இரட்டை நிலவு – 2

IMG_20211208_184046 (1)-55fa5929

இரட்டை நிலவு – 2

அத்தியாயம்-2

“வாட்??” என மிகவேகமாக கேட்ட அமீக்காவின் முகபாவங்கள் மாற்றம் பெற, மறுநொடியே விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினாள். இந்த கேள்வியை கேட்டதும் “எவ்ளோ தைரியம் அவனுக்கு?? வா.. இன்னைக்கு ஒன்னுல ரெண்டு பார்த்துடலாம்..” என கொதித்து எழுவாள் என்று தன்வி நினைத்திருக்க, அவளின் சிரிப்பில் பெரிதாய் அதிர்ந்தாள்…

தன்வி பெயருக்கேற்றால் போல தன்மையானவள். பெண் என்பதற்கான அனைத்து பொருத்தங்களையும் கொண்டவள்.. பிறருக்கு தீங்கி விளைவிக்காத எண்ணம்.. அதிர்ந்து பேசினாலே அழுது விடும் ராகம்.. அமைதியின் மறுஉருவம்.. வெள்ளெந்தியான குணம் கொண்டதினாலேயே அடிக்கடி ஆபத்துகளில் சிக்கி அழுது கரைவாள்.. அப்பொழுது சூப்பர் ஹீரோ போல பாய்ந்து வந்து காத்து வாழ்வில் வசந்தம் வீச செய்வது அமீக்கா தான்.. அதனாலேயே சிறுவயதில் இருந்தே தொடரும் அமீக்காவின் அட்டூழியங்களை அவ்வீட்டின் சுவர்கள் கூறும்..

படுக்கையில் சாய்ந்திருந்தவள், “மீகா.. நான் சீரியஸா பேசுறேன்.. அவன் என்கிட்டே அப்படி தான் கேட்டான்.. எனக்கு ஒரு மாதிரியா போச்சுது.. எனக்கு என்னவோ இது சரியா வரும்னு தோணல.. அம்மா கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல மீகா…” என அழுவதற்கு தயாராகும் தன்வியின் பட்டு கன்னங்களில் தட்டினாள் அமீக்கா..

“பார்ன்னா பாப்காரன் மாதிரியான்னு கேக்குற உன்கிட்ட போய் அந்த கேள்விய கேட்டது அவனோட முட்டாள்தனம்.. நீ என்ன சொல்லியிருப்ப.. பேந்த பேந்த முழிச்சிட்டு நின்னுருப்ப.. ஹஹஹாஹ்…” என சிரிக்க, “மீகா..” என சிணுங்கினாள் தன்வி..

“ஸீ தன்வி.. பார்ன் அப்படின்றது கொலை குத்தம் அளவுக்கு தப்பானது ஒன்னும் இல்லையே.. கேசுவலான ஒன்னு.. டேக் இட் ஈசியா..” என தொடைகளில் தட்டி சமாதானம் செய்ய முயற்சிக்க, “என்ன கருமாந்திரமா வேணா இருந்துட்டு போகட்டும்.. அதுக்காக பர்ஸ்ட் டைம் மீட் பண்ற பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவாங்களா?? ச்சே.. என்ன மேனர்ஸ் இதெல்லாம்..” என முகத்தை சுருக்கி கொண்டாள் தன்வி.

“தன்வி.. நீ ஏன் இந்த விஷயத்தை இவ்ளோ காம்ப்லீகேட் பண்றன்னு தெரியல.. கல்யாணம் பண்ணிக்க போற பையன் தானே.. லிட்ரலி மேரேஜ் அலையன்ஸ்க்கு வர்ற எல்லா பையனும் பொண்ணும் பினான்ஷியலா பிசியோலஜிக்கலா பேசிக்குற மாதிரி பிசிக்கல் பத்தியும் பேசிக்குறது தப்பில்லை.. எனக்கு என்னவோ இந்த கேள்வி தப்பா தெரியல.. கேட்ட இடம் தான் தப்பு.. ஈவன் பத்ரி கூட அந்த மாதிரி டைப்பா தெரியல்லை.. இதெல்லாம் பர்ஸ்ட் டைம் கேக்குறதுனால உனக்கு தான் வித்தியாசமா இருக்குது.. ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ தன்வி.. இதுவும் ஹஸ்பன்ட் அண்ட் வொயப்குள்ள ப்ராபளம் க்ரியேட் பண்ற ஒன்னு தான்.. அதுக்காக பிசிக்கல் ரிலேஷன்ஷிப்பயே அலர்ஜியா பாக்குறது உன்னோட இம்மேச்சூரிட்டிய தான் காட்டுது..” என அமீக்கா பேசி கொண்டிருக்க தன்வியின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகள் சற்று தணிய துவங்கியது..

