என் மனது தாமரை பூ 14

என் மனது தாமரை பூ 14

14
தன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு புறப்பட்டுக் கொண்டு இருந்;தான் கதிரவன். பின்னே அவனும் எத்தனை நாளைக்குத்தான் தாக்குப் பிடிப்பான்? வது ..வேண்டாம் வேண்டாம். இனி அவள் அனுமதி இல்லாமல் அப்படி சொல்லக் கூடாது என்று முடிவு செய்து வைத்தான். செந்தாமரை ஊருக்கு வருவது தெரிந்தும் இந்தப் பிரச்சனைகளை பேசி தீர்கன்க வேண்டும் என்றுதான் அவன் கள்ளிப்பட்டிக்கு வந்ததே. ஆனால் அவனை போலவே  இது தாமரை செல்வனுக்கும் முக்கியம் என்பது தெரிந்ததால் பிரச்சனையை அவன் தலையில் கட்டிவிட்டு எப்படியாவது தன்னை இந்தப் பிரச்சனையில் இருந்து விடுவிக்கத் தெரிவித்துவிட்டு அவன் நடையை கட்டலானான்.
“மாப்பிள்ள ஒண்ணும் சொல்லலியே?…” என்று இழுத்த கஜாவிற்கு ஊருக்குப் போய் லட்டர் போடுவதாகச் சொல்லவும் அவர் பேந்த விழித்ததைக் கண்டு கொள்ளாமல் அவர் காலிலும் உடன் நின்ற துளசி காலிலும் தடால் என்று விழுந்து அவர்கள் சிந்தனையை மாற்றினான். அவர்களும் மறந்து போய் “ நல்லா இருப்பா. “ என்று ஆசீர்வதித்தனர்.
“நல்லபடியா ஊருக்குப் போய் சேர்ந்ததும் போன் பண்ணுப்பா “ என்று கஜா விடாக் கண்டனாய் சொன்னதை காதில் வாங்கியதாய் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாய் காரில் ஏறி பொத்தாம் பொதுவாய் தலையாட்டி விடைறெ;று தன் ஒயிட் ஆடியைக் கிளப்பினான். இனி தாமரை செல்வன் பாடு!
தெனாவெட்டான கஜா ஒருகணம் அசந்துதான் போனார். பார்த்துக் கொண்டு இருந்த தாமரை செல்வன் வாய்க்குள் சிரித்துக் கொண்டான். அவன் அக்காவை தில்லாக அனைவர் மத்தியிலும் தாலி கட்டி இழுத்து வந்த தன் மாமா சொந்த மகளுக்காக இத்தனை செய்வது அதிசயமாகவும் கோபமாகவும் இருந்தது. இவர் பொண்ணுனதும் எப்படி ரத்தம் துடிக்குது? அப்படித்தானே மத்தவங்களுக்கும் இருக்கும்னு இனிமேலாவது புரியுமா? என்ற அவன் பார்வையை எதிர் கொண்ட கஜா துண்டை உதறி தோளில் போடுவதில் தன் கவனத்தைத் திருப்பினார்.
