கனவு 23
கனவு 23
அத்தியாயம்-23
அடுத்த நாள் காலை கண் விழித்த விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ
அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும்
கீழே சென்றிருப்பாள் என்பதை உணர்ந்த விக்னேஷ் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து ஒரு ரெட் சர்ட்டையும் டார்க் ப்ளூ லிவிஸ் ஜீன்ஸை அணிந்தவன் தலையை சும்மா கோதிவிட்டுக் கீழே சென்றான்.
அங்கே சென்று கௌசியைத் தேடியவன் கண்ணில் பட்டாள் கௌசி. அவளைக் கண்டவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான்
போனான். கருப்பு நிற பட்டுப்புடவையில் தங்கநிற வைத்திருந்த ஜரிகை பார்டரிலும்.. சில அணிகலன்களும் சில
ஒப்பனைகளிலும் மின்னியவளைக் கண்டு அவனால் கண்களை எடுக்க
முடியவில்லை. அவளது நிறத்தை வேறு அந்த கருப்பு நிறம் தூக்கிக் காட்டியது.
தன்னை மறந்து கௌசியை ரசித்துக் கொண்டிருந்தவனை விக்ரமின் குரல் கலைத்தது.
“அய்யோ.. ச்சி…” என்ற விக்ரமின் குரலில் திரும்பிய விக்னேஷ்.. விக்ரம் பான்ட்டில்
ஏதோ துடைப்பதைக் கண்டு “என்ன ஆச்சு விக்ரம்?” என்று வினவினான்.
“அது ஒன்றுமில்லை விக்னேஷ்.. இங்க ஒருத்தன் சொந்தப் பொண்டாட்டியைப்
பார்த்தே வழிஞ்சிட்டு இருக்கான்.. அவன் விட்ட ஜொள்ளில் என் பேண்ட் லாம்
நனஞ்சிருச்சு பாரு” என்று சொல்லி நிமிர்ந்தவன் விக்னேஷின் முகத்தைப்
பார்த்துவிட்டு “எனக்கு வேலை இருக்கு.. நான் போறேன்” என்று போய்விட்டான். விக்ரமின் பேச்சில் ஆண்மகனான் விக்னேஷிற்கு முகம் சிவந்தது.
அதற்குள் அவனைக் கண்டு விட்ட கௌசி அவன் அருகில் வந்தாள். அவன் முகத்தைக் கவனித்தவள் “என்னடா..
முகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து இருக்கு.. ஃபீவரா?” என்று விசாரித்தவள் கையை அவன் நெற்றியிலும் கழுத்திலும் வைத்துப் பார்த்தாள்.
கௌசியின் செயலில் ஒரு நிமிடம் விதிர்விதிர்த்துப் போனவன் அவள் கையைப் பிடித்துத் தடுத்தான். “கௌசி
இது… நேரத்துல எந்திருச்சதுனால இப்படி
இருக்கு” என்றவன் “வேலை எல்லாம் சரியா போயிட்டு இருக்கா?” என்றுப் பேச்சை மாற்றி கௌசியை வேலையில்
மூழ்கடித்தான். அதிகாலை நேரத்தில் மணப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏற எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
பின் சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்ய
போட்டோஸ் விடியோஸ் எல்லாம் அழகாக படம் பிடிக்கப் பட்டது. விக்னேஷ் பொண்ணு மாப்பிள்ளை துணி மாற்றப்
போன கேப்பில் கேமிராவை வாங்கி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே ஏதோ வீடியோ கேமிராவை சரி பார்த்துக்
கொண்டு வந்த கௌசி அப்போது தான் விக்னேஷைக் கவனித்தாள். சிவப்பு
சட்டையை கை முட்டி வரை மடக்கி விட்டு.. அலை அலையானக கேசத்துடன்
நின்றிருந்தவனைப் பார்க்க அவளால் அவன் மீது இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. ஆறடி உயரத்தில் நல்ல கம்பீரமாக நிற்பவனைக் கண்டவளுக்கு
ஏனோ தன்னை அறியாமல் கண்கள் அங்குல அங்குலமாக ரசித்தது.
