அனல் பார்வை 19🔥

அனல் பார்வை 19🔥

தன் கையிலிருந்த சில வரைபடங்கள், ஏதோ குறிப்புக்கள் அடங்கிய காகிதங்களை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்த அக்னி, நிமிர்ந்து தன்னவளை கேள்வியாக நோக்க, ராகவ் அடுப்பில் விட்டுச்சென்ற பாஸ்தாவை கிளறிக் கொண்டிருந்த அருவி, “எல் டேரேடோ.” என்று இறுகிய குரலில் சொன்னாள்.

அதில் சற்று அதிர்ந்தாலும் எதுவும் பேசாது சமையலறை திண்டில் சாய்ந்து நின்று அவளையே அவன் கூர்மையாக பார்க்க, “ஒரு முக்கியமான தேடல் ஆகு! நான் அந்த நகரத்தை கண்டுபிடிக்க முயற்சி பண்ணா தான் என்னால என்னோட தேடல கண்டுபிடிக்க முடியும். அதுக்காக தான் நான் மெடல்லின்க்கு கூட வந்தேன்.” என்று அருவி சொல்ல, புருவத்தை நெறித்து யோசனையில் மூழ்கினான் அக்னி.

சட்டென அவனை நெருங்கியவள் அவனின் பின் கழுத்திலிருந்த டாட்டூவை வருடியவாறு, “மஹி, இந்த சின்னம் அந்த தங்க நகரத்தை தான் குறிக்குது. உனக்கு இதை பத்தி ஏதாச்சும் தெரியுமா?” என்று ஆர்வமாக கேட்க, அவளை ஆழ்ந்து நோக்கியவன், “எனக்கு தெரியாது.” என்றுவிட்டு அந்த வரைபடங்களில் பார்வையை பதித்தான்.

சற்று ஏமாற்றமாக உணர்ந்தாலும், “உனக்கொன்னு தெரியுமா மஹி? அந்த நகரத்துல தங்கத்துக்கு பஞ்சமே இருக்காதாம். சாதாரணமா மணல் அ கூட தங்கம் கலந்திருக்குமாம். எனக்கு அதுல நம்பிக்கை கிடையாது தான். ஆனா, இட்ஸ் இன்ட்ரஸ்ட்டிங்.” என்று சொன்னவளுக்கு ஏனோ தன் அப்பாவை பற்றி சொல்வதில் ஒரு தயக்கம்.

‘ஒருவேள, நான் என் அப்பாவை தான் தேடுறேன்னு சொன்னா இவனும் எல்லார் மாதிரியும் இறந்தவரை தேடுறேன்னு பைத்தியம்னு நினைச்சிக்க மாட்டான். மொதல்ல அப்பாவ பத்தி உறுதியா ஒரு தகவலாச்சும் கிடைக்கட்டும். அப்றம் மஹிக்கிட்ட சொல்லிக்கலாம்.’ என்று இவள் நினைத்தவாறு அமைதியாக இருக்க, அவனோ ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அவளும் பேச்சை மாற்றும் பொருட்டு, “மஹி, உன் ஃபேமிலி எங்க இருக்காங்க? எப்போ அவங்களுக்கு என்னை இன்ட்ரோ கொடுக்க போற?” என்று கேள்விகளை அடுக்க, “அது… அது ஜானு…பொகோட்டால இருக்காங்க.” என்றுவிட்டு அவளை பார்க்க தயக்கப்பட்டு பார்வையை திருப்பிக் கொண்டான் அக்னி.

“பொகோடாவா? ஓஹோ! அப்போ ஏன் நீ இந்த சாகு கூட இருக்க? ஒருவேள, வீட்ல கோச்சிக்கிட்டு ஃப்ரென்ட் வீட்டுக்கு வந்து தங்கிட்டியா?” என்று வெகுளியாக அவள் கேட்டதில், அவனுக்கு தான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

“அப்படியே வச்சிக்கோ!” என்றுவிட்டு அவன் பேச்சை மாற்ற நினைக்க, அவளோ அப்போதும் விடாது, “மஹி, அம்மா லோஸ் ஏன்ஜல்ஸ்க்கு போயிட்டு வந்ததும் நம்ம கல்யாணத்தை பத்தி பேசலாம்னு இருக்காங்க. நீ உன் ஃபேமிலிக்கிட்ட நம்ம விஷயத்தை இப்போவே சொல்லிரு. நான் வேணா அவங்க கூட பேசவா?” என்று சட்டென்று கேட்கவும், பதறிவிட்டான் அவன்.

