அனல் அவள் 16

அனல் அவள் 16

விவேகனும் தமிழும் ஒருவழியாக பாலா கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 

விவேகனின் பார்வை அந்த இடத்தை ஒரு கணக்கிடல் உடன் எடை போட்டது. தமிழுக்கோ மனதில் யாரோ மத்தளம் அடிப்பது போல இருந்தது. ஏனெனில் அந்த குடோன் இருக்குமிடம் அப்படி,

 

 

அந்த குடோனுக்கு செல்லும் பாதை ஆரம்பிக்கும்போதே வளர்ந்து நின்ற பனைமரங்களும் தென்னை மரங்களும், அதற்கு அடுத்து இருந்த அடர்ந்த மா மரங்களை கொண்ட ஒரு பெரிய மாந்தோட்டமும்,

 

இவற்றைத் தாண்டி வந்தால் தான் இந்த வீடு தோரணையில் இருக்கும் குடோன் அமைந்து இருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே இப்படி ஒரு கட்டிடம் இருக்கும் என்பதே தெரியாது அந்த அளவிற்கு இருந்தது அந்த இடம்.

 

தவறான செயல்களுக்கு ஆகவே பயன்படுத்தப்படும் போல என நினைத்த தமிழ் அதை விவேகன் இடமும் கூறியபோது விவேகனின் தலையும் அதை ஆமோதிக்கும் வண்ணம் அசைந்தது.

 

பிறகு இருவரும் ஒரு முடிவு எடுத்தவர்களாக தென்றலை காண அந்த இடத்திற்குள் காலடி எடுத்து வைக்கவும் தமிழின்.செல்போன் அலறியது.

 

அழைப்பு மித்ரனிடம் இருந்து வரவும் விவேகன் அழைப்பை ஏற்றான். மித்ரன் கூறியதை கேட்டு விவேகனின் முகத்தில் ஆனந்த பரவசம். 

 

“சரி பார்த்துக்கோ நான் வந்துட்றேன்” என முடித்துக் கொண்டான்.

 

“என்ன விஷயம்” என தமிழ் கேட்டபோது,

 

“தென்றல் இஸ் சேஃப்” என மொட்டையாக கூறியவன் உல்லாசமாக விசில் அடித்தபடி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

 

தமிழுக்கும் தென்றல் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதே போதுமானதாக இருந்ததால் மேலும் எந்த கேள்வியும் விவேகன் இடத்தில் கேட்டுக் கொள்ளவில்லை. அவனும் விவேகன் உடன் அந்த இடத்திற்குள் நுழைந்தான்.

 

தரைதளத்தில் யாரும் இல்லை என்றதும் வெளியில் வந்தவர்களின் கண்ணில் முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் பட்டது.

 

அதில் வேகமாக ஏறிய இருவரும் மேலே செல்ல,

 

பாலா கையில் இருந்த கைபேசியில் தென்றலின் புகைப்படத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த அருவெறுப்பான காமவெறி விவேகனையும் தமிழையும் வெறி ஏற்றியது. கண்டதுமே அவனை கொள்ள வேண்டும் என நினைத்த விவேகனும் என்ன நினைத்தானோ சற்று நேரம் பொறுமையை கையாண்டான்.

 

பாலா அருகில் சென்ற விவேகன் அவன் அமர்ந்திருந்த மேசைக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன். அவன் மதுபானத்தில் கலப்பதற்காக வைத்திருந்த குளிர்பானத்தை எடுத்து அருந்தியவாறே மிகவும் கூலாக,

 

“தென்றல் எங்கே” என வினவ விவேகனின் பொறுமையான அணுகு முறை பாலாவை குழப்பியது. 

 

வந்தவுடன் தன்னை தூக்கி போட்டு மிதிப்பான் என நினைத்து இருந்தவனுக்கு, இவனின் இந்த அணுகுமுறை இன்னும் பயத்தை கிளப்பியது தமிழுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் ஆகிவிட்டது.

 

தென்றலின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்த பாலாவின் முகபாவத்தை கண்டு தமிழுக்கே அவனை அடித்து நொறுக்கும் அளவுக்கு கோபம் வந்தபோது, விவேகன் இப்படி பொறுமையாக அவனிடம் பேசிக் கொண்டிருப்பது தமிழுக்கு  எரிச்சலைக் கிளப்பியது.

