காதலின் விதியம்மா 11

காதலின் விதியம்மா 11
பனி பொழியும் இரவு சென்னையின் பிரபலமான ஹோட்டல், ரம்மியமான சூழல் மனதை பறிக்கும் இசை என அனைவரது மனதும் சாந்தமாக அந்த சூழலை ரசிக்க, இவளோ படபடக்கும் கண்களுடன் யார் என்றே தெரியாத நபருடன் அண்ணன் சொன்ன ஒரு வார்த்தைக்காக அமர்ந்து இருந்தாள்.
அவளின் அமைதியை பார்த்த ஆர்யா “அஷ்வினி நம்ம வந்து கால் மணி நேரம் ஆகுது இன்னுமே அதே பயத்துடன் இருக்கீங்க. எதாவது சாப்பிட ஆர்டர் பண்ணுங்க” என
அவளுக்கோ மதியம் பைரவிடம் இருந்த நேரம் தான் நினைவுக்கு வந்தது. அவனோ பேசி கொண்டே இருக்க அனைத்துக்கும் இவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
“ஓ….. மறந்துட்டேன் ஒரு கால் பேசிட்டு வரேன்” என்று அந்த இடத்தை விட்டு தள்ளி சென்று பேச போனை எடுத்தான் ஆர்யா.
வர்மா ரெசிடென்சி,
மதி “டேய் உன்னை என்ன பண்றது வந்த கொஞ்ச நாளில் எப்படி டா உன்னை கொல்ல ஆள் சம்மதித்து இருக்க. உன்னை என்ன பண்ணா தகும்” என்று கத்த,
“நான் ஒன்றுமே பண்ணல ஆனா நான் வந்ததில் இருந்து தப்பா தான் நடக்குது. உனக்கே தெரியும் நான் இங்க வந்தே பத்து வருஷம் ஆக போது. அப்படி இருக்க எனக்கு யாருடா இங்க எதிரி இருப்பாங்க. வந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை கொல்ல ட்ரை பண்ணிட்டாங்க” என
“என்ன இரண்டு முறையா…..” என்றவனிடம், “ஆமா டா நான் ஆபீஸ் வந்த முதல் நாளே என்னை கொலை பண்ண பார்த்தாங்க ஆனா அவ வந்து காப்பாத்திட்டா” என்று அன்று நடந்ததை சொல்ல “உனக்கு எப்படி தெரியும்” என்றதும்
“அவ என் அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது கேட்டேன் டா. உனக்கு தெரியாது ல அவளை பற்றி உண்மையா சொல்லணும் னா அவ ரொம்ப பயந்த பொண்ணு டா ஆனா எனக்காக அவளோட உயிரையே துச்சமா நினைச்சு இருக்க” என
“சரி டா இப்ப எப்படி அவனை எப்படி கண்டு பிடிக்கலாம்” என்ற மதியை பார்த்து
“பிடிக்கலாம் டா சின்ன கிளு கண்டிப்பா அவனுக்கே தெரியாமல் விட்டு இருப்பான் அதை முதல கண்டு பிடிக்கணும்” எனும் போது வாட்ச்மன் “சார் இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க” என்று ஒரு லெட்டரை கொடுக்க,
அதை படித்தவன் “ச்சை…. மதி சீக்கிரம் வாடா பெரிய ஆபத்து” என்று அவன் இழுத்து சென்றான்.
வேகமாக காற்றை கிழித்து கொண்டு காரை ஓட்டும் பைரவை பயத்துடன் “என்ன ஆச்சு எதுக்கு இப்படி வேகமா இந்த நேரத்தில் எங்க போற” என்றவனை பார்த்து,
தனக்கு வந்த லெட்டரை காட்ட அதில் “உன் உயிரை காத்த உயிரின் உயிரை எடுக்கும் நேரம் இது” என்று இருக்க
“என்னடா இது இப்ப யாருக்கும் ஆபத்து” என்று படபடப்பாக கேட்ட மதியிடம்,
“கண்டிப்பா தேஜ்க்கு தான் ஆபத்து. அவளுக்கு எதுமே ஆக கூடாது டா எது தான் அவ நம்பர் அவளுக்கு கால் பண்ணுடா இல்ல அவ லொகேஷனை கண்டுப்பிடி” என்று சாலையில் கவனத்தை வைக்க,
சிறிது நேரத்தில் “மச்சி அவ *** ஹோட்டல் ல இருக்க டா பக்கத்தில் தான் இருக்கு சீக்கிரம் போ” என்றதும் அங்கே இருவரும் செல்ல,
ஆர்யா “என்ன அஷ்வினி எவ்வளவு அமைதியா இருக்கீங்க எதாவது பேசுங்க” என்று சாப்பிட்டு கொண்டே எதிரே இருக்கும் தேஜுவிடம் கேட்க,
“என்ன பேசறது” என்று அவனையே கேள்வி கேட்க, “லவ் பற்றி உங்க கருத்தை சொல்லுங்க இல்ல உங்களோட ட்ரீம் பாய்… இது மாதிரி சொல்லுங்க” என்றதும் யோசித்து,
“நான் இது வரைக்கும் இதை பற்றி எல்லாம் யோசிச்சிதே இல்ல எனக்கு இப்ப தோன்றதை சொல்றேன். எனக்கு பெருசா ஆசை எல்லாம் இல்லங்க அதுனால ட்ரீம் பாய் இல்ல சோ லவ் பற்றி சொல்றேன்.
