என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 40

கரகோகசம் ஆர்பாட்டம் கூச்சல் என அம்மேடையை நோக்கிய மக்களின் செயல் இதுவாகவே இருந்தது. மேடையில் நின்றவர்களோ பெருமையும் மகிழ்ச்சிப் பொங்க நின்றிருந்தனர்..

புதிது புதிதாகக் கோரீயோகிராபர் வந்தாலும். அனுபவமிக்கவர்களே அம்மேடையில் நடுவராகவும்  இருந்தனர்.. நடுவர்கள் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அளிக்கும் வாக்கே, அப்போட்டியின் இறுதி முடிவானது…

நான்கு குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தவர்கள். வொயில் கார்ட் ரௌண்டு மூலமாகத் தேர்வுச் செய்த குழந்தையோடு அந்த நான்கு குழந்தைகளையும் இறுதிசுற்றுக்கு வந்தனர்..

அதில் சித்துவும் ஒருவனே… அன்றைய தினம்,  இறுதிகட்டப் போட்டியாக இருந்தது. ஒரு கல்லூரியில், அந்த டான்ஸ் ஷோவின் பைனல் ப்ரோகிராமை வைத்திருந்தனர்..

மக்கள் அதிகம் வந்திருந்தனர்… மக்கள் முன்னிலையிலும் நடுவர்கள் முன்னிலையிலும் அந்த குழுந்தைகள் ஆடினார்கள். அந்த குழந்தைகளைத் தவிர்த்து, அதில் கலந்துக் கொண்ட குழந்தைகளும் ஆடி மக்களை மகிழ்வித்தனர்.. ஐவரும் ஆடி முடியவே, அந்த விழாவும் இறுதிகட்டத்திற்கு வந்தது.., யார் அந்த வெற்றியாளர்கள் என்று அறிவிக்கவே வந்த விருந்தினரான நடிகர் ஒருவர் மேடையேற, மீண்டும் கூச்சலிட்டு ஆர்பறித்தனர்….

அவரும் பொதுவாக பேசிவிட்டு, வெற்றியாளரின் பெயரைச் சொல்ல தயாராக, எல்லாரும் ஆவாலாகினார்கள்…

முதலில் மூன்றாம் இடத்திற்கு வந்த குழந்தையின் பெயரைச் சொல்லி ஒருலட்சத்தை வழங்கினார். பின் இரண்டாம் இடத்தைப் பிடித்த குழந்தைக்கு இரண்டு லட்சம் பரிசுத்தொகையை வழங்கியப்பின்னரே,முதல் இடத்தைப் பிடித்த குழந்தையின் பெயரைச் சொல் தயாராகினார்.

“அந்த வெற்றியாளர் யாருன்னா, அந்த பரிசுத்தொகையைப் பெறப்போகும் லிட்டிஸ் டான்சஸர்.. நம்ம சித்தார்த் ஜானவி ராஜேஷ்.. ” என்றதும் பாப்பர்ஸ் வெடிக்க, மக்களும் அவர் அறிவிக்கும் முன்னரே இவனது பெயரைக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, இவனது பெயரை உச்சரித்ததும். மக்களும் அதை அமோதிப்பதாய் கத்தி ஆர்ப்பறித்தனர்.

அவனும் மேடைக்கு வந்தான்.. அவனது கையில்பரிசுத்தொகையை ஐந்து லட்சம் பெரிய காசோலையாகத்
தரப்பட்டது…

இங்கே அவனது குடும்பம் ஆனந்த கண்ணீர் வடிய அமர்ந்திருந்தனர்..
அவனது கையில் மைக் கொடுக்கப்பட்டது…

அவனோ அவனது தந்தையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். எல்லாரும் அவனைப் பேச சொல்லி வற்புறுத அவனுக்கு கண்ணீர் மட்டும் தாரைத்தாரையாக வடிந்தது… ஆர்.ஜே மேடையேறி அவனை தூக்கிக்கொண்டான்..

” சித், அழுகாம எதாவது பேசுடா.. ” என்றான்.

” ஐ லவ் யூ அப்பா!.. நீங்க மட்டும் வராம இருந்திருத்தீங்கன்னா,  நான் இந்த ஷோவை டீ.வில பார்த்து பீல் பண்ணிருப்பேன்.. நீங்க எனக்கு அப்பா மட்டுமில்ல, மதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் நீங்க.. யூ ஆர் மை ப்ரீசீயஸ் கிப்ட் ஆர்.ஜே, ஐ லவ் யூ சோ மச்  ” என அணைத்துக்கொண்டான்.

” புலிக்கு பிறந்தது பூணையாகாது, உங்க பையன் நிறுப்பிச்சுட்டான் ஆர்.ஜே.. நீங்க எப்படி உங்க திறமையை மட்டுமே வைத்து இவ்வளவு தூரம் வந்ததுப் போல, உங்க புள்ளையும் அதே திறமையை மட்டுமே வைத்து இந்தப் போட்டில ஜெயிருக்கார் வாழ்த்துக்கள் சித்.. ” என்று தொகுப்பாளர் ஒருவர் புகழ்ந்தார்.

” உண்மையாக இந்தப் போட்டி நேர்மையாகவும், மக்களும் திறமையைப் பார்த்துதான் தேர்ந்தெடுத்திருக்காங்க… எல்லாரும் ஈசியா சொல்லலாம்.இது ஆர்.ஜேவோட பிள்ளை அதுனால அவனைத் தேர்வு செய்திருக்கலாம்.. அது அப்படி இல்லை… ஒவ்வொரு முறையும் சித்தோட ஆட்டத்தைப் பார்த்து தான் தேர்ந்தெடுத்திருக்காங்க, அவங்களுக்கு தான் நன்றி சொல்லணும்… எல்லாருக்கும் நன்றி.” என்றான்..

அந்த விழாவும் முடிந்தது…. சித்தை சூழ்ந்தனர் குழந்தைகளும் பெண்களும், அவனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். அதே போல் ஆர்.ஜேவையும் சூழ்ந்த பெண்கள்,  செல்பி, கையெழுத்தென  ஒருபுறம்  இருந்தனர்..

சீதா, ராமோடு இதனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜானு..” மா.. பார்த்தீங்களா ? உங்க பேரனையும் பையனையும்… “

” இல்லை, சித்துகுட்டி போட்டில ஜெயிச்சு பரிசுவாங்கிருக்கான், அதுனால அவனை  போட்டோ எடுக்கிறாங்க கையெழுத்து வாங்கிறாங்க ஓ.கே.

இவனை எதுக்குப் போட்டோ எடுக்கன்னும் இவன்கிட்ட ஏன் கையெழுத்து வாங்கன்னும்.. “

” அவர், ஆர்.ஜேவாம்…  ஜானுமா நிறைய கேர்ள் பேன்ஸ் இருக்கும்மா  அவனுக்கு, பார்த்து வச்சுக்க உன் புருசனை… ” என்று போட்டுக்கொடுத்தார் ராமன்.

அவள் அவனைப்பார்த்து முறைக்க, அந்த முறைப்பைக் கவனிக்காது, பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தான்.

” ஜானு, இப்பையே என் மருமகனை, கையில பிடிக்க முடியல, இவன் வளர்ந்தா, அடுத்த ஆர்.ஜே தான். ப்ளே பாயாகாத்தான் வரப்போறான். ” என்றான் ஜகா.