உடனே, “கம் ஆன் தன்வி.. உன் வீட்டுக்காரர் பேமிலிக்கு அத்தை வகை வகையா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் பண்ணி வச்சிருக்குறாங்க.. இதுக்காகவே ஆறு மணி நேரமா பசியோட வந்து நிக்குறேன்.. நீ என்னடான்னா குழந்தை மாதிரி கொஸ்டீன் கேட்டு என் வயித்துல க்ளோரிக் ஆசிடை சுரக்க விட்டுட்டு இருக்குற..” என வயிற்றை பிடித்து கொண்ட அரற்ற, மெலிதாய் புன்னகைத்த தன்வி, “ராங்கி.. வா.. சாப்பிடலாம்..” என கட்டிலை விட்டு இறங்கினாள்..

“ஒரு நிமிஷம்.. டிரஸ் சேஞ் பண்ணிக்கலாமா??” என கேட்ட அமீக்கா, “உன் நொத்தை பண்ணுன வேலைய பாத்தியா?? உன்னை நகை கடைக்கும் என்னை துணி கடைக்கும் நேர்ந்து விட்டுட்டு வர்ற காசுல சண்டே ஆட்டுகால் பாயா பண்ணிடலாம்னு ப்ளான் பண்ணிடுச்சு.. ஷப்பப்பா.. ஒரே அன்கம்பர்டபிளா இருக்குது..” என நொந்து கொண்டே டாப்ஸை தலைவழியே கழற்றினாள்..

“ஐயோ..” என விழிப்புடன் தன்வி திரும்பி கொள்ள, “ஏ.. என்ன ஆச்சுன்னு இப்படி சீன் போடுற.. இங்க இருக்குறது ரெண்டு பேரும் பொண்ணுங்க தான்.. சோ ரொம்ப அலட்டிக்காத..” என்றாள் அமீக்கா.. “ச்சீ.. மீகா.. நீ ஹாஸ்டல் போய் ரொம்ப கெட்டு போயிட்ட..” என்ற தன்வி கண்களை மூடியிருந்த கைகளை விலக்க, “இதுக்கே இப்படி பேசுனா.. எங்க ஹாஸ்டல் வந்து பாரு.. ஒரே ரூம்ல தான் நாலு பேரும் ட்ரெஸ் சேஞ் பண்ணுவோம்.. திஸ் இஸ் கேர்லி திங்க்ஸ்.. எல்லாருக்குள்ளேயும் சின்ன சின்னதா டெர்ட்டி ஹாபிட்ஸ் இருக்கும் சரியா.. இப்போ கூட அந்த கண்ணாடியில நீ பார்த்துட்டு தான இருக்குற..” என்ற அமீக்கா டாப்ஸை தன்வியின் மேல் எறிந்தாள்..

தலையில் விழுந்த துணியை ஒதுக்கி விட்டு, “நான் ஒன்னும் உன்னை பாக்கலை.. என்னை தான் கண்ணாடியில பார்த்துகிட்டேன்..” என உதட்டை சுழித்து கொள்ள, “நீ இன்னும் பொய்யை சரியா சொல்லவே அப்க்ரேட் ஆகல..” என கன்னம் கிள்ளியவள், ஹாலிற்கு அழைத்து சென்றாள்.. அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு அமீக்கா திட்டு மழைகளை வாங்கி குமிக்க, தன்வியோ பாசமழையில் திணறினாள்..

