Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-20

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…. 

                              

 

 

அத்தியாயம் : 20

 

 

கிருஷ், ரோஜா தூங்க சென்றதும்,

 

வேதாவிடம் , 

 

லட்டுவுக்கு நான் பால் கொண்டு போயி தரேன் , நீ தூங்க போ டாலி… “மணி பன்னிரெண்டு ஆச்சு… “

வேதாவை வெக்கேட் பண்ணிட்டு,  இளா ஆராவிடம் போனான்…

 

கவுந்தடிச்சு தூங்கி கொண்டிருந்தவளை எழுப்பி உட்கார வைத்து,

 

“லட்டு எழு… பாலை குடிச்சுட்டு தூங்கு…”

 

டமால்ன்னு எழுந்து உட்கார்ந்து விட்டாள்..கண்ணை மட்டும் திறக்கல..

 

கையில் கிளாசை வைத்ததும் ஒரே மடக்…. அப்பவும் தூக்கத்தில் தான்…

 

“பன்னி…தூக்கத்துல கூட ஒரு கிளாஸ் பாலை ஒரே மூச்சுல குடிக்குது… இது எதுக்கு வெட்டி வீராப்பா பட்டினிலாம் கிடக்கு…” சிரித்தபடி இளா….

 

திரும்ப தூங்க ஆரம்பித்தவளின் அருகே அமர்ந்து அவளின் இருபுறமும் கைகளை ஊன்றி அமர்ந்தபடி , வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…

 

‘என் லட்டு செம்ம கியூட் ல….’

‘நீ என்னைக்கு ஓகே சொல்லி நான் என்னைக்கு இன்னொரு கியூட்டி குட்டிக்கு அப்பாவாகுறது… கிருஷ் சொன்னது போல ரொம்ப டயம் வேஸ்ட் பன்றோமோ…’

 

‘சரியான பெருச்சாளி… எந்நேரமும் என் மனசை குடையறதையே வேலையா வச்சிட்டு இருக்கா…’

 

ஒருக்களித்த நிலையிலேயே பார்த்து, இளா என்னென்னவோ கனவுகளில் மிதந்து கொண்டிருக்க,

 

டப்பென்று ஆரா கண் திறந்துவிட்டாள்…

 

“ஆ.” (இது சின்ன ஆ) ஆரா தான், அதிர்ச்சியில்,

 

“நான்தான் லட்டு…பால் எடுத்துட்டு வந்தேன்.” இளா திக்கினான்.

 

“சரி எழுப்பிவிட வேண்டியது தானே… கொடு.” 

 

“என்னது கொடுவா…?”.

 

“எங்க கொடுக்கிறது, மேடம் கண்ணை கூட திறக்காமலேயே குடிச்சு முடிச்சிட்டீங்களே.”

 

“நானா…?”

 

கிளாசை காட்ட…

 

அசடு வழிந்தது ஆரா முகத்தில்…, 

“அது ரொம்ப பசியா அதான்…”

 

“அய்ய துடைச்சுக்கோ…. வழியுதுடி…”

 

உண்மையிலேயே ஆரா உதட்டை துடைத்துகொண்டாள்… 

 

‘கியூட்னஸ் ஓவர் லோடட்…’

‘ஐயோ கொல்றாளே…’

 

“கண்ணை திறந்து பார்த்தா, நான் வேற யாரோன்னு பயந்துட்டென்…நீயின்னதும் தான் மூச்சு வந்தது…”

 

“ஏன் என்னை பார்த்தா பயமா இல்லையா…?”

 

“இல்லையே…” ஆரா மண்டையை டிங் டிங்குங்க,

 

“மத்தவங்களை பார்த்து ஏன் பயப்படுவ…?”

 

“இதென்ன கேள்வி, ஏதாவது என்னை செஞ்சிட்டா…?”

 

“ஏன் நான் செய்ய மாட்டேனா…”

 

ஒரு களுக்… சிரிப்புடன்,” நீ என்ன செய்வ…”

 

“என்ன வேணும்னாலும் ….” 