சிவாளியும் வைஷூவும்  சித்தைப் பிடித்து இழுத்து வர,ஜானுவும் ஆர்.ஜேவைப் பிடித்து இழுத்து வந்தாள்.

” என்ன அப்பனும் பிள்ளையும் ஓவரத்தான் போறீங்க… என்னப் பெரிய ரெட் கார்ப்பட்ல வந்த வி.ஐ.பி மாதிரி நடந்துகுறீங்க.. அவனுக்கு ஒ.கே. உங்களுக்கு அவ்வளவு  சீன் இல்லை ஆர்.ஜே கிளம்புறீங்களா… ” என்றாள்.

” பொறாமை டி மிளகாய் ! உனக்கு.. என்  கேர்ள்ஸ் பேன்ஸ்ஸைப் பார்த்து..” என்றான்.

” ஆமா ஆமா… வயிறு எரிஞ்சு குடலே வெந்துப் போச்சு எனக்கு. வாங்க சார் வீட்டுக்குப் போகலாம்.. ” அவனை அழைத்துச்சென்றாள்.

வீடே விழாக்கோலம் போல இருந்தது. சித்துவிற்கு வாழ்த்து வந்த நிமித்தமாக இருந்தது… குடும்பமாய் ஹோட்டலுக்குச் சென்று அங்கே டின்னரை முடித்து வீடு வந்தனர்.. சீதா, மூவரையும் நிக்க வைத்து திருஷ்டி கழித்தார்..

” என் பேரன் மேலத்தான் அத்தனை கண்ணும் துப்புராசா…  ” என்றார். அவனும் துப்பினான். பின் மகனை மருமகளை சுத்தியவர். வெளியே சென்று போட்டு ஏறித்துவிட்டு வந்தார்.

தன்மகனை நெஞ்சில் போட்டுக்கொண்டு, ஜானுவை  அணைத்துக் கொண்டு படித்திருந்தான். சித், அசதியில் உறங்கிவிட்டான்.

அவனது தலையை கோதியவாறே,அவனை பார்த்திருந்தான் ஆர்.ஜே.

” என்ன ஆர்.ஜே யோசனையா இருக்கீங்க ? என்னாச்சு  “

” ஒன்னில்லை ஜானுமா, இன்னும் எனக்கு வியப்பு குறையல. இவனுடைய பையலாஜிகள் பாதர் நான் தான்னு, என்னால இன்னும் நம்பவே முடியல ஜானு. “

” என்னாது நம்ப முடியலையா ? அப்ப இவன் உங்க மகனா இருக்காதுன்னு சொல்லவரீங்களா ஆர்.ஜே “

” அடியே மிளகாய் ! அப்படி சொல்ல வரல டி… இவன் எனக்குப் பொறந்த பிள்ளைன்னு தெரியாமலே, இவனை நான் என் மகனா ஏத்துகிட்டேன். இப்ப, இவன், என் மகன் தான் தெரியும் போது, என் சந்தோசத்துக்கு அளவே இல்லைடி.. “

” எனக்கும் தாங்க, என்னதான் சங்கர், என்னை கல்யாணம் செய்துகிட்டாலும், அவர் இவனுக்கு அப்பா இல்லை, என் சித்துக்கு யாரை அப்பான்னு சொல்ல சில நேரம் நான் தடுமாறி இருக்கேன். நீங்க வந்தாலும், அவனுக்கு  நீங்க ஸ்டெப் பாதராத்தான் இருப்பீங்க.. ஆனால்,உண்மை தெரிஞ்சதும் என் மனசுல இருந்த நெருடல் போயிருச்சுங்க.. “

” அந்த ராஜலட்சமி அத்தை, வந்து சொல்லாம இருந்திருந்தாலும். சித்துக்கு நான் தான் அப்பா, நான் மட்டும் தான் அப்பா  ஜானு.. ” என்றான்.

இருவரும் அமைதியாக அன்றைய சூழலை யோசித்தனர். வெளியூரில் தன் மகனுடன் தங்கிருந்த ராஜலட்சுமி, வெகுநாட்களுப் பின்னே சென்னை திரும்பியிருந்தார். அவர் தன் தோழி சீதாவைக் காண, அவரது வீட்டிற்கு விஜயம் தந்தார்.

அவரை தழுவிக்கொண்டார் சீதா.. ராஜலட்சுமியும் சீதாவும், ஒரே ஊரில் பிறந்து, ஒன்றாக படித்தவர்கள். ஏனோ சீதாவுக்குப் படிப்பு வரலை பாதிலே நிறுத்திவிட்டார். ஆனால் ராஜலட்சுமியோ, படித்து கைனகாலஜிஸ்ட் ஆக மருத்தவமனையில் வேலைப்பார்த்தார். பின் அவரேமருத்துவமனை ஒன்றை ஆரம்பித்தார். இருவரது நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது அழைப்பேசி மூலமாக..

தன்மகளுக்கு கல்யாணம் ஆனதை மட்டும் சொன்னவர். வீட்டுக்கு வந்து தன் மருமகளை பார்க்குமாறு கூறிவிட்டார்.

அவரும் ஆவலுடனே சென்னைக்கு வந்தவர். நேராகச் சீதா வீட்டுக்கே வந்தார். அவரை உபசரித்தனர், சீதாவும் ராமனும்..

” என்ன சீதா, உன் மருமகள் எங்க ? வீட்டுக்கு வா காட்டுறேன்னு சொன்ன  ? எங்க போனா உன் மருமக ? ஆசை ஆசையாப் பார்க்க வந்திருக்கேன் சீதா.. “

” ராஜி இரு, என் மருமகளும் டாக்டர் தான். அவ நைட் ட்யூட்டி பார்த்துட்டு இப்ப வந்திடுவா  ” என்றார்.

” டாக்டரா ? சொல்லவே இல்லை சீதா நீ. என்ன டாக்டர் ? எந்த ஹாஸ்பிட்டல் ? ” கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

” தங்கச்சி ! நீங்க இவளுக்கு கல்லு இருக்குன்னு, ஒரு டாக்டர் பெயரைச் சொல்லிப் பார்க்க சொன்னீங்களே அவ தான் எங்க மருமக  ” என்றார் ராமன்.

” யாரைச் சொன்னேன் ? ” என்று யோசிக்கும் நேரத்தில் வந்தார்கள் ஜானுவும் ஆர்.ஜேவும்.

” ராஜீ அத்த எப்ப வந்த ? உன் மகன் வீடே கதின்னு இருந்துட்டேல. எங்களை எல்லாம் பார்க்கக் கூட உனக்கு நேரமில்லாம போச்சு ? ” என்றான்.

” நீ பேசாதடா! கமுக்கமா கல்யாணத்தை முடிச்சுட்டு. நான் பார்க்க வரலைன்னா சொல்லுற ? நீ கல்யாணம்ன்னு சொல்லி அழைச்சிருந்தா,இந்நேரம் குடும்பத்தோட பத்து நாளைக்கு முன்னாடியே வந்திருப்பேன். அதைதான் நீ கெடுத்துட்டீயே , எங்கடா என் மக ? ” என்று காதைத் திருகினார்.

“அத்த ! வலிக்கிது காதை விடு, நானே இன்றோ பண்றேன் விடு. ” என்றதும் விடுவித்தார்.

