anjali’s Endrum Enthunai Neeyaethan

                                          என்றும் என்துணை நீயேதான் 7

 

அனைத்து தகவலும் தன் கையில் இருக்கிறது ஆனால் இவை மட்டும் போதுமா ஹரியுடனான தனது கல்யாணத்தை நிறுத்த. இதில் தந்தையின் தொழில் வேற அவன் கையில் சிக்கியுள்ளது அதை மீட்டு எடுக்க வேண்டும். அவன் கொடுத்த பணத்தில் தான் நஷ்ட்டத்தை போக்க முடிந்தது இல்லையெனில் குடும்பம் முழுவதும் தெருவுக்கு தான் வந்திருக்கும் என அம்மாவின் புலம்பல் இருவரும் ஹரியின் மறுபக்கத்தை அறியாமல் கல்யாணத்தை நடத்தை வேண்டும் என குறிக்கோளாக இருந்தனர்.

 

தகவல்களை வைத்தே நாம் கல்யாணத்தை நிறுத்த முடியுமா? இல்லை நகுலனின் அண்ணனின் உதவியை நாடலாமா? வேறு எதுவும் வழி இருக்கிறதா என அந்த ஃபைலை திரும்ப திரும்ப பார்த்துகொண்டிருந்தவளின் அறை கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் ஷாலினி.

 

“ஷாலு சாப்பிட வராம அப்படி என்ன உனக்கு வேலை. அம்மா உன்னை சாப்பிட கூப்பிட்டாங்க வா.” அக்காவை அழைக்க

 

‘மனுஷனுக்கு இங்க வாழ்க்கையே போக போகுது இதுல நான் சாப்பிடறது தான் முக்கியமான வேலை பாரு.’

 

“அப்படி என்ன ஷாலு பண்ணுற.” அக்காவின் அருகில் இருந்த ஃபைலை எடுக்க போக, அதை பார்த்த விருஷாலி உடனே அவள் கையில் சிக்காமல் இருக்க, வேகமாக அதை எடுத்துகொண்டு ஷாலினியை பார்த்து,

 

“அதான் சொல்லிட்டல போய்  படிக்குற வேலைய பாரு. எனக்கு முக்கியமான ஃபைலை தேடனும், என் திங்க்ஸ் எல்லாம் ஒதுங்க வச்சிட்டு வரேனு சொல்லு அம்மாகிட்ட.” ஷாலினியிடம் பதற்றத்தில் பேச

 

‘நீ சரியே இல்லை இன்னைக்கு’. விருஷாலியை ஒரு மார்க்கமாக பார்த்துகொண்டே சென்றாள் ஷாலினி

தங்கை சென்றதும், அறையின் கதைவை நன்றாக மூடிவிட்டு அந்த ஃபைலை தன் கபோர்டில் வைத்து பூட்டி சாவியை அவள் மேக்கப் பாக்ஸில் போட்டு வைத்தாள் விழியில் ஒருவரின் புகைப்படம் விழுந்தது.

 

அவரின் படத்தை பார்த்ததும் அவரிடம் உதவி கேட்டால் கிடைக்குமா என ஒரு நிமிடம் நினைத்தால். ஆனால் அவரை பார்த்து தான் பதினொரு வருடம் ஆகிவிட்டதே. என்றோ ஒரு நாள் அவரை பார்த்த நியாபகமும் அவளுக்கு நினைவு வந்தது. அவர், விருஷாலியை அழைத்த முறையும் சேர்ந்தே நியாபகம் வந்தது. தந்தை, தாய் இருவரும் தன்னை விரு, விருஷாலி என அழைத்தாலும், தங்கை ஷாலு என அழைத்தாலும், அவரின் அழைப்பு மட்டும் அவள் மனதில் நீங்காத நினைவாக இருந்தது. அந்த அழைப்பு அவர் மட்டும் அழைக்கும் பெயராக இருந்தது “சாரு ம்மா..”

 

தந்தையின் வயது தான் அவருக்கும், ஆனால் அவரின் பாசம் ஜெகனைவிட உயர்ந்திருந்தது. அவரின் கண்களின் பொங்கும் பாசம் எங்கோ விட்ட குறை, தொட்ட குறையாக இருக்கிறது. அந்த புகைப்படத்தோடு சேர்த்து அவரின் அலைப்பேசியின் எண்ணும் இருந்தது, அதனுடன் குறிப்பில் “எப்பொழுதும் என்னை அழைக்காலாம்” என்ற வாசகமும்.

 

தனது போனை தேடியவள், மெத்தையில் இருப்பதை பார்த்து கையில் எடுத்து அந்த எண்ணுக்கு அழைக்க ஆரம்ப்பித்தாள். ரிங் போய்கொண்டே இருந்தது, அந்த பக்கம் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்தாள். ரிங்க் போனது, ரிசிவரை எடுத்து பேசிய குரல், “சாரு ம்மா.. எப்படி இருக்கடா ராஜாத்தி..” அவர் கேட்க.

