அத்தியாயம் 8.2

Screenshot_2021-07-27-16-11-56-1-3f5cac18

அத்தியாயம் 8.2

அத்தியாயம் 8.2

 

அன்ற

 “என்னங்க இத்தனை அவசரமா ஊர் விட்டு போறதா சொல்ராங்க? ” தில்லை தன் கணவரைப் பார்த்துக் கேட்க, “தெரிலம்மா என்கிட்டயும் இது பற்றி எதுவும் சொல்லல. “

 

“அவங்க சொல்லவேணாம் மாமா. நீங்க கேட்கலாமே? “

 

“அவனா சொல்லாதப்ப நான் எப்டிம்மா? “

அருள் குமரனின் முகத்தில் என்ன கண்டாரோ, தில்லை அதற்கு பின் எதுவும் கேட்கவில்லை.மாலை ஆறுமணி இருக்கும், மதியழகனும், ரேவதியும் அருள்குமரனின் வீட்டுக்கு வந்தனர்.

 

“வாங்கண்ணா…வாங்க உள்ள.” அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்த தில்லை, “மாமா பின்னாடி இருக்காங்க, இருங்க அழைச்சிட்டு வரேன்.” வீட்டின் பின் புறம் கிணற்றடியில் அமர்ந்திருந்த குமரனை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார்.

 

“என்னாச்சு குமரா முகமெல்லாம் ஒருமாதிரி இருக்கு, உடம்புக்கு முடியலையா என்ன?”

“அப்டில்லாம் ஒன்னும் இல்லை. தில்லை  சாப்பிட எதாவது சீக்கிரம் பண்ணு.”

 

“அதெல்லாம் வேணாம்டா. எனக்கு இரவைக்கு ஒரு வைபவம் இருக்கு. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல  கிளம்பிருவேன்.”

 

“மாமா நாம ஊருக்கு போறப்ப  செல்லமாவை எனக்கு குடுத்துருங்க, நான் சமத்தா பார்த்துப்பேன். நான் இல்லன்னா என்னை தேடி அழ ஆரம்பிச்சுறுவா. அப்புறம் அத்தைக்கு தான் கஷ்டம்.” 

 

பெரிய மனிதனாய் அதிதியை மடியில் அமரவைத்து படம் கீறி நிறம் தீட்டி அவளுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டே குமரனிடம் கேட்டான் ஆதிரையன்.

 

“குமரா, என்னால அடிக்கடி ஊருக்குள்ள வந்துட்டு இருக்க முடியாது. கட்சி மீட்டிங் அது இதுன்னு, இங்க வீட்லயும் இடம் பத்தல. அதான் அங்கேயே மாறிப்போம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு நாம காலைல  போய்ட்டா, அப்புறம் பசங்க வந்து வீட்டு பொருளெல்லாம் கொண்டுப்போய்டுவாங்க.”

 

இந்த  ஐந்து வருடங்களில் அழகன் அவரது கட்சியில் மேலும் முன்னேறி, நல்ல நிலையில் இருந்தாலும் ஏனோ குமரனின்  நிலங்களை இன்னும் மீட்டு ஒப்படைக்கவில்லை.குமரனுக்கும் இந்த சில வருடங்களில் அத்தனை பெரும் லாபம் ஈட்டும் விளைச்சல் இல்லாததால், தங்களுடைய தேவைக்கும், கூலிக்கும் என்றே சரியாக இருந்தது.

 

“சரி டா.உனக்கு எது சரின்னு இருக்கோ அதைப் பண்ணு. “

வேறெதுவும் கூறிக்கொள்ள வில்லை. தில்லை கண்களால் கேட்குமாறு கூறியதை குமரன் கவனித்தாலும், மதியழகனிடம் எதுவும் பேசவில்லை.

 

ரேவதி எழுந்து, தில்லையோடு  சமையலறைச்செல்ல,

“குமரா உன்னோட நிலங்கள் இன்னும் மீட்டுக்க முடில, ஆனா அதைப்பற்றி பயப்படாத. கண்டிப்பா மீட்டிரலாம். அதற்கான வட்டி இந்த ஐந்து வருடத்துக்கும் கட்டிட்டுத்தான் வரேன். அப்டி பார்த்தால் நீ இந்த நிலத்தை வாங்க கொடுத்த காசை விட வட்டி கட்டிட்டேன்.” சிரித்துக்கொண்டே மதியழகன் கூறினார்.