“இல்லை வேணாம் தீ, நான் பேசுறேன். நான் வீட்ட விட்டு வந்ததிலிருந்து ரொம்ப கோபமா இருப்பாங்க. நானே பேசி ஒத்துக்க வைக்கிறேன்.” என்று சொன்னவனுக்கு நிஜமாகவே ‘தான் பேசுவது பகல் கனவு’ என்று நன்றாகவே தெரியும். 

“என்னை ஏத்துக்குவாங்கல்ல மஹி?” என்று தயக்கமாக அருவி கேட்க, தன்னவளின் கலரிங் செய்யப்பட்ட குட்டை முடியை செல்லமாக கலைத்து விட்டவன் குறும்பாக, “உன்னை யாருக்கு தான் பிடிக்காது ஜானு? இந்த சிவப்பு நிற குட்டை முடி, குறும்பு கண்ணு, வரிசையா காதுல குத்தியிருக்க கம்மல், உன் டாட்டூஸ் இதெல்லாம் பார்த்தாலே கண்டிப்பா பிடிச்சிரும்.” என்று சொல்லி சிரித்தான்.

“என்னையே கேலி பண்றியா நீ?” என்று கேட்டவாறு அவனின் காதுமடலை அவள் கடிக்க, “ஸ்ஸ்… ஆஆ… ஜானு விடு!” என்றவாறு அவளின் தாடையை பிடித்து தன் முகம் நோக்கி கொண்டு வந்தவன் அவளின் இதழை  அழுந்த கவ்விக்கொள்ள, அவளும் அவன் மேலே தன் மொத்த உடலை சாய்த்த வண்ணம் அவனுக்கு இசைந்துக் கொடுத்தாள்.

இங்கு சமையலறை வாசலில் ராகவ்வோ, ‘உள்ள போகலாமா? வேணாமா? ச்சே! இதுக்கு தான் இந்த கமிடட் பசங்க கூட சகவாசமே வச்சிக்க கூடாது. இனிமே தனிக்குடித்தனம் போக வேண்டியது தான். அய்யோ! பசி வேற வயித்தை கிள்ளுதே…’ என்று மானசீகமாக புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ இச் இச் என்ற சத்தம் கேட்க, ‘என்ன சத்தம் இது? வேற வழியில்லை உள்ள போய் பார்க்க வேண்டியது தான்.’ என்று முடிவு எடுத்தவன், தன் பாதங்களை நிலத்தில் அடித்து சத்தம் எழுப்பியவாறே உள்ளே நுழைந்தான்.

ராகவ் வருவதை உணர்ந்து அக்னி அவளிதழிலிருந்து தன்னிதழை பிரித்து கண்களால் அவனை காட்ட, உள்ளே விறுவிறுவென வந்த ராகவ் இருவருமே பசை போல் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்து விழிவிரித்து குளிர்சாதனப்பெட்டியில் எதையோ தேடுவது போல் பாவனை செய்தான்.

அருவியோ அவனை சலிப்பாக பார்த்து, “ஏய் சாகு! லவ்வர்ஸ் தனியா ரொமேன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போது நடுவுல வரக் கூடாதுன்னு என்கிற மேன்னர்ஸ் கூட தெரியாதா? சென்ஸ் இல்லை?” என்று திட்ட, அதில் கடுப்பானவன், “உங்க ரொமேன்ஸ்க்கு என் வீட்டு கிட்ச்சன் தான் கிடைச்சதா?” என்று முறைத்தவாறு கேட்டான்.