” இதான் ஜானவி, மை ஸ்வீட் ஜானு, மை லவபில் பொண்டாட்டி. ” என்றார்.

” மேம், நீங்க இங்க ? “

“சீதா, உனக்கு பிரச்சனைன்னு இவளைப் போய் பாருன்னு அனுப்பினா, நீ அவளையே மருமகளாக்கிட்டீயா ? “

” ராஜி, அது ஒரு பெரிய கதை…. ” என்று அனைத்தையும் கூறினார்.

” சீதா! எனக்கு ஜானுவை பத்தி நல்லவே தெரியும்.  ஏன் இவளுக்கு பிரசவம் பார்த்ததே நான் தான். இவ கொஞ்சநாள் என் ஹாஸ்பிட்டல் தான் வேலைப் பார்த்தாள். இப்ப உன் மருமகளா! இருக்கிறது  தான் ஆச்சரியமே!.

” இதுல என்ன ஆச்சரியம் இருக்கு ராஜி.. அன்னைக்கு இவன் பார்த்ததுக்கு அப்புறம் இவனுக்கு அவ மேல காதலே வந்துச்சு,. நானும் முதல் முரண்டு பிடிச்சாலும் பேரனுடைய பாசம் என் மனசு மாத்திருச்சு ராஜி. ” என்றார்.

” இதானே உலகம் வழக்கம் சீதா, பிள்ளை மேல இருக்கிற கோபம்,பேரனை பார்த்ததும் மட்டு படத்தான் செய்யும். ஆமா உன் பேரன் எங்க ? உன் பேரன் யாருமாதிரி இருக்கான், ஜானு மாதிரியா? ஆர்.ஜே மாதிரியா ? ” அதை கேட்டதும் எல்லாருக்கும் தர்மசங்கடமானது..

” என்ன ராஜீ இப்படி கேட்கிற? உனக்கு தெரியாதது இல்லை. இப்ப இப்படி கேட்கிறீயே ? ” என்றான்.

” ஓ.. ஆமால மறந்துட்டேன். சாரி ஜானுமா ? ஆனா  உனக்கு iui பண்ணினோம்ல, இன்னொருத்தர் ஸ்பேர்ம் இன்ஜட்க் பண்ணித்தானே கருத்தரித்த நீ.. ” என்றார். ” ஆமாம் ” என்றாள். கொஞ்சம் யோசித்தவர். ” ஆர்.ஜே நான் உன் கிட்ட ஸ்பேர்ம் டோனேட் பண்ண சொல்லிருந்தேன் உனக்கு ஞாபகம் இருக்கா ? “

” ஆமாத்த, ஒன்பது வருசத்துக்கு முன்னாடி. ஞாபகம் இருக்கு  “

” சீதா! இது மருத்தவர் தர்மம்படி, எங்க ரூல்ஸ் நாங்க மீறக் கூடாது. இருந்தாலும் உனக்காக சொல்லுறேன்.   உன் பேரன், உன் மகனுடைய விந்தணு மூலமாக பிறந்தவன். அதாவது, உன் மகன் விந்தணுவை தானம் செய்தான். அதைத்தான் ஜானு கருவில் நாங்க செலுத்தினோம். இவளுடைய முன்னாள் கணவருக்கு ஆண்மைகுறைவு அதுனால, நாங்க இன்னொருத்தர் விந்தணுவ அவ கருமுட்டையில செலுத்தினோம். அந்த விந்தணு உன் புள்ளையோடது தான். அப்ப உன் பேரன், உன் இரத்தம் , உன் வாரிசு தான்….”

” என்னத்த சொல்லுற உண்மையாவ, சித்து என் பையன் தானா ? “

” நான் ஏன்டா உன்கிட்ட பொய்
சொல்லப் போறேன். நீ தான் அவனுக்கு பயோலாஜிகல் பாதர்டா கண்ணா  ” என்றதும் சந்தோசத்தில் அவரைக் கட்டிக்கொண்டான்.

” நாங்க,அந்த குழந்தைக்கு அப்பா,ஜானுவோட முதல் புருசனா இருக்கணும். டோனேட் பண்றவங்க டீடேய்ல்ஸ் சொல்லவே மாட்டோம். ஆனா பாரு விதியை. இவன் புள்ளை இவன்கிட்டையே வந்து சேர்ந்திருச்சு..”

” ராஜி, எனக்கே சில சமயம், சித்துகுட்டிய பார்க்கும் போது, அவன் செய்ற சேட்டையெல்லாம் பார்க்கும், சின்ன வயசல ராஜூவைப் பார்த்த மாதிரியே தான் இருப்பான்.. நீ சொன்னதுக்கு அப்புறம் தான் சந்தோசமா இருக்கு.” என்றார்.

” முதல் குழந்தைதான் செயற்கையா பிறந்திருச்சு, அடுத்த குழந்தையாவது இயற்கை பெத்து கொடுமா  ” என்றதும் ஜானுவிற்கு வெட்கம் வந்தது..

அதன் பின் சித்தார்த்திற்கு ஆர்.ஜே யாரென்று சொல்லி புரியவைத்தனர்.. ஸ்டேப் பாதராக இருந்தவன் இன்று உண்மையான பயலாஜிகல் பாதாராக என்று மாறிப்போனான்.

கறையும் நாட்களெல்லாம், மகிழ்ச்சியில் கரைந்தது…

அன்று சூட்டிங்கில் இருந்த ஆர்.ஜேவிற்கு, ஜானு வேலை செய்யும் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வர பதறியடித்துக்கொண்டி ஓடினான்..

வேலை செய்துக்கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்திருந்தாள் ஜானு… அவளை பரிசோதித்த டாக்டர் வாழ்த்துக்கள் கூறினார்.. செவிலியர்களும் அவளை வாழ்த்திவிட்டு சென்றனர்.. அவன்  வரரே அவளது அறையைக் காட்டினார்கள்.

அங்கே அவள் முகமறைத்து அமர்ந்திருந்தாள். ” ஜானு, என்னாச்சு உனக்கு ? எதுக்கு ஹாஸ்பிட்டல் இருந்து போன் பண்ணாங்க  “

தலையை தூக்கி அவனைப் பார்த்தவள், ” ஆர்.ஜே, எங்கையாவது வெளிய போகலாமா ? “

” சரி ஜானு, போலாம் வா ” என்று அழைத்தவன், அவனது சூட்டிங்கையும் மறந்து அவளோடு சுற்றினான். முதலில் கோயிலுக்குச் சென்று. பின், பீச்சிற்கு செல்ல, அவனது கையைப் பற்றி தோளில்  தலையைச்சாய்த்து நடந்தாள்…

அவனும்பொறுமையாக அவளோடு நடந்தான். ஓர் இடத்தில் இருவரும் அமர்ந்தனர்.

” ஆர்.ஜே நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா ? நான் உங்களுக்கு தாங்க்க்ஸ் சொல்லுவேன் நீங்க எதுக்குன்னு சொல்லனும்.. “

” ஜானுமா ! நான் உனக்கு என்னாச்சோ எதாச்சோன்னு பயந்து வந்தா.. நீ என்னடான்னா, கோயிலுக்கு போங்கற, பீச்சிக்கு அழைச்சுட்டு போங்கற.. என்னடி ஆச்சு உனக்கு ? “

” ஆர்.ஜே.., ” என்றாள்.

