அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 1

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 1
“யூ ஆர் எ பேட் மாம். ஐ டோன்ட் நீட் யூ…”
சுவரோடு ஒன்றிக்கொண்டு,கறுப்புக் காட்சட்டை, வெள்ளை சட்டை, கழுத்தில் கறுப்பு போ அணிந்து பள்ளிச்செல்ல தயாராகி இருந்த சின்னவனின் குரல் அறை மொத்தம் எதிரொலித்தது.
அழகாய் சிவந்த அதரங்கள் பிரித்து, நாசி சிவக்க ஆப்பிள் கன்னமிரண்டிலும் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே அவனும் பேச குழந்தையை முத்தமிடவே தோன்றியது அவளுக்கும்.
“ஐ ஹேட் கிரையிங்…” அதையும் அவ்வப்போது கூறிக் கொண்டு இன்னுமாய் கண்ணோடு கன்னமிரண்டை அழுந்தத் துடைக்க முகமோ சிவந்து ரோஜாப்பூ என இருந்தான்.
‘டேய் அழுதா கண்ணீர் வராம இருக்குமா?’மனதில் எண்ணியவள்,
“என்னாச்சு?அம்மாக்கு சொன்னா தானே தெரியும்…”
அவளும் கேட்டுக்கொண்டே அவனை அணைக்க வர,
“ஸ்டே தேர். டோன்ட் கம் டு மீ. ”
“ஓகே ஓகே. ஐ வோன்ட்.” அவன் இப்படியெல்லாம் பேசக்கேட்பது இதுவே முதல் முறை. அவன் கோபத்தை ரசிக்கவா, அவனை சமாதானம் செய்ய முயற்சிக்கவா இரண்டுக்கும் இடையே அவனை நெருங்க முடியாது நின்றுக் கொண்டிருந்தாள் பெண்ணிவள்.
“ஹேய், ரெடியாகுற வரைக்கும் நல்லாத்தானே இருந்த திடீர்னு என்னடா?”
“ஐ ஜஸ்ட் ரெமெம்பர். ”
“வாட் யூ ரெமெம்பர்? “
கேட்டுகொண்டிருக்கவுமே வீட்டின்முன் பள்ளிச்செல்ல கார் டிரைவர் வண்டியின் ஹாரனை அழுத்தினார்.
“இட்ஸ் கெட்டிங் லேட். நீ கிளிம்பினா தானே அம்மாக்கும் கிளம்ப முடியும்.”
“நான் இனிமே போகல. ஐ டோன்ட் வாண்ட் டு கோ.” இன்னுமாய் சற்று சத்தமாய் வேறு அழ ஆரம்பித்துவிட்டான்.
அவன் எதுவோ மனதுக்குள் வைத்துக்கொண்டு பேசுவதை உணர்ந்தவள் வண்டி டிரைவருக்கு அழைத்து அவன் போகவில்லை எனக் கூறினாள்.
“ஓகே.நீயும் போக வேணாம். நானும் போகல.”
“கம் டு மீ.”
“ஐ வோன்ட்.” தேம்பிக்கொண்டே கூறினான்.
நேற்று இரவு இவள் வரும் போதும் உறங்கியிருந்தான் சின்னவன். பெரும்பாலும் இவள் வரும் பொழுதுகளில் அவன் உறங்கியிருப்பது தான் வளமை.
காலை எழுந்ததிலிருந்து ஒரு மணிநேரம் அவன் பள்ளிக்கு செல்லும் வரை அவனோடு தான் கழிப்பாள். அவ்வளவே.
அதுவும் இவன் பள்ளிச் செல்ல ஆரம்பித்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. அதற்கு முன்னும் இப்போதும் வேலை வேலை மட்டுமே இவளுக்கு.
அவன் பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை அவனுக்காக மட்டுமே இருந்தவள் அதன் பின் இரண்டு வருடங்களாக வேலைக்கு செல்ல, இப்போது வரை வேலையோ அவளை மொத்தமாய் இழுத்துக்கொண்டது.
இந்த இரண்டு வருடங்களும் அவனோடு வீட்டில் பேபி சிட்டர் இருக்க அவரோடுதான் அவன் நேரங்கள் மொத்தமும் கழியும்.
ஆனாலும் அவளுக்கு அவனோடு கழிக்க கிடைக்கும் நேரங்களை முழுதாய் அவனுக்கே கொடுத்து விடுவாள். அது மட்டுமே அவளுக்கும் கிடைக்கும் தன்னை மறக்க இருக்கும் இன்பமான நேரங்கள் எனலாம்.