“அடங்கு டா!” என்று அவனிடம் சொன்னவள் தன்னவனிடம் கேலியாக, “மஹி, இவன் கூட எல்லாம் அதிகமா பழகாத! உன்னையும் கெடுத்துருவான்.” என்று சொல்லி சிரிக்க, அவளை ஏற இறங்க ஒரு பார்த்த ராகவ், “ஆமா… இந்த மேடம் கூட பழகினா மட்டும் உங்க மஹி நல்லதை கேட்டுட்டாலும்! அவன் இப்படி இருக்க காரணமே நீதான் ராங்கி.” என்று பொறுமிவிட்டு, “அவளோட மஹியாமே… இவளுக்கு முன்னாடி அவன் என் ஃப்ரென்டு.” என்று முணுமுணுத்தவாறு சென்றான்.

அக்னியோ இவர்களின் டொம் என்ட் ஜெர்ரி சண்டையை பார்த்து வாய்விட்டு சிரித்தான் என்றால், “க்கும்!” என்று நொடிந்துக் கொண்டாள் அருவி.

அன்றிரவு,

தன் பையிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்த அருவி, அதையே யோசனையுடன் பார்த்திருந்தாள். அது ஆதிகேஷவன் அவரின் தொழில் நண்பர் ஸ்டீஃபனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம்.

“ச்சே! மிஸ்டர்.ஸ்டீஃபன் அ பத்தி தாரக்கிட்ட விசாரிக்க சொல்லியிருந்தேன். இப்போ வரைக்கும் ஒரு தகவல் கூட சொல்லல்ல. இரண்டு நாளா அவன கான்டேக்ட் பண்ணவும் முடியல. இவர்கிட்ட கேட்டா மட்டும் தான் அப்பாவ பத்தி சின்ன விஷயமாவது தெரிஞ்சிக்க முடியும். என்கிட்ட இருக்குற கடைசி வாய்ப்பு இவர் தான்.  அன்னைக்கு அப்பா கொலம்பியாவுல எல் டேரேடோ பத்தின தேடல் அ ஆரம்பிக்கும் போது கூடவே இருந்த ஒருத்தர் இவர் தான்.’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சரியாக தாரக்கிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது அருவிக்கு.

அழைப்பை வேகமாக ஏற்றவள், “டேய் கிறுக்குப்பயலே! ஏன் டா இரண்டு நாளா என்னை கூப்பிடவே இல்லை? உன்னையும் ரீச் பண்ண முடியல.” என்று கத்த, “அய்யோ அரு! என்னை பேச விடு! முக்கியமான ரிசேர்ச்ல இருந்தேன். அந்த இடத்துல சுத்தமா நெட்வர்க் கிடைக்கல.” என்று அவன் சொல்லவுமே சற்று அமைதியான அருவி, “மிஸ்டர்.ஸ்டீஃபன் அ கான்டேக்ட் பண்ண முடிஞ்சதா?” என்று கேட்டாள்.

“ரொம்ப ட்ரை பண்ணி இப்போ தான் அவரை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். பட், என்ன… இதுல ஒரு கெட்ட விஷயமும் இருக்கு, நல்ல விஷயமும் இருக்கு.” என்று தாரக் சொல்ல, அவளோ கேள்வியாக புருவத்தை நெறித்தாள்.

“அவர் இப்போ அவரோட சொந்த ஊரான மெடல்லின்ல தான் இருக்காரு. அட்ரஸ் கூட என்கிட்ட இருக்கு.” என்று தாரக் சொல்ல, உற்சாகமானவள் பின் சட்டென்று பதட்டத்திற்கு மாறி, “அப்போ கெட்ட விஷயம்…” என்று இழுவையாக கேட்டாள்.

“அவர் இப்போ அவரோட லாஸ்ட் மினிட்ஸ் அ கவுண்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு.” என்று அவன் சொல்லவும் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு!

“என்ன தாரு சொல்ற?” என்று அருவி அதிர்ந்து போய் கேட்க, “ஆமா அரு, பல மாசமா ரொம்ப உடம்பு முடியாம இருந்திருக்காரு. இப்போ ரொம்ப வீக்கா இருக்காருன்னு சொல்றாங்க. அட்ரஸ் சொல்றேன். நாளைக்கே போய் பாரு! டைம் வேஸ்ட் பண்ணாத! எப்போ என்ன வேணா நடக்கலாம். அதுக்குள்ள உன் கேள்விக்கான பதில தெரிஞ்சிக்கோ! புரியுதா?” என்றுவிட்டு ஆய்வுப்பணி மேற்கொள்ளும் ஸ்டீஃபனின் வீட்டு விலாசத்தை சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டிக்க, அருவிக்கோ தலைவலியே வந்துவிட்டது.