 

விவேகன் அருகில் வந்த தமிழ் அவன் காதில்,

 

“என்னடா விவேக் பொறுமையாக பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்க வந்த உடனே அவனை இழுத்து வச்சி நாலு மிதி மிதிப்பனு பார்த்தா நீ இப்படி பண்ணிட்டு இருக்க உனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா தென்றல் தான் சேஃப்ஹா இருக்கான்னு தெரிஞ்சிடுச்சில இன்னும் ஏன் இவன் கிட்ட பேசிட்டு இருக்க உன்னால முடியலைன்னா சொல்லு டா இந்த பொறுக்கிய இப்பவே அடித்துக் கொண்ணுப் போடுறேன்” என ஏகத்துக்கும் எகிறிய தமிழை பார்த்து,

 

சற்று பொறுமை காக்கும்படி கூறிய விவேகன் திரும்பவும் பொறுமையாக பாலா பக்கம் திரும்பி, 

 

“தென்றல் எங்கே” என கேட்க.

 

விவேகனின் பொறுமையான அணுகு முறையை பார்த்து முதலில் அறண்ட பாலா  தென்றலை கண்ணில் காட்டாத வரைக்கும் விவேகன் தன்னிடம் பம்மி தான் ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டவன்,

 

மிகவும் திமிராக கால் மீது கால் போட்டுக் கொண்டு தன் கைபேசியில் இருந்து அவன் உதவியாளருக்கு அழைக்க அது நீண்ட நேரம் அடித்துக் கொண்டே இருந்ததே தவிர அழைப்பு ஏற்க படவில்லை.

 

 

மீண்டும் மீண்டும் பாலா அவன் உதவியாளருக்கு அழைக்க பத்தாவது முறை அழைக்கும் போது அவன் அழைப்பை ஏற்றான்.

 

“என்னடா புடுங்கிட்டு இருக்க அவளை கூட்டிட்டு மேல  வா” என இவன் கத்த மறுபுறத்தில் பதில் இல்லை.

 

மீண்டும் அழுத்தமாக கேட்கும் போதுதான் அவன் அந்த அதிர்ச்சியான தகவலை கூறினான் அது யாதெனில் தென்றல் தப்பித்து விட்டாள் என்பது தான்.

 

குடித்த மதுவின் போதை முற்றிலும் வடிந்தே விட்டது.

இப்போது பாலாவிற்குள் உயிர் பயம்  சற்று எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.பயத்தில் வியர்வை துளிகள் முத்து முத்தாக அவன் முகத்தில் பூக்க ஆரம்பித்தது.

 

அவன் முக பாவனையை கண்ட விவேகனின் முகத்தில் இப்பொழுது புன்னகை பூ பூத்தது.இவர்களின் உரையாடல்களையும் முகபாவனைகளையும் பார்த்துக்கொண்டிருந்த தமிழுக்குத்தான் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல ஆகிவிட்டது.

 

மீண்டும் விவேகனே தொடர்ந்தான்.

 

“சொல்லுங்க பாலா தென்றல் எங்க” என கேட்டவாறே தன் சட்டையை முழங்கைக்கு மேல் வரை ஏற்றி விட்டவரே எழுந்த விவேகன் பாலாவை நெருங்கினான்.

 

அருகில் சென்று அவன் சட்டை காலரை கொத்தாக பற்றி,

 

“சொல்லு பாலா தென்றல் எங்க” என மீண்டும் மீண்டும் கேட்க பாலாவிடம் பதில் இல்லை. பொறுமை இழந்த விவேகன் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட பாலா ஐந்தடி தள்ளி சென்று கீழே விழுந்தவன் மூக்கில் ரத்தம் வழியத் தொடங்கி இருந்தது.

 

மறுபடியும் பாலாவின் அருகில் சென்ற விவேகன் அவன் அருகில் ஒரு காலை மடக்கி அமர்ந்து,

 

“சொல்லு பாலா தென்றல் எங்க”?