நம்ம எங்கவென எப்படிவென பிறக்கலாம். இன்னும் சொல்ல போன நம்ம பழக்க வழக்கம் கூட மாறி இருக்கலாம் ஆனா நமக்கானவிடம் இவ்வளவு முரண்கள் இருந்தாலும் அவங்களை தான் நம்ம மனசு தேடும். அவங்க கிட்ட இருக்கிற நல்லதை மட்டும் இல்ல அவங்களோட மைனஸ் அதை பார்த்தும் கூட நம்ம காதல் மாற கூடாது. நல்ல குணத்தை மட்டும் பார்த்து வர காதல் பாதிலே முடிய கூட வாய்ப்பு இருக்கு ஆனா அவங்களோட பிளஸ் மைனஸ் எல்லாத்தையும் பார்த்த அப்புறமா வர காதல் காலத்துக்கும் மாறாது” என்று எதையோ நினைத்து கூற,
அதை கேட்ட ஆர்யா “உங்க அண்ணா உங்களை உலகம் தெரியாத பாப்பா மாதிரி சொன்னாங்க ஆனா நீங்க விவரமா தான் இருக்கீங்க” என்று சிரிக்க, அவன் சொன்னதை கேட்டு அவளும் சிரிக்க,
அடுத்த நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் எரியும் கன்னத்தில் கையை வைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிரே கோபத்தின் உருவமாக பைரவ் நின்று கொண்டு இருக்க அவன் பக்கத்தில் ‘என்னடா இப்படி பண்ணிட்டா’ என்று தன் நண்பனை பார்த்து கொண்டு இருந்தான் மதி.
ஆர்யா “ஹலோ மிஸ்டர் யார் நீங்க நீங்களா வந்திங்க வந்ததும் இல்ல இவங்களை அடிச்சி இருக்கீங்க” என்று கோபத்தில் அவனின் ஷர்ட் காலரை பிடித்து கேட்க,
அதுவரை அதிர்ச்சியில் கன்னத்தில் கையை தாங்கி இருந்தவள், ஆர்யா பைரவின் காலரை பிடிப்பதை பார்த்து வேகமாக அவனிடம் சென்று “ஆர்யா விடுங்க… விடுங்கனு சொல்றேன்ல” என்று சற்று குரலை உயர்த்தி கூறிய பின் தான் அவன் ஆச்சிரியத்தில் தன் கையை எடுத்தான்.
