இளைப்பாற இதயம் தா!-13

இளைப்பாற இதயம் தா!-13

இளைப்பாற இதயம் தா!-13

          சிந்துவின் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்வரை எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நடந்த ரீகனின் அலுவலகத்தில் அன்று எதிர்பாரா விதமாக இயந்திரப் பழுது உண்டாகி இருந்தது. அந்த பழுதினை உடனடியாக நீக்குவதற்கு சரியான நேரத்தில் பழுது நீக்குபவர்கள் வந்தும் பழுது சரிசெய்யப்படாததால் ரீகன் அது சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தான்.

          வீட்டிற்கு சரியான நேரத்திற்கு திரும்ப முடியாத நிலையில் எப்பொழுதும் அலுவலகமே கதி என்று இருப்பவனைக் கண்ட ஐடா அலைபேசியில் அழைத்து, “இத்தனை நாள் சரி பண்ண முடியாத அளவிற்கு பெரிய பிரச்சனையா?” என்று வினவினாள்.

          பழுதின் நிலையை மனைவிக்கு எடுத்துக் கூறியவன், “ஸ்பேர் கிடைக்காததால சரி செய்யறதுக்கு லேட்டாகுது ஹனி.  கம்பெனி ஸ்பேர் மாத்திட்டா நாம நிம்மதியா அடுத்த வேலையப் பாக்கலாம்.  இல்லைனா… எப்போ திரும்பவும் மெஷின் நிக்குமோன்னு பயத்தோடயே இருக்கணும்.  அதனால ஆர்டர் போட்ட ஸ்பேர் கையில கிடைச்சதும் ரீப்ளேஸ் பண்ணிட்டா வேலை முடிஞ்சிரும்”

          “அது எப்போ கையில கிடைக்கும்?” கவலையாகக் கேட்டாள்.

          “இன்னைக்கு ஈவினிங் இல்லாட்டி நாளைக்கு காலையில கைக்கு வந்திரும்!”

          கணவனது பதிலில் சற்று தேறினாலும், அவனது உறக்கமில்லாத அலைச்சலை எண்ணி வருந்தினாள்.  மனைவியின் வருத்தத்தை உணர்ந்தவன், “எப்போவும் ஒரே மாதிரியா இருக்காதுல்ல ஹனி.  எல்லாம் ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்.  நீ இதை நினச்சு வர்ரி பண்ணாத.  ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு ஹனி” மனதைத் தேற்றினான்.

          அப்போது மறுநாள் சிந்துவின் திருமணம் இருப்பதையும் கணவனிடம் நினைவுபடுத்திய ஐடா, “ரெண்டு பேருமா சிந்து மேரேஜ்கு போகணும்னு நினைச்சிட்டுருந்தேன்.  நீங்க இப்ப இருக்கற நிலையில உங்களால ஆபிசை விட்டுட்டு வர முடியாதுல்ல” கவலையோடு வினவினாள்.

          “நாளைக்குத்தான மேரேஜ்.  பாத்துக்கலாம்” ஆறுதல் சொன்னவன், “ஸ்பேர் ஈவினிங் கைக்கு வந்துட்டா நம்பகமான ஆளை கொஞ்ச பாத்துக்க விட்டுட்டு ஃபங்சன்ல தலையைக் காட்டிட்டு வந்திரலாம்.  இல்லைனா நீ மட்டும் போயிட்டு வந்திரு ஹனி” என்றான்.

          ஐடாவிற்கு தான் தனியாகச் செல்வதில் அத்தனை உடன்பாடில்லை.  அதற்குக் காரணம் சிந்து அவர்களின் வீட்டிற்கு நேரில் வந்திருந்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாள்.  அதனை கணவனிடம் எடுத்துச் சொன்னவள், “போனா ரெண்டு பேரும் போகலாம்.  இல்லைனா பாத்துக்கலாம்” என்ற மனைவியிடம், “நாளைக்கு வரை டைம் இருக்கு.  அதுக்குள்ள ஏன் டென்சனாகிட்டு! விடு பாத்துக்கலாம்!” என்றான்.

          அன்று மாலையில் கைக்கு கிட்டிய ஸ்பேர்ஸ்ஸைக் கொண்டு அப்போது வேலை துவங்கியிருந்தது.  அதனால் ரீகன் அன்று வீட்டிற்கு திரும்பாமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டிருந்தான்.