தாமரை செல்வனும் ஒன்றும் சும்மா இல்லை! தன் தாயின் இறப்பிற்கு துளசியுடன் வந்திருந்த தன் அக்கா மகளை ரொம்பவும் பிடித்துப் போய்தான் ஆட்டத்தையே ஆரம்பித்தான்!ஆனால் தன் அக்கா கணவனை தன் பிழையை உணர வைப்பதுதான் முக்கியமாகப் பட்டது. யுவராணியை மணப்பது ஒரு பிரச்சனையை தன் அக்காவின் வாழ்வில் கொண்டு வருமானால் அவன் அதைத் தவிர்த்துவிடத் தயாராகத்தான் இருந்தான். அதனால்தான் யுவராணி சுற்றி சுற்றி வந்தும் ஒன்றும் உறுதியாகச் சொல்லிக் கொள்ளவில்லை
துளசி அழைக்காவிட்டாலும் அவனாக ஏதாவது சொல்லி அந்த வீட்டுக்குள் நுழைந்திருப்பான். இப்போது கஜாவின் அனைத்து நடவடிக்கைகளும் அவனுக்கு அத்துப்படி. கொஞ்சம் கொஞ்சமாக கஜாவின் ஆளுமை தாமரை செல்வனின் கைகளுக்கு மாறி இருந்தது. இப்போது வேலைக்காரர்களில் இருந்து தோட்டத்தில் உரம் அடிப்பவன் வரை…ஏன்? அவன் மாப்பிள்ளை ராஜ்கமல் வரை தாமரை செல்வனிடம்தான் முக்கியமாக விசயங்களை ஆலோசிக்கிறார்கள். அனுமதி வாங்குகிறார்கள். கஜா சும்மா ஜீப்பில் வலம் வந்து வேலைகளைப் பார்வையிட்டு மீசையை முறுக்குவதோடு நிறுத்திக் கொள்கிறார்.
ஆரம்பத்தில் ‘திங்கிற சோத்துக்கு வேலையைப் பாரு’ என்று எடுத்தெரிந்து பேசியசரை பொருட்படுத்தாது இவன் உழைத்ததில் அனைத்தும் இவன் வசமாகி இருந்தது. கஜாவைப் போல தெனாவெட்டுடன் இருந்த யுவராணியையும் சேர்த்து.
கஜாவின் லட்சணத்தைப் பார்த்துவிட்டு அவர் அப்பா பேரப் பிள்ளைகளுக்கு சம பங்காக எழுதி வைத்துவிட்டுப் போய் சேர்ந்திருந்தார். கஜாவின் தாயும் பக்கவாதம் வந்து போய் சேர்ந்து பல வருடங்கள் ஆகிறது. இப்போது கஜா தன் பிள்ளைகளை நம்பிதான் இருக்க வேண்டும். அவராக சம்பாதித்த சொத்துக்களை மட்டும் துளசி பெயரில் வாங்கி இருந்தார். பெரிதாக அன்பு எல்லாம் காரணமில்லை. பெண்களுக்கு  அளிக்கப்படும் வரிவிலக்கை மனதில் கொண்டு வாங்கியதுதான். அவற்றுள் முக்கியமானது ஒன்று உண்டு. அது வந்தனா வீட்டிற்கு அருகில் வாங்கப்பட்ட சற்றுப் பெரிய வீடுதான் அது!.
கஜாவின் சொத்து விபரம் தாமரை ஆராயக் காரணம் அவர் பல்லைப் பிடுங்கத்தான். மற்றபடி அவன் யுவராணியின் சேவகன்.
“உங்க எல்லோர்கிட்டயும் பேசனும்” என்ற தாமரையின் உத்தரவான குரலில் கஜா அதிர்நதார்.
‘இவன் எதுக்கு குரலை உசத்துறான்? இது நல்லதில்லையே? தட்டனுமே?’ என்று யோசித்த கஜா தொண்டையைச் செருமி “ செல்வா மொதல்ல எனனக்குக் கொஞ்சம் தண்ணி கொண்டு வா.” ஏன்று விரட்டினார். ஆவர் செயல் அனைவருகு;கும் புரிந்த போதும் ஒன்றும் சொல்லாமல் தாமரை செல்வன் கஜாவிற்கு அருகில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்துக் கொடுத்தான்.
அவர் குடித்து முடித்ததும் வேறு அவரை பேச யோசிக்கவிடாமல்” நான் யுவராணியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று அறிவித்தான்
ராஜ்கமல் உட்பட யாருக்கும் முதலில் புரியவே இல்லை. யுவராணிக்கு நம்பவே முடியவில்லை.
