ஆட்டம்-25

ஆட்டம்-25

ஆட்டம்-25

ஐந்து தினங்கள் கடந்திருந்தது.

மரப் பந்தலுக்குள் உறங்கிக் கொண்டிருந்த நறுமுகையை ஒருக்களித்து படுத்து, தலைக்கு கரம் கொடுத்தபடி, தன் மார்புக்கு வெகு அருகே படுத்திருந்தவளின் ஒய்யார அழகை விழிகளால் ரசித்துக் கொண்டிருந்தான் விக்ரம் அபிநந்தன்.

தன் பெண்மையை தனக்காக முழு மனதுடன் கொடுத்து, தன்னை தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று காம வாசம் அறிய வைத்தவளின் துயில் கொள்ளும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவனின் மனம், வெண் முகில் போன்றதொரு மென்மையை தத்தெடுத்திருந்தது.

அதுவும் அவனுக்கு பிடித்த சிவப்பு நிற மெத்தையில் புதைந்து, சிவப்பு நிற போர்வைக்குள் பிறந்த குழந்தையாய் போர்வையை கழுத்து வரை போர்த்தி, தன் மேனியை மறைத்துக் கொண்டு படுத்திருந்தவளின் செயல் அவனை புன்னகைக்க வைக்க, அவளின் வெல்வெட் கன்னத்தில் விழுந்த சிகையை காதிற்கு பின் ஒற்றை விரலால் ஒதுக்கியவனின் விரல் அங்கோடு தன் பயணத்தை நிறுத்தவில்லை.

கன்னத்தில் கோலமிடத் துவங்கிய விரல்கள் நெற்றி, புருவம், விழி என்று ஓட, தன்னவளின் இதழையும், தூங்கிக் கொண்டிருப்பதால் வரியாக விழுந்திருந்த ரேகையையும் பார்த்தவனின் தொண்டைக் குழி தாகத்துடன் ஏறி இறங்க, விரல் கொண்டு தன்னவளின் கீழ் அதரங்களை வருடியவன் அதனைப் பிடித்து இழுக்க, தூக்கத்தில் இருந்தவளுக்கோ கணவனின் தீண்டலும் சீண்டலும் புரிந்துவிட,

“ஆங்ங்ங்ங்!” என்று கண்களை மூடியபடியே கத்தியவள், போர்வையை தலைக்கும் சேர்த்தி போர்த்திக் கொள்ள, போர்வையோடு மனையாளை அணைத்தவன், “ஏய் சிலுக்கு ஓப்பன் பண்ணுடி” என்றான் கிறக்கமான குரலில்.

“ம்கூம்” என்றவளுக்கு தூக்கத்தில் இருந்து எழவே பிடிக்கவில்லை. ஐந்து நாட்களாய் அவன் அவளை சளைக்காது வாங்கிய வேலை அப்படி. இங்கு இரவு உல்லாசமாக இருப்பது, காலை வீட்டிற்கு செல்வது, சாப்பிடுவது உறங்குவது, மீண்டும் மாலையே இங்கு வந்துவிடுவது. இதுதான் ஐந்து நாட்களாக இருவரின் வேலையாய் இருந்தது.

“நான் ஒண்ணும் சிலுக்கு கிடையாது” போர்வைக்குள் கோபமாக தூக்கத்தில் முனகியவளின் மேல் நன்றாக சாய்ந்து அணைத்தவன்,

“நீ எனக்கு சிலுக்கு தான்டி.. அதே லிப்ஸு.. அதே ஸ்ட்ரக்சர்” என்று அவளின் போர்வையை பிடித்து அவன் இழுக்க முயல,

“ஐயோ! நான் எதுவும் போடல மாமா” என்று நாணத்தில் சிணுங்கியவளிடம்,

“அப்ப நான் உள்ள வரட்டா?” என்று மயக்கும் குரலில் மயக்கினான்.

கணவன் உள்ளே வந்தால் தொடங்கிவிடுவான் என்று நினைத்தவள், “ஐயோ நான் தூங்கணும்” என்றாள் போர்வைக்குள் இருந்தபடி அவனின் அணைப்பு தாங்காதும் நெளிந்தபடியே.

‘இள இரத்தம்! வாலிப தாளங்கள்! தன்னவளின் வாசம்!’ அணைத்தும் ஒன்றிணைந்து அவனை விடுமா என்ன?

