காதல் 16
காதல் 16
தன் கல்லூரி தோழி ப்ரியாவின் பர்த்டே பார்ட்டிக்கு ஹோட்டல் ராயல் வந்தால் இளமதி. தன் தோழிகளை கண்டு துள்ளி குதித்து சென்றால். தன்னை கண்டு ரெண்டு ஜோடி கண்கள் அவளை கடத்த நினைப்பது பாவம் அவளுக்கு தெரியவில்லை.
ஒரு ஜோடி கண்ணுக்கு சொந்தகாரனான சத்யா அவளை பார்த்ததும் அவளை அடைய வேறு வழி இல்லை என மயக்க மாத்திரையை ஒரு ஜூஸில் கலந்து அவளிடம் கொடுக்க நினைத்தான்.
ராகவி, “மதி எங்க டி ஆதி. மனுஷனுக்கு உன்னை தவிர நாங்க யாரும் கண்ணுக்கே தெரிய மாட்டோம் போல. சரி அவன் தான் பார்க்கல நாங்க சைட் அடிக்கலாம் பார்த்த அவனை நீ கூப்பிட்டு வரல துரோகி” என மதியை குறைபட்டு கொள்ள,
பிரியா, “ஏய் ஆதி அவ ஆளு டி. அவ கிட்டவே அவனை சைட் அடிப்பேன்னு டைரக்டா சொல்லுற எங்களை மாதிரி தெரியாம சைட் அடிக்கணும் டி” என பர்த்டே பேபி சொல்ல
மதி, “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடி. தாராளமா சைட் அடிங்க இல்ல ப்ரொபோஸ் கூட பண்ணுங்க. எனக்கு பயமே இல்ல” என அசால்ட்டாக சொல்ல
ராகவி, “எங்க மேல அவளோ நம்பிக்கையை மச்சி” என
“இல்ல டி ஆதி மேல இருக்கிற நம்பிக்கை. என்னை தவிர யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டான்” என ஆதியை நினைத்து கர்வமாக சொல்ல,
“அது என்னவோ உண்மை தான் டி” என ப்ரியாவும் ராகவியும் சிரிக்க மதியும் கூட சேர்ந்து சிரித்தாள். அப்போது அங்கு வந்த செர்வாண்ட் மூவருக்கும் சொபிட் ட்ரின்க் கொடுக்க முதலில் வேண்டாம் என்ற மதி பின் தோழியின் வற்புறுத்தலால் எடுத்து கொண்டால்.
அவள் எடுத்ததை பார்த்த சத்யா தன் திட்டம் வெற்றி பெற்றது என சந்தோசம் பட்டான். ஆனால் அவனது திட்டத்தை ஒருவன் முறியடித்து அவனின் திட்டத்தை தொடங்கி இருந்தான். இருவரின் திட்டத்தையும் அறியாமல் மதி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தால். திடிரென தலை சுத்துவது போல் இருக்க முதலில் சமாளிக்க நினைத்தாலும் பின் முடியாது என நினைத்து ப்ரியாவிடம்,
“மச்சி நான் கிளம்புறேன்” என “என்ன ஆச்சு டி ஒரு மாதிரி இருக்க” எண்றதுக்கு “நத்திங் டி லைட்டா தலை வலிக்குது” என
“சரி பாத்திரம் டி. போயிட்டு கால் பண்ணுமா” என்றால். அவளிடம் விடை பெற்று பார்க்கிங் வந்தால். அவளின் நிலைமையை பார்த்து அவளின் பின்னால் வந்த சத்யா அவளை இழுத்து கொண்டு தன் காரில் தள்ளினான். தள்ளிய வேகத்தில் மயங்கிட அவனின் மயக்க மாத்திரையின் வேலை என நினைத்து காரை லாக் செய்யாமல் தன் நன்பனிடம் தன் திட்டம் வெற்றி பெற்றதை சொல்ல சென்றான்.
வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. காரில் மதி இல்லை. லோக் செய்யாமல் சென்ற தன் முட்டாள் தனத்தை எண்ணி திட்டி கொண்டே அவளை தேடினான் ஆனால் கிடைக்கவில்லை. என்ன செய்வது என தெரியாமல் இருந்தான் நேரம் தான் சென்றது ஆனா மதியை பற்றி ஒன்றும் தெரியவில்லை.
வீட்டில் ஆதியும் விஷ்ணுவும் மதியை காணாது அவளின் போனிக்கு முயற்சி செய்ய அது அனைத்து வைக்கப்பட்டு உள்ளதாக வந்தது. அவசரமாக மதனுக்கு கால் செய்து விஷயத்தை சொல்ல,
கௌரி, “அண்ணா பதறாதீங்க. நானும் மதனும் அவ ரெகுலரா போற இடம் அப்புறம் சந்தேகபடுற மாதிரி இருக்கிற இடம் அங்க எல்லாம் தேடுறோம். நீங்க ரெண்டு பெரும் அவ பார்ட்டிக்கு போன ஹோட்டல் போய் பாருங்க” என
“சரிமா” என ஹோட்டல் சென்ற ஆதியும் விஷ்ணுவும் எல்லா இடத்தில் தேடியும் கிடைக்காததால், cctv செக் செய்யும் போது சத்யா மதியின் பின் செல்வது தெரிய கோபம் கொண்ட ஆதி “அவன் செத்தான் டா. எவ்வளோ தைரியம் இருந்த என் மதியை….” மேலும் பேச முடியாமல் கண்களை இறுக்கி மூட
விஷ்ணு, “மச்சான் டென்ஷன் ஆகாத வா அவன் வீட்டுக்கு போகலாம்” என இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வர, மதியோ அதே ஹோட்டலில் ஒரு அறையில் ஒருவனின் அணைப்பில் தன்னை மறந்து இருந்தால்.
அந்த ஒருவன் “ஏய் பேபி டால் எனக்கு நீ வேண்டும். எனக்கு மட்டும் தான் நீ” என குழைந்த குரலில் கூறியது இருவரும் அறியவில்லை.
சத்யாவின் வீட்டுக்கு சென்ற ஆதி மற்றும் விஷ்ணு அவனை சரமாரியாக அடித்த பின்,
“நான் அவளை கடத்த நினைத்தேன். ஆனால் இப்ப அவ எங்க இருக்கிறா என்று தெரியல சத்தியமா எனக்கு தெரியாது” என்றான்.
“ச்சை… இனி உன்னை நான் பார்த்தேன் அது தான் உன்னோட கடைசி நாள். மதியை விட்டு தள்ளியே இரு” என அவனை எச்சரித்து விட்டு மதியை தேட சென்றனர்.
மணி நள்ளிரவு ரெண்டு என காட்ட,
ஆதி “எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா. அவளுக்கு எதாவது நடந்தா என்னால உயிரோட இருக்கவே முடியாது. அவ எனக்கு வேண்டும் டா. எதாவது பண்ணேன்” என பாவமாக கேட்கும் நண்பனை கஷ்டமாக பார்த்தான் விஷ்ணு.
திடீரென்று, “மச்சி அவ போன் சுவிட்ச் ஆப்ல இருந்தாலும் imei நம்பர் இருந்த அவளோட லொகேஷன் நமக்கு கிடைக்கும்டா. நமக்கு லக் இருந்த போன் அவ கிட்ட இருக்கலாம்” என
அவசரமாக இருவரும் வீட்டுக்கு சென்று அவளின் imei நம்பரை கொண்டு ட்ரெஸ் செய்தனர். ஆதி “எங்கடா காட்டுது” என
“மச்சி ஹோட்டல் ரோயலை தான் காட்டுது நம்ப இன்னொரு முறை அங்க செக் பண்ணலாம் டா” என்ற விஷ்ணுவை கண்டு விரக்தியாக சிரித்தான்.
