அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 13

IMG-20220627-WA0025-67375b9b

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 13

An kn-13 

அகில் சிங்கப்பூர் போய்ச் சேர்ந்து விட்டதாகவும் இப்போதுதான் அறைக்கு வந்ததாகவும் மெசேஜ் அனுப்பியிருந்தான். அடுத்த நிமிடமே பார்த்து விட்டதாய் காட்டியது. நேரம் பார்க்க மூன்று முப்பதைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. 

அவளுக்கு அப்போதே அழைத்தான். முதல் ரிங்கிலேயே ஏற்றாள்.

“ஐரா என்ன பண்ற, தூங்கலையா இன்னும்?” 

“தூங்கிருந்தா எப்டி பேசுவேன்.” 

“ஓஹ் அப்போ இன்னும் தூங்கவே இல்லையா? ” 

“ஹ்ம் தூக்கம் வரல. இவன் வேற இப்போதான் தூங்கினான்.”

“ஏன் உடம்புக்கு ஏதும் முடிலயா?இவ்ளோ நேரம் முழிச்சிருக்க மாட்டானே.”

“அதெல்லாம் ஒன்னுல்ல. என் ரூம்ல இருந்து அங்கேயும் இங்கயும் உருண்டுட்டே இருந்தான். என்னடான்னா ஒன்னுல்லன்னுட்டே இருந்தான். இப்போ தூங்கப்போறியா இல்லையான்னு சத்தம் போடவும் அவன் ரூம் போகனும் சொல்றான்.”

“ஓஹ்…”

“ஆனா பாரு அவன் ரூம்க்கு போகணும்னு சொன்ன காரணம் இருக்கே, அதான் சகிச்சுக்க முடில.”

“ஏனாம்?”

“அவனுக்கு அவன் அப்பா ஸ்மெல் வேணுமாம். அப்போதான் தூக்கமே வருமாம்.”

அங்கே அவனோ சத்தமாகச் சிரிக்க. “நிறுத்துறியா நானே கடுப்புல இருக்கேன். என்ன கன்றாவி போடி ஸ்பிரே இது? மொத்த ரூமும் இந்த வாசம் அடிக்குது. மூச்சு முட்டுது.” 

“ஏண்டி உனக்கு பொறாமை.” 

“ஒரு எருமையும் இல்லை.” 

“அந்த கம்பனி காரன்கிட்ட இத சொன்னேன்னு வை விளம்பரம் பண்ணிருவான்.”

“அந்தளவுக்கு ஒர்த் இல்லை.’

‘சாப்டியா?” 

“ஹ்ம், வர்ற வழிலேயே சாப்டுட்டோம். செம டையார்ட்.”

“ஹ்ம்.”

“நீ சாப்டியா, இப்போ என்ன பண்ணிட்டு இருக்க, நேரமா தூங்குன்னு சொல்லிருக்கனா இல்லையா? ” 

“காலேஜ் டாக்குமெண்ட்ஸ் கொஞ்சம் வெரிஃபை பண்ண இருந்துச்சு, இப்போதான் முடிச்சேன்.” 

“சரிடா. காலைல லெவன்க்கு தான் மீட்டிங். ஆப்டர் லஞ்ச் த்ரீக்கு அப்றம் தான். அதுல முடிஞ்சா நான் ஜோஇன் பண்ணிக்குறேன்.’

‘நீ கெளதமை அங்கேயே கொண்டுவந்து விடச் சொல்லு. அப்போ உனக்கு ஈஸியா இருக்கும்.” 

“ஹ்ம்.”

“சரி மேனேஜ் பண்ணிப்பியா?”

“என்ன இதுக்கு முன்ன மீட்டிங் அட்டென்ட் பண்ணாத மாதிரி கேட்டுட்டு இருக்க? ஏதாவது சொதப்பி வச்சுட்டு போயிருக்கியா?”

“ஹேய் அப்டிலாம் இல்ல ஐரா. ஐஜஸ்ட்.”

“இடியட் போய் தூங்கு.” 

சிரித்தவன், “குட் நைட்.”கூறி அழைப்பைத் தூண்டித்தான்.

