அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 18

யுக்தா காரில் வேகமாக சென்றவள் ஃபோன் மீண்டும் அடிக்க.. ஃபோனை எடுத்து காதில் வைத்தவள் “ஹலோ” என்று சொல்லும் முன்னே “என் சம்யுக்தா மேடம் ஹாஸ்பிடல்ல இருந்து காணாம போன பொண்ணை தேடி ஓட்றீங்க போல” என்று நக்கலாக வந்த குரலில் சடென்ப்ரக் போட்டு வண்டியை நிறுத்தியவள்.. “யார்ரா நீ என்று அனல் தெறிக்கும் குரலில் கேட்க.?? அது உனக்கு தேவையில்ல மிஸஸ் சிபிஐ.. நா சொல்றத மட்டும் கேளு.. ஒழுங்கு மரியாதைய இந்த கேஸ்சை இத்தோட உத்தி மூடிட்டு ஒழுங்க உன் புருஷனோட வாழ்ற வழியபாரு.. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது.. அதவிட்டு இந்த கேஸ் பத்தி நீ மேலமேல விசாரிச்சிட்டுருந்த.. இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து கடத்துன அந்த பொண்ணுக்கு நடக்கபோறது தான் நாளைக்கு உனக்கும் நடக்கும் என்று எச்சரிக்க.. “அந்த பொண்ணை என்னடா செஞ்ச.. எங்கடா அந்த பொண்ணு.. நீ சரியான ஆம்பளைய இருந்த நேர என்கிட்ட மோதுடா, அதவிட்டு ஏன்டா பொட்டமாதிரி பொண்ணை தூக்குற.. இப்ப எங்கடா அந்த பொண்ணு” என்று கர்ஜிக்க..”

“நா இவ்ளோ சொல்றேன் நீ கேக்கமாட்டேன்றீயே சிபிஐ.. போலிஸ் கஸ்டடில இருந்த ஒரு பொண்ணையே அசால்ட்ட தூக்கி இருக்கேன். அப்பவோ என் பவர் பத்தி உனக்கு தெரியவேணாம்.. இன்னும் திமிரா பேசுறீயே..?? ஒருவேலை அந்த பொண்ணுக்கு நடக்கப் போறத நீ நேர்ல பாத்த புரிஞ்சிக்குவ போல.. ஓகே நேத்து போலிஸ் அந்த பொண்ணை எங்க கண்டு புடிச்சாங்களோ. அந்த பாலத்துக்கு கீழ தான் அந்த பொண்ணும் நானும் இருக்கோம், இன்னு ஐஞ்சு நிமிஷம் வரை தான் இங்க இருப்போம். முடிஞ்ச புடி பாக்கலாம்” என்றவுடன் ஃபோன் கட்டாகி விட, மறுபடியும் யுக்தா ஃபோன் அடித்தது.. லைனில் உதய் தான்..

“உதய்.. பேச நேரமில்ல” என்று நடந்ததை சுருக்கமாக சொன்னவள்.. உடனே ராம், நிஷாவுக்கு தகவல் சொல்ல சொல்லிவிட்டு காரை வேகமாக செலுத்தினாள்..

ஃபோனில் சொன்ன அந்த இடத்தில் யாரும் இல்லாமல் போக வெறியவள், ஃபோன் மீண்டும் அடிக்க அதை எடுத்தவள்.., “டேய் எங்கடா இருக்க.? என்கிட்ட வெளயாடாத டா..??”

“கூல்.. கூல்.. என்ன சிபிஜ இப்டி கொதிக்கிற.. ஐஞ்சு நிமிஷம் சொன்ன மூனு நிமிஷத்தில் வந்து நிக்குற.. கார்ல வந்தியா?? இல்ல பறந்து வந்தியா.?? சரிசரி.. நா இப்ப நீ இருக்கு இடத்துல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு சவுக்கு தோப்பு இருக்கு இல்ல. உனக்கு தெரியும்னு நெனைக்கிறேன்.. அங்க தான் இருக்கேன் சீக்கிரம் வா பாக்கலாம்” என்று ஃபோன் கட்டாகிட..

