இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 20

வைஷுவை வீட்டின் காணமல் மிகவும் பயந்துவிட்டான் ஸ்ரீ. அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

“வைஷு எங்கடி போன?” வாய் விட்டு புலம்பினான் ஸ்ரீ. அவள் இல்லாத இந்த சில நிமிடங்களை கூட அவனால் நிம்மதியாக கழிக்க முடியவில்லை. பலவாறான எண்ணம் அவன் மனதை சூழ்ந்தது.

‘அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையா? அதுதான் சென்றுவிட்டாளா? என்னுடைய வாழ்க்கை முறை பிடிக்கவில்லையா? நான் வாழும் முறை பிடிக்கவில்லையா?’ அவனால் தாங்கவே முடியவில்லை.

மனதும், தலையும் பாரமாய் இருக்க, தலையை தாங்கி அப்படியே அமர்ந்து விட்டான் ஸ்ரீ.

‘கால் வேற பயங்கரமா வலிக்குமே எங்கடி போன நீ’ இவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

‘இந்த காலை வேளை எங்கு போனாள்?’ அவள் எங்கு சென்றிருப்பாள் என்று வெளியில் யாரிடமாவது கேட்கலாம் என்றால் அவனால் கேட்கவே முடியவில்லை.

கேட்டு அதுவே பல கேள்விகளுக்கு இடம் வைக்கும். இப்படியான கேள்விகள் அவனுக்கு பிடிக்காதவை.

‘இங்கு அருகில் எங்காவது சென்றிருப்பாளோ? போய் பார்க்கலாமா?’ என எண்ணி இவன் எழுந்திருக்கும் வேளை,

 “ஏன் அண்ணி இந்த கால் வலியோட நீங்க கோவிலுக்கு அவசியம் போயிருக்கணுமா?” கடிந்தபடி அவளை அழைத்து வந்துக் கொண்டிருந்தாள் ஷிவானி.

இவளது பேச்சு சத்தத்தில் அவர்களை நோக்கி திரும்பினான் ஸ்ரீ. இத்தனை நேரம் அவளை காணாமல் தவித்திருந்த மனம் இப்பொழுது நிம்மதியானது.

மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளின் வருகையை அவளது கொலுசு அவனுக்கு உணர்த்தியிருக்கும். நேற்றில் இருந்து கொலுசு அவளிடம் இருந்து விடை பெற்றிருக்க வெறும் காலில் நடந்து வந்ததால் அறியமுடியவில்லை அவனால்.

அவளை நிமிர்ந்துப் பார்க்க, வலியின் சாயல் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

நெற்றியில் விபூதி வைத்திருந்தாள். இன்னொரு கையை மடக்கி வந்திருந்தாள்.

“காலையிலையே எங்க போன வைஷு” இவன் ஓடி வந்து அவளை தாங்கிக் கொள்ள,

 “வைஷு வெளிய போற அளவுக்கு உனக்கு அப்படி என்ன தூக்கம்” ஷிவானி அவனை கடிய,

“இல்லை ஷிவானி நைட் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம் அதுதான் அவங்க தூங்கிட்டாங்க” இவள் அவனுக்காய் பேச,

“நீங்க என்னை கூப்ட்டது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் அவனுக்கு” இவள் முறைக்க,

“விடு ஷிவானி” என்றவள் அவனுக்கும் விபூதி வைத்து விட வர,

“இல்ல நான் இன்னும் குளிக்கல” என,

“மனசு சுத்தமா இருந்தா போதும்” என்றவள் அவனுக்கு வைத்துவிட,

‘இனி நான் இங்க இருந்தா சரி வராது’ என வீட்டை நோக்கி கிளம்பினாள் ஷிவானி.

“வைஷு” என இவன் அழைக்க,

“காலையிலே எழுந்து கோவிலுக்கு போனது எனக்கு தலை வலிக்குது, என்னை கொஞ்சம் நம்ம ரூம்க்கு கூட்டிட்டு போறீங்களா?” இவள் கேட்க,

‘என்னடா ஸ்ரீ இது’ என்பதாக இவன் பார்த்திருக்க,

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், அவளாக எழ முயற்சிக்க, டக்கென்று அவளை கைகளில் ஏந்தியவன் அறைக்கு அழைத்து சென்றவன் அவளை படுக்கையில் படுக்க வைத்து அவளைப் பார்க்க, கண்களை இறுக்க மூடி அப்படியேப் படுத்திருந்தாள் வைஷு.

