காதல் யுத்தம் – 14

காதல் யுத்தம் – 14

பகுதி 14

வளர்ந்த பிள்ளை நீ

குறும்பு செய்யும் கண்ணன் நான்

இன்று உன் குறும்பை கண்டு

வாயடைக்க செய்து விட்டாய் நீ

 

“அம்மா ………..” என்று ஆகாஷின் கத்தல் கீழே அமர்ந்திருந்த சரஸ், கீதா காது வரை கேட்டது, சமயலறையில் தன் பிள்ளைகளுக்கு பால் கலந்து கொண்டிருந்த ஆனந்தி கூட, இதைக் கேட்டு, வரவேற்பறைக்கு வந்து நின்றாள்.

சரஸ் “சஜு என்னமா ஆச்சு” என்று குரல் கொடுத்தார். சஜு அதற்க்குள், வெளியே வந்து மாடிப்படியின் தொடக்கத்தில் இருந்து பதில் குரல் கொடுத்தாள் “ஒன்னுமில்ல அத்தை, குளிக்கப் போகும் போது, பாத்ரூம்ல இருந்த தண்ணில, கால் வழுக்கி கீழே விழுந்துட்டார் அத்தை”

(ஒரு சார்ட் டைம் ஃப்ளாஷ் பாக், அதாவது ஒரு டென் மினிட்ஸ் முன்னாடி நடந்தது என்னன்னு? பார்ப்போம், வாங்க )

ஆகாஷின் அறைக்கு, கையில் டீயுடன் உள்ளே சென்றவள், அதை கட்டிலின் பக்கத்தில் வைத்து விட்டு, ஆகாஷை எழுப்ப போனாள்.

சஜு “ஹலோ” இம்ஹும்… ஆகாஷ் எழவில்லை.

பின் மீண்டும் கையில் சொடுக்கு போட்டு “மிஸ்டர். ஆகாஷ்” என்று அழைத்து பார்த்தாள், அப்பொழுதும் ஆகாஷ் எழவில்லை. (பின்னே சத்தமாக அழைத்தால் தானே எழுவான்)

வேண்டுமென்றே சின்னக் குரலில் அழைத்து, அவன் எழவில்லை என்று உறுதி செய்த சஜு மனதில் ‘கடவுளே அடுத்த என்ன நடக்கப் போகுதோ, நீ தான் காப்பாத்தனும்’ என வேண்டி கொண்டு, அவன் முகத்தில் மூடிய போர்வையை இழுக்கலாம் என்று நினைத்து, ‘பாவம் வேண்டாம்’ என்று விட்டு, அருகே வைத்து இருந்த சூடான டீயை எடுத்து, அவன் முகத்தில் ஊற்றினாள்.

சூடான டீ முகத்தில் விழவும், அதிர்ந்து எழுந்த ஆகாஷ் “அம்மா” என அலறிவிட்டான். உடனே குளியலறை சென்று, குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றவும் தான் சிறிது எரிச்சல் அடங்கியது. அதற்குள் அத்தைக்கு பதில் அளித்து விட்டு, உள்ளே வந்தாள் சஜு. ஆகாஷும் குளியலறையில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தான்.

சஜு அவனைப் பார்த்து அசட்டையான முக பாவத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

“உங்க வீட்ல லாம் இப்படி தான் காலையில் டீ கொடுப்பீங்களா?” என்று வினவ, அவளும் அசட்டையாகவே “நான் கூப்பிட்டேன், நீ எந்திரிக்கல, அதான் இப்படி எழுப்பினேன்” என்று சொல்லிவிட்டு டீ கப்புடன் கீழே சென்றாள்.

போகின்றவளையே பார்த்தவன் ‘இனி இப்படி தான் தினமும் ஏதாவது செய்து கொண்டிருப்பாள் போல் தெரிகிறதே, என்ன செய்ய போகிறாய் ஆகாஷ்?’ என்று உதடுகளை மடித்து தனக்குள்ளே சிந்தித்தான்.

கீழே வந்த சஜுவிடம் கண்ணடித்த ஆனந்தி “என்ன சஜு, ஆகாஷ் குறும்பு பண்ணி, நீ தள்ளி விட்டுட்டியா” என்று கேக்க.

சஜு சிரித்து “அப்படிலாம் இல்ல கா” என்று மழுப்பினாள்.

