ஆட்டம்-33

ஆட்டம்-33

ஆட்டம்-33

கீழே விழுந்து கண்ணா பின்னாவென சிதறிய உணவையும், பெண்ணவள் ஆத்திரத்தில் தட்டிவிட்ட தட்டு இன்னமும் தரையில் அதிர்வுடன் சுற்றிக் கொண்டே இருப்பதையும் என அதையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் விழிகள், தட்டு தரையில் சத்தமின்றி சுற்றிமுடிக்கும் வரை இருந்து, பின் அழுத்தமாக மூடித் திறந்தது.

சுனாமியாய் எழுந்த கோபத்தினை தன்னவளின் உடல் நிலைக்காக சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தவன், தலையை மேலே நோக்கி உயர்த்தி தன் உஷ்ணத்தினை உதட்டை குவித்து ஊதி, நிதானத்திற்கு கொண்டு வர முயன்றவன் தன் வலது பெருவிரலால் இடது புருவத்தை நீவ, உத்ராவிற்கு அத்தனை கோபத்திலும் இதயம் அடைத்தது போன்று உள்ளுக்குள் திக்கென்று இருந்தது.

அவன் இப்படி செய்தாலே ஏதாவது பெரிய குண்டாக இருக்கும் என்று அவனுடன் இருந்த அந்த ஐந்து நாட்களில் அறிந்திருந்தாள்.

சற்று தலை சாய்த்து புருவத்தை நீவி, அவளை விழியை மட்டும் உயர்த்திப் பார்த்தவன், “நெக்ஸ்ட் மன்த் பிப்டின்த் நல்ல நாளாம்.. கல்யாணம் பண்ணிக்கலாம் உத்ரா” ஆளுமை நிறைந்த நிமிர்வுடன், திருமணம் நடந்தே தீரும் என்ற உறுதியுடன் கூறி, அவளருகே அமர, வெடுக்கென நகர்ந்து அமர முயன்றவளை பிடித்து தன் அருகேயே அமர வைத்தவன், அவளின் தாடையை பற்றி நிமிர்த்த, அவனை முறைத்தவளின் விழிகள் உச்சக்கட்ட ஆத்திரத்தில் சிவந்து கலங்க, “சாப்பிடு” என்றான்.

“முடியாது” என்று இறுக்கமாக கூறியவள், தன் தோளை பிடித்திருந்த அவனின் ஒரு கரத்தை தன் நகங்களை வைத்து அழுத்த, அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். கீறி கிழித்துவிடலாம் என்கின்ற அளவிற்கு கோபம். ஆனால், காட்ட முடியவில்லை.

அவனின் கரத்தை விட்டவள், “என்னால நினைச்சாலும் ஹர்ட் பண்ணவே முடியல.. ஆனா, நீங்..” என்றவள் அவனது தோளிலியே தலை சாய்க்க, மீண்டும் பையில் இருந்த டிபன் பாக்ஸை தன்னவளின் தலையை பிடித்தபடியே ஒற்றை கரத்தால் எடுத்தவன், “சாப்பிடறியா?” என்றான்.

“ம்கூம்” என்று அவனின் தோளில் சாய்ந்தபடியே இடமும் வலமும் தலையாட்டியவளை, தாங்கியபடியே புன்னகைத்தவன்,

“அங்க இருந்தப்ப ஊட்டிவிட்ட மாதிரி ஊட்டி விடணுமா?” குரலில் விஷமம் வழிய கேட்டவனிடம் இருந்து அதிர்ந்து விலகியவளை, சட்டென தன்னை விட்டு இன்ச் நகராது பிடித்தவன்,

“இப்படியே போனா பின்னாடி விழுந்திருவ உத்ரா.. ட்ரிப்ஸ் வேற இறங்கிட்டு இருக்கு.. எதுவும் பண்ண மாட்டேன்.. பக்கத்துல வா” என்றழைக்க, “நீங்க போங்க.. எனக்கு உங்களை பாக்க பாக்க ஆத்திரமா வருது.. அசிங்கமா இருக்கு என்னை நினைச்சா.. உங்களை எவ்வளவு லவ் பண்ணியிருந்தா உங்ககூட வந்திருப்பேன்.. ஆனா நீங்க அதுக்கு எல்லாம் சேத்தி வச்சு என்ன பண்ணீங்க?” என்றவள், “எனக்கு உங்க முகத்தை பாக்க கூட பிடிக்கல” என்றாள் வேதனையை சுமந்த குரலில்.

