இளைப்பாற இதயம் தா!-18ஆ

இளைப்பாற இதயம் தா!-18ஆ

இளைப்பாற இதயம் தா!-18B

          விழித்தவளின் பார்வையில் அவளின் படுக்கை அருகே அமர்ந்து அதில் தலை கவிழ்ந்தபடி இருந்த ரீகனைத்தான் ஐடா காணும்படி நேர்ந்தது.

அவளுக்குத்தான் உள்ளுணர்வாக அவன் வந்ததை அறிந்திருந்தமையால் ஆச்சர்யமாகத் தோன்றவில்லை.

இரு தினங்களுக்கு முன் ஐடாவின் தீர்மானமான முடிவைக் கேட்டு தனது முடிவை உரைத்துவிட்டு வெளியே சென்றவன்தான்-

தனது தவறை எண்ணி வருத்தத்தோடு அமர்ந்துவிட்டவனுக்குள் மிகுந்த போராட்டம். தான் ஒன்று நினைத்து தவறை ஒத்துக்கொள்ளாமல் ஐடாவிடம் சாதிக்க… அதுவே இன்று தங்களின் பிரிவிற்கு பெருங்காரணமாக அமையுமென்று தெரியாமல்போனதை எண்ணிய கலக்கம்தான் அது.

ஐடா பங்களூர் சென்றபோது தான் அடைந்த வேதனைகள் இன்னும் மறக்கவில்லை அவனுக்கு. விவாகரத்து கோரும் மனைவியின் வார்த்தைகளை நினைக்கவே முடியாத பாரம் நெஞ்செங்கும்.

இதற்குமேல் ஐடாவிடம் கெஞ்சவோ சமாதானம் செய்யவோ ரீகனுக்கு முடியும் என்று தோன்றவில்லை.  இறங்கிச் செல்வதை தலையிறக்கமாக அவன் நினைக்கவில்லை.  ஆனால் ஐடாவிற்கு தொந்திரவாக எதையும் செய்ய மனம் ஒத்துழைக்க மறுத்தது.

அவளின் முடிவு அவனுக்கு வருத்தத்தையும் துன்பத்தையும் வாரியிறைத்தாலும், அவளை அந்நிலைக்கு கொண்டு செல்ல நினைக்கவில்லை.

தனது பிடிவாதம் அவளை தன்னிடமிருந்து மேலும் விலக்கிவிடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கையும் அவனை மேற்கொண்டு அவளிடம் இதைப்பற்றிப் பேசத் தடுத்தது.

இடைவிடாத போராட்டங்கள் அவனுக்குள்.  அந்த நேரத்தில் ஐடா தேவகோட்டை செல்ல இருப்பதை பாட்டி கூறக் கேட்டவன் மேலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானான். 

நேரத்தை நெட்டித்தள்ள அரும்பாடாக இருந்தது.  ஒரு நாளைக்கே இப்படி என்றால் அவளில்லாத நாள்களை அவனால் நினைக்கவே பயங்கரமாக இருந்தது.  இரவானதும் வீட்டிற்கு கிளம்ப மனமின்றி ஐடாவைக் காண தேவகோட்டைக்குச் செல்ல எண்ணி பயணத்தைத் துவங்கியிருந்தான்.

இந்தப் பயணம் அவனுக்காக… அவள் இல்லாத வாழ்வை நினைக்க முடியாமல் சித் ஸ்ரீராமின் குரலைக் கேட்டபடியே பயணித்தான்.

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

நீ இல்லா நேரம்
அது நிலவே இல்லா வானமே
இரண்டும் இருண்டு போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

உன்னில் துலைந்த என்னை
உடனே மீட்டுகொடு
இல்லை என்னுள் நீயும்
அழகாய் உடனே துலைந்துவிடு

ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஹா

கடல் மண் போல் நீ
என்னை உதறி சென்றாலுமே வருவேன்
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன் வருவேன்

உன்னை தேடி அலைகின்றேனே
எங்க சென்றாயோ
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே
திருப்பி வருவாயோ

விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம்
அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி
நம்புடி நீயும்
உன்ன நம்புறேன் நானும்

என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

எத்தனை முறை இந்த ஒரே பாடலைக் கேட்டாலும் ஐடா அருகில் இல்லாத வெறுமையை வேறு எதனாலும் சரிசெய்ய முடியாது என்பதை நம்பியவன் பாடலின் உதவியோடு தேவகோட்டையை நோக்கி அசுர வேகத்தில் தனது ஜாகுவாரில் வந்துகொண்டிருந்தான்.