காரிகையவள் தடுக்க தடுக்க முரட்டுக் காளையாய் உள்ளே நுழைந்தவன் அவள் கழுத்தில் புதைய, தீக்கள் மூட்டப்படும் உணர்வில், அவன் செவியில் மெல்ல கிசுகிசுத்தாள் அவனின் அருமை மனைவி.

“மாமா டேய்! ஏற்கனவே கழுத்து ஃபுல்லா கடிச்சு கடிச்சு வச்சிருக்க.. இதுல இன்னைக்கு வேற வீட்டுக்கு கிளம்பறோம்.. இப்படி கழுத்து அங்கங்க சிவந்து இருந்தா நான் எப்படி எல்லாரையும் ஃபேஸ் பண்ணுவேன்” அவனின் தலையை கோதியபடியே அவள் வினவ, அதில் அவள் கழுத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவனின் இதழ்கள் புன்னகையில் தாராளமாக விரிந்து கொள்ள, அவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்து சுருங்கியதில் அவளுக்கோ கழுத்தில் நண்டு ஊருவது போல இருக்க,

“கூசுது மாமா” என்றவளுள் மேலும் புதைந்து, தன் தாபத்தை தன்னவளிடம் தணித்தவன் அவளின் கழுத்து வளைவில் சுவாசித்தபடியே இளைப்பாற, பெண்ணவளோ வேறொரு உலகில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

கணவன் தன்னை தேடுகிறான், நாடுகிறான், காதலோடு கூடுகிறான் என்பதே அவளுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும், தலைக்கு மேல் கிரீடத்தை வைத்தது போன்று கர்வமாகவும் இருந்தது. தனக்காக, தன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று வீடு புகுந்து தூக்கி வந்த கணவனை நினைத்து இப்போது பெருமையும், உடல் முழுதும் சிலிர்ப்பும் எழ, புன்னகைத்தபடியே கணவனை அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தவர்கள், வீட்டிற்கு கிளம்ப தயாராக, தாத்தா பாட்டியின் மனம் கனக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஐந்து நாட்கள் அவர்களை விட இவர்கள் தான் வெகு ஆனந்தமும், மனம் முழுதும் நிம்மதியுடனும் இருந்தனர்.

இப்போது இருவரும் கிளம்புகிறார்கள் என்றபோதே இருவரின் முகங்களும் பொக்கென்று ஆகிவிட்டது.

பையை எடுத்து வைத்து இருவரும் வெளியே வர, இருவரின் முகங்களையும் பார்த்த நறுமுகை வந்து சகுந்தலாவை அணைத்துக் கொண்டு, “பாட்டி நோ வொர்ரீஸ்.. நான் வாராவாரம் வந்திடறேன் சரியா? இல்லைன்னா வீடியோ கால் பண்றேன்.. ஐ மிஸ் யூ” என்று அவரின் கன்னத்தில் அணைத்து முத்தமிட, பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டவர், “போயிட்டு வாடா..” என்றிட, தாத்தாவையும் அணைத்தவள், “மிஸ் யூ தாத்தா” என்றவளுக்கும் மனம் கனக்கத்தான் செய்தது.

விக்ரமிடம் வந்த சுப்ரமணியம், “நீங்க நல்லா இருப்பீங்க ப்பா.. இப்படி ஒரு பையன் தேடுனா கூட எங்க பேத்திக்கு கிடைச்சிருக்காது” கரகரப்புடன் கூறி முடிக்க, இருவரின் கால்களில் ஒன்றாக விழுந்தவர்களை மனதார ஆசிர்வதித்தவர்கள், இருவரையும் வெளிவரை வந்து வழியனுப்ப, விக்ரமின் மனதில் ஏதோ காரணமில்லாமல் உறுத்த, சுப்ரமணியமிடம் வந்தவன், அவரின் அலைபேசியை வாங்கினான்.

அவன் அழைத்தது அவன் அலைபேசியை கொடுத்து வந்தவனிடம். ஃபோனை எடுத்தவுடன் விக்ரம் பேசுவதற்குள் உள்ளே புகுந்தவன், “ஸார்.. ஸார்..” பதட்டத்துடன் துவங்க,

“ஐ நோ சம்திங் நடந்திருக்கு.. பொறுமையா சொல்லு” என்ற விக்ரமின் முகம் இரையை கணிக்கும் விழிகளை தத்தெடுத்து கூர்மையுடன் கூடிய நிதானத்துடன் கேட்க, நறுமுகை அவனின் தோளில் வந்து கை வைத்தாள். அவளுக்கோ என்னவோ ஏதோவென்று இருந்தது.