அவளையேப் பார்த்திருந்தான் ஸ்ரீ.  அவள் ஏதாவது சொல்கிறாளா எனப் பார்த்திருக்க, அவள் கண்ணைத் திறக்கவே இல்லை.

  கொஞ்ச நேரம் அவளையேப் பார்த்திருந்தவன், எழுந்து வெளியே சென்றான்.

இவன் வெளியே செல்லவும் அவள் கண்களை திறந்து பார்த்திருந்தாள். காரணமே தெரியாமல் இந்த நொடி அவனை மிகவும் பிடித்திருந்தது.

அடுத்த கொஞ்ச நேரத்தில் வந்தவன் கையில் அவர்களுக்கான உணவு இருந்தது. கடையில் வாங்கி வந்திருப்பான் போல,

அவளுக்கான உணவை எடுத்து தட்டில் வைத்து அவளிடம் கொடுக்க, அமைதியாக வாங்கி உண்ண, அவளையே பார்த்தபடி அவன் சாப்ட்டுக் கொண்டிருந்தான்.

அவள் சாப்ட்டு முடிக்கவும், அவளிடம் தட்டை வாங்கியவன், அவளுக்கு கையை கழுவி, வாய் துடைக்க வர, அவனை தடுத்தவள்,

“எனக்கு கால்ல தான் அடி கையில இல்ல” என,

“உன்னை நல்லா பார்த்துக்குறது என்னோட திருப்திக்கு வைஷு” என்றவன் அவளுக்கு தண்ணீர் குடிக்க குடுத்தவன்.

“நான் கிளம்பி வயல் வரைக்கும் போயிட்டு வாரேன். உனக்கு ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணு” என்றவன் அவளது பதிலை எதிர் பார்க்காமல் அப்படியே கிளம்பிச் சென்றான்.

மதியம் மூன்றை கடந்த நிலையில் வீட்டுக்கு வந்தான் ஸ்ரீ. அப்பொழுது நல்ல தூக்கத்தில் இருந்தாள் வைஷு.

அந்த நேரம் கதவு தட்டப் படவும், கதவை திறக்க, சாப்பாட்டுக் கூடையுடன் வெளியே நின்றாள் ஷிவானி.

“வைஷுக்கு இப்போ எப்படி இருக்குண்ணா.”

“கால் வீக்கம் இப்போ பரவால ஷிவானி. அவ நல்லா தூங்குறா. வந்து பாக்குறியா?”

“இல்லண்ணா, நான் அப்புறம் வாரேன் தாத்தா இன்னும் சாப்டல. கொஞ்சம் கணக்கு பார்த்துட்டு இருந்தாங்க. நீ வைஷுவை சாப்ட வச்சுட்டு நீயும் சாப்டு. நான் இப்போ கிளம்புறேன்” என்றவள் அவனிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு கிளம்பினாள்.

சமையல் அறைக்கு சென்று தட்டை எடுத்து அறைக்கு வர விழிகளை திறக்காமலே கட்டிலின் அந்த பக்கம் கைகளால் அவள் துளாவதைக் கண்டவன் ‘தன்னைத்தான் தேடுகிறாளோ?’ எண்ணியவன் முகத்தில் புன்னகை!

படுக்கும் பொழுது அவனை தேடுவதை இன்றுதான் காண்கிறான். மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. ‘அவள் மனதில் தான் எந்தளவு இருக்கிறோம்’ அந்த நினைவே அவனுக்கு இனித்தது. 

‘அவள் என்ன செய்கிறாள்’ என அறிய, வேகமாய் கட்டிலின் மறுபக்கம் அவளின் கை படும் தூரத்தில் படுத்தவன் கண்களை தூங்குவதுப் போல் மூடிக் கொண்டான்.

அவன் அருகில் இருப்பதை, அவள் கைகள் உணர, முகத்தை வருடியவள், அவன் பக்கமாய் திரும்பி அவனையேப் பார்த்திருந்தாள். பார்த்திருந்தாள் என்று சொல்வதை விட அவனது பாஷையில் சைட் அடித்துக் கொண்டிருந்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

பேன் காற்றில் அவன் கேசம் பறக்க அதை வருடவும்,  அவள் கையைப் பிடித்துக் கொண்டான் ஸ்ரீ.