ஆண்கள் அழுவதை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை.  ஆனால் அழுதான்.  எதனைப் பற்றியும் அவனால் யோசிக்க முடியவில்லை.

தவறுகளை செய்யும்போது இருந்த துணிச்சல், அவளில்லாமல் அவன் வாழ  ஒத்துழைக்காமல் எங்கோ மறைந்து ஒழிந்து போனதை அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.ள

பசி மறந்து போனது.  சுற்றம் நினைவில்லை.  ஐடா மட்டுமே நினைவெங்கும் நிறைந்திருந்தாள்.  அத்தனை இகழ்ச்சியோடு தன்னைப் பார்த்து அவள் கேட்ட கேள்விகள் அப்போது கோபத்தை உண்டாக்கியிருந்தாலும் அவனுக்கு அவனே சமாதானம் சொன்னான்.

‘அவ ரொம்ப நல்லவ! அந்த நல்லவளுக்கு ஏத்தவன் நான் கிடையாது.  வந்ததுல இருந்து என்னை ஒரு குழந்தையப் போல ரொம்ப கேர் எடுத்துப் பாத்துக்கிட்டா!

நான் செஞ்சது தெரியறவரை அவ எதுக்காகவும் என்னை ஒதுக்கினது கிடையாது.  நான் பண்ணதை அவளால சட்டுனு ஜீரணிக்க முடியலை!  அதான் எம்மேல கோபமா இருக்கா!  ஆனா அவளால என்னை வெறுக்க முடியாது!

அவ ரொம்ப ப்ரஷ்ஷியஸ்.  எனக்கு ஆண்டவன் கொடுத்த அற்புதமான தேவதை.  அவளை நான் யாருக்கும் எதுக்காகவும் விட்டுத்தர மாட்டேன்’ என்பதுதான் அது.

நேரம் பார்க்காமல் விரட்டி வந்தவனின் கண்களில் பட்டது என்எஸ்பிஎன் டிரான்ஸ்போர்ட் எனும் பேருந்தின் பின்பக்க போர்டு. அதனைப் பார்த்ததும் நெஞ்சில் பதற்றம் குடியேறியிருந்தது.

‘பஸ் இந்நேரம் ட்ரிச்சிக்கிட்டல்ல போயிட்டிருக்கும்.  இன்னும் ஏன் இங்க நிக்குது’ என நினைத்தபடியே வண்டியை ஸ்லோ செய்து அருகே வந்தவனின் கண்களில் சில பத்திரிக்கை அன்பர்கள், காவல்துறை மற்றும் வாலண்டியர்ஸ் விழுந்ததும் உயிர்போன வேதனையோடு வண்டியை ஓரங்கட்டிவிட்டு சட்டென இறங்கி ஓடிவந்தான்.

‘நிறைய பேருக்கு அடி பலம்.  வயசானவங்க மூர்ச்சை ஆகிட்டாங்க.’ எனும் பேச்சு காதில் விழ ரீகனின் தலையில் இடி இறங்கிய உணர்வு.  ஏனெனில் அந்தப் பேருந்து தேவகோட்டை வழியே இராமேஸ்வரம் செல்லும் தனியார் ஆம்னி பேருந்து.

அந்த நிறுவனப் பேருந்தில் அவனும் சில ஆண்டுகளுக்கு முன் பயணித்திருந்த அனுபவம் இருந்தமையால் உடனே இறங்கி விசாரிக்க, ‘கொஞ்ச நேரம் முன்ன அடிபட்டவங்க எல்லாத்தையும் விழுப்புரம் ஜிஎச்கு கொண்டு போயிருக்காங்க’ எனும் செய்தி கேட்டு, முன்புறம் நொறுங்கி கண்ணாடித் துகள்களாகக் கிடந்த வண்டியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஏறிப் பார்வையிட்டான்.

உள்ளே பார்வையை விட்டவன் கண்களில் பட்டது ரத்தம் சிதறிக்கிடந்த ஐடாவின் ஹேண்ட் மற்றும் ட்ராலி பேக்தான்.  அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் விசயத்தைக்கூறி அதற்கான வழிமுறைகளைச் செய்தபின் அவற்றைத் தன்னோடு எடுத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.