கீதா, சஜுவிடம் வந்து “சஜு மறு வீட்டுக்கு செல்ல வேண்டும், அதனால் இரண்டு நாட்கள் தேவையானதை உனக்கும் மாப்பிளைக்கும் எடுத்து வைத்து தயாராகு, சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும்”

சரஸ் வீட்டில் மறுவீட்டுக்கு அவர்களுடன் செல்ல நாத்தனார் முறையில், பெண் பிள்ளைகள் யாரும் இல்லை, சரஸ் பக்கம் ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான், ரங்கா சார் சைடில் அவர் ஒருவரே தவப்புதல்வர் ஆதலால் கீதாவின் நாத்தனார் இந்திராவையும் அவர் கணவன் ரகுவையும், அவர்கள் பெண் மஞ்சரியையும் அவர்களுடன் போகுமாறு கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து அவர்களிடம் கேட்டார்.

கீதாவும் தன் நாத்தனாரை வற்புறுத்தி அழைக்க, இந்திரா “இல்ல கீதா உங்க அண்ணனுக்கு இந்த இரண்டு நாள் லீவ் கிடைத்ததே பெரிசு மா, வேணும்னா மஞ்சுவ விட்டுட்டு போறேன், அவளுக்கு இப்போ லீவ் தான்” எனவும், ரகுவும் “ஆமாம் மா, வேனும்னா மஞ்சரி இருக்கட்டும், மஞ்சு என்னமா இருக்கியா?” என மஞ்சுவிடம் கேட்டார் .

மஞ்சு “சரிப்பா இருக்கிறேன்” என்று கூறி விட்டு, தன் துணிகளை மட்டும் தனியே பாக் செய்ய சென்றாள். சஜுவுக்கும் மஞ்சுவுக்கும் நான்கைந்து வருடங்கள் வித்தியாசம். இருந்தாலும், மஞ்சு அவள் பெற்றோர்க்கு ஒரே பிள்ளையாய் போகவும், சஜூவுடன் தான் சிறு வயதில் இருந்து விளையாடி, அவளும் சஜுவும் நல்ல தோழிகளாகவும், சமயத்தில் பாச மலர்களாகவும் இருப்பார்கள்.

ரகுவுக்கு, அவர் வேலை காரணமாக ஐந்து வருடங்களுக்கு முன்பு, டெல்லிக்கு மாறுதல் கிடைக்கவும். அடிக்கடி வந்து சென்ற மஞ்சு, இப்பொழுது அவ்வப்போது வந்து சென்றாள். அதனால் தற்போழுது சஜுவுடன் இருக்க வாய்ப்பு கிடைக்கவும் சந்தோசமாக ஒப்புக் கொண்டாள்.

சஜு தன் துணிகளை பாக் செய்ய மாடிக்கு சென்று, அறைக்கதவை திறக்க, அவள் முகத்தில் நீர் திவலைகள் விழ, சரியாக இருந்தது. கண்களை மூடி முகத்தை திருப்பி கொண்டாள்.

ஆகாஷின் அறை வாயிலில் வலது புறம் சோபா செட் இருக்க, இடது புறம் கண்ணாடியுடன் கூடிய டிரெஸ்ஸிங் டேபிள் இருந்தது. குளித்து விட்டு வந்த ஆகாஷ், இடுப்பில் டவலுடன் அங்கு நின்று தலையை சிலுப்ப, அதே சமயம் உள்ளே நுழைந்த சஜு முகத்தில் பட்டது.

ஆகாஷைப் பார்த்த சஜு, அரை நிமிடம் பார்த்து விட்டு, தலைக் குனிந்து கொண்டாள். அவனை அவ்வாறு பார்த்த வெட்கத்தால் அல்ல, தான் செய்த செயலை எண்ணி, குற்ற உணர்வில் தலைக் குனிந்தாள். ஏனென்றால் இவள் ஊற்றிய சூடான டீயினால், ஆகாஷின் முகம் அங்கங்கே சிவந்து இருந்தது.

திரும்பவும் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள், அவன் “என்ன” என்பது போல் முகத்தை அசைக்க, சஜு “மறு வீடு செல்ல வேண்டுமாம், அதனால் தேவையானதை பேக் செய்ய வேண்டும்”

ஆகாஷ் “டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு, பாக் எடுத்து தரேன், உன்னோட திங்க்ஸ பேக் பண்ணு என்னோட திங்க்ஸ நா பேக் பண்ணிக்கிறேன்”

சஜு “ஆமா போறது, உள்ளூருக்கு, அதுவும் இரண்டு நாள், இதுல இவனுக்கு தனியா, எனக்கு  தனியா இரண்டு பாக் கொண்டு போனா, எல்லோரும் மெச்சிடுவாங்க” என்று அவனுக்கு கேட்கின்ற படி முனுமுனுத்தாள்.