“ஸார்! உத்ரா மேமை ஐஞ்சு நாளா காணோம்னு உங்க தாத்தா இப்பதான் வந்து என்னை பாத்துட்டு போனாரு.. எப்படி என்னை ட்ராக் பண்ணாருனு தெரியல.. பட் உங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர சொன்னாரு..” என்று அரை விநாடிகளுக்குள் அவன் அனைத்தையும் நடுக்கத்துடன் ஒப்பிக்க,

“வாட்?” என்று அலைபேசியை அழுத்திப் பிடித்த விக்ரமின் எரிமலை வெடித்துச் சிதறும் கோபத்தில், அவனையே பார்த்துக் கொண்டிருந்த மூவருக்கும் பகீரென்று இருக்க, அவனிடம் என்னவென்று விசாரிக்கவே அவர்களுக்கு அச்சமாக இருந்தது.

“ஆமா ஸார்.. யூகேல இருந்து அவங்க அம்மா, அப்பா, தங்கச்சி வேற வந்துட்டாங்கலாம் திடீர்னு..” என்று உரைத்தவனிடன் பதிலளிக்காதே ஃபோனை அணைத்த விக்ரம்,

“கார்ல ஏறு நறுமுகை” என்று பெரியவர்களிடமும் தலையாட்டிவிட்டு காரை எடுக்க, அவன் காரை எடுத்த வேகத்தினில் காரின் சக்கரம் ஒரு சுழன்று அதிவேகத்தில் சுத்தி, புழுதியை பறக்கவிட்டு செல்ல, பெரியவர்கள் இருவரின் மனதும், ‘கடவுளே எதுவா இருந்தாலும் காப்பாத்துப்பா’ என்றே கூவியது.

காரில் கணவனுடன் அமர்ந்திருந்த நறுமுகைக்கு ஏதோ பெரிதாக நடந்திருப்பதாகப் புரிய, அருகில் அமர்ந்திருந்த கணவனை திரும்பிப் பார்த்தாள். அவன் பல்லைக் அழுந்தக் கடித்து தன் கோபத்தைக் கட்டுக்கள் வைத்துக் கொண்டு வருவது அவனின் இறுகிய தாடையை வைத்தே உணர்ந்து கொண்டவளுக்கு அவனின் ஒவ்வொரு நரம்பிலும் ரௌத்திரம் கொப்பளித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

ஆனால், கேட்காமல் இருக்க முடியவில்லை.

“மாமா என்னாச்சு?” என்றவளின் கேள்வி ஆத்திரத்தில் கொதித்து விழிகளில் பளபளப்புடன் அமர்ந்திருக்கும் வேங்கையை அடைய, மனையாளை பார்க்காது ரோட்டிலேயே பார்வையை பதித்திருந்தவன்,

“உத்ரா மிஸ்ஸிங் நறு” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பிவிட்டு, “அதுவும் ஐந்து நாளா?” என்றான் ஆக்ரோஷமாக.

“என்ன சொல்றீங்க? அபி மாமா அங்க தானே இருப்பாங்க.. பேசாம” என்றவளை முடிக்க விடாது இரத்த நாளங்கள் சிதற சினத்துடன் பார்த்தவன்,

“அவளை தூக்குனதே அவன்தான்” என்று அடிக்குரலில் உறுமினான்.

“உங்ககிட்ட சொன்னாங்களா? சும்மா சொல்லாதீங்க” என்று எகிறியவளை பார்வையாலேயே கனல் பறக்க எரித்தவன்,

“நறு என்னை ட்ரிக்கர் பண்ணாத.. ஏற்கனவே கொலை வெறில இருக்கேன்” என்று காரின் வேகத்தை மேலும் அதிகரித்தவனை விழிகளில் அலறல் பாய்ந்தோட கண்டவள்,

“மாமாவும் உத்ராவும் லவ் பண்றாங்க” என்று கூற, காரின் நான்கு சக்கரங்களும் தேய்ந்து கருகிப் போகும் அளவிற்கு சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியவன், “வாட்? கம் அகைன்?” என்றான் எள்ளலாக. குரலில் அத்தனை நக்கல் வழிந்தது.