          விழுப்புரத்திற்கு அருகே விபத்து நடந்திருந்ததால் காயம் பட்ட அனைவரையும் முதலில் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்திருந்தனர்.

மருத்துவனைக்கு விரைந்து வந்தவன் மயங்கியிருந்தவளைப் பார்த்துப் பதறிட, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை அவனைத் தடுத்து அதன்பின் ஐடாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து அழைத்து வந்திருந்தான்.

இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும் மருத்துவமனை ஆதலால் ஐடாவை இங்கு சேர்த்து உரிய சிகிச்சையினைத் தொடர ஒப்புதல் கையொப்பம் இட்டிருந்தான்.

அதன்படி உடனே சிகிச்சை துவங்கியதால் இரத்த விரயத்தைத் தடுத்ததோடு, மாற்று இரத்தம் ஏற்றியதால் சற்று நேரத்தில் கண் விழித்திருந்தாள் ஐடா.

அவனது கேசத்தை அறியாமல் தொட்டதை உணர்ந்து எழுந்தவன், அவளை நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் அவன் முந்தைய தினம் இரவு முழுவதும் உறங்காமல் இருந்ததை அவளுக்குச் சொன்னது.       

          அவளுக்கு இதுவரை தோன்றிய அனைத்தும் கனவென்று எண்ணி எழ முயற்சிக்க, அவளின் உடம்பில் ஏற்பட்டிருந்த ஆழமான சிராய்ப்புகள், கீறல்கள் அனைத்தும் உண்டாக்கிய வேதனையை உணர்ந்து, ‘ஆ…’ என்று முணங்கினாள்.

          அவள் தேவை உணர்ந்து வேண்டியதை அருகே எடுத்துத் தந்தான்.  அவள் கேளாமலேயே ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான்.

          அவள் பயணித்த பேருந்து, எதிரே வந்த காரோடு நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த மூவர் அந்த இடத்திலேயே மரணித்திருக்க, பேருந்தில் பயணித்தவர்களுக்கு உயிர்ச்சேதம் எதுவுமின்றி காயங்களோடு தப்பியிருந்தனர்.

          ஓட்டுநருக்கு பின் இருந்த வரிசையில் அமர்ந்திருந்ததால் ஐடாவிற்கு சற்று கூடுதலாகவே காயங்கள் உண்டாகியிருந்தது.

          ஐடாவிற்கு ஒரே பக்கமாக படுத்திருந்ததில் அசௌகர்யமாக உணர்ந்து ரீகனைப் பார்க்க, டிரிப்ஸ் ஒரு கையில் ஏறிக்கொண்டிருந்தது.  மறுகையில் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

ஐடாவிற்கு வலிக்குமே என்கிற எண்ணத்தில் அவளைத் தொடத் தயங்கியவன், எழுந்து உடனே டியூட்டி நர்ஸிடம் சென்று ஐடா எழுந்ததைச் சொல்லி அவரையும் உடன் அழைத்து வந்தான்.

நர்ஸிடம் ஐடாவிற்கு வலி தோன்றாமல் எங்ஙனம் திருப்பி படுக்க வைப்பது என்பதைக் கேட்டுக்கொண்டவன், அதன்பின் தானாகவே அவளைக் கவனித்துக்கொண்டான்.

          ஒன்பது மணிக்கு ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்கள் குழு ஐடாவைப் பரிசோதித்துவிட்டு, “இவங்களை நார்மல் வார்டுக்கு கொண்டு போயிரலாம்” என்று கூறிட அதன்பின் ஐடாவை நார்மல் வார்டிற்கு மாற்றியிருந்தனர்.

          வயிற்றுக் குழந்தையின் நிலையறிய மகப்பேறு மருத்துவரைக் காண பரிந்துரை செய்தனர். 

          மகப்பேறு மருத்துவர் ஐடாவின் உடலைப் பரிசோதித்துவிட்டு, “ஒரு ஸ்கேன் பாத்திரலாம்” என்றிட, அதற்கான காத்திருந்தபோதுதான் ரீகனின் பாட்டி ஐடாவிற்கு அழைக்க அவளின் பேகில் இருந்த திறன்பேசியை எடுத்து ஐடாவிடம் நீட்டினான் ரீகன்.

