கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 13

 

ஈவினிங் காபி ஷாப்பில் மூன்று தோழிகளும் வழக்கம் போல் பேசி அரட்டை அடித்து, நிலாவிற்கு சில பல அட்வைஸ் அள்ளி தெளித்த பின்.. “நிலா சரிடி நான் கிளம்புறேன். காலையில கிளம்பும்போதே அம்மா ஆபீஸ் போக வேண்டாம்னு சொல்லுச்சு. இப்ப நா லேட்டா போன அவ்ளோதான் கையில வேப்பில இல்ல,! வேப்ப மரத்தையே புடிங்கி கையில் வச்சுட்டு ஆடும். நா வரேன்” என்று கிளம்ப.. அவள் சென்ற ஒரு நிமிடம் கழித்து சூர்யாவும், அரவிந்தும் அங்கு வந்தனர்.

 

“என்னமா என்ன சொல்லிட்டு போற எம் பொண்டாட்டி?? என்று சிரித்தபடியே சூர்யா வர,

 

“தோடா இதனா வேணாங்கிறது. அதன் பின்னாடி சேர்ல உக்காந்து இவ்ளோ நேரம் உங்க பொண்டாட்டி பேசுனா எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்தீங்களே… அப்புறம் எதுக்கு இந்த கேள்வி..?? என்று தேவி வம்பிழுக்க, சூர்யா அழகாய் அசடு வழிய. அரவிந்த், “எதுக்கு இந்த வகன் விளம்பரம்?” என்று காறி துப்ப,

“சும்மா தான் டா மச்சி” என்று சூர்யா ஈஈஈ என்று இளிக்க. “அய்யோ கடவுளே இந்த கண்றாவி எல்லாம் பாக்கணும்னு என் தலையில எழுதிட்டியே..!!” என்று அரவிந்த் முறைக்க.

 

 

சூர்யா, ” அத விடு டா” என்றவன். “என்ன தேன்மொழி? நேத்து உங்க வீட்டுக்கு வந்த சாமியாடுனால என் பொண்டாட்டி” என்று கேட்க.

 

” ஆமாண்ணா… செம்ம ரெய்டு. இப்போதைக்கு அவளுக்கு எங்க மேல வெறும் சந்தேகம் தான். அது கன்பார்ம் மட்டும் ஆச்சு நீங்க அதுக்கு அப்றம் எங்களை ஜி.எச் ல தான் வந்து பாக்கணும்” என்று சிரித்தவள். “அதுசரி…! நேத்து அவ எங்க வீட்டுக்கு வந்தது உங்களுக்கு எப்டி தெரியும்?” என்று கேட்க.

 

“சிம்பிள் மா. நேத்து அவ கிளம்பும் போதே செம்ம டென்ஷன்ல இருந்த, சோ, கண்டிப்பா அவ உங்க ரெண்டு பேர பாக்க தான் வந்து இருப்ப… அவளோட பாட்னர் இன் க்ரைம் நீங்க தான். அபற்ம அவ வேற எங்க போவா!” என்று சிரிக்க…

 

சூர்யா, நிலாவை இந்த அளவு புரிந்து வைத்திருந்தது தோழிகள் இருவருக்கும் உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

 

“அதெல்லாம் இருக்கட்டும். நேத்து நிலா இந்த கல்யாணம் பத்தி, சூர்யா பத்தி எதுவும் சொன்னாளா? அதை சொல்லுங்க முதல்ல?? என்று அரவிந்த் ஆர்வமாக கேட்க,

 

“சூர்யா அண்ணா பத்தி அவ எதுவும் சொல்லல… ஆனா,” என்று இழுக்க….

 

“என்ன தேனு இழுக்குற எதுவா இருந்தாலும் சொல்லுமா” என்ற சூர்யாவை நிமிர்ந்து பார்த்த தேன்மொழி, “இல்லண்ணா… உங்களுக்கு ஞாபகம் இருக்க? இது ஒரு தடவை” என்று அரவிந்தை குறிப்பிட்டு சொல்ல.

 

 அரவிந்த் “என்ன இதுவா?” என்று முறைக்க..!!

 

” ஆமாடா…”என்று வேனு திமிராக சொல்ல,

 

“அடியேய்… உனக்கு கொழுப்பு ரொம்ப ஏறி போச்சுடி” என்று அரவிந்த் சண்டைக்கு வர..

 

“டேய் யாரா பாத்து டி ன்னு சொன்னா?” என்று தேனும் எகுற.. 