          காலையில் மனைவிக்கு அழைத்தவன், “சர்வீஸ் முடியப் போகுது ஹனி.  மெஷின் வர்க்கிங் கண்டிஷனை நேருல இருந்து செக் பண்ணிட்டு நான் வர கொஞ்சம் லேட் ஆகும். அதனால நீ சிந்து மேரேஜ்கு கிளம்பிப் போ.  நான் கொஞ்சம் லேட்டா வந்து உன்னோட ஜாயின் பண்ணிக்கறேன்” என்று கூற, ஐடா மறுக்க… ரீகனது வற்புறுத்தலினால் வேறு வழியில்லாமல் தனித்துச் செல்ல ஐடா சம்மதிக்கும்படி ஆகியிருந்தது.

***

          சிந்துவின் உறவினர்களுக்கு நிகராக அவளோடு அலுவலகத்தில் பணி புரிவோர், விடுதியில் பழகிய தோழிகள் மற்றும் பழக்கமானவர்கள் என நிறைய கூட்டம் திருமணத்திற்கு வந்திருந்தது.

          ஐடாவும் மிளகாய் சிவப்பு நிறத்தில் பச்சை பார்டர் போட்ட ஸ்டோன் வர்க் காப்பர் சில்க் சாரியில் திருமணத்திற்கு கிளம்பிச் சென்றிருந்தாள்.

          ஐடாவிற்கு வயிறு தெரியாத போதும், ஐந்து மாத கருவைச் சுமந்ததால் அதற்கான தேஜஸ் கூடி மிளிர்ந்தாள்.

          திருமணத்திற்கு வந்திருந்த நான்சியைக் கண்ட ஐடா, “மேரேஜ்கு வரதா சொல்லவே இல்லை!”

          “சொந்தக்காரவங்க மேரேஜ்கு போறேனோ இல்லையோ நம்ம கொலீக்ஸ் மேரேஜ்கு கண்டிப்பா போயிருவேன்” என்ற நான்சி கூடுதல் தகவலாக, “நான் சொல்லுவேன்ல… என்னோட எக்ஸ்.  அவனை எங்காவது மீட் பண்ணிற மாட்டோமான்னு நானும் ஒரு ஃபங்சன் விடறதில்லை” கூடுதல் தகவலாக உரைத்தாள்.

          நான்சியின் பேச்சில் எப்போதும் கேட்பதுதான் என்றாலும், “நீயும் ஒவ்வொரு பங்சனா போறேங்கற… இதுவரை எத்தனை ஃபங்சன்ல தேடுன?”

கன்னத்தில் கைவைத்து யோசித்தவள், “ஒரு ஆறு ஃபங்சன் அட்டெண்ட் பண்ணிட்டேன்”

“ஆறுல வராத ஆளு இங்கயும் வரலன்னா?” என என்றுமில்லாத திருநாளாக நான்சியின் எக்ஸ் பற்றிக் கேட்டாள் ஐடா.

“அப்டி சொல்லாத ஐடா!” வருத்தத்தோடு கூறிய நான்சி, தனது தோழி ஒருத்தி சமீபத்தில் தன் எக்ஸை  பங்களூரில் சந்தித்த செய்தியைப் பற்றிக் கூறியதாகவும், அவனது மனைவி பணிபுரியும் அதே அலுவலகத்தின் வேறு கிளையில்தான் சிந்து பணி புரிவதாகவும் அவளிடம் கூறியதாகக் கூறினாள்.

இதைக்கேட்ட ஐடா, “சிங்கிள்னாகூட எதாவது உனக்கு ஃபேவரா யோசிக்கலாம்.  இப்ப அவங்க மேரீட்ன சொல்றியே?”

“அதனால என்ன?  அவ ஒரு பக்கம் இருந்தா, நான் இன்னொரு பக்கமா வாழ்ந்துட்டுப் போக வேண்டியதுதான்” என்று சர்வசாதாரணமாகக் கூறினாள் நான்சி.

நான்சியின் முடிவு ஐடாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளின் வாழ்க்கை பற்றிய முடிவில் தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று அந்தப் பேச்சு ரசிக்காததால் அத்தோடு விட்டுவிட்டாள் ஐடா.