 

“நான் வர வரைக்கும் அவளை எதுவும் பண்ண மாட்டேன்னு சொன்னல நான் வந்துட்டேன் இல்ல, எங்க அவளை‌ என் கண்ல காட்டு” என பொறுமையாக அதேசமயம் அழுத்தி கேட்கும் போது அதிலேயே தெரிந்துவிட்டது பாலாவுக்கு அவனின் உள்ளடக்கப்பட்டிருக்கும் கோபத்தின் அளவு.

 

பாலாவிடம் இருந்து பதில் வராததால் விவேனின் கோபம் எல்லை மீறியது. மீண்டும் மீண்டும் பாலாவின் முகத்தில் தாக்கிக் கொண்டே இருந்தான். பிறகு அந்த முகத்தை வைத்து தானே இளம்பெண்களை மயக்குகிறேன் பேர்வழி என அவர்களின் வாழ்க்கையில் விளையாடினான்.

 

இதற்கு மேலும் அந்த அழகு முகத்தை அப்படியே வைத்திருக்க விவேகன் விரும்பவில்ல.  அதை சிதைக்கும் நோக்குடன் மீண்டும் மீண்டும் அவன் முகத்தையே தாக்கிக் கொண்டிருந்தான்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழும் ஓரளவுக்கு மேல் முகத்தை வேறொரு பக்கம் திருப்பிகொண்டான்.ஏனெனில் விவேகனின் ஒவ்வொரு அடியிலும் அத்தனை அழுத்தம் அத்தனை கோபம் இருந்தது.

 

பாலாவை அடித்து அடித்து ஓய்ந்து போன விவேகன் ஒரு அளவுக்கு மேல் சலித்துப்போனவன். தமிழ் இடம் அவனை கீழே இழுத்து வருமாறு கூறியவன் மடமடவென அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி சென்றுவிட்டான்.

 

“இவ்வளவு அடிச்சுட்டு மறுபடி எங்க கூட்டிட்டு வரச் சொல்கிறான். ஒருவேளை கொலை பண்ண போறானா”? என நினைத்த தமிழ் பாலாவை உயிருடன் முருகனிடம் ஒப்படைக்கும் பொறுப்பு தன்னுடையது என எண்ணிக்கொண்டு, அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

 

தமிழ் பாலாவுடன் கீழே வர விவேகன் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்து அந்த விவசாய நுண்ணுயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் இவர்கள் வாங்கி வந்த அந்த இரு பைகளையும் கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.பிறகு பைகளை தமிழிடம் குடுத்தவன் பாலாவை இழுத்து சென்று அங்கு இருந்த ஒரு மரத்தில் பாலாவின் சட்டையை கழட்டி அதில் அவனை கட்டி போட்டான்.

 

பிறகு பாலா அணிந்திருந்த ஜீன்ஸயும் கழட்டியவன் தமிழிடம் அந்த பைகளை வாங்கி அதில் இருந்த அட்டைப் பூச்சிகளை பாலாவின் உடலில் கொட்டி விட்டான்.

 

 

மயங்கத்தில் இருந்த பாலா,

 

 

தன் உடலில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு எழ பொறுமையாக கண்விழித்து பார்த்தவன் தன் உடல் முழுவதும் கொழகொழவென அட்டை பூச்சிகள் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்து அருவறுப்பாக உணர்ந்தான்.

 

“விவேக் தயவு செய்து இதை எடுத்து விடு. எனக்கு அருவருப்பா இருக்கு டா முடியல என்னால” என அழுதவாறே அவன் கதற இவை அனைத்தையும் தூரத்திலிருந்து கைகட்டி விவேகனும் தமிழும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

விவேகனின் செயலில் தமிழும் இது ஏன் என்பது போல் அவனை பார்க்க,

 

“பயப்படாதடா தமிழ், அட்டை பூச்சி கடிச்ச வலிக்காது, உயிர் போகாது, அதோட எச்சிலை இருக்க அனால்ஜெசிக் அப்படிங்கற கெமிக்கல் வலி நிவாரணியாக செயல்பட்டு அட்டைப் பூச்சி கடிக்கிற வலியே தெரியாம பார்த்துக்கும். ஆனால் அதே அட்டைப்பூச்சி எச்சில்ல இருக்க ஹிருடின் பாக்டீரியாவால் ரத்தம் உறைவது தடுக்கப்படும்.”

