காதலின் விதியம்மா 3

KV-1d8124e5

காதலின் விதியம்மா 3

வெளியே வந்த நாராயணனின் கைபேசி அழைக்க, அதில் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து சிலையானான்.

ஜெயராஜ், நாராயணனின் பி. ஏ “சர் சின்ன சார் கிடைச்சிட்டார். கையில கால கொஞ்ச அடி, அவரை ரெஸ்ட் எடுக்க சொன்னா அவர் இப்பவே இந்தியா வரனும்னு சொல்லாறாம். ரொம்ப பிடிவாதமா இருந்ததுனால அவரை நம்ம பசங்க நம்ம விமானத்தில் கூப்பிட்டு வராங்கலாம் அனேகமாக நாளை மார்னிங் இங்க இருப்பார்” என்று கூற

தன் மகனின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவனை அங்கவே இருக்க சொல்லலாம் என்று நினைக்க, இதுவரை சும்மா கூட இந்தியா வருவதாக சொல்லாத மகன் அவசரமாக இந்தியா வருவதை கேட்டு தான் அதிர்ந்தார். 

‘மகமாயி நான் ஒன்னு நினைக்க நீ ஒன்று பண்ற. உன்னை தான் நம்பியிருக்கேன் என் மகனை காப்பாத்து’ என்று கணத்த மனதுடன் தன் இல்லம் நோக்கி சென்றார். 

வர்மா ரெசிடன்சி, நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் பல அடுக்கு மாளிகை.  அனைத்து வேலைகளையும் முடித்து பொறுமையாக தான் ஆசையாக வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி  கொண்டு இருந்தார் பூமகள். 

பூமகள், நாற்பதை தாண்டிய குடும்ப தலைவி. பல சொத்துக்களுக்கு சொந்தகாரியாக இருந்தும் யாரையும் அவமதிக்க தெரியாத  பூவின் மென்மையான குணம் கொண்டவர். 

நாராயணனின் கார் உள்ளே நுழைவதை பார்த்து, ‘என்ன இவங்க போன வேகத்துக்கு திரும்ப வந்துட்டாங்க.. என்னவா இருக்கும்’ என சிந்தித்து கொண்டே, 

“என்ன மாமா உடம்புக்கு எதாவது பண்ணுதா… இல்ல தலைவலிக்கிதா ஏன் முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு” என வீட்டிற்கு நுழைந்து கொண்டே கேட்க, 

அவரை பார்த்து “இல்லாமா உடம்புக்கு எதுவும் இல்ல நாளைக்கு பையன் வரான்” என

“மாமா… அவனுக்கு என்ன ஆச்சு ஏன் தீடிரென வரான் எப்பவும் கூப்பிட்டா கூட வர மாட்டான் உங்க முகம் வேற சரியில்ல சொல்லுங்க மாமா என்ன ஆச்சு” என்று கலவரத்துடன் கேட்க, 

‘எதுமே நான் இன்னும் சொல்லலை அதுக்குள்ள நீ இப்படி பதற உண்மையை சொன்னா நீ தாங்குவியா’ என மனதில் நினைத்து “ஒன்னும் இல்லடா லைட்டா அடி போல அதோட உன் பையனுக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கும் போல அதான் வரான் அனேகமா நாளைக்கு காலை க்குள் வந்திடுவான்” என்று கூற

பல வருடங்கள் கழித்து பார்க்க போகும் மகனை நினைத்து கண் கலங்கி “சந்தோசமா இருக்குங்க இந்த முறை வரட்டும் ஒரு கல்யாணத்தை பண்ணி என் கூடவே வெச்சிக்கிறேன்” என

“இல்லமா அவன் போகனும்னு நினைச்சா போகட்டும்” என்று கூறி விட்டு செல்லும் கணவனை ஆச்சரியமாக பார்த்தார். தன்னை விட மகனுக்காக ஏங்கும் கணவனுக்கு இப்போது என்ன ஆச்சு என்ற யோசனையுடன் அவரும் மறுநாள் வரும் மகனின் அறையை சுத்தம் செய்ய சென்றார். 