மறுபடியும் யுக்தாவை அழைத்தன் உதய்.. “ஏய் சமி ப்ளீஸ் டி?? எங்கடி இருக்க.. உனக்கு உடம்பு வேற சரியில்ல.. இதுல தனியவேற போயிருக்க, உனக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்குடி, நீ எங்க இருக்கேன்னு சொல்லு நா இப்பவே அங்க வரேன்” என்று உதய் பதற.. அவனிடம் செல்லும் இடத்தை பற்றிய தகவலை சொல்லிவிட்டு மீண்டும் பறந்தாள் யுக்தா..

இரண்டாவதாக சென்ன இடத்திலும் யாரும் இல்லாமல் போக, யுக்தாவிற்கு புரிந்தது.. அவன் தன்னை குழப்பி சுத்தவிடுகிறான் என்று.. மறுபடி அவள் ஃபோன் அடிக்க எடுத்து பேசியவள்.. “டேய் நீ தேவையில்லாமல் ஆபத்தோட வெளையாடுறா.. உன் சாவு உன்னை நெருங்கிடுச்சு டா…”

“ஏன் சிபிஐ மேடம்.. இதுக்கே இப்படி டென்ஷனாகுறீங்க.. நீ என்னை கொல்லணும்னா அதுக்கு நா யார்னு உனக்கு தெரியணுமே.. அது தெரியாம உன்னால் ஒன்னு கழட்டி முடியதே சிபிஐ.. சரி சரி அதபத்தி நாமா அப்றம் பேசுவோம்.. இப்ப நா அந்த சவுக்கு தோப்புல இருந்து கொஞ்சம் தள்ளி இருக்க குடோன்ல தான் இருக்கேன்.. சீக்கிரம் வாங்க” என்று ஃபோனை கட் செய்ய.. ஆத்திரத்தின் உச்சியில் இருந்த யுக்தா ஃபோன்னை தூக்கி அங்கிருந்த மரத்தில் அடிக்க, அது ரெண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது..

மாலைநேரம், யுக்தா வீடே பரபரப்பாக இருந்தது.. தாலி பிரித்து கோர்க்கும் சடங்கிற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்க.. ஆனந்தியும், கோதையும் புலம்பிக் கொண்டிருந்தனர்..

“சாரு இன்னு இந்த சமிய காணுமே, டைம் வேற ஆகிட்டே போகுது..??”

“சமி மட்டும் இல்ல ஆனந்தி, உதய் கூட இன்னும் வர்ல. நம்ம ராமும், நிஷாவும் கூட வீட்ல இல்ல.. சமி ஃப்ரண்ட்டுங்க ஜானு, ராஷ்மியையும் கூட இன்னும் காணும். என்ன நடக்குதுன்னே புரியல.. நல்லா நாளும் அதுவுமா எல்லாரும் எங்க போனாங்கன்னே தெரியல” என்று சிவகாமி பாட்டி புலம்பிக் கொண்டீருந்தவர்.. “டேய் வினய் அந்த ராங்கிக்கும், மாப்பிள்ளைக்கும் ஃபோன் போட்டு எங்க இருக்காங்கன்னு கேளு” என்று சொல்லும் போதே கதவு திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசல் பக்கம் பார்க்க. இறுகிய முகத்துடன் பரதன் நின்றிருந்தார்..

“வாங்க அண்ணா! ஏன் அங்கயே நீக்குறீங்க……” என்று தொடங்கிய கோதையின் வார்த்தை அப்படியே அந்தரத்தில் நின்றது… ராம் தோளில் சாய்ந்தபடி, உடை முழுவதும் ரத்த கரையோடு, தலையில் பெரிய கட்டுபோட்டு, அலங்கோலமாக தட்டு தடுமாறி நடந்துவந்த யுக்தாவை பார்த்து..

வேகமாக யுக்தா அருகில் ஓடிவந்த சிவகாமி. “ஏய் என்னடி கோலம் இது. ஏன் இப்டி இருக்க? உடம்பெல்லாம் ஒரே ரத்தமா இருக்கு. என்ன ஆச்சு?” என்று பதற.

