காதல் சதிராட்டம் 24a

காதல் சதிராட்டம் 24a

வினய்யின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சு பறந்துக் கொண்டு இருந்தது.

இதயம் நிலை இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது.

என்ன பதில் அவள் சொல்வாள்?

என் முன்னால் வந்து நின்று எனக்கும் காதல் வந்துவிட்டது என்று எனக்கு உணர்த்துவாளா?

முகத்தில் வெட்கச் சிவப்போடு என்னைப் பார்ப்பாளா?

என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கிறாளோ என்ற என் சந்தேகத்தை தவிடு பொடியாய் உடைக்கும் படி என் முன்னே வந்து நின்று  “நான் உனக்கானவள் ” என்று உணர்த்துவாளோ?

என் கண்ணை காண முடியாதபடி நாணத்தில் தவிப்பாளோ?

இல்லை என் கண் முன்னே வரவே மாட்டேன் என்று என்னை சந்திக்காமல் போய்விடுவாளோ? என்று அவன் மனம் அவனை பலவித எண்ணங்களால் குழப்பிக் கொண்டு இருந்த போது கதவு கீறிச்சுடும் சப்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தான்.

ஆதிரா தான் நின்றுக் கொண்டு இருந்தாள்.

அதுவரை பாலைவனத்தில் நா வறண்டு கிடந்த செடியின் மேல் சட்டென தூரல் விழுந்தால் எப்படி அது மகிழுமோ அதுப் போல் குளிர்ந்துப் போனான் வினய்.

அவனது உதடுகளில் ஒரு மந்தகாச சிரிப்பு வந்து  ஒட்டிக் கொண்டது.

அவனுடைய அப்பழுகற்ற முகத்தைப் பார்த்ததும் ஆதிராவிற்கு மீண்டும் சந்தேகம் தோன்றியது, கண்டிப்பாக வினய் தான் இந்த கேவலமான காரியத்தை செய்து இருப்பானா? என்று

இருந்த நம்பிக்கையை எல்லாம் ஒன்று திரட்டி கடைசியிலும் கடைசியாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“இந்த லெட்டரை நீ தான் எழுதுனீயா?”

அவன் ஆமாம் என்று தலையாட்ட அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள்.

ஆனால் வினய்யோ அவள் முக மாற்றத்தை கவனிக்கவில்லை.

அவனுக்குள் அவள் தன்னைத் தேடி வந்தது எல்லையில்லா சந்தோஷத்தை மனதுக்குள் ஏற்படுத்தி இருந்தது.

அந்த சந்தோஷம் அவனை தன்னிலை இழக்கச் செய்து இருந்தது.

ஆதிராவின் அருகே  சென்றவன்  அவள் எதிர்பாரா நொடியில் சட்டென்று அவள்  இடையை வளைத்து   அவள் முகத்தை தன் கைகளில் தாங்கியவாறே சொன்னான்.

“நீ என்னை இவ்வளவு சீக்கிரத்திலே ஏத்துப்பேனு எனக்கு தெரியாது ஆதிரா. ஏன்னா உன் மனசுல அந்த எண்ணமே இல்லைனு நினைச்சேன். நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். உன்னை எங்கே இழந்துடப் போறோம்னு எப்படி தவிச்சேன் தெரியுமா.” என வினய் பேசிக் கொண்டே இருக்க ஆதிராவின் கரம் வினய்யின் கன்னத்தில் இறங்கியது.

ஒரு நிமிடம் வினய் திகைத்துப் போய்விட்டான், அவளா தன்னை அறைந்தாள் என்று.

கண்ணத்தில் வாங்கிய அறையுடன் அவளை ஸ்தம்பித்துப் போய் பார்த்தான்.

அவளோ உலைகலத்தில் போடப்பட்ட அரிசி போல் கொதித்தாள்.

“ஹவ் டேர் யூ வினய்… எப்படி என் கிட்டே இப்படி கேட்கணும்னு உனக்கு தோணுச்சு..” என்று அவள் அந்த கடிதத்தையும் அதனுள் இருந்த சதுர டப்பாவையும் அவனை நோக்கி வீசி எறிய அவன் கவனம் எல்லாம் தன்னை அறைந்த அவளின் மீது தான் இருந்தது.