அனைவரின் முகங்களைப் பார்த்துவிட்டு, “நீங்க கேட்டது சரிதான். நான்..யுவராணியைக்…கல்யாணம் பண்ணிக்கப் போறேன” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
கஜா பாய்நது வந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துவிட்டார்.அவனைப் பல தரங்கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு “என்ன தைரியம் இருநு;தா என் வீட்டு உப்பைத் தின்னுகிட்டு என் பொண்ணை பெண்டாள நினைப்பே?”என்று கர்ஜித்தார்.
“உங்க வீட்டு உப்பை நான் திங்கலை. மொதல்ல இது உங்க வீடும் இல்லை. இது யுவராணி பேருக்கு எப்பவோ வந்திருச்சு. நான் நெல்லையில எங்க லைன் வீடுங்க ,சைக்கிள் கடை வாடகைப் பணத்துலதான் சாப்பிடறேன். அது துளசி அக்காவுக்கும் தெரியும். ரொம்ப சீன் போடாதீங்க மாமா. அந்த விசயம் உங்களுக்கும் தெரியும். “
“ஓஹோ. பொண்ணு பேர்ல சொத்து இருக்கு. அமுக்கிரலாம்னு பாhத்தியா” என்று கூடுதலாக ஒரு கெட்ட வாhத்தையுடன் முடித்தார்.
அவரது கோபப் பேச்சுக்களைக் கேட்டு வீட்டில் உள்ளவர்களுக்குப் பழக்கம் என்பதால் முகம் சுருக்கியதோடு நிறுத்திக் கொண்டனர். துளசியின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவரால் அடியைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியும். இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற காரணத்தாலயே சிறு வயதில் திருமணமான நேரத்தில் கூட மனதோடு அழுதவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால் வீடடோடு வந்து தங்கிய தாமரை செல்வனையும் அவ்வாறே பேசவும் அவர் தன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ள நேர்ந்தது.
ஆனந்தி கதிரவனுக்கு யுவராணியைக் கேட்டNபுபது அவள் சிறுகுழந்தை. அப்போது அவளுக்கு சளி காய்ச்சலைப் பார்ப்பாரா? கல்யாணத்திற்குப் பார்ப்பாரா? தவிர கஜாவின் வாரிசு தன் திருமலை அண்ணன் குடியிருக்கும் இடத்தில் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஆனந்தியின் கோரி;க்கையை அந்த நேரத்திலும் மறுத்தார்.
அதன்பிறகு  வேம்புவின் மகள் செந்தாமரையுடன் அரசல் புரசலாகப் பேச்சு அவர் காதுக்கும் வரத்தான் செய்தது.    சரி எங்கேயும் தன் திருமலை அண்ணன் மகள் நன்றாக இருந்தால் சரி என்று சந்தோஷமாக இருந்தார். செந்தாமரை நெல்லையில் வளர்ந்த போதிலும் அவள் கதிரவனுக்குத்தான் என்று நினைத்ரு இருந்தார்.
ஆனால் சமீபத்தில் பொள்ளாச்சியில் புதிதாகத் திறந்த  ஒரு பிரபலக் கடையில் ஜவுளி வாங்க மரியாதை நிமித்தம் கடை உரிமையாளர்கள் அழைத்த போது அந்தக் கடையில் வேம்புவைப் பார்த்துப் பேசியதில் எல்லாம் மாறிவிட்டது.
வேம்பு கதிரவனுக்கும் செந்தாமரைக்கும் மணமுடிக்க முடியாது என்று அந்தச் சந்திப்பில் பேசி முடித்தார். “மதனி” என்று ஆசையாக ஓடி வந்த துளசியையும் அவர் அத்தனை உவகையுடன் எதிர்கொள்ளவில்லை. இப்போது அவள் கஜாவின் மனைவி அல்லவா?