தன்னவளின் சொற்களும், உள்ளுக்குள் அவள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையும் ஆடவணின் உள்ளத்தில் இருந்து அவனின் உயிரை எடுக்க, “சரி இருக்கட்டும் உத்ரா.. பர்ஸ்ட் சாப்பிடு.. எனக்காக இல்ல.. உனக்காக சமைச்சு எடுத்திட்டு வந்தவங்களுக்காகவது சாப்பிடு..” என்றவனின் சொற்கள் வேலை செய்ய, பையில் இருந்த தட்டை எடுத்தவளுக்கு அவன் உதவி செய்ய முனைய,

“பெட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு பேக்.. என் கைக்கு நல்லாவே எட்டும்.. உங்க பொய்யான அக்கறை ஒண்ணும் எனக்கு தேவையில்ல” என்று காட்டுக் கத்தல் கத்தியவள், தானே எடுத்து வைத்து உண்ண, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவளின் அபிமன்யுவிற்கு அவளின் மனம் புரிந்தது.

இயலாமையிலும், நடந்த நிகழ்வின் அதிர்ச்சியிலும் தன் மேல் அனைத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு நன்கு புரிந்தது.

சாப்பிட்டு முடித்தவளிடம் இருந்து தட்டை வாங்கியவன் அவளிடம் பௌலை (Bowl) நீட்ட, அபிமன்யுவை வாய்க்குள் முணுமுணுத்து திட்டியபடியே கைகளை கழுவியவளின் கரத்தை, அவன் தன் கரத்திற்குள் வைக்க, “ப்ளீஸ்! என்னை தொடாதீங்க” என்று எரிச்சலுடன் கீறிச்சிட்டாள்.

மேலும் அவளது கரத்தை தன் கரத்திற்குள் இறுக்கி வைத்தவன், “ஒரு கதை சொல்லட்டா?” என்று கேட்க, “அந்த மூட்ல எல்லாம் நான் இல்ல சரியா.. தயவு செஞ்சு வெளிய போங்க” என்றாள் அபிமன்யுவின் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காது எங்கோ பார்த்தபடி.

‘எனக்கு உங்க கூடவே இருந்து, டைம் ஸ்பென்ட் பண்ணனும் போல இருக்கு.. வீட்டுக்கு போயே ஆகணுமா?’ என்று கேட்ட உத்ராவுடன் இப்போது இருந்த உத்ராவை ஒப்பிட்டு பார்த்தான்.

நாணத்தில் அப்போது தவித்து தன்னுள் சிக்குண்ட இதழ்களையும், இப்போது அழத் தயாராய் துடித்துக் கொண்டிருக்கும் இதழ்களையும் பார்த்தவனுக்கு, தன் உள்ளத்தினை பிடுங்கி யாரோ எரிவது போல இருந்தது.

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “அன்னைக்கு ஒரு தடவை என்னை ஹிட்லர்னு திலோத்தமைகிட்ட சொன்ன நியாபகம் இருக்கா உத்ரா?” என்று கேட்க அவனின் கேள்வி செவியில் விழுந்தாலும், பெண்ணவள் திரும்பிப் பார்க்கவில்லை.

கல்லாய் இறுகியிருந்தது அவளின் காதலை சுமந்திருந்த மலர் குவியலான இதயம்!

