இளைப்பாற இதயம் தா!-6

இளைப்பாற இதயம் தா!-6
என்னடா இது யாரு இந்த போட்டோவில இருக்கறதுனு நீங்க கேக்கறது எனக்குக் கேக்குது.
அது நமக்கு ரொம்ப நெருக்கமானவங்கதான் மக்களே. இவங்களுக்கு இன்னைக்கு பதினெட்டாவது திருமண நாள். கொஞ்சம் வாழ்த்துங்களேன்…
இளைப்பாற இதயம் தா!-6
உறவுகள் கிண்டல் செய்ய மணமக்கள் இருவரும் ரீகனது அறையை நோக்கிச் சென்றனர். ஐடாவிற்கு இத்தனை நேரம் இருந்த மனநிலை மாறி, தயக்கமும் தவிப்புமாக வேறு வழியின்றி ரீகனோடு சென்றாள்.
திருமணம் பற்றிய கனவுகளோ, எதிர்பார்ப்புகளோ அவளுக்குள் இல்லாமல் இருந்ததால் அத்தகைய நிலையில் இருந்தாள் ஐடா.
அவள் தந்தையோடுகூட அதிக ஒட்டுதலாக வளர்ந்தவள் இல்லை ஐடா. அனைத்திற்கும் தாயை அண்டியே பெரும்பாலும் வளர்ந்திருந்தவளுக்கு ரீகனோடு தனியறைக்குள் செல்வது இலேசாக பயத்தையும் படபடப்பையும் கொடுத்தது என்னவோ உண்மை.
சாதாரணமாக ரீகனோடு பேசுவது ஒன்றும் அவளுக்கு வித்தியாசமாகத் தோன்றியிருக்கவில்லை. ஆனால் ஒரே அறையில் முதன் முறையாக ஒரு ஆணோடு தங்குவது என்பது ஒரு பிரளயத்தையே மனதிற்குள் உண்டு செய்திருந்தது.
தேவாலாயத்தில் நடத்திய திருமணத்திற்கு முந்தைய வகுப்புகளும், தாயின் பேச்சுகளும் மனதில் ஓடினாலும், அதை மீறி ஏதோ இலகுத்தன்மையில்லாத நிலை அவளுக்குள்.
குகைக்குள் இருப்பது யாரென்று தெரியாமலேயே செல்லும் பாதசாரியின் நிலையில்தான் ஐடாவும் இருந்தாள். ரீகனை வெறுக்கவில்லை. அதற்காக அவனோடு ஒட்டுதலும் வந்திருக்கவில்லை.
அறைக்குள் நுழைந்ததுமே குப்பென்று நாசியைத் தொட்டது நறுமணம். அது லிவ்விங் ஏரியா போன்ற அமைப்பில் இருந்தது. அத்தோடு இரண்டு வாயில் தெரிந்த அறைப்பகுதி கண்ணிற்கு தென்பட்டது.
அதில் ஒரு பகுதியை நோக்கி அழைத்துச் சென்றவன், வாயிலறருகே அவளையும் நிறுத்தி உள்ளே பார்த்தான்.
மலர்கள் மற்றும் ரூம்ஃப்ரெஷ்னர் கலந்து வந்த வாசனை அங்கிருந்துதான் வந்திருந்தது. அந்த நறுமணம் ரீகனுக்குள் கிளர்ச்சியையும், ஐடாவிற்குள் மிரட்சியையும் தந்தது.
பெரிய அறை!
மரத்தாலான அந்த கட்டிலில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரீகன் ஐடாவை தன் தோளோடு அணைத்து ஆதரவாகப் பிடித்தபடி அறைக்குள் அழைத்துச் சென்றிருந்தான்.
அடம் செய்யும் குழந்தை இழுத்த இழுப்பிற்கு செல்லாமல் முரண்டுவதுபோலத்தான் ஐடாவும் இருந்ததை ரீகனும் உணர்ந்தான். அவளின் அந்த தயக்கம்கூட அவனுக்கு பிடித்திருந்தது.