ஆர்யா பேசும் முன் பைரவ் “மதியம் என்னடி சொன்னேன் இங்க வராதே தானே சொன்னேன் அப்ப சரினு தலையை தலையை ஆட்டி விட்டு இப்ப வந்து இருக்க என்ன நினைச்சு இருக்க உன் மனசுல” என்று பொரிய,
“நான் ஒன்னும் வேண்டுமே வரல அண்ணா தான் போக சொன்னாங்க நான் ஒன்றும் தனியா வரலை என்னோட ரூம்மேட் கௌசி கூட தான் வந்தேன் அவ தான் எதோ முக்கியமான வேலையா பக்கத்தில் எங்கயோ போய் இருக்கா அதுக்குள்ள என்ன அடிச்சிட்டீங்க” என்று வேகமாக முணுமுணுக்க
சிவந்த கன்னத்தை பார்த்ததும் தன்னையே நொந்து கொண்டு “சாரி” என்றான் மெதுவாக,
‘சாரி சொன்ன அடிச்சது சரி ஆகிடுமா” என்று அதே முணுமுணுப்பில் கேட்க,
ஆர்யா “யாரு நீங்க எல்லாம்” என்று எரிச்சலாக கேட்க,
தேஜு “இவர் தான் என்னோட எம்.டி பைரவ் வர்மா” என்று அவனுக்கு அறிமுகப்படுத்த, “அதுக்கு நீ அவரோட ஸ்டாப் அவ்வளவு தான் என்னமோ நீ அவரோட அடிமை மாதிரி நடந்துகிறார்” என்று கோபத்தில் வார்த்தையை கடித்து துப்ப,
அதே நேரம் அங்கே வந்தால் கௌசல்யா அனைவரையும் பார்த்து கொண்டு “சாரி தேஜு வர கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு நீ ஒருத்தரை தான் பார்க்க போறான்னு சொன்ன இங்க பார்த்த மூன்று பேர் இருக்காங்க” என
எல்லாரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சிறிது நேரத்தில் ஆர்யா “வாங்க அஷ்வினி நான் உங்களை ட்ராப் பண்ணிட்டு கிளம்பறேன்” என
பைரவ் “நான் இவளை ட்ராப் பண்றேன் நீங்க கிளம்புங்க வேண்டும்னா இவங்களை கூப்பிட்டு போங்க” என்று கௌசல்யாவை காட்ட,
கௌசல்யா காரில் அமைதியாக இருக்கா, ஆர்யா கோபத்தில் வேகமாக காரை ஒட்டி கொண்டு அவளோட ஹாஸ்டலில் விட்டு விட்டு “அவங்க வந்ததும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க”
“உங்க நம்பர் தான் என் கிட்ட இல்லவே இல்லையே. அப்புறம் இப்படி சொல்றதாம்” என்றவளை கோபத்துடன் பார்த்து தன் நம்பரை கூறி விட்டு வேகமாக செல்லும் போதே யாருக்கோ கால் செய்தான்.
மதி “இப்ப தான் டா அவங்க சாப்டாங்க திரும்பவும் நீ சாப்பிட சொன்ன எப்படி தான் சாப்பிடுவாங்க” என்று சாப்பாட்டு முன் அமர்ந்து முழித்து கொண்டு இருக்கும் தேஜுவை பார்த்து சொல்ல,
“எனக்கு தெரியும் மூடிட்டு சாப்பிட்டு எதாவது கேப் பிடிச்சு கிளம்பிட்டே இரு இல்ல உன் உசுரு உனக்கு சொந்தம் இல்ல” என்று அவன் காதில் பைரவ் சொல்ல சொல்ல ‘அடப்பாவி நல்லதுக்கே காலம் இல்ல’ என்று அவன் நினைத்து நொந்து கொண்டான்.
பைரவிற்கு போன் வர “இரண்டு பெரும் சாப்பிடுங்க டேய் மதி நான் வர வரைக்கும் இங்கவே இரு” என்று போனை ஆன் செய்து காதில் வைக்க,
“என்ன ஆனது கோபமே வராத அநபாயனுக்கு தற்பொழுது கோபம் மட்டும் தான் வருகிறது போல். உன்னை பதற வைத்த சில நிமிடத்தை நேரில் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அவளின் உயிரை இவ்வளவு சீக்கிரத்தில் எடுப்பேனா போன முறை பொன்னையும் மண்ணையும் வென்ற என்னால் பெண்ணை வெல்ல முடியவில்லை. இம்முறை பெண்ணை மட்டும் அல்ல நீர் பாதுகாத்த மேதகத்தையும் சேர்த்து வெல்வேன்” என்று பேச
“யாருடா நீ ஒண்ணுமே புரியாத மாதிரி பேசற” எண்றதுக்கு “முதலில் உன்னை உணரு அநபாயா அதற்கு தான் நான் காத்திருக்கிறேன் உன்னை விழுத்த. முப்பது வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஆரிய சந்திர கிரகணத்துக்குள் உன்னை உணர முயற்சி செய். உன் சுற்றத்தையும் உணர வை அதற்கு பின் தான் உன்னை அழிக்க வேண்டும் எவ்வளவு காலம் பொறுமையுடன் காத்து இருக்கும் என்னால் உன் அழிவை காண ஆவல் பெருக்குதே” என்று சத்தமிட்டு சிரிக்க
“யாருடா நீ தைரியம் இருந்தா உன்னோட பெயரை சொல்லு” என்றதும் “நான் ஆ நான் தான் உன் காலன் சண்டிலன்” என்று போனை வைக்க
‘அடச்சை…… யாருடா நீங்கயெல்லாம்’ என்று அவன் பேசியதை யோசித்து கொண்டே வர அவன் கண் முன்னே சில காட்சிகள் வந்து அவனை மேலும் குழப்பியது.