          இரண்டொரு வார்த்தைகளில் பேசிவிட்டு வைத்தவள் அதன்பின் ஸ்கேன் செய்து ரிப்போர்ட் வரும்வரை மிகுந்த பயத்தில் இருந்தாள்.  அவளின் பயம் உணர்ந்த ரீகன், “ஒன்னுமாகாது.  பயப்படாத” என்று ஆறுதல் கூறி அருகிலேயே இருந்தான்.

          பன்னிரெண்டு மணியளவில் ஸ்கேன் ரிப்போர்ட் வந்தபின் மகப்பேறு மருத்துவரைக் காணச் சென்றனர்.  அவரும், “குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்ல.  நார்மல் பர்சன்கு குடுக்கற மெடிசன்ஸ் இப்போ உங்களுக்கு குடுக்க முடியாது. பட் டோஸ் எடுத்தாதான் உங்களுக்கு பெயின் குறைஞ்சு இந்த காயமெல்லாம் சரியாகும்” என்றதோடு சில மருந்துகளை பரிந்துரைத்தார்.

          அன்று முழுவதும் அங்கிருந்தவளை அருகே இருந்து பார்த்துக்கொண்டவன் அவளிடம், “இங்கயே இருக்கலாமா? இல்லை சென்னைக்குப் போயிரலாமா?” என்று கேட்டதும் ஐடா வயிற்றைத் தடவிப் பார்த்தபடியே, “சென்னைக்கே போயிரலாம்” என்று கூறியதைக் கேட்டு மறுநாள் காலையில் இதுவரை பார்த்துவந்த மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்ந்திருந்தான் ரீகன்.

          வரும்போது ஐடாவை அவனது வாகனத்தில் வைத்து அழைத்து வரமுடியாது என்பதை உணர்ந்து, அம்புலன்ஸிலேயே அவளை அழைத்துக்கொண்டு அவளோடே வந்திருந்தான்.

          டிரைவரை ஏற்பாடு செய்து தனது வாகனத்தை சென்னைக்கு எடுத்து வரச் செய்திருந்தான்.

இதற்கிடையே ரூபி பாட்டி முந்தைய தினம் ரீகனுக்கு அழைத்துப் பேசியதால் சென்னை வந்ததும் வீட்டிற்கு வந்தவன், ஐடாவிற்கு வேண்டிய சிலவற்றை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருந்தான்.

          பாட்டியின் வயோதிகத்தை உணர்ந்து அவரிடம் எதையும் சொல்லாமல் விட்டிருந்தான்.

          மருத்துவமனையில் தங்கியிருந்தவளுக்கு ஐடா கேளாமலேயே, அவளுக்கு வேண்டிய அனைத்தையும் குறையில்லாமல் பார்த்துக்கொண்டான் ரீகன்.

ஆரம்பத்தில் வேதனையிலும் மருந்துகளின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்திலும் இருந்தவள் ரீகனை ஒதுக்கவோ வெறுக்கவோ செய்யாமல் அவனது பணிவிடைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டிருந்தாள்.

          உடல்நிலை சற்று தேறியது முதலே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டவளை நெருங்க முடியாமல் தள்ளியே நின்றான் ரீகன்.

‘இத்தனை நாள் மயக்கத்துல இருந்தவ, இன்னைக்குத்தான் தெளிஞ்சிருக்காபோல… அதான் உர்ராங்கோட்டான் மாதிரி முகத்தை வச்சிக்கிறா’ என்று ஒதுங்கியே இருந்தான்.  இந்த நேரத்தில்தான் பாட்டிக்கு ஐடாவைப் பற்றிய விசயம் தெரிய வந்து ரீகனுக்குப் பேசியிருந்தார்.

          தன்னைப் பார்த்தாலே முகத்தைக் காட்டுபவளிடம் தான் என்னவென்று சொல்லி அழைப்பை ஏற்கச் செய்வது என்று புரியாமல் ரீகன் வெளியிலும், உறக்கத்தில் ஐடாவும் இருந்தனர்.

          ரூபி பாட்டிக்கு நடந்தது எதுவும் தெரியாமல் மிகுந்த குழப்பத்தோடும், கவலையோடும் இருந்தார்.