ஐடா திரைப்படம் என்று பார்த்திருந்திருந்தால்கூட எதாவது அனுமானம் அன்றைய தினத்தில் நடக்கும் நிகழ்வு பற்றி கற்பனையாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அப்படி எதையும் பார்த்து வளர்ந்திராதவளுக்கு மனமெங்கும் கிலி பரவிப் படர்ந்திருந்தது.
ரீகன் மனைவியை இலகுவாக்க எண்ணி, “உன்னோட ஒரு ட்ராலி பேக் மட்டும் அந்த ரூம் உள்ள கொண்டு வந்து வைக்கச் சொன்னேன்” அடுத்த அறையை நோக்கி கைகாட்டிக் கூறினான்.
“இங்க நாம எப்பவாவது வரதோட சரி. அதனால எப்பவும் நாலு செட் ட்ரெஸ் மட்டும் இங்க இருக்கற மாதிரி பாத்துக்கோ.” என்றபடியே நடந்து சென்று அடுத்த அறையில் இருந்த ட்ராலியை அவளருகே இழுத்து வந்தவன், “ரொம்ப டயர்டாத் தெரியற” என்றபடியே அவளின் அருகே வந்தான்.
முகத்தின் முன் ஆடிய அவளது முடியை ஒதுக்கி விட்டபடியே, “நாளை மறுநாள்தான் சென்னைக்கு கிளம்பணும். சோ ரிலாக்ஸா ரெஸ்ட் எடுக்கலாம். இப்ப ட்ரெஸ் சேஞ்ச் பண்றதா இருந்தா பண்ணிட்டு வா” என்றபடியே வரவேற்புக்கு போட்டிருந்த ஆடையோடு அடுத்த அறைக்குள் நுழைந்தான்.
ரீகன் அவளுக்கு உடை மாற்ற அவகாசம் கொடுக்க எண்ணியே அடுத்த அறைக்குள் நுழைந்திருந்தான்.
வரவேற்புக்கு அணிந்திருந்த ஆடை மற்றும் சிறியளவில் போட்டிருந்த ஆபரணங்களோடு அப்படியே படுக்க முடியாது என்பது ஐடாவுக்குப் புரிந்தது. தனது ட்ராலி பேகில் இருந்த இரவு உடையோடு பைபிளையும் எடுத்தவள் ரீகன் சென்ற அறையின் பக்கமாகப் பார்த்தபடியே நின்றாள்.
ஆடையை இங்கு மாற்றலாம். ஆனால் இடையில் ரீகன் வந்துவிட்டால்… அப்படி யோசித்து ரீகன் வரும்வரை அறையைச் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினாள் ஐடா.
அறை மிகவும் சுத்தமாக இருந்தது.
படுக்கையில் தூவப்பட்டிருந்த மலர்களைப் பார்த்து, ‘எதுக்கு இப்படியெல்லாம் இதுல தூவி விட்ருக்காங்க. அதுல எப்படி படுக்கறது? எல்லா பூவும் கசங்கி வீணாகிருமே இதுல படுத்தா’ இப்படித்தான் ஐடாவிற்குத் தோன்றியது.
ஆறுக்கு நாலு என்றளவில் படுக்கை இல்லாமல் அதைவிடப் பெரியதாக இருப்பதாகத் தோன்றியது ஐடாவிற்கு. கிங் சைசைவிட பெரியதாக இருந்தது. ‘இவங்க இருக்கற ஹைட்டுக்கு இது செஞ்சு வாங்கன பெட்டாத்தான் இருக்கும்’ அந்த அளவைப் பார்த்து அப்படித்தான் ஐடாவிற்கு எண்ணத் தோன்றியது.