மெய்யாலுமே அன்று டைனிங் அறையில் நடந்ததை வைத்து அப்படிதான் நினைத்திருந்தாள் நறுமுகை. அன்று முழுதும் அபிமன்யுவின் புன்னகை தவழும் வதனத்தை கண்டிருந்தவள் முடிவே செய்துவிட்டாள் என்றுதான் கூற வேண்டும்.

இப்போது கணவனின் நக்கலில், வெகுண்டு எழுந்தவள், அன்று தான் கண்டது அனைத்தையும் கூற, இதழுக்கிடையில் கோபத்துடன் புன்னகைத்தவன், “நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?” என்று உள்ளுக்குள் நினைத்ததை வெளியில் சொல்லாது அமைதி காக்க,

“நீங்க நம்பலைனாலும் பரவாயில்லை.. நான் சொல்றது தான் உண்மை” என்றவளை முறைத்தவன், விட்டால் கியரை கையிலேயே புடுங்கி எடுத்து விடுவேன் என்கின்ற அளவுக்கு வெடுக்கென்று மீண்டும் காரை எடுக்க, அவர்கள் வரும்போது இருந்த அதே இடத்தில் இருந்தான் அவன்.

அலைபேசியை அவனிடம் பெற்றுக் கொண்ட விக்ரம், காரை எடுத்தபடி ப்ளூடூத்தில் சிம்மவர்ம பூபதிக்கு அழைக்க ஃபோனை ஏற்றவர், “எங்க இருக்க விக்ரம்?” என்றார் உடைந்து போன குரலில். அவர் இப்படி உடைந்து பேசியதை எல்லாம் யாருமே கண்டதில்லை. நீரஜாவின் விஷயத்தில் உற்பட. இரும்பு போன்ற மனிதரின் குரலில் இப்போது இருந்த கலக்கமும், வேதனையும் விக்ரமின் மனதையும் அசைக்க,

“தாத்தா!!” என்றான் ஆறுதலாய்.

“சீக்கிரம் வா விக்ரம்.. என்னால இங்க சமாளிக்க முடியல.. முக்கியமா உன் பாட்டியை.. ஐஞ்சு நாளா சாப்பிடாம மயங்கி விழுந்து கிடக்கா” என்று அவர் கூறியதில் நெற்றியை நடந்து கொண்டிருக்கும் விபரீதங்கள் புரிய அழுந்த நீவியவன்,

“கடைசியா எங்க தாத்தா இருந்தா உத்ரா?” வினவ,

“ஹாஸ்பிடல் தான் விக்ரம்” என்றவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் நேராக சென்று நிறுத்தியது மருத்துவமனையில் தான்.

மருத்துவமனைக்குள் நுழையும் போதே, அவனுக்காக அவன் ஏற்கனவே அழைத்திருந்த இருவர் காத்திருக்க, கணவனின் பின்னே அவனின் நடைக்கு ஈடு கொடுக்க இயலாது கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள் நறுமுகை.

நேரே அனைவரும் சிசிடிவி அறைக்குள் நுழைய, விக்ரம் இங்கு நீரஜாவிற்காக வைத்திருந்த உதவியாளன், “ஐஞ்சு நாளைக்கு முன்னாடி நடந்த எல்லா சிசிடிவியும் பாத்தோம்.. ஸார்.. அபிமன்யு ஸார் வந்த மாதிரி எதுவும் இல்ல” என்றிட, அங்கிருந்த டேபிளில் கையை ஊன்றி இலேசாக குனிந்து அனைத்து சிசிடிவிகளையும் பார்த்திருந்தபடியே யோசித்தவனின் முகத்தில் இருந்த பயங்கரமான தாண்டவத்தை கண்ட அனைவரின் உள்ளத்திலும் திகில் சூழ, இறகு விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அளவிற்கு அந்த அறை முழுதும் அமைதியாய் இருந்தது.

சட்டென ஏதோ தோன்ற நீரஜாவின் உதவியாளனை பார்த்தவன், “அந்த செக்யூர்ட் சிசிடிவியை செக் பண்ணீங்களா?” என்றான்.