“ஹிட்லர்னு சொன்னாலே பல பேருக்கு இங்க நியாபகம் வர்றது அவர் ஒரு சர்வாதிகாரி, அறுபது லட்சம் யூதர்களை கொன்ன ஒரு அரக்கன் என்பது அதுமட்டும் தான்.. ஆனா, ஒரு மனுஷனை அந்தளவுக்கு ஒண்ணு மாத்துதுனா அவனுக்கு நடந்த விஷயம் எவ்வளவு பெருசா இருக்கும்னு இங்க யாரும் யோசிக்க மாட்டாங்க.. அவரு அப்படி மாறினதுக்கு முதல் முதல் காரணம் வெளிய யாரோ கிடையாது.. ஹிட்லரோட சொந்த அப்பா”

“ஹிட்லரோட அப்பா ஹிட்லரை சின்ன வயசுல இருந்து அடிச்சுட்டே இருப்பாராம்.. அதாவது நைட் குடிச்சிட்டு வந்து தூங்கிட்டு இருக்க சின்ன வயசான ஹிட்லரை அடிச்சு உதைச்சு எழுப்புவாராம்.. அதுவே அவருக்கு அப்பா சொல்றதை இனி கேக்கவே கூடாதுனு மனசுல விதைச்சிருக்கு.. அது மட்டும் இல்லாம யூதர்களை ஹிட்லருக்கு பிடிக்காம போன முதல் காரணம் ஹிட்லரோட அப்பாவோட பிறப்பு”

“ஹிட்லரோட அப்பா பிறந்ததுல ஒரு மர்மம் இருந்துச்சு.. ஹிட்லரோட தந்தை வழி பாட்டி ஒரு யூதரோட வீட்டுல வேலை பாத்துட்டு இருந்தப்ப தான் கர்ப்பம் ஆகியிருக்காங்க.. அதனால அந்த வீட்டு எஜமானின்னு சொல்லப்படறவங்க, அவங்களை வீட்டை விட்டே துரத்திட்டாங்க.. ஊரைவிட்டும்.. திருமணம் ஆகாமையே குழந்தையையும் பெத்தெடுத்தாங்க..”

“அதாவது தன் அப்பாவோட பிறப்புக்கு காரணமான யூதன் மேல ஏற்பட்ட வெறுப்பு தான்,,, ஹிட்லர் அவங்களை இன்செக்ட்ஸை (insects) கொல்ற மாதிரி கொன்னதுக்கு காரணம்.. இன்னொரு ரீசன் ஜெர்மனி பிரியறதுக்கு யூதர்ஸ் தான் காரணம்னு ஹிட்லர் நம்பினாரு.. ஆஸ்திரிய மக்கள் மட்டும் ஏழையா வாழ்ந்து, யூதர்கள் பணக்காரங்களா வாழ்றது அவரை வெறியாக்கி இருக்கு.. அதனால தான் அவரு தன் மக்களோட இந்த நிலையை மாத்த நினைச்சு யூதர்களை பழி வாங்குனாரு.. அதோட ரிசல்ட்ஸ் தான் யூகர்கள் படுகொலை” என்று முழு கதையையும் சொல்லி முடித்தவன் உத்ராவை ஆழ்ந்து பார்க்க,

“அதுனால தான் இந்த ஹிட்லரான சித்தார்த் அபிமன்யு, உத்ராவை உயிரோட கொன்னுட்டு வந்தாரா?” என்றவளின் கேள்வி அபிமன்யுவின் மனதை குறிபார்த்து அடிக்க, அவனின் காதலை சுமந்திருந்த நெஞ்சம் தன்னவளின் கேள்வியில் அடிப்பட்டுக் கொண்டிருந்தது.