” சரிடி  விளையாடலாம் ” என்றான்.

அவள் அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள். அதற்கு அவன் ” உன் வாழ்க்கையில வந்ததுக்காக  “

இரண்டாவதாக ஒரு முத்தம் பதித்தாள்,  ” உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக  “

மூன்றாவதாக ஒரு முத்தம் பதித்தாள். ” சித்தை என்பையனாக ஏத்துக்கிட்டதுக்காக  “

நான்காவதாக ஒரு முத்தம் பதித்தாள்.
“இது எதுக்கு ? ” என்று பார்க்க
அவள் சிரிப்பே அழகாக எடுத்துரைத்தது. ” ஜானு, நீ… ” என்று மகிழ்ச்சியில் வார்த்தைகள் வர மறுக்கவே.. அவளோ ஆமாமென்று தலையசைத்தாள்..

அவள் முகமேந்தி முத்தங்களை வழங்கினான்…  நன்றியைத் தான் அவன் அவளுக்கு முத்தங்களாக பறைச்சாற்றினான்..

இருவரும் வீட்டிற்கு வந்து பகிர்ந்து கொள்ள, மூன்று பெருசுகளுக்கும் மகிழ்ச்சி தாளவில்லை.. சீதா அவளைக் கட்டிக்கொண்டு  முத்தமிழைத்தார்..

சித்துவும் சந்தோசத்தில் கட்டிக்கொண்டான் ஜானுவை..

” ஜானு, பாப்பா இங்க சின்னதா தானே இருக்கும் எப்ப ஜானு அது வளரும்… ” என்று கேட்டான்.

” சித்துகுட்டி இதெல்லாம் தெரிஞ்சிருக்கே எப்படி ? ” என்று சீதா கேட்க..

“சீதா… எனக்கு க்ரேஸி மிஸ் தான் வீடியோ போட்டு காமிச்சாங்க… ” என்றதும் புரியாமல் பார்த்தார்.

” இல்லாம, ஒருநாள் இவனுக்கும் எனக்கும் சண்டை, எனக்கு அப்பா யாருன்னு கேட்டு சண்டை போட்டு பேசாம இருந்தான்.  அப்ப க்ரேஸி தான் அம்மா எவ்வளவு முக்கியம் எப்படி கஷ்டபட்டு உன்னை பெத்து எடுத்திருக்காங்கன்னு போட்டு காமிச்சிருக்காங்க… அதை ஞாபகம் வைச்சு கேட்கிறான். ” என்றதும் மெச்சுதலாக அவனை பார்த்தார்.

” ஆமா க்ரேஸின்னதும் ஞாபகம் வருது எப்படா இந்த பீட்டருக்கு கல்யாணம்.. அவனை வரச்சொல்லுடா, போய் பொண்ணுகேட்டு கல்யாணத்தை சீக்கிரமா  முடிப்போம். இல்லைன்னா அவனும் உன்னை போலவே இருக்கப்போறான்.. ” என்றான் ராமன்..

அதை அமோதிபதாய் பீட்டரை அழைத்து பேசி, பெண்வீட்டுலையும் பேசி கல்யாண ஏற்பாடு செய்தனர்..கரகோகசம் ஆர்பாட்டம் கூச்சல் என அம்மேடையை நோக்கிய மக்களின் செயல் இதுவாகவே இருந்தது. மேடையில் நின்றவர்களோ பெருமையும் மகிழ்ச்சிப் பொங்க நின்றிருந்தனர்..

அதை அமோதிபதாய் பீட்டரை அழைத்து பேசி, பெண்வீட்டுலையும் பேசி கல்யாண ஏற்பாடு செய்தனர்..

அழகாய் துயிலெழுந்த அக்கதிரவனின் கதிர்களெங்கும் பரவியது போது… மனமெங்கும் சந்தோசமே பரவி இருந்தது.

ஜர்ஜில் அனைவரின் முன்னிலையில் பாதரின் சொல்லுக்கிணங்க இருவரும்   மோதிரங்களையும். அவளுக்கு சிலுவையிட்ட தாலிச்செயினையும் அணிவித்தான் பீட்டர்…

க்ரேஸியின் தாய்க்கு ஆனந்த கண்ணீர் சுரக்க அவரை அணைத்துக்கொண்டாள் ஜானு,.. யாருமற்ற பீட்டருக்கு தந்தைதாயாக சீதாவும் ராமனும் அண்ணன் அண்ணியாக ஆர்.ஜே ஜானுவும் இருந்து அவர்களின் திருமணத்தை நடத்திவைத்தனர்…

அங்கே அனைத்து சடங்குகளும் முடிந்தது,…

” வாழ்த்துக்கள்டா, பீட்டர். இனி நீயும் குடும்பஸ்தனாகிட்ட. வீட்டுல உன் பேச்சு எடுபடாது.. எல்லாம் மிஸ் பேச்சு தான் “

”  அதெல்லாம் பழகிட்டேன் பாஸ். எப்போ காதலை சொன்னேனோ, அப்பத்திலருந்தே அப்படி தான். ” என்றான்.

” பரவாயில்லை க்ரேஸிமிஸ், சரியான ஆளைத்தான் லவ் பண்ணிருக்கீங்க. இப்படித்தான் நமக்கும் வேணும்,. ”
க்ரேஸி வெட்கப்படவே, ” அப்ப, பாஸ்ஸூம் அப்படித்தான் சொல்ல வர்றீங்களா அண்ணி ” என்றான்.

“ஆமாடா, இப்ப அதுக்கு என்ன ? நானெல்லாம் என்னைக்கோ சரண்டர். ” என்றான்.

” பாஸ், எனக்கு ஒன்னுமட்டுமே புரியல,  காலையில வீட்டுல இருந்து கிளம்புற வரைக்கும்.  நம்ம சித், ஏன் என்னை முறைச்சுட்டே இருக்கான் தெரியலை கொஞ்சம் கேட்டு தான் சொல்லுங்களேன். “

” அப்படியா! சித், ஏன் உன்னை முறைக்கணும். அவன் உன்கிட்ட நல்ல பேசுவானே. இரு என்னான்னு தான் கேட்போம். சித்…  இங்க வா  ” என்று அழைத்தான் ஆர்.ஜே.

” என்ன ஆர்.ஜே ? ” என்று வந்தவணும் க்ரேஸியுடன் நிற்கும் பீட்டரை முறைத்து நின்றான்.

” ஏய் !! சித், ஏன் நீ பீட்டரை முறைக்கிற. அவன் உன்னை என்னடா பண்ணினான். அவனை ஏன் முறைக்கிற ? உன்னை திட்டினான ? இல்லை அடித்தானா ? எதுக்கு அவன்மேல கோபம்.. “

” ஆர்.ஜே, அவர் ஏன் என் க்ரேஸி மிஸ் கல்யாணம் பண்ணார். அவர் கல்யாணம் பண்ணிகிட்டதுனால  க்ரேஸி மிஸ் இனி ஸ்கூலுக்கு வரமாட்டாங்களாம். இவருக்கு வேற பொண்ணே இல்லையா ? க்ரேஸி மிஸ் தான் கிடைச்சாங்களா. எங்க மிஸ்ஸை வீட்டு வேலை பார்க்கச் சொல்லி கொடுமை பண்ணுவாராம். ஏன் க்ரேஸிமிஸ் இவரை கல்யாணம் பண்ணிகிட்டீங்க..  ” என்றான்.