மர வேலைப்பாடுகள் அந்த மரக்கட்டிலின் மேற்பகுதியில் மிகுந்த கலைநயத்தோடு இருந்ததை அப்போதுதான் கவனித்துப் பார்த்தாள். மேலாடையாக கச்சையோடு காணப்பட்ட பெண் தனது கரங்களை பின்னோக்கி ஆடவனது கழுத்தில் மாலையாக்கி இருந்தாள்.
ஆடவன் பெண்ணது இடையினைப் பிடித்த கரங்களோடு பெண்ணது கழுத்துப் பகுதியில் முகம் பதித்திருப்பதுபோல அந்த செதுக்கிய சிற்பம் அமைந்திருந்தது.
சுற்றிலும் சோலைபோல காட்சியமைப்பு செதுக்கப்பட்டிருந்தது. ‘இது என்ன இப்படியொரு ரசனை. இந்த ரூமுக்குள்ள வேற யாராவது வந்து பாத்தா நல்லாவா இருக்கும்’ என்பதுபோலத் தோன்ற அப்படியே அதையே பார்த்து முகம் கூம்ப நின்றிருந்தாள்.
அதேநேரம் அங்கு வந்தவன் ஐடாவிடம், “நீ இன்னும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலையா?” என்றபடியே அவள் பார்வை போன திசையையும் அவளது முகத்தையும் பார்த்தான். படித்தான்.
அவளது முகத்தில் இருந்த அசௌகர்ய உணர்வை உணர்ந்துகொண்டவன், “இந்த ரூம் இதுவரை எனக்கானது. சோ இங்க யாரும் வரமாட்டாங்கனு எனக்குப் பிடிச்சமாதிரி கார்பெண்டர்கிட்ட சொல்லி ஸ்பெஷலா செஞ்சது இந்த காட்.
அதனாலதான் இப்படி யுனிக்கா ஒரு டிசைன்” மனைவியைப் பார்த்து கண்சிமிட்சி சிரிக்க, மேலும் அதிர்ந்த பார்வைதான் ஐடாவிடம்.
அதைக் கவனித்தாலும் கவனியாததுபோல அருகே வந்து தோளோடு அணைத்தவன், “ட்ரெஸ் சேஞ்ச் பண்ண ஹெல்ப் பண்ணவா?” முன்பைவிட குறைந்த குரலில் மனைவியின் காதருகே குனிந்து கேட்க, மேலும் பதறி விதிர்விதிர்த்துத்தான் போயிருந்தாள் ஐடா.
அப்போது தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வர, அதனை நினைத்து கணவனது கேள்வியை ஆமோதிக்கவா? அல்லது தனது தயக்கத்தை முன்னிட்டு மறுக்கவா என்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தாள்.
ரீகனுக்கு ஐடா ஒரு வளர்ந்த குழந்தை என்பது தெளிவாகப் புரிந்தது. அவளை மற்ற பெண்களைப்போல எண்ணி சட்டென அணுகுவது தவறென்றும் புரிந்தது.
அவளை மிகவும் சங்கடத்திற்கு ஆழ்த்தாமல், “நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா ஹனி” என அவன் சென்று மாற்றிவந்த அறையை நோக்கி கைகாட்டினான்.
சட்டென அவளின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை ரீகனும் கவனித்தான். ‘இந்தக் காலத்துல இப்படி எப்படி வளர்த்திருக்காங்க’ என்று தோன்றவே செய்தது.
நெடுநேரமாகியது படுக்கை இருக்கும் அறைக்குள் ஐடா திரும்ப. அவசரம் காட்டாமல் ரீகன் படுக்கையில் படுத்தபடியே அவனது மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் ஐடா வரும்வரை.
ஆடை மாற்றி, சுத்தம் செய்து வந்தவள் இரவு பிரேயரையும் அங்கேயே முடித்துக்கொண்டு ரீகனது படுக்கை அறைக்குள் நுழைந்தாள். தாமதமானதற்கு எதுவும் ரீகன் சொல்வானோ என்கிற பதற்றமும் இருந்தது அவளுக்கு.