          நான்சியின் தோழி அவளின் எக்ஸ் பற்றி மிகவும் டீட்டைலாக அவளிடம் பகிர்ந்து கொண்டிராததால் அதற்குமேல் நான்சி ஐடாவிடம் எக்ஸ் மற்றும் அவளின் மனைவி பணி புரியும் அலுவலகம் பற்றிக் கூறவில்லை.  நீண்ட நேரம் இருவருமாக சேர்ந்து அமர்ந்திருந்தனர்.  இருவரோடு அதன்பின் வந்த பலரும் வந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிச் சென்றனர்.

          திருமணம் முடிந்து மணமக்களை ஒவ்வொருவராகச் சென்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தவண்ணமிருந்தனர்.  அந்த நேரத்தில் நான்சி சிந்துவை நேரில் சென்று வாழ்த்த ஐடாவை அழைக்க, “என் ஹப்பி வந்ததும் ரெண்டு பேருமா போய் சிந்துவை விஷ் பண்ணிக்கறோம் நான்சி.  நீ நம்ம கொலீக்சோட போயி சிந்துவை விஷ் பண்ணிட்டு வா” என்று கூறினாள்.

          “இன்னைக்காவது எனக்கு உன் ஹப்பிய இன்ரோ பண்ணுவியா ஐடா” நான்சி வினவ,

          “நீ அவைய்லபிலா இருந்தா கண்டிப்பா பண்றேன்” உறுதி கூறினாள் ஐடா.

          “இப்டித்தான் ஒவ்வொரு முறையும் சொல்ற!” நான்சி ஐடாவைக் குறை கூற,

          “அவங்க வந்திருக்கும்போது… நீ வேலையா இருப்ப!  இல்லைனா நீ ஃப்ரீயா இருக்கும்போது அவங்க அவசரமா போகணும்னு சொல்லுவாங்க.  அதான் இன்ட்ரோ பண்ணலை.  இன்னைக்கு நிச்சயமா உனக்கு இன்ட்ரோ பண்ணுறேன்” ஐடா நான்சிக்கு வாக்குக் கொடுத்தாள்.

          மணி மதியம் ஒன்று நெருங்கியும் ரீகன் வரவில்லை.  இதற்கிடையே நான்சி, “இன்னைக்கும் இங்க நான் மீட் பண்ணலைன்னா…  எங்கதான் அவனை நான் மீட் பண்ணுவேனோ” என்று புலம்பலாக இருந்தாள் நான்சி.

          நான்சியை அவளின் பழைய தோழமை வட்டம் கண்டுகொண்டு அவளின் பேச வர, ஐடாவிடம் சொல்லிக்கொண்டு அவர்களோடு சென்றுவிட்டாள் நான்சி.  

ஐடா தனித்து விடப்பட்டாள்.  அந்த நேரம் சிந்துவின் உறவுக்காரவர்கள் மதிய உணவினை உண்ண அங்கிருந்தவர்களை அழைத்தனர்.

ஐடாவிற்கும் பசித்தது.  குழந்தை வயிற்றில் இருப்பதால் பதினொன்றரை மணிக்கே ஐடாவிற்கு பசிக்கத் துவங்கியிருந்தது.  ஒன்றரை மணியளவில் ரீகனுக்கு அழைத்துப் பார்த்தாள்.  அவன் வந்துகொண்டிருப்பதாக பதில் வரவே அவன் வந்ததும் அவனோடு இணைந்தே உண்ணச் செல்லலாம் என எண்ணியவள், அதுவரை சமாளிக்க முடியுமென்று தோன்றாததால் மதிய உணவிற்குப்பின் பாதாம் பால் மற்றும் ஐஸ் க்ரீம் வழங்குவதைப் பார்த்தவள், சற்று தெம்பாக இருக்கும் என்று எண்ணி பாதாம் பால் வழங்குமிடத்திற்குச் சென்றாள்.

முதல் தளத்தில் உணவிற்கென ஒதுக்கப்பட்டிருக்க மெதுவாக படிகளில் ஏறிச் சென்றாள். லிஃப்ட் இருந்தபோதும் அதனைத் தவிர்த்துவிட்டு ஆளரவம் இன்றி இருந்த படிகளில் நடந்து சென்றவள், பாதாம் பால், ஃப்ரூட் சாலட், ஐஸ் க்ரீம், பீடா என்று வழங்கப்பட்டுக்கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.