 

“அதனால் இரத்தம் உரையாம வெளியே வந்துட்டே இருக்கும். கொஞ்ச நேரம் கழிச்சி அவன் மேல உப்பு கொட்டிடா அதுவே கீழ விழுந்துடும், ஆனா அது கடித்த இடத்தில் இருந்து ரத்தம் மட்டும் நிக்காது. அந்த  அருவருப்ப அவன் உணரணும் டா” அதனாலதான் இப்படி செஞ்சேன் என அவனின் செயலுக்கு விளக்கம் கொடுத்தான் விவேகன்.

 

 

அங்கு ஒருவன் காட்டு கத்தலாக கதறுவது எதுவுமே காதில் விழாமல், இவர்கள் இருவரும் பேச்சி வார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

 

 

“ஆனால் விவேக் அட்டை கடிச்சா நெருப்பு தானக் காட்டுவாங்க நீ என்ன புதுசா உப்பு தூவ சொல்ற” என தமிழ் அவன் சந்தேகத்தைக்கேட்க வீட்டில் போய் இதற்கு பதில் கூறுவதாக சொன்னவன்‌.

 

பாலாவின் அருகில் வந்து,

 

“என்ன சொன்ன அருவருப்பா இருக்கா”. இதே தானடா விருப்பம் இல்லாத ஒரு பொண்ண பஸ்லயும், கோவிலையும், ரோட்டில் போகும் போதும், வரும்போதும் நீங்க உரசும் போதும் இடிக்கும்போது உணர்ந்திருப்பாங்க, இப்ப புரியுதா அவங்களோட உணர்வுகள்”

 

“ஒரு ஒருத்தனும் உரசும் போதும் இடிக்கும் போதும் தகாத முறையில் பேசும் போதும் வராத காதல வற்புறுத்தி வர வைக்கும் போதும் இதே மாதிரி அருவருப்பா தான் டா அவங்களும் உணர்த்து இருப்பாங்க.”

 

“நீங்க எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறுக்கலையா, உங்களை பெத்த அம்மாவும்  பொம்பளை தானே?” 

 

“இப்படி எல்லாம் அவர்கள் கேட்டதை வைத்து உங்களுடைய பார்வை, கூட பொறந்தவங்களையும் விட்டு வைக்கல உங்களை பெத்த அம்மாவையும் விட்டு வைக்கல, ஏன்டா உங்க புத்தி எல்லாம் இப்படி கீழ் தனமா இறங்கி போச்சு.”

 

“உன்ன மாதிரி பொறுக்கிகளால்  பாலியல் ரீதியான தொந்தரவுகளை அனுபவித்த எத்தனை பெண்கள் திருமணத்திற்கு அப்புறம் அவங்களோட கணவன் கூட திருமண வாழ்க்கையில் ஒன்றி வாழ்வதற்க்கு  சங்கடப்பட்டு, மன அழுத்தத்திற்கு ஆளாகி மனோதத்துவ நிபுணர்கள் கிட்ட வந்து நிற்கிறார்கள்னு தெரியுமாடா?”

 

“ஏன்டா வாழ்க்கைனா அது மட்டும்தானு ஆகிப்போச்சா, இனிமே நீ திருந்துவனு எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு தடவை உனக்கு வாய்ப்பு கொடுத்தாச்சு திரும்பத் திரும்ப வாய்ப்பு கொடுக்க நான் தயாராக இல்லை.”

 

“என்ன சொன்ன தென்றலுக்கு   பாதுகாப்பு கொடுத்து நான் என் வாழ்க்கையை தொலைச்சிட்டேனா. பைத்தியக்காரா.”

 

“எனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு காமிச்ச என் தேவதை டா அவ.அவள பாதுகாப்பா வெச்சிகுறதுநால  என் வாழ்க்கை போச்சுன்னு நினைக்கிற நீ தான் முட்டாள், நான் கிடையாது புரியுதா”

என கர்ஜித்வன். 

 

தமிழிடம் இருந்த மற்றொரு பையை திறந்து அதில் இருந்த சோடியம் குளோரைடை(உப்பு) அந்த அட்டைகளின் மீது தூவி விட்டான்.