யுக்தா மெதுவாக நிமிர்ந்து அங்கிருந்த அனைவரையும் பார்த்தவள்.. மெல்ல ராமை விட்டு நகர்ந்து.. டீவி ரிமோட்டை எடுத்து டீவியை உயிர்ப்பித்து செய்தி சேனல்லை ஓடவிட்டாள்..

செய்தி வாசிக்கும் பெண் முக்கிய செய்தி என்று சொல்லும்போது கவனிக்காதவர்கள் “சிபிஐ ஆபீஸர் சம்யுக்தாவின் கணவர் உதய் பிரதாப் மரணம்” என்று கேட்ட அடுத்த நொடி அனைவரின் தலையிலும் இடிவிழுந்ததுபோல் இருக்க, டீவியில் பார்வையை பதித்தனர்.

“சென்னையில் இரண்டு வருடங்களாக ஊர் பேர் தெரியாத பலர் கடத்தப்பட்ட வழக்கின் விசாரணையில், முக்கிய குற்றவாளி யார் என்று தெரிந்தது.. பிரபல தொழிலதிபர் உதய்பிரதாப் தான் இந்த கடத்தலுக்கு காரணமென்று சிபிஐ ஸ்பெஷல் ஆபீஸர் சம்யுக்தா கண்டுபிடித்துள்ளார்.. இன்று அவரை கைது செய்ய போகும்போது. அவர் சம்யுக்தாவை கொல்ல பார்க்க. சம்யுக்தாவும், அவர் அசிஸ்டென்ட் நிஷாவும் தற்காப்பிற்காக சுட்டதில் உதய்பிரதாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. உதய்பிரதாப், சிபிஐ ஆபீஸர் சம்யுக்தாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர்களுக்கு கொஞ்ச மாதம் முன்புதான் திருமணம் நடந்தது” என்று சொல்லி முடிக்கும் முன் வினய் கையால் அந்த டீவி சுக்குநூறாக உடைந்து தெறிந்தது..

“அடியேய் என்னடி இதெல்லாம், என்னடி ஆச்சு, என்ன நடந்துச்சு” என்று கதறித் துடித்த சிவகாமி பாட்டி மற்றும் குடும்பத்தாரின் வேதனை குரலைக் கூட காதில் வாங்காது. அமைதியாக அவள் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்..

“சற்று நேரம் முன்”

அந்த மர்ம அசாமியிடம் பேசிவிட்டு கோவத்தில் ஃபோனை போட்டு உடைத்த யுக்தா.. அவன் ஃபோனில் சொன்ன குடோனிற்கு சென்றாள்.. சுற்றி இருள் சூழ்ந்திருந்த அந்த குடோனில் அந்த பெண்ணையும், அவளை கடத்தி வந்தவனையும் தேடினாள்.. இருளில் எதுவும் அவளுக்கு சரியாக தெரியாமல் போக.. ச்சே இந்த நேரம் பார்த்து ஃபோனை வேற ஒடச்சிட்டேனே.. இப்ப டார்ச் கூட இல்லையே” என்றவள் கண்ணில் திடிரென எதோ வெளிச்சம் விழ. வெளிச்சம் வந்த திசை நோக்கி ஓட, அங்கு கடத்தப்பட்ட பெண்ணை உடல் எரிய ஆரம்பித்தது கொண்டிருந்தது..

“அய்யோ” என்று கத்திகொண்டே யுக்தா நெருப்பின் அருகில் செல்ல, சரியாக அந்த நேரம் அங்கு வந்த உதய் அவளை இழுத்து பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்தான்..

“ஏய் சமி என்ன செய்ர நீ?? பைத்தியம் புடிச்சிடுச்ச உனக்கு.?
நா மட்டும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்த என்ன ஆகியிருக்கும்.. இப்டியா நெருப்புகிட்ட ஓடுவ” என்றவன் அவளை இழுந்து அருகில் இருந்த மூட்டை மேல் உட்கார வைக்க.. யுக்தா எரிந்து கொண்டிருந்த அந்த பெண்ணின் உடலையே பார்ததுக் கொண்டிருந்தாள்..

“ஏ உதய் இப்படி, பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா?? உயிருக்கு வேல்யூவே இல்லையா, இத்தனை பேரோட உயிரோட வெளயாட எப்டி மனசு வருது” என்றவளை உற்று பார்த்த உதய்..