 

“அய்யேயய.!! உங்க சின்ன புள்ளைங்க சண்டைய கொஞ்சம் நிறுத்துங்க” என்று சூர்யா கத்த. இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு அமைதி ஆகினார்..

 

“ம்ம்ம்… இப்ப சொல்லு தேனு” என்று சூர்யா கேட்க… 

 

“ஒரு தடவ, நிலா கல்யாணம் வேணாம்னு சொல்ல வேற ஏதும் காரணம் இருக்கான்னு அரவிந்த் கேட்டான் இல்ல? அது ரொம்ப சரிண்ணா.. அவளுக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்ல. ஒட்டுமொத்த ஆம்பிளைகளும் தப்பானவங்க ன்னு நினைக்குற. அதான் அரவிந்த் கிட்ட அவளை பிடிக்கலைன்னு சொல்ல சொல்லி இருக்க..!!” என்று தேனு சொல்ல…

 

“நா தான் அப்பவே சொன்னேனே… அவளுக்கு வேற ஏதோ பிரச்சனை இருக்கு. ஆனா, அதை அவ யார்கிட்டயும் சொல்ல விரும்பல.. அதான் நாம்ம அவளை கார்னர் பண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க வேண்டியதா போச்சு” என்று அரவிந்த் வருந்த. 

 

“விடுடா மச்சி, இப்ப அத பத்தி பேசி ஆக போறது ஒன்னு இல்ல. தேனு நீ அவகிட்ட இது பத்தி கேட்டியா..??”

 

“ம்ம்ம் கேட்டேன் ண்ணா… ஆனா, இத பத்தி எதுவும் கேக்காதீங்க.. நான் அதை மறக்க விரும்புறேன். ப்ளீஸ்ன்னு அழுக ஆரம்பிச்சுட்ட. அதான் நாங்க அதுக்கு மேல எதுவும் கேக்கல. ஆனா, இதுக்கு அப்றம் என்ன செய்ய போறேன்னு கேட்டதுக்கு, அத பத்தி இன்னும் யோசிக்கலனு சொல்லிட்டா. ஆனா, அவளுக்கு உங்க மேல விருப்பம் இல்லனாலும் கோபமும் இல்ல. இந்த அரவிந்த் மேல தான் செம்ம கடுப்புல இருக்கா. அதோட உங்க குடும்பத்தை அவளுக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. ஸ்பெஷலி தனம் அம்மாவை, சோ கூடிய சீக்கிரம் அவ மனசு மாறிடும்னு தான் நினைக்கிறேன்.

 

“கண்டிப்பா மாறும் தேனு. என்னோட அன்பும், காதலும் அவள மாத்தும்” என்று சூர்யா உணர்ந்து சொல்ல. 

 

“நீ நிலாவ மாத்துறதுக்குள்ள, நிலா கையால நீ எவ்ளோ மாத்து வாங்கப்போறீயே..?? என்று அரவிந்த் சிரிக்க… “டேய் ஏன்டா உனக்கு இந்த நல்ல எண்ணம்.? என்று சூர்யா அவன் முதுகில் மொத்த… “ஆமாண்ணா, இது வாயில நல்ல வார்த்தையே வராது” என்று தேனு ஆரம்பிக்க, அரவிந்தும் சண்டைக்கு தயாராக. மீண்டும் ஒரு புது சண்டை தொடங்கியது. 

 

“சூர்யான்னா இது வேலைக்காகாது இவங்க பொறுமைய சண்டை போட்டு முடிக்கட்டும். நீங்க நமக்கு மட்டும் சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணுங்க” என்ற தேவியை முறைத்த தேனு, “ஏய் இதுதான் சாக்குன்னு, என்ன விட்டு தனிய தின்னப்பாக்குறீய நீ. அண்ணா நா சண்டையை அப்புறம் கண்டினியூ பண்ணிக்கிறேன். நீங்க எனக்கு சேர்த்து ஆர்டர் பண்ணுங்க.”

 

“ஆமாடா சூர்யா, இந்த பிசாசு கிட்ட சண்டை போட்டு, நானும் டைய்ட் ஆகிட்டேன் எனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணு” என்று அரவிந்த் சொல்ல, சூர்யா தலையில் அடித்துக்கொண்டு ஃபுட் ஆர்டர் செய்ய நால்வரும் உண்டு முடித்து அங்கிருந்து கிளம்பினார்.