அவளும் லேப்டாப்பினை மூடிவைத்தவள் கெளதம் அருகே உறங்கினாள். ஏனோ உறக்கம் மட்டும் கண்களை எட்டவே இல்லை. தலையணைக்கு போட்டிருந்த உறையை கழற்றி வீசினாள். கட்டிலின் அவள் பக்க உறையை நீக்கி கெளதம் பக்கம் நகர்த்தினாள். ஏனோ அவன் வாசனை மட்டும் போகவே இல்லை.

‘இடியட் இடியட்’ என அவனை திட்டிக்கொண்டே மெல்ல அவள் அறைக்குப் போகலாம் என எழுந்தாள். 

“ம்மி எங்கப்போற?” 

“எங்கயும் இல்லடா, இங்கதான் இருக்கேன்.” அவனை தட்டிக் கொடுத்தாள். பின் அவளை அறியாது ஒரு கட்டத்தில் உறங்கியிருந்தாள். 

காலை எழுந்தவள் ஆபிஸ் போக கிளம்பி கெளதமையும் அப்படியே பள்ளியில் விட்டாள். அவன் வண்டி விட்டு இறங்கும் போது அவன் முகம் பார்த்தவள்,

“கெளதம் என்னாச்சு? “

“ஒன்னுல்லம்மி…” தலை குனிந்திருந்தவன் நிமிரவில்லை. 

“லுக் அட் மீ கெளதம்.” அவளை பார்க்கவும் வண்டியில் வந்து அமரச் சொன்னாள். ஒன்றும் சொல்லாது மீண்டும் ஏறி அமர்ந்தான். அகிலுக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றதும் கெளதமின் பக்கம் திருப்பினாள். 

“ஹேய் கெளதம், ஸ்கூல் கிளம்பியாச்சா?” 

“இங்கதான் இருக்கேன் ப்பா.” 

“ஓஹ்! ஏன் டல்லா இருக்க? நைட் தூங்கலைன்னு அம்மா சொன்னாங்களே.”

“இல்லியே அப்போவே தூங்கிட்டேனே.” 

“அப்போ உங்கூட பேச எடுக்குறப்ப அப்போதான் நீ தூங்குனன்னு ம்மி சொன்னாங்களே.” 

‘அப்போ எங்கூட பேச எடுத்திருக்காங்க.’சின்னவனோ அவன் சொல்லாது சென்றதிலிருந்து பேசாத வருத்தத்தில் இருக்கிறான்.

“சரி அப்பாக்கு இப்போ மீட்டிங் இருக்கு. நீங்க ஸ்கூல் விட்டதும் பாலு அங்கிள் வருவாங்க. அவங்க கூட நேரா ஆபிஸ் போய்டுங்க. அங்க போய் அப்பாக்கு கால் பண்ணுங்க. தேர் இஸ் சம்திங் போர் யூ.” 

“ஓகே ப்பா. “சின்னவனின் முகம் தெளிவாகியிருந்தது. 

“ஓகே கிவ் மீ அ கிஸ்.” 

“லவ் யூ ப்பா.’அழைபேசித்திரையை முத்தமிட்டான்.’பாய் ப்பா” 

“டேய் என் போன் எச்சில் பண்ற.” 

“ஓகே ம்மி பாய்.” ஐராவிடம் போனைக் கொடுத்தவன் வண்டிவிட்டுறங்க, அவனுக்காக பிங்கி காத்திருந்தாள். அவளோடு கைகோர்த்து செல்ல செல்லும் அவனையே பார்த்திருந்தாள்.

“அவனை என்ன பண்ணி வசியம் பண்ணி வச்சிருக்க? “

“ஓய் அப்டில்லாம் ஏதும் இல்லை. வச்சிடறேன் டைமாச்சு.”

“ஹ்ம் ஓகே. டேக் கேர்.” 

நேற்றிரவு சரிபார்த்த டாக்குமெண்டை கல்லூரியில் சென்றுக் கொடுத்தவள் நேரே அலுவலகம் சென்றாள். 