மாலை, அனைவரும் கிளம்ப மோகன் “தேஜஸ்வினி முதல் நாள் எப்படி இருந்தது” என

“குட் சர் நான் தஞ்சாவூரில் மூன்று மாசம் ட்ரைனிங் முடிச்சிட்டு தான் வந்ததால் இப்ப பண்ற ப்ராஜெக்ட் ஈசியா புரிஞ்சிடுச்சு” என 

“நல்லது மா நான் கூட பயந்தேன் என்னடா வந்ததும் பெரிய ப்ராஜெக்டில்  போடுறோம்னு பரவாயில்லை கவனமா இருக்கனும் நாளைக்கு பார்க்கலாம்” என அவர் கிளம்பிவிட

தான் தங்கி இருக்கும் விடுதியை நோக்கி சென்றாள். 

கிழக்கே சிவக்க தோன்றி பின் இருளை மொத்தமாக சுருட்டும் சூரியன் தன் வரவை அனைவருக்கும் தெரிவிக்க, அதை தெரிந்து கொண்டு பறவைகள் அங்கும் இங்கும் பறக்க, தன் காதலனை கண்டதும் வெட்கத்துடன் பூக்கும் பூக்கள் என அனைத்தும் மனதை ரசிக்க வைக்க ஜன்னல் வழியாக சென்னையின் அழகை ரசித்து கொண்டு இருந்த தேஜூவின் முதுகில் கௌசல்யா பளீரென்று ஒரு அடி வைக்க, 

“ஆ… அம்மா” என்ற அலறல் உடன் திரும்பி “எதுக்கு டி இப்ப என்னை அடிச்ச” என்று முறைத்து கொண்டே கேட்க, 

“எவ்வளவு நேரமா நானும் கூப்பிடறது மேடம் என்னமே கனவு கண்டுகிட்டு,  அடிக்கிற வெயிலில் காணாததை கண்டது போல பஸ்ஸையும் லாரி கார் போடுற சத்ததை பார்த்துட்டு இல்ல இல்ல ரசிச்சிட்டு இருக்க அங்க உன் போனு ரொம்ப நேரமா கத்தி்ட்டு இருக்கு” என்று கோபத்தோடு சொல்ல, 

“ஐய்யோ” என்று ஓடியவள் போனை பார்த்து “அண்ணா தான் டி ப்ச்…. எடுக்க வேண்டியது தானே” என்று கூறி விட்டு தன் தமையனிடம் பேசிவிட்டு வர

கௌசல்யா “மேடம் காலையிலே என்ன கனவு கண்டுட்டு இருந்திங்க” என்று கிண்டலாக கேட்க, 

“கனவு எல்லா இல்ல மனசுக்கு எதோ தோனுது… ஐ மீன் நம்ம கண்ணுக்கு முன்னாடி இருக்கிற காற்றை நம்மால பார்க்க முடியாது பிடிக்க முடியாது ஏன் அது உரிமை கொண்டாட முடியாது இருந்தாலும் அது இல்லைனா உயிர் வாழ முடியாதுல” என

“அடியேய் உனக்கு என்ன ஆச்சு டி… நல்லாதானே இருந்த இப்ப எதோ காத்து… உரிமைனு உளறிட்டு இருக்க” என்று கத்த

“ஸ்ஸ்ஸ்… கௌஸ் பொறுமையா கத்துமா அப்பறம் வலிக்க போது” என கௌசல்யா “உன் காதா” என்ற கேள்விக்கு “இல்ல உன் தொண்டை” என, 

அவளின் தலையில் தட்டி, “போ போய் குளிச்சிட்டு கிளம்பு நேரம் ஆகுது” என்றதும் பறந்து விட்டால் தேஜஸ்வினி. 

‘ராமு சமையல் முடிச்சிட்டியா…. ராமு தம்பி ரூமை சுத்தம் பண்ணியா….. ராமு  என்ன ஸ்வீட் பண்ணிருக்க…. ராமு அத பண்ணாத…. ராமு இதை இப்படி பண்ண சொல்லு’ என வீட்டில் இருக்கும் அனைவரையும் என்றுமில்லா திருநாளா வேலையை வாங்கி கொண்டு இருக்கும் மனைவியை பார்க்கும் போது வாழ்க்கை நிறைவாக இருந்தது நாராயணனுக்கு. 