மாலையில்,

“ம்மா.. வர்றேன்..” என ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுடன் கிளம்பிய அமீக்காவை, “ஏண்டி.. காலேஜ்ல இருக்கும் போது தான் இப்படி சுத்துன.. இங்க வந்துமா?? நல்ல டிரஸ்ஸா, சுடிதார் ஸ்கர்ட் இந்தமாதிரி போட்டுக்கிட்டு கிளம்புறியா..” என வடகத்தை எடுக்க வந்த வாசகி வாழ்த்து மாலையை வாரி வழங்கினார், “அம்மா தாயே.. நீங்க சொல்ற நல்ல டிரஸ் போட்டா கால் மேல வரைக்கும் தெரிஞ்சு ஊரே என்னை வேடிக்கை பார்க்கும்.. இப்படியே போனா தான்ஒரு பையன் கூட திரும்பி பாக்க மாட்டான்..” என கண்ணடித்து விட்டு கிளம்பினாள்..

“இந்த பொண்ணு நான் சொல்ற எந்த பேச்சையும் கேக்கவே மாட்டைக்குறா.. நீங்களாவது சொல்லலாம்ல..” என நொந்து கொண்ட வாசுகியை, “வாசு.. அமீக்கா நீ நினைக்குற மாதிரி பொண்ணு இல்லை.. வழக்கமான வாத்து கூட்டத்துல வாழுற கொக்கு.. என்ன நடந்தாலும் உயர பறக்குற நோக்கம் மட்டும் மாறாது..” என சமாதானம் செய்தார் குகன்.. “ம்க்கும்.. நீங்க வீட்டுக்குள்ள சமாளிப்பு பேச்சு பேசிட்டு திரியுங்க.. அவ வெளிய சவடால் பேச்சு பேசிட்டு இருக்கட்டும்.. நல்லா இருந்த புள்ளைய அப்படி பேசு இப்படி பேசுன்னு சொல்லியே பெத்த தாய்கிட்ட பேசுற முறையையே மறந்துட்டா..” என குற்றபத்திரிக்கையை வாசித்தார் வாசுகி..

அப்பொழுது கண்களை கசக்கி கொட்டாவி விட்டு வெளிய வந்த தன்வி, “அத்த, மீகா.. எங்க போறான்னு சொல்லிட்டு போனாளா??” என அக்கறையாக விசாரிக்க, “ம்ம்க்கும்.. என்னைக்கு என்கிட்டே சொல்லிட்டு போனா.. அவ இஷ்டத்துக்கு வர்றது.. அவ நேரத்துக்கு கிளம்புறது.. என்னடின்னு கேட்டா இங்க ஒருத்தர்  கொக்கு வாத்துன்னு உப்பு சப்பில்லாத கதையா சொல்லி கன்வின்ஸ் பண்ணிட வேண்டியது..” என புருவம் உயர்த்தி குகனை ஜாடை மாடையாக சாடினார் வாசுகி..

“அத்த.. அவுட்டிங் சேர்ந்து போவோம்னு சொல்லிட்டு நான் எந்திரிக்குறதுக்கு முன்னாடியே கிளம்பி போயிட்டா..” என ஏக்கமாக கூறவும், “கல்யாண பொண்ணு நல்ல சாப்பாடு தூக்கம்னு இருக்கட்டுமேன்னு விட்டுட்டு போயிருப்பா..” என்ற குகனை தன்விக்கு தெரியாமல் வயிற்றிலேயே கைமுட்டியை மடக்கி இடித்தார் வாசுகி..

“உங்க மாமாக்கு என்ன வேலை?? மகளுக்கு எப்ப பாரு சப்போர்ட் பண்றது மட்டும் தான்.. இதுங்களை விடு தன்வி.. கழுதை தனியா சுத்துறது தான் பெருமைன்னு நினைச்சிக்கிட்டு புல்லட்டை பந்தாவா எடுத்துட்டு போயிருக்குது.. கொஞ்ச நேரத்துல வரும்..” என வாசுகி கூற, “ஓகே அத்த.. மதி கூட வெளிய போயிட்டு வர்றேன்.. அம்மா கிட்ட சொல்லிடுறீங்களா??” என்று விட்டு கிளம்பினாள்..

