அத்தியாயம் -10

Screenshot_2021-07-27-16-11-56-1-49e42212

அத்தியாயம் -10

அத்தியாயம் 10

 

அதிதி அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு வந்து மேலும் ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. ஆதிரியனை அன்று அவன் வீட்டில் பார்த்தது. அதன் பின்னர் அவனும் இவளை  தொடர்புகொள்ளவில்லை.

இவளுக்கும் அவனோடு எப்படி பேசுவதென்ற தயக்கத்தில் பேசவுமில்லை.

என்ன செய்ய நினைத்திருக்கிறான் என்பதை அதிதியால் யூகிக்க முடியாது  அவன் செயல்களை அவ்வப்போது நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தாள். அதாவது அவனுடைய நிலம் சம்பந்தமான மற்றும் அலுவலக தேவைகளில் மாற்றங்கள் நிகழகின்றனவா என்பது பற்றி மட்டுமே.

 

ஆனால் கடைசி பத்து நாட்களாக ஆதிரையன் ஊரில் இல்லை என்ற செய்தி சற்று நெருடாலாகவே இருந்தது. ஆலையின் பொறுப்பு மொத்தமும் மகேஷுக்கு கொடுத்து சம்பளத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக ஆனந்தன்  கூறியிருந்தார்.

‘இந்த ஆலை இன்னொருத்தருக்கு கை மாறினாலும் இப்போது போலவே எப்போதும் உண்மையாய் நேர்மையாய் இருக்கவேண்டும்’ என்று கூறியதாக சொல்லியிருந்தான். அதையும் ஆனந்தன் கூறியிருக்க இவன் எதுவோ முடிவெடுத்துக்கொண்டு தான் செய்கிறான் என்பது இவளுக்கும் தெளிவு.ஆனால் என்னவென்று தெரிந்துக்கொள்ள வழியில்லாது இருந்தாள்.

 

அவள் அன்று நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்ப அவன் கடிதமும் வீடு சேர்ந்திருந்தது.அதை பார்த்தவளுக்கு மகிழ்வதா அவனை எண்ணி கவலைக் கொள்வதா இரண்டுக்கும் இடையே  தவித்துக்கொண்டிருந்தாள். ‘கண்டிப்பாக அவளும் இவளும் ஒன்றே என்று தெரிந்திருக்க இவன் மனம் திறந்திருக்க மாட்டான்.

அத்தோடு இனி எந்த காரியத்திலும் இந்த நிலம் முன்வந்து நிற்கும். அதைத்தாண்டியே எனை பார்ப்பான்.இத்தோடு போதும் இந்த மடல் கொண்ட காதல் மடிந்து போகட்டும். இனி இதற்கான பதில் கொடுக்க அவன் எனை பார்க்கும் பார்வையில் காதலை மிஞ்சி அனுதாபமே பிரதானமாய் இருக்கும்.என் கவிஞனாய்  இவனை எதிர் பார்த்திருக்காத நானும் அன்று என் மனம் வெளியிட்டது பிழையே.’

 

என் செய்ய எல்லாம் அவன் நினைத்தது தானே.வீட்டின் முன் வாயிலில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்க வெளியே வந்தாள்.

செல்வநாயகமும் தீபாவும் வண்டியிலிருந்து இறங்குவதைக் கண்டவளுக்கு அத்தனை  மகிழ்ச்சி.

 

“ஹேய் வ்ட் அ சர்ப்ரைஸ்?”

அவளை அணைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, “ஹேய் பார்த்து பார்த்து பாப்பாக்கு வலிக்கப் போகுது.” என  அவளும் அவள் வந்த செய்தி சொல்ல…

 

“ஐயோ! ரொம்ப சந்தோஷமா  இருக்கு.” என அவளை மீண்டும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“டாக்டர் பார்த்துட்டு வந்ததுமே உன்னை நேர்ல பார்த்து சொல்லணும்னு கிளம்பிட்டா. எதுக்குன்னு இப்போதான் புரியுது  என்று சிரித்துக்கொண்டே சொல்ல,

“அண்ணா வரலையா? “

“அவர் நாளைக்கு இங்கேயே வந்துர்ரதா சொன்னாங்க. “

 

‘”டாக்டர்கிட்ட ட்ராவல்லிங்  ஓகேவான்னு கேட்டியா நீ?”

