Nee Enaku Uyiramma–EPI 9

189613085_863389437581725_4803627891963141566_n-c50162c4

அத்தியாயம் 9

அந்த ப்ரைவெட் ஹாஸ்பிட்டல் வந்து இரண்டு நாட்களாகி இருந்தன. அன்று பகலில் இவளுக்கு உணவுடன் வந்த நேதனிடம் மகனை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, வெளியே சென்றிருந்தாள் வேணி.

எங்கே என இவனும் கேட்கவில்லை, அவளும் சொல்லவில்லை. சின்னவனோ கார் பொம்மையை நேதனின் மேல் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான். ப்ரூம், ப்ரூம் என சத்தம் வேறு. காய்ச்சல் ஓரளவு விட்டிருந்தது. விடிகாலையில் மட்டும் உடல் சூடு ஏற அனத்தத் தொடங்குவான். உடம்பெல்லாம் இன்னும் சிகப்பாக ரேஷஸ் இருக்கத்தான் செய்தது. பெரியவர்களாக இருந்திருந்தால் முட்டிக்கு முட்டி வலிப்பதையும், தலை வலிப்பதையும் வாய் திறந்து சொல்லி இருப்பார்கள். இவனோ குழந்தையாயிற்றே! வலி வந்தால் சிணுங்கினான், மற்ற நேரத்தில் விளையாடினான். ஆனால் வேணியைப் பிழிந்து எடுத்து விட்டிருந்தான். அவள் ஆவி போல, நடக்காமல் ஒரு மாதிரி மயக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஓய்வெடுக்க வேண்டும் என்றே ஜானகியும் இவனும் மாற்றி மாற்றி வந்துப் பார்த்துக் கொள்வார்கள். அண்ணனின் விஷயம் கேள்விப்பட்டு நேட்டலியும் வந்து அறிமுகமாகிக் கொண்டாள்.

வேணி நான்கு பேஷண்ட் ஷேர் செய்துக் கொள்ளும் அறை கேட்டிருந்தாள். அது கொஞ்சம் விலை குறைவு. இவன்தான் சத்தமாக இருக்கும், சின்னவனுக்குத் தூங்க முடியாது, நான்குக்கும் இரண்டு பெட்டுக்கும் விலையில் அவ்வளவு வித்தியாசம் இல்லை என பேசியே கரைத்திருந்தான் வேணியை. அவள் விட்டால் சிங்கிள் பெட் லக்‌ஷரி அறையே ஏற்பாடு செய்ய முடிவும் அவனால்! ஆனால் அவள் விட வேண்டுமே.

ரூமின் கதவைத் திறந்து உள்ளே வந்தாள் வேணி. வெயிலில் அலைந்து விட்டு வந்ததில் களைத்திருந்தாள். இவனைப் பார்த்து புன்னகைத்தவள், அடுத்த கட்டில் ஆட்கள் தங்களை நோட்டமிடாதவாறு கர்ட்டனை இழுத்து விட்டாள். அவள் கையில் அப்பாம் பாலிக்(அப்பம் போல் மடித்து இருக்கும் பலகாரம். அதில் பட்டர், சோளம், அரைத்த பீனட் எல்லாம் கலந்து சூடாக கொடுப்பார்கள்.)கும் தேநீரும் இருந்தது.

“உனக்குத்தான் வாங்கிட்டு வந்தேன்!” என புன்னகைத்தவள், டீயை கப்பில் ஊற்றி, உணவை தட்டில் வைத்து நீட்டினாள்.