 

தனது நம்பர் எப்படி அவருக்கு தெரியும், கல்லூரி படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்தது வரை விருஷாலி ஐந்து போன் நம்பர்களை மாற்றி இருக்கிறாள். தன் தோழிகளே ஒரு முறை ஒரே எண்ணை வைக்காமல் ஏன் இப்படி மாற்றிகொண்டிருக்கிறாய் என கேட்டதற்க்கு அவள் சொல்லிய பதில் “பொழுது போகலை அதான் போன் நம்பர் மாற்றி பார்த்த நீங்க எப்படி என்னை காண்டாக் பண்ணுவீங்கனு செக் பண்ணேன்” என சொல்லிவள் அவர்களை கொலை வெறியாக்கியது. அப்படி இருக்க, இவருக்கு எப்படி நான் தான் அழைப்பேன் என தெரிந்தது, அதுவுமில்லாமல் என்றோ பார்த்த என் முகத்தையும், நான் பேசாத குரலையும் இன்று எப்படி கண்டறிந்தார் என்பது தான் அவளுக்கு அதிர்ச்சியே.

 

“சாரும்மா.. என்ன அதிர்ச்சியா இருக்கா, எப்படி நீயுனு, நான் கண்டுபிடிச்சேனு.” அவர் கேட்டத்துக்கு அமைதியாக இருந்தாள்.

 

”ஏன் ம்மா.. பேச மாட்டேங்குற.. பேசு டா ராஜாத்தி. உன் குரலை கேட்க்க தான் இந்த உசுரை கையில பிடிச்சு வைச்சிருக்கேன்.” அவர் நெகிழ்ந்து பேச, அவளோ இதற்க்கு மேல் அமைதியாக இருக்க முடியாது என பேச ஆரம்பித்தாள்.

 

‘எப்.. எப்படி.. இரு.. இருக்கீங்க அங்.. கில்..” திக்கி திணறி பேச

 

”நல்லா இருக்கேன் ம்மா.. நீ எனக்கு போன் பண்ணுவேனு எனக்கு தெரியும். என்ன வேணும் உனக்கு, சொல்லுமா.” பதினைந்து வயது இருக்கும் போது என்ன வேண்டும் என அவர் கேட்க,  அன்று அவள் கூறிய பதில், “உதவினு நான் வந்தா எனக்கு நீங்க செய்து தரனும் அங்கில்” அதை அவர் இன்றும் நியாபகம் வைத்துள்ளாரா எனவும் அவள் வியந்தாள்.

 

’நேருல உங்களை பார்த்து பேசனும் அங்..கில்..’

 

“அதுக்கென்ன ம்மா.. நாளைக்காலையில நம்ம வீட்டுக்கு வந்திரு ராஜாத்தி உன் அங்கில் உனக்கு முன்னாடியே காத்திருப்பேன்.”

 

‘சரி…ங்க அங்கில்..’ சட்டென்று போனை வைத்துவிட்டு தலையை அழுந்த கோதிகொண்டாள். அவளுக்கு எல்லாமும் நினைவு இருக்கின்றது. ஆனால் எதுவோ அவளை தூண்டுகிறது, அவரை அங்கில் என அழைக்காதே என்று. ஆனால் என்ன முயன்றும் அவளால் அதை செயல்படுத்த முடியவில்லை அது தான் ஏன் என தெரியவில்லை.

 

கர்ணன் இறுதியாய் முடிவெடுத்துகொண்டு நகுலனை பார்க்க அவனின் அறைக்கு சென்றான். ஆனால் நகுலனோ, கையில் புத்தகத்தை வைத்துகொண்டு ஷாலினியிடம் பேசிகொண்டிருந்தான். நகுலனின் அறையின் முன் வந்து நின்றவன் மெதுவாக கதவை தட்டினான்.

 

“நாளைக்கு பிராட்டிக்கல் முடிந்தது, வெளிய போகலாம் சரியா. உன் அக்கா..” அவன் பேசிகொண்டே கதவை திறந்தவன் முன் கர்ணன் நிற்க ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான். எப்பொழுதும் கர்ணனை தேடி, நகுலனோ, நகுலனை தேடி கர்ணனோ அவர்களின் அறைக்கு சென்றது இல்லை. ஆனால் தன்னை தேடி அண்ணன் வந்திருப்பது அவனுக்கு அதிர்சியும், ஆச்சர்யமும் தான் இருந்தது.