ஆகாஷ் “ஒரே பாக் தான், நீ எடுத்து வை உன் திங்க்ஸ, அதுக்கப்புறம் நான் வந்து எனக்கு தேவையானதை அடுக்கிக்கிறேன்”

சஜு “ஏன், நீ முத கீழ அடுக்கு, அதுக்கப்புறம், நான் மேல அடுக்கிக்கிறேன்” என அவனுக்கு எதிர் வாதம் புரிந்தாள்.

ஆகாஷ் “அம்மா, தாயே என்னோடத எடுத்து வச்சிட்டு கூப்பிடுறேன், நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு”. அவனிடம் முகத்தை சுழித்து விட்டு, அங்கு பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தாள்.

ஆகாஷும் வைட் சார்ட், ப்ளூ ஜீன்ஸ் அணிந்து டக் இன் செய்ந்திருந்தான். தன் உடைகளை ஒரு பாக்கில் எடுத்து வைத்து விட்டு, அவளை அழைத்தான். சஜு அவனை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்றாள்.

சஜு “ஆகாஷ், யு ஆர் லுக்கிங் ஸ்மார்ட்”, ஆகாஷ் புன்னகைத்து “சொல்லிட்டு அங்கேயே நின்னா எப்படி? கொஞ்சம் பக்கம் வர்றது”

சஜு “ஏன் உங்களுக்கு காது கேட்கலையா? பக்கத்தில் வந்து சொன்னா தான் கேக்குமா?”

ஆகாஷ் “நல்லா வாய் மட்டும் பேசு, ஆமா இதே டயலாக் தான், நான் இந்த டிரஸ் போடும் போதுலாம் சொல்ற, அப்படி என்ன இருக்கு இந்த டிரஸ்ல எல்லோரும் போடுற காம்பினேஷன் தானே”

சஜு “அது உங்களுக்கு தெரியாது, பார்க்கிறவங்களுக்கு தான் தெரியும்” ஆகாஷ் “அப்படியா, அதோ போறாளே அந்த பொன்னுட்ட கேப்போமா?”

சஜு “ஏன் இதோ போறானே அந்தப் பையன்ட்ட கேப்போம், பசங்க தான் கரெக்டா சொல்வாங்க “

ஆகாஷ் “அம்மாடி உன்ட்ட பேச முடியுமா?” சஜு “அப்படி வாங்க வழிக்கு” என்று கலகலத்து சிரித்தாள். அவள் சிரிப்பதையே பார்த்தான் ஆகாஷ், அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சஜு வெட்கப் பட்டாள்.

ஆகாஷிற்கு இந்த உடை அன்று மலர்ந்த ரோஜா போல், நாள் முழுதும் ப்ரெஷாக அவனைக் காட்டும். ஆதலால் சஜு காதலிக்கும் போது இந்த உடையை அடிக்கடி அணிய சொல்வாள்.

அதனால் தான் ஆகாஷ் இந்த உடையை அணிந்தான், அவன் கணக்கு போட்டதைப் போல், சஜு இமைக்காமல் அவனையே பார்த்தாள். ஆகாஷ் “மேடம், போதும் என்னை சைட் அடிச்சது” என்றான்.

சஜு அவனை முறைத்தாள். “ஓகே நான் கீழே போகவா?” என்றான் ஆகாஷ். உடனே சஜு அவன் முகத்தையே பார்த்தாள். அதை புரிந்து கொண்ட ஆகாஷ், அவள் அருகில் வந்து “கண்டிப்பா உன்ன தான் மாட்டி விடுவேன்” என்று சொன்னான். அவள் சிறிது பயப்படவும், “ரெடியா இரு, எங்கம்மாக்கு பதில் சொல்ல” என்று பயமுறுத்தி சென்று விட்டான்.

சஜு சிறிது பயந்தாள், ‘இதுக்கு தான் சொன்னேன், எது செஞ்சாலும் ப்ரூப் இல்லாம செய்யணும்’ என்றது மனதின் குரல். எதையும் சமாளிக்கலாம் என்று எண்ணி பின்  தன் துணிகளை எடுத்து அடுக்கியவள், அவன் பொருட்களை பையில் காணவும், திரும்பவும் மூளை யோசித்தது. அவனுடைய பொருட்களில் ஒன்றை வேண்டும் என்றே பையில் இருந்து மாற்றி வைத்து விட்டு, இன்னொன்றை எடுத்து விட்டாள்.