பாவம் அவன் அந்த டப்பாவை பார்த்து இருந்தாலாவது அவளது கோவத்திற்கான காரணத்தை அறிந்து இருப்பான்.

காண்டம் என்று எழுதப்பட்டு இருந்த அந்த டப்பா கீழே பறந்து சிதற அதன் மீது அந்த கடிதம் மறைத்தாற்படி பறந்துவந்து மூடி விட்டு இருந்தது.

எவ்வளவு திமிர் இருந்தால் வினய் இப்படி செய்தது மட்டுமல்லாமல் தன்னை முத்தமிட்டும் விட்டானே என்று ஆத்திரத்தில் கொதித்துப் போய் நின்றாள் ஆதிரா.

அந்த கடிதத்தில் படித்த ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனது திரும்ப திரும்ப அவளுக்குப் படித்துக் காட்டியது.

“ஆதிரா நான் உனக்காக செய்த எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ பதிலுக்கு உன் கிட்டே ஒன்னு கேட்கப் போறேன். உன்னையே தான் கேட்க போறேன். எனக்கு நீ வேணும்… உன் கூட ஒரு நாள் இருக்கணும். ப்ளீஸ் ஆதிரா நோ மட்டும் சொல்லிடாதே.. அப்புறம் நான் உனக்காக பண்ணது எதுக்குமே அர்த்தம் இல்லாம போயிடும்…இதை ப்ளாக் மெயில்லா நினைக்க வேண்டாம்… எனக்கு பண்ற ஃபேவரா நினைச்சுக்கிட்டு என் கிட்டே வந்துடு… அப்படி வரலைனா நீ எனக்கு நோ சொன்னதா புரிஞ்சுக்கிறேன்.. ” என்று எழுதி இருந்த அந்த கடிதத்தில் ஒரு காண்டம் டப்பாவும் மடித்து வைக்கப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்தவுடன் கோபத்தின் உச்சத்துக்கு சென்றவள் தற்போது வினய் செய்த செயலால் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்.

“சீ நீ இவ்வளவு சீப்பானவன்னு எனக்கு தெரியாம உன் கூட பழகிட்டேனே. நீயும் கடைசியிலே அந்த கேடு கெட்ட ஆம்பளைங்க வர்க்கத்துல ஒருத்தனு நிரூபிச்சுட்ட இல்லை. இந்த கருமத்தை வாங்க தான் மெடிக்கல் ஷாப் போனீயா? அதை என் கிட்டேயே வேற தைரியமா சொல்றீயே..” என்று கத்திய ஆதிராவைப் புரியாமல் பார்த்தான்.

“ஆதிரா நீ ஏன் இதுக்கு இவ்வளவு விசித்திரமா நடந்துக்கிறே.. ஒன்னு யெஸ் சொல்லு இல்லை நோ னு சொல்லு…
அப்படி நீ நோ சொல்ல தயங்குனா நீ என் முன்னாடி வர வேண்டம் நானே புரிஞ்சுக்கிறேனு தானே சொன்னேன்… ” என்றவனை வெறுப்பாக பார்த்தாள்.

“வினய் நீ ஒரு கேடு கெட்டவன்னு உன்னைத் திட்ட தான் வந்தேன். ஆனால் நீ கேடு கெட்டவன் இல்லை கேவலமானவன் கூட. உன்னை இந்த கேள்வி தைரியமா கேட்க வைச்சது எனக்கு நீ  பண்ண உதவி தானே. இனி நான் நீ கொடுத்த இந்த காசுல படிக்க மாட்டேன்.  ” என்று கத்தியவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

அப்படியானால் நான் தான்  ஸ்பான்சர்ஷிப் செய்தேன் என்று இவளுக்கு தெரிந்துவிட்டதா?

“ஆதிரா நீ அதையும் இதையும் நினைச்சு குழப்பிக்கிறே… ” என்று வினய் ஏதோ சொல்ல வரும் போது கதவைத் தட்டிக் கொண்டு விமல் வந்தான்.

“மச்சான் உனக்கு முக்கியமான போன் கால் டா சீக்கிரமா வா… ” என்றவன் குரலில் பதற்றத்தின் உச்சம் தெரிந்தது.

விமலின் முகத்தைப் பார்த்து அவசரம் என்று உணர்ந்தவன் ஆதிராவிடம் திரும்பினான். அவள் பார்வையோ வெறுப்பை உமிழ்ந்தது.