“தப்பு உத்ரா.. நான் ஹிட்லர்தான்.. அப்பாவும், சித்தப்பாவும் பிரிஞ்சதுக்கு காரணம் நான் வர்தன் மாமான்னு தான் நினைச்சேன்.. அவரை யூதனா நினைச்சேன்.. ஆனா, இங்க யூதனே வேற உத்ரா.. நீயும் வேற..” என்றவன், “உன் பிறப்பே வேறடி..” என்று அவளின் அருகே நெருங்கி அமர்ந்தவன்,

“யூ ஆர் நாட் உத்ரா விஜயவர்தன்.. யூ ஆர் உத்ரா விஜய் (You’re not Uthra Vijayavarthan.. You’re Uthra Vijay) என்றவனை அவள் புரியாது பார்க்க,

“உன் வளத்தவங்க தான் ரஞ்சனி.. ஆனா, உன்னை பெத்தது அவங்க இல்லடி.. உன் அப்பா பேரு விஜய்” என்றவனை நம்பாது பார்த்தவள், “பொய் சொல்லாதீங்க” என்றாள் குரல்வளை நடுங்க.

“எனக்கு அதுக்கு அவசியம் இல்ல உத்ரா.. நீரஜா தான் உன்னை பெத்த அம்மா” என்று இத்தனை நாட்களாய் அவள் நினைத்திடாத, ஏன் யோசித்துக் கூடப் பார்த்திடாத முடிச்சை அவிழ்க்க, மென் பெண்ணவளின் மனதில் இரண்டாய் பிளந்து, உணர்வுகள் பூதாகரமாக சுனாமியாய் எழ, அவளுக்கு பேசக் கூட இயலவில்லை.

உள்ளத்தில் அனைத்தும் பொங்கி எழுந்து கொண்டிருக்க, அபிமன்யுவை பார்த்தவள், “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சு தான் இண்டியா வந்தேன்.. ஆனா..” என்று சின்னக்குரலில் கேட்டவள், ஆடவனின் தோளிலேயே மீண்டும் சாய,

“உன் அம்மா அனுபவிச்சதுக்கு முன்னாடி நீ அனுபவிச்சது எல்லாம் ஒண்ணுமே இல்லடி..” என்றவன் கடந்த காலத்தை பற்றி சொல்ல உத்ராவின் உடல் நடுங்கியது.

இறுதியாக தான் பிறந்ததை பற்றி அபிமன்யு அவளிடம் கூற, ‘இப்படி ஒரு பிறப்பா?’ என்று நினைத்தவளுக்கு, ஒன்றுமே புரியவில்லை என்றுதான் கூற வேண்டும். குழப்பமாக இருந்தது. இதைப்பற்றி படித்திருக்கிறாள் ஒரு முறை. ஆனால், தானே அப்படி பிறந்தவள் தான் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அவளது விழிகள் அயர்வில் மெல்ல மெல்ல திறந்த மூட, காரிகையவளின் நீண்டு வளர்ந்திருந்த இமை மூடிகள் அபிமன்யுவின் கழுத்தில் உரசி கூச, “என்ன யோசிக்கற?” என்றவனுக்கு அவள் பதிலளிக்கவில்லை. தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் சிந்தனை என்னவாக இருக்கும் என்று யூகித்த அந்த ஜாம்பவானின் உள்ளம் தன்னவளை பூவைப் போல அணைத்து, தான் சிறிய வயதில் விஜயவர்தன் நீரஜாவின் அறைக்குள் செல்வதை பார்த்தது, இருவரும் கரும்பு காட்டிற்குள் செல்வதை பார்த்து என்று கூறியவன், “உத்ரா! அத்தை விஜய் விஜய்னு அழுதது என் மனசுல பதிஞ்சிடுச்சு.. அவங்க விஜய்னு அழுததை நான் வர்தன் மாமாவை தான்னு முடிவு பண்ணி கோபமா இருந்தேன்.. நீ அவங்க அழுததை பாத்திருந்த இப்படி கோவப்பட மாட்டடி..” என்றவனை கழுத்தை மட்டும் பின்னால் சாய்த்து பார்த்தவள்,

“நான் அழுதது தெரியுமா.. ஒருத்தன் என் ட்ரெஸை நான் கான்ஷியஸா இருக்கும் போதே ஆறு பேர் முன்னாடி ரிமூவ் பண்ணது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..” என்று கேட்டுக் கொண்டிருக்கையிலேயே மகளை பார்க்க உள்ளே நுழைந்த நீரஜா, அபிமன்யுவை ஒரு பார்வை பார்க்க அவனோ தோளை உலுக்கிக் கொண்டு தன்னவளை மேலும் தாங்கிக் கொண்டான்.