அது அபிமன்யு, விக்ரம், நீரஜா மட்டும் காரை நிறுத்தும் இடத்தில் யாரும் அறியாது வைக்கப்பட்டிருந்த தனி சிசிடிவி. இவர்கள் மூவர் அடுத்து சிசிடிவி அறையில் இருப்பவன், நீரஜாவின் உதவியாளனை தவிர யாரும் அறியமாட்டார்கள்.

அச்சத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவன், “ஸார் அது உங்க யாராவதோட பிங்கர் ப்ரின்ட் இருந்தாதான் பாக்க முடியும்” என்றிட, சட்டையை முட்டி வரை மடித்து விட்டபடி, “கோ அகெட்” என்றான் குரலில் ஆளுமை தெறிக்க, தோரணையில் அதிகாரம் வெடிக்க.

விக்ரம் கை ரேகையை வைத்த அடுத்த விநாடி, வேலைகள் அனைத்தும் கடகடவென்று நடக்க, அடுத்த இரு நிமிடத்தில் சிசிடிவியை கண்ட உதவியாளனின் நெற்றியில் வியர்வை பூக்க, மூச்சு வாங்கியபடி விக்ரமை நிமிர்ந்து பார்த்தவன், பயத்தில் தொண்டைக் குழி கவ்வ, “ஸார்.. அபிமன்யு ஸார்” என்றிட, நறுமுகையை விக்ரம் திரும்பிப் பார்க்க, அவளால் அதை நம்பவே இயலவில்லை.

“நான் சொன்ன மாதிரி தான்.. அபிமன்யுவே தூக்கிட்டுப் போயிருக்கான்” மனைவியை பார்த்து தன் அனைத்து ஆங்காரத்தையும் கட்டுப்படுத்தியபடி கூறியவன், உதட்டை குவித்து மேலே பார்த்து உஷ்ணங்களை ஊத,

“ஸார்” என்றான் மேலும்.

“ம்ம்” விக்ரம் மேல் கூரையை பார்த்தபடி சொல் என்பது போல பதிலளிக்க,

“கடத்திட்டு எல்லாம் போகலை ஸார்.. மேடமே தான் போயிருக்காங்க” என்று கூற, திகைப்பின் உச்சைத்தை அடைந்த விக்ரமின் உள்ளம் அப்பட்டமாய் வதனத்தில் தன் உணர்வுகளை காட்ட, “வாட்?” என்றான் அந்த அறையே இடிந்து தரைமட்டம் ஆகும் வகையில்.

“ஆமா ஸார்” என்றவன் மடிக்கணினியில் பார்த்ததை பல சிசிடிவிகள் பொருத்தப்பட்டிருந்திற்கு மாற்ற, அவனின் கரம் தவறுதலாக பட்டு, ஒரு டிவிக்கு பதில், அங்கு பொருத்தப்பட்டிருந்த நூறு டிவியிலும் அதுதான் ஓடியது.

அபிமன்யு தன் புகாடி சிரான் ஸ்போர்ட்ஸ் காரில் சாய்ந்தபடி கம்பீரமாக, நின்றிருக்க, உத்ரா வருவதற்கு முன் தன் இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை வருடினான் அபிமன்யு. ஆக மிகப்பெரிய முடிவை ஏதோ எடுத்திருக்கிறான் என்று புரிந்தது விக்ரமிற்கு.

அதுவும் நூறு டிவியிலும் அதுவே ஓடிக் கொண்டிருக்க, பல்லாயிர கணக்கான சூறாவளியை அவனுக்குள் அடித்துக் கொண்டிருந்தது அங்கு அடுத்து ஓடிய காட்சிகள்.

சிறிது நொடிகளில் உத்ரா வந்துவிட, அவனைப் பார்த்தவள் சடாரென நின்றதும், அடுத்து ஒரு நிமிடத்தில் அபிமன்யு எதுவும் பேசாதே தானாக அவள் காரில் ஏறியதும், விக்ரமின் தலையை யாரோ சம்மட்டியால் அடித்தது போன்று உணர வைக்க, நறுமுகை கூறியது உண்மைதானோ என்று தோன்றியது அவனுக்கு.