 

“அப்போவே என்கிட்ட காசு கிடைச்சப்ப நீ எனக்கு மீட்டெடுக்க விடல, அதுக்கப்புறம் என்னாலயும் முடில. அதுபோக நீ திரும்ப  இன்னும் காசு வாங்குனதா ஐயா சொன்னாங்க. “

 

“ஹ்ம் ஆமா குமரா. கட்சி தேவைக்காக வாங்குனேன். கண்டிப்பா இன்னும் இரண்டு வருடம் தவணையா வச்சுக்கோ, அதுக்குள்ள திருப்பி கொடுத்துருவேன்.” என மதியழகன் கூறினார்.

 

அடுத்தநாள் காலை மதியழகன்  சொல்லிக்கொண்டு சென்று, ரேவதியும் ஆதிரையனும் செல்வதற்காக வண்டி அனுப்பியிருந்தார்.அதிதியோடு விளையாடிகொண்டிருந்தவனை அத்தனை கடினப்பட்டு கூட்டிச்சென்றார். அதிதியோடு  விளையாடிகொண்டிருந்தவாறே அழைத்துச் செல்ல அவளின் படம் வரையும் புத்தகத்தையும் சேர்த்து அணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதவண்ணம், அதிதியின் கன்னத்தில் முத்தமிட்டவன்,”என் செல்லம்மா பார்க்க டெய்லி வருவேன், நாம விளையாடலாம், என் செல்லம்மா சமத்தா அம்மாக்கு தொல்ல பண்ணாம இருப்பீங்களாம். வெளில தனியா போகக்கூடாது என்ன? “அவளும் அவன் கூறக்கூற அழுதுக்கொண்டே  கேட்டிருந்தாள்.

 

அன்று சென்றவன் திரும்பி வரவே இல்லை. அதிதி இங்கே காய்ச்சலில் ஒரு வாரமாக  அவதிப்பட, அங்கே ஆதிரையனும் வீட்டில் அன்னையோடு சண்டையிட்டு ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தான். அருள்குமரன் அதிதியை அவ்வப்போது வயலுக்கும், தோட்டத்திற்கும் வேலைக்கு போகும் நேரங்களில் அழைத்துக்கொண்டு போக அவளும் அந்த சூழலுக்கு பழக, மனம் கொஞ்ச கொஞ்சமாகவே மாற்றம் கண்டது. ஆதிரையனை பாடசாலை மாற்ற அவனும் அதன் மாற்றத்தில் அதிதியை மறந்து போனான்.

 

இப்படியாக ஒருவருடம் கடந்திருக்க திடீரென்று அருள்குமரனுக்கு மதியழகன்  அழைத்து, இவர்களின் நிலத்தில் அந்த ஊருக்கே தொழில் தரும் வகையில் ஓர் ஆலை அமைக்கப் போவதாகவும் நிலம் இவர் பெயரில் இருப்பதால் மாதம்  இவருக்கும் வருமானம் வரும் வகையில் செய்திருப்பதாகவும் கூறினார்.

 

“என்ன மதி இப்டி சொல்ற? அந்த நிலமெல்லாம், விளைச்சலுக்கானது. கட்டிடம் கட்றதுக்கு வேற நல்ல இடமா பார்க்கலாம். நானே வேணும்னாலும் பார்த்து தரேன்.”

 

“இல்ல குமரா, இங்க எல்லோருக்குமே இது என் இடம்னு தான் தெரியும்.அதுனால இப்டி ஆரம்பிக்கலாம்னு அவங்களேதான்  சொல்லிருக்காங்க. என்னால மறுத்து பேச முடில, எல்லோர் முன்னாடியும் என்னோட நிலம் இல்லைனு சொல்லி அவமானப்பட்டுக்க முடியாது. அதோட இன்னும் கொஞ்சம் நேரத்துல அங்க ஆலை  ஆரம்பிக்குறதுக்கான எல்லா ஏற்பாடும் ஆரம்பிச்சிருவாங்க. அதான் உன்கிட்ட சொல்லலாம்னு பேசுனேன். “

 

“ரொம்ப அவசரப்பட்ற மதி, கொஞ்சம் நிதானமா பண்ணலாம்.”