அவன் கையைப் பிடிக்கவும் எழ முயற்சி செய்து, அவனை ஊன்றிப் பார்க்க அவன் நன்கு தூங்குவதுப் போல் தெரிய,  “ஓஹோ தூக்கத்துல தான் பிடிச்சானா, நான் பயந்தே போயிட்டேன்” முனுமுனுத்தவள் மீண்டும் அவனையே பார்க்க,

அவன் கண்ணை திறப்பதுப் போல் கண்கள் அசையவும், அவள் எழ முயற்சிக்க, டக்கென்று கண்களை திறந்தவன் பிடித்த கையை விடாமலே அவள் எழ கை கொடுத்தான்.

“அதுக்குள்ள தூங்கிட்டனா நான், ஷிவானி வேற சாப்பாடு கொண்டு வந்தாளே? நீ சாப்டியா வைஷு” எதுவும் அறியாதவன் போல் கேள்விக் கேட்டுக் கொண்டே எழ,

‘யப்பா… நல்ல வேளை நம்ம ரகசியம் அவனுக்கு தெரியல’ ஆசுவாசப்பட்டவள் கீழிறங்க முற்பட, அவளது முந்தாணை அவளுக்கு முன்னே கீழே சரிந்தது.

சரிந்த முந்தாணையை அவள் தோள் மேல் வழிய விட்டவன், “என்ன வைஷு” என,

முந்தாணையை கண்களால் காட்டி, ‘என்ன?’ என வினவ,

“அது நீ தூங்கிட்டு இருக்கும் போது துணி கலைஞ்சு இருந்திச்சி, அதுதான் பின்னை எடுத்து சரி பண்ணுனேன்” என,

“இப்படிதான் தூங்கும் போது புடவையில கை வைப்பியா?’ இவள் முறைக்க,

“முழிச்சிருக்கும் போதே புடவையில் கை வைக்க ஆசைதான்” மெதுவாக முனுமுனுக்க,

“என்ன சொன்ன?” முறைக்க,

“ஒன்னும் இல்லையே, எதுக்கு எழும்பின?”

ஒரு விரலை அவனை நோக்கி நீட்ட,  

“சரி வா?” என்றவன் அவளை அப்படியே தூக்கி பாத்ரூம் அழைத்து சென்றவன் மீண்டும் அழைத்து வந்துகட்டிலில் அமரவைத்தவன். அவளுக்கு சாப்பாட்டை எடுத்துக் கொடுத்து அவனும் உணவை உண்டான்.

இவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், ஷிவானியும் வர, வைஷு காலை ஆராய்ந்து அவளுக்கு மாத்திரை கொடுத்துக் கொண்டிருக்க,

“ஷிவானி நான் வரும் வரை வைஷு கூட இரு” அவளிடம் கூறியவன்,

“கவனமா இருந்துக்கோ வைஷு நான் இப்போ வந்திடுறேன்” என்றவன் மீண்டும் வயலை நோக்கி கிளம்பினான்.

‘அவள் மனதில் என்ன இருக்கிறது’ என்று அவன் கேட்க எண்ணவில்லை. அவளின் தேடலே அவனுக்கான பதிலைக் கொடுக்க சந்தோசமாகவே வயலுக்கு கிளம்பினான்.

***

கால் கட்டை எடுத்து இரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்தது. வலி கொஞ்சமும் இல்லை ஆனாலும் ஒவ்வொரு எட்டும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும் என்று ஸ்ரீ ஆயிரம் முறை கூறியிருந்தான்.

வலியும் நன்றாக மட்டுபட்டிருந்தது. ஆனால், ஸ்ரீ தான் அவளை அங்கும் இங்கும் அசைய விடுவதில்லை. பெரும்பாலும் வீட்டில் சின்ன சின்ன வேலைகளை அவனே பார்த்துக் கொண்டான்.

ஷிவானி கூட பயங்கரமாக கிண்டல் செய்வாள். ஆனால் எதையும் அவன் காதுகொடுத்து கேட்பதே இல்லை. இப்பொழுது அவன் வருவதற்குள் குளித்து வரலாம் என்றுதான் குளியல் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

மதிய நேரம் யாரும் வரமாட்டார்கள் என்பதால் அறையை சிங்கிள் லோக் போட்டவள், மாற்றுடைகளுடன் குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

ரைஸ் மில்லில் அரிசி மூடைகளை ஏற்ற உதவி செய்த ஸ்ரீ, அவர்களுடன் அந்த லாரியில் ஏறி வீட்டை நோக்கி வந்தான்.

‘குளித்து முடித்து இனி மெதுவாக வயலுக்கு செல்லலாம்’ என்ற எண்ணத்தில் அவன் வீட்டுக்கு வந்திருந்தான்.