அனைவரும் பேய் முழிமுழித்தார்கள். பீட்டரைக்கண்டு அப்படியா ! என்பது போல பார்க்க. அவனோ பாகற்காயை விழுக்கினவன் போல் முகத்தை வைத்திருந்தான்.

” யாரு சித் உனக்கு இதெல்லாம் சொன்னா ? இதெல்லாம் யாரு செய்தா. உனக்கு எப்படி தெரியும் ? “

” போன வருசம் சக்தின்னு ஒரு மிஸ். அவங்க ரொம்ப நல்ல மிஸ். அவங்களுக்கும் இதே போல கல்யாணம் நடந்துச்சு. அவங்க ஸ்கூலுக்கே வரலை. அவங்க ஹஸ்பண்ட் அவங்களை வேலைக்கு போக வேணாம் சொல்லி வீடுல கொடுமைப் பண்றாத எல்லாம் மிஸ் பேசீனாங்க  “

மூவரும் விழுந்துவிழுந்து சிரித்தனர். ” பீட்டர், உன்னை போய் ஆன்ட்டி ஹீரோ ரேன்ஜ்க்கு என் மகன் கொண்டு வந்துட்டானே.. நீ அப்படி இல்லைன்னு நான் எப்படி இவனுக்கு புரியவைப்பேன்டா “

” பாஸ்… என்னைப் பார்த்தால், இவள கொடுமைப்பண்றது மாதிரியா இருக்கு. இவ, என்னைக் கொடுமை செய்யாம இருந்த போதாது.. ஹலோ! சின்ன பாஸ். நான் உங்க மிஸ்ஸை கொடுமை செய்ய மாட்டேன். உங்க மிஸ் வேலைக்கு வருவாங்க. இனிமே என்னை முறைக்காதடா ” என்றான்.

” சித்து, என்னை இவர் நல்லா பார்த்துப்பார். ஆர்.ஜே சார் எப்படி உன் அம்மாவை பார்த்துகிறது போல. இவர் என்னை பார்த்துப்பார். நான் சந்தோசமா தான் இந்த மேரேஜ் பண்ணிகிட்டேன். அப்படி இவர் என்னை எதாவது கஷ்டபடுத்தினால், நான் உன் கிட்ட சொல்லுறேன் சரியா  ” என்றான்.

” அப்போ நீங்க என்னை கொடுமை செய்தால். நான் யாரிடம் கம்பிளைண்ட் பண்ண ? “

” டேய் பீட்டர், உன் கம்பிளைண்ட் எப்பையும் ரிஜட்டிங் லிஸ்ட் தான் இருக்கும். உன் கம்ப்ளைண்ட் எங்கையும் எடுபடாது.இனி  உனக்கு ஆப்சனும் இல்லை. ” என்று க்ரேஸியை கண் காட்ட.

அவனோ ஜானுவைப் பார்த்தான். அவளோ நெற்றியில் கோடு கிழித்து தலையெழுத்து என்பது போல சொல்லாமல் சொன்னாள். அவனது முகம் பீஸ் இல்லாத பிரியாணியை கண்டவன் போலானது.

அதன் பின் அனைத்து சடங்குகள் முடிய மணமக்களை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் ஆர்.ஜேவின் குடும்பம். அங்கே அவர்களுக்கு முதலிரவு நடத்த ஏற்பாடுச் செய்தனர்..

பீட்டரை ஆர்.ஜேவும். க்ரேஸியை ஜானுவும் அலங்காரம் செய்து
அவர்களை அறையில் விட்டு வந்தனர்..

அவர்களும் காதல் மொழிபேசி தனது இல்லற வாழ்க்கையை இனிதாக தொடங்கினார்கள். வழக்கம் போலவே ரகுவோடு சித் உறங்கச்செல்ல. ஜானுவும் ஆர்.ஜேவும் தனித்து விடப்பட்டிருந்தனர்.

அன்றையநாள் கழிந்திடவே… மூன்று நாட்கள் ஆர்.ஜேவீட்டில் இருந்தவர்கள். ஜானுவினுடைய ப்ளாட்டில் இருந்தனர். க்ரேஸியும் பீட்டரும் க்ரேஸியின் தாயும் தங்கிக் கொண்டனர்.

மாதங்களை கடத்தினாள் ஜானு. தன் மகளை போல சீதாவும் ராமனும் பார்த்துக்கொள்ள, பூரித்துபோனார் ரகு.. தன் மகளை தாங்கும் குடும்பத்தைக்கண்டு. வேலைக்கு போகவேண்டாம் சென்று அன்புகட்டளை இடவே மறுக்காது இருந்துக்கொண்டாள்.. மாதம் மாதம் செக்கப்பிற்கு சென்று வருவாள் ஆர்.ஜேவோடு..

ஆர்.ஜே சித்துவினுடைய அட்டகாசம் தான் தாங்கவே முடியாது.. மேடிட்ட வயிற்றில் குழந்தையிடம் பேசாவதாகச் சொல்லி ஒருவரை ஒருவர் கம்பிளைண்ட் செய்துகொண்டிருப்பார்கள்.

அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் போதெல்லாம் அவன் குழந்தைக்கு கேட்குமாறே வாசிப்பான், படிப்பான். அடுத்த அடுத்த வந்த பரீட்சையில்டாப் டென் ரேங்களில் வர, ஷ்ரவன் தான் ஆடிப்போன்…

ஒன்பதுமாதத்தை ஜானு தொடவே, அவளுக்கு வளைகாப்பு ஏற்பாடுகள் செய்ய இருந்தனர்.. அவளுக்கு இரண்டாவது பிரசவமாக இருந்தாலும். சீதா வீட்டில் நடக்கிற முதல் விஷேசம் என்பதால் விமர்சியாக நடத்த வேண்டும் என்று எண்ணினார்.. தனக்கு தெரிந்தவர், அக்கம்பக்கத்தினர் அனைவரையும் அழைத்திருந்தார்.

க்ரேஸியின் அன்னையே, அவளுக்கு அன்னை ஸ்தானத்தில் இருந்து, அவளுக்காக ஏழுவகையான சாதங்களை  தயார் செய்தார்.

பெரியவர்கள் சூழ தன் மகளுக்கு வளைகாப்பு நிகழ… ஏனோ தன் மருமகள் வராது இருப்பதை எண்ணி கவலைக்கொண்டார்.

அதை வாயிவிட்டே கேட்கவும் செய்தார் ஜகாவிடம். ” என்னடா இன்னைக்கும் நீ தனியாத்தான் வருவீயா. வீட்டுக்கு வந்து சமந்தியம்மா
அழைச்சிருக்காங்க. ஒரு மரியாதை நிமித்தமா வரக்கூடாதா ? அவங்க என்ன நினைப்பாங்க  ” குறைப்பட்டார்.

இதனை கேட்ட சித்திற்கு கொஞ்சம் வருத்தம் தான். தன் அத்தை எதிலும் கலந்துக்கொள்ளவதில்லை என்று அவனும் அவ்வப்போது வருந்திருக்கிறான். கண்டிப்பாக இதுக்கு ஒரு முடிவு கட்டணும்  என்று நினைத்தவன்..,

வீட்டை விட்டு வெளியே வந்தவன். தான் சேமித்த பணத்தை எடுத்துக்கொண்டு,பக்கத்திலிருக்கும் ஆட்டோவைப் பிடித்து வைஷூவின் வீட்டிற்குச் சென்றான். அவளோ அங்கே ஆயாசமாக டீ.வி பார்த்திருந்தாள்.