சட்டென அபிமன்யுவை நீரஜாவால், ‘வெளியே போ’ என்றும் சொல்ல முடியவில்லை.

நறுமுகையும் உள்ளே வர, “நறுமுகை! எல்லாரையும் உள்ள வரசொல்லு” என்று தனது வேங்கைக் குரலில் கட்டளையிட, நீரஜா மகளின் அருகே வர, அபிமன்யுவின் கழுத்தைப் பார்த்தபடி தலை சாய்த்திருந்த உத்ரா, இப்போது சப்தத்தில் மறுபக்கம் தலையை திருப்ப, அன்னை மகள் இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.

நீரஜாவை பார்த்தவுடன் கோபமும், விசும்பலும் எட்டிப் பார்க்க, முயன்று அனைத்தையும் அடக்கி குரலில் தேக்கியவள், அவரை பார்த்து ஒரு கரம் நீட்ட, அதிலேயே தெரிந்து போனது அவளைப் பெற்ற அன்னைக்கு மகளுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்று.

தன் விழியையே பார்த்திருந்த அன்னையிடம், “என்கிட்ட க்ளோஸ் ஆகிடுவீங்கன்னு பயந்துதான், என்னை திட்டிட்டே இருந்தீங்களா ஹாஸ்பிடல்ல?” என்று கேட்டதுதான் தாமதம், மகளின் கரத்தைப் பற்றிய நீரஜா, மகளை அணைத்துக் கொள்ள, அவரின் கரம் அபிமன்யுவையும் தான் அவரறியாது சுற்றியிருந்தது.

உத்ராவின் கரம் அன்னையின் கரத்தை இறுக பற்றியிருக்க, “எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டீங்க.. அப்பாவும் இல்ல.. என்னையும் கலைச்சிட்டு உங்களுக்குனு ஒரு வாழ்க்கையை சூஸ் பண்ணி இருக்கலாம்ல..” என்று மெது மெதுவாக கேட்டவளை விக்கித்து போய் பார்த்த நீரஜா,

“அதை நீ சொல்லாத.. எனக்கு தெரியும்” என்று மகள் சொன்ன வார்த்தைகளின் சீற்றம் தாளாது அவர் அவளை அதட்ட, அதில் தன்னவனின் தோளில் சாய்ந்திருந்தபடியே குறுஞ்சிரிப்பு புரிந்தவள்,

“என்ன ஹாஸ்பிடல் சேர்மேனா மறுபடியும் மாறிட்டீங்களா?” என்று கேலி செய்ய, மகளின் கரத்தில் செல்லமாய் அடித்தவர், “பின்ன உன்னை எவ்வளவு ஆசையா சுமந்து கஷ்டப்பட்டு பெத்தேன்.. நீ என்னடானா கலைச்சிடலாம்னு ஈசியா சொல்ற?” என்று கேட்டவர், அவளின் அருகே குனிந்து,

“அம்.. என் மேல கோபம் இல்லையே” என்று வற்றிப் போறிருந்த மகளின் கன்னம் வருடி கேட்க, ‘இல்லை’ என்பது போல தலையாட்டியவள், “அம்மா மேல கோபம் இல்ல” என்று முடித்திருந்தாள்.