“ரொம்ப யோசிக்காத குமரா,உனக்கு எந்த நட்டமும் வர விடமாட்டேன்.”

சொல்லியவர் அழைப்பை வைத்திட, அருள்குமரனுக்கு அனைத்தும் கைமீறி போன நிலை.

 

இந்த கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி அதிக தலைவலி இருப்பதோடு, அவ்வப்போது நெஞ்சும் வலித்துக்கொண்டிருந்தது. குமரனுக்கு. தில்லையிடம் எதுவும் சொல்லிக்கொள்ளா விட்டாலும், அவருக்குமே யோசனையாக இருந்தது. மனைவிக்கும் மகளுக்கும் உறவென்று தான் மட்டுமே இருக்கிறேன். வைத்தியரை நாடி என்னவென்று பார்த்திட வேண்டும். அதுபற்றி யோசித்துக்கொண்டே இருந்தார். இருந்தும் வைத்தியரை அணுகி தன் உடல் நிலைப் பற்றி கேட்டுக்கொள்ள நேரம் மட்டும் கிடைக்கவே இல்லை. ஓர் நாள் மாலை நேரம், ஆலையின் வேலைகள் முடியும் தருவாயில் இருக்க, இவர்கள் வீட்டின் முற்றத்தில் அதிதியை விளையாட விட்டு பார்த்துக்கொண்டிருந்தவருக்கு, காலையிலிருந்து தலை வலித்துக் கொண்டிருந்தது. சற்று தள்ளி ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த தில்லையை பார்த்தவருக்கு, நாளை எப்படியும் வைத்தியரை பார்க்கச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

சடுதியாக தலைவலி கூடிக்கொண்டே போக, தன்னுடைய ஒரு பக்க கையும் காலும் எதுவோ ஆவதை உணர்ந்தார். சட்டென்று அருகே இருந்த கல்லொன்றை எடுத்து தில்லையை நோக்கி வீச,

 

 “என்ன மாமா விளையாட்டிது…”எனக் கேட்டுக்கொண்டே இவர் பக்கம் திரும்ப குமரன் நிலைக்கண்ட தில்லையோ,

“மாமா…” எனக் கத்திக்கொண்டே அவரிடம் ஓடி வந்து, “மாமா,மாமா என்ன பண்ணுது? யாராவது  வாங்களேன்…” எனக் கூச்சலிட, வயலில் இருந்த சிலர் ஓடி வந்தனர். அவசரமாக அவரை வண்டியேற்றி அனுப்பிட தில்லை மகளை கையோடு இழுத்துக்கொண்டு இன்னுமொரு மூச்சக்கர வண்டியில் ஏறியவர்,அவ்வண்டியை தொடந்து அதிதியை அனைத்தவாறு அழுதுக்கொண்டே சென்றார்.

வைத்தியசாலை முன்னே வண்டிவிட்டுங்கி வைத்தியாசலை உள்ளே கொண்டு செல்லவும் தில்லையும் அதன் பின்னே ஓடிக்கொண்டு வந்தார். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்க அவரை வந்து பரிசோதித்த வைத்தியரோ வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாகக் கூறினார்.அதிக இரத்த அழுத்தமே காரணம் என்று கூறினார்கள். தில்லையின் குரலங்கு ஓங்கி ஒலிக்க அவளை தேற்றுருவார் யாருமிருக்கவில்லை. அருள்குமரனின் நன் மனதினால் ஊரில் பலரையும் சம்பாதித்து வைத்திருக்க அனைவரும் ஒன்றிணைந்து அணைத்து காரியத்தினையும் செய்து முடித்தனர். மதியழகன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்க இரண்டு வாரங்கள் கடந்தே அவருக்கு இந்த செய்தி கிடைத்திருந்தது.

அவர் மட்டுமாக வந்து துக்கம் விசாரித்தவர், தில்லைக்கு நிலம் சம்பந்தமாக எதுவும் தெரியாது என்று நினைத்து,

“குமரா அவன் நிலம் எல்லாம் அடகு வச்சு மீட்டுக்க முடியாமல் இருந்திருப்பான் போல. நானே மொத்தமா மீட்டெடுத்துர்றேன்.நீ அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேணாம்.மாதம் உங்களுக்கு வருமானம் வர்றதுக்கு நான் எதாவது ஏற்பாடு பண்ணிர்றேன். நீ பொண்ணை நல்லா வளர்த்துக்கப் பாருமா.”