பெண் பிள்ளைகள் திருமண வயதில் இருந்தால் எல்லோரும் அவர்களின் திருமணம் குறித்துப் பேசுவதுதான் என்பதால் சாதாரணம் போல அவர் கேட்டக் கேள்விக்கு இடியாக தன் முடிவைத் தெரிவித்துவிட்டு அவசரமாக திரும்பிச் சென்றுவிட்ட வேம்பு மதனியை இப்போது நினைத்தாலும் அடிவயிறு காந்துகிறது அவருக்கு.
அப்படி ஆளாளுக்கு மறுக்க சண்முகம் சாமியின் மகனிடம் அப்படி என்ன குறை? அனைவரையும் சமமாக மதித்துப் பழகும் அருமையான பையன் கதிரவன். ஒருவேளை சண்முகம் ஐயா பெண் கேட்டு வந்தால் தன் மகளை கதிரவனுக்கு கொடுக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டார்.
ஆனால் இப்போது வந்த கதிரவனோ தன் முந்தைய முடிவே சரி எனவும் பெரிதும் ஆனந்தப்பட்டார். அதன்பிறகே அவரால் தன் கணவனை பழி வாங்க முடிவு செய்ய முடிந்தது. ஆம் அவர் போற்றி வளர்த்த மகளை அவருக்குப் பிடிக்காத மணமகனுக்குத் திருமணம் செய்விப்பதுதான் அது. ஆனால் தன் மகளை அப்படி யாரோ ஒருவருக்கு  கொடுத்து விட முடியுமா என்ன? அவள் மீது அன்பை மட்டும் வழங்கும் தன் தம்பிக்கு அவளைக் கொடுப்பது என்று முடிவெடுத்தார்.
 ஆனால் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் மனதிற்குப் பிடிக்காத எதையும் செய்வதில்லை என்று உறுதியுடன் இருந்த அவர் யுவராணிக்குப் பிடிக்காவிட்டால் நிச்சயம் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார். மகளும் தன் விருப்பத்தை ஜாடை மாடையாச் சொல்லவும் பல குழப்பங்களுக்குப் பிறகு தாமரை செல்வனுக்கு தன் மகளை மணமுடிக்கச் சம்மதித்து இருந்தார்.
இதெல்லாம் கொடிவேரியில் இருந்து வந்ததும் தாமரை செல்வன் துளசியிடம் தனியாகப் பேசி முடித்து விட்டான்
இப்போது.. …..
ராஜ்கமல் ஓடிச் சென்று தன் தகப்பனையும் தாய்மாமனையும் பிரித்து விட்டான். தாமரை செல்வன்தான் தன் தாய் மாமன் என்பது கூடத் தெரியாமல் இருந்தால் அவனெல்லாம் எப்படி தனியாகப் பிஸினஸ் செய்ய முடியும். அவனுக்கும் ஓரளவு உண்மைகள் தெரியும். எல்லாம் துளசியிடம் வாயைப் பிடுங்கித் தெரிந்து கொண்டதுதான். மற்றபடி அவனாவது தாமரை செல்வனிடம் எதைப் பற்றியும் பேசுவதாவது? வயதுப் பெண்ணாக இருந்தால் ஏதாவது கடலை போட்டிருப்பான். மற்றபடி வயது ஆண்களிடம் அவனுக்கு என்ன பேச்சு?
சட்டையை சரிசெய்து கொண்ட தாமரை செல்வன் “ உங்க சொத்து பத்து எதுவும் எனக்கு வேணாம். ஆனா உங்களுக்கும் கிடையாது. அது யுவராணி பேர்லதான் இருக்கும். அவ என் சம்பாத்தியத்தை வச்சு குடும்பம் நடத்தினாப் போதும்.” என்று முடிக்க கஜா அவனை அடிக்கக் கை ஓங்கி விட்டார்.