கடந்த ஒரு மாதமாய் ஆபிஸ் பக்கமே வந்திருக்கவில்லை ஐரா. வீட்டிலிருந்தே கல்லூரி நடவடிக்கைகளை சரிவர பார்த்துக்கொண்டாள். இன்று அவள் உள்ளே வரவும் அனைவரும் அவள் மீதான பார்வையில் ஆர்வம் இருந்தது. 

அந்த நான்கு மாடிக்கட்டிடத்தில் மேல் தளம் வரவேற்பு வைபவங்களுக்காக நவீன முறையில் அமைக்கப்பட்திருந்தது. மற்ற மூன்று தளங்களும் அவர்களின் ஒவ்வொரு நிறுவனத்தினதும் பிரதான அலுவலகங்களாக செயல்பட்டு வருகின்றன. அனைத்தும் அகில் ரகுராம் என்பவனின் கண்காணிப்பின் கீழ். 

அடர் சிவப்பு வண்ணத்தில் கருப்பு நிற ஐந்தங்குல பார்டர் வைத்த காட்டன் சாரி அணிந்திருந்தாள்.

சேலை முந்தானையை பின்னோடு சுற்றி எடுத்து வலது கையில் பிடித்திருந்தாள். இடக்கை அவள் அலைபேசியை சுமந்து வயிற்றோடு சேர்த்து வைத்துக்கொண்டு உயர்த்தி கட்டிய கூந்தல் அலையாய் முதுகைத் தீண்ட அலுவலகத்தை தன் கண்களால் ஒரு வட்டமடித்த வண்ணம் அகிலின் அறைக்குள் நுழைந்தாள். 

பதினொரு மணிக்கு ஒரு மீட்டிங் என்றிட, அவர்கள் வழியில் கொஞ்சம் தாமதமாவதாகக் கூறி பதினொன்று முப்பதுக்கு வந்து சேர்ந்தனர். 

அவள் அகிலின் இருக்கையில் அமர்ந்திருக்க அவளைக் காண வந்தவர்கள் நான்கு பேர் உள்ளே வந்தனர். 

“சாரி போர் த டிலே மிஸ் ஐரா.” 

“தட்ஸ் ஓகே மிஸ்டர் ராகுல்.ப்ளீஸ்…” என அவர்களுக்கு இருக்கையை காண்பிக்க நால்வரும் அமர்ந்தனர். 

அதன் பின்னே அவர்களுக்குள் அறிமுகமாகிக் கொண்டவர்கள் வந்த விடயம் பற்றி கலந்துரையாடினர்.

மதியத்தை தாண்டி நேரம் சென்றுக் கொண்டிருந்தது.

அவர்கள் நால்வரும் அவர்களுக்குள் பேசி முடிவாக ஐரா கூறிய பரிந்துரைக்கு ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் பேசும் வரை அவர்களுக்கான மதிய உணவை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தாள்.

“அகில் இல்லையே.சோ மீட்டிங் கேன்சல் பன்னலாம்னு மார்னிங் தோணுச்சு. பட் வி டிட்ன்ட் எக்ஸ்பெக்ட் அ சொலுஷன்.”

இருக்கையில் நிமிர்ந்து அமர்த்திருந்தவள், கையிரண்டை கோர்த்து மேசையில் வைத்திருந்தாள். புன்னகையே பதிலாய் அவர்களுக்குக் கொடுக்க அவள் நிமிர்வில் அத்தனை கர்வம். 

அந்த இடத்திற்கு அத்தனை பொருத்தமாய் இருந்தாள். எப்போதும் அவள் வயதைக்கொண்டு அவள் தரத்தை குறைந்து மதிப்பிட அவள் உடல் மொழி அனுமதித்ததே இல்லை. 

“வேணும்னா நீங்க அகில் கூட ஒன்ஸ் டிஸ்கஸ் பண்ணிட்டு அப்றமா… ” 

“நோ நோ. வீ ஆர் அக்ரீட் வித் யூர் சஜெஸ்ட். அதையே ப்ரொசீட் பண்லாம். ” 

“ஓகே தென்,ஐ வில்.எதாவது ச்சேன்ஞ் இருந்தா வில் கரெக்ட்.” 