அதெல்லாம் ஒன்னுல்ல போலாம்னு சொன்னாங்க. பாட்டி மாதிரி கேள்வி கேட்காம வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போறியா இல்லையா? “தீபா  கூற,

 

“ஹேய் வா வா, அப்பா வாங்க உள்ள. “அவரையும்  அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றாள்.

அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தவள், வழில வர்றப்ப சரி ஒரு கால் பண்ணிருக்கலாமே, ஏதாச்சும் சமச்சிருப்பேன்ல?”

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். வழிலேயே நல்லா சாப்பிட்டோம். குடிக்க ஸ்ட்ராங்கா ஒரு டீ குடு. டிரைவர் இப்போ கிளிம்பிருவாங்க. “

 

“ஓகே போய் வாஷ் பண்றதுன்னா  பண்ணிக்கோ இதோ டீ போடறேன்.” என சமையலறைக்குச் சென்றாள்.

 

பின்னர் இரவு வரை மூவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். செல்வநாயகம் முன்னறையில் மெத்தை விரித்து உறங்க  அதிதியும் தீபாவும் அவளது அறையில் உறங்கினர்.எப்போதும் போல அதிகாலையே செல்வநாயகம் எழுந்து கொள்வார் என அறிந்திருந்தவள் அவர் எழும் பொழுதே எழுந்து அவருக்கு பருக தேநீரும் ஊற்றிக் கொடுத்தாள்.

 

“நீயும் தூங்கிருக்கலாமே. எப்போவாவது தானே இப்டி லீவ் கிடைக்குது.”

“இருக்கட்டும் ப்பா. தூக்கம் வரல.”

“சரி  இப்டி வா. ” என அவளை  அருகமர்த்திக்கொண்டு அவள் வேலை சம்பந்தமாக பேசியவர், பின் அவள் எடுத்திருக்கும் முடிவு பற்றி பேச்சினார்.

 

“அதி, உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கணும். வயசு இப்போ இருபத்தியாறு ஆகுது .உங்கம்மா நான் இருக்க தைரியத்துலயோ என்னவோ உன்ன என்கிட்ட விட்டுட்டு போய்ட்டா. என் பொண்ணுக்கு அமைச்சுக்கொடுத்ததை போல உனக்கும் ஒரு லைப் அமைச்சுக் கொடுத்தா தானே எனக்கு மனசுக்கு நிம்மதி இருக்கும். “

 கையிலிருந்த குவளையை விரல் கொண்டு கோளமிட்டாவாரு அவர் பேச பதில் பேசாது  கேட்டுகொண்டிருந்தாள்.

“இவ்ளோ நாள், கிட்டத்தட்ட ஐந்து வருடமா எதுக்காக பாடுப்பட்டியோ அதையே இப்போ வேணாங்குர. அவரோட மகன் அதை பயன் படுத்திட்டு இருக்காருன்னா நீ எதுக்கு விட்டுக்கொடுக்கணும்?

நீ உன்னதைத்தானே கேட்குற?”

 

“இல்லப்பா அமைச்சர் கூட மட்டுமே எனக்கு கோபம். இப்போ நான் எடுத்துட்டா அவங்க மனைவிக்கு தெரிந்து அவங்களுக்கும் கஷ்டம். அவங்க பையன் அத்தனை நேர்மையா தொழில் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ என்னப்பண்ண போறாங்கன்னுதான் தெரியாம தவிச்சிட்டு இருக்கேன்.ஏன்னா அப்பாவோட பெயருக்கு எந்த இழுக்கும் வர விட மாட்டாங்க. அது நிச்சயமாக தெரியும்.”

 

“சரிம்மா.இனி இது பற்றி பேசவேணாம். அவரா வந்து  பேசுனா அதுக்கப்புறம் என்னபண்ணலாம்னு முடிவு பண்லாம் அதானே? “

“ஆமாம்ப்பா.”