அப்போது என்று பார்த்து கௌசியைக் கவனித்த விக்ரம் “அட ஈஸ்வராரா… இதுக
ரெண்டுக்கும் எப்போ பாரு இதே வேலையா இருக்கு” என்று புகைந்தவன் கௌசியின் அருகில் வந்து “ஹலோ.. மேடம் உன் புருஷனை ஸைட் அடிச்சது
போதும்.. என்ன மாதிரி சிங்கிள வயிறு எரிய வைக்காதீங்க” என்று சொல்ல
கௌசி.. அச்சச்சொ இவன் பாத்துட்டானே என்று பதறி… ஏதோ சொல்லி சமாளித்தவள் அங்கிருந்து ஓடாத குறையாக ஓடினாள்.
பின் கல்யாணம் முடிந்து விருந்தும் முடிந்து எல்லாம் கிளம்ப அங்கு வந்து சேர்ந்தாள் அவள்.. சாட்சாத் நம்ம நான்சி
மேடம் தான். விக்ரமுடன் பேச்சில் இருந்த விக்னேஷும் கௌசியும் அவளை சுத்தமாகக் கவனிக்கவில்லை. ஆனால்
உள்ளே வந்தவுடன் கௌசி நான்சியின் கண்ணில் பட.. கூடவே விக்னேஷும் கண்ணில் சிக்கினான்.
கௌசியின் தோற்றத்தைப்
பார்த்தவளுக்குப் புரிந்து விட்டது. விக்னேஷும் கௌசியும் கல்யாணம்
செய்து கொண்டார்கள் என்று.
(அவளுக்கும் குரு இறந்த செய்தி தெரியும்.. கௌசி வீட்டை விட்டுச்சென்றதும் தெரியும். மதி அண்ணன்
சுதாகரன் மூலமாக.. அதாவது கௌசி குருவின் திருமணத்தில் அவளிடம்
சுதாகரன் பேச்சுக் குடுத்த போது வந்த பழக்கம். அதன் பிறகு அவள் நிம்மதியாக
ஹைதராபாத் சென்றாள்).
மணப்பெண்ணின் அண்ணன் இவளுக்கு எப்படியோ ப்ரண்ட்.. அதாவது இவள் எப்படியாவது ப்ரண்டாகப் பிடித்திருப்பாள்.
ட்ராபிக் காரணமாக கல்யாணத்திற்கு லேட்டாகவே வந்தாள் நான்சி
ஹைதராபாத்தில் இருந்து. அவளுக்கு கல்யாணமும் ஆகி இருந்தது.. ஆனால் ஏனோ கௌசியையும் விக்னேஷையும் பார்க்க அவளால் அவள்
வயிற்றெரிச்சலைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
மணமக்களை சென்று பார்த்து கிப்டையும் கொடுத்தவள் மணமகளின் அண்ணனிடமும் சொல்லிக் கொண்டு திரும்பினாள். அதாவது அவளுக்கு விக்னேஷ் கௌசிகாவுடன் சென்று பேச
ஆவல். அவர்கள் கிளம்ப பின்னாலேயே சென்றாள். கார் பார்க்கிங் வர அவர்கள்
இருவருக்கும் முன் சென்று வழியை மறைத்து நிற்க.. கௌசியும் விக்னேஷும் யார் என்பது போல அவளின் முகத்தைப் பார்க்க இருவருக்குமே “ச்சி இவளா?”
என்று இருந்தது.
நான்சி இருவரும் அதிர்வார்கள் என்று நினைத்திருக்க இருவரின் முகப் பிரதிபலிப்பிள் அவளுக்கு முதல் அடி விழுந்தது. பின் தான் நாவை விஷம் ஆக்கிக் கொட்டினாள் நான்சி.
“புருஷன் போன சோகத்தை மறந்து.. இவன் கூட சுத்தறையா?” என்று
கௌசியிடம் கேட்டாள். விக்னேஷிற்கு சுர் என்று ஏறி ஏதோ சொல்ல வர கௌசி
அவன் கையைப் பிடித்து அடக்கினாள்.
“ஆமா என் புருஷன் கூடத் தான் சுத்திட்டு இருக்கேன்.. இப்போ நான் கௌசிகா
விக்னேஷ்வரன்” என்று அழுத்தமாகச் சொன்னாள் கௌசிகா. நான்சிக்கு
இரண்டாவது அடி.