உத்ரா காரில் ஏறியதும், காரில் ஏறப்போன அபிமன்யு, காரின் கதவை திறந்து ஏறப்போகும் முன் சிசிடிவியை பார்த்து, தான் நினைத்ததை அடைந்து விட்டேன், உன்னை முட்டாளாக்கி வென்று விட்டேன் என்ற புன்னகையை உதிர்க்க, அபிமன்யுவின் ஏளனம், தான் அவ்வளவு கூறிவிட்டுச் சென்றும் உத்ராவின் செயல் என்று விக்ரமின் வெறியை ஏற்றியிருக்க, தன் கை ஊன்றி நின்றிருந்த மேசையை அவன் படீரென்று அடிக்க, அதில் வைக்கப்பட்டிருந்த அனைத்தும் பறக்க, அங்கிருந்த அனைவருக்கும் அடிவயிற்றில் புளியை கரைக்க, மனதில் கிலி பிடித்தது.

நறுமுகைக்கோ பயம்!

கணவன் தன்னை எதுவும் கூற மாட்டான் என்று தெரியும்.

ஆனால், வேங்கைகள் இரண்டிற்கும் போர் வந்துவிடுமோ என்று பெண் சிங்கம் வளர்த்த புள்ளி மான் தீரா திகைப்பிலும், கடும் அச்சத்திலும் இருந்தது.

நறுமுகையிடம் வந்தவன், “போகலாம்” என்று செல்ல, ‘கடவுளே எதுவும் எங்க குடும்பத்துல நடந்திடாம’ என்று வேண்டியவள், படபடக்கும் இதயத்துடன் கணவனுடன் சென்றாள்.

இருவரும் வீட்டிற்குச் சென்று இறங்கி உள்ளே சென்ற விநாடி, அனைவரும் அபிமன்யுவின் வீட்டில் தான் இருந்தனர். அரிமா பூபதி, அழகி உட்பட.

விக்ரமை கண்டதும் அவனிடம் ஓடி வந்த இமையரசி, “உத்ராவை காணோம் விக்ரம்.. அவளை நீதான் கூட்டிட்டு வரணும்” என்று அவனின் கரத்தை பிடித்துக் கொண்டு அழ, அவனின் விழிகளோ அனைவரையும் பார்த்தது.

விஜயவர்தன் இரு கைகளால் தலையைத் தாங்கி சக்தியற்று அமர்ந்திருக்க, சிம்மவர்ம பூபதி அவருக்கு அருகே அவரின் கரத்தை ஆறுதலாக பிடித்தபடி அமர்ந்திருந்தார். அரிமா பூபதியும், அதியரன் பூபதியும் யாருடனோ அலைபேசியில் கேட்டுக் கொண்டே இருக்க, கோதையின் மடியில் ரஞ்சனி மகளை நினைத்து இடிந்து போய் அழுது கொண்டிருக்க, அழகியும் திலோத்தமையும் அவர்களுக்கு அருகே ஆறுதல் கூற முயற்சித்துக் கொண்டிருக்க, மித்ராவோ தனியே தன் சகோதரியை நினைத்து அழுது வடிந்து கண்கள் சிவந்து அமர்ந்திருந்தாள்.

நீரஜாவோ நெற்றியில் பிடித்துக் கொண்டு தலை சாய்த்து கண்களை மூடியபடி அமர்ந்திருக்க, அவரின் தொண்டைக் குழிகளோ ஏறியும் இறங்கியும் இருந்தது. அனைவரிடமும் உண்மையை சொல்லலாம் என்று வந்தவனுக்கு நடப்பதை பார்த்து சொல்ல முடியவில்லை.

பாட்டியை அழைத்துக் கொண்டு சென்றவன் நீரஜாவின் அருகே தானும் அமர்ந்து கொண்டான்.

வரும்வழியில் யார் யாரையோ வைத்து விசாரித்துவிட்டான். அபிமன்யு உத்ராவை கொண்டு சென்றிருக்கும் சுவடே யாருக்கும் தெரியவில்லை. போலீஸ் அதிகாரிகள் உட்பட. அரசியல்வாதிகள் பலரிடம் தனியாக அழைத்து பேசியும் கூட ஒரு வழியும் கிடைக்கவில்லை.