 

“ஷாலினி அப்புறம் பேசுறேன்.” அவளின் போன் காலை கட்செய்துவிட்டு அண்ணனுக்கு உள்ளே வர வழிவிட்டான்.

 

’உன் காதலியோட அக்காவுக்கு நான் உதவி செய்யுறேன்.’ கர்ணன் சொல்ல, நகுலனுக்கோ மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

 

“ஏன் இந்த மனமாற்றம்.. எதனால் உதவி செய்ய முன் வந்தேனு நான் தெரிந்துகொள்ளாமா?”

 

’ஒரு பொண்ணுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் செய்தால் அவளோட வாழ்க்கை சாவோட விளிம்புல இருக்குற மாதிரி அதான் நான் உதவி செய்யுறேனு சொல்ல வந்தேன்.’

 

“சரி.. ஷாலினிக்கிட்ட பேசிட்டு என்ன செய்யலாம் சொல்லுறேன். ஆனா உதவி செய்யமாட்டேனு கடைசி நேரத்துல கைய விரிக்ககூடாது.”

 

‘ப்ச்சு.. நான் சொன்னதை தான் செய்வேன், உறுதியா சொல்லுறேன் அவங்களோட கல்யாணத்தை நிறுத்த நான் உதவி செய்யுறேன்.’ கர்ணனின் உறுதி என்ற வார்த்தை இருந்தாலே அவன் எதற்க்கு துணிந்தவன் தான் என முழுதாக நம்பினான் நகுலன்.

 

“என் காதலுக்காக தானே உதவி செய்யுறேனு சொன்ன.” நகுலன் அன்று, ‘என் காதலி பிரிந்து சென்றிடுவாள்’ சொல்லியதற்க்கு உதவ வந்துவிட்டானோ என அவன் கேட்க.

 

’உன் காதல் பிரிஞ்சா அதுக்கு எதுக்கு நான் உதவ வரனும். அந்த பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்த தான் நான் உதவி செய்ய வரேனு சொன்னேன். மற்றபடி உன் காதல் எனக்கு தேவை இல்லாத ஒன்று.’ தம்பியின் காதல் பற்றி அலட்சியமாக சொன்னாலும், அவனின் காதல் அன்று துணிக்கடையில் காதலிக்கு அவன் சம்பாரித்த பணத்தில் ஷாலினிக்கு உடை எடுத்துகொடுத்ததை எதர்ச்சையாக பார்த்துவிட்டான். அதுவுமில்லாமல் நகுலன் கல்லூரி படிப்பு போக, இடையில் சூப்பர்மார்க்கெட்டில் பார்ட் டைம் ஜாப் பார்ப்பதும் கர்ணனுக்கு தெரியும். இருந்தாலும், அவன் முன் காட்டாமல் அலட்சியமாகவே பேசினான்.

 

”நீயெல்லாம் என் அண்ணனா.. ஊர் உலகத்துல தம்பிக்காக அண்ணன் எல்லாம் செய்வான் நீயும் இருக்கியே. அதனால் தான் உன்கிட்டவே ஒட்ட முடியலை.” கர்ணன் சொன்னதை கேட்டு, கோவத்தில் மனதில் இருப்பதை சொல்லிவிட்டான்.

 

’நீ என்கிட்ட ஒட்டாம இருக்குறது தான் நமக்கு நல்லது.  அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு எப்போ என்ன செய்யனும் சொல்லு நான் வரேன்.’ பேச்சு வார்த்தை அவ்வளவு தான் முடிந்தது என  கர்ணன் கிளம்பிவிட்டான்

 

நகுலன், ஷாலினியிடம் நாளை சொல்லிக்கொள்ளலாம் என  நினைத்து, பிராட்டிக்கல் எக்‌ஷாமுக்கு படிக்க ஆரம்பித்தான்.

 

ஒவ்வொரு வீடாக சென்று பரிசம் போடும் விழாவுக்கு தெரு மக்களை குங்குமம் கொடுத்து அழைத்தார் லட்சுமி. வீரபத்திரன் உறவினர் முறை சங்கத்தினரை அழைக்க சென்றார்.

 

பரிசம் போடும் நிகழ்வில் இருந்து, நிச்சியம், திருமணம் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அந்தந்த உறவினர் முறை சங்கம் இருக்கின்றது. அவர்களின் முன் தான் இந்த நிகழ்ச்சி நடக்கும், ஏன்னென்றால், பின்னாளின் தம்பதியர்க்கு பிரச்சனை ஏற்பட்டால், இவர்களின் முன் தான் பஞ்சாயத்து நடக்கும், இதுவரையின் எந்த தம்பதியருக்கும் இந்த பஞ்சாயத்து நடைபெறவில்லை. ஆனால் அவர்களின் சாட்சியாக பெண்ணையும், மாப்பிள்ளையும் திருமண பந்தத்தில் ஒன்று சேர்த்து வைப்பார்கள்.

