ஆட்டம்-24

ஆட்டம்-24

ஆட்டம்-24

தன்னுடைய அலைபேசியை இரவு பத்து மணி போல உயிர்ப்பித்த சித்தார்த் அபிமன்யுவின் விழிகளில் விக்ரமின் மெசேஜ் விழ, உதட்டில் வந்தமர்ந்த புன்னகையோடு அதை திறந்தவனின் இதழ்கள் தனது கம்பீரக் குரலில், விழிகளில் களிப்பின் முடிவு தெரிய, “குட் மூவ் விக்ரம்” என்று நிதானமாக சகோதரனை பாராட்டி மெச்சியவனின் விழிகள் நொடி நேரத்தில் இரத்தம் குடிக்கும் வேங்கையின் பளபளப்பை எடுத்துக் கொள்ள, சற்று நேரத்திற்கு முன் அபிமன்யு அழைத்ததில், அடித்துப் பிடித்து ஓடி வந்திருந்த அவனின் பி.ஏ ஆரவ்விற்கு தன் முதலாளியின் முகத்தில் இருந்த தாண்டவத்தைக் கண்டு தலை முதல் கால் வரை நடுங்கிப் போய்விட்டது.

அலைபேசியையே பார்த்திருந்தவனின் விழிகள் ஆரவ்வை, ‘சொல்’ என்பது போல பார்க்க, “ஸார் நறுமுகை மேடமை விக்ரம் ஸார் தூக்கிட்டுப் போயிட்டாராம்” என்று மூச்சு வாங்க அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற பீதியுடன் கூறியவனை, தன்னுடைய சுழல் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி பார்த்த அபிமன்யு,

“அவன் பொண்டாட்டி.. அவன் தூக்கிட்டு போறான்” என்று இலகுவாக முடிக்க, நடப்பது ஒன்றும் புரியாது முழித்துக் கொண்டிருந்த ஆரவ்வை பார்த்து புன்னகைத்த அபிமன்யுவின் விழிகளில் அத்தனை ராஜ தந்திரங்கள் கொப்பளித்தது.

“புரியலையா ஆரவ்?” அபிமன்யு ஒவ்வொரு வார்த்தைகளையும் கனீர்க் என்று ஒலிக்க, அவனோ இடமும் வலமும் வியர்த்து கொட்ட தலையாட்டி, “இல்ல ஸார்” என்றான்.

“விக்ரமோட எந்த பாகத்துல நான் கை வச்சா, உத்ரா மேல இருக்க அவன் கண் திரும்பும்னு எனக்கு தெரியும்..” என்ற அபிமன்யுவின் குரலில் இருந்த கேலி கலந்த தீவிரத்தில், “புரியல ஸார்” என்றான் அவன். மெய்யாலுமே அவனுக்குப் புரியவில்லை தான்.

“ஆரவ்! நான் அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டையும் என்னோட ப்ளான்ஸை சொல்ல மாட்டேன்.. பட் ஐம் ஸோ ஹாப்பி டுடே.. ஸோ உன்கிட்ட சொல்றேன்” என்றவன்,

“எனக்கு நறுமுகை லைஃப் முக்கியம்.. அதைவிட அத்தையோட நிம்மதி முக்கியம்.. பட் எனக்கு விக்ரம் கிட்ட போய் பேசறது எல்லாம் செட் ஆகாது.. அவனுக்கு நறுமுகையை விட என்மேல இருக்க ஈகோ கண்ணை மறைக்குது.. அதைவிட இப்ப உத்ராவை விட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்காது.. ஸோ எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி நான் ப்ளே பண்ண மைன்ட் கேம் (Mind game) தான் இது” என்றவன்,

“செஸ் கேம்ல கிங்ஸ் இண்டியன் டிபன்ஸ் (King’s Indian defense) மூவ்னு இருக்கு கேள்விபட்டிருக்கியா? அந்த மூவ் செஸ்ல ரொம்ப ஸ்ட்ராங்கான டிபன்ஸ். கிங் தன்னோட ஸ்ட்ராங் டிபன்ஸை உருவாக்கி, எதிராலியோட வீக்கான இடத்துல அடிக்கிறது. அதாவது இந்த மூவ் வந்து hypermodern aggressive opening.