தன்னை மட்டுமே நம்பி மகளை அனுப்பி வைத்த பெற்றோர் அழுவதை பார்க்க பார்க்க அவனின் நெஞ்சத்தை எதுவோ அசைக்க, விக்ரமிடம் எழுந்து வந்த ரஞ்சனி, “என் பொண்ணை மட்டும் என்கிட்ட காப்பாத்தி குடுத்திடு விக்ரம்.. உன் கால்ல வேணாலும் விழறேன்” என்று விழப்போக, விக்ரம் திகைத்து எழுந்து ரஞ்சனியை தடுப்பதற்கு முன் நீரஜா ரஞ்சனியை தடுத்திருந்தார்.

அதற்கு மேல் முடியவில்லை நீரஜாவை கட்டிக் கொண்டு ரஞ்சனி அழ, இத்தனை வருடங்களாக எதையும் பார்த்து கொள்ளலாம், எது வந்தாலும் தான் பெண் சிங்கமாய் எதிர்த்து நிற்பேன் என்றிருந்த நீரஜாவின் விழிகளில் இருந்தும் கண்ணீர் வழிய, விக்ரமை பார்த்தவர், “விக்ரம்?” என்று அழைக்க,

“அபிமன்யு தான் அத்தை.. ஆனா கடத்திட்டு போகல.. உத்ராவே.. தான்” என்று விக்ரம் வாழ்வில் முதல்முறை தடுமாற்றதுடன் ஒரு விஷயத்தைக் கூற, விஜயவர்தன்-ரஞ்சனி இருவரின் தண்டுவடமும் சில்லிட்டுப் போக, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அபிமன்யு என்று அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், உத்ராவே சென்றிருப்பாள் என்று யாரும் நினைக்கவில்லை.

சிம்மவர்ம பூபதி, “என்ன பண்ணலாம் விக்ரம்.. ஏதாவது பண்ணு” என்று கரகரத்த குரலில் கூற, அவரின் குரலில் வலியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன், “அபிமன்யுவே வந்தா தான் உண்டு தாத்தா” என்று கூறி முடிக்கவும், அபிமன்யுவின் புகாடி சிரான் வெளியே வந்து உறுமிக் கொண்டு நிற்கவும் அனைவரின் இதயத் துடிப்பும் நின்று நின்று துடிக்கத் துவங்கியது.

வீட்டிற்குள் நுழைந்த அபிமன்யு ஒன்றும் நடவாதது போல உள்ளே வர, ஆவேசத்துடன் எழுந்த விக்ரம், அபிமன்யுவிடம் அனலாய் சிவந்திருந்த விழிகளுடன் செல்ல, விக்ரமின் ஆத்திர நடையில் ஸ்தம்பித்து போன அனைவரும், “விக்ரம்!!!” என்று கத்த, அதெல்லாம் அவன் செவியை எட்டுமா?

அபிமன்யவின் அருகே சென்றவன், அவன் நெஞ்சில் குத்துவது போல கரத்தை ஆக்ரோஷத்துடன் வீச, எளிதில் சகோதரனின் கரத்தை வெற்றிப் புன்னகை வீச பிடித்தவனின், நெஞ்சில், ரோடியமும் பல்லாடியமும் ஆன சங்கிலியில் இருந்த வேங்கையும், விக்ரமின் கரத்தில் இருந்த ரோடியமும் பல்லாடியமும் ஆன ப்ரேஸ்லெட்டின் வேங்கையும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள, “அபி!!!”, “விக்ரம்!!!” என்று ஒவ்வொருவரின் கூவல்களும் வீட்டை தாண்டி விண்ணை அடைந்தது.

இருவரிடமும் வந்த சிம்மவர்ம பூபதி, “உங்க இரண்டு பேரோட சண்டையை அப்புறம் வச்சுக்கங்க.. உத்ரா எங்க?” என்று வினவ, விக்ரமின் கரத்தை விட்ட அபிமன்யு, நீரஜாவிடம் நேராய் சென்று ஒரு பத்திரத்தைக் கொடுத்து,

“உங்களுக்கு சேர வேண்டிய உங்க ப்ராபர்ட்டி” என்றிட, யாரும் எதிர்பாராத வகையில் அந்த மாளிகை வீடே கிடுகிடுக்கும் வண்ணம், “அபி” என்று தன் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் ஒன்று திரட்டிய நீரஜா, “உத்ரா எங்க?” என்று கர்ஜிக்க,

“நீங்க இவ்வளவு கேள்வி கேக்க தேவையே இல்ல அத்தை.. உங்களை ஏமாத்திட்டு நடுவுல விட்டுட்டு போனவங்க பொண்ணுக்காக நீங்க இவ்வளவு எமோஷன் ஆகவும் தேவை இல்ல” என்று கூலாக சொன்னவனுக்குள் கோடி உணர்வுகள் கொப்பளித்து கொண்டிருந்தது.