அவன் வாங்கிக் கொள்ள, தனக்கும் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள் இவள். இருவரும் மெல்லிய குரலில் கேஷவின் ரிக்கவரியைப் பற்றிப் பேசிக் கொண்டே உண்டனர். பேசிக் கொண்டே அவள் கழுத்தில் சொறிய, அவன் பார்வையும் மங்கையின் கழுத்துக்குப் போனது. அங்கே அவள் போட்டிருக்கும் கணமான தங்க சங்கிலியைக் காணவில்லை. கேஷவ் அடிக்கடி அவள் சங்கிலியை வெளியே இழுத்து அதில் இருக்கும் குட்டி மயில் பெண்டனை கடித்து விளையாடுவான். அவள் இழுத்து சட்டையுள் போட, இவன் மீண்டும் வெளியே எடுக்கவென ஒரு போராட்டமே நடக்கும் இருவருக்கும். சில பல சமயம் பாராதது போல இந்த விளையாட்டைக் கவனித்துப் பார்த்திருக்கிறான் இவன்.

இன்னும் சில நாட்களில் ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பும் போது பணம் தேவைப்படும் என சங்கிலியை அடகு வைக்க சென்றிருக்கிறாள் என புரிந்தது. அடகு வைத்தாளோ அல்லது விற்று விட்டாளோ என மனம் துடித்தது நேதனுக்கு. தன்னிடம் பணம் இருந்தும் உரிமையாய் உதவ முடியாத நிலமையை எண்ணி நொந்துக் கொண்டான் இவன்.

இவளை இப்படி தனியாகத் தவிக்க விட்ட அவள் தம்பிகளின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது இவனுக்கு.

“உன் தம்பிங்க எங்க போனானுங்க? இந்த நேரத்துல கூட ஒரு ஹெல்ப்புக்கு இல்லைனா எப்படி?” என தன் ஆதங்கத்தைக் கேட்டே விட்டான்.

“அவனுங்க ரெண்டு பேரும் குடும்பத்தோட புக்கேட்(தாய்லண்ட்) போயிருக்கானுங்க! என்னையும் கூப்டானுங்கதான்! கடையை ஒரு வாரம் அடைச்சா வருமானம் போயிடுமென்னு நான் வரலன்னு சொல்லிட்டேன். அங்கருந்து ரெண்டு தடவைப் போன் அடிச்சானுங்க, கேஷவ் பத்தி நான் சொல்லல! ரெண்டு வருஷமா காசு சேர்த்து இப்போத்தான் அமைஞ்சிருக்கு ட்ரீப்! அத ஏன் கெடுப்பானேன்னு விட்டுட்டேன்”

கேட்கலாமா வேண்டாமா என மனதுக்குள் போராட்டம் நடத்தியவன், ஒரு வழியாக கேட்டான்.

“அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு வந்திருந்தானே அந்த ஆந்தைக் கண்ணன், அவன் யாரு வேணி?”

அவனைப் பற்றி கேட்டதும் இவள் முகம் மாறியது. கட்டிலில் அமர்ந்து மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் வேணி.

“அவன் பேரு குமரன்! என் பெரிய தம்பி பொண்டாட்டியோட அண்ணன்காரன். பொண்டாட்டி புள்ளைலாம் இருக்கு! இருந்தும் ஈன்னு என் பின்னால இளிச்சுட்டு வருவான்”

“ஸ்கூல் டைம்ல அடிதடின்னு கலக்குவ! அந்த தைரியமெல்லாம் இப்போ எங்க போச்சு வேணி? அவனப் பார்த்து ஏன் பயந்த அன்னைக்கு? ரெண்டு அறை விட வேண்டியதுதானே” என கேட்டவனின் குரலில் கோபம் கொப்பளித்தது.

“ம்ப்ச்! இப்படி கோபப்பட்டு எத்தனை பேர் மேல கை வைக்க சொல்லற? எனக்கு என் பையன் கூட நல்லா வாழனும்! அடிதடின்னு போலிஸ் ஸ்டேஷன்லாம் போக வேணாம் எனக்கு. ஏன்டா நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்? ஏன் இப்படி என்னை சுத்தறானுங்க? இவன், பேபி சிட்டர் வீட்டுல அவங்க புருஷன்னு என்னால முடியலடா நேதன்! விதவைன்னா, ஆல்வேய்ஸ் அவேய்ளபிள்னு கழுத்துல போர்ட் போட்டுட்டு அலையறமா என்ன?” என்றவளின் குரல் கலங்கிப் போய் இருந்தது.   