அவர் கையைப் பற்றித் தடுத்த தாமரை செல்வன் “ நீங்க என் அக்காவை வலுக்கடாயமா தாலி கட்டும் போது நான் சின்னப் பையன் .விரல் சூப்பிகிட்டுத்தான் இருந்;தேன். இப்ப அப்படி இல்ல. உங்களுக்குச் சொந்தமில்லாத உங்களைப் பிடிக்காத பொண்ணை நெஞ்சுல மிதிச்சு தாலி கட்ணீங்க. நான் உங்க பொண்ணு சம்மதத்தோட உங்க கண் எதிர்ல்ல தாலி கட்டுவேன்” என்றான்.
“அதுக்கு நீ உயிரோட இருந்தாத்தானே?” என்று முழங்கியவர் தன் அடியாட்களை கூவி அழைத்தார். அவர்கள் வந்து எட்டிப் பார்த்துவிட்டு “ கூப்பிட்டிங்களா அண்ணா?” என்று தாமரை செல்வனைப் பார்த்து வினவவும் கஜா நொந்து போனார். தாமரை செல்வன் மெல்ல சிரித்தான்.
“அப்போ என் அக்கா மகன்கிடட ஏதோ சொல்லி திருப்பி அனுப்பிட்டே? நன்றி கெட்ட…..”
“ரொம்ப துள்ளாதீங்க. அவன் நான் என்ன சொன்னாலும் சொல்லாட்டியும் இந்தக் கல்யாணத்தை பண்ணியிருக்க மாட்டான. அதுக்கு காரணம் இப்போ உங்களுக்கு சொல்ல முடியாது” என்றான் தாமரை செல்வன்.
கஜா தளர்வாக சோபாவில் அமர்நதார். ஒவ்வொன்றாக யோசித்துப் பாhத்தார். வேலைக்கு சோம்பல் பட்டும் தாமரை செல்வனுக்கு வேலை கொடுப்பதாக நினைத்தும் எல்லா வேலைகளிலும் அவர் தாமரை செல்வனை இழுத்துவிட்டார்.
அப்படித்தான் அவர் நினைத்தார். ஆனால் அவர் தனது வேலைகளில் தாமரை செல்வனை முன்னிலைப் படுத்தியதாக மற்றவர் புரிந்து கொண்டதை அவர் உணராமலே இருந்து விட்டார். ராஜ்கமல் தன் தொழிலை மட்டும் பார்ப்பவன். அவன் ராஜ்ஜியம் தனி. இவர் கட்டிக் காத்த சொத்துக்களுக்கு இவனே ஏக போக வாரிசு என்பது போன்ற மாயையை அவரே அறியாமல்  அவர் உருவாக்கியதுதான் சோகம்.
ஆனால் ‘இது பனங்காட்டு நரி. இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது’ என்று சிலிர்த்துக் கொண்டார்.
“இதப் பார் அந்தக் கழுதை வந்தா நீ கூட்டிட்டுப் போ.” ஒரே அடியாக முடித்தார். யுவராணி அப்பாவை மீற வருவாளா?
ராணிம்மா என்று அழைத்த வாயினால் கழுதை என்று அழைக்க வைத்த தன் காதலை வெறுப்பாளா?
தாமரை செல்வன் யுவராணியைப் பார்த்தான். “இந்த உலகத்தில எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. எனக்காக நீ குடுக்கப் போற விலை இதுதான். அதைக் குடுத்து நீ என்கிட்ட வருவியா? நீ உடனே சொல்ல வேண்டாம். உங்க அப்பன் அளவுக்கு நான் அயோக்கியன் இல்ல. இன்னும் ஒரு வாரத்துல சொன்னாப் போதும்.