“அத்தை” பல வருடத்திற்கு பின் அவளை அழைத்தான்.

” நீ, நீ இங்க என்ன பண்ற? எதுக்கு இங்க வந்த ? தனியாவா வந்தா. உன்கூட யாரும் வரலையா ? ” என்று கேட்டு வாசலைப் பார்த்தாள்.

” இல்லத்த, யாரும் வரலை. நானாத்தான் வந்தேன். யாரும் என்னை இங்க கூட்டிட்டு வரலை  ” என்றான்.

” எதுக்கு இங்க வந்த? ஏன் நீயா வந்தா? யாராவது உன்னை தூக்கிட்டு போயிட்டா என்ன பண்றது. உன்னை இங்க விட்டுடு, அவங்க அங்க என்ன பண்றாங்க. ” என்று தனது கணவருக்கு போன் பண்ணினாள்.

” அத்த அத்த…. இருங்க. நான் இங்க ஏன் வந்தேன். ஏன் தனியா வந்தேன் சொல்லிடுறேன். அதுக்கு அப்புறம் நீங்க மாமாக்கு போன் பண்ணுங்க.. இப்ப நான் சொல்லுறதை கேளுங்க.. “

” எதுக்கு இங்க வந்த ? என்ன சொல்ல போற நீ “

” அத்த.. நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன். என்னையும் ஜானுவையும் மன்னிச்சிடுங்க அத்தை. எனக்கு உங்க கோபம் புரியுது. ஆனால்  ஜானும் வேணும்னே பண்ணலையே. அப்ப ஜானுக்கு, ரகு, மாமாவை விட்டா யாரு இருக்கா சொல்லுங்க. ப்ளீஸ் அத்தை அங்க எல்லாரும் பேமிலியா இருக்காங்க, நீங்க தனியாக இருக்கிறது கஸ்டமா இருக்குத்த. நான் உங்க கிட்ட கேட்கிறது அன்பு , பாசம் மட்டும் தான் வேற எதுவுமில்ல… நாம பேமிலியா ஒன்ன இருக்கலாம்..

ரகுவை வேணா உங்ககிட்டையே கொடுத்திறேன். விஷ்ணுவுக்கும் அவர் தாத்தா தானே. அவனுக்கும் அவர் பாசம் வேணும் தானே. நாங்க உங்க கிட்ட இருந்து எதையும் பறிக்கலை அத்த. ப்ளீஸ் நீங்களும் எங்க கூட அன்பா,பாசமா ஜாலியா இருக்கணும் எனக்கு உங்களைப் பார்க்க பயம் தான். ஆனா ஜானுக்கு மேரேஜ்க்கு நீங்க வரலை, ப்ளீஸ் இந்த பங்கசனுக்காகவாது வாங்க அத்த. எனக்கு தான் உங்க பாசம் கிடைக்கல ஆரம்பத்திலிருந்து. என் தங்கச்சி பாப்பாக்கு கிடைக்கனும் அத்த. வாங்க அத்த அங்க போலாம். நீங்க வந்தா எல்லாரும் சந்தோசப்படுவாங்க.

என் ஜானுக்காகவும் சேர்ந்து மன்னிப்புகேட்கிறேன்.. வாங்க அத்த. ” என்று அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவளுக்கு இவன் இவ்வளவு பேசுவானா என்று இருந்தது. அவனது கெஞ்சல் நிறைந்த பார்வை, ஏதோ தன் தவறைக் குத்திக்காட்டியது.

தனக்காக இவ்வளவு தூரம் அதுவும் தனியாக வந்திருக்கும் மருமகனை நினைக்க, புளங்காகிதமுற்றாள்.

” எழுந்திரு சித். எனக்காக இவ்வளவு தூரம் வருவேன் நான் எதிர்பார்கவே இல்ல சித்து. இது கனவு மாதிரி இருக்கு. நீ வந்தது யாருக்கும் தெரியாதா? “

” தெரியாது அத்த, நானா தான் வந்தேன். நீங்க என் கூட வாங்க அத்த ” என்றான்.

அவனை ஒரு நிமிடம் பார்த்தவள், அவனது சிரிப்பு அவளை கவரவே சிலையாய் நின்றாள்.

” அத்த… வாங்க அத்த… ” என்றான். அவள் நினைவுக்கு வந்தவள். ” சரி சித், இதோ ரெடியாகி வர்றேன் என்று உள்ளே சென்று தயாராகி அவன் முன்னே வந்து நின்றாள்.

” அத்த நீங்க அழகா இருக்கீங்க. இங்க வாங்களேன்  ” என்று தன்னருகினில் அழைத்தான். அவளும் செல்ல தனது மயக்கும் வித்தையான முத்தத்தை கொடுக்க, அத்தையவள் மயங்கிதான் போனாள். இதுவரை வைஷூவோ, விஷ்ணுவோ, ஏன் ஜகதீஸ் கூட இப்படி சொன்னதும் இல்லை முத்தமும் கொடுத்ததும் இல்லை இது புதிதாகவும், அவளை வெகுவாய் கவர. அவனது குண்டு கன்னத்திலும் தன்னிதழைப் பதித்து அழைத்து போனாள்.

அங்கே ஜானுக்கு வளையல் போட்டுகொண்டிருந்தனர்.. அங்கே குழந்தைகள் விளையாட, அதில் சித், இல்லை சுற்றும் முற்றும் தேடியவள், அருகில் அமர்ந்த ஆர்.ஜேவிடம் சித்தைக்கேட்டாள்..

” ஆர்.ஜே சித் எங்க காணோம் ? ” என்றாள்.அவனும் எழுந்து சித்தை தேடினான். எல்லாருக்கும் பதற்றம் தொற்ற, ஜானுவோ அழுகவே ஆரம்பித்தாள்..

” ஜானு, அழாதமா சித், இங்க தான் எங்கையாவது இருக்கன்னும்  ” சீதா ஆறுதல் சொன்னாலும் அவளால் தன் அழுகையை கட்டுபடுத்த முடிந்திட வில்லை….

வெளியே வாட்ச்மேனிடம் கேட்க. நான் வெளிய கடைக்குசென்றதால் தெரியவில்லை என்றார், அங்கே எல்லாருக்கும் பதற ஆரமித்தனர்.

சரியாக சித்துவும் அபியோடு இருக்கினான் ஆட்டோவில்.அவனை பார்த்ததும் வாட்ச்மேன் சொல்ல, ஆர்.ஜே ஓடிவந்து அவனை தூக்கிக்கொண்டான்.

” எங்க சித் போன நீ ? நாங்க உன்னைகாணோம்  பயந்துடோம் தெரியுமா. சொல்லாம எங்கடா போனா ? “

” ஆர்.ஜே நான் அபி அத்தையை கூப்பிட போனேன். வெளியே ஆட்டோல போய் அவங்களையும் கூட்டிட்டு வந்தேன்.. “

” அவன் அங்க தான் வந்தான். என்ன கூப்பிட வந்திருக்கான். எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. எப்படி இவன்  தனியா வந்தான்.. ஆனால் என் தப்பெல்லாம் புரிய வச்சுட்டான். சாரி ஜானு, உன்னை ஒதுக்கி வச்சு ரொம்ப தப்பு பண்ணிட்டேன், ஐயம் ரியலி சாரி… சாரி மாமா, சாரி ஐகா.. ” என்று மன்னிப்பு கேட்க, ஜானு அவளை அணைத்தாள்.