அமீக்காவின் புல்லட் அந்த பேக்கரியின் முன் அதிரடியாய் நின்றது.. ஹெல்மட்டை கழற்றியது பெண் என்கவும் மொத்த சாலையும் வாய்வழி சலைவா தெரியும் படியாக அசந்து நின்ற அலட்டலேயின்றி உள்ளே நுழைந்தாள்..

இரவு நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக கேக் வாங்க நின்ற பத்ரியின் தோள்களை தட்டி, “எக்ஸ்கியூஸ் மீ பத்ரி..” என அழைத்தாள் அமீக்கா.. “எஸ்..” என திரும்பியவன் அமீக்காவை அனுமானித்து கொண்டான்.. “சொல்லுங்க மிஸ்ஸ்ஸ்.அமீக்கா.. தன்வி சொல்லியிருக்குறா..” என நேரடியாக கூறிய பத்ரியை, “தட்ஸ் கிரேட்.. சோ இன்ட்ரோ எதுவும் நமக்கு தேவையில்லை.. வெல் நாம கொஞ்சம் பேசலாமா?? தனியா??” என பாராட்டிவிட்டு பணிவாய் தனது வேண்டுகோளையும் வைத்தாள்..

“யா..” என முன்னிருந்த ஐஸ்க்ரீம் பார்லரில் ஒரு மேஜையில் அமர்ந்திட, “சொல்லுங்க..” என்றவனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை என்றாலும் குரலில் அளவுக்கு மீறிய ஆர்வம் தேங்கியிருந்தது.. “ம்ம்.. ஓகே..” என நிதானப்படுத்தி கொண்ட அமீக்கா, “நீங்க ஏன் தன்விய சூஸ் பண்ணுனீங்கன்னு தெரிஞ்சிக்கலமா??” என கேட்டாள்..

“ஹஹாஹ்.. கிராஸ் செக் பண்ண வந்தீங்களா?? ஆர் யூ டிடெக்டிவ்??” என மெலிதாய் சிரிக்க, “நோ.. அந்த மாதிரி எதுவும் இல்லை.. எனக்கு உங்களை பத்தி எதுவுமே தெரியாது.. பெரியவங்க எல்லாம் விசாரிச்சிருப்பங்க.. குடும்பம், குலம், கோத்திரம், ஜாதகம்.. ஈவன் உங்களோட கேரக்டர் பத்தி கூட உங்க கொலீக்ஸ் கிட்ட விசாரிச்சிருக்கலாம்.. அவங்களுக்கு அவ்வளவு தான் தெரியும்.. அண்டர்எஸ்டிமேட் பண்றதுக்காக சொல்லலை.. அவங்க பாய்ன்ட் ஆப் வியூல அவ்ளோ தான் விசாரிப்பு.. இதெல்லாம் சரியா இருந்தா நல்ல பையன் ஓகே.. கல்யாணம் பண்ணி வச்சதுக்கு அப்புறம் சைக்கலாஜிக்கலா நிறைய காம்ப்லீகேசன்ஸ் வருது இல்லையா?? அது பத்தி அவங்க யோசிக்குறது இல்லை.. இப்போ சோசியல் மீடியானு ஒன்னு இருக்குது.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பேக் ஐடில தன்னோட வக்கிரத்தை கொட்டிக்குறாங்க.. அதை போய் யாராலையும் கண்டுபிடிக்கவோ கவனிக்கவோ முடியாது.. ஈவன் பேரெண்ட்ஸ் கூட கவனிக்காம இருப்பாங்க.. சோ, நானே உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாமேன்னு வந்தேன்..” என கூறி முடித்த அமீக்கா இளைப்பாறலுக்காக தண்ணீரை அருந்தினாள்..