வந்தவன் நேராக அறைக்கு செல்ல, அங்கு வைஷ்ணவியை இல்லாமல் போக, ‘எங்க போனா? சமையல் கட்டில் இருப்பாளோ. குளித்து வந்து இருக்குடி உனக்கு’ கறுவி இவனும் குளியல் அறைக்குள் நுழைந்திருந்தான்.

அப்பொழுது தான் குளித்து முடித்தவள் அருகில் இருந்த திரைக்கு பின்னே உடை மாற்ற ஆரம்பித்தாள்.

இவன், அவளை கவனிக்கவே இல்லை. வந்தவன் உடைமாற்றி ஷவரை திறக்க, அந்த சத்ததில் திரும்பியவள்,

அவனைக் கண்டதும் பயந்து “நீ எப்படி உள்ள வந்த?” இவள் அதிர,

“ஹேய்” என்றபடி அதிர்ந்து கையில் பிடித்திருந்த ஷவரை அவளை நோக்கி நீட்ட,

அதை அவள் தடுத்து பிடிக்க, அப்படியும் அவள் நனைந்து விட்டிருந்தாள்.

அவளை நனைத்த கோபத்தில் ஷவரை அவனிடம் இருந்து திருப்பி அவன் முன் நீட்டியவள்.

“இப்படி தான் சொல்லாம, கொள்ளாம வருவியா நீ?” இவள் அவன் மேல் பாய,

“இப்படி தான் நீ லாக் பண்ணாம  குளிக்க வருவியா?” என இவன், அவள் மேல் பாய,

அவள் முறைக்க,

“இந்த போஸ்ல கூட நீ ரொம்ப அழகா இருக்க!” என்றான் திடீரென.

தண்ணீரில் நனைந்தும், நனையாமல் அவள் நின்றிருந்த தோற்றம் அவனை ஈர்த்தது. 

சிரிப்புடன் தன் கையில் இருந்த ஷவரை அவள் நோக்கி நீட்டினான். நீர் பூ மழையாய் அவள் மேல் பொழிய,

“ஏய்! என்ன பண்ணுற நீ?” இவள், அவனை தடுக்க பார்க்க, இப்பொழுது முழுதாய் நனைந்தாள்.

“இப்படி தான் பண்ணுவியா நீ?” கோபமாக அவனிடம் இருந்து ஷவரைப் பறித்தவள் இப்பொழுது அவனை நோக்கி ஷவரை நீட்டினாள்.

“ஏய்! என்ன பண்ணுற நீ?” ஷவரை அவன் தட்டி விட, இப்பொழுது தரையை நனைக்க ஆரம்பித்திருந்தது ஷவர்.

“இப்படி தான் என்னை நனைப்பியா நீ?”

“நீ மட்டும் என்னை நனைக்கலாம், நான் நனைக்க கூடாதா?” இவள் முறைக்க,

“நான் என்ன பண்ணுனாலும், நீ திருப்பி பண்ணுவியா?” மிக மிக மெதுவாக அவன் கேட்க,

“ஆமா, பண்ணுவேன்” என்றாள் வீம்பாக.

“அப்படியா!” இவன் நெருங்க,

 “நான் என்ன பண்ணுனாலும் பண்ணுவியா?” மிக மிக மெதுவாய் அந்த ‘என்ன’ என்பதை மெதுவாய் இழுக்க,

‘சொதப்புறியேடி’ இவள் பார்த்திருக்க,

 “அண்ணா” ஷிவானியின் குரல் இவர்கள் காதுகளை வந்தடையை இருவரும் வேகமாக வெளியே வந்திருந்தனர்.

இருவரின் நனைந்த நிலையை பார்த்த ஷிவானி பக்கென்று சிரித்து விட்டாள்.

“ஏன்டி?” என வைஷ்ணவி, ஸ்ரீயின் பின்னே மறைந்தாள்.

இருவரையும் ஒரு முறை மேலிருந்து கீழாகப் பார்த்த ஷிவானி, “ரெண்டு பேரும் ஒரே நேரத்தில பாத்ரூம்ல இருந்து வறீங்க, அதே நேரம் ரெண்டு பேருமே நனைஞ்சிருக்கீங்க, என் மனசு அப்படியே கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி என்ன நடந்திருக்கும்னு யோசனைக்கு போகுது, வாட் எ ரொமான்டிக்?” இவள் கண்ணடிக்க,

“நீ எதுக்கு எங்களை பத்தி யோசிக்குற, போ போய் நாளைக்கு யாருக்கு என்ன ஊசி போடலாம்னு யோசி” ஸ்ரீ கிண்டலடிக்க,

“அதெல்லாம் எனக்கு தெரியும்” இவள் முறைக்க,

 “சரிம்மா தாயே முறைக்காத, எல்லாருக்கும் முறைக்க மட்டும் நல்லா தெரிது” இவன் முனக,

அவனுக்கு பின்னால் நின்றிருந்தவளோ அவனது இடுப்பில் கிள்ளியிருந்தாள்.