“விடியவே உங்க கதை ஆரம்பிச்சாச்சா?”கேட்டுக்கொண்டே வந்தாள் தீபா.

“அதி ஏதாச்சும் சாப்பிடணும் பசிக்குதுடி.”இதோ டிபன்  பண்ணித்தான் வச்சிருக்கேன் எடுத்துட்டு வரேன்.”

 

“அப்போ சாப்பிட்டு நாம ஒரு வாக்கிங் போலாம். ரொம்ப வருஷம் முன்ன இப்டி ஊருக்கு வந்து.வெயில் ஏற்றதுக்கு முன்ன வந்துரலாம். “

 

சரி என்றவள் மூவருமாக காலை உணவை அளவாக உண்டு, மணி ஏழு இருக்கும்,அவள் வீட்டிலிருந்து ஆதிரையனின் ஆலை வரை ஒவ்வொரு இடமாக பார்த்து ரசித்து, சிரித்து பேசிக்கொண்டு என மெதுவாக நடந்து வந்தனர்.

 

“அப்பா அங்க,அந்த மரத்துக்கு பக்கத்துல உட்கார்ந்துக்கலாம் வாங்க.” என வயல் பக்கமாய் இருந்த ஒற்றை மரத்தின் கீழ் மரப்பலகையினால் வேலை செய்வோர் இளைப்பார இருக்கை போடப்பட்டுருக்க அதில் அமர்ந்தனர்.

 

“அதி இங்க அடிக்கடி வருவியா  என்ன? “

 

“நானும் இன்னிக்குத்தான் வந்திருக்கேன் தீபா.”

 

ஆவலாய் அவ்விடத்தினையும் தளிர் விட்டிருந்த வயல் நிலத்தின் செழிப்பையும் முகம் பிரகாசத்துடன் பார்திருந்தாள். “கண்ணுக்கு தெரியுற தூரம் வரை மொத்தமும் நம்ம அதியோடதுதான்.”

“என்ன சொல்றீங்க ப்பா? “

“செல்வாப்பா…”அதி அவர் பேச்சினை நிறுத்தப் பார்க்க,

 

“நீ உனக்கு வேணாம்னு சொல்லிட்டா உன்னது இல்லைனு ஆகிருமா?”

“அதி, ஏன் வேணாம் சொல்ற? “

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க,

“காலெக்டர் அம்மா குட் மோனிங் “

என அவ்விடம் மகேஷ் வர, இவளும் வணக்கம் சொல்லியவள், “ஆபிஸ்ல தான் கலெக்டர்,வேலை நேரத்துல  இருக்கும் போதுதான் இந்த மரியாதை எல்லாம்.வெளில நார்மலா பேசலாம் மகி “

இவளோ அவனோடு சகஜமாக  பேச,

“என்னவாக இருந்தாலும் எங்கயும் பதவிக்கான மரியாதையை கொடுக்கணும்.”

 

“தட்ஸ் ரைட் மை பாய்.”  என செல்வநாயகமும் சொல்ல,

“அப்பா இது மகேஷ், என்னோட சின்ன வயசு பிரென்ட். “

அவளின் அறிமுகத்தில் தனக்கு நினைவில்லை என்றாலும் அதே சிநேகிதம் காட்டுகிறாள் என்று இவன்தான் நெகிழ்ந்து போனாள். 

 

நேற்று இரவுதான் வீடு வந்த ஆதிரையன் அவன் வீட்டு மாடியில் இருந்து பார்க்க இவர்களைக் கண்டான். ‘யாரு புதுசா?’சற்று கூர்ந்து கவனிக்கவுமே இவளைக்கண்டு கொண்டான்.

 

நாற்று நட்டுகொண்டிருக்க அவர்களிடம் சென்று ஏதோ  கேட்டவள், ” ஹே தீபா நீயும் வரியா?” எனவும்

 “நீ போ அதி முடில.”என்றிட முட்டி வரை தன்னுடைய லெகிங்சை உயர்த்திகொண்டவள் காலணியை அங்கேயே கலற்றி விட்டு அந்த வயல் சதுப்புக்குள் கால் வைத்தாள்.