 

அழகாய் விடிந்த காலை வேளை. நிலவு தான் வேலையை முடித்துக் கொண்டு செல்ல, ஆதவன் தன் காதலி விட்டு சென்ற பணியை தான் தொடர்ந்தார்.

 

நிலாவுக்கு இன்று கல்யாண புடவை எடுக்க செல்வதால் ஆபீசுக்கு லீவ் போட்டு இருந்தாள். அதனால் தான் செய்ய வேண்டிய வேலைகளை ஃபோனில் மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு கலையை பார்க்க சமையலறைக்கு சென்றாள்.

 

“அம்மா, ம்ம்மமாஆஆஆ” என்று கத்தியபடி அவள் வர

 

“ஏன்டி இப்டி காது கிட்ட வந்து கத்றா.?? என்ன வேணும் உனக்கு?? அதிசயமா சமையல் கட்டுக்கு வந்திருக்கா..?? வெளிய வேற நா துணி காயப்போட்டிருக்கேனே, மழை எதும் வந்திடபோகுதுடி” என்று கலை மகளை கிண்டலாடிக்க.

 

மீண்டும் நிலா “அம்மா, அம்மா” என்று ராகம் இழுக்க, அவளை முறைத்த கலை, “ஏய் என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்டி அம்மாவ ஏலம் போட்டுட்டு இருக்க நீ..?? சொல்ல வந்தத சொல்லு.?? இல்ல போ..!! எனக்கு நிறைய வேலை இருக்கு. சம்பந்தி வீட்ல இருந்து ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துடுவாங்க. அதுக்குள்ள நா எல்லா வேலையும் முடிச்சு கிளம்பனும். நீ வேற சும்மா தொந்தரவு பண்ணிட்டு. போடி” 

 

“அம்மா… அது”

 

” அது… வந்தும்மா” என்று மீண்டும் அவள் தொடங்க, “ஏய் நீ இன்னம் போகலயா” என்று கலை கத்த…

 

“அம்மா இன்னைக்கு புடவயெடுக்க, நா வர்லம்மா. நீங்க மட்டும் போய்டு வாங்க.. நா வர்ல ப்ளீஸ்”என்று கெஞ்ச. நிலா தலையில் நறுக்கென்று கொட்டிய கலை, “கிறுக்கு புடிச்சிருக்கடி உனக்கு.?? எடுக்க போறது உன்னோட கல்யாண புடவ. அதுக்கு நீயே வர மாட்டேன்னு சொல்ற? லூசுடி நீ? போடி, போய் கெளம்புற வழியை பாரு” என்று மீண்டும் நிலா தலையில் கொட்டுவைக்க, நிலா தலையை தேய்த்து கொண்டே, “அம்மா ப்ளீஸ்மா என்று ஆரம்பிக்க.

 

“ஏய் மறுபடியுமா ஆரம்பிக்குற? எங்க அந்த சோசை கரண்டி என்று கலை தேட… அடுத்த நொடி நிலா தன் அறையில் இருந்தாள்.

 

 “கடவுளே இந்த அம்மா வேற நேரம் பார்த்து சதி பண்றாங்களே.??

இப்ப கடைக்கு புடவை எடுக்க போன, அந்த சூர்யா அங்க வருவான். நா எப்டி அவனை பாப்பேன். எனக்கு அவனை பாக்கனும்னு நினைக்கும் போதே

எம்பரிஸ்ட்மென்டா இருக்கு..!! இதுல இந்த சூனிய பொம்மை வேற கூட வருது. என்னை கிண்டல் பண்ணியே சாகடிச்சுடுவா.?? இப்ப என்ன பண்றது..?? இதுல இருந்து எப்டி எஸ்கேப் ஆகுறது, அய்யோ!” என்று மண்டையை பிய்த்து கொண்டு புலம்பவும், சூர்யாவின் அம்மா தனம் அங்கு வரவும் சரியாக இருந்தது. 

 

நிலா, “வாங்க அத்தை” என்று அவரை வரவேற்க..!! சமையல் அறையில் இருந்து வெளியே வந்த கலையும்.. “வாங்க அண்ணி, என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க.?? இன்னும் நிறைய நேரம் இருக்கே, நல்ல நேரத்துக்கு” என்றவர் காபி கலந்து அவருக்கு கொடுக்க. 

 

தனம், “அது ஒன்னும் இல்ல அண்ணி கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நிலா கிட்ட பேசிட்டு இருக்கலாம் இல்ல, அதான்” என்று சொல்ல சிரிக்க. 