அந்த இடத்தில் கூட்டம் சற்று கூடுதலாகவே இருக்க, அவசரம் காட்டாமல் பாதாம் பாலை வாங்கிக்கொண்டு, சற்று தூரத்தில் கிடந்த சேரில் அமரச் சென்றாள்.

அதற்குள் குட்டி சிறுவன் அந்த சேரில் ஓடி வந்த அமர்ந்ததும் நின்றபடியே பாலை இரண்டு மிடறு அருந்தியவளின் காதுகளில் அவளை விட்டு சற்று தொலைவில் நின்றபடி இருவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேர்ந்தது.

          “வின் இன்னைக்கு இங்க கண்டிப்பா வருவான்னு நம்ம டீம் லீட்தான் சொன்னான்” என்று ஒருத்தி சொல்ல,

          “இப்டித்தான் நீயும் ஒவ்வொரு ஃபங்சன்லயும் அவன் வருவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணுற” என மற்றொருத்தி சொல்லிக் கொண்டிருந்தாள்.

          வின் எனும் பெயரைக் கேட்ட சற்று நிமிடத்திலேயே ஐடாவிற்கு பழைய நினைவுகள் மனதில் எழுந்திட, அந்தப் பெயரை உச்சரித்தவளை பாதாம் பாலை அருந்தியவாறே சாதாரணமாகத் திரும்பிப் பார்த்தாள்.

          நின்றிருந்த பெண் பரிச்சயமான முகமாகத் தெரிந்தது.  ஆனால் தான் அன்றொரு நாள் பேருந்தில் சந்தித்த அதே பெண்தானா இவள் என்று சரியாகத் தெரியவில்லை ஐடாவிற்கு.  ஏனென்றால் அந்தப் பெண்களில் ஒருத்தி வளர்ந்து ஒல்லியாகவும் மற்றொருத்தி சற்று பூசினாற்போன்றும் அவனின் உயரத்திற்கு இருவருமே வளர்த்தி குறைவாகவே காட்சியளித்தனர். 

ஒருத்தி அவனது தோளுக்கும் மற்றொருத்தி அதைவிட உயரம் குறைவாகவும் இருவரும் முடியை கட்டாமல் ஃப்ரீ ஹேர் விட்டிருந்தனர்.  இடுப்பளவிற்கு முடி இருந்தது.

          தற்போது பேசிக் கொண்டிருந்தவளோ ஆண்களைப்போல கிராப் தலையோடு இருந்தாள்.  முகத்தை வைத்துப் பார்க்கும்போது அன்று தான் கண்ட பெண்களில் ஒல்லியாக இருந்த பெண்ணைப்போலத் தெரிந்தாள்.

          அந்த வின் என்று அழைக்கப்பட்டவனின் அருகில் நிற்கும்போது அவனது மார்பளவு உயரத்தில் இவளைப் பார்த்த நினைவு.  ஐடாவிற்கு அவர்களின் பேச்சில் எரிச்சல் வந்தது.

ஆனால் அந்த வின் என்று அந்தப் பெண்ணால் குறிப்பிடப்பட்டவனோடு தனது கணவனைச் சந்தேகித்த நிமிடம் நினைவிற்கு வந்ததும், அவனை இன்று தான் சந்திக்க நேர்ந்தால் அவனுக்கும் ரீகனுக்கும் என்ன வேறுபாடு என்பதைக் காணும் ஆவலும் எழுந்தது.

          வின் எனப்பட்டவனைப் பற்றியே இருவரும் பேசிக்கொண்டு அங்கிருந்து லிஃப்ட் இருக்கும் திசையை நோக்கிச் சென்றனர்.  ஐடா நிதானமாக அங்கிருந்தபடியே காணத் தெரிந்த மணமக்களை வேடிக்கை பார்த்தபடியே பாலை அருந்தி முடிக்கும்போது அலைபேசி அழைத்தது.

***

          பாதாம் பாலை அருந்திக் கொண்டிருந்தபோதே அவளின் அலைபேசி ஒலியெழுப்ப நிதானமாக எடுத்துப் பார்த்தவள், அது ரீகன் என்பதைப் பார்த்ததும் இளநகை இதழில் இதமாய் வந்தமர்ந்திட, “வந்திட்டீங்களா?”

          “ம்… இப்பதான் மஹால்குள்ள என்டர் ஆகறேன்” என்றபடியே, “நீ எங்க இருக்க?”