“ஆதிரா ப்ளீஸ் நான் உன் கிட்டே வந்து தெளிவா பேசுறேன்…” என்றான் கெஞ்சலாக.

“வினய் உன் கிட்டே பேசுறதுக்கு எதுவும் இல்லை.. உன் முகத்தை நான் இந்த ஜென்மத்துல இனி பார்க்க மாட்டேன். ” என்று வெறுப்பை உமிழ்ந்தவளை சமாதனப்படுத்த திரும்பிய நேரம்  “மச்சான்.” என்று கலங்கிய குரலில் விமல் அழைத்தான்.

அவனது அவசரம் புரிந்து எதுவும் அடுத்து பேச முடியாமல் ஆதிராவையே திரும்பிப் பார்த்து தன் கண்களில் அவளையே நிறைத்தபடி விமலோடு சென்றான்.

இங்கே ஆதிராவோ அவன் பிச்சையாய் போட்ட படிப்பைத் தொடரக்கூடாது என்று அந்த கல்லூரியை விட்டே செல்ல முடிவெடுத்தவள் அதை நிறைவேற்றுவதற்காக பிரின்சிபாலின் அறைக்கு சென்று டி.சி ஐயும் வாங்க சென்றுவிட்டாள்.

வினய்யை தனியாக அழைத்து வந்த விமலோ தயங்கி தயங்கி அவனைப் பார்த்தான்.

ஏற்கெனவே எரிச்சலில் இருந்த வினய்யிற்கு அந்த தயக்கம் மேலும் கோபத்தை தந்தது.

“டேய் மச்சான் என்னனு சொல்லி தொலைடா… ஏன் இப்படி மென்னு முழுங்குற” என்று சொல்லிய வினய்யைக் கட்டிக் கொண்டு கதறினான் விமல்.

“ஐயோ மச்சான் நம்ம தங்கச்சி ஷிவாணியும் அப்பாவும் ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாங்க டா… ” என்று விமல் சொல்ல வினய் அழக்கூடத் திராணியற்று அவனைப் பார்த்தான்.

தன்னைப் பெற்ற தகப்பனும் தான் உயிருக்கு உயிராய் நேசித்த தங்கையும் ஒரே நேரத்தில் உயிரைவிட்டது அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அப்படியே உடைந்துப் போய் மடிந்து அமர்ந்துவிட்டான்.

“மச்சான் ப்ளீஸ் டா.. நீ அழுதுடு… ஆனால் இப்படி உடைஞ்சுப் போய் மட்டும் உட்கார்ந்துடாதே… ” என்று சொல்லிய விமலின் சட்டையைக் கோபமாக பிடித்தவன்

“எப்படிடா எப்படிடா என்னாலே அழ முடியும். எல்லோரும் என்னை விட்டு ஒரே நேரத்திலே போனா எப்படிடா செத்துப் போன இந்த ஜடத்துக்கு கண்ணீர் வரும்… ” என்று கத்திக் கொண்டு இருந்தவன் ஒரு கட்டத்தில் உடைந்துப் போய் அழ ஆரம்பித்துவிட்டான்.

அவனைத் தேற்ற வழியற்று இறுக அணைத்துக் கொண்டான் விமல்.

“மச்சான் இறுதி சடங்குலாம் நம்ம போய் தான் பார்க்கணும்.. வா டா போகலாம்.. ” என்று விமல் சொல்ல வினய்யோ உடைந்துப் போய் எழுந்து நின்றான்.

அவன் கண்களோ ஆறுதலுக்காக ஆதிராவை கண்கள் தேடியது.

அதை உணர்ந்தவனாக விமல் வினய் கிளம்பும் முன்பு ஆதிராவை தேடிச் சென்றான். ஆனால் அவன் கண்களில் ஆதிரா படவே இல்லை. அவள் ப்ரின்சிபெல் ரூமில் இருக்கிறாள் என்பதை இவனும் அறியான்.

தேடிப் பார்த்தவன் சோர்ந்த முகத்துடன் வினய் அருகே வந்தான். அதை உணர்ந்தவானாக மேலும் எதையும் கேட்காமல் வினய் விமலுடன் கிளம்பி தன் சொந்த ஊருக்கு பயணப்பட்டுவிட்டான்.