அப்போது அங்கு வந்த சந்தியா “இதெல்லாம் ஓரவஞ்சனை அத்தை. உங்க மருமக மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுத? நானெல்லாம் என்ன இன்விசிபிள்லாவா இருக்கேன்?” என்று முறுக்கிக்கொள்ள.

 

“அய்யோ அப்டி எல்லாம் இல்லடா செல்லம். உன்னையும் பாக்க தான் வந்தேன்” என்று தனம் அவளை கொஞ்ச. 

 

“சும்மா சொல்லாதீங்க.. உங்களுக்கு நிலா தான் பெரிசு. என்ன எல்லாம் உங்களுக்கு பிடிக்காது.” என்று சந்தியா மூஞ்ஜை பாவம் போல் வைத்துக்கொள்ள.

 

“அச்சச்சோ!! அதெல்லாம் ஒன்னும் இல்லடா” என்று தனலட்சுமி அவளை சமாதானம் செய்ய முயல.

 

“இல்ல அத்தை நீங்க பொய் சொல்றீங்க. உங்களுக்கு மட்டும் என்னை புடிச்சிருந்த, இப்டி நீங்க வாங்கிட்டு வந்த எல்லா ஸ்வீட்டையும் நிலா கையில கொடுத்திருப்பீங்களா??” என்று வராத கண்ணீரை துடைத்து கொள்ள. நிலாவும், கலையும் தலையில் அடித்து கொண்டனர்.

 

“ஏய் சந்தியா. என்னடி இது?” என்று கலை அதட்ட.

 

 “பரவாயில்ல அண்ணி. எனக்கு இவ உரிமையோடு என்கிட்ட கேக்குறது ரொம்ப பிடிச்சு இருக்கு” என்றவர் “யாரு சொன்ன? இந்த வாயாடிக்கு எதுவும் இல்லன்னு? உங்க மாமா உனக்கு மட்டும் தனிய தரச்சொல்லி ஒரு பை நிறைய கொடுத்து அனுப்பி இருக்கான்” என்று ஒரு பெரிய பையை அவளிடம் கொடுக்க.

சந்தியா துள்ளி குதித்தவள் தனம் அம்மாவின் கன்னத்தை கிள்ளி விட்டு “யூ ஆர் சோ ஸ்வீட் அத்தை” என்றவள் தனலட்சுமி தந்த பையை வாங்கிக் கொண்டு போய் தன் தலையாய கடமையை செய்ய தொடங்கினாள். 

 

“இவளா வச்சுகிட்டு… அய்யேயய” என்று தன்னை தானே நொந்து கொண்ட கலை, “அது சரி அண்ணி.?? நீங்க மட்டும் வந்திருக்கீங்க? அண்ணனையும், மாப்பிள்ளையையும் காணும்.??”

 

“சூர்யாக்கு வேலை அதிகமா இருக்காம் அண்ணி, அதனால அவன் வர்லன்னு சொல்லிட்டான். அவரு கல்யாண பத்திரிகை வைக்க வெளியூர் போயிருக்காரு” என்று சொல்ல. அதை கேட்ட நிலாவின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு ஏறிய, அதை கவனித்த கலை, “ஓஓஓ.. இதுதான் விஷயமா.? சூர்யா மாப்ள வருவாருன்னு தான் இவ புடவை எடுக்க வர்லன்னு சொன்னாளா?… கேடி இருடி, உன்னை அப்றம் பேசிக்கிறேன்” என்று மனதில் நிலாவை வறுத்தெடுத்தவர், “நிலா நீ போய் துணி மாத்திட்டு வா, நம்ம கெளம்பாலாம்” என்று சொல்ல. 

 

சூர்யா வரவில்லை என்ற சந்தோஷத்தில் உற்சாகமாய் “ஓகே மா” என்றவள் தன் அறைக்குள் ஓடியவள், “அப்பாடி… நல்ல வேள அந்த சூர்யா வர்ல” என்று குதிக்க, அவள் மனசாட்சி, ‘ஏன்டி, அவன் வந்த உனக்கென்ன?? ஏன்? நீ அவனை பாத்து பயப்படுறியா நிலா?’ என்று கேட்க.

 

 

“ச்ச்சீ… நா ஏன் அவனை பாத்து பயப்படனும்..? நா எதுக்கும் பயப்பட மாட்டேன்னு, உனக்கு தான் தெரியும் இல்ல. என்கிட்ட வாலாட்டுன ஒருத்தன் கையையே உடைச்சவ நான். நானாவது பயப்படுறாது.” என்று‌ அவள் கெத்தாக சொல்ல.