தீடிரென ஓரு சத்தம் இருவரும் வேகமாக வெளியே வந்தனர். கார் சத்தம் தான்…  எவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும் அது கருப்பு கலரில் இருந்தால் அதன் கம்பீரம் பல மடங்கு உயர்வது போல் இருந்தது அந்த கருப்பு நிற பேன்ஸ் கார். 

அதில் இருந்து இறங்கினான். ஆறடி உயரம் அவனை போல் யாருக்கு அடங்காத கேசம் கூர்மையான கண்கள் கோபம் எனக்கு அதிகம் என்று அளவிட்டு காட்டும் மூக்கு சிவந்த அழுத்தமான இதழ் என ராஜா கணக்காக வந்து இறங்கினான் நம் ஹீரோ பைரவ் வர்மா. 

வலது கையில் பெரிய கட்டு, காலில் சில பல அடி நிற்க கொஞ்சம் கஷ்ட படுவது போல தெரிய இருந்தும் கம்பீரத்துக்கு குறையில்லை. 

“கண்ணா….. எப்படி டா இருக்க என்னடா இது கோலம்” என கலங்கிய கண்களுடன் கேட்கும் தாயை  அனைத்து கொண்டு, 

“சில் மா சின்ன அடி தான் சீக்கிரமா சரியாகிடும்…. ஹாய் டேட் அவ் ஆர் யு” என

“நல்லா இருக்கோம் டா எங்க போன இரண்டு நாளா உன்னை காண்டாக்ட் பண்ணவே முடியலை” என

“சாப்பரில்  ஆண்டிஸ் மலை பக்கமா போகும் போது சிக்னல் லாஸ்ட் ஆயிடுச்சு…. அப்பறம் கண்ட்ரோல் மிஸ் ஆகி நான் மலை இடுக்கில் மாட்டி கடைசியா நம்ம பசங்க வந்தாங்க” என தன் சாகசங்களை கூற

“ஏன்டா பத்திரமா இருக்க கூடாதா ஒத்த பிள்ளை டா எங்களுக்கு நீ. இனிமே எங்க கண்ணு முன்னாடியே இரு” என அன்னையை பார்த்து, 

“ம்மா… நான் காத்து மாதிரி யாராலும் பார்க்கவும் முடியாது பிடிக்கவும் முடியாது ஆனா எல்லா இடத்திலும் இருப்பேன்” என

நாராயணன் “போதும் நிறுத்துடா காதில் இருந்து ரத்தம் வர போகுது. சரி எப்ப கிளம்ப போற” என்றதுக்கு “இனி இங்க தான்” என்ற மகனை பார்த்து, 

“என்ன சடனா” என “சும்மா தோணுச்சு” எனும் போதே நாராயணனுக்கு மோகன் கால் செய்ய, 

தள்ளி நின்று “சொல்லு மோகன்” என எதிர் பக்கம் சொன்ன விசயத்தை கேட்டு “அப்படியா… மறந்துட்டேன் மோகன் என்னால இன்றைக்கு ஆபிஸ் வர முடியாது நீங்க வேணா யாரையாவது வீட்டுக்கு பையிலோட அனுப்புங்க நான் சைன் பண்ணி தரேன்” 

……. 

“வேற யாரும் இல்லையா மோகன்… சரி அனுப்புங்க தேஜஸ்வினி தானே” என்று பேசி விட்டு வைக்க, 

மேலே உள்ள தன் அறைக்கு செல்ல கிளம்பிய பைரவ் இந்த பெயரை கேட்டதும் அதே இடத்தில் நின்று, 

“டேட் இப்ப என்ன நெம் சொன்னீங்க” என

“தேஜஸ்வினி… நம்ம கம்பெனி ஸ்டாஃப்” என்று வீட்டில் இருக்கும் அலுவல் அறைக்கு செல்ல, 

‘தேஜ்…’ 

விதிகள் தொடரும்

நிலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!