அடுத்தநாளே ஸ்டீஃபனின் வீட்டு விலாசத்தை வைத்து அவரை தேடி அருவி செல்ல, வண்டியில் அவளின் பின்னால் அமர்ந்திருந்த அக்னி தான் போகும் இடம் தெரியாது தன்னவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு சுரண்டிக் கொண்டிருந்தான்.

“ஜானு, யாரை பார்க்க போறோம்?” என்று அவன் ஆயிரத்து முப்பதாவது தடவையாக கேட்க, அவளோ பதில் சொன்னால் தானே! காலையில் விடிந்ததும் விடியாததுமாக எழுப்பி அவசர அவசரமாக அவனை இழுத்துக் கொண்டு வந்தால் அவனும் என்ன தான் செய்வான்?

ஒரு பெரிய வீட்டின் வாசற்கதவின் முன் வண்டியை நிறுத்தியவள், அங்கு சற்று கூட்டமாக இருப்பதை பார்த்து, “மஹி, நீ இங்கேயே வெயிட் பண்ணு! நான் சீக்கிரம் வந்துடுறேன்.” என்றவாறு வாசற்கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைய, அக்னியோ எதுவும் புரியாது வண்டியின் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டான்.

அருவி அங்கிருப்பவர்களை பார்த்தவாறு தயக்கமாக வீட்டிற்குள் நுழைய, ஹோலில் அமர்ந்திருந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணியோ அவளை புரியாமல் பார்த்தவாறு, “நீங்க…?” என்று கேள்வியாக இழுத்தார்.

“அது… நான் வந்து… மிஸ்டர்.ஸ்டீஃபன் என் அப்பாவோட ஃப்ரென்ட். இப்போ அவரோட உடல் நிலை ரொம்ப மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதான்… நான் அவரை பார்க்கலாமா?” என்று தயங்கியவாறு அவள் கேட்க, அவரும் தலையசைத்துவிட்டு ஸ்டீஃபனின் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவள், அங்கு மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு மூச்சு வாங்கியவாறு படுத்திருந்தவரை பார்த்து சற்று பயந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரருகில் சென்றாள் அருவி.

தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த புகைப்படத்தை எடுத்தவள், அதிலிருந்த ஸ்டீஃபனின் விம்பத்தை பார்த்துவிட்டு கட்டிலில் படுத்திருந்தவரை “அங்கிள்…” என்று மென்மையாக அழைத்தாள்.

மெதுவாக கண்களை திறந்த ஸ்ஃடீபனும் அருவியை புருவத்தை சுருக்கி யாரென்று பார்க்க, மென்மையாக புன்னகைத்தவள், “ஹாய் அங்கிள், இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு? என்னோட பேரு தீ அருவி. அருவி ஆதிகேஷவன்.” என்றுவிட்டு அந்த புகைப்படத்தை அவருக்கு நேராக காட்ட, அவருடைய விழிகளோ அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டது.

அவரின் முகபாவனையை கவனித்தவள், “அப்போ உங்களுக்கு என் அப்பாவ நியாபகம் இருக்கு ரைட்? அவர்… அவர் எங்க அங்கிள்? அவருக்கு எதுவும் ஆகலன்னு எனக்கு தெரியும். ஐ ஹோப், கண்டிப்பா உங்களுக்கு தெரியும். ப்ளீஸ் அங்கிள், அப்பா எங்க?” என்று அருவி பதட்டத்துடன் ஒருவித ஆர்வத்துடன் கேட்க, அவருக்கோ அதிகமாக மூச்சு திணற ஆரம்பித்துவிட்டது.