“என்ன செய்றது சமி.. இப்படியும் சிலபேர் இருக்கதான் செய்றாங்க.. பணம் தா பெருசின்னு நெனைக்கிறாங்க.. இதுல நா சொல்ல என்ன இருக்கு.. இந்த கேள்விய நீ இந்த வேலைய செய்தவன் கிட்ட தான் கேக்கணும்.”

யுக்தா மெதுவாக நிமிர்ந்து உதய்யை பார்த்தவள்.. “அதான் உதய் உன்னை கேக்குறேன். ஏன் இப்படி செஞ்ச??” என்றவள் குரலில் கோபத்தை விட ஆற்றாமை தான் அதிகம் இருந்தது.. உதய் எச்சில் விழுங்கியபடி யுக்தாவை பார்க்க அவள் கண்களில் அத்தனை குரோதம்.. “ச… சமி… நீ சொல்றது எனக்கு புரியல.. நா… நா என்ன செஞ்சேன்..?? இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்” என்றவன் குரல் தடுமாறா..

யுக்தா உணர்ச்சியற்று சிரித்தவள். “இன்னைக்கு நீ எனக்கு ஃபோன் பண்ணும்போது ராமண்ணா, நிஷாவை வரசொல்லிட்டு நா போறா முதல் இடத்தை பத்தி உன் கிட்ட சொன்னேன்.. அடுத்து நீ கால் பண்ணும்போது ரெண்டாவது இடத்தை பத்தி சொன்னேன்.. அதுக்கு அப்றம் நா ஃபோனையே ஒடச்சிட்டேன்.. அப்படி இருக்க நா இங்க தான் இருக்கேன்னு உனக்கு எப்டி தெரிஞ்சுது உதய்” என்றவள் கண்ணில் கோபத்தை தாண்டி அதிக வலிதான் இருந்தது..

“எனக்கு தெரியும் உதய்.. நீதான்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அந்த லாப்டாப்ல லாக் பண்ணி இருந்த போல்டர்ல, பின்னாடி மட்டுமே தெரிஞ்ச உன்னோட ஃபோட்டோ பார்க்கும்போது எனக்கு எதுவும் தோனல.. ஆன அந்த ஃபோட்டோல இருந்தவன் கையில இருந்த டாட்டூவை பாத்தப்போ தான் எனக்கு லேசா டவுட் வந்துச்சு. அப்ப கூட அது உன்னை மாதிரியே டாட்டூ போட்ட வேற யாராவது இருக்கும்னும் ஒரு நப்பாசை இருந்தது. அதை தெரிஞ்சுக்க தான். என்னை பயமுறுத்த நீ அனுப்பிச்ச இந்த பொண்ணை வச்சே உனக்கு வலை விரிச்சேன்.. எப்டியும் இன்னு ரெண்டு, மூனு நாள்ல இந்த பொண்ணு நீ குடுத்த மருந்தாலா செத்துடுவன்னு தெரிஞ்சு தான் இவளை நீ கிட்நாப் பண்றத வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்.. இப்ப சொல்லு உதய் ஏன் இப்டி செஞ்ச” என்று ஆரம்பிக்கும்போதே யுக்தா தலையில் தன் துப்பாக்கியால் ஒங்கி அடித்திருந்தான் உதய்.. மண்டை உடைந்தது ரத்த கெட்ட மயங்கி சொருகும் கண்களில் உதய்யையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா..