‘நான் இருக்கேன் உனக்கு! யாரும் உன்னை இந்த மாதிரி எண்ணத்தோட நெருங்கறது என்ன பார்க்கக் கூட விட மாட்டேன்!’ என சொல்லி விட மனசு துடித்தது இவனுக்கு.

ஆனால் அந்த இருவர் லிஸ்ட்டில் தன்னையும் சேர்த்து விடுவாளோ என பயமாய் இருந்தது நேதனுக்கு.

“பெரியவன் கிட்ட சொன்னா, அவன் பொண்டாட்டிய அடிக்கப் போயிடுவான்! என்னால எதுக்கு பிரச்சனை அவங்க குடும்பத்துக்குள்ளன்னு அவன் கிட்ட வாயத் தொறக்கல நான். என் சின்னத்தம்பி கிட்ட அரசல் புரசலா இந்த குமரன பத்தி சொல்லி வச்சேன். அவனும் போய் மிரட்டிருக்கான். இப்போ இவனுங்க ஊருல இல்லைன்னதும் மறுபடி வந்துட்டான் வாலாட்ட! அதான் நீ ப்ரைவெட் போலான்னதும் சரின்னுட்டேன். என் பட்ஜெட்ல பெரிய துண்டு விழும். இருந்தாலும் இப்படி இந்த எச்சக்கலைங்கத் தொல்லைலாம் இங்க இருக்காதுல்ல!”

“வேணி!”

“ஹ்ம்ம் சொல்லு”

“இனிமே இப்படி யாராச்சும் உன்னைத் தொல்லைப் பண்ணா, தயங்காம என்னைக் கூப்பிடு! நான் உனக்காக வந்து நிப்பேன்” என சொன்னவனை ஆழ்ந்துப் பார்த்தாள் இவள்.

“இவனுங்க மாதிரி நீன்னு உன்னைத் தள்ளி வைக்கலடா நேதன்! என் மகனுக்கு நல்ல அம்மாவா இருக்கனும்னு தான் தள்ளி நிறுத்தினேன். நாளை பின்ன அவன் கிட்ட, உன் அம்மா ஒரு சீனன் கூட ப்ரெண்டா இருந்தான்னு சொல்லமாட்டாங்க. சீனன் கூட பலான பழக்கம் வச்சிருந்தான்னு தான் சொல்வாங்க. நான் ஒழுக்கம் இல்லாதவன்னு யாராச்சும் சொல்லிட்டா, யாராச்சும்னு ஏன் சொல்லனும், என் பெரிய தம்பி பொண்டாட்டியே சொல்லுவா! அவன் என்னைத் தப்பா நெனைச்சிட்டா, என்னால தாங்கிக்கவே முடியாதுடா! நான் வாழறதே அவனுக்காகத்தான்! அதோட அவன் உன் கிட்ட ரொம்ப அட்டாச் ஆகறான்! அது எனக்கு பயத்தக் குடுக்குதுடா நேதன். அவனுக்கு நான் மட்டும்தான் உறவு! அதான் நிதர்சனம். மத்தவங்க வந்து போகிற மேகம் மாதிரிதான். நீயும் அவனுக்கு மழை மேகம் மாதிரி. நீ விலகிப் போகிற போது மழைப் பொழியுமான்னு ஏங்கி நிக்கற பயிர் மாதிரி வாடி வதங்கிப் போயிடுவான் என் பிள்ளை!” என்றவளின் கைகள் மகனின் வீங்கி இருந்த கரத்தை வருடியபடி இருந்தது.

தாய் மகன் இருவரையும் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் நேதன். பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டவன்,

“என்னைப் பத்தி அம்மா உன்னிடம் எதாச்சும் சொன்னாங்களா வேணி?” என கேட்டான்.