இருவருக்கும் ஐந்தடி தூர இடைவெளி இருக்கும். அதை நான்காக குறைக்கவும் சின்னவன் அனுமதிக்கவில்லை. அப்படியே மண்டியிட்டு அவன் எதிரே அமர்ந்தாள்.
“என்னாச்சு? அம்மாட்ட வாயேன்…” இவள் அவனைக் கெஞ்ச.
” நோ, யூ ஆர் பேட். “
“ஓகே, பட் டெல் மீ த ரீசன்?”
“யூ ஆர் நொட் கேரிங் மீ, யூ ஆர் நொட் லவிங் மீ. “
“வாட்? “
“போ. ஐ ஹேட் யூ. நீ பேட் மம்மி,ஐ வாண்ட் மை அப்பா. ”
“கௌதம்…? ”
கண்கள் நீர் திரள, அவன் கூறிய வார்த்தைகள் அப்போதைக்கான கோபத்தின் வெளிப்பாடாய் தெரியவில்லை அவளுக்கு. நீண்ட நாள் அடைத்து வைத்து அதனால் வெளியாகும் வார்த்தைகளாகவே உணர்ந்தாள்.
‘என்ன செய்து விட்டேன், தன் குழந்தையை கவனிக்க மறந்து விட்டேனா? என் குழந்தையின் தேவையை மறந்துவிட்டேனா? எல்லாம் சரியாக செய்வதாய்த்தானே நினைத்துக்கொண்டிருந்தேன்.’
“நான் பேட் மம்மியா?”
அவள் கண்ணீர் வழிய அவனைப் பார்த்து கேட்கவும், அன்னையவளின் முகத்தில் கண்ட மாற்றத்தில் மகனுக்கு உள்ளுக்குள் ஏதோ தோன்றியது போல.
“என் பிரென்ட் எல்லாமே அவங்க அம்மா கூடத்தான் டேலி ஸ்கூல் வர்ராங்க. வண்டில இருந்து இறங்கி டாட்டா காமிச்சு முத்தா வச்சு சிரிச்சிட்டே ஜாலியா கிளாஸ்க்குள்ள வர்ராங்க.’
“…”
“அப்றம் பிங்கி, நேத்து சொன்னா அவங்க மம்மி கிட்சேன்ல குக் பண்றப்ப அவளும் ஹெல்ப் பன்வாலாம். நைட் தூங்குறப்ப அவங்க அப்பா மேல ஏறி அம்மாகூட சண்ட போட்டுட்டே தூங்குவாளாம்.”
“கௌதம்… அம்மா ஒர்க் போறேன்ல அதான் லேட்டா … ”
“பிங்கியோட மம்மியும் தான் ஒர்க் போறாங்கம்மி.”
என்ன சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கும். தான் விட்ட பிழையெல்லாம் தன் மகனை இத்தனை பாதித்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அவளும்.
ஆமாம் பிழை செய்துவிட்டதாய் உணர்ந்தாள்.
“ஓகே நான் இனி டெய்லி ட்ரோப் பண்றேன், அம்மா ஏர்லியா வீட்டுக்கு வந்துர்றேன். ”
“நோ நீட். ஐ வாண்ட் அப்பா. ”
“கௌதம்?”
“அப்பாவ வீட்டுக்கு வர சொல்லு மம்மி, நா அப்பா கூட இருக்கேன்.”
“கௌதம்… “அதற்கு மேல் அவளுக்கு பேச வார்த்தை வராமல் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
“அவங்களுக்கு இன்னும் வேலை ஜாஸ்தி இருக்குமே…”
“அப்போ என்னை யாருக்கும் பிடிக்கலையா?அதான் என்னை விட்டுட்டு இருக்கியா மம்மி?”
“கௌதம்…”
“நீதான சொன்ன, அப்பா வர்றதுக்கு ஒரு டைம் இருக்கு. அப்போ கண்டிப்பா வருவாங்க, அந்த டைம் எப்போன்னு நம்மளுக்கே தெரியாதுன்னு.
அந்த டைம இப்போ வர சொல்லு மம்மி.”
உள்ளுக்குள் ஏதோ அவள் உடல் மொத்தம் பாய்ச்சுவதாய் உணர்ந்தாள். தலைக்குள் ஏதோ குளிர் திரவமொன்று மூளைக்குள் பாரவுவதாய் உணர்ந்தாள். ஒருமுறை இதுவே நடந்திருக்க அதுவே நிகழப் போவதை உணர்ந்துக்கொண்டாள் பெண்ணவள்.