ஒரு நொடி நெளிந்தவன், “என்ன விஷயம் ஷிவானி?” என,

“அதுவந்து, கோவில்ல பொங்கல் வைக்கணும்னு தாத்தா வேண்டிகிட்டாங்களாம். நேத்து உன்கிட்ட சொல்ல மறந்துட்டாங்களாம். அதுதான் உடனே உன்கிட்ட சொல்ல சொன்னாங்க ”

“சரி… சரி… நான் தாத்தா கிட்ட பேசிக்கிறேன். இதை நீ போன்லையே சொல்லிருக்கலாமே?”

“நீ வந்ததைப் பார்த்தேன், அது தான் வந்தேன்” முகத்தை சோகமாய் வைத்துக் கூற,

“சரி வாரோம்” என கூறவும்,

“சரிண்ணா” என்றவள் “வரேண்ணி, வரேண்ணா” என்றபடி விடைப் பெற்றாள்.

இப்பொழுது வைஷ்ணவியை பார்த்து திரும்பியவன் “இப்படி தான் பேசிட்டு இருக்கும் போது கிள்ளுவியா நீ?”

“ஆமா, அப்படி தான் கிள்ளுவேன்?”

“அப்படியா, அப்போ நானும் கிள்ளுவேன்” இவன் அவளை நோக்கி கையை நீட்ட,

அவனிடம் இருந்து விலகி ஓடி குளியல் அறைக்குள் நுழைந்து தாழ் போட்டு கதவில் சாய்ந்து நின்றவள் முகம் சந்தோசத்தில் ஜொலித்திருந்தது!

அவள் விலகி செல்லும் பொழுது அவன் அணிவித்த, அவள்  கொலுசு சப்தமிட, அந்த ஓசை அவன் இதயம் முழுவதும் அவளைப் போல் நிறைந்திருந்தது!

***

மாலை 7 மணி,

பொங்கல் வைத்து முடித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு தாத்தாவையும், ஷிவானியையும் வீட்டுக்கு அனுப்பிய ஸ்ரீயும், வைஷுவும் கோவிலில் அமர்ந்திருந்தனர். வைஷுதான் அவனையும் அருகில் அமர வைத்திருந்தாள்.

என்னமோ அவனோடு இப்படி தோள் சாய்ந்து அமர்ந்திருக்க   அவளுக்கு ஆசை.

‘தான் காதலித்தவளே தனக்கு மனைவியாக கொடுத்த’ அந்த தாயை மனதார வணங்கினான் ஸ்ரீ. அத்தனை சந்தோசமாய் இருந்தது அவனுக்கு. அதே சந்தோசத்துடன் இதோ அவளை தோள் சாய்த்து அமர்ந்துவிட்டான்.

‘நீ உன் பழைய வாழ்க்கையை இனி நினைக்காதே’ என்பதைப் போல் அவனிடம், அவள் நடந்துக் கொள்ள இவனும் அவளிடம் அதைப் பற்றி பேசவில்லை.

“வைஷு கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் ஐயரை பார்த்துட்டு வாரேன்” என்றபடி இவன் எழுந்துக் கொள்ள,

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “சரி” என தலையசைக்க, அவளை பார்த்து சிரித்து சென்றான்.

   அவளை யாரோ பார்பதுப் போல் தெரிய கண்களை எங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்று, இரண்டு பேர் மட்டும் நின்றிருந்தனர். வாசலில் பூ விற்க்கும் பாட்டி அமர்ந்திருந்தார். அவர் அருகில் பார்வையை பதிக்க அவர் அருகில் அவன் நின்றிருந்தான்.

அவன் விக்ரம்!

இவளையேப் பார்த்திருந்திருப்பான் போல, இவள் பார்க்கவும் பார்வையை வேகமாய் திருப்பிக் கொண்டான்.