விக்னேஷிடம் திரும்பியவள் “அப்போ முன்னாடி இருந்தே இரண்டு பேரும் லவ்வர்ஸ்-ஆ.. பட் வெளில காட்டிக்கல.
ஊர ஏமாத்திட்டு சுத்தி இருக்கீங்க.. நீ என்னை ஏமாத்தி இருந்திருக்க டா” என்று குரலை உயர்த்த பளார் என்று இடியாய் இறங்கியது அறை.
அடித்தது நம்ம கௌசி தான்.. “யாரை பார்த்து டா போட்டுப் பேசறே.. பிச்சிருவேன்.. ஏய் நீ என்னமோ காவியக் காதல் பண்ண மாதிரி பேசறே.. நாங்க
ஊர் சுத்துனோமா.. அப்படியே
இருந்தாலும் நான் இவன் கூட இவன் என்கூட தான் சுத்துனோம்.. உன்ன மாதிரி இடத்துக்கு ஒருத்தன மாத்தல”
என்ற கௌசி “மரியாதை முக்கியம்-ன்னா இனி எங்க வழியில வராதே” என்று
எச்சரித்தவள் விக்னேஷின் கையைப் பிடித்துக்கொண்டு காரை நோக்கி நடந்தாள்.
பின் காரில் வந்து முன் சீட்டில்
அமர்ந்தவள் விக்னேஷ் இன்னும் வெளியே நின்று கௌசிக்கு முதுகைக் காட்டி நான்சி இருந்த திசையைப்
பார்ப்பது தெரிந்தது. “ஏய்.. இப்போ நீ வரியா.. இல்ல அவ கூட போறியா?” என்று கௌசி எரிச்சலாக வினவ விக்னேஷ் அமைதியாக உள்ளே ஏறி
அமர்ந்தான்.
செல்லும் வழியில் இருவரும் எதுவுமே பேசவில்லை. கௌசி கடுகடுவெனவே வந்தாள் என்றால் விக்னேஷோ எதுவுமே நடக்காதவன் போல அமைதியாக வந்தான். ஆபிஸ் வந்தவுடன் உள்ளே நுழைந்த இருவரும் ஆபிஸ் ரூம் உள்ளே
செல்லும் வரை எதுவும் பேசவில்லை. உள்ளே நுழைந்தவுடன் கதவை சாத்திய கௌசி “டேய் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே ?” என்று
விக்னேஷிடம் பாய்ந்தாள்.
“நானா.. நான் என்ன நினைக்கறேன்.. நைட் உன் மாமியார் என்ன டின்னர்
செய்வாங்கன்னு” என்றான்
சாதாரணமாக.
“கிண்டலா.. கொன்னுருவேன் உன்ன” என்று மிரட்டியவள் “அவளைப் பாத்துட்டு நின்னுகிட்டு இருக்க.. அவ உன்ன டா போட்டு பேசறா.. நீ பாட்டுக்கு வேற எவனையோ திட்டற மாதிரி நிக்கற.. இல்ல தெரியாமதான் கேக்கறேன் அவ மேல உனக்கு என்ன டா ஸ்கூல்ல இருந்து அவ்வளவு கரிசனம்..” என்ற பொரிந்து
தள்ளி விட்டாள்.
அவ்வளவு தான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் விக்னேஷ். அவன் சிரிப்பதைப் பார்த்து எரிச்சல் வந்தவள் கையில் கிடைத்த பேனாவை அவன் மேல் எடுத்து வீச அதை
லாவகமாக கேட்ச் பிடித்தான் விக்னேஷ்.
“ஏய்.. நான் ஏதோ அவள பாத்து மயங்கி நின்ன மாதிரி பேசறே.. எனக்கு நீ அவள அறஞ்சோன சிரிப்பு தான் டி வந்துச்சு”
என்றவன் “அப்புறம் கரிசனம் பத்தி கேட்டீல.. அது வந்து.. ஹையோ எனக்கு ஷை-ஆ இருக்கு எப்படி சொல்லுவேன்..
அவ நல்ல கும்தாதாதா வா இருப்பாடி அதான் கொஞ்சம் சறுக்கீட்டேன்.. இல்லைனா நான் ரொம்ப ஸ்டாரங் டி ”
என்றான் சிரிப்புடனே.
“ஆமா ஆமா ரொம்ப ஸ்டாரங் .. உன்ன பத்தி தெரியாது பாரு.. சைசை” என்று சொன்னவளை உற்று கவனித்தான்
விக்னேஷ்.