திடீரென ஏன் அதை கேட்கிறான் என புரியாமல்,

“ஆமா சொன்னாங்க! நீ உன்னோட கேர்ள்ப்ரேண்ட பிரிஞ்சிட்ட, அதுக்குப் பிறகு உன் லைப்ல யாரும் இல்லங்கற வர சொன்னாங்க!” என்றாள்.

மகனை நெஞ்சில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தாள் இவள்.

“அவ பேரு ஜேக்லின் தியூ. நான் பிஸ்னஸ் ஸ்டார்ட் செஞ்ச சமயம் அது. ஒரு பார்ட்டில அவள சந்திச்சேன். ஷீ இஸ் எ ஸ்டீவர்டஸ். ரொம்ப அழகா இருப்பா! பார்த்ததும் ஒரு ஸ்பார்க் ரெண்டு பேருக்கும். பேசனோம், பழகனோம், ரெண்டு மாசத்துல லிவிங் இன் ரிலேஷன்சிப்ல இருந்தோம். அவ பறக்காத நேரமெல்லாம் என் கூடத்தான் இருப்பா! நானும் வேலை முடிஞ்சதும் அவ கூடத்தான் மொத்த டைமையும் ஸ்பேண்ட் பண்ணுவேன்! நான், எப்படி சொல்லன்னு தெரியல வேணி! அவளுக்கு அடிமையாகிப் போயிருந்தேன்! கேட்டதெல்லாம் வாங்கி குடுத்தேன், லக்‌ஷரி ட்ரீப் அழைச்சிப் போனேன், அவ கண்ணு ஒன்ன பார்த்தா அடுத்த நிமிஷம் அது அவ கையில இருக்கற மாதிரி பார்த்துக்கிட்டேன்! அவ்ளோ லவ் எனக்கு! அவளும் என்னை ரொம்ப நல்லாப் பார்த்துகிட்டா”

இவ்வளவு அந்நியோன்யமாய் இருந்தவர்களின் நடுவே, என்ன பிரச்சனை வந்திருக்கும் என யோசித்தப்படியே அவன் கதையைக் கேட்டிருந்தாள் வேணி.

அவன் முகம் கட்டிலின் மேலே ஒட்டி இருந்த பெட் நம்பரை வெறித்தது.

“துரோகம்! இந்த வார்த்தையைக் கேட்கறப்போவே நமக்கு கோபம் வரும்! அதை அனுபவிச்சுப் பார்த்தா எப்படி இருக்கும்?” என்றவனின் குரலில் அவ்வளவு வலி இருந்தது.

“பிஸ்னஸ் சரிய ஆரம்பிச்ச சமயம் அது! எனக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு வேலை! வெளியூர் வெளிநாடுன்னு பிஸ்னஸ் பிடிக்க அலைஞ்சிட்டு இருந்தேன்! அப்படி இருந்தும் இவ வீட்டுல இருந்தா முடிஞ்ச அளவுக்கு அவ கூட டைம் ஸ்பேண்ட் செய்யற மாதிரி பார்த்துக்கிட்டேன்! ஒரு தடவை ஆஸ்திரேலியா போயிருந்தேன். இவளும் ப்ளைட் ஸ்கேடியூல் இருக்குன்னு சொல்லி இருந்தா. நான் திரும்பி வர ரெண்டு வாரமாகும்னு சொல்லிட்டுப் போயிருந்தேன். ஆனா டீல் சைன் ஆகல! ஓன் வீக்ல திரும்பிட்டேன். அவ பறந்துட்டு இருப்பான்னு சீக்கிரம் வந்தத இன்போர்ம் பண்ணல அவளுக்கு!”

என்ன வரப் போகிறது என புரிந்தது இவளுக்கு. மனம் கணக்க ஆரம்பித்தது வேணிக்கு.