 ‘இவனிடம் எனக்கென்ன பேச்சு’ என்பதான பார்வை பார்த்தவள் வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

  அவள், அவனைப் பார்த்ததும் அவளை நோக்கி வந்தான் விக்ரம். முகத்தில் தாடி எல்லாம் வைத்து மிகவும் வித்தியாசமாய் இருந்தான்.

அவளின் அருகில் வந்தவன், “எப்படி இருக்க வைஷு?” என்றான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், ‘இவனிடம் எனக்கென்ன பேச்சு’ என்பது போல முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கொள்ள,

“எப்படி இருக்க வைஷு” என்றான் மீண்டும்.

அவனை பார்க்கவே பிடிக்கவில்லை வைஷுவுக்கு. அவனைப் பார்க்காமல் போன் எடுத்து ஸ்ரீயை அழைக்க,

“என்ன வைஷு” அவன் அந்த பக்கம் கேட்க,

“சீக்கிரம் வா”

“என்னாச்சு வைஷு”

“சீக்கிரம் வா ஸ்ரீ” என்றவள் போன் வைக்க,

அவளது குரலில் எதுவோ இருக்க உடனே ஓடி வந்திருந்தான் ஸ்ரீ. தூரத்தில் இருந்து வரும்பொழுதே அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவனை கலங்க வைக்க வேகமாய் வந்திருந்தான்.

“வைஷு என்னாச்சும்மா. கால் வலிக்குதா?” என்றான் அவளது காலை பிடித்து பார்த்தபடி. கட்டை அவிழ்த்து இரண்டு நாள் தான் ஆகியிருந்த நிலையில் மீண்டும் கால் வலிகிறதோ என்ற எண்ணத்தில் கேட்டிருந்தான்.

“எனக்கு ஒன்னும் ஆகல ஸ்ரீ. வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றபடி அவனை பிடித்து எழுந்தாள்.

இருவரையும் கண்கொட்டாமல் பார்த்திருந்தான் விக்ரம்.

மனம் பாரமாய் இருந்தது, அதே சமயம் சந்தோசமாகவும் இருந்தது.

வைஷு எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவனது எண்ணம். அன்று திருமணத்தில் ஏதோ கோபத்தில் பேசினானே தவிர பின்னாளில் யோசித்த பின் ‘அவள் சந்தோசமாய் இருந்தால் போதும்’ என்று மனதை தேற்றிக் கொண்டான்.

இன்னும் அவன் லண்டன் கிளம்பவில்லை. ஹோட்டலில் தான் பல நாட்களாக இருக்கிறான். வீட்டுக்கு இன்னும் செல்லவில்லை.

கடைசியாக வைஷுவை பார்க்க வந்திருந்தான். இருவரும் கோவிலுக்கு செல்வதைக் கண்டு இங்கு வந்திருந்தான்.

வைஷுவை பிடித்து திரும்பும் பொழுதுதான் கண்டான் விக்ரமை.

“எப்படி இருக்க விக்ரம்” என்றான் ஸ்ரீ.

வைஷு, ஸ்ரீயை முறைத்தாள், ‘உனக்கு அவன்கிட்ட என்ன பேச்சு’ என்பதாய்.

“நான் நல்லா இருக்கேன் ணா.   நீங்க எப்படி இருக்கீங்க” என்றான் சாதரணமாய்.

 “லண்டன் ல இருந்து எப்போ வந்த?”

“நான் இன்னும் போகவே இல்லண்ணா. அடுத்த வாரம் போறேன். அதுதான் கோவிலுக்கு வந்தேன்” இருவரும் மிகவும் சந்தோசமாய் இருக்க, வீணாக ஏன் இவர்களை வருந்த வைப்பானேன் என்று சாதாரணமாகவே பேசினான் விக்ரம்.

“ஒஹ்… அப்படியா?” குரல் மிகவும் இறங்கி இருந்தது ஸ்ரீக்கு.

“சரிண்ணா, நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. எனக்கும் டைம் ஆகிட்டு” என்றவன் வைஷுவை பார்த்து, “கிளம்புறேங்க” அவளிடமும் கூறி திரும்பிப் பார்க்காமல் சென்றான்.

“அவன்கிட்ட உனக்கு என்ன பேச்சு” வைஷு முறைக்க,

“விடு வைஷு. இப்போ அவனைப் பற்றி என்ன பேச்சு” என்றவன் அவளை அழைத்து வீட்டை நோக்கி சென்றான்.

அவனை பார்த்து முறைத்தவள் அவனோடு சென்றாள்.