வந்தவள் ரீகனை நிமிர்ந்து பார்க்கவே தயங்கினாள். மெதுவாக அங்கு யோசனையோடு தயங்கி வந்து நின்றவளைப் பார்த்து, படுக்கையில் கை வைத்துக் காட்டியபடி, “வா ஹனி. எதுக்கு ஹெஸிட்டேசன்?” என்று கேட்டபின்பு சற்று அருகே வந்து நின்றவளின் கரங்களை மென்மையாகப் பற்றி தன்னருகே இழுத்தான்.
அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளால் முடியாமல் போக, குனிந்தவாறே அவன் இழுத்த இழுப்பிற்கு ரப்பரால் ஆன பொருளைப்போல மாறினாள்.
மேலும் அவனருகே வந்து நின்றவளை அப்படியே தனது மடியில் இழுத்து அமர்த்திக்கொண்டான். கூச்சம் காரணமாக அவளின் நெளிவு புரிய, “தூக்கம் வருதா?” என்றான்.
“ம்ஹூம்” இரண்டு புறமும் ஆட்டிய தலையைப் பிடித்து,
“என்ன ஆச்சு ஹனி? ரெண்டு பக்கமும் ஆட்டற?” அவளின் தயக்கம் போக்க எண்ணித் துவங்கிட,
“நத்திங்” என்று அவள் கூறியபோது வார்த்தைகளின் சத்தம் வெளிவரவில்லை.
ஐடாவைப் பார்த்துவிட்டு வந்தது முதலே அவனறியாமலேயே விரதம் காத்திருந்தான். அப்படி இருந்தவனுக்கு ஐடாவை அருகில் வைத்துக்கொண்டு தேமே என்று இருக்க முடியவில்லை எனும் நிலை.
அதுவும் அவளைத் தனது மடியில் இருத்திக்கொண்டு அவனால் கட்டுப்படுத்த நிச்சயம் முடியாது எனும்படியாக இருந்தவன், மெதுவாக அவளது மாசு மருவற்ற கன்னத்தில் இதமாக இதழ் பதித்தான்.
ஐடாவிற்கு முதன் முறையாக நரம்பு நாளங்களில் உண்டான மாற்றம் புதிதாய்…! ஆனால் ஏதோ இன்பமாய்…! புதியவன் தன் கணவன் என்பதால் அது இனிமையாய் ஆனதாய் நம்பினாள் ஐடா. ஆனாலும் புதிராய் அவளுக்குள் நிறைய கேள்விகள்!
அப்படி இருந்தபோதிலும் அவனோடு இழையாமல் இசைந்தாள். அவளது மேனியெங்கும் சிலிர்த்தது. ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்றெண்ணியவன், மடியில் இருந்தவளின் காதில் அடுத்து முத்தமிட்டான்.
சூடான அவன் மூச்சுக் காற்றிலேயே நடுங்கிப் போயிருந்தவள், அவனது இரண்டாவது முத்தத்தில் மேலும் ஒடுங்கி அமர்ந்திருந்தாள். அவனது கரங்கள் அவளது உடலை ஆசையாக வருடியது.
வருடல் இதமாக இருந்தாற்போலிருந்தாலும் ஏனோ அசௌகர்யமாய் உணர்ந்தாள் ஐடா. அத்துமீறத் துவங்கியிருந்தவனது கரங்களை கட்டுப்படுத்தக் கூடாது எனும் அறிவுறுத்தல் நினைவில் எழ, அமைதியாக தன்னை அவனோடு ஒத்துழைக்க மிகுந்த பிரயாசத்தோடு அமர்ந்திருந்தவள், “லைட் ஆஃப் பண்ணீறீங்களா?” மெல்லிய தடுமாற்ற குரலில் வினவினாள்.