“கௌதம், அப்பாக்கு கால் பண்ணு.”
கூறியவள் உடல் அதிர கை கால்கள் அசைய நினைவிழந்து செயல்பட்டாள்.
“மம்மி…”வீரிட்டது குழந்தை.
அவளை அந்தக் கோலத்தில் கண்ட கௌதம் அன்னையவளை நெருங்க பயந்துப்போனான்.
அவசரமாக அலைபேசியை எடுத்து டையல் செய்ய, அந்தப்பக்கம் இரண்டு ரிங்கிலேயே அழைப்பு ஏற்கப்பட்டது.
“ப்பா…”
“ஹேய் கௌதம். ஹாப்பி மார்னிங்.”
“ப்பா மம்மி… அவனுக்கு அழுகையே வந்தது.
“என்னாச்சு கௌதம்? அம்மாக்கு என்ன?”
“தெரிலப்பா. நான் ஏதும் பண்ணலப்பா. நான் திட்டிட்டேன்னு ஏதோ…”
“கௌதம் வீடியோ ஓன் பண்ணு… குயிக். ”
அவனும் ஓன் செய்ய,”அம்மாவை காமி.”
அவள் பக்கம் கேமராவை திருப்பினான் சின்னவன்.
“ஓஹ் காட், கட்டிலில் இருந்து, அப்படியே குதித்தெழும்பியவன் அருகிருந்த ஒரு டிஷர்ட்டை மாட்டிக்கொண்டு தட தடவென படிகளில் கீழிறங்கி ஓடினான்.
“கௌதம் போனை ஸ்டாண்ட்ல வச்சிட்டு நீ அம்மா பக்கத்துல போய் அவ கை ரெண்டையும் தேச்சு விடு, அப்பா வந்துட்டே இருக்கேன்.”
கௌதமிடம் கூறிக்கொண்டே பாதிதூரம் வந்திருந்தான். அத்தனை வேகம், காலையில் இருந்த வண்டி நெரிசலைக் கூட கண்டுகொண்டதாக தெரியவில்லை.
“கௌதம், அம்மா கன்னத்துல தட்டி எழுந்துக்க சொல்லு… ”
“மம்மி எழுந்துக்கோ… இனி நான் ஏதும் பேசலம்மி, எழுத்துக்கோம்மி.”
அவள் கன்னங்களை அடிக்காது பயத்தில் வருடிக்கொண்டே கௌதம் கூற,
அப்படியே மயக்கமானாள் பெண்ணவள்.
“கௌதம்,ஓபன் த டோர்.”
அவன் குரல் கேட்கவும் ஓடிச்சென்று கதவை திறந்து விட்டான் கௌதம். புயலென வந்திருந்தான். பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்காது ஐந்து கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டி இங்கு வந்திருந்தான்.
அவளருகே ஓடி வந்தவன் அவள் கன்னம் தட்டி சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சித்தான்.
“தண்ணி கொண்டுவா கௌதம்.”
அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தும் நினைவு திரும்பவில்லை.
அவளை கைகளில் ஏந்திக்கொண்டவன்,
“கௌதம்,டோர் லாக் பண்ணு கம் குயிக்.” என கதவையும் மூடி அவசரமாக வைத்தியாசலைக்கு அழைத்துச் சென்றான்.
பின்னிருக்கையில் கிடத்தியிருக்கும் அன்னையை திரும்பிப் பார்த்துக்கொண்டே வர,
“அம்மாக்கு ஒன்னும் இல்லடா, டாக்டர்ட போய்ட்டா சரியாகிரும்.”
நில்லாது வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தான் கௌதம்.
“டேய் என்னையும் சேர்த்து பயமுறுத்துற. நீ அழுந்தா அம்மாக்கு பிடிக்காதுல.”
“யெஸ். ஐ டூ ஹேட் கிரையிங்.” கூறினாலும் அழுகை நின்றப்பாடில்லை.
அவசரப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. அவன் கழுத்தில் முகம் புதைத்து தேம்பிக்கொண்டிருந்தான் சின்னவன். அவன் முதுகை தடவிக்கொடுத்துக்கொண்டே,
“ஒன்னும் ஆகாதுடா, நம்மளை மிரட்டுறதுக்கே எழுந்து வந்துருவா இப்போ.”
இருவருக்கும் சேர்த்தே கூறிக் கொண்டிருந்தான்.
டாக்டர் வெளியில் வரவும், அவருடன் பேசிக்கொண்டே அவரறைக்குச் சென்றான்.