“ஆமா டி.! இதெல்லாம் செஞ்சது நா தான். அதுக்கு இப்ப என்ன.?? எனக்கு பணம் வேணும் அதுக்கான நா என்ன வேணும்னாலும் செய்வேன்.. நா இங்க வந்ததே இந்த கேஸ்காக வந்திருக்க சிபிஐ ஆபீஸரா கொல்ல தான் டி.. ஆன அந்த ஆபீஸர் நீன்னு தெரிஞ்சப்போ தான். நான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.. பிக்காஸ் நா.. நா உன்னை நெஜமாவே லவ் பண்ணிட்டேன் டி.. நா பல பொண்ணுங்க கூட பழகி இருக்கேன்.. ஆனா யாரும் என் மனச உன் அளவுக்கு பதிச்சது இல்ல.. ஸ்கூல் இருந்து உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். இங்க வந்து உன்னை பாத்ததும் மனசு தடுமாறிடுச்சு.. நா உண்மையாவே உன்ன விருப்ப ஆரம்பிச்சிட்டேன்.. உன்ன என்னால கொல்ல முடியல, அதான் ஒரு போலிஸ் உன்னை, கொலைகாரன் நான் கல்யாணம் பண்ணி கூடவே வச்சிக்கிட்டேன். உன்னை பயமுறுத்தி இந்த கேஸ்ல இருந்து விலக வைக்க சின்னாத ஒரு ஆக்சிடென்ட் ஏற்பாடு செஞ்சேன்.. ஆனா அதுல நிஷா மாட்டிக்கிட்ட.. அதுக்கு அப்புறம் தான் இந்த பொண்ணை நானே அந்த பாலத்துகிட்ட போட்டு போலிஸ் கண்ணுலபடுற மாதிரி செஞ்சேன்.. அப்றம் இவளை கடத்தி உன் கண் முன்னால கொன்னுட்ட நீ பயந்து இந்த கேஸ்ல இருந்து வெலகிடுவன்னு நெனச்சேன்.. ஆன இப்ப எல்லாம் கைமீறி போச்சு.. இனி நீ உயிரோட இருக்க கூடாது. எனக்கு எதிர இருந்த டாக்டர். வினோத்தை கொன்னமாதிரி உன்னையும் இப்ப கொல்லப்போறேன்.. ஐம் சாரி சமி எனக்கு வேறவழி இல்ல, ஐ ரியாலி லவ் யூ டி” என்று தன் துப்பாக்கியை எடுத்து யுக்தாவை குறிபார்க்க. கண்ணிமைக்கும் நேரத்தில் யுக்தா அவன் கையை இறுக்கி பிடித்து முறுக்கி கீழே தள்ளி அவன் கழுத்தில் கால்வைத்து அழுத்தி மிதித்தவள். உதய் கையில் இருந்த துப்பாக்கியை பிடிங்கிவிட்டு. “நீ தப்புக்கணக்கு போட்டுட்ட உதய்.. உன் பொண்டாட்டி சமிய பத்தி முழுசா தெரிஞ்சு வச்சிருக்க நீ, அதே சம்யுக்தா ஐ.பி.எஸ் ஆக இருக்கும்போது எப்டி இருப்பான்னு தெரிஞ்சிக்காம விட்டுட்ட.. நீ என்னோட வாழ்கையில் வந்திருக்க கூடாது உதய்.. அதுவும் என்னோட வேலையில் எனக்கு எதிரியா வந்தே இருக்க கூடாது.. you made a very big mistake.. ஐ ஹேட் யூ உதய்.. ஐ ஹேட் யூ” என்று கத்திக்கொண்டே தன் ஜீன்ஸ் பேண்ட் பக்கெட்டில் இருந்து உதய், வினோத்தை கொல்ல பயன்படுத்திய அதே விஷம் நிறைந்த ஊசியை எடுத்தவள் சற்றும் தயங்காமல் உதய் கழுத்தில் அந்த ஊசியை குத்தினாள்..

யுக்தா கொடுத்த தகவலின் படி பரதன், ராம், நிஷா அங்கு வந்துவிட. ராம் யுக்தாவை கண்கொண்டு பார்க்க கூட முடியாமல் சிலைபோல் நிற்க. பரதனுக்கும் அதே நிலைதான்.. யுக்தா அருகில் சென்று அவளை அணைத்த நிஷா கண்களில் கண்ணீர்பெருக.. யுக்தாவை இன்னும் இன்னும் இறுக்கி அணைத்து கொண்டாள்..

“நீ ஏன் நிஷா அழறா. அதான் எல்லா முடிஞ்சுபோச்சே அப்றம் எதுக்கு இந்த அழுகை, விடு” என்றவள் குரலில் அத்தனை வெறுமை.. “நீ போன வேலை என்ன ஆச்சு நிஷா??”