ஆனால், ஏனோ இது அருவியால் தான் உணர முடியவில்லை. “அங்கிள் ப்ளீஸ்… அப்பாவ பத்தி சின்ன தகவல் கூட என்னால தெரிஞ்சிக்க முடியல. எனக்கு ஒன்னே ஒன்னு தெரிஞ்சாலே போதும். அவர் உயிரோட இருக்காரா? இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க. அவர் உயிரோட தானே இருக்காரு.” என்று அவள் ஒரு எதிர்ப்பார்ப்புடன் கேட்க,

வெளியிலிருந்து அந்த பெண்மணியோ பதட்டத்துடன் உள்ளே வர, கூடவே சில பேர் வந்து அவரின் மூச்சுத்திணறலை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அருவியை நோக்கிய  அந்த பெண்மணிகோபமாக, “ப்ளீஸ் இங்கிருந்து போயிரு.” என்று அருவியை அறையிலிருந்து வெளியேற்ற முயற்சிக்க, அவள் அசைந்தாள் தானே!

“ப்ளீஸ் என்னை விடுங்க! அவர்கிட்ட இதை மட்டும் தெரிஞ்சிட்டு போயிருவேன்.” என்று கத்தியவள் அதே இடத்தில் விடாப்பிடியாக நின்றவாறு, “அங்கிள், தயவு செஞ்சி சொல்லுங்க.” என்று அவரின் கண்களையே பார்த்தவாறு கேட்க, அவரோ அந்த நிலைமையிலும் கண்களை உருட்டியவாறு ஏதோ சொல்ல முயற்சிக்க, அவளால் அதை புரிந்துக் கொள்ள தான் முடியவில்லை.

அந்த பெண்மணியோ விடாப்பிடியாக வெளியே இழுத்துச் சென்று வீட்டின் கதவை அடைக்க, ‘ஷீட்!’ என்று காலை கோபத்தில் தரையை உதைத்தவள், அந்த புகைப்படத்தை பேன்ட் பாக்கெட்டுக்குள் இட்டவாறு தன்னவளை நோக்கிச் சென்றான்.

வாசற்கதவை தாண்டி வெளியே வந்தவள், தன்னவனை கண்டதும் ஓடிச்சென்று அவளை கட்டியணைத்துக் கொள்ள, அவனும் பதிலுக்கு அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டவன், “ஜானு, என்னாச்சு?” என்று புரியாமல் கேட்டான்.

கண்ணீரை துடைத்துக் கொண்ட அருவி, ‘இல்லை’ எனும் விதமாக தலையசைத்தவாறு யோசனையுடன் வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை உயிர்ப்பிக்க, அவளின் முகபாவனைகளை அவன் கவனித்தாலும் அவளாக சொல்லட்டும் என்று விட்டுவிட்டானோ, என்னவோ? எதுவும் பேசாது அமைதியாகவே அவளின் பின்னால் அமர்ந்துக் கொண்டான் அக்னி.

அவளோ நேராக சென்று வண்டியை நிறுத்தியது என்னவோ ராகவ்வின் வீட்டிற்கு தான். அருவியோ இறங்கி அவள் பாட்டிற்கு வீட்டிற்குள் நுழைய, ‘அச்சச்சோ! என்ன இவ அவளோட வீட்டுக்கு போகாம நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டா. ராகு கூட இப்போ இல்லையே…’ என்று புலம்பியவாறு அவளின் பின்னாலே ஓடினான் அவன்.

அவளோ சோஃபாவில் தொப்பென்று அமர்ந்து கண்களை மூடி சாய்ந்து இருந்தவாறு, “மஹி, கொஞ்சம் வோட்டர் எடுத்துட்டு வர்றீயா? ப்ளீஸ்…” என்று தழுதழுத்த குரலில் கேட்க, அதில் என்ன உணர்ந்தானோ? ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

மூச்சு விடாது முழுவதும் அருந்தியவளின் விழிகளோ ஏனோ கலங்கிப் போயிருந்தன. தனக்கென இருந்த ஒரே வாய்ப்பாக அவள் ஸ்டீஃபனை நம்பியிருக்க, அதுவோ எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது அல்லவா!

தன்னருகில் அமர்ந்து தன்னையே பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்த அருவிக்கு அவனே தனக்கான மருந்தாக தோன்ற, அடுத்தநொடி எதுவும் யோசிக்காது சட்டென்று, “ஐ நீட் யூ மஹி… இப்போவே…” என்று சொல்ல, முதலில் புரியாது விழித்தவன் பின் அதையே அவள் விளக்கி கேட்டதும் அதிர்ந்து கண்களை அகல விரித்தான்.

-ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!