“என்னோட சாவிய கொண்டு அபார்ட்மேண்ட் கதவ திறந்தேன். எதையும் கவனிக்கல நான். அவ்ளோ டயர்ட். கட்டில்லெ போய் விழ சொல்லி உடம்பு கெஞ்சுது! ரூம் கதவ திறந்தா…”

பெருத்த அமைதி அவனிடம். மீண்டும் அந்த சம்பவங்கள் மனதில் ஓடியது போல.

“என்னால ஏத்துக்கவே முடியல வேணி! என் வீட்டுல, என் கட்டில்ல, இன்னொருத்தன் கூட!!! எப்படி முடிஞ்சது அவளால? லிவிங் இன்ல இருந்தாலும் அதுவும் ஒரு கமிட்மேண்ட் தான். உனக்கு நான் எனக்கு நீன்னு ஒரு பரஸ்பர நம்பிக்கைல வாழ்ற வாழ்க்கை அது! சரி வரலனா நல்லபடி சொல்லிட்டுப் பிரிஞ்சிடலாமே தவிர, இன்னொருத்தன் கூடவோ இன்னொருத்தி கூடவோ கூத்தடிக்க குடுத்த லைசென்ஸ் இல்ல லிவிங் டுகேதர்! கோபத்துல அவ முகத்தையும், அங்கிருந்த எல்லாத்தையும் அடிச்சு உடைக்கனும்னு தோணுச்சு. ஆனா என்னை நானே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். கெட் அவுட் ப்ஃரம் மை ஹவுஸ் அண்ட் மை லைப்னு மட்டும்தான் சொன்னேன். அதுக்குப் பிறகு அவ கெஞ்சனது, கொஞ்சனது, நீ இல்லைனா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டனது எதையும் காது குடுத்து நான் கேக்கல! காதல் எல்லாத்தையும் மன்னிக்கும்னு சொல்லுவாங்க! ஆனா அது துரோகத்தை மன்னிக்காது வேணி!”

“ஐம் சாரிடா நேதன்” என உணர்ந்து சொன்னாள் இவள்.

“எங்க உறவ லீகலா ரிஜிஸ்டெர் பண்ணிக்கனும்னு அவ்ளோ ஆசையா இருந்தேன். திருமணம் செஞ்சிக்கனும், குழந்தைகள் பெத்துக்கனும், சந்தோசமா வாழனும்னு ஆயிரம் கற்பனைகள் வச்சிருந்தேன்! அவ கிட்டயும் என் ஆசை எல்லாத்தையும் ஷேர் பண்ணியிருந்தேன். காதல குடுத்த எனக்கு துரோகத்த பரிசளிச்சிட்டா! அவள மன்னிச்சு ஏத்துக்கலனதும் அவ கடைசியா சொன்ன விஷயம் என்ன தெரியுமா வேணி?”

முகம் அவ்வளவு கசங்கிப் போய் இருந்தது அவனுக்கு. இவளால் அவன் படும் பாட்டை பார்க்கவே முடியவில்லை. அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தது.

“உன்னால என்னைத் திருப்திப்படுத்த முடிஞ்சிருந்தா நான் ஏன்டா இன்னொருத்தன தேடப் போறேன்னு கேட்டா! நீ ஆம்பளையே இல்லைடான்னு எகத்தாளமா சிரிச்சா!”

கண்கள் கலங்கி சிவந்துப் போனது அவனுக்கு.