” என்னையும் மன்னிச்சிடு அபி, என்னால நீ இழந்தது அதிகம், உனக்கு கோபம் இருக்கத்தான் செய்யும்… நானாவது உன்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும் தப்பு தான் அபி.. சாரிமா.. ” இருவரும் ஒன்னு சேர, ரகுவிற்கும் ஜகாவிற்கும் மனதில் இருந்த பாரம் குறைந்தது.

” அடேய்! மாப்பிள்ளை கொஞ்ச நேரத்தில எங்களை பதற வைச்சுட்டீயே… ஆனாலும் ரொம்ப நன்றி சித். நாங்க மாத்தவே முடியாது நினைச்ச விசயத்தை மாத்திடா, நன்றிடா. ” என்று அவனது குண்டு கன்னத்தில் முத்தமிட்டான்.

” மாமா, அத்தை ரொம்ப நல்லவங்க தெரியுமா? நான் கூப்பிட்டதும் வந்துட்டாங்க.. நாம அவங்களை தப்பா நினைச்சுட்டோம்… ” என்றான்.

அப்படியா என்பது போல ஜகதீஸ் பார்க்க, அவனோ அமோதிப்பதாய் கண்ணடித்தான்.

” அடேய்! நீ ஹீரோ தான். ஆனால் உன் பெர்ஃபாமன்ஸ்  ரொம்ப அதிகமாக இருக்குடா சித்… ” ஆர்.ஜே கூற சிரித்து வைத்தான்.

” சித், நீ பண்ணது ரொம்ப பெரிய விசயம் தான். ஆனால் இப்படி சொல்லாம எங்கையும் போகாத. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா… என் சித்துக்குட்டிக்கு எல்லாம் தெரியும் தானே. அதுனால சொல்லாம எந்த விசயமும் பண்ண கூடாது ஒ.கேவா…”

” ஓ.கே ஜானு..” என்று முத்தமிட, அவளும் முத்தமிட்டு அணைத்துக்கொண்டாள்…

விழா சிறப்பாக முடிந்தது… நாட்கள் கடக்க, சித்துவும் ஆர்.ஜேவும் ஜானுவை தங்க தட்டில் தாங்காத குறைத்தான்.

ஆர்.ஜே அவளுக்கு காலைப் பிடித்துவிட, அவனோ குழந்தையுடன் பேச ஆரம்பிப்பான். அவனது சத்தம் கேட்டாலே குழந்தை உள்ளே உதைக்க ஆரம்பித்தது.. பள்ளியில் நடந்ததை கதைகளாக கூறுவான்.. குழந்தையின் அசைந்து அதை கேட்கும்…

வயிற்றில் முத்தம் வைக்காத நாளே இல்லை… ” ஜானு, எப்ப பாப்பா வெளிய வருவா ? “

” ஏன்டா, குட்டி இவ்வளவு அவசரம். உனக்கு பாப்பா கூட விளையாடுனுமா என்ன ? “

” ஆமா சீதா, பாப்பா பிறந்ததும் அவளை நான் பார்த்துப்பேன்… அவளை என் கூட ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவேன்.  என்கூட டான்ஸ் ஆடவைப்பேன். ” என்றான்.

” அவளையுமாடா டான்ஸ் ஆட வைக்க போற பேரா “

” எஸ் ரகு… அம்மாவை போல அவளையும் பரதநாட்டியம் ஆடச் சொல்லிக்கொடுக்கலாம்… “

” போதும் டா பேரா! இங்க மூனு டான்ஸ்ர். பாப்பாவையும் டான்ஸ்ர் ஆகிட்டா. அப்புறம் நம் எல்லாரையும் ஆட்டாகார குடும்பம் சொல்லுவாங்க.” என்றான் ராமன்.

” சித், உனக்கு எப்படி டான்ஸ் ஆடுறது பிடிக்குமோ ! அது போல, நம்ம பாப்பாக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யட்டும்.. உன் ஆசையை இந்த ஆர்.ஜே நிறைவேத்தினது போல, என் ப்ரின்ஸஸ் என்ன ஆசைபடுறாளோ அதையும் நானே நிறைவேத்துவேன்.. இரண்டு பேரும் என் இரண்டு கண்ணுடா.. “

” அப்ப ஜானு ? “

” ஜானு,என்னுடைய  இதயம் சித்  ” என்றான் அவளை காதலாய் பார்த்து.

” அப்போ, சீதா, ராமு, ரகு  எல்லாரும் ? ” அவனை வம்பிழுக்க…

” கையும் காலும்… எவ்வளவு எமோசனா என் புள்ளை பேசுறான். நீ என்ன பேரா காமெடி பண்ணுட்டு இருக்க…” அனைவரும் அங்கு சிரிக்க, ஜானுவிற்கு வலி வந்தது. அவள் ஒருகையை வயிற்றிலும் மறுகையை ஆர்.ஜே வை இறுக்கப்பற்றிக் கத்த ஆரம்பித்தாள். சித்தை ரகு தூக்கிக்கொண்டார். காரில் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்..

லேபர்வார்டுக்கு அவளை அழைத்துச்சென்றனர்.. சித்துவும் உள்ளே செல்லுவதாக அடம்பிடித்தான்… வேறு வழியின்றி ஆர்.ஜேவும் சித்துவும் உள்ளே செல்ல, தனது பிஞ்சுவிரல்களை வைத்து ஜானுவின் கைகளை இறுக்க பிடித்துக்கொண்டான். இன்னொரு புறம் ஆர்.ஜே பிடித்துக்கொண்டான்..

“உன்னால முடியும் ஜானு, ” என்றே அவள் கைகளைப்பற்றி கூறியவாறே நின்றான். அவன் முகத்தில் பயம் அப்பியிருந்தது.. கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது…

வெகுநேரத்திற்கு பின் குழந்தைவெளியே வர, ஜானு மயங்கினாள்..சித்தை அழைத்துகொண்டு வெளியே வந்தான்.

” ஆர்.ஜே, ஜானு… ” என்று அறையை மட்டும் காட்டினான்…

” ஜானுக்கு ஒன்னுமில்லை, பாப்பா வெளியே வந்ததுல, கொஞ்சம் டயர்டாகி மயங்கிடா… நீ பீல் பண்ணாதா…ஜானுவையும் பாப்பாவையும் பார்க்கலாம்.. “

” ஏன்டா, அவன் தான் அடம் பிடிக்கிறான்னு உள்ளே கூட்டிட்டு போவீயா.. பாரு குழந்தை எப்படி பயந்து போயிருக்கான் பாரு… ” என்று அவன் முகத்தை துடைத்துவிட்டார் சீதா..

குழந்தையைக் கொண்டு வந்தார் செவிலியர்.. குழந்தையை சீதா வாங்கிகொண்டாள்.. ” சித்து, பாப்பாவ பாருடா… நீ எதிர்பார்த்த உன் செல்ல குட்டியை பாருடா.. ” என்றார் சீதா..