“ஓஹ் கண்டிப்பா.” 

“ஓகே,வீ அரேன்ஜ் யூர் மீல்ஸ் ஷால் வீ?” இருக்கையில் இருந்து எழுந்தாள். 

“ஓஹ்! தேங்க் யூ சோ மச் ஐரா.” 

“இட்ஸ் மை ப்லெஷர் சர்.”

வந்தவர்களில் ஒருவர் மட்டுமே நன்கு பரீட்சையமானவர், அவரோடு சகஜமாய் பேசி மற்றவர்களோடு ஓரிரு வார்த்தைகள் பேசி நிறுத்திக்கொண்டாள். 

“வை டோன்ட் யூ ஜோஇன் வித் அஸ்?” 

பையன் வந்துருவான், அவன் வந்ததும் சேர்ந்தே சாப்பிடுவோம். அன்பிற்கு நன்றி எனக் கூறி, அவர்களுடன் உணவு ஏற்பாடாகி இருந்த இடம் வரைச் சென்றாள். அவர்கள் உண்ண ஆரம்பிக்கும் வரை காத்திருந்து அதன் பின்னே கூறிக்கொண்டு வெளியில் வந்தாள்.

நேரம் இரண்டு தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. அடுத்து மீட்டிங் மூன்று முப்பதுக்கு, அதற்குள் கெளதம் வந்திடுவான். 

அடுத்து வர இருப்பவர்களை சந்திக்கப் பிடிக்காதவள் அகில் செய்து வைத்திருக்கும் செயலுக்கு அவனை திட்டித் தீர்த்துக் கொண்டே கெளதமிற்காக காத்திருந்தாள். 

கெளதம் வந்ததும் அவனோடு சேர்ந்து உண்டு விட்டு அவனை உள்ளே அகில் பயன்படுத்தும் ஓர் அறை இருந்தது. அதில் அவனை உறங்குமாறு கூறிவிட்டு அவள் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். 

மூன்று முப்பதைத் தாண்டி ஐந்து நிமிடங்கள் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. உள்ளே வந்தான் சத்யா. அவளை எதிர்பார்க்கவில்லை போலும். அவன் முக மாற்றத்திலேயே கண்டுகொண்டாள். ‘அவளுக்கு சொல்லப்பட்ட தகவல் அவனுக்கு சொல்லப்படவில்லையோ.’ 

“ப்ளீஸ் ஹேவ் யூர் சீட்.” 

இன்முகமாகவே மற்றுவர்களுக்கு கொடுக்கும் அதே புன்னகையை அவனுக்குமே கொடுத்தாள். இன்னும் கொடுத்திருப்பாள் தான் ஏனோ கடைசியாய் அவர்களின் சந்திப்பு அவளுக்கு அதை செய்ய அனுமதிக்கவில்லை.

“நான் மிஸ்டர் அகில் கூடத்தான் அப்பொய்ன்மெண்ட் போட்டிருந்தேன்.” 

“இங்க நானும் அவரும் வேற வேற கிடையாது. அதுனால உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டாங்களோ என்னவோ.” 

“ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட் யூ.” 

“பட் ஐ டிட்.” 

அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்த பார்வையில் தன்னை தொலைக்கவே எண்ணம் அவளுக்கு.

‘அவளைக் கண்டுகொண்டானோ’

சற்று இலகுவாய் அமர்ந்தான்.

“அன்னிக்கு சொல்லாமலேயே போய்ட்ட.”

“சொல்லிட்டு போகணும்னு தோணலை.”

புன்னகைத்தவாறே பதில் கூறினாள்.

“ஓஹ்! நானும் என்னை பேஸ் பண்ண முடியாம போய்ட்டியோன்னு நினச்சுட்டேன். காலேஜ் விட்டு கடைசியா நாம பேசிக்கிட்டதுக்கு அப்றமும் நீ தான் என்னை பார்க்கவே இல்லையே.” 

“எப்போவும் நான் அப்டி போனதே இல்லையே. காலேஜ்ல அன்னிக்கு நான் கேட்டது வேணும்னா தப்பா இருந்திருக்கலாம். பட் அதை நினச்சு எப்போவும் கில்ட்டி பீல் கிடையாது அப்போவும் இப்போவும். 