 வீட்டுக்குள் வந்தவள் நேராக சமையல் அறைக்கு செல்ல, அவளைப் பார்த்தவன் தங்களது அறைக்குள் சென்றான்.

கொஞ்ச நேரத்தில் அவளை நோக்கி வர, சமையலில் மும்முரமாக இருந்தாள் வைஷு.

அவளை பின்னிருந்து அணைத்தவன், “சாரி வைஷு” என,

அணைப்பிலே அசையாமல் நின்றவளை, இன்னும் இறுக்கி அவள் பின் கழுத்தில் முகத்தை வைத்தவன், “ரொம்ப பிடிவாதம் வைஷு உனக்கு. அவன்கிட்ட பேசினா என்ன. அதிலும் அவன் ஒண்ணுமே சொல்லல. இப்போ என்கிட்ட நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம்”

பேசும் பொழுது அவனது உதடு அவளது கழுத்தில் உரச, அவனிடம் இருந்து விலக முற்பட்டாள் வைஷு.

“பச்… நகராதே” என்றவன் மேலும் முகத்தை கழுத்தில் அழுந்த பதித்தான்.

உடல் கூசி சிலிர்த்தாலும் அந்த உணர்வை விலக்கி தள்ளியவள், “உங்களுக்கு பசிக்குதா?” என்றாள்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு உன் மனசுல என்ன ஓடுது” என்றவன் இதழ்களால் அழுந்த முத்தமிட,

“விடுங்க” என்று அவள் திமிற,

“நீ சொல்லாம நான் விடமாட்டேன். இன்னைக்கு உன்னை நான் விடுறதா இல்லை” என்றவன் அவளை சிலிர்க்க வைக்கும் வேலையில் இறங்கினான்.

“நீ என்னை என்னமோ பண்ணுற” இவள் கூற,

அவனது அணைப்பை தளர்த்தியவன் அவளைப் பார்த்து வேகமாய் சிரிக்க,

அவனை நோக்கி திரும்பியவள், அவனைப் பார்க்க,

இப்பொழுதும் அவளைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தான்.

“என்னை நீங்க இப்படி பார்த்து, இப்படி பேசி என்னமோ பண்ணுறீங்க” என்றாள் மீண்டும்.

“நான் உன்னை என்னமோ பண்ணுறேனா? ஹா… ஹா.. நீதான் என்னை என்னமோ பண்ணி உன் பின்னாடி சுத்த வச்ச, இப்போவும் சுத்த வைக்குற”

“யாரு நீங்க என் பின்னாடி சுத்துறீங்களா?” இடுப்பில் கை வைத்து முறைக்க,

“ஆமா, பல வருசமா நான் பின்னாடி சுத்துறேன் அப்பவும் என்னை நீ கண்டுக்கல, இப்பவும் என்னை கண்டுக்கல. அதுதான் நான் உன் பின்னாடி சுத்துறது உனக்கு தெரியல”

“நீங்க சரியா என்னை உங்களை கண்டுக்க வைக்கல” இவள் கூற,

அவளது கையை பிடித்து அவனை நோக்கி இழுக்க, அவன் மேல் மோதி நின்றாள் வைஷு.

அவளை அணைத்தார் நின்றவன், “பல நாளா காத்துகிட்டு இருக்கேன். உன்னை, என்னை கண்டுக்க வைக்கவா?” கண்ணடித்து அவளிடம் வினவ,

 அவனை விலக்கித் தள்ளியவள், “பசிக்குது சாப்ட வாங்க” என்றபடி முன்னே செல்ல,

‘இவ மனசுல என்ன ஓடுது?’ என்ற யோசனையுடன் அவள் பின்னே சென்றான் ஸ்ரீ

அவனுக்கு பரிமாறி இவள் அமைதியாக உண்டு உறங்க செல்ல, அவன் உண்டு முடித்து அப்படியே ஹாலில் அமர்ந்துக் கொண்டான்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தவள், அவன் வராமல் போக வெளியில் வந்து பார்க்க அவன் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு,

“துங்க வரலியா?”

“தூக்கம் வரல, நீ தூங்கு” என,

மீண்டும் வந்து படுத்துக் கொண்டாள் வைஷு. நடு இரவில் விழிப்பு வர எப்பொழுதும் போல் கைகளால் அருகில் துழாவ, அவனை காணவில்லை.