 

சிறிது நேரத்திற்கெல்லாம் பாலாவின் உடலில் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த அந்த அட்டைகள் கீழே சுருண்டு விழுந்து விட அவை கடித்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியில் வரத் துவங்கியிருந்தது. ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் முழுவதுமாக சுயநினைவு இழந்து மயங்கி இருந்தான் பாலா.

 

சரியாக அந்த நேரத்திற்குள் முருகன் காவல்துறை அதிகாரிகளுடன் அந்த இடத்திற்கு விரைந்து வந்து இருந்தவர். பாலாவின் நிலையை பார்த்து ஆம்புலன்சுக்கு அழைத்து அவனை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தார். பிறகு சில பல பார்மலிடீஸ்களை முடித்துவிட்டு விவேகன் அருகில் வந்தவர்,

 

அவன் தோளை தட்டி கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு அவனை வற்புறுத்தி இருந்தார். அவன் மறுக்கவும்,

 

“இங்கு நடந்தவற்றிற்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, இங்க நடந்ததை நீ மறந்து விடு” என அழுத்தி கூறியவர் தமிழிடம் சைகை காட்ட தமிழ் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

 

சில சமயங்களில் நல்லவர்களைக் காப்பாற்ற சட்டத்தை மீறுவது தவறு இல்லை என முருகன் மனதில் நினைத்து கொண்டார்.

 

தமிழும் விவேகமும் மிகவும் சோர்வுடன் முருகனின் வீட்டிற்குள் நுழையவும் வீட்டிற்குள் இருந்தவர்களின் சிரிப்பு சத்தம் அவர்களை வரவேற்றது. 

 

அந்த சிரிப்பிற்கு சொந்தக்காரர்கள் மித்ரன் தென்றல் மற்றும் தென்றல் சென்ற அந்த வீட்டில் இருந்தவர்.

 

 

அந்த சிரிப்பு சத்தத்திற்கு சொந்தமானவரை கண்டு கொண்ட விவேகனின்  இதயம் ஒருகணம் தாளம் தப்பி துடித்தது.நான்கு வருடங்களாக அவனை தூங்க விடாமல் செய்திருந்த அதே சிரிப்பு சத்தம் மீண்டும் அவன் காதில் ஒலிக்க ஒருவித பதட்டத்துடனும் எதிர்பார்ப்புடனும் வீட்டிற்குள் விரைந்தான் விவேகன்.

 

நீண்ட நாட்கள் தேடலின் தீர்வாக இன்று தனக்கு காட்சி அளிக்கப்போகும் அந்த நபரை  நினைத்து விவேகனுக்கு  மிகவும் சந்தோசமாக இருந்தது.

 

நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு தலைமுடியைக் கோதி தன்னை சமன் செய்து கொண்டவன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாது சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

அத்தனை நேரம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த தென்றல் விவேகன் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்ததைக் கண்ட உடன் சிட்டாக பறந்து வந்து அவன் கைகளை இறுக கட்டிக்கொண்டு அவன் முழங்கையில்  சாய்ந்து கொண்டாள்.

 

அவள் கண்களில் மறந்தும் கண்ணீர் எட்டி பார்க்கவில்லை.

 

அதை எண்ணி விவேகன் தனக்குத்தானே பெருமைப் பட்டு கொண்டான். தன் வார்த்தைக்கு அவள் மதிப்பளிப்பாள் என அவனுக்கு தெரியும் இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலையிலும் அதை அவள் கடைப்பிடிப்பாள் என அவனும் எதிர்ப் பார்த்திருக்கவில்லை.

 

பிறகு விவேகன் தென்றலின் தலையைக்‌ கோதி விட அவனிடம் இருந்து விலகி வந்தவள். அவனை தலை முதல் கால் வரை ஆராயும் பார்வைப் பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவனும் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதைப் போல் தலை‌ அசைத்து சிரிக்க தென்றல் இப்போது சிரித்த முகமாக அவன் கையில் சாய்ந்து கொண்டாள்.

 

இவர்களின் செய்கையை பார்த்து கொண்டிருந்த மற்ற மூவரும்,

 

“ஆரம்பிச்சிட்டாங்கடா மௌனராகத்த” என கோரசாக கூறி ஒரே போல் தலையில் அடித்து கொள்ள இரண்டு நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு இடையில் சிரிப்பொலி பரவியது.