“எப்பிடி ஐரா இப்டி யதார்த்தமா இருக்க? என்னால ஏத்துக்க முடியல.”

அப்பர் கிளாஸ் ஆளுங்கன்னா எப்டி வேணும்னாலும் இருக்கலாம்னு இல்லையே.” 

“யெஸ் யூ ஆர் கரெக்ட். நான் கேட்ட ஒருவார்த்தை வச்சு என் கேரக்டர் நீங்க புரிஜிக்கிட்டதும் அப்படித்தானே. நான் அப்டி அன்னைக்கு கேட்டேன்னு நீங்க மென்ஷன் பண்ணுன பொண்ணும் நான் இல்லையே. பட் ஐ டோன்ட் நீட் டு ப்ரூப் யூ.” 

“ஐ ஸ்டில் ஹேவ் சம்திங் போர் யூ. பட் என்னால அதை முழுசா உணர்ந்து வெளிக்காட்ட முடில. ஏதோ ஒன்னு தடையா இருக்கு. லாஸ்ட் த்ரீ இயர்ஸ் வெடிங்க்காக வீட்ல கேட்டுட்டே இருக்காங்க. பட் ஓகே சொல்ல முடில.”

அவனையே பார்த்திருந்தாள். 

“நான் இப்போ ஒரு சிக்ஸ் மந்த்தா தான் இங்க இருக்கேன். அதுவரைக்கும் வெளில இருந்தேன்.” 

“ஹ்ம்… ஐ க்நொவ் இட்.” 

“ஹொவ்? “

‘தொலைத்ததை தேடுபவளுக்கு அதுவெல்லாம் ஒரு விடயமா என்ன.’ புன்னகைத்தாள். 

“உங்க ப்ரோடக்ட்ஸ் கொஞ்சம் டிலே ஆகும்னு சொல்லிருக்கீங்க. பட் வீ நீட் இன்டசெல்ஃ.” 

“டு பி பிரான்க் ஐரா, எனக்கு இங்க டீல் வச்சுக்க ஐடியா இல்லை. அப்பா கம்பல் பண்ணவும் தான் ஓகே சொல்லிருக்கேன்.”

“ஓஹ் ஐ சீ… அப்போ இன்னிக்கு அகில் இருந்திருந்தா இதே பதிலை கொடுத்திருப்பீங்களா?” 

“சொல்லத் தெரில வேணும்னே இழுத்தடிச்சிருப்பேன். கொஞ்சம் டிலே பண்ணி ப்லே பண்ணிருப்பேன்.”

அவனை கூர்ந்து பார்த்தாள். “சத்யாக்கிட்ட இந்த பழக்கம்லாம் இருக்கலையே. இல்ல எனக்கு இவ்ளோ நாளைக்கு தெரிலயா? ” 

“என்னன்னு தெரில அப்போல இருந்தே அவனைக் கண்டாலே பிடிக்கல.”

அவன் கூறும் அதே வார்த்தைதான். ஆனால் எப்போதும் ஐராவின் முன்னே கூறக் கேட்டதில்லை அவள்.

உள்ளுக்குள் எரிமலை கொந்தளிக்க பொறுமையாய் புன்னகை மாறாது அமர்ந்திருந்தாள். ‘என் அகிலை பிடிக்கலைன்னு எங்கிட்டயே சொல்றான். நாராயணா…’ 

“தட்ஸ் ஓகே சத்யா. நீங்க உங்க டீல் கேன்சல் பண்ணிக்கோங்க. உங்க அப்பா கூட இருக்க பிரெண்ட்ஷிப் விட்டுப் போகக் கூடாதேன்னு தான் ரகுராம் அங்கிள் சொல்லவும் நமக்கு லாபம் இல்லேன்னாலும் ஓகே சொல்லிருக்கோம். சோ நோ இஸ்சுஸ். நம்மகிட்டேயே இருக்கு.” 