அதுதான் நான் இங்க பண்ண மூவ். ஸோ எனக்கு தேவையான விக்டரியை (Victory) நான் தேடி போகத் தேவை இல்ல.. இந்த அபிமன்யுவால என்னோட விக்டரியை என்னை தேடி வர வைக்க முடியும்” என்று கூறியவனின் கூறியவனின் குரலில் உறுதியிலேயே ஆரவ்விற்கு புரிந்து போனது, தனது முதலாளி எதையோ பெரிதாக பண்ணக் காத்திருக்கிறார் என்று.

‘ஆக, இவர் அமெரிக்கா செல்லவில்லை. இல்லாத திருமணம் முடிவு, எப்படியும் நறுமுகை கையெழுத்திட மாட்டாள் என்பதால் விவாகரத்து பத்திரம் என்று தயார் செய்து அனைத்தையும் பக்காவாக செய்து முடித்து, தான் இல்லாததாக காட்டி நறுமுகையை விக்ரமோடு சேர்த்து வைத்து, இப்போது உத்ராவின் மேல் தன் இலக்கை வைத்திருக்கிறார்’ என்று புரிய, யோசனையிலேயே நின்றவனிடம் எழுந்து வந்த அபிமன்யு,

“விக்ரம் அவனோட மொபைல்ல அவன் ரைட் ஹான்ட் கிட்ட குடுத்திட்டு போயிருக்கான் போல..” என்றபடியே கழுத்தில் இருந்த டையினை தளர்த்தியபடியே அறைக்குள் நடந்தபடி கூறியவன், அங்கிருந்த கண்ணாடித் தடுப்பின் அருகே சென்று நின்று, கீழே சென்று கொண்டிருக்கும் புள்ளி வாகனங்களை பதிமூன்றாவது மாடியில் இருந்து வெறித்துக் கொண்டிருந்தான்.

மணி ஒன்பதரையை எட்டியது. கடிகாரத்தை பார்த்தவன், “ஆரவ், ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி உத்ரா ஓடில (OT – Operation theatre) இருந்து வெளில வந்தாச்சானு கேளு” என்றவனின் இரு பாக்கெட்டிலும் கைவிட்டு நின்ற நொடி, ஆரவ்வின் வயிற்றில் இருந்து எதுவோ அவன் கழுத்தை வந்து அடைத்து அவனை திகைக்கச் செய்தது.

தனது அலைபேசியில் விஷயத்தை வாங்கியவன் அபிமன்யுவிடம், “ஸார், இன்னும் டுவென்டி மினிட்ஸ் ஆகுமாம்” என்றிட,

“ம்ம் ஓகே” என்றவன், “ஆரவ்!! ஆபிஸ் கார் கேரேஜை ஓபன் பண்ண சொல்லு” என்றிட, ஆரவ்வின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஏனெனில் அபிமன்யு அந்த கேரேஜினுள் இருக்கும் கருப்பு நிற ராட்சஷ புகாடி சிரான் ஸ்போர்ட்ஸ் (Bugatti chiron sports) காரை எடுத்தாலே, அவன் செய்ய இருக்கும் காரியம் பெரியதாகத் தான் இருக்கும்.

தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் கானகத்தில், இரவின் கும்மிருட்டில், நிலவின் ஒளி கூட பட்டிடாத அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கும் நிசப்தத்தில், வெறியில் உறுமிக் கொண்டிருக்கும் வேங்கையவனின் கைகளில் பொன் ராஜகுமாரி காதலோடே சிக்கும் நேரம்….

(அடுத்த எபியோட முதல் பாகம் முடியுது)

error: Content is protected !!