          ஐடாவிற்கு அவளின் அலைபேசியில் வரும் அழைப்பின் சத்தம் கேட்டும் எழ முடியாத உறக்கம்.  மருந்தினால் உண்டாகும் அசதி.  அவள் எழும்வரை ரீகன் அவள் நினைத்தாற்போல அவளருகே வந்து பார்த்துக்கொண்டான்.

          அவள் எழக்கூடும் என்பது புரிந்ததுமே வெளியில் சென்றுவிட்டான்.  உள்ளே வெளியே விளையாட்டு தம்பதியரிடையே சிறப்பாக நடைபெற்றது.  எழுந்தவள் அவளின் பேசியை எடுத்துப் பார்க்க பாட்டியிடம் இருந்து தவறிய அழைப்புகள்.

          உடனே பாட்டிக்கு அழைத்துப் பேச எதையும் மறைக்கும் உத்தேசமில்லாத ஐடா, “ஹாஸ்பிடல்லதான் இருக்கேன் பாட்டி” என்று உண்மையைப் போட்டுடைக்க, பதறிப்போன பாட்டி எதற்காக அங்கே இருக்கிறாய் என்று விசாரிக்க, ரீகன் அனைத்தையும் கூறியிருப்பான் என்று எண்ணி அனைத்தையும் பாட்டியிடம் சொல்லியிருந்தாள்.

          ரூபி பாட்டி பேசிய பிறகுதான் ஐடாவிற்கு விசயம் பிடிபட, அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் பாட்டி மருத்துவனைக்கு விரைந்திருந்தார்.

***

          நடந்த விசயங்களை எண்ணி கவலைப்படுவதா, தற்போதும் அவனை விரட்டும் ஐடாவை எண்ணி கவலைப்படுவதா என்று புரியாமல் பாட்டி இருவருக்கிடையே அல்லாடிக் களைத்தார்.

          ஐடாவின் உடல்நிலை ஓரளவு தேறியபின்பு டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என்று பாட்டியும் பேரனும் நினைத்திருக்க ஐடா எடுத்த முடிவினால் இருவருக்கும் மண்டை காய்ந்தது.

          ‘சாரி பாட்டீ.  இனி அங்க வர ஐடியா எனக்கு எப்பவுமே இல்லை’ என்று பட்டெனக் கூறியிருந்தாள் ஐடா.

          ஐடாவை தனித்து அவளின் தாய் வீட்டிற்கு விடும் உத்தேசமின்றி பாட்டியும் ரீகனும் அவர்களின் காரில் அழைத்துக்கொண்டு தேவகோட்டை விரைந்தனர்.

          அங்கு சென்றபின்புதான் ஸ்டெல்லாவின் உடல்நிலை பற்றி ஐடாவிற்கும், ஐடாவைப் பற்றி அவளின் தாய் ஸ்டெல்லாவிற்கும் தெரிய வந்திருந்தது.

          அனைத்தும் தெரிந்திருந்தாலும் ரூபி பாட்டி தெரிந்தாற்போல காட்டிக்கொள்ளாவே இல்லை.

          தாயும் பிள்ளையும் மாறி மாறிப் பதறி ஒருவரையொருவர் தேற்றிக் கொண்டார்களே அன்றி… இருவரையும் பார்த்து சாதாரணமாகக் கடந்து போயிருந்தார் ஐடாவின் தந்தை ஆல்வின்.

          ஐடா தனது வருத்தங்களையோ, ரீகனைப் பற்றியோ தற்போது அவளின் தாயிடம் கூறமாட்டாள் என்பது பாட்டி, பேரன் இருவருக்கும் திண்ணமாகத் தெரியவர, இருவரும் இரண்டு தினங்கள் தங்கியிருந்துவிட்டு சென்னைக்குத் திரும்பியிருந்தனர்.

          தனது வருத்தங்களை தாயிடம் கூறி ஆறுதல் பெறும் நோக்கில் வந்தவளுக்கு எதையும் பேச முடியாத நிலை.

          அதனைக்காட்டிலும் பல புதிய விசயங்களை வெவ்வேறு தருணங்களில் காண நேர்ந்தவளுக்கு அங்கிருக்கவே முடியாத நிலை.

          அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐடா என்ன முடிவெடுத்தாள்?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!