அவள் அவன் டீல் விட்டுப்போகக்கூடாது என பேசுவாள் என்றிருக்க அவளோ ‘நாமலே போனா போகுதுன்னுதான் டீல் போட்டோம்னு சொல்லிவிட்டாள்.’ 

சத்யாவிற்கு அதில் முகம் மாறிட, “பட் கண்டிப்பா நாம ஏதாவது ஒரு செயின் வச்சுக்கணும் சத்யா, அப்போதானே இப்படியாவது மீட் பண்ணலாம். பாருங்க இப்போ கூட நாம ரெண்டு பேரும் பேசிக்கணும்னு மீட்டிங்லாம் அரேன்ஞ் பண்ணிக் கொடுத்திருக்காங்க.” 

அப்போதுதான் அவனுக்குமே ‘அப்படியும் இருக்குமோ?’எனத் தோன்றியது. 

உள்ளே அறையில் ஐரா சார்ஜ் போட்டிருந்த அலைபேசியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான் கெளதம். அவள் அழைபேசிக்கு அகில் அழைத்தான். 

“ப்பா…” என அழைத்ததும் இவன் பேச உடனே வீடியோ ஓன் செய்திருந்தான் அகில். 

“அம்மாவோட போனை நீ வச்சுக்கிட்டு என்ன பண்ற கெளதம்.” 

“ஷ்…” வாயில் விரல் வைத்து கூறியவன் “ம்மி ஆபிஸ்ல இருக்கா. எனக்கு தூக்கம் வரல அதான்.” 

“ஓஹ்! ஓகே ஓகே…”

“ப்பா எனக்கு ஏதோ வச்சிருக்கேன் சொன்னீங்க? ” 

“அதுவா, அப்பாவோட கேபின்ல செக்கண்ட் ட்ராயர்ல இருக்கு போய் எடுத்துக்கோ.” 

“இதோ இப்போவே போறேன்.” அகிலின் பதிலைக் கூட கேட்காது ஓடியிருந்தான். அங்கே சத்யாவோடு பேசிக் கொண்டிருந்த ஐரா இவனை அங்கே எதிர்ப் பார்க்கவில்லை. 

வந்தவன் அங்கிருந்தவர்களையும் கவனிக்கவில்லை. அவள் பக்கம் சென்று ட்ராயரை திறந்து அவனுக்காக வாங்கிவைத்த சாக்லேட் பேக்கை எடுத்தான். சில நொடிகள்தான்,

“கெளதம்.”ஐராவின் அதட்டலான அழைப்பில் அப்போதுதான் தாம் எங்கே இருக்கோம் என்பதையே உணர்ந்தான் சின்னவன். 

‘நாராயணா…’ அங்கே அழைபேசிக்குள் அழைப்பில் இருந்த அகில் முணுமுணுத்தான்.

எதிரில் அமர்ந்து இவர்களையே பார்த்திருந்த சத்யாவையும் அப்போதுதான் கவனித்தான் சின்னவன். 

அழைபேசியை அப்படியே மேசையில் வைத்திருந்தான் கெளதம். அதில் இன்னும் தொடர்பு துண்டிக்கப்படாததால் அகிலுக்கு இவர்களின் குரல் கேட்க முடிந்தது. 

“சாரி ம்மி.” 

“இப்படித்தான் பிஹேவ் பண்ணுவீங்களா?” 

“சாரிம்மி. ப்பா போன் அதான்.” 

‘இடியட்’ உள்ளுக்குள் ஏற்கனவே அவனோடு கொலைவெறியில். இப்போது இதுவும் சேர்ந்துக் கொண்டது. அதுவும் சத்யாவின் முன்னிலையில். 

“சாரி சத்யா, சட்டுனு உள்ள வந்துட்டான்.” 

எல்லோரும் விரும்புவதில்லையே. ஏன் ஐராவே விரும்பாத செயல்தான் அலுவலகத்தில் வீட்டு உறவுகள் உறவாட. இதுவெல்லாம் முறையில்லை இல்லையா. 

“தட்ஸ் ஓகே.”

“நோ நான் தான் சாரி. சாரி அங்கிள்.” அன்னையவள் மன்னிப்பு வேண்டியது பிடிக்கவில்லை அவனுக்கு. கண்கள் கலங்கி தலை குனிந்தே நின்றிருந்தான். 