“இது செக்கண்ட் டைம் இல்லையா?”
“யெஸ் டாக்டர்.”
“எதுக்காக ஏற்படுத்துன்னே கணிக்க முடில, ஓவர் இமோஷனல் ஆகிடறாங்க போல. அதோட இப்டி ஆகிட்டா உடம்பு ரொம்ப திடமானவங்க கூட வீக் ஆகிடுவாங்க. ஷி இஸ் ஆல்ரெடி வெரி வீக். கொஞ்சம் கேர் எடுத்துக்கோங்க. ஷி நீட் சம் ரெஸ்ட்.”
“ஷுவர் டாக்டர்.”
“போய் பாருங்க.” டாக்டர் கூறவும், அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான்.
“மம்மி…” கௌதம் அழ ஆரம்பிக்க,
“ஷ்…கௌதம், இங்க சத்தம் போடக் கூடாது. அம்மாக்கு ஊசி போட்டிருக்காங்க, ஷி இஸ் ஆல்ரைட் நொவ்.”
அவனை அவள் அருகே கட்டிலில் அமர வைத்தான்.
அன்னையின் கன்னங்களை வருடி முத்தமிட்டான் சின்னவன். அவன் கண்ணீர் மொத்தம் அவள் கன்னத்தில்.
அவளை அந்த கோலத்தில் கண்டவனுக்கு,’தான் கோபம் கொண்டு பேசியதால் தானோ’ இப்படி ஆகிவிட்டது என்று உள்ளுக்குள் பயந்து போனான்.
“மம்மி…” அவள் முகமருகே குனிந்து, மெல்லமாய், “இனி உன்கூட கோபமா பேசலம்மி, சாரிம்மி…”
அவள் கன்னத்தை மீண்டும் எச்சிலால் நனைத்தான்.
அவன் சிகைக் கோதிக் கொடுத்தவன்,
“ஷி இஸ் ஓகே கௌதம்.”
அவள் அருகேயே அமர்ந்திருந்தான். இவனும் கட்டில் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.
வாடிய மலர் கொடியென ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் பெண்.
“சரி,காலைல நீ ஸ்கூல் போக ரெடியாகிட்டு, அப்றம் ஏன் போகல?” சின்னவன் முகம் பார்க்க அவனுமே இவனை பார்த்துவிட்டு தலை குனிந்துகொண்டான்.
“என்னாச்சு? நீ எதுக்கு அழுத கௌதம்?”அவன் கையை தன் கைக்குள் எடுத்துக்கொண்டவன் மெல்லமாய் பேச்சுக் கொடுத்தான்.
“அதுப்பா… காரணத்தை சொல்ல வந்து நிறுத்தியவன்,
“ப்பா நம்ம கூடவே நம்ம வீட்ல ஸ்டே பண்றீங்களாப்பா? நான் இனிமே அம்மாகிட்ட அப்டில்லாம் கேக்கலப்பா?”
“ஐ பீல் அலோன் ப்பா…”
“கௌதம்… “
அவனுக்குமே அவன் சொன்ன விதத்தில் கண்களில் நீர் கோர்த்து விட்டது. ‘எத்தனை தனித்திருக்கிறான், இப்படி கேட்கும் அளவில் நிறுத்தி விட்டோமே.’
கௌதம் பேசிய ஏதோ ஒன்று அவள் மனதையும் மிகையாய் தாக்கியிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டான். சின்னவனின் மனதையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றெண்ணியவன்,
“அப்பா வரேண்டா.நோ வொறிஸ் ஓகே? “
“ப்ரோமிஸ்?”
“ப்ரோமிஸ்…டா, பட் நீதான் அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கணும் ஓகே?”
‘டன்’ என இருவரும் ஒருவருக்கொருவர் கை தட்டி சந்தோஷத்தை பகிர்ந்துக்கொண்டனர்.
பெண்ணவள் விழிக்க மதியத்தை தொட்டிருந்தது.
அவள் அலைபேசி அவள் வீட்டில் இருக்க, இவனது அலைபேசி வண்டியில் இருந்தது. இவர்களை அழைத்து கலைத்துப்போயிருந்தார்கள் இவர்களுக்கு அழைப்பு விடுத்தவர்கள்.
அவனது சுற்றமே மறந்து இவர்கள் இருவர் மட்டுமே அப்போதைக்கு நினைவில் இருக்க, அவனுமே அவன் அலைபேசியை மறந்திருந்தான்.
அதனால் ஏற்பட்ட நட்டம்…?
அவனளவில் நட்டமே இல்லை.
யார் இவன்…?