இருவரும் மீண்டும் அங்கே சென்று அவளின் லொகேஷன் காட்டும் திசையில் சென்றனர். அவளின் லொகேஷன் கட்டிய இடம் ரூம் நம்பர் 501.
இருவருக்கும் ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. ரேசெப்டினில் சென்று கேட்ட பொது அந்த ரூமுடன் பத்து ரூம்கள் ஒரு கம்பெனியால் புக் செய்து இருப்பதாக சொன்னார்கள். அந்த ரூம் சாவியை கேட்ட போது,
‘சாரி சார். நீங்க மார்னிங் வந்து அவங்களை பாருங்கள்’ என என்ன செய்வது என தெரியாமல் இருந்த போது விஷ்ணு அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் காசை கொடுத்து அந்த ரூமின் மாஸ்டர் கீயை வாங்கி வந்தான்.
ஆதியும் விஷ்ணுவும் கதவை திறக்க உள்ளே இருந்த நிலையை கண்டு இருவரும் சொல்ல முடியாத உச்ச கட்ட அதிர்ச்சியில் இருந்தனர்.
மெத்தையில் ஒரு ஆண்மகன் உலகத்தையே வென்ற சந்தோஷத்துடன் துயில் கொள்ள அவனது நெஞ்சத்தில் தூங்கி கொண்டு இருந்தால் ஆதியின் மதி. அவளின் முகத்தில் இருந்த ஒன்று ஆதிக்கு சத்தியமாக புரியவில்லை. இதற்கு முன் பார்த்ததும் இல்லை.
வெளிச்சம் சற்று குறைவாக இருந்ததால் அவனின் முகத்தை இருவரும் பார்க்கவில்லை ஆனால் மதியின் நிலையே சொல்லாமல் சொன்னது என்ன நடந்து இருக்கும் என்று. அவனின் சட்டையை மட்டுமே தனது ஆடையாக கொண்டு அவனின் மேலே நல்ல தூங்கி இருந்தால்.
விஷ்ணு ஆதியை உலுக்கிய பின் தான் சுயநினைவுக்கு வந்தான். ஆதி “மச்சி அவன் தான் என் மதியை செடியூஸ் பண்ணி இருப்பான். அவ குழந்தை டா. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது அவனை சும்மா விடமாட்டேன். அவனை…..” என பக்கத்தில் டபேல் மேல் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து கொண்டு அவன் அருகில் சென்றான் சற்று கோபத்துடன்.
அவனை பிடித்து விஷ்ணு “லூசு மாதிரி பண்ணாத முதலில் நமக்கு மதி தான் முக்கியம். அவளை இங்கு இருந்து கூப்பிட்டு போகணும் டா. அப்புறம் அவனை பார்த்துக்கலாம்” என ஆதியோ வலியோடு மதியை பார்த்தான் தன் தேவதையை இன்னொருவனின் அணைப்பில் என நினைக்கும் போதே யாரோ அவனை உயிரோட எரிப்பதை போல் உணர்ந்தான்.
விஷ்ணு “மச்சான் நீ மதியை கூப்பிட்டு பாக் டூர் வழிய வீட்டுக்கு போயிடு நான் இவன் யாரு அதுக்கு இப்படி பண்ணன் என்று கேட்டு அவனையும் நம்ப வீட்டுக்கு கூப்பிட்டு வரேன் அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்றதும் நண்பனின் காரில் மதியை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றான் ஆதி.
இதையை படித்த சித்து தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியாமல் சிலையாகினான். இயல்புக்கு வந்த பின் மீண்டும் படிக்க தொடங்கினான்.
விடிந்ததும் மெல்ல கண்களை திறந்தவளுக்கு தலை வெடிப்பது போல் வலித்தது. வீட்டில் இருப்பதை பார்த்து ‘நேத்து பார்ட்டிக்கு போனேன் அதுக்கு அப்புறம் நான் எப்படி வீட்டுக்கு வந்தேன்’ என யோசித்து கொண்டு இருந்தவள் தன் நிலையை பார்த்து மேலும் அதிர்ந்தாள்.