“வெல்.. நீங்க சொல்றது கரெக்ட்.. இன்பாக்ட் நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் இப்படி ஒரு ஆங்கிள் இருக்குதுன்னு தெரியுது.. தாராளமா என்னை பத்தி தெரிஞ்சிக்கலாம்.. என்னை பத்தி நானே பெருமையா சொல்றதுல எந்த அர்த்தமும் இல்லை.. நானும் ஒரு சராசரி மனுஷன் தான்.. கோபம் சிரிப்பு சந்தோசம் இப்படி எல்லா பீலிங்க்ஸ் எனக்கும் இருக்குது.. தன்வி பத்தி சொல்லணும்னா.. ஜஸ்ட் ஒரு மேஜிக் மாதிரி.. பார்த்ததும் பட்டர்பிளை பறந்துச்சுன்னு சொல்ல முடியாது.. எனக்கு சரியான மேட்ச்னு தோனுச்சு.. வேற.. இனி பேசி பழகி புரிஞ்சிக்கலாம்னு ஒரு நம்பிக்கை இருக்குது..” என்றவனின் உறுதியான பேச்சு அமீக்காவிடத்தில் நம்பிக்கையை தோற்றுவித்திருந்தது.. 

“வெல்.. நான் வந்த விஷயம் எதுக்காகன்னா.. உங்களோட “பார்ன் பார்ப்பியா??”ன்ற கேள்வி.. தன்விய நான் சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு வர்றேன்.. என் கூடவே வளர்ந்த பொண்ணு.. அத்தயோட பயத்துனால ரொம்ப தூரமா எங்கேயுமே அனுப்புனதில்லை.. சோ அவளுக்கு இந்த மாதிரியான திங்கிங் கிடையாது.. ஒரு பெரிய கம்பெனியை ரன் பண்ற அளவுக்கு மெச்சூரிட்டி இருக்குது தான்.. பட் அந்த விஷயத்துல இன்னும் அவ குழந்தை தான்.. லைட் ஆப் பண்ணுனாலே தட்ஸ் ஓவர்னு நினைக்குற கேட்டகிரி.. சோ இந்த ஸ்பீட் அவளுக்கு கொஞ்சம் ஓவர் டோசா இருக்கலாம்.. நீங்க நல்ல டைப்பா தெரியுறீங்க.. இந்த ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்னால ரெண்டு பேரும் மிஸ் ஆக வேணாம்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்..” என்ற அமீக்கா எழ எத்தனித்தாள்..

“எக்ஸ்கியூஸ்மீ.. நான் கொஞ்சம் பேசலாமா??” என்ற பத்ரியின் குரலில் அமீக்கா புன்னகையோடு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தாள்..

“எனக்கு இந்த விஷயம் புரியல.. எங்க ரெண்டு பேருக்குள்ள பெர்சனல் உங்களுக்கு எப்படி தெரிய வரலாம்?? நீங்க சொல்ற மாதிரியே தன்வி இன்னும் மெச்சூரிட்டி ஆகாமலே இருந்தாலும் அது என்னோட ப்ராபளம்.. அவளை ஹாண்டில் பண்ண போறது நான் தான்.. எங்க ரெண்டு பேருக்குள்ள நீங்க.. அதுவும் எங்க பெர்சனல்குள்ள தலையிடுறது.. எப்படி இருக்குன்னா.. நான் தன்விக்கு ஓவர்அப்டேட்டடா தெரியுற மாதிரியே தான் ஒரு பொண்ணா இருக்குற நீங்க இந்த விஷயங்களை முன்ன பின்ன தெரியாத என்கிட்ட ஒப்பனா பேசுறது  ஓவர்அப்க்ரேடா தெரியுது.. நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லலை.. உங்களோட இந்த பிராட் மைண்டட்க்கு இந்த சொசைட்டி இன்னும் பழக்கப்படலை.. ப்ளீஸ், இனி இந்த மாதிரி எங்களுக்கு நடுவுல எந்த மெசெஞ்சர் வேலையும் பண்ணாதீங்க.. புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்..” என்று விட்டு எழுந்து சென்றான்..