ஊரில் எல்லா காரியங்களையும் கல்லான மனதோடு செய்து முடித்தவன் திரும்பி கல்லூரிக்கு வந்து ஆதிராவைத் தேட அவள் அவன் கண்களில் அகப்படவே இல்லை.

இவன் நேராக கயல்விழியிடம் சென்று விசாரிக்க அவளோ கோபமாக வினய்யைப் பார்த்தாள்.

“அண்ணா ஏன் அண்ணா இப்படி பண்ணீங்க… ஆதிரா உங்களை எவ்வளவு நம்புனா? அவள் கிட்டே எப்படி உங்களாலே காண்டம் கொடுக்க முடிஞ்சது. அவளோட உணர்வோட படிப்போட இப்படி விளையாடிட்டீங்களே… இன்னும் கூட நீங்க தான் இதை பண்ணீங்க னு என்னாலே நம்பவே முடியல.”  என்று அந்த பெண் சொல்ல அப்போது தான் அவனுக்கு கடிதம் மாறிய  உண்மையே தெரிய வந்தது.

“ஐயோ இப்படி எல்லாமே தவறாக முடிந்துவிட்டதே.. ” என கவலைப்பட்டவன் அவளை தேடாத இடம் இல்லை.

அவள் அவன் கண்களுக்கு அகப்படவே இல்லை.

இறுதியில் அவளை சென்னையில் தான் கண்டுபிடித்தான்.

ஆனால் கண்டுபிடித்த பிறகு தான் தெரிந்தது. அவள் வேறு ஒருவன் மீது காதல் வயப்பட்டு இருக்கிறாள் என்று.

அவளுக்கு தன்னையும் அவள் மீது வைத்த காதலையும் உணர்த்துவதற்கு வாய்ப்பாக வைபவ்விற்கு ஐந்து லட்சம் தர வேண்டும் என்றால் அவள் தன்னுடன் வந்து தங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டான்.

அவளும் அவன் நினைத்ததைப் போல இங்கே வந்து விட்டாள் தான். ஆனால் அவன் மீது அவள் கொண்ட வெறுப்பு மட்டும் எள்ளளவும் குறையவில்லை.

அந்த வெறுப்பை எப்படி நேசிப்பாக மாற்றுவது என்ற வழி அறியாது ப்ரணவ்வைப் பார்த்தான்.

வினய் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பிறகு ப்ரணவ்வின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.

தன் அண்ணனை இறுகக் கட்டிக் கொண்டான்.

“ஐயோ அண்ணா ஏன் இப்படி செய்யாத தப்புக்காக பழியை சுமந்துக்கிட்டு இருக்கீங்க. நீங்க அண்ணி கிட்டே நடந்த எல்லாத்தையும் சொன்னா அவங்களே புரிஞ்சுப்பாங்களே… ” என்று ஆற்றாமையாக கேட்டான் ப்ரணவ்.

“என்னை நான் நல்லவன்னு நியாயப்படுத்துறதுக்காக  நடந்த எல்லாத்தையும் சொன்னா இதுவரை என் மேலே காட்டுன வெறுப்பு கோபம் ஆத்திரம் எல்லாம் பொய்னு ஆகிடும்டா. காரணமே இல்லாம என்னை வருத்துனதை நினைச்சு அவள் தன்னை தானே வருத்திப்பா.. அவள் மனசை கஷ்டப்பட வைச்சு தான் நான் நல்லவன்னு நிரூபிக்கணும்னா அதுக்கு நான் கெட்டவனாவே இருந்துட்டு போயிடுறேன்.. ” என்று வினய் சொல்ல ப்ரணவ் ஸ்தம்பித்துப் போய் நின்றான்.

ஒருவனால் இந்த அளவுக்கு காதலிக்க முடியுமா? என்று பிரமித்துப் போய் வினய்யைப் பார்த்தவன் மனதினிலோ ஒரு கேள்வி தொக்கி நின்றது.

திரும்பி கேள்வியாக வினய்யைப் பார்த்தான்.

“அண்ணா அந்த லெட்டரை மாத்தி வெச்சது யாருனு நீங்க சொல்லவே இல்லையே.. ” என்று ப்ரணவ் கேட்க வெற்றுச் சிரிப்போடு சொன்னான்.

“என் காலேஜ் வார்டன்… ” என்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!