அபிமன்யு இன்னமும் அவளை அணைத்திருப்பதை கண்ட நீரஜா, மகளிடம், “நீ ரெஸ்ட் எடு” என்றிட, அத்தையை தலையை மட்டும் திருப்பி கேலி புன்னகையுடன் பார்த்த அபிமன்யு, அவர் ஏன் எதற்கு சொல்கிறார் என்பதை உணர்ந்து,

“அல்ரெடி ரெஸ்ட் எடுத்திட்டு தானே இருக்கா” என்றவனை சுட்டுப் பொசுக்கிவிடுவது போல நீரஜா பார்த்து வைக்க, அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

உத்ரா அபிமன்யுவின் மேல் சாய்ந்திருப்பதையும் அபிமன்யு அவளைச் சுற்றி கை போட்டு, தன் மேல் தாங்கியிருப்பதையும் பார்த்த அனைவருக்கும் திக்கென்று இருக்க, அப்போது தான் அனைவரின் பார்வையையும் உத்ரா உணர்ந்தவளாக, அனைத்தையும் மறந்து தன்னைக் காயப்படுத்தியவனின் மீதே சாய்ந்திருப்பதை புரிந்து, சடாரென அபிமன்யுவிடம் இருந்து விலகியளின் அவசரச் செயலில் அனைவரும் பயந்து போக, சலைன் போட்ட கரத்தினை அவளவன் அசையாது பிடித்திருந்தான்.

அவனை முறைத்தவள், அவனிடம் இருந்து முகத்தினை திருப்பிக் கொள்ள, சிம்மவர்ம பூபதியை பார்த்தவன், “தாத்தா நெக்ஸ்ட் மன்த் பிப்டின்த் எங்க கல்யாணம்.. நிச்சயதார்த்தம் இதெல்லாம் வேணாம்.. எல்லாத்தையும் ஸ்ட்ரெயிட்டா வச்சுக்கலாம்” என்றனின் பேச்சில் கோபம் பெண்ணவளின் தலையை வெடித்துச் சிதறிக் கொண்டு விண்ணை எட்ட,

“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று கத்திய உத்ராவின் தோளில் நீரஜா கரத்தை வைத்து அடக்கி, அபிமன்யுவை அழுத்தமாக நோக்கியவர்,

“அபி அவளை கம்பல் பண்ணாத” என்று அன்னையாய் கர்ஜிக்க, “ஓகே பண்ணல.. பட் அடுத்து எல்லாருக்கும் என்ன பண்றதா ஐடியா?” என்று இகழ்ச்சியுடன் கேட்டவனை, வெறுப்புடன் பார்த்த உத்ராவின் விழிகள்,

“என்ன வேணாலும் பண்ணுவேன்.. வேற யாராவதை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்..” என்று அவள் முடிக்கவில்லை, அபிமன்யுவின் அதி உக்கிரப் பார்வையில் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவளுக்கு தடைபட்டு போக, அவளின் தண்டுவடத்தில் தொடங்கிய மின்சாரம் மூளையை தாக்கியது போல சில்லிட்டுப் போய்விட்டாள் மங்கையவள்.

தனக்கு யாரால் இப்போது உதவ முடியும் என்று உணர்ந்தவள் அங்கு கைகளை கட்டிக் கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விக்ரமை பார்த்து, “மாமா! எனக்கு இந்த கல்யாணம் வேணாம்.. சொல்லுங்க” என்று பரிதாபமாக கேட்டவளை பார்வையாலேயே ஒதுக்கி நிறுத்திய விக்ரம்,

“நான் சொன்னதை எல்லாம் முன்னாடியே கேட்டிருந்தா.. இப்ப நீ கேக்கறதை பண்ணியிருப்பேன்” என்றவன், ‘என்னை மீறியதற்கு அனுபவி’ என்பது போல வேறெங்கோ பார்த்துக் கொண்டு நிற்க, விஜயவர்தனை அடுத்து பார்த்தாள் அவள். அவளை வளர்த்தவராய், தன் மகளாகவே நினைத்து நெஞ்சில் சுமந்தவருக்கு மகளின் கெஞ்சும் பார்வையில் மானசீகமாக அவளுக்கா மனம் துடிக்க,

அபிமன்யுவை பார்த்தவர், “அவ இஷ்டம் இல்லாம எதையும் நான் நடக்க விடமாட்டேன்” என்று மறுவிநாடியே கூற, அபிமன்யுவின் விழிகள் ரஞ்சனியை பார்க்க, அவர் ஒரு முடிவை எடுத்தவராக,

“உத்ராவை கொடுக்க எனக்கு முழு சம்மதம்” என்றவரின் வார்த்தைகளில் அனைவரும், அவரா இதை தன் வாயால் கூறியது என்று யோசித்தவர்களுக்கு தலை கிறுகிறுத்தது.