வெறும் சட்டை அதுவும் ஒரு ஆணின் சட்டை மட்டுமே இருக்க அதுவும் அவளது முட்டிக்கு மேலே இருந்தது. தன் நிலையை பார்த்தவளுக்கு என்ன நடந்து இருக்கும் என்று தெரியாத அளவுக்கு குழந்தை இல்லையே. இது எப்படி நடந்தது என யோசித்து கொண்டு இருந்தவளின் எண்ணத்தை கலைத்தது ஆதியின் குரல்.
“மதிக்குட்டி எழுந்திடிய இந்த லெமன் ஜூஸ் குடிச்சிட்டு ரெப்பிரேஷ் பண்ணிட்டு வா” என தன் சோகத்தை மறைத்து கொண்டு கேட்டவனை ஒரே கேள்வியால் அதிர வைத்தால் மதி.
“ஏன்டா இப்படி பண்ண” என கோபமா இல்லை இயலாமையை எதோ ஒன்று அவள் குரலில் இருந்தது. அவளது கேள்வியில் அடிப்பட்ட பார்வையோடு பார்த்து பின் அவளிடம்
‘குளிச்சிட்டு வாடா அப்புறம் பேசிக்கலாம்’ என அவளின் அறையை விட்டு வெளியே வரவும் விஷ்ணு உள்ளே வரவும் சரியாக இருந்தது. நேராக அவனிடம் சென்று,
“மச்சான் நான் சீக்கிரமா மதியை கல்யாணம் பண்ணிக்கணும் டா “என
விஷ்ணு அவனிடம் “அவசர படாத மச்சி. எனக்கு தெரிஞ்சு மதியை அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கிறது தான் சரினு தோணுது” என அவனின் கருத்தை சொல்ல,
கோபம் கொண்ட ஆதி அவனின் சட்டை காலரை பிடித்து “அவன் யாருனே தெரியாது. அதுவும் இல்லாமல் ஒரு பொம்பளை பொறுக்கிக்கு என் மதி வேண்டுமா. நீ ஏன்டா இப்படி சொல்ற அவ குழந்தை டா அவளை அவன் யூஸ் பண்ணிகிட்டான். நான் ஒன்னும் அவளோட உடம்புக்காக லவ் பண்ணல எனக்கு அவளோட மனசு தான் முக்கியம். அவனை பத்தி நீ மதி கிட்ட சொல்லவே கூடாது. என்னை மீறி சொன்ன இது வரை நீ பார்க்காத ஆதிரனை பார்ப்ப” என அவனை எச்சரிக்க,
‘அவளுக்கு நேத்து நடந்தது தெரிஞ்ச ரொம்ப மனசு உடைஞ்சி போய்ட்டுவா டா’ என அவனது முடிவை எப்படி மாற்றுவது என யோசிக்க
ஆதி, “அவளுக்கு நேத்து நடந்தது நியாபகத்துக்கு இல்ல பட் அதுக்கு காரணம் நான் தான்னு நினைச்சு இருக்கா” என அவர்கள் பேசி கொண்டு இருக்க எங்கே மதி வந்தால்.