 

உள்ளங்கால்கள் உணர்ந்த குளிர்மை அவள் தேகம் எங்கும் பரவியது.ஒவ்வொரு அடிக்கும் அவள் கால்கள் உள்ளுக்குள் சென்று வர, கால்களில் சகதி…

“ம்மா பார்த்துமா.” வேலை செய்துகொண்டிருந்த பெண்மணி ஒருவர் கூற,

” பழக்கம் தான்.” என்றவள் சிறிது நேரம் அங்கேயே இருக்க,

 

 “இப்படி இவ சந்தோஷமா சிரிச்சு நான் பார்த்ததே இல்லப்பா.”தீபா கூற,மகேஷும் இவர்கள் அருகே நின்றிருக்க அவனுக்கும் அவர்கள் பேச்சு கேட்கநேர்ந்தது.

 

“ஹ்ம்… அவ சந்தோஷங்கள்  எல்லாமே இங்கதானே இருந்தது. அதான், திரும்ப பார்க்கவும் அதே நிலைக்கு வந்துட்டா”

“இப்படியே சிரிச்சிட்டு இருக்கனும் ப்பா எப்போவும்.”

 

ஆதிரையனுக்கு அவள் செயல்கள் அத்தனையும் அவள் அதனோடு கொண்ட பிணைப்பை  காட்டிக்கொடுக்க பார்த்துக்கொண்டே இருந்தான். அதிதி ஏதோ ஓர் உந்துதலில் அவன் வீட்டினை திரும்பிப்பார்க்க இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

பார்த்தவளுக்கு தன்னை என்ன எண்ணினானோ எனத் தோன்ற வயலில் இருந்து அவசரமாய்  வரப்பில் ஏறியவள் அதன் விளிம்பில் இருந்த குழாயில் தன் கால்களை கழுவிக்கொண்டு நிமிர அப்போதும் அவளையேதான் பார்திருந்தான். இவளுக்குத்தான் நெருடலாய் போனது.

 

‘என் இடம் என்று உரிமைக் கொண்டாட வந்துவிட்டதாக எண்ணி இருப்பானோ?ச்சே ஒரு நிமிஷம் எந்நிலை மறந்தே  போய்ட்டேன்.’தன்னையே நொந்துக்கொண்டவள் செல்வநாயகம் இருக்குமிடம் வந்தாள்.

 

“குடிக்க எதாவது கொண்டு வரவா அதி? ” மகேஷ் கேட்க,

‌”அப்பா உங்களுக்கு? ” அதி செல்வாநாயகத்தை கேட்டிட 

 

“வேணாம்டா அவ்வளவா வெயில் இல்லையே.”

“அதி நீ என்னை கேட்கவே இல்லை…”தீபா கூற,சிரித்துக்கொண்ட மகேஷ்,

“இருங்க நான் போய் யாரிடமாவது இளநீ அனுப்பி விடறேன்.தோப்புல கொஞ்சம் வேலை இருக்கு.”என்றவன் அங்கிருந்து செல்ல அதிதியும் அவர்களின் அருகே அமர்ந்து கொண்டாள்.

 

“மைண்ட் ரிலாக்ஸா இப்படியே இருக்கலாம்ப்பா.எவ்வளவு இதமா, சுகமா இருக்கு.இனி அடிக்கடி வரணும் அதி.”

 

“முதல்ல வேற வீடு பார்ககணும் அதி.”

 

“நானும் நேத்துதான் அதை யோசிச்சேன் ப்பா. கண்டிப்பா பார்க்கலாம்.”

 

“இங்கேயே பக்கத்துல பாரு இங்க தான் செமையா இருக்கு அதி.”

சிரித்துக்கொண்டே சரியென்றாள்.