“உதய் கடத்தி வச்சிருந்த எல்லாரையும் ரெஸ்கீயூ பண்ணியாச்சு யுகி.. அதோட அங்க இருந்த இவனோட ஆளுங்க எல்லாரையும் முடிச்சாச்சு” என்று நிஷா சொன்னதை கேட்டு பெருமூச்சு விட்டு எழுந்த யுக்தா கடைசியாக விஷத்தின் வீரியத்தில் கை, கால் வெட்டி வெட்டி இழுக்க உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதய்யை பார்த்தவள்.. இன்னும் மஞ்சள் நிறம் கூட மங்காத தன் தாலிகயிறை கழுத்தில் இருந்து அறுத்து எடுத்தவள், கீழேகிடந்த உதய் மீது தூக்கி எறிந்தாள்.. “கமிஷனர் சார் வழக்கம்போல இந்த கேஸையும் என்கவுண்டர்னு குளோஸ் பண்ணிடுங்க.. நா வந்த வேலை முடிஞ்சிது.. நான், மிஸஸ் சம்யுக்தா உதய்பிரதாப்” என்று விரக்தியாக சிரித்தவள் “என்னோட வேலையை ரிசைன் பண்றேன். ஒரு குற்றவாளியோட பொண்டாட்டின்றா அடையாத்தோட சிபிஐ ல இருக்க நா விரும்பல.. என்னால இனி இந்த அடையாளத்தோட வேலை செய்யமுடியாது” என்று உறுதியாக சொல்லிவிட்டாள்..

மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. “சிவகாமி ஒரு பக்கம் என் புள்ளை வாழ்க்கை போச்சே. கல்யாணம் முடிஞ்சு கயிறு கூட மாத்தல அதுக்குள்ள என் பேத்தி தாலி இறங்கிடுச்சு” என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழ.. ராம், வினய் நிலைதான் இன்னும் மோசமாக இருந்தது.. “சரிய விசாரிக்காம எங்க தங்கச்சி வாழ்க்கைய நாங்களே கெடுத்துட்டோமே” என்று அழுது கரைந்தனர்..

ஒரு வாரம் இப்படியே போக, மதுராவிற்கு இடிப்பு வலிகண்டு கதறி துடிக்க.. அந்த நேரம் பார்த்து வீட்டில் யாருமில்லாமல் போக. தன் சோகத்தில் தன்னை மறந்திருந்த யுக்தா, தன் அண்ணியின் வலியை பார்த்த அடுத்த நொடி தாமதிக்காமல் மதுவை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தாள்..

மதுவிற்கு அழகிய பெண் குழந்தை பிறக்க, அதை முதலில் தன் கையில் ஏந்திய யுக்தா முகத்தில் வெகு நாள் கழித்து சிறு குறுநகை மலர்ந்தது.. அதை பார்த்து குடும்பம் மொத்தமும் சற்று நிம்மதி கொண்டது. மதுவிற்கு குழந்தை பிறந்த அடுத்த இரண்டு நாட்களில் கயல்விழி, வெற்றிக்கு ஆண்குழந்தை பிறந்தது.. மதுரா தன் மகளுக்கு சமீரா என்று பெயரிட, கயல்விழி தன் மகனுக்கு யுகன் என்று பெயரிட்டாள்..

குழந்தைகள் பிறந்து அந்த குடும்பத்தில் சற்று மாறுதலை ஏற்படுத்தி இருந்தாலும் யுக்தாவை நினைத்து அனைவரும் கவலையில் தான் இருந்தனர்.. எல்லோரும் கவலையில் இருப்பதை பார்த்த யுக்தா, “இன்னு எவ்ளோ நாள் இப்டியே இருக்கபோறீங்க எல்லாரும்..?? “எப்பபாரு எழவு விழுந்த வீடுமாதிரி” என்று ஆரம்பித்தவள் வார்த்தைகள் பாதியிலேயே நின்றுவிட. “ம்ம்ம்ம்” என்று இழுத்து மூச்சு விட்டவள்.. “சரி எழவு தா விழுந்து போச்சு, அதுக்கு என்ன பண்ணமுடியும். செத்தவனுக்காக உயிரோட இருக்க எல்லாரும் வருத்தப்பட்டே சாகனுமா” என்ன என்று? கத்தியவள் அருகில் வந்த கோதை, “நாங்க செத்த அந்த கேடுகெட்டவனை நெனச்சு இப்டி இல்ல டி. ஆசை ஆசையா நாங்க வளர்த்த பெண்ணு.. நீ இப்படி நீக்குறீயே” என்றவர் சொல்லவந்ததை முடிக்க முடியாமல் முந்தானையில் வாய்பொத்தி அழ..

