?… 

கேள்வியாக நண்பனை ஏறிட அவனோ… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!