உத்ராவிற்காக இந்தியா சர்ப்ரைஸாக வந்தவர்கள், மகளை காணவில்லை என்றதும், அபிமன்யுவை அதிகமாகத் திட்டியதும் ரஞ்சனி அவர்தான். இன்று திருமணத்திற்கு அனைவருக்கு முன்பும் சம்மதம் தெரிவிப்பதும் அவர்தான்.

மனைவியின் வார்த்தைகளில் பற்களைக் கோபத்தில் கடித்த விஜயவர்தன் ஏதோ திட்ட வாயெடுக்கும் முன், “அவ நான் பெத்த பொண்ணு.. எனக்கு இஷ்டம் இல்ல” நீரஜா கரத்தில் இருந்த ஸ்டெத்தஸ்கோப்பை இறுக்கிப் பிடித்தபடி தோழியிடம் யுத்தத்திற்கு நிற்க,

“அவ நான் வளத்த பொண்ணு” என்றார் அவரும் பதிலுக்கு.

இருவரின் பேச்சையும் அபிமன்யு சுவாரஸ்யமான நின்று பார்த்துக் கொண்டிருக்க, அதியரன் பூபதி, “கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என்று அதட்டியவர், “சும்மா புள்ளையை பந்து மாதிரி தூக்கி போட்டு விளையாடிட்டு இருக்கீங்க” என்று இருவரையும் அவர் திட்டிவிட்டு,

அரிமா பூபதியிடம், “அண்ணா! என்ன அமைதியா நிக்கறீங்க?” என்று கேட்க, மகனையே பார்த்துக் கொண்டிருந்தவர்,

“அபி!” என்றிட, “சொல்லுங்க” என்றான் அவரின் ஆணவம் மிகுந்த ஒரே புதல்வன்.

“உத்ராவை மீறி அவ சம்மதத்தை மீறி நடக்கணுமானு யோசி” என்றிட, அபிமன்யுவின் விழிகள் உத்ராவை சந்தித்து மீண்டு தந்தையிடம், “அப்பா! என்னை பிடிக்கவே இல்லைனா.. அடுத்த முகூர்த்தத்துல” என்று நிறுத்தியவன், உத்ராவை பார்க்க, அவளின் இதழ்களோ கேலியில் வளைந்தது.

‘வேறு ஒருவனை திருமணம் செய்யச் சொல்லப் போகிறான்.. அதுதானே’ என்று எள்ளலாய் நினைத்தாள் அவள்.

அபிமன்யுவின் விபரீதங்கள் பற்றி இன்னும் அறியாத சிறு மான் குட்டி அல்லவா அவள்!

உத்ராவை ஒரு கணம் பார்த்தவன், “அடுத்த முகூர்த்தத்துல எனக்கு ஒரு பொண்ணை பாருங்க.. ஐம் ரெடி.. நான் ஒண்ணும் ஒருத்திக்காகவே வெயிட் பண்ணிட்டு இருக்க முட்டாள் இல்ல.. எனக்கு தர்ட்டி இயர்ஸ் ஆகிட்டுச்சு” என்றவனின் பேச்சில் உத்ராவின் நாடி நரம்புகளில் எல்லாம் ரத்தம் கொப்பளித்து வெடித்துச் சிதறி உடல் முழுதும் ஆத்திரம் பரவ, அபிமன்யுவின் விழிகள் திலோத்தமையுடன் நின்றிருந்த மித்ராவை கண்டு கண் சிமிட்ட, சிறு பெண்ணான மித்ராவால் கூட அபிமன்யு ஆடும் விளையாட்டை புரிந்து கொள்ள முடிந்தது.