“அண்ணா வாங்க.. நானே உங்களை கூப்பிட சொல்ல தான் வந்தான்” என
இவ எதுக்கு இப்ப இவளோ பாசமா கூப்பிடுறானு தெரியலையே என மனதில் யோசித்து கொண்டே “எதுக்கு மதிக்குட்டி” என
“அது நான் இன்னிக்கு புதுசா ஒரு ரெஸிபி ட்ரை பண்ண போறேன். உங்களுக்கு தான் என்னோட சமையல் ரொம்ப பிடிக்குமே” என விஷ்ணுவுக்கும் ஆதிக்கும் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
ஆதி “உனக்கு இதுக்கு கஷ்டம் நானும் விஷ்ணுவும் செய்யறோம்” என்றான். இருவரின் பயத்திற்கு காரணம் போன முறை மங்கோ ஐஸ்கிரீம் என்ற பெயரில் ஒரு கூழை கொடுத்து மதனை ஒரு வாரம் ஹாஸ்பிடல் அனுப்பியவள் தற்போது என்ன செய்ய காத்து இருக்கிறாளோ என மனதில் கதறினாலும் வேறு வழி அவள் செய்வதை சாப்பிட்டு தான் ஆகணும்.
இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து தற்போது உயிர் பயத்தோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு இருக்க மதி சமையல் பல பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. பின் ஒரு வழியாக சமையலை வெற்றிகரமாக முடித்து இருவரின் முன்பும் ரெண்டு பௌல் வைத்தால்.
“இது என்ன மா” என சற்று பீதியுடன் இருவரும் கேட்க,
“மஷ்ரூம் மில்க்ஷேக்” என, “என்ன?” என இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து எழுந்தனர். பின் ஆதி தான் “அதுக்கு எதுக்கு பௌல் ஒரு சின்ன டம்ளர்ல தரலாமே” என தலையெழுத்து குடித்து தான் ஆகணும் குறைந்த பட்சம் அளவை குறைக்கலாம் என நினைக்க
“பரவலை. நான் பெரிய குண்டானில் தான் செய்தேன்” என பெருமையாக சொல்ல
விஷ்ணு “இந்த ரெஸிபி எதுல பார்த்த” என அவளோ “ஹலோ நான் சமையலில் கைதேர்ந்தவள். இது என்னோட ரெஸிபி” என கர்வத்தோடு சொல்ல ஆதியும் விஷ்ணுவும் ‘முடிஞ்சுது ஜோலி’ என நினைத்து மனதை திடப்படுத்தி கொண்டு குடிக்க,
ஆதி ஒரே ஒரு வாயில் வாந்தி குமட்ட வேகமாக பாத்ரூம் சென்று உள்ளே சென்றதை வெளியே கக்கி விட்டு தன் நண்பனை காப்பாத்து டா என கண்ணாலே உதவி கேட்க,
“மதிஇஇஇ…” என விஷ்ணு கத்த என்ன அண்ணா என அவனை பார்த்தால். அவனோ “உனக்கு தெரியாதா ஆதிக்கு மஷ்ரூம்னா அலர்ஜி அது தெரியாமல் நீ வேற. நீ வீட்டுலே இரு நான் போய் இவனுக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டு வரோம் இல்லனா பாவம் பிவேர் வந்து கஷ்ட படுவான்” என தன்னையும் தன் நண்பனையும் ஒரே நேரத்தில் காப்பாத்தி கொண்டு சென்றான்.
“என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும். ஆதிக்கு மஷ்ரூம் பிடிக்கும் சொன்ன மாதிரி நியாபகத்தில் தானே நான் ரொம்ப கஷ்ட பட்டு மில்க் ஷேக் எல்லாம் செஞ்சேன் பாவம் ஆதி. அது தெரியாமல் நான் நிறைய செஞ்சிட்டேனே. என்ன செய்யலாம்……… ஐடியா பக்கத்து வீட்டில் ஒரு பூனைக்குட்டி இருக்கு அதுக்கு கொடுத்துடலாம்” என முடிவு செய்து சத்தமே இல்லமால் ஒரு ஜீவனை கொலை செய்ய நினைத்தால்.
இதை படித்த சித்து கண்ணில் கண்ணீர் வரும் வரை வயிறை பிடித்து கொண்டு சிரித்தான். திடீரென அவனுக்கு ஒரு விஷயம் நியாபகத்திற்கு வர முகம் பாறையாக இறுகியது. அவன் இறுக்க காரணம் என்ன?
அன்புடன்
நிலா