அடுத்தவர் முன்னே அதட்டுதல் பிள்ளைகளுக்கு மனம் நோகும். இருந்தாலும் அடுத்தவர் முன்னிலையில் எதை செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார்கள் எனும் எண்ணம் பிள்ளைகள் மனதில் வளர விடுவது பெற்றோர் செய்யும் பிழைகளில் ஒன்று. அற்காகத்தான் அந்த அதட்டல். 

அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவள்,

“எதுக்கு இவ்ளோ அவசரமா ஓடி வந்தீங்க?” 

“சாரிம்மி.”

“அம்மாவும் சாரி.”

“ப்பா கேபின்ல எனக்கு ஏதோ வச்சிருக்கேன் எடுத்துக்கோ சொன்னாங்க அதான் அப்படியே வந்துட்டேன், கவனிக்கலம்மி.” 

“ஹ்ம் ஓகே, உள்ள போய் இருங்க கொஞ்ச நேரத்துல கிளம்பலாம்.” 

“ஓகேம்மி…”

அவன் திரும்பி உள்ளே செல்ல அவனையே பார்த்திருந்தான் சத்யா. 

நீண்ட நாசி, அடர் புருவம் அப்படியே அகிலின் அச்சு. ‘ஆனாலும் எப்டி சாத்தியம்?’கன்னம் இரண்டும் ஐராவைக் கொண்டிருக்க அதை அவளிடமும் கூறினான்.

“அகிலை அப்படியே சின்னதாக்கி பார்க்குற போலயே இருக்கு. கன்னம் மட்டும் உங்கிட்ட இருந்து வந்திருக்கு.”

“யெஸ் எல்லாருமே இதையேதான் சொல்ராங்க. பசங்க பிறக்க முன்ன அவங்க அம்மா யார் கூட இருக்காங்ளோ அவங்க சாயல் பிள்ளைக்கு வர்றது இயல்பு தானே.” 

“ஹ்ம் இருக்கலாம். பசங்க அம்மா அப்பா போல இல்லன்னா தானே தப்பு. உன் சாயல் நிறையாவே இருக்கு.”

“ஹ்ம் கரெக்ட் தான்.”

“ஏன் ஐரா, இன்னுமே கல்யாணம் பத்தி யோசிக்கலை?”

“யோசிக்கலாம். பட் இன்னுமே அந்த ஸ்டெப் போக மனசு தயாராகல…” 

“இன்னும் என்ன இருக்கு தயாராக?” 

“நீங்க பார்க்குற ஐரா வேற நான் வேற சத்யா.”

“நான் பார்க்குறது தான் இங்க எல்லாருமே பார்க்குறாங்க ஐரா. பட் காலேஜ் டைம்ல அகில் கூட… ‘

‘ஏன் இன்னுமே அவனும் சிங்களாவே இருக்கான்.” 

“அதை நீங்க அகில் கிட்டதானே கேட்கணும்? ஆல்சோ அது பத்தி நான் பேசிக்க விரும்பல சத்யா.”

“கெளதம் அப்பா எங்க இருக்காங்க?”

“இதென்ன கேள்வி கெளதம் அப்பா கெளதம் கூடத்தான் இருக்காங்க.” 

“ரொம்ப நல்லாவே என்னை கன்பியூஸ் பண்ற.”

“நீங்க ஏன் அதையெல்லாம் நினச்சு டென்டஷன் ஏத்thக்கிறீங்க.”

கதவைத் தட்டி உள்ளே வந்த ஆபிஸ் பாய்,அவர்களின் பேச்சுக்கு தடைவிதித்து அவனுக்காக தேநீரை வைத்து விட்டுப் போனான்.

“ஹேவ் இட்.” அவனுக்கு எடுத்துக் கொடுத்தாள்.

ஒரு மிடர் அருந்தியவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கு பிடித்த ஏலக்காய் மணக்க இனித்தது தேநீர். ஏதோ கேட்க வந்தவன், அதை தவிர்த்துவிட்டு அருந்தினான்.