ஊர்ல கொஞ்சம்  வேலை இருக்கு. நான் திருநெல்வேலி போறேன். எங்கயும் நான் ஒளிய மாட்டேன் தில் இருந்தா உங்கொப்……உங்க அப்பாவை நேருக்கு நேர் மோதச் சொல்லு. நீ முடிவு பண்ணிட்டு போன் பண்ணு. ஆனா என் பார்வை உங்க எல்லார் மேலயும் இருக்கும். என் சம்சாரத்துக்கு நீங்க எதாவது பிரச்சனை பண்ணனும்னு நினைச்சா..நினைச்ச மூளை உங்க தலையில இருக்காது” என்று கஜாவைப் பார்த்து முடித்து விட்டு யுவராணி பதற பதற ஏதோ சில பைகளைத் தூக்கிக் கொண்டு தன் டூ வீலரில்  நெல்லைக்குப்  பறந்தான்.
தன் தங்கையும் விரும்புவதால் ராஜ்கமல் பெரிதாக கோபப்படவில்லை. மற்றபடி யாராக இருந்தால் என்ன தாமரை செல்வன் பேசிய பேச்சுக்கு புத்தூருக்கு அனுப்பி கட்டு போட வைத்திருப்பான்.
“யாரா இருந்தா என்ன? பொண்ணுங்க மனசை மதிக்காம முடிவெடுக்;கறதுதான் இந்த ஆம்பளைங்களோட பழக்கம்” என்று நொந்தார் துளசி.
“அப்படிச் செல்லாதீங்கம்மா. இத்தனை நாள் நான் சொல்லி மாமா கேக்கலை. அதுக்கு என்னை இந்த வீட்டை விடடுப் பிரிக்கக் கூடாதுங்கறதுதான் காரணம். ஆனா இப்ப நீங்க என்னை வேற இடத்துல கட்டிக் குடுக்க நினைக்கறதால கதிரவன் மனசையும் தெரிஞ்சுகிட்டுதான் மாமா இந்தப் பேச்சை எடுத்திருக்காங்க. இல்லன்னா உங்களுக்காக உங்க பிள்ளைகளுக்காக மாமா எல்லாத்தையும் விட்டுக் குடுத்திரும்மா. அவரைப் பத்தி யார் என்ன சொன்னாலும் நீங்க உங்க வாயால தயவு செஞ்சு இப்படி சொல்லாதீங்கம்மா” என்று துளசியின் கால்களைப் பிடித்துக் கொண்டாள் யுவராணி.
கணவன் செய்த பிழைகளுக்கு பிராயசித்தம் செய்யும் மனைவியைப் போல இருந்தது அவளது நிலை. அவன் செய்ததைப் பிழையாகப் பேசிய தன் தாயிடம் மனதார அவனை வெறுத்துவிடக் கூடாது என்று கெஞ்சிக் கொண்டிருந்தது அந்த காதல் இளம் மனது.
இன்னும் ஒரு வாரத்தில் தாமரை செல்வனுக்குக் கிடைக்க இருக்கும் பதில் என்ன என்று தெரியா விட்டாலும் அவனைத் தவிர வேறு ஒருவனை அவள் மணக்க மாட்டாள் என்பதும் வீட்டின் மற்ற மூன்று உறுப்பினர்களுக்கும் புரிந்தது.
இந்தப் பிரச்சனையில் தன் புதிதாக அரும்பிய காதல் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு ஆர்வம். அதை தள்ளி வைத்தான் ராஜ்கமல்.
ஆனால் இப்படி ஒரு பிரச்சனை வந்தால் வந்தனா அவனுடன் வந்து விடுவாளா? என்றும் யோசித்தான். பின்பு தலையில் தட்டிக் கொண்டான்.
 சும்மாவே தங்கை மீது பிரியம் அதிகம். இப்போது தாய்மாமன் வேறு அவளை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போயிருக்க அவன் மனது தங்கையைச் சுற்றி வட்டம் போட்டது.
கஜாவின் விரல் நகம் கூட யுவராணி மீது படாது என்பது உறுதி. இருந்தாலும் கண்காணிப்பது அவன் பொறுப்பாகிவிட்டதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தான். ஆனால் அவன் இன்னும் கஜாவை அறிந்திருக்கவில்லை!
error: Content is protected !!