அந்த நேரம் தண்ணீர் தாகம் எடுக்க, எழுந்தவள் வெளியே வர, அவளை பற்றிய யோசனையில் அவர்கள் அறை வாசலையே பார்த்திருந்த ஸ்ரீ அவளைக் காண,

“என்ன வைஷு” என எழுந்து வர,

“தண்ணீ வேணும்” என,

“சரி நீ ரூம் போ நான் கொண்டு வாரேன்” எனவும், அறைக்கு திரும்பியவள் மனம் யோசனையில் இருந்தது.

    அவன் வந்து தண்ணீர் கொடுக்கவும், கொஞ்ச நஞ்ச தூக்கமும் பறந்துப் போக, “என்ன தூங்கலியா?” என,

“தூக்கம் வரல” என கூறி வெளியே செல்ல எத்தனிக்க,

அவனது கையை எட்டிப் பிடித்தவள், “பேசாம படுங்க தூக்கம் வரும்”

“ம்” என்று படுத்தவன், கொஞ்ச நேரத்தில் அங்கும் இங்கும் புரண்டு படுக்க,

“ஏன் தூக்கம் வரல?” இவள் கேட்க,

“நீ என்னை கண்டுக்கவே மாட்ற” என்றான் சிறுபிள்ளை போல்.

முதலில் அவன் சொல்ல வருவது புரியாமல் முழித்தவள், புரிந்த பின் அவனையேப் பார்த்தாள். அவனும் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் எப்போ உங்களை கண்டுக்க மாட்டேன்னு சொன்னேன். நீங்க என்னை கண்டுக்க வைக்கல” என்றவள் மீண்டும் அவனைப் பார்க்க,

 “நிஜமாதான் சொல்லுறியா?” இவன் அவளை அணைக்க,

 “போங்க போங்க நீங்க வெளியவே படுங்க” இவனை விட்டு அவள் தள்ளிப் படுக்க,

“எங்கடி போற?” அவளின் இடுப்பை அணைத்து அப்படியே அவனை நோக்கி திருப்ப,

“விடுங்க என்னை விடுங்க” இவள் திமிற,

அவனை நோக்கி, அவளை திருப்பியதில் அவளது புடவை தாறுமாறாய் கலைய, “அப்பவே வச்சு உன் டிரஸ் தாறுமாறா கலைஞ்சு இருக்கு அதை முழுசா கலைக்காம எனக்கு தூக்கம் வராது”  

“பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை” இவள் முனக,

“வேற என்னதுடி எனக்கு குறைச்சல்” என்றவன் அவளை அப்படியே அள்ளி தன் மாரில் போட்டுக் கொள்ள, 

 “அதெல்லாம் சொல்லமுடியாது” இவள் முகத்தை அவன் மார்பில் புதைக்க,

அவளது முகத்தை நேராகப் பிடித்து, “சொல்லு… சொல்லு” என்றான்.

“நீங்க எதுலையுமே குறைச்சல் இல்லை” அவனை நேராகப் பார்த்துக் கூற,

“சொல்லு வைஷு, என் பழைய வாழ்க்கை நீ எதுவுமே சொல்லையே” என,

“நீங்களே அதை மறக்கணும்னு நினைக்கும் போது நான் ஏன் அதை பத்தி நினைக்கணும்?” இவள் கேட்க,

“உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே?”

“போங்க… போங்க… எனக்கு கஷ்டம் தான். நீங்க எப்பவும் போல அந்த ஒரத்திலையே படுங்க” என்றவள் அவனை ஒரே தள்ளாக தள்ளி அந்த பக்கம் படுக்க,

 “நீ என் பக்கத்துல இருக்கும் போது நான் ஏன் ஒரமா படுக்கணும்” என்றவன் அவளின் இடையில் கைகொடுத்து அவளை தன் பக்கம் தூக்க,

“போங்க… போங்க… நீங்க ஒன்னும் என்கிட்ட படுக்க வேண்டாம்” என்று அவனை மீண்டும் தள்ளிவிட,

“வேண்டாம்… வேண்டாம்னு சொன்னா, வேணும்… வேணும்னு அர்த்தமாம்”

மேலும் அவள் ஏதோ பேச வரும் முன் அவளது இதழ்கள், அவனது இதழ்களால் பூட்டபட, மீண்டும் ஒரு யுத்தமும், கொலுசின் சிணுங்கலும் ஆரம்பித்தது அவ்விடத்தில்.

கலைந்த ஆடையை, மீண்டும் கலைத்து… களைத்து… உறக்கத்தை தொலைத்து, மீண்டும் அவர்கள் உறக்கத்தை நாட கீழ்வானம் சிவந்திருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!