காலையில் இருந்த மேக்கப் கொஞ்சம் கம்மி ஆகியிருந்தது. தலை கொஞ்சம் கலைந்து அவள் காதின் அருகில் சிறிய
முடிகள் பறந்தது. கோபத்தில் உதட்டின் மேல் வியர்த்திருக்க அதுவும் அவளை
அழகாகக் காட்டியது.
“இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க கௌசி” என்றான் மாறிய குரலில்.
ஒரு நிமிடம் திகைத்தவள் பின் “நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன டா பேசறே.. லூசு போடா..” என்று ஆபிஸ் அறையில் இருந்து வெளியே வந்தாள். வந்து அமர விக்ரம் “ஹே.. நீ வீட்டுக்கு
போகலையா.. நான் கிளம்பிட்டன்னு நினைச்சேன்” என்றான்.
“அவன் கூடையே போயிக்கறேன்” என்றவள் சிறு சிறு வேலைகளை செய்தாள். அவளுக்கும் வேலையிலும்
உறக்கம் சரியாக இல்லாத
காரணத்தினாலும் டயர்டாக இருந்தது.
பின் மாலை ஆனதும் இருவரும் புறப்பட மதி கௌசிக்கு கால் செய்தாள்.
“ஹாலோ..” – கௌசி.
“கௌசி.. நீங்க கிளம்பியாச்சா?” – மதி.
“இல்ல மதி.. ஏன் என்ன ஆச்சு?” – கௌசி.
“பாப்பா.. உங்க இரண்டு பேரையும் பாக்கணும்ன்னு ஒரே அழுகை கௌசி.. நீங்க வர முடியுமா?” என்று வினவினாள் மதி.
“ஷ்யூர்.. வரோம் மதி” என்றவள்
விக்னேஷிடம் விஷயத்தைச் சொல்ல அவன் காரை ஜீவா வீட்டை நோக்கி இயக்கினான்.
உள்ளே இருவரும் நுழைய “சித்தாதா..” என்று விக்னேஷின் காலை கட்டிக்
கொண்டாள்.
விக்னேஷ் வியாஹாவைத் தூக்கி “ஏன் வியா குட்டி அழுது.. அழுகக் கூடாதுன்னு சித்தா சொல்லி இருக்கேன்ல ” என்று
சொல்ல வியாஹாவின் அழுகை நின்றது.
“சித்தா.. நீங்க ஏன் ஒன் வீக்கா என்ன பாக்க வரவே இல்ல.. சித்தியும் வரவே இல்ல.. உங்களுக்கு போன் பண்ணக்
கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க” – என்று தேம்பியடியே கூற விக்னேஷும் கௌசியும் ஒருசேர ஒரு மதியைப் பார்த்தனர்.
மதி கௌசியிடம் “இல்ல நீங்க இரண்டு பேரும் பிசியா இருப்பீங்கன்னு தான்..” என்று இழுக்க “மதி… நீ ஜீ மாமா
அளவுக்கு பிசியா இருக்க முடியாது” என்று மதி காதில் கௌசி கிசுகிசுக்க மதி “போ கௌசி… அப்படி எல்லாம்
ஒன்னும் இல்ல” என்றாள்
வெட்கத்தோடு. அவர்கள் பேசப் பேச விக்னேஷ் வியாஹாவைத் தூக்கிக்
கொண்டு வெளியே சென்றான்.
“அதே மாதிரி தான் இங்கேயும் மதி.. ஒன்னும் இல்ல” என்றாள் கௌசி. மதிக்கு அதன் அர்த்தம் புரியவில்லை ஆனால் இருவரையும் உள்ளே நுழையும் போதே பார்த்தவளுக்கு மனம் நிறைந்து இருந்தது.
பின் வியாஹாவிற்கு நிறைய
சாக்லெட்ஸ் வாங்கிக் கொண்டு சித்தப்பாவும் மகளும் வர தூங்கிக்
கொண்டிருந்த சந்தியாவும் எழுந்து வந்தாள். பின் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப “வியா குட்டி.. சித்தா சித்தி கூட
வறீங்களா?” என்று கேட்க குஷியான வியா கௌசியிடம் வந்து தூக்கு என்பது
போலக் கையைத் தூக்கினாள்.