 

என்று கூற,தில்லை ஒன்றுமே அவரோடு  எதிர்த்து பேசவில்லை,பேசும் நிலையில் அவர் இருக்கவில்லை என்பதே  உண்மை.வீட்டுச் செலவுக்கு தேவையான பொருளெல்லாம் கொண்டு வந்திருக்கேன் மா.எடுத்து உள்ள வச்சிரு. என்னன்னாலும் என்கிட்ட தயங்காம சொல்லு.கண்டிப்பா பண்ணித்தரேன்.”

கூறியவர் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

பலமாதங்கள் தில்லையால் தன்னை மீட்டுக்கொள்ள முடியாது போராடினார். ஆதிதியும் தந்தையை தேடி கலைத்துபோக தன் அன்னையும் அழுது புலம்பிக்கொண்டே இருப்பதை பார்த்தவள் அதன் பின்னே அமைதியாகிப்போனாள்.நாட்கள் கடந்து  வாரங்கள்,மாதங்களானப் பின்னே தான் அதிதியின் உடல் மெலிவும் சோர்வும் அவர் கண்களுக்கு புலப்பட்டது.

தன்னைத்தானே தேற்றிகொண்டவர்,தன் மகளுக்காக வாழவே வேண்டுமே என்று முடிவெடுதவறாய் வாழ பழகிக்கொண்டார்.

 

இருந்தும் அதிதிக்கு பத்து வயதாகவும்,இந்த நிலங்கள், வீட்டின் ஒவ்வோர் இடமும் அருள்குமரனை நினைவு படுத்த,ஊரில் கொஞ்சம் பழக்கப்பட்ட கணவரின் நண்பன் துணைக்கொண்டு அவ்வூரை விட்டு சென்றார்.

 

அதிதியை பாடசாலை மாற்றி,அவர்கள் தங்க விடுதி என அனைத்தையும் பார்த்துக்கொடுத்தார்.அதன் பின்னேதான் அதிதி செல்வநாயகம் வீட்டில் அவளும் ஒரு பெண்ணாய் மாறிப்போனாள்.

 

அந்த சிறுவயதிலேயே அன்னையின் மனக்கஷ்டத்தை நன்கு உணர்ந்து, பக்குவப்பட்டு,சூழலுக்கேற்ப தன்னை திடப்படுத்திக்கொண்டு இந்நிலைக்கு வந்தாள். இடையே தில்லையும் இறந்துப்போக, தனக்கு துணை இல்லாது போனாலும், தந்தையை பிரிந்து அன்னைக் கொண்ட துன்பத்திற்கு இம்மரணம் என்னவோ அவர் ஆன்மாவை அமைதிப்படுத்தும் என்று நினைத்து மனதை தேற்றிக்கொண்டாள்.

 

அதிதி தன் கல்லூரி படிப்பை  தொடரக்காத்திருக்கும் நேரம், இவளை  இங்கே அழைத்து வந்த மனிதர் மூலமாக இவள் சொத்துக்கள், நிலங்கள் பற்றி தெரியவந்தது. எனவே செல்வநாயகம் துணைக்கொண்டு நிலங்களை தந்தை பெயர் சொல்லிக்கொள்ள, நட்பை அத்தனை இழிவு படுத்திய மனிதனை தனித்து தானே நேர்கொண்டு சந்தித்து மீட்கவேண்டும் என்றே துணிந்தாள்.பழைய நினைவுகளில்  மூழ்கி இருந்தவள் பெருமூச்சொன்றை வெளியிட்டவாரே தலையணைக் கட்டிக்கொண்டு உறங்க முற்பட்டாள்.

 

நடந்து முடிந்ததென்னவோ இப்படியாய் ஆகிட, ‘கடவுளே எனக்கு நீ மட்டுமே துணை.’ என்று கண்களை இருக மூடிக்கொண்டாள்.

 

கன்னங்கள் இரண்டுலும் கண்ணீர் கோடுகள்…

தலையணை சொல்லும்

நித்தம் இவள் தனிமை வதைக்கும் ரணங்கள்…

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!