அவளும் தன் இரு விழிகளையும் மாமனை பார்த்து சில்ஷமாய் சிமிட்ட, இருவரின் செயலிலும் வெகுண்டு எழுந்த உத்ரா, பத்ரகாளியாய் அருகில் இருந்த தட்டை எடுத்து தங்கையின் மீது எறிய, அது சென்றது என்னவோ திலோத்தமையின் மீது.

“ஐயோ” என்று நூலளவில் தப்பித்தவள், சுவரோடு ஒட்டி அச்சம் கொண்டு நின்றுகொள்ள, மித்ராவை கொலை வெறியுடன் பார்த்து ஒற்றை விரலை உயர்த்தியவள், ரௌத்திரத்துடன் “கொன்னுடுவேன்டி உன்னை” என்று மிரட்ட, மித்ராவோ,

“நீதான் வேணாம்னு சொல்லிட்டியே” என்றாள் இடக்காக.

அதில் அபிமன்யு சிரிப்பை அடக்கியபடி விஜயவர்தனை பார்த்து, “இதை விட உங்களுக்கு லைவ் எக்ஸாம்பிள் காட்ட முடியாதுன்னு நினைக்கறேன்” என்று கர்வமாய் கூறிவிட்டு உத்ராவை பார்த்து நக்கலாய் நளினத்துடன் புன்னகைக்க,

“போடா!!!” என்று ஆத்திரத்துடன் அந்த அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அதிர்ந்து பறக்கும் வண்ணம் கத்தியவளின் செயலில், தன்னவளின் மணிக்கட்டை அபிமன்யு பற்ற,

அனைவரும் அவள் அபிமன்யுவை, ‘டா’ போட்டதில் வாயில் கையை வைத்துவிட, இமையரசி கன்னத்தில் கை வைத்துக் கொள்ள, விக்ரம் மட்டும் பக்கென்று சிரித்துவிட, சகோதரனை திரும்பிப் பார்த்த அபிமன்யு விக்ரமை அழுத்தமாக சினத்துடன் பார்க்க, அவனோ தெனாவெட்டும் திமிருமாய் சுவற்றில் ஒரு கால் ஊன்றி வைத்து அபிமன்யுவை பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரின் பார்வைகளும் அனலுடன் உரசி மீள, தன்னவளின் கரம் நடுங்குவதை உணர்ந்த அபிமன்யுவின் பேரழகிய வதனம், விநாடியில் மென்மையை தத்தெடுத்து அத்தை மகளை பார்த்து, “நீ என்னை பர்ஸ்ட் டைம் போடான்னு சொன்னப்பவும் உன் கையை இப்படி தான் பிடிச்சேன்டி.. அப்பவும் உன் கை ஷிவர் ஆச்சு.. அப்ப நீ ட்வெல்வ் நான் ட்வென்ட்டி.. அதை நீயும் உன் லைஃப்ல மறக்க மாட்ட.. ஏன்னா அப்பதான் நீ பெரிய பொண்ணு ஆன..

வாழ்க்கைல பர்ஸ்ட் டைம் என் ஹார்ட் பீட் என்னை மீறி அன்னைக்கு தான் அப்படி துடிச்சுது.. என்னன்னே தெரியாத ஃபீலை அன்னைக்கு கொடுத்த.. இப்பவும் நீ போடான்னு சொல்லி உன் கையை பிடிச்சிருக்கேன் உத்ரா.. இப்பவும் அதே மாதிரி ஹார்ட் பீட் ரெய்ஸ் ஆகுது.. ஆனா, அன்னைக்கு உன்னை விட்ட மாதிரி இப்ப விடமாட்டேன்” என்றவன், பெண்ணவளை நெருங்கி அவளது பால் நெற்றியில் முத்தமிட, பெண்ணவளின் அதரங்கள் துடித்து அடங்க, இமைகள் தாமாக மூடிக் கொண்டன.

error: Content is protected !!