ஆர்.ஜே குழந்தையை வாங்காது,சித்தை தூக்கிவைத்திருந்தவன். தன் தாயிடமிருந்தவாறே பார்த்தான்.

  ” ஆர்.ஜே, நான் பாப்பாவை தூக்கட்டுமா? அவ அழுவாளா ? “

“அழுகமட்டா சித். அம்மா அவன் கையில கொடுங்க ” என்றான். அவன இறங்கி கையில் வாங்கிகொண்டவன் தன் தங்கைக்கு முதல் முத்தம் அவன் தான் கொடுத்தான்.. அதன் பின்னரே தன் மகளை கையில் ஏத்தினான் ஆர்.ஜே.. ஜானுவிற்கு மயக்கம் தெளிய, தனது இரண்டு குழந்தைகளை அழைத்து உள்ளே சென்றான் ஆர்.ஜே.

தன் அன்னையை கட்டிக்கொண்டவன்.,.. ” ரொம்ப வலிச்சதா ஜானு…. நான் ரொம்ப பயந்துடேன். நானும் இப்படி தான் உனக்கு பெயின் கொடுத்தேனா ? சாரி ஜானு…” என்று முத்தம் வைத்தான்..

” சித்து குட்டி, பெயினா இருந்தாலும், உன்னையும் இந்த குட்டியையும் பார்க்கும் போது, போயே போச்சு. என் அடம் பண்ணி உள்ள வந்த, இப்ப பாரு எவ்வளவு பயந்திருக்க.. இதக்கு தான் உள்ள யாரையும் விட மாட்டாங்க சித்.. இனி இது போல வேற எந்தவொரு சிட்சுவேசனுக்கும் நீ அடம் பண்ண கூடாது ஒ.கேவா… ” என்றாள். தலையாட்டிவைக்க  முத்தமிழைத்தாள்.

அவள் கையில் குழந்தையைக்கொடுத்தான் ஆர்.ஜே. ” சாரி ஜானு… இந்த குழந்தை உருவாக நாம இரண்டு பேரினுடைய பங்கு இருந்தாலும், என்னால உன் வழியில பங்குப் போட முடியல, முழு பெயினையும் நீயே எடுத்துக்கிட்ட மன்னிச்சிருடா.. “

” ஆர்.ஜே கமான்.. என்ன இது அழுதுட்டு, அவன் தான் சின்ன பையன் அழுகிறான். நீங்களுமா, இதெல்லாம் எங்களுடைய வரம். ப்ளீஸ் அழுது மானத்தை வாங்காதீங்க.. ” என்றான்.

” நீவேறம்மா இவனையே இப்படி சொல்லுறீயே. உங்க மாமா, நான் கத்துன கத்துக்கு இனி இன்னொரு குழந்தையே வேணாம்ன்னு சொல்லிட்டார். பிரசவ வார்டுல என்ன விட அதிகமா அழுதது இவர்தான்.. “

“நைனா! நீயுமா ? நான் பரவாயில்லை போலையே  “

” நீ வேறடா மகனே. நான் அழுதனாலத்தான் உங்க அம்மா அமைதியாக இருக்கா… இல்லைன்னா,  நான் வலியில துடிச்சேன்னா நீங்க வேடிக்கை தானே பார்த்தீங்கன்னு  என் கொல்லு பேரனே வந்தாலும் சொல்லிக்காட்டுவா எதுக்கு வம்புன்னு அழுதுட்டேன்… “

சீதா முறைக்கவே அமைதியானார். ” அடேய் பேரா ! என் பேத்திக்கு பெயர் வைக்கன்னும் நைட் முழுக்க யோசீச்சயே. என்ன பெயருடா வைக்க போற… “

” சித், நீ பெயர் யோசிச்சுட்டீயா ? என்னப் பெயர் வைக்க போற உன் தங்கச்சி பாப்பாக்கு.. “

” ஆமா ரகு எப்படி உனக்கும் மாமாக்கு ஜெல வச்சாரோ,அதே போல நானும் என் பாப்பாக்கு எஸ்ல வைக்க போறேன்.. “

” என்ன பெயர் சித் சொல்லு ? அதையே ப்ரன்ஸஸ்ஸூக்கு வச்சிடுவோம்.. “

” ஆர்.ஜே பாப்பாக்கு ஷ்ரத்தா ன்னு வைப்போம்… அதுதான் மாடர்ன்னா இருக்கும்…”

” இது என்ன சாரதா கேள்விப்பட்டுருக்கேன், அது என்ன ஷ்ரத்தா.. “

” சீதா, அது பாலிவுட் ஹீரோயின் பெயர்… அந்த பாப்பா ரொம்ப அழகா இருக்கும்… “என்றார் ராமன்.

” அவளை எப்படி உங்களுக்கு தெரியும்… ” என்று முறைப்போடு  கேட்டார்.

” மாட்டுனார் நைனா !… “

” அதுவா பொழுதுபோல அந்த பக்கம் சேனலை மாத்துனேன். ஒ.கே ஜானு பாடம் போட்டானுங்க, அதுல இந்த பாப்பா நடிச்சிருக்கும் ரொம்ப அழகா இருக்கேன்னு பெயரு என்ன இந்த சித்து கிட்ட தான் கேட்டேன். அவன் தான் சொன்னான் சீதாம்மா ” என்று மழுப்பினார்..

அதன் பின் சித்து குழந்தையின் காதில் சென்று அழைக்க, ஷ்ரத்தா என்று அழைத்தான். அதன் பின் தொடர்ந்து பெரியவர்களும் அழைத்தனர். பெயர் வைக்கும் விழாவைத்து மீண்டும் அனைவரும் ஒன்றுகூடினார்கள்…

இரவானது,  சித்து  தன் தங்கைக்கொஞ்சிக்கொண்டுருந்தான். அவன் பேச பேச அவனது விரலை பிடித்துக்கொண்டு சிரித்து கொண்டிருந்து குழந்தை.

” ஆர்.ஜே நீங்க வரலைன்னா, என் வாழ்க்கை முழுமையடைந்திருக்காது. என் வாழ்க்கையில வந்த ஆண்தேவதை நீங்க தான்… ஐ லவ் யூ சோ மச்.. “

” வாழ்க்கையில இப்படி ஒரு இன்பத்தை அனுப்பவிக்காமலே வாழ்க்கை கடந்திடுவேனோன்னு ஒரு பயம் இருந்தது. என் வாழ்க்கையில தேவதையாய் வந்து இத்தனை சந்தோசத்தை கொடுத்திருக்க ஜானு. லவ் யூ டூ.. ” என்று அவள் இதழில் முத்தம் பதித்தான்..

” நம்ம சித், மட்டும் இல்லைன்னா,நாம சேர்ந்திருக்க மாட்டோம்.,அவனுக்கு தெரியாமலையே நம்மலை அவன் சேர்த்திருக்கான்… என்னுயிர் வழி வந்த குறும்பா அவன். அவனாலத்தான் நம்ம குடும்பம் இவ்வளவு அழகா இருக்கு… ”
என்றான். இருவரும் தன் இரு செல்வங்களை ரசித்தவாறு நின்றனர்…

முற்றும்..அழகாய் துயிலெழுந்த அக்கதிரவனின் கதிர்களெங்கும் பரவியது போது… மனமெங்கும் சந்தோசமே பரவி இருந்தது.

முற்றும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!