“ஏய் முதல்ல அழறத நிறுத்து டி” என்று அதிகாரமாக வந்த சிவகாமியின் குரலில் அனைவரும் அதிர்ந்து தான் போயினார்.. “இப்ப என்ன ஆகிப் ‌ போச்சுன்னு இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க.. ஒரு கொலகார பயகிட்ட இருந்து நம்ம புள்ளைக்கு விடுதலை கெடச்சுதுன்னு சந்தோஷபடுங்க.. நம்ம செஞ்ச புண்ணியம் நம்மபுள்ளை உசுரோட நம்ம கண்ணுமுன்ன இருக்கு. அதுபோதும் நமக்கு. இனி யாரு இந்த வீட்ல நடந்ததை பத்தி பேசுறது மட்டும் இல்ல. அதபத்தி நெனைக்ககூட கூடாது” என்று இறுதியாக சொல்லிவிட்டார்..

“பாட்டி நா ஒன்னு சொன்ன செய்வீர்களா.??”

“என்னடி கேள்வி இது.. என் பேத்தி கேட்டு நா செய்யாம இருந்திடுவேனா, உனக்கு என்ன வேணும்னு சொல்லி டி.!!”

வினய், ஜீவா, விஷ்ணு அருகில் சென்றவள், நிஷா, ஜானு, ராஷ்மி மூவரையும் பார்த்து, “நா சந்தோஷமா இருக்கணும்னு நீங்க நெனச்ச மூனுபேரும் என்னோட அண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கணும்!! பண்ணிப்பீங்களா??” என்று ஒரு எதிர்பார்ப்போடு கேட்க.

“வினய், ஜீவா, விஷ்ணு மூவரும் முடியாது, முடியாவே முடியாது.. நீ இப்படி இருக்கும்போது எங்களுக்கு கல்யாணமா,? நடக்காது என்று மறுக்க.??”

“நா சந்தோஷமா இருக்கணும்னு நீங்க எல்லாரும் நெனச்ச இதை செய்ங்க‌‌.. உங்க மூனுபேர் கல்யாணம் தா எனக்கு இப்ப இருக்க ஒரே ஆறுதல்.. அப்றம் உங்க இஷ்டம்” என்றவள் அமைதியாக சென்றுவிட.. அதற்கு பின் யார் கல்யாணத்தை மறுப்பது. விஷ்ணு பிஸ்னஸ் வேலையாக வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால் அவனுக்கும் ராஷ்மிக்கும் நிச்சயம் மட்டும் முடித்துவிட்டு. வினய், நிஷா. ஜீவா, ஜானு திருமணத்தை வீட்டோடு சிம்பிளாக செய்ய முடிவு செய்தனர். யுக்தா தான் தங்களுக்கு நாத்தனார் மூடிச்சு போடவேண்டும் என்று நிஷாவும், ஜானுவும் முடிவாக சொல்லிவிட, மதுவும் அதே முடிவில் தான் இருந்தாள்.. யுக்தா எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை, வேறுவழி இல்லாமல் யுக்தா தாலியின் மூன்றாவது மூடிச்சை போட்டு இரு ஜோடிகளின் ஏழுஜென்ம உறவை தொடங்கிவைத்தாள்..

திருமணம் முடிந்த பத்துநாளில் யுக்தா யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயே சென்றுவிட.. தவித்து போன குடும்பம்.. பிரபு ஃபோன் செய்து அவள் கூர்க்கில் தன்னுடன் தான் இருக்கிறாள் என்று சொல்லி பின் தான் நிம்மதி கொண்டது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!