“பொண்ணுங்கறவ ஆணை விட எல்லா விதத்திலயும் பலம் குறைஞ்சவ! ஆனா அவன அடிச்சுத் தரைமட்டமாக்கற சக்தி அவ கிட்ட இருக்கு. அந்தரங்க உறவு முடிஞ்சதும் ச்சேன்னு ஒரு வார்த்தை அவ வாயில இருந்து வந்துட்டா மனசளவுள மரிச்சுப் போயிடுவான் அந்த பலசாலி. தன்னால இவள சந்தோஷமா வச்சிக்க முடியலையோ, தனக்கு ஆண்மை இல்லையோன்னு பல வித பயங்கள் மனச அரிக்க ஆரம்பிக்கும். இது கொஞ்சம் கொஞ்சமா அவன டிப்ரஷென்ல தள்ளிடும்! ஆம்பளைக்கு கர்வத்த கடவுள் அங்க, அதான் காலுக்கு நடுவுல கொண்டுப் போய் வச்சிருக்கான். பொண்ணு கொடுக்கற ரியாக்‌ஷன்ல தான் அந்த கர்வம் வாழுமா இல்லை அழிஞ்சுப் போகுமான்னே தெரியும். எனக்கு துரோகம் பண்ணிட்டுப் போனவ என்னை மனசளவுல சாகடிச்சுட்டுத்தான் போனா! அவ சொன்னதுல எனக்கே நான் ஆம்பளை இல்லையோன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு! இன்னொரு தடவை இந்த மாதிரி ஒரு பொண்ணு கிட்ட அவமானப் படக் கூடாதுன்னு மனசுல விழுந்த அடி முடிவெடுக்க வச்சது! காதல், கல்யாணம்னு கேட்டாலே மனசுக்குள்ள ஒரு பயம். தொழில், பிஸ்னஸ்னு அப்படியே காலத்தை ஓட்டிட்டேன் வேணி”

தொண்டையை செறுமிக் கொண்டவள்,

“பணம் இருந்தா சந்தோசமா வாழ்ந்திடலாம்னு நெனைச்சேன். எங்களுக்கு ஒரு விதத்துல ஆப்ப வச்சா உங்களுக்கு வேற விதத்துல ஆப்பை வைக்கிறான் ஆண்டவன். என்ன சொல்லன்னே தெரிலடா! அந்த ஜேக்கு இருக்காளே, அவளுக்கு உன் மேல லவ்வே இல்லைடா! அவ லவ்வு எல்லாம் நீ வச்சிருக்கற பணத்து மேலத்தான். அந்த கில்லாடி பல வண்டு தேடற மலர்டா! அதான்டா, வீட்டுல ஆசையா பிரியாணி ஆக்கிக் கொடுத்தாலும், கடை பிரியாணி மாதிரி வருமான்னு கடை கடையா தேடி தேடி ட்ரை பண்ணிப் பார்க்கற ரகம் அவ! என்னமோ சீக்கிரம் குட்டு வெளியாகி நீ தப்பிச்சிட்டேன்னு சந்தோசப்படுவியா! அத விட்டுட்டு சாமியார் மாதிரி வாழ்ந்துட்டு இருக்க! அம்மா ரொம்ப பொலம்பறாங்கடா! இதையெல்லாம் மறந்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க!”

“உடலளவுல நான் சரியாத்தான் இருக்கேன். ஆனா மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தேன். கவுன்சலிங், மெடிட்டேஷன், யோகான்னு என்னை நானே தேத்தி வச்சிருக்கேன் வேணி. ஆனாலும் கல்யாணம்னு பேச்சு வந்தாலே மனசளவுல ஒரு நடுக்கம் இருந்துட்டு இருந்தது. உன்னைப் பார்த்ததுல இருந்து, எனக்கும் வாழனும்னு தோணுது வேணி. உன் கூட வாழனும்னு தோணுது. இப்போ கல்யாணத்துக்கு நான் ரெடியா இருக்கேன், என் மனைவியா நீ மட்டும் வரதா இருந்தா! சொல்லு வேணி, என்னைக் கல்யாணம் செஞ்சிக்கறயா? உன்னையும் கேஷவையும் என் உயிரா காத்து வைச்சிப்பேன்! வில் யூ மேரி மீ?” என சட்டென கேட்டுவிட்டான் நேதன்.

அவன் கேள்வியில் அதிர்ந்து விழித்தாள் அம்சவேணி

 

(போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட செல்லங்களுக்கு நன்றி..ஹெப்பி வீக்கேண்ட்..லவ் யூ ஆல்)