 

அவளது இரு பக்கமும் கை ஊணிய நிலையிலேயே, உடலோடு உடலுரசி  இன்னும் கொஞ்சம் நெருங்கி… 

“இப்போ கூட பயமா இல்லை …?”

 

 

“இல்லை….”

 

இன்னும் கொஞ்சம் ஆராவின் அருகில் குனிந்து , லப் டப் கேட்கும் தொணியில் இளாவின் லவ் டச்சுடன்…,

 

“இப்போவும் பயமா இல்லையா…?”

 

“ம்…ஹும்….”

 

இன்னும் நெருங்கி….,மூக்கோடு மூக்கு உரசி மூச்சு தொடும்  தூரத்தில் இளா….

 

“இப்போ…?”

 

 

“ம்…ஹ்…” ஆராவின் குரல் மூணாவது ரவுண்டிலேயே பிஸ்தடித்தது…

 

இன்னும்  கொஞ்சமாய் நெருக்கத்தை சுருக்கி , உயிரோடு உயிர் உரச,

“ம்…ம்…?” கேள்வியாய்  உதடுகளால் , உதடுகளில் உச்சு கொட்ட,

 

“இள….” உச்ச்சு இச்சுவாய் மாறி 

 

பிச்சி முத்தமிட்டபடியே , ஆராவின் உதடுகளை  அபேஸ் செய்து விட்டான் இந்த ஆராவமுதன்…

‘உயிரோடு உறிஞ்சவே …, உள்ளுக்குள்,

உன்மத்தம் கொள்ளுதடி…, 

தேனோ …,தெய்வமுதமோ…,  தெவிட்டாத, 

ஏதோ ஒன்று நாவினால் ருசிக்கபட்டு, 

உயிரருக்க, பிறிதொன்றில் உயிர்த்திறக்க,

மரணமும் ஜனனமும் மாறி தோன்றி மறையுதடி…

மாயவித்தை காட்டுதடி….

உதட்டினில் 

உயிரை காய்ச்சும் முதல் முத்தம்மிது…,

இந்த காதலனுக்கு,

பேரின்பம் கொண்டேனடி , பெருந்தன்மையாய்…,

எனை நீ ஆட்கொள்ளடி….’

 

(“முத்தங்கள் மிகவும் இன்றியமையாதவை….” சாராவின் சொந்த கவி கிறுக்கல்கள் தொகுப்பிலிருந்து…)

 

ஆரா உயிர்த்தெழ அவகாசம் தரா காதலை காட்டும் தாகத்தில் இளா…

தாகமோ மோகமோ…. 

ஆரா சிலைக்கு உயிர் வந்தது… 

உதடுகளை பிய்த்து பிடுங்கி கொண்டாள்….

‘ஏய்…! எங்க போற….?’ கேள்வியாய் இளா…

 

முதல் முத்தம் பெறப்பட்ட உணர்வும் ,அது அவள் உடலில் தோற்றுவித்த அதிர்வும் நடுங்க செய்திருந்தது….

ஒரே ஒரு சொட்டு கண்ணீர் நிற்கவா..? கொட்டவா…? கேள்விகளோடு,

“இப்ப நிஜம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு இளா….” அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்…. 

இதை முன்னமே சொல்லியிருந்தா, சேதாரம் இல்லாம தப்பிச்சுருக்கலாம்.

குற்ற உணர்ச்சியில் இளா….

கன்னத்தில் அறைந்திருந்தால் கூட தெரிந்திருக்காது, தன்னிடமே தஞ்சம் புகுந்தது, இன்னும் கிழித்தது…

 

“சாரி டி…. இனிமே எப்பவும் நடக்காது… “

பதிலே இல்லாமல் ,இன்னும் இறுக்கி கொண்டு ஆரா அழ…,

 

“லட்டு பிளீஸ