பின் கீழே இறங்கி சென்றாள் சஜு. ஆகாஷ் அவள் வருவதை பார்த்து விட்டு, சரசிடம் “கேளும்மா” எனவும்.

சஜு சற்று பயந்தாள், சரஸ் “ஏன் மா, என் மகனை அப்படி செஞ்ச?” என்று கேட்க, அவள் மேலும் பயந்தே விட்டாள்.

ஆகாஷ் “நான் குளிக்கப் போறேன் சொல்லிட்டு பாத்ரூம் போறதுக்குள்ள, வேணும்னே  என்ன(னை) பிடிச்சு தள்ளி விட்டுட்டா மா” எனச் சொல்லவும் தான் தெளிந்தாள் சஜு.

அங்கு வந்த ஆகாஷின் தாத்தா கிருஷ்ணன் “ஏன் டா பேராண்டி கல்யாணம் முடிஞ்சும், இப்படி சின்ன புள்ள தனமா அம்மா கிட்ட முறையிடுற” எனச் சிரித்து கொண்டே சொன்னார்.

ஆகாஷைப் பார்த்தவர், அவன் முகம் சிவந்து இருக்கவும், “என்னப்பா முகம் இப்படி சிவந்து இருக்கே, என்னாச்சு?” என்று வினவ.

ஆகாஷ் “நேற்று நைட் மாடில சுகனோடு பேசும் போது, ஏதோ பூச்சி கடிச்ச மாதிரி இருந்துச்சு தாத்தா, அதனால வந்த அலர்ஜியா இருக்கும் போல” கீழே வந்த போது அனைவருக்கும் தந்த விளக்கத்தையே தாத்தாவுக்கும் அளித்தான்.

தாத்தா “டாக்டர் கிட்ட காமிப்பா, இல்ல பாட்டி எதாவது கை வைத்தியம் வச்சுருப்பா கேளு “

ஆகாஷ் “ஆயின்மன்ட் போட்டேன் தாத்தா சரியாகிடும்”

சரஸ் உணவறைக்கு செல்ல, சஜு மஞ்சுவை தேடி செல்ல, அவி வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

அவி “என்னடா ஆகாஷ் இப்படி?” ஆகாஷ் “எப்படி ?”

அவி “கொஞ்சம் காத கொடு” என்று சொல்லி அவன் காதில் “ஏண்டா பர்ஸ்ட் நைட் முடிஞ்சு வரும் பொண்ணுங்களுக்கு தான் முகம் சிவக்கும் கேள்விப் பட்டிருக்கேன், பல கதை புக்ல படிச்சிருக்கேன், ஆனா இங்க உனக்கு சிவந்திருக்கே?” என்று வினவ

ஆகாஷ் “டேய்… ஏன்டா நீ வேற, அண்ணன் கூட பார்க்க மாட்டேன்”

அவி “சரி சரி, விடு, கூல், என்னாச்சு சொல்லு?”

ஆகாஷ் “தாத்தா கிட்ட கேளு, சொல்லுவார், நான் இப்ப தான் ஒவ்வொருத்தரா சொல்லி முடிச்சேன, இதுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு பசிக்க ஆரம்பிச்சிடுச்சு”

தாத்தா விளக்கம் சொல்லவும், ஆகாஷ் அவி காதைக் கடித்தான் “ஏன் டா அண்ணா? தாத்தாக்கு உடம்பு முடில, சீரியஸ், ஊர்ல இருந்து வர முடியாதுனுலாம் பாட்டி சொல்லிச்சே, ஆனா இவர பார்த்தா அப்படியா தெரியுது? “

அவி “அதான் டா, நானும் யோசிக்கிறேன், ஓகே நீ முத மறு வீட்டுக்கு போயிட்டு வா, நான் பாட்டி இல்ல அம்மா கிட்ட கேட்டு துருவி வைக்கிறேன்”

காலை உணவு உண்டு விட்டு, ஆகாஷ், சஜு, மஞ்சு, கீதா, வெற்றிவேல் எல்லோரும் சஜு அம்மா வீட்டிற்க்கு ஆகாஷின் இன்னோவாவில் கிளம்பினர்.

ஆகாஷ் ‘இன்னும் எத்தனை விதமா கொடுமை பண்ணப் போறாளோ, சஜு பண்ணும் கொடுமைய தாங்கி கொள்ளும் சக்தியை கொடு’ என்று வீட்டை விட்டு செல்வதற்கு முன் எல்லா கடவுளையும் வேண்டி கொண்டான்.

 

யுத்தம் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!