அவளை மடியில் இருந்து மெதுவாக விலக்கியவன், விடிவிளக்கை மட்டும் போட்டுவிட்டு ஐடாவை நெருங்கியிருந்தான். ஆண் வாசனை அவளின் நாசியைத்தொட அதுவும் சுகவேதனையாய்!
“ஹனி…!” என்னும் அழைப்போடு அவளை படுக்கையில் தன்னோடு படுக்கச் செய்து இறுக அணைத்தபடியே, அவளோடு தன்னையும் காற்றுப்புக முடியாத இடைவெளியில் கொணர்ந்திருந்தான்.
மூச்சு முட்டுவதுபோல இருந்தது ஐடாவிற்கு. கண்களை இறுக மூடி, அவனது ஒவ்வொரு செய்கையையும் கடமையே என்று சகித்துக்கொண்டவாறு அவன் எப்போது தன்னை விடுவிப்பான் என்கிற எதிர்பார்ப்பில் மனம் முழுக்க படபடப்போடு காத்திருந்தாள்.
கன்னத்தில் இட்ட முத்தத்தில் அவளிடம் பெரிய மாற்றம் தோன்றியிருக்கவில்லை. ஆனால் ரீகன் அடுத்து அவளது இதழில் முற்றுகை இட அவளுக்குள்ளும் ஏதோ பெரிய மாறுதல்.
முதன் முதலாக அவளது உடலெங்கிலும் உண்டான மாறுதலை உணரும் நிலையில் ஐடாவின் மனம் அதில் லயிக்காமல், கணவனது செய்கையில் கூச்சமும், ஒவ்வாத உணர்வுமாக அவனோடு ஒத்துழைக்க முயன்றாள்.
ரீகன் அடுத்தடுத்து அவளது ஆடை களைய முற்பட, மேலும் மனம் குறுகுறுக்க தன்னையே குறுக்கி மறுத்தாள். மறுத்தவளை மறுத்து மனம் ஹனி எனும் மந்திரத்தை அவளிடம் ஓதி நினைத்ததை சாதிக்கும் வழி தெரிந்திருந்தான்.
அவளின் நிலை எண்ணியவளுக்கு கூசியது. ‘எங்கிட்ட என்னடா ஹனி’ எனும் கணவனது கேள்வியில் கூச்சத்தால் குறுக்கிய உடலை தனது தேகத்தின் வலுவால் உடலோடு அழுத்திப் பிடித்து நேராக்கியவனின் நோக்கத்திற்கு இசைந்து போனாள். அவன் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறினான்.
தனங்களை ஆக்ரமித்து, அதனோடு வாய்ச் சண்டை போட்டவனின் செயலைப் பொறுக்க முடியாமல் பின்னடைந்தவளின் தனங்களுக்குள் முகம் புதைத்திருந்தான்.
கூச்சம் அவளைத் தடுக்க, அவளை மீறி அவன் பின்னந்தலையில் இருந்த முடியை இறுகப்பற்றி இழுக்க முயன்று தனது கூச்சம் போக்க முனைந்தாள்.
ஹனி ஹனி என்று மிரற்றியபடியே அவ்வப்போது அவளது இதழ்களுக்கு அச்சாரம் தந்து அவளைத் தனதாக்கும் முழுமுயற்சியில் இறங்கினான்.
ஐடாவிற்குள் நிகழும் அதிவேக மாற்றங்களை அவளால் நம்ப முடியாமல், அதேநேரம் ரீகனது செயலை தடுக்க எண்ணிய மனதைக் கட்டுப்படுத்தி அவனுக்கு ஒத்துழைக்க முயன்றாள்.
வேதனை தோன்றி அவனிடமிருந்து விடுபடத் திமிறியவளை, இதமாக அணைத்துத் தேற்றி, லஞ்சமாய் அச்சாரம் தந்து, அச்சுவெல்லத்தை அசைந்தாடி களவாடியிருந்தான்.