          “ஃபர்ஸ் ஃப்ளோர்ல நிக்கறேன்.  நீங்க உள்ள வாங்க.  நானும் வந்திறேன்” என்றவள், “சிந்துவை பாத்து விஷ் பண்ணிட்டு வந்திரலாம்” என்றாள்.

          அலைபேசியில் மனைவியோடு பேசிக்கொண்டே வந்தவன், நண்பர்களை வாயிலிலேயே சந்தித்ததும், “ஃப்ரண்ட்ஸ் எல்லாம் நிக்கறாங்க.  அவங்களை பாத்துப் பேசிட்டு வரேன் ஹனி” என்றபடியே அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

          தரைத்தளத்தை நோக்கி ஐடா படிகளில் இறங்கி வாயிலை நோக்க, அத்தனை கூட்டத்திலும் தனித்துத் தெரிந்த தன்னவனை நோக்கி வாயிலில் புன்முறுவலோடு மெதுவாக முன்னேறினாள் ஐடா.

          அதேநேரம் அவனைக் காண அங்கு காத்துக் கிடந்தவர்களை அவர்களின் அருகே இருந்தவர்கள் விசயத்தைக் கூறியதும், சிட்டாகப் பறந்து அவனை நோக்கி விரைந்தார்கள்.

          வெவ்வேறு திசைகளிலிருந்து, வெவ்வேறு இடங்களில் இருந்து ஐடாவைப்போல ரீகனை நோக்கி முன்னேறி அவனை நோக்கி ஆவலோடும் ஆர்வத்தோடும் வந்தவர்களை ஐடா கவனிக்கவே இல்லை.

          ஐடா மஹாலுக்குள் நுழைந்தது முதலே அவளைக் கண்காணித்துக்கொண்டிருந்த அஸ்வின் தற்போது கணவனை நோக்கி ஐடா செல்லுவதோடு, மற்ற திசைகளிலிருந்தும் அவனை நோக்கி வரும் மற்றவர்களையும் கவனித்தவனின் இதழில் முறுவல்.

          ஐடா தனது நிலையை உணர்ந்து நெரிசலான இடங்களில் தாமதித்து விலகி ஒதுங்கி மெதுவாக நடந்து வர, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமல் தோழர்களோடு கைகுலுக்கிப் பேசிக்கொண்டிருந்தவனைக் காண ஆவலோடு வந்தவர்கள் ரீகனை நெருங்கத் தயங்க, எந்தக் தயக்கமும் இன்றி வந்து கொண்டிருந்த ஐடாவைக் கண்ட ரீகனது தோழன் ஐடா வந்த திசையைக் காட்டி, “உன் வயிஃப்” என்று கூற நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு விடைபெறும் நோக்கில், “ஓக்கே பாக்கலாம்” என்று சிரிப்போடு விடைபெற எண்ணித் திரும்பியனின் கரங்களை ஐடா பற்று முன், ஆளுக்கொரு திசையில் வந்தவர்கள் ரீகன் எதிர்பாரா நேரத்தில் வந்து இருகரங்களையும் பற்றி, “ஹாய் ரீகன்” என்று ஒரு புறத்திலும், மறுபுறத்தில் “ஹாய் வின்” என்று மறுபுறத்தில் சற்றுமுன் ஐடா சந்தித்த அந்தக் கிராப் பெண்ணும் பற்றி நிற்க, இருவரது பேச்சைக் கேட்டு திரும்பி மாறி மாறி அவர்களை நோக்கிய ஐடா ரீகனை நெருங்கி அவனது கரங்களை ஆளுக்கொரு புறம் பற்றி நின்றவர்களைப் பார்த்ததும், நிற்கும் நிலம் நழுவிய உணர்வில் அதுவரை இதழில் இருந்த நகைப்பைத்  துடைத்தாற்போல அதிர்ச்சியான முகத்தோடு நின்றாள்.

தனது மனைவியைப் பார்த்தவன் அவளின் ஒளி குன்றிய வதனத்தில் உயிர் போன உணர்வோடு, தனது கைபற்றி நிற்பவர்களை சற்று நொடி இடைவெளியில் திரும்பிப் பார்த்தான்.