வியாஹாவைத் தூக்கியவள் “மதி வியா ட்ரெஸ் மூனு செட் பாக் பண்ணிட்டு வா” என்று கௌசி சொல்ல “சரிங்க மேடம்ஸ்” என்று மதி செல்ல குஷியான வியா தன்
சித்தியின் கன்னத்தில் முத்தத்தைப் பதித்து கடித்தும் வைத்தாள். விக்னேஷ்
கௌசியின் கன்னத்தையே பார்க்க அவன் அருகில் வந்த சந்தியா “ம்ஹூம்” என்று தொண்டையைச் செருமினாள்.
தங்கையின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவன் “என்ன சந்தியா? என்ன
கேட்ட?” என்று விக்னேஷ் கேடாக “நான் எதுமே இன்னும் கேக்கலையே?” என்று
நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“சொந்தப் பொண்டாட்டியவே சைட் அடிக்கறையே அண்ணா” என்று சிரித்தாள். அவன் பதில் அளிப்பதற்குள் மதி வியாஹாவின் மிக்கி மௌஸ்
பேக்கில் எல்லாம் எடுத்து வந்தாள்.
“அம்மு.. சித்தி சித்தா வ டிஸ்டர்ப் பண்ணக் கூடாது” என்று வியா குட்டியிடம்
பொறுமையாகச் சொல்ல “அட சாமி மதி.. என்ன விடலாம் ஒன்னும் குறும்பு இவ இல்ல.. நீ பேக்கைத் தா” என்ற கௌசி
மதியிடம் இருந்து வியாஹாவின் பேக்கை வாங்கினாள்.
பின் வீட்டிற்குச் செல்ல வியாஹாவும் கௌசியும் பேசிக் கொண்டே வந்தனர்.
இரண்டு பேரும் ஒன்றாக பேசுகிறேன் என்று அனத்திக் கொண்டே வர விக்னேஷிற்கு சிரிப்பு தான் வந்தது. பின் வீடு வந்து சேர வியாஹா
அனைவரிடமும் சென்று வாய் அடித்துக் கொண்டு இருந்தாள்.
“அட வாய் பேசாம சாப்பிடு கண்ணு” என்று சுமதி.. கௌசி ஊட்டிவிட்ட படி பேசிக் கொண்டே சாப்பிட்டுக்
கொண்டிருந்த வியாஹாவிடம்
சொன்னார்.
“இந்த சுமதி பாட்டி ஜெயா பாட்டி எப்ப பார்த்தாலும் பேச வேண்டாம்-ன்னு சொல்றாங்க…” என்று தலையை சிலுப்பியவள் “எனக்கு பேசாம இருந்தால் தூக்கமா வருது பாட்டி” என்று
வியாஹா சொல்ல அனைவரும் சிரித்தனர்
பின் தங்கள் அறைக்கு வியாஹாவை விக்னேஷ் தூக்க “ஏம்பாபா.. என் கூட
பாப்பா இருக்கட்டுமே” என்று சுமதி சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம்
புரிந்தவன் “இல்லமா.. இரண்டு நாள் தானே.. எங்க கூடையே இருக்கட்டும்..” என்று வியாஹாவுடன் விளையாடிக்
கொண்டே உள்ளே சென்றான்.
உள்ளே பெட்ஷீட்டை விரித்துக்
கொண்டிருந்த கௌசி வியாஹாவை வாங்கி விளையாடிய படியே அவளுடன் படுக்கையில் விழ விக்னேஷ் இன்னொரு
பக்கம் படுத்தான். ஏனோ வியாஹாவை நடுவில் போட்டு படுத்த இருவரின் பார்வையும் காரணம் தெரியாமல்
சந்தித்து மீண்டது.
“சித்தா.. கதை” என்றாள் வியாஹாவோ.
“என்னக் கதை வேணும் குட்டிக்கு” – என்றான் ஒரு பக்கமாகத் திரும்பி
தலையை கைக்குக் குடுத்த படி.
“எனக்கு ஏஞ்சல் ஸ்டோரி வேணும் சித்தா” – என்றாள் குஷியாக வியாஹா.
ஏஞ்சல் வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு நிமிடம் கௌசியைப் பார்த்த விக்னேஷ் “என்னோட ஏஞ்சல் கதை சொல்லட்டா?” என்று வியாஹாவிடம் கேட்டான்.