அவனது வேகமும் அதனால் அவளது தேகத்தில் உண்டான மாற்றமும் இன்னும் புரியாமல் நடப்பதை உட்கிரகிக்க முடியாமல் திணறியவளை தனதாக்கியதோடு விடாமல் அவளைத் தன் கைவளைவில் வைத்துக்கொண்டான்.
அன்று காலை முதல் உண்டான அலுப்பு, தற்போது நடந்த விசயம் அனைத்தும் சேர்ந்து மேலும் ஐடாவைச் சோர்வடையச் செய்திருக்க, அவனது அணைப்பில் சட்டென உறக்கமும் வராமல் முரண்டு செய்ய விலக முயன்றாள்.
“என்னடா?” ரீகன்.
“இப்டியே படுத்தா எனக்குத் தூக்கம் வராது?” முயன்று தனது இயலாமையை அவனிடம் உரைத்துவிட்டாள். ஆனாலும் அவன் கோபித்துக்கொள்வானோ என்கிற எண்ணம்வேறு.
‘நடக்கிற விசயம் எதுவானாலும் அவங்களோட ஒத்துழைக்கணும். எதையும் அசூயைப் படாம ஏத்துக்கணும். மறுக்கறதோ, ஒதுக்கறதோ, அருவெறுப்பு படறதோ செய்யக்கூடாது. இது திருமணத்திற்குப் பின்ன எல்லா தம்பதிக்குள்ளயும் நடக்ககூடிய இயல்பான விசயந்தான். அதனால…’ என்று துவங்கிய அவளின் தாய் ஸ்டெல்லா… பெண் தன்னை எவ்வாறு சுத்தம் பேணவேண்டும் என்பதையும், கணவனது எதிர்பார்ப்பிற்கு எவ்வாறெல்லாம் இசைந்து போக வேண்டும் என்பதையும் அவள் சென்னையிலிருந்து வந்தது முதலே தனித்திருந்த நேரங்களில் மகளுக்கு எடுத்துரைத்தபடியே இருந்ததால் இத்தனை நேரம் பொறுமை காத்தாயிற்று.
ஆனால் அதன்பின்னும் தன்னை விடாமல் கரங்களுக்குள் கைதாக்கி வைத்திருந்தால் எப்படி உறங்குவது என்கிற எண்ணம் அவளை அப்படி பேசச் செய்திருந்தது.
ஐடாவின் நிலை அவனுக்குப் புரிந்ததும் விடுவித்தவன் சற்று உரசினாற்போல அவளருகே உறங்கியிருந்தான். ஐடாவிற்கு நடந்து முடிந்த நிகழ்வுகளை எண்ணிய கலக்கம்.
தாய் பேசிய தருணத்தின் ஆரம்பத்தில் அப்ப இதுல என்னோட பார்ட் ஆப் வர்க் என்னம்மா என்று கேட்ட மகளிடம், “அதெல்லாம் மாப்பிள்ளை பாத்துப்பார். நீ அவர் உங்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ற விசயத்துல அவருகூட கோவாப்ரேட் பண்ணு. வேற எதுவும் இல்லை” என்று கூறியிருந்தார்.
‘அப்ப இந்த மாதிர இது இனி தினம் தினம் நடக்குமோ… அந்த நேரமெல்லாம் பொறுமையா இருக்கணுமே’ என மனம் கலங்கியது. ஆனாலும் அப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது என்பதும் புரிந்திட, உறங்க முயன்றாள். ஆனால் ஏதோ ஒரு அசௌகர்யம். நீண்ட நேரம் புரண்டு புரண்டு உறங்க முற்பட்டுத் தோற்றாள். பிறகு எழுந்து கழிப்பறை சென்று சுத்தம் செய்து வந்து படுத்த பிறகுதான் ஐடாவால் உறங்க முடிந்தது.