          ஒரு புறம் கைபற்றியவள் ரீகனை ஒரு புறமாக அணைத்து நின்றபடியே திரும்ப அங்கு அவள் எதிர்பார்த்திராத ஐடாவைக் கண்டதும், அதிர்ச்சியில் நின்றிருந்த ஐடாவின் முக மாறுதலை கவனத்தில் கொள்ளாமலேயே, “ஐடா… நான் சொன்னேன்ல!” என்றபடியே “தாங்க் காட்” என்று ஐடாவிடம் நான்சி பேச…

மறுபுறம் நின்றிருந்தவளோ , “ஹாய் வின்!  எங்க இருக்க இப்போ?” என்று பேச… இருவரையும் பார்த்து ஹாய் தெரோ, ஹாய் ஜான்வி என்று சிரிப்போடு முகமன் செய்தவன் மனைவியின் முகத்தைச் சரி செய்திடும் விதமாக இருவரின் கரங்களுக்குள் இருந்த கரங்களை நொடிக்குள் விடுவித்துக்கொண்டவன், ஐடாவின் கையைப் பற்றி தனதருகே இழுத்து, “ஹனி… இது தெரோபல் நான்சி!  இவங்க என்னோட சென்னையில வர்க் பண்ணாங்க.  அன்ட் தென்” என்று கிராப் தலையோடு மற்றொரு பக்கம் நின்ற பெண்ணின் புறம் திரும்பி, “இது ஜான்வி!  இவங்க என்னோட பங்களூர்ல வர்க் பண்ணாங்க” என்று ஐடாவிடம் அறிமுகம் செய்து வைத்தான். 

இருவரின் புறமாகத் திரும்பி, “இது என்னோட மிஸ்ஸஸ் கிரேஸ் ஐடா” என்று இரு பெண்களுக்கும் அறிமுகம் செய்தான்.

          மற்ற இருவரின் முகங்களிலும் ஈயாடவில்லை.  நான்சிக்கு அவன் திருமணமான செய்தி தெரியுமென்பதால் பெரிய அளவிற்கு வருத்தம் எதுவுமில்லை.  ஆனால் ரீகனது மனைவி ஐடா என்பதை அவளால் அத்தனை எளிதில் கடக்க முடியவில்லை.

          ஐடா யாரென்று தெரியாமலேயே தன்னைப் பற்றி மட்டுமல்லாது, ரீகனைப் பற்றியும் அத்தனை உளறியிருந்தது நினைவிற்கு வந்து சங்கடத்தைத் தந்தது.

          பிறகு, ‘தெரியாத யாரோ ஒருத்தவங்கன்னா என்னைப் புரிஞ்சிக்கறது கஷ்டம்.  ஆனா ஐடாவுக்கு என்னைத் தெரியும்.  சோ சமாளிக்கலாம்’ என குருட்டுத்தனமான ஆறுதலோடு நான்சி.

அந்த இடமே அத்தனை அமைதியாக இருந்தது. நான்சிக்கு அதற்குமேல் எதுவும் பேசத் தோன்றாமல் அப்படியே நின்றாள்.  ஜான்வி என்று ரீகனால் அழைக்கப்பட்ட பெண் ஐடாவையே பார்த்தாள்.  ஒட்ட வைத்த புன்னகை மூன்று பெண்களின் முகங்களிலும். அதில் உண்மையில்லை.

          மனதிற்குள் மூன்று பெண்களுக்குள்ளும் சூறாவளி.

          ரீகன் எந்த மாற்றமும் இன்றி அந்த நேரத்தை, சூழலை கையிலெடுத்துக்கொண்டதோடு இரு பெண்களிடமும் நலம் விசாரித்துவிட்டு இருவரின் திணறலைச் சமாளித்து ஐடாவோடு அங்கிருந்து அகன்றவன், மணமக்களைக் காண ஐடாவை அழைத்துச் சென்றான்.

          மற்ற இரு பெண்களுக்குமே ஐடாவை ரீகன் தாங்கியது மிகுந்த வெம்மையை மனதிற்குள் உண்டு செய்தது.  ஐடா அவன் மனைவி என்ற செய்தி கசப்பானதாக உணர்ந்த தருணமது.

          அஸ்வின், நான்சி, ஜான்வி மூவரோடு நான்சியோடுடனான ரீகனது நெருக்கத்தையும், ஜான்வியுடனான ரீகனது உறவையும் அறிந்தவர்களும், ரீகனையும் ஐடாவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தனர். 