அமீக்காவிற்கு தான் சங்கடமாய் போனது.. இதுவே பத்ரி “எங்களுக்கு நடுவுல வர நீ யாருடி??” என கத்தி சண்டையிட்டியிருந்தால் பதிலுக்கு விவாதம் புரிந்தோ விதண்டாவதாம் பேசியோ புரிய வைக்க முயற்சித்திருப்பாள்.. அவனுக்கு புரியவைக்க வந்த இடத்தில் அவனோ நாகரீகமாக சுருங்க சொல்லி புரியவைத்து விட்டான்.. இவனை விடவா தன்விக்கு சிறந்தவன் கிடைத்து விட போகிறான் என்ற யோசனையில் இருந்தவளை  கலைத்தது ஒருவனின் குரல்..

“ஹாய்.. ஐ யம் ஷ்ரவன்…” என கைகளை நீட்டியவன் மீது “இருந்துட்டு போ.. அதுக்கு..” என்பது போலான அமீக்காவின் பார்வை பதிந்தது.. “ஏங்க.. ஒருத்தர் கை கொடுத்தா பதிலுக்கு கை குடுக்கணும்.. குறுகுறுன்னு சைட் அடிக்க கூடாது..” என்ற பின் பெயருக்கு கைகளை குலுக்கி கொண்டாள்..

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர்கிட்ட நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டேன்..” என்றவனுக்கு அமீக்காவின் புருவ நெறிப்பே “ஒட்டுக்கேட்டிருக்கிறன்னு சொல்லு…” என்பதை உணர்த்தியது.. “இது எப்படிங்க ஒட்டுகேட்டதுல வரும்.. பப்ளிக்ல பேசிட்டு இருக்கும் போது அந்த வழியா க்ராஸ் ஆகி போற எல்லாருக்குமே கேக்கும்.. அப்போ எல்லாருமே ஒட்டுகேக்குறவங்களா?? என்னங்க நீங்க?? அவர்கிட்ட அவ்ளோ பெரிய விஷயத்தை அசால்ட்டா புரிய வச்சிட்டு இந்த சின்ன விஷயத்துக்கு போய் என்கிட்டே சண்டை போட்டு பேசாம இருக்குறீங்களே..” என கூறியவனை, “நான் எப்போ சண்டை போட்டேன்..” என கடிந்தாள்..

“ப்பா.. பேசிட்டீங்க.. கண்ணால.. ஐப்ரோவால எல்லாம் பேசுறீங்க.. வாயால பேச மாட்டேறீங்களேன்னு ஒரு பொய் சொன்னேன்.. ஒர்க் அவுட் ஆய்டுச்சு..” என்றவனின் பேச்சு சற்று நேரத்திலேயே அமீக்காவிற்கு பிடித்தம் ஆகியது.. பின் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி கொள்ள, பலவிஷயங்களில் அமீகாவின் சாயலை ஒத்தே இருந்தான்.. அதனால் இருவரும் விரைவாகவே இணைந்து விட, “ஓகே.. இப் யூ டோன்ட் மைன்ட்.. என்னை டிராப் பண்ண முடியுமா?? என்னோட பைக் ஷெட்ல இருக்குது..” என ஷ்ரவன் கேட்க, “அப்போ டிராப் பண்றதுக்காக தான் இவ்ளோ நேரம் பேசுனீங்க..” என முறைத்தாள் அமீக்கா..

“யா.. அப் கோர்ஸ்.. இப்படி ஒரு புல்லட்டை மிஸ் பண்ணிட்டு பஸ்ல யாராவது போவாங்களா?? இன்னைக்கு நான் டிராப்க்காக பேசுறேன்.. நாளைக்கு நீங்க வாங்க.. நான் டிராப் பண்றேன்..” என்றதும் சிரித்தே விட்டாள் அமீக்கா.. இந்த காட்சியை தன்விக்கு ஜாதகம் பார்க்க சென்று கொண்டிருந்த வாசுகியும் குகனும் பார்த்து விட, “ஏங்க பாருங்க.. உங்க பொண்ணு தான்.. நடு ரோட்ல ஒரு பையனை பைக்ல ஏத்திட்டு போறா..” என வழக்கமான தொனியில் படபடக்க துவங்கினார் வாசுகி..