 

இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்க இளநீர் குலை ஒன்றை சுமந்துக்கொண்டு ஒருவர் வர அவர் பின்னே ஆதிரையனும் வந்தான்.அவனைக் கண்டவளோ அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழ,

அவள் பார்க்கும் திசை பார்த்த செல்வநாயகம் அதிதியை  பார்த்து ஆதிரையனை திரும்பிப் பார்த்தார்.

இவளைப் பார்த்து ஆதிரையன் சிநேகமாய் புன்னகைக்க,

“செல்வாப்பா, இவங்கதான் ஆதிரையன்.”

 அவரோடும் புன்னகைத்தவன், அண்ணா வெட்டிக்குடுங்க, குடிக்கட்டும் என்றிட அவரும் வெட்டித் தந்தார்.

 

“இது என்னோட கார்டியன். ரிடையர்ட் ஜஜ்.சின்ன வயசுல இருந்து இவங்க வீட்லதான் இருக்கேன்.”

அவள் கூற அதற்கு என்ன பதில் கொடுப்பதென்று தெரியாது புன்னகைத்தவாரே இருந்தான்.

 தன்னை இன்னார் மகன் என்றோ ஒன்றும் கூறாது அவனை அவன் பெயர் கொண்டு மட்டுமே அறிமுகம் செய்தது நெருடலாக  இருந்தது.

 

செல்வநாயகமும் எதுவும் பேசி சங்கடப்படுத்திக்கொள்ள விரும்பாது வெறும் நலம்  விசாரிப்போடு நிறுத்திக்கொள்ள, ஆதிரையன் அலைபேசி ஒலித்தது.

 

“ம்மா சொல்லு.”

என்ன சொல்லு, உன்ன எதுக்கு இப்போ அங்க அனுப்புனேன். சொன்னியா இல்லியா?” பேசியவாரே அவன் வீட்டை  பார்க்க ரேவதி ஆதிரையன் நின்று அதிதியை பார்திருந்த அதே இடத்தில் நின்றிருந்தார். இவளும் என்னவென்று பார்க்க, அவரோ அங்கிருந்து கை அசைத்தவர் ஆதிரையனிடம், “போன அவகிட்ட குடு.நானே பேசிக்கிறேன். ” எனவும்,

“அம்மா” என அவன் அலைபேசியை அவளிடம்  நீட்ட,எடுத்தவள் காதினில் வைக்கவுமே,

“அதிம்மா ஏன்டா அன்னிக்கு அப்புறம் திரும்ப நம்ம வீட்டுக்கு வரவே இல்லை. எங்க கூட எதாவது மனக்கஷ்டமா?”

“அப்டில்லாம் எதுவும் இல்லை ஆன்ட்டி. எனக்கு கொஞ்சம் வேலை  அதிகம்.நேரம் கிடைக்கல அதான்.”

 “சரிடா.இன்னிக்கு மதியம்  சமைக்கிறேன் வரியா? “

“இல்ல ஆன்ட்டி வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க “

 

“ஓஹ். நீ என்னை ஆன்ட்டி சொல்றதுலயே புரிது, யாரோன்னு தள்ளி வச்சு பேசுற.”

 

“அச்சோ ஆன்ட்டி.அப்டில்லாம் இல்லை.”

“பாரு இப்போகூட. “

 

“இனி சொல்லல. ரொம்ப நாளைக்கப்புறம் இப்போதான் என் வீட்டுக்கு வந்திருக்காங்க அத்தை. அதான். “

 

செல்வநாயகமும் அவள் பேசுவதை  கவனித்துக்கொண்டே இருக்க ஆதிரையனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

 சங்கடமாக அவர்கள் இருவரையும்  பார்த்துக்கொண்டே பேச, அவன் அலைபேசியை அவனிடம் தருமாறு கூறினான்.

 

“ம்மா,சங்கடபப்படுத்தாத  இன்னொரு நாள் வருவாங்க.”

“டேய் அப்போ அவங்க எல்லாரையும் சேர்த்து வரச்சொல்லு. அவளை  எனக்கு பார்க்கணும்னு இருக்கு.”