“அப்போ நீங்க டீல் கேன்சல் பண்ணிக்கோங்க, நான் அகில் கூட பேசிக்குறேன்.”

“அப்பா ஏதாவது ப்ரோப்லம் பண்ணுவாங்க.”

“அது என் ப்ரோப்லம், ஐ கேன் ஹாண்ட்ல் இட்.” 

“காலேஜ் எப்டி போய்ட்டிருக்கு? நீ யாருக்கும் ஷேர் கொடுக்க மாட்டேன்றன்னு பேசிக்கிறாங்க.”

“ஹ்ம், அதை எப்போவும் பங்கு போட்டுக்க பிடிக்கல அதான்.”

“இன்னும் டெவலப் பண்ணலாம், அதோட இன்னும் பிரான்சஸ் ஓபன் பண்லாமே.” 

“இன்னும் யாரும் உளள வந்துட்டா, அவங்க விருப்பங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கும். இப்போ என் இஷ்டம் இல்லையா, இதுதான் பிடிச்சிருக்கு. ஈவன் அகில்க்கு கூட அங்க இடம் கிடையாது.” 

“ஆகிலுக்கே இல்லை உங்களுக்கெல்லாம் நோ வேய் சொல்றியா?”

“ஹ்ம் அப்படியும் தான், பட் ஐ டிட்ன்ட் மீன் இட்.” புன்னகைத்தாள்.

“பட் இமாலயாவோட ஒரு பார்ட் தானே அது.”

“ஆப் கோர்ஸ் யெஸ். பட் என் காலேஜ் தான் ரூட். சோ அது இல்லன்னா இந்த இமாலயா இல்லை.” 

“ரகுராம் சார் கூட உன் பேச்சை கேட்கணும் போலயே.”

“ஹ்ம் அப்பப்ப.” அவனைப் பார்த்து மிக அழகாய் இதழ் புன்னகைக்க கண் சிமிட்டினாள் மிகச் சாதாரணமாய். அவளே அறியாது செய்துவிட்டாள். ஐந்து வருடங்கள் முன்னே இருந்த ஐராவின் துடிப்பு அந்தக் கண்களில் கண்டான். அவளின் பேச்சில் அவளை ரசிக்கவே தோன்றியது. திமிரான பதில்கள் தான். அது அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கேயான சாயலாகவே இருந்தது. ஐராவின் நிஜமுகம் எப்படியிருக்கும் என்பதை நன்கே அறிந்தவன் சத்யா.

அவன் அவளைப் பார்க்கும் விதத்திலேயே தான் செய்ததை உணர்ந்தாள். முகம் சிவக்க உள்ளுக்குள் ஏதோ ஆவதையும் உணர்ந்தாள். நல்லவேளை அவள் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வர அந்நிமிடம் அகிலும் தப்பித்தான்.

அப்போதுதான் அலைபேசியை துண்டித்திருந்தான். அழைப்பு வந்திரா விட்டால் திரையில் அவன் அப்போதுதான் தூண்டித்தான் என்பதில் சிக்கியிருப்பான். 

“ஜஸ்ட் அ மினிட்.” என எழுந்துச் சென்று அழைப்பை ஏற்றாள்.

அவனுக்கு முதுகு காட்டி நின்றுக்கொண்டு பேசினாள். அவளையே பார்த்திருந்தவன் சத்யா. மனதில், ‘அவளை என்னவென்று நினைக்க, அவள் பார்வையில் இவன் மீதான அன்றைய பிடிப்பை இன்றுமே பார்க்கிறான். ஆனாலும் கெளதம்? அகில்? இவர்களுடனான இவள் வாழ்க்கை. இதில் நான் எப்படி?’

ஏதோ அவனுக்கு இங்கே மறைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது.

யாரிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்வது? இதை தெரிந்துக் கொள்வதே இப்போதைக்கு முக்கியமாகப்பட்டது சத்யாவிற்கு. 

நாமும் தெரிந்துக் கொள்ள அவன் தேடவே வேண்டாம். அவனைத் தேடி அவனுக்கான விடைகள் விரைவாய் வந்து சேரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!