தன் அத்தையை தனிமையில் விட்டுச் சென்று தவிக்க விட்டு, திருமண வாழ்வையே வெறுக்க வைத்தவர்களை இன்று உயிரோடு விட்டிருக்கிறான் என்றால், அது இமையரசியின் உடல் நலத்தைக் கருதி மட்டுமே.

அத்தையின் வயதில் இருக்கும் தன் அன்னையும், சித்தியும் கணவன் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு அவனின் மனமோ ஒரு வயது வந்த பின் சிலதை நினைத்து, நீரஜாவிற்காக மிகுந்த வருத்தத்திற்கு சென்ற நாட்கள் உண்டு.

ஆம்! ஆண் என்கின்ற வாசனையே வாழ்வில் படாது வாழ்ந்து வரும் கன்னி அவர்! வாழ்வில் பல இன்பங்களை இழந்திருக்கின்றார்! கலவி என்பதை தாண்டி முழுமையடையாத குடும்பம்!

அபிமன்யுவின் பதிலில், ஆத்திரத்தை கட்டுப்படுத்தியவர், “உத்ரா எங்க அபி?” மீண்டும் வினவ,

“அவளை பத்தி உங்களுக்கு கவலை இல்ல அத்தை” என்றவன் நகர முற்பட, அண்ணன் மகனை நகர விடாது அவர் அவன் கரம் பிடிக்க, அபிமன்யுவின் கரத்தில் பொட்டு பொட்டாய் நீர்மணிகள் விழ, நீரஜாவின் விழிகளில் இருந்து கண்ணீர் விழ, உதடுகள் துடிக்க, அழத் துவங்கியவரின் வதனத்தைக் கண்டு,

அஞ்சா நெஞ்சம் கொண்ட அந்த வீட்டின் மூத்த இளவரசனுக்கு, பலர் பிசுனஸில் இவன் மனிதனே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்தையும் தன் அதிகாரத்திற்குள் வைத்து இருந்தவனின் உள்ளம், நீரஜாவின் கண்ணீரிலும் உடைந்தது, மற்றொன்று ஒன்றையும் இணைத்து பார்த்ததிலும் வேங்கையின் கொதித்துக் கொண்டிருந்த இதயம், வெட்டு வெட்டாகத் துடித்தது.

அபிமன்யுவின் விழிகளையே அழுகையுடன் பார்த்தவர், தன் நெஞ்சின் மேல் ஒரு கரம் வைத்து, அழுகை கதறலாக உருமாற, “உத்ரா என் பொண்ணு அபி.. நான் பத்து மாசம் சுமந்து பெத்த என்னோட பொண்ணு” என்று அவர் கூறவும், வீட்டிற்குள் அரண்டு அடித்து பிடித்து ஆரவ் ஓடி வரவும் சரியா இருந்தது.

சற்று நேரத்திற்கு முன் தன் முன்னே கதறிய உத்ராவின் வதனத்தை எங்கேயோ பார்த்து போலிருந்தது இப்போது அபிமன்யுவுக்கு புத்தியில் அடிக்க, ஆரவ்,

“ஸார், உத்ரா மேடமை யாரோ கடத்திட்டாங்க” என்றிட, அனைவரும் அரண்டு போய் பேரதிர்ச்சி தாக்கிய உணர்வில், துடிதுடித்து எழ, அதீத அதிர்ச்சி சுழற்றியடிக்க, உயிர் வரை ஏதோ சென்று நீரஜாவுக்குள் வீறிட,

அபிமன்யுவின் சட்டையை பிடித்தவர், “என் பொண்ணு எங்க?” என்று இதயத்தின் வலியோடு தன் அச்சத்தின் அளவையும், விதியின் மேலிருந்த கோபத்தையும் ஒன்று திரட்டி அனைவரின் உயிரும் அதிர்ந்து கலங்கும் வண்ணம் வன பத்ரகாளியாய் கத்தினார்.

You’re the king of game!

But I’m, The queen,

was your checkmate abhimanyu!

– Uthra

முதல் பாகம் முடிவடைந்தது…

error: Content is protected !!