“சரி.” என அழைப்பை துண்டித்தவன்,

 “நைட் டின்னெர் ரெடி பண்றாங்கலாம். வரச்  சொல்ராங்க. “

 

“இல்ல அது…”

“அதிம்மா இவ்ளோ வரச்சொல்ரப்ப போகலைனா நல்லா இருக்காது டா. “

“சரிப்பா. வரோம் சொல்லிருங்க. “

 

அவன் அதியை பார்க்க, “நான் ஆன்ட்டிக்கு பேசி சொல்லிர்றேன், நம்பர் தரீங்களா? “அவன் அவனுடைய அலைபேசியிலிருந்து  அவளுக்கு அன்னையின் இலக்கக்தை அனுப்புவதாகக் கூறினான்.கூறிவிட்டு செல்வநாயகத்திடமும் கூறிக்கொண்டு விடைப்பெற்றான்.

 

செல்வநாயகத்திற்கு இவளோடு  இத்தனை உரிமையாய் ரேவதி பேசவும் , அவளுக்கு துணையாக, உறவென்று யாரும் இருப்பதில் சந்தோஷம் கொண்டவர் அதை பலப்பப்டுத்த நினைத்தார்.

 

“ஹேய் அதி யாருடி, செம  ஹேண்டி மேன். செம அழகுப்பா, நான்னா இவ்ளோ நேரம் அவரைதான் சைட் அடிச்சிட்டு இருந்தேன். என்னா சிரிப்பு. சிரிக்கவும் அப்படியே பிளாட் ஆகிட்டேன்.”

 

அதிக்கோ மனதில் அதே எண்ணம் தான்.தன்னைவனை ரசிக்க கூட முடியாத நிலையே எண்ணியவள், “அப்பாவ வச்சிட்டு என்னடி இது. “

 

“அப்பா, அவங்க செம  ஹாண்ட்சம்ல. “

“ஆமாண்டா.” என அவரும் கூற,

“இரு அண்ணா வரட்டும் சொல்லிக்கிறேன். “

 

“அவங்க வந்தாலும் அதே தான் சொல்லப்போறாங்க.” கூறிக்கொண்டு இருக்கவுமே அவளின் கணவனின் வண்டி பாதையில் இவர்களை காணவும் நின்றது.

“.ஹேய் அதோ அண்ணா வந்துட்டாஙக.”

 

“வாங்க அப்படியே வண்டில  போயிரலாம். ” என தீபா கூற, “இந்தா சாவி, நீ போய் அவங்களுக்கு சாப்பிட கொடுத்து பேசிட்டு இரு, நானும் அப்பாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல  வர்றோம்.” எனவும்,அவளை புரிந்துக்கொண்டவள், சிரித்துக்கொண்டு சரியென முன்னால் வீட்டுக்கு சென்றாள்.

 

இவர்கள் இருவருமாக அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

 

“தம்பி ஊர்ல இல்லனு சொன்ன. “

“நேத்திக்கு தான் வந்திருப்பாங்க போல ப்பா.”

செல்வநாயகத்தின் மனதில்  தோன்றிய எண்ணம் சரியாக இருக்குமா என்று நினைத்தாலும், சரிவந்தால் இவள் வாழ்க்கை நல்லதாக அமையக்கூடுமே. இன்னும் சில நாட்கள் பார்க்கலாம் என் மனதில்  எண்ணமிட்டுக்கொண்டார். “சரிம்மா நாம மெதுவா நடக்கலாம் என இருவருமாக, தென்னதோப்பையும் நின்று நிதானமாக பார்வையிட்டுக்கொண்டே போனார்கள்.

உள்ளே வேலையாட்களோடு பேசிகொண்டிருந்த ஆகிரையனை அதிதி கவனிக்க வில்லை. ஆனால் அவனோ இவளையும் இவள் முகத்தில் தெரிந்த  மாறுதல்களையுமே கவனித்துக் கொண்டிருந்தான்.

 

இரவு அவன் வீட்டுக்கு அதிதி வர, அவன் கேட்கும் கேள்வியில் அதிதி என்ன உணர்வாள்? என்ன முடிவெடுப்பாள் பார்க்கலாம்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!