 

பிறகு தென்றலிடம் இருந்து விலகியவன்.குளித்து விட்டு வருவதாக கூறி அறைக்குள் சென்று தன்னை மறைத்துக் கொண்டான்.

 

புதிதாக வந்திருந்த அந்த நபரை அவன் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.இதை கவனித்த மித்ரனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டுக் கொள்ள வழக்கம் போல் அவன் சிந்தனையைக் தன் கேள்வியால் களைத்தான் தமிழ்.

 

“யாருடா இது புதுசா இருக்காங்க” என கேட்டவாறே மித்ரனின் அருகில் அமர்ந்த தமிழ் புதிய நபரைப் பார்க்க.

 

மித்ரன் இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தினான்.

 

“தமிழ் நீ‌ அன்னைக்கு கேட்டியே தென்றலுக்கு பெண் தோழிகளே இல்லையானு, அதுக்கு நான் சொன்னேன்ல ஒரே ஒருத்தி இருந்தானு,”

 

“அந்த ஒருத்தி இவ  தான் பேரு லக்ஷ்மி நாங்க கூப்புடுறது லக்ஸ்.

அப்பறம் லக்ஸ் இது தமிழ் எங்க கலேஜ்மேட்”. என மித்ரன் கூறவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

 

 

இவர்கள் பேசி கொண்டிருக்க அறையில் இருந்து வெளியே வந்த விவேகன் இவர்களை தாண்டி வெளியே சென்று அங்கிருந்த படிகளில் வேகமாக ஏறி மாடிக்கு சென்று விட்டான்.

 

 

விவேகனின் இந்த வினோதமான நடவடிக்கையில் மித்ரன் தான் குழம்பிப் போனான்.பிறகு ஏதோ தோன்ற தென்றல் மற்றும் லக்ஷ்மியை இவன் பார்க்க தோழிகள் இருவரும் இத்தனை வருட பிரிவுத் துயரைப் சிரித்து பேசி போக்கிக் கொண்டிருந்தனர்.

 

பிறகு மித்ரனும் அவர்களிடம் சொல்லி கொண்டு விவேகனிடம் பேச சென்று விட்டான்.விவேகன் வெளியேறியதும் தமிழ் குளிப்பதற்காக அறைக்குள் சென்றிருந்தான்.

 

தான் வெளியே வந்ததும் தன் வாலைப் பிடித்து கொண்டு தன் நண்பனும் வருவான் என விவேகன் எதிர் பார்த்து கொண்டிருக்க அவனை ஏமாற்றாமல் மித்ரன் மாடிக்கு வந்திருந்தான்.

 

அவன் வருகையை உணர்ந்த விவேகன் “அவளை எங்க கண்டு புடிச்சிங்க” என கேட்க அவன் லக்ஷ்மியை தான் கேட்கிறான் என நினைத்து சந்தோஷமாக,

 

“யாரடா லக்ஷ்மிய வா கேக்குற” என்க.

 

விவேகனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.”அவள ஏன் நான் கேக்கனும் நான் தென்றல கேட்டேன்” என கூறியவன் மித்ரனின் பதிலுக்காக காத்திருந்தான்.

 

மித்ரன் அங்கு நடந்தவற்றைக் கூற துவங்கினான்…

 

ஃபிளாஷ் பேக் ஸ்டார்ட்…

 

                 உதவி தேடி தென்றல் ஒரு வீட்டிற்குள் செல்ல அங்கிருந்த நபரைப் பார்த்து அவள் சந்தோசத்தில் சிலை என சமைந்து விட்டாள்.

 

அதிர்ச்சி இருக்காத என்ன, எட்டு வருடங்கள் தன்னுடன் ஒட்டி பிறந்த இரட்டையர் போல சுற்றித் திரிந்த தன் தோழி ஒரே நாள் விடியலில் மாயமாகி போய்விட நான்கு வருடங்களுக்கு பிறகு அவளை முழுதாக பார்க்கிறாள். தென்றலை  அந்த இடத்தில் சற்றும் எதிர்ப் பார்க்காத லக்ஷ்மியோ அதிர்ச்சியில் உரைந்தே விட்டாள்.