 

வைஷாலிக்கோ, எப்போ தான் பரிசம் போடும் நாள் வருமோ என காத்திருந்தாள். அவனின் சொந்தம் அவளாக மாறும் நேரத்திற்க்கு அவள் காத்திருந்தாள். துணிக்கடையில் பார்த்து, பேசியது தான், அதன் பின் அவனிடம் பேச தயக்கமாக இருந்தது. போனில் அழைத்து பேச அவளுக்கு ஆர்வமாக இருந்தது, ஆனால் இந்த நேரம் கர்ணன் தோப்பில் அமர்ந்து விவசாய கணக்குகளை, கணக்கு மாமாவுடன் சேர்ந்து பார்த்துகொண்டிருப்பான். அதனால் தான் அவனை தொந்திரவு செய்யாமல்  இருந்தாள்.

 

ஆனால் தினமும் அவனுக்கு காலையிலும், இரவிலும் அனுப்பு குறுசெய்திக்கு, அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது. ஆனால் அதை பற்றி அவள் சிறிதும் கவலைபடமாட்டாள். ஆனால் அவன் தன் குறுஞ்செய்தியை பார்த்திருக்கிறான் என இரு ப்ளூ டிக் பார்த்ததும் தான் அவளின் சந்தோஷம் அன்று முழுவதுமாக இருக்கும்.  

 

வைஷாலியின் கனவுகள் அனைத்தும், வேறொருத்தியின் வாழ்வாக போவது அறியாமல் கனவை கண்டுகொண்டு இருந்தாள்.

 

அரண்மணை போல் காட்சியளிக்கும் அந்த வீடு பிரம்மாண்டமாக இருந்தது. காரில் அமர்ந்து பார்த்தற்க்கே இவ்வளவு பெரியதாக இருக்கிறதே.. இறங்கி உள்ளே நடந்து சென்று பார்த்தாள் எவ்வளவு பெரிதாக இருக்கும் என கண் முன் இருந்த வீட்டை விழியகலாமல் பார்த்துகொண்டிருந்தாள் விருஷாலி.

 

“வாங்க சின்ன ம்மா… ஐயா உங்களுக்காக தான் காத்திருக்கிறாரு இரண்டு மணி நேரமா.” என அந்த வீட்டில் வேலை செய்பவர்  அவளை சின்னம்மா என அழைத்துகொண்டு, அவளிடம் பெரியவர் காத்திருப்பதை சொன்னார்.

 

ஏதோ பாதுகாப்பான இடத்திற்க்கு சென்றது போல அவளது உணர்வு இருந்தது. ஆனால் இதே பாதுக்காப்பு அவள் எங்கோ உணர்ந்தது போல இருக்கிறது. நேற்றில் இருந்து இந்த உணர்வை உணர்ந்துகொண்டிருந்தவளின் முன் காட்சியளித்தார் வேதாச்சலம்.

 

சோபாவில் அமர்ந்திருந்தவர், உள்ளே நுழைகூட இல்லாத விருஷாலியை எதிர்பார்த்தவர் போல் வாசலுக்கே சென்று அழைத்தார்.

 

“ராஜாத்தி ம்மா.. சாரு ம்மா.. வா உள்ள வாம்மா.” அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.

அவரின் பாசத்தில் அவள் மெய் மறந்து போனாள். அவரின் நடைகூட தளர்ந்துவிட்டது, ஆனால் அவரின் மனம் தளரவில்லை அப்படி இருந்தது அவரின் உபசரிப்பு.

 

உள்ளே அவருடன் சென்றவள் விழியில் ஆளுயர புகைப்படத்தில் உள்ள நிழல் உருவத்தின் மீது நிலைத்து நின்றது. அடுத்த அடியை கூட அவளால் எடுத்த வைக்க முடியாத படி அந்த புகைப்படத்தை பார்த்துகொண்டிருந்தாள் விருஷாலி.

 

ஆலயம் ஆசிரமம்

 

“என்னங்க அமிர்தாவ காணோம்.. எங்க தேடியும் அவ இல்லை.” என மேகலா பதறி போய் கணவனிடம் சொல்ல

 

‘இதான் குழந்தைகளை பார்த்துகிற லட்சணமா.. கடைசியா எங்க பார்த்த அமிர்தாவ.’ மனைவியை திட்டிவிட்டு, குழந்தையை தேடும் பணியில் மொத்த ஆசிரம்மத்தின் ஆசிரியர்களும் இறங்கினர்.

 

ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக விருஷாலியை அழைத்து சொல்லலாம் என முடிவெடுத்து அவளுக்கு அழைத்தனர்.

 

                                                                           தொடரும்………………