 

அவள் மனசாட்சி, ‘அப்றம் என்ன?? நீ பாட்டுக்கு போக வேண்டியது தானே? ஏன் இப்டி தயங்குற..?? ஓஓஓ!! ஒருவேள நீ சூர்யாவ பாத்த. எங்க நீ அவர் கிட்ட விழுந்திடுவியோன்னு நினைக்கிறியா.??’

 

 “ச்சீ… அப்டி எல்லாம் ஒரு கண்றாவியும் இல்ல. எனக்கு யார் மேலயும் ஃபீலிங்ஸ் வரவே வராது. அதுவும் அந்த சூர்யாகிட்ட சான்சே இல்ல. அந்த ராஸ்கல் என் வீட்ல இருக்கவங்களை மயக்கி, என் கல்யாணத்தை எனக்கே தெரியாம ஏற்பாடு பண்ணி நடத்திருக்கான். அவன் மேல கொலைவெறியும், கோவமும் தான் இருக்கே, தவிர வேற எதுவும் இல்ல” என்று அவளுக்கு அவளே சொல்லி விட்டு கடைக்கு கிளம்ப.

 

அங்கு அவள் விதியோ, “அத சொல்ல நீ யாருடி.. அத நா இல்ல முடிவு பண்ணனும். இன்னைக்கு உனக்கான சீனை நா ஆல்ரெடி முடிவு பண்ணிட்டேன். போடி போ. நானும் பின்னாடியே வரேன்”…

 

 

இங்கு தனமும், கலையும் அடுத்த செய்ய வேண்டிய வேலைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்க. தேனுவும், தேவியும் அங்கு வந்து சேர்ந்தனர்.

 

 “வாங்கடி, உள்ள வாங்க” என்று இருவரையும் அழைத்து கலை அவர்கள் இருவரையும் தனத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

 “ஓஓஓ!! நீங்க தானாம்மா அது? வாங்க வாங்க” என்று இருவரையும் தன் அருகில் அமர்த்திக் கொண்ட தனலட்சுமி, “சூர்யா உங்க ரெண்டு பேர் பத்தியும் நிறைய சொன்னம்மா. நீங்க இல்லனா, இந்த கல்யாணமே நடந்திருக்காது. நீங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ஸ்ச கிடைக்க, என் மருமக ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கனும்னு சொன்னான்” என்று சொல்ல. 

 

“அய்யோ ஆன்டி” என்று பதறிய தேவி சுற்றி பார்த்து விட்டு, “ஆன்டி தயவு செஞ்சு. இப்ப நீங்க பேசுனத எல்லாம் உங்க மருமக அந்த பிடாரி நம்பர் ஒன் முன்னாடி சொல்லிடாதீங்க அப்றம் எங்க ரெண்டு பேர் முகத்தையும் எங்களுக்கே அடையாளம் தெரியாத மாதிரி மாத்தி வச்சுடுவா. உங்களுக்கு புண்ணியமா போகும் அவ முன்னாடி எதுவும் பேசிடாதீங்க ஆன்டி. இப்ப நீங்க பேசின மேட்டரை. உங்க மனசுல இருந்து அழிச்சிடுங்க… ப்ளீஸ்” என்று கெஞ்ச, தனத்திற்கு தன் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் போனது.

 

“அத்த… தேவி அக்கா சொல்றது உண்மைதான். உங்க மருமக விட்ட குத்துல என்னோட ரெண்டு கன்னமும் பன்னு மாதிரி வீங்கி போச்சு தெரியுமா” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சந்தியா சொல்ல.

 

“ஆமா ஆன்டி, தயவு செஞ்சு நிலா முன்னாடி எதுவேம் பேசி எங்களை மாட்டி விட்டுடாதீங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்” என்று சொல்ல தனமும் சிரித்துக்கொண்டே “ஒகே” என்று சொல்ல.

 

இங்கு தேவி, தேனுவின் தலைவிதி அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே, “அட லூசு பக்கிகளா, யாருக்கு தெரிய கூடாதுன்னு நெனச்சீங்களோ, அவ எல்லாத்தையும் கதவுக்கு பின்னாடி இருந்து கேட்டுட்டா டி.. இனி உங்க விதி என் கையில இல்ல.. அது உங்க அருமை ஃப்ரண்ட் கையில தான் இருக்கு” என்று விதி சிரித்தது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!