ஐடாவின் முகமாறுதல் அங்கிருந்து அகன்றபின்பும் மாறாமல் இருப்பதைக் கண்ட ரீகன் அவளின் காது பக்கமாகக் குனிந்து, “ஹனி… ஏன் ஒரு மாதிரியா இருக்க… எதாவது பிரச்சனையா?  ஹாஸ்பிடல் போகலாமா?” என்று கேட்டபிறகே தன்னை மீட்க முனைந்தாள்.

மணமக்களுக்கு எடுத்து வந்திருந்த பரிசைக் கொடுத்துவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தவர்கள் அங்கிருந்த டிஜிடல் மற்றும் ட்ரோன் கேமாராக்களில் தங்களின் வரவைப் பதிவு செய்துவிட்டு இறங்கினர்.

          சற்று தேறியதுபோல முகத்தை வைத்திருந்த ஐடாவை உண்ண அழைத்தபோது, “எனக்கு பசியில்லை ரீகன்.  நீங்க சாப்பிட்டு வாங்க.  நான் இங்கேயே இருக்கேன்”

          மனைவியின் முகத்தை ஆராய்ந்தவன், “ஹாஸ்பிடல் போவோமா ஹனி” என்றதும், மறுத்த மனைவியைக் கண்டு, “அப்ப வீட்டுக்கு கிளம்பிரலாம்” என்று தயங்காமல் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான் ரீகன்.

          ரீகனது இந்த மாற்றம் அவனை அறிந்த அனைவருக்குமே புதிது.  குறிப்பாக நான்சிக்கும், ஜான்விக்கும்.  இருவரும் தங்களோடு அவனது இந்த ஒட்டாத தன்மையில் உள்ளம் வெகுண்டுபோய் அமர்ந்திருந்தனர்.

          ஐடாவிற்கும் அதே நிலை. ரீகனைப் பற்றி அறிய நேர்ந்தபோது அவனையே கவனித்துப் பார்த்தவளுக்கு அத்தனை ஏமாற்றம்.  சின்ன அதிர்ச்சி, தயக்கம் எதுவுமின்றி அந்த இடத்தில் அவன் நடந்துகொண்டதை ஐடாவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள்.

          மனைவியின் அமைதியின் பின்னணி ரீகன் ஒருவாறாகப் புரிந்துகொள்ள, ஐடாவிற்குள் புயல்.

          ஐடாவிற்கு தன் மீதான அன்பால், பொசசிவ்வான மனதால் மற்ற பெண்கள் வந்து பேசியதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாமல் இந்த மாற்றம் என எண்ணியிருந்தான் ரீகன்.

          ஐடாவிற்குள் அந்த ஜான்வி என்பவளால் வின் என்று அழைக்கப்பட்டவனே தனது கணவன்தான் என்பதோடு, நான்சியின் எக்ஸ்ஸைப் பற்றி அவ்வப்போது அவள் எக்சைட் ஆகிப் பேசிய வார்த்தைகளை நினைவு கூர்ந்து, கோர்த்து என மூழ்கி அதனால் உண்டான அருவெறுப்பு மற்றும் சினத்தால் அறைக்குள் அடைந்து போயிருந்தாள்.

          புயலடிக்கப் போவது தெரியாமலேயே வீட்டிற்குள் நுழைந்தவன் எதிர்கொண்ட ரூபி பாட்டியிடம் அலுவலகம் சார்ந்த சில கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு உண்ணச் சென்றான்.

அங்கு ஐடா இருப்பாள் என்றெண்ணிச் சென்றவன் மனைவியைக் காணாததால் அவளைத் தேடிச் செல்ல எழ, ரூபி எழுந்தவனின் தோளில் அழுத்தி அமரச் செய்தார்.

“ரெண்டு பேரும் மேரேஜ்ல சாப்பிடலையா?” என்று கேட்டதோடு, “நான் அவளை வரச் சொல்றேன்.  நீ சாப்பிடு” என்றபடியே ஐடாவைக் காண அவளின் அறை நோக்கி நடந்தார் பாட்டி.

தனது வாழ்வில் நடந்த விசயங்கள் இனி நடக்க இருக்கும் விசயங்களைப் பாதிக்கப்போவது அறியாமலேயே ரீகன் மதிய உணவை உண்ணத் துவங்கியிருந்தான்.

அவற்றை அறிய நேர்ந்த அவனது மனைவி உண்ணாவிரதத்தைத் துவங்கியது அறியாமலேயே!

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!