“சொல்லுங்க சொல்லுங்க” என்று கை கால்களை உதைத்த படி வியாஹா ஒன்றும் தெரியாமல் குஷியானாள்.
“என்னோட ஏஞ்சல் பேரு கௌசிக்..” என்று சொல்ல வியாஹா திரும்பி
கௌசியைப் பார்த்தாள். கௌசியோ வியாஹாவைப் பார்த்து புன்னகைத்தாள்.
விக்னேஷ் தொடர்ந்தான். “கௌசிக் வந்து ரொம்ப சுட்டிப் பொண்ணு.. நம்ம வியா குட்டி மாதிரி.. பெரிய கண்ணு.. குட்டி
ரோஸ் மாதிரி வாய்.. துரு துருன்னு எப்போ பாத்தாலும் எல்லோரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பா.. புடிச்ச என்ன வேண்டுமானாலும் பண்ணுவா.. அந்த ஏஞ்சலோட ஹீரோக்கு ஏஞ்சல ரொம்ப
பிடிக்கும்..” என்று விக்னேஷ் சொல்லிக் கொண்டே போக கௌசி மறுபக்கம் திரும்பிப் படுத்தாள். கண்களில் கண்ணீர் சுரக்க விக்னேஷ் மேலே தொடர்ந்தான். “ஏஞ்சல்-க்கு ஹீரோ மேல
பொசஸிவ்நஸ்ஸும் அதிகம்.. ஆனால் அவளை விட ஹீரோக்குப் பொசஸிவ்நஸ்
அதிகம்” என்று சொல்ல சொல்ல கௌசிக்கு கண்ணீர் கண்களில் வழிந்தோடியது.
“சித்தா பொசஸிவ்நஸ்-னா என்ன?” என்று அரைத் தூக்கத்திலேயேக் கேட்டாள் வியாஹா.
“அது…” என்று யோசித்தவன் “உனக்கு சித்தா.. உன் ப்ரண்ட்ஸ் யாரையாவது
கொஞ்சுனா புடிக்குமா?” என்று கேட்க விக்னேஷை அந்தத் தூக்கத்திலும் அவசரமாகக் கட்டிப் பிடித்தவள் “நோ சித்தா.. என்ன மட்டும் கொஞ்சுங்க” என்று விக்னேஷிடம் ஒன்ற “இதான் தங்கம் பொசஸிவ்நஸ்” என்று சொல்லித் தலையை நீவ வியாஹா தூங்க ஆரம்பித்தான்.
கண்ணீரை உதிர்த்தக் கௌசிக்கு அவன் காதல் புரிந்தது.. ஆனால் இந்தக் காதல் எப்படித் திடீரென வந்தது என்று யோசித்தாள் கௌசி. அதுதான் விக்னேஷிடம் இருந்து அவள் விலகி நிற்க காரணமும் கூட.. யோசித்துத் தலை வலியை இழுத்துக் கொள்ள வேண்டாம்
என்று எண்ணியவள் கண்களை மூடினாள்.
அடுத்தநாள் காலை ஆறு மணிக்கே எழுந்த விக்னேஷ்.. கௌசியைத் தேடி மாடிக்குப் போனான். மாடிக்குச் சென்றவன் அப்படியே நின்றான். கௌசி தனது இடது கரத்தால் வளைந்து வலது
காலைத் தொட்டுக் கொண்டு இருந்தாள். அவளின் இடுப்பின் வளைவைப் போலவே தலையை வலமாகச்
சாய்த்தவன் ஏதோ பட்டிக் காட்டான் மிட்டாயைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தான். பின் சில நிமிடங்களில் நிமிர்ந்த கௌசி திரும்ப தலையைச் சாய்த்து நின்று கொண்டிருந்த விக்னேஷைக் கண்டு
திடுக்கிட்டாள்.
டக்கென்று சுதாரித்தவன் “துண்டு எடுக்க வந்தேன்” என்று காயாத துண்டு ஒன்றை
எடுத்துக் கொண்டு சென்றான்.
(சமாளிக்கக் கூடத் தெரியல பாரு.. ஐயோ ஆண்டவா.. கீழ பத்து துண்டு இருக்கும்
போது மேல வருதாம்).