 

முதலில் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த லக்ஷ்மியின் பார்வை தென்றலுடன் ஒட்டியே திரியும் மித்ரனையும் விவேகனையும் ஒரு எதிர் பார்ப்புடன் தேடியது.

 

அவள் பார்வைக்கு விடைக் கிடைக்காமல் போகவும் தென்றலை அவள் கேள்வியாக நோக்க,

 

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவளும் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கூறி முடிக்க லக்ஷ்மியின் கை இடியென தென்றலின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.

 

“நீ திருந்தவே மாட்டியா டி” என கேட்டவாறே லக்ஷ்மி தென்றலை அணைத்து கொண்டாள்.தென்றலை அடித்த லக்ஷ்மி குலுங்கி குலுங்கி அழ தென்றலின் கண்ணில் கண்ணீருக்கான தடையமே இல்லை.

 

இதனை கவனித்த லக்ஷ்மிக்கும் ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால் மறுபக்கம் ஆனந்தம்.பிறகு எறும்பு கடித்தால் கூட அதை நினைத்து நினைத்தே ஒரு வாரத்திற்கு அழும் அவளின் உயிர் தோழி இன்று அறை வாங்கியும் அசராமல் நிர்கிறாள் என்றால் பெரிய விஷயம் தானே.

 

பிறகு ஒருவாறு தங்களை சமாளித்து கொண்ட இருவரும் மித்ரனுக்கு தகவல் கொடுக்க அவன் வந்து இவர்களை அழைத்து வந்து விட்டான்.

 

கதை அவ்ளோதான் என்று மித்ரன் விவேகனைப் பார்க்க தான் எதிர்ப் பார்த்தவற்றை நண்பன் கூற வில்லையே என விவேகனின் மனம் ஏமாற்றம் அடைய.

 

‘இப்போ கூட லக்ஸ் இத்தனை வருஷம் எங்க போச்சினு இவனுக்கு கேக்க தோனலையே சரியான அழுத்தக்காரன்’ என மித்ரன் மனதில் நண்பனின் மீது கோபம் கொண்டான்.

 

இவன் எங்கே அறிவான் தென்றலைப் பற்றி கேட்டாள் லக்ஷ்மி கதையும் சேர்ந்தே வரும் என்று எண்ணி தான் விவேகன் தென்றலைப் பற்றி கேட்டது.இதனை உணராத மித்ரனும் லக்ஷ்மியை பற்றி கூறாமல் தவிர்த்து விட்டான்.விவேகனும் தான் எதிர் பார்ப்பு என்ன என்பதை தன் கண் பார்த்தே கணிப்பதற்கு மித்ரன் ஒன்றும் தென்றல் இல்லை என்பதனை மறந்து போயிருந்தான்.

 

இருவரும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க தமிழ் அவர்களின் மௌனத்தைக் களைப்பதற்காக அங்கு வந்து சேர்ந்தான்.

 

பிறகு மூவரும் சேர்ந்து பாலாவிற்கு விவேகன் கொடுத்த தண்டனையைப் பற்றி பேச மித்ரனுக்கு கேக்கும் போதே உடல் நடுங்க கை கால்கள் சில்லிட்டுப் போனது.

 

அவனைப் பற்றி நன்கு அறிந்த விவேகன் அவனை அணைத்து ஆறுதல் படுத்தி கீழே அனுப்பி வைத்தான்.

 

இப்போது தமிழுக்கு புரிந்தது விவேகன் ஏன் மித்ரனை தவிர்த்து விட்டு தன்னை உடன் அழைத்துச் சென்றான் என.

 

மித்ரனை அனுப்பி விட்டு வந்த விவேகனிடம் தமிழ் தன் சந்தேகத்தை கேட்டான்.

 

“ஏன் விவேக் அட்டை கடிச்ச நெருப்பு காட்ட கூடாதுனு சொன்ன” என தமிழ் கேட்க.

 

தமிழ் எப்போதுமே இப்படிதான் அவனுக்கு ஒரு ஒரு விஷயத்தில் சந்தேகம் வந்து விட்டால்,அதை முழுதாக தெரிந்து கொள்ளாமல் விட‌ மாட்டான்.