“உனக்கு அறிவே வேலை செய்ய மாட்டேங்குதுடி.. யாராவது பிரெண்டா இருக்கும்.. நீயே தப்பா பேசிடாத.. இது மட்டும் அவ காதுல விழுந்துது இன்னைக்கு நைட் கச்சேரி தான்.. அப்படி எதுவும் இருந்தாலும் என் பொண்ணு என்கிட்டே தயங்காம சொல்லுவா..” என வாசுகியை ஒரு புறம் வாயடைத்தாலும் அவரின் பேச்சில் ஒரு பெருமை கலந்திருந்தது..

வீடு திரும்பிய அமீக்காவோ ஷ்ரவனின் பேச்சுகளில் இருந்த அழகில் லயித்திருந்தாள்.. புல்லட்டின் கீயை விரலில் சொடுக்கியவாறே உள்ளே நுழைய, நடுகூடத்தில் தன்வி மதியோடு இதழ் இணைத்திருந்தாள். எழுந்த அதிர்ச்சியை புறந்தள்ளி “ஒ.. மை காட்.. இதை யாரும் பார்த்துட கூடாது..” என அமீகா மனதிற்குள்ளே வேண்டுதலை வைக்க, துரதிஷ்டவசமாக வெளியே வந்த நிர்மலாவின் கைகளில் இருந்து காபி டம்பளர் கீழே விழுந்து உடைந்தது..

LGBTQனா என்ன??

L- லெஸ்பியன்ஸ்

G- கே

B- பைசெக்ஸுவல்

T- ட்ரான்ஸ்ஜென்டர்

லெஸ்பியன் கேட்டகிரி பெண்கள் மீது பெண்களே காதல்வயப்பட்டு உறவு நிலைக்கு செல்வது.. கே கேட்டகிரி ஆண்கள் ஒருவருக்கொருவர் காதலில் வீழ்ந்து உறவு கொள்வது.. பைசெக்ஸுவல் ரெண்டு பாலினமும் கொண்ட மனிதர்கள்.. ட்ரான்ஸ்ஜென்டர் பிறப்பால் ஒரு பாலினமும் வளர்ச்சியடையும் பொழுது மற்றொரு பாலினமாகவும் மாற்றம் கொள்வது..

இந்த மாதிரியான சில வகைகள் பத்தி இன்னமும் சிலருக்கு சரிவர தெரியுறதில்லை.. ஓரின சேர்க்கையாளர்கள் சாதாரண பாலின மக்கள் கிட்ட இருந்து எந்த விதத்துலேயும் மாறுப்படலை.. வழக்கமான மனிதர்கள் எதிர் பாலினத்தவர் மேல ஈர்ப்பு ஏற்பட்டு காதல்ல விழுற மாதிரி இவங்க தங்களோட பாலினத்தவர் மீதே ஈர்ப்பாகுறாங்க..

அதாவது பெண்களே பெண்களை காதலிக்குறது.. சேர்ந்து வாழுறது.. இது சமூதாயத்திற்கு முரண்பாடான ஒன்றுன்னு வகைப்படுத்துறாங்க.. இது பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாம தவறான புரிதல் இருந்து வருது.. இந்த வகையினை சார்ந்தவங்களோட வாழ்க்கை முறை ரொம்பவே வித்தியாசமானது.. அவங்களோட வாழ்க்கையில ஆண்கள் இருந்தாலும் பெண்களோட உறவுல இருக்குறதை தான் விரும்புறாங்க..

இந்த மாற்றம் அவங்களோட உடல்ரீதியா நடக்குறதில்லை.. இதுக்கு எந்த ஹார்மோனும் பொறுப்பாகுறதில்லை.. மனரீதியான ஒரு மாற்றம்.. மனதின் ஆழத்துல இருந்து ஆண்கள் மீது ஒரு ஈர்ப்பு இல்லாம பெண்கள் மீது விருப்பம் திரும்புது.. முக்கியமா ஆண்களோடனனான உறவை வெறுக்குறாங்க.. இயல்பான உறவு இவங்களால ஏத்துக்க முடியாத ஒன்னு..             

-அமீக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!