பயண அலுப்போடு, தாம்பத்ய உறவின் அலுப்பும் சேர்ந்து அடித்துப் போட்டாற்போல உறங்கிப் போனவளுக்கு உறக்கத்திலேயே ஏதோ வித்தியாசமான உணர்வு. அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்ட கணவனது நெருக்கம் அவனது தேவையைச் சொன்னது.
‘இன்னொருக்காவா?’ இப்படித்தான் மனம் கேட்டது.
ஹனி எனும் மந்திரச் சொல்லால் அவளை மந்திரித்து மீண்டும் அவளைத் தனதாக்கிப் பிரிந்தவனை புரிந்துகொள்ள முயன்று தோற்றாள். சாதாரண பேச்சுகள்தான் இதுவரை இருவரிடையே. சற்று அவகாசம் தந்து தன்னை அணுகுவான் என்றே நினைத்திருந்தாள் ஐடா. ஆனால் அப்படி ஒன்று நடக்காமல் போனது வருத்தத்தைத் தந்தாலும் அதனை பெரிதுபடுத்தாமல் இருக்க தன்னைத் தயார் செய்தாள்.
அடுத்து விடியல்வரை குட்டித் தூக்கம். வழமைபோல அதிகாலையில் உறக்கம் கலைந்து எழுந்தவள் எழுந்ததும் குளித்து உடைமாற்றி வந்து காலை பிரேயருக்கு சற்று நேரம் ஒதுக்கினாள். பைபிள் வாசித்தாள். அது முடித்து வரும்வரை உறங்கிக் கொண்டிருந்த ரீகனை ஒரு கணம் நின்று பார்த்தாள்.
ஒரு பக்கமாக படுத்து அசந்து உறங்கிக்கொண்டிருந்தான். வெளியே செல்லவும் தயக்கமாக இருந்தது. ரூபியைத் தவிர வேறு யாரோடும் ஐடாவிற்கு நெருக்கமில்லை. சார்லஸ் மற்றும் அவனது மனைவி இருவரும் எந்த அறையில் இருக்கிறார்கள் என்பதும் தெரியாது. இவர்களது அறை எங்கு என்பது சரியாகத் தெரியாமல் வெளியில் சென்று யாரோடு இருப்பது என்று அறைக்கு வெளியில் இருந்த லிவிங் ஏரியாவில் வந்து அமர்ந்துகொண்டாள்.
கதவைத் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தாள். யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை. மீண்டும் அறைக்குள் வந்து கதவைத் தாழ் வைத்துவிட்டு மொபைலை எடுத்தாள்.
ஆம். அவளின் தாய் ஸ்டெல்லா அழைத்திருந்தார்.
மிஸ்டுகால் பார்த்து அழைத்தவளிடம் சாதாரணமான பேச்சுகள். தாயின் கேள்விகளுக்கு நன்றாகவே பதிலளித்தாள். மறுநாள் சென்னை செல்ல இருப்பது தெரிந்தாலும், அதனை தாயோடு பகிர்ந்துகொண்டவள் அத்தோடு வைத்துவிட்டாள்.
ஸ்டெல்லாவிற்கு மகளின் பேச்சில் எந்த மாறுதலும் தெரியவில்லை. குதூகலமோ, குறைவோ தெரியாமல் மகள் சாதாரணமாகப் பேசியது சற்றுக் குழப்பியது.
குறையில்லாதது சரி. ஆனால் குதூகலமின்றிப் பேசுகிறாளே என்றிருந்தது. அப்படி எதாவது அவள் கடினமாகவோ, துன்பமாகவோ கருதியிருந்தால் கண்டிப்பாக தன்னிடம் பகிர்ந்துகொண்டிருப்பாள் என்கிற தைரியத்தோடு வைத்துவிட்டார் ஸ்டெல்லா.