 

 

“அட்டை கடிச்சதும் அது மேல நெருப்பு காட்டுனாலோ, இல்ல கையாலயே பிச்சி போட்டாலோ, அது நம்ம உடம்புல இருந்து குடிச்ச இரத்தம் எல்லாத்தையும் திரும்ப நம்ப உடம்புலயே கக்கிட்டு செத்து பொய்டும் தமிழ். அதுனால உடம்புல இருக்க இரத்தம் முழுக்க இன்ஃபெக்ஷன் ஆக வாய்ப்பு இருக்கு அதான்” என அவன் கேள்விக்கு விளக்கம் கொடுத்தவன் மேலும் சில தகவல்களையும் கூறினான்.

 

“அதே போல அட்டை ஒன்னும் சிலர் நினைக்கும் படி விஷப் பூச்சி எல்லாம் இல்ல டா. அதுவும் ஒரு மண்புழு வகையைச் சார்ந்த ஒட்டுண்ணி அவ்ளோதான்”.

 

“இப்ப அத ஆயுர்வேத மருத்துவத்தில கூட இரத்தக் கட்டிகளை நீக்க பயன் படுத்துறாங்க.அதுக்காக அது அவங்களே பாதுகாப்பா வளர்க்கவும் செய்வாங்க.கண்ட இடத்தில இருக்குற அட்டை பூச்சியை பயன் படுத்தினால் நான் சொன்ன மாதிரி இன்ஃபெக்ஷன் ஆகிடும் அதான்” என்க‌.

 

தமிழ் இப்போது விவேகனை மெச்சுதலாகப் பார்த்தான்.

 

இப்படியே இவர்கள் பேசிக் கொண்டிருக்க முருகனும் மருத்துவமனையிலும் காவல் நிலையத்திலும் அனைத்து ஃபார்மாலிடிஸ்களையும் முடித்து விட்டு வந்திருந்தார்.

 

முருகனை கண்டதும் தமிழ், “மாமா பாலா இப்போ எப்புடி இருக்கான் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே” என கேட்க.

 

 

அவன் கேள்வியில் சிரித்த முருகன், “இப்போ அந்த பையன் இருக்க நிலைமைக்கு செத்தே போயிருக்கலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க” என அவர் விவேகனின் முகத்தைப் பார்த்து கொண்டே கூற,

 

 

விவேகனின் முகத்தில் அப்படி ஒரு பிராகாசம் அவன் எதிர்ப் பார்த்ததும் இதைத் தானே பாலா வாழும் போதே அவனுக்கு நரகத்தைக் காட்ட வேண்டும் என்பது தானே.

 

பிறகு விவேகனுக்கும் இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியவர்.

 

“அப்புறம் தம்பி அந்த பாலா ஓட அப்பா அவனை தென்றலை இப்படி பண்ணதுக்காக மட்டும் அவனை தன் மகன் இல்லை என அவர் சொல்லல, அவன் கூட பிறந்த தங்கைய கூட ஒரு முறைக்கு பல முறை தப்பா அனுகி இருக்கான்” என தயங்கி தயங்கி கூறினார்.

 

விவேகன் மிகவும் சாதாரணமாக,

“எனக்கு தெரியும் ‌சார்” என்க.

 

அதிர்ச்சி அடைந்த முருகன், “எப்படி” என கேட்க.

 

“அடுத்த வீட்டு பொண்ணுக்காக தன் பெத்த புள்ளைய உயிருக்கு போராடுற நிலையில கை விடும் அளவுக்கு அந்த ஆளு நல்லவன் இல்லனு எனக்கு தெரியும் ‌சார்” என விவேகன் கூற தமிழ் அதிர்ச்சியாக முருகனின் முகத்தை பார்க்க,

 

அவரும் “ஆமாம்” என்பது போல் தலை அசைக்க மீண்டும் தமிழின் பார்வை பிரமிப்பாக விவேகனை தழுவி நின்றது.

பிறகு ஒருவாறு மூவரும் சமாதானம் அடைந்து  கீழே சென்றனர்.

கீழேயோ பெரிய யுத்தமே நடந்துக் கொண்டிருக்கிறது….

 

(தொடரும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!