ரீகன் உறங்கி எழுந்து ஐடாவைப் பார்க்க வரும்வரை தனித்திருந்தவள் கணவனது அணைப்பில் நெகிழ்ந்தாலும், அதனைக் காட்டிக்கொள்ள ஏதோ தடுத்ததை உணர்ந்தாள். அதற்கான காரணமும் அவளுக்கு விளங்கியது. அது வெட்கம் என்பதும் புரிந்தது. செம்மை பூசிய வதனத்தோடு கணவனிடம், “கிச்சன் எங்க இருக்கு?”
மனைவி கேட்டதும், “எப்ப எழுந்த?” என்றதற்கு பதிலளித்தவளின் பதிலில், “நீ என்னை எழுப்பியிருக்கலாமே!” என்றபடியே அவளை வெளியே அழைத்துச் செல்ல உடன் வந்தவனைத் தடுத்தவள், “நீங்க சொல்லுங்க. நான் போயி உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்.”
அவளது பேச்சையும் மீறி அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டு நேராக கிச்சன் பகுதிவரை அழைத்து வந்தவன், “சாம் உள்ள இருப்பான். உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் பிரஷ் பண்ணிட்டு வந்திறேன்” என அகன்றான்.
தலையை ஆட்டியபடி சமையல்கட்டு பக்கம் எட்டிப் பார்த்தாள். அது இவர்களின் அறையைவிட பெரியதாக இருந்தது. உள்ளே சென்று தனக்கானதையும், கணவனுக்கானதையும் கேட்டவளிடம், “நீங்க உங்க ரூம்ல இருங்கம்மா. நான் போட்டு எடுத்துட்டு வரேன்” என்றவனிடம்,
“இல்லண்ணா… நானே வயிட் பண்ணி வாங்கிட்டுப் போறேன்” என்றாள் ஐடா.
அதற்குமேல் சாம் அவளிடம் தர்க்கத்தில் ஈடுபடாமல் அவள் கேட்டதைச் செய்து கொடுக்க அதனைப் பெற்றுக்கொண்டு அறைக்குள் வந்தாள்.
அதற்குள் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவன், “எல்லாரும் நேத்து அலைஞ்ச டயர்ட்ல இருக்காங்கபோல. அதான் இன்னும் யாரும் எழாம இருக்காங்க” என்றபடியே அவள் நீட்டிய காஃபி கப்பை வாங்க கை நீட்ட… அதைக் கொடுக்க நீட்டியவளின் பார்வையில் அவள் நிம்மதியைக் குலைக்கும் விதமாக அது விழுந்தது.
சற்று நேரம் இதை எங்கேயோ பாத்திருக்கோமே என யோசித்தவளின் நினைவில் சட்டென அன்றைய நிகழ்வு மனக்கண்ணில் விரிந்திட… மனதில் நெருப்புக் கனல் விழுந்தாற்போல பதறிப் போனாள் ஐடா!
***
இதுவரை வந்த பதிவுகளுக்கு நீங்கள் தரும் ஆதரவிற்கு அன்பின் நன்றிகள். அதுபோல இந்தப் பதிவையும் படித்துவிட்டு தங்களின் கருத்துகளை, விருப்புகளை மறவாது எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள் தோழமைகளே…
மேலே இருக்கற போட்டோவுல இருக்கறது யாருன்னு சிலருக்குத் தெரிஞ்சிருக்கும். சிலருக்கு தெரிய வாய்ப்பிருந்திருக்காது.
அவங்க யாருன்னு தெரிஞ்சுக்கலைன்னா தலையே வெடிச்சிடும்போல இருக்கா…
வாங்க… அவங்க யாருன்னு தெளிவாச் சொல்றேன்.
அது… அது…. நம்ம…
திரு மற்றும் திருமதி. சரோஜினி… அம்புட்டுதான்…
நீங்க மொதல்ல அந்த பிக்ல இருந்தது யாருன்னு நினைச்சிங்கனு வந்து கமெண்ட்டுல சொல்லுங்க டாலிஸ்…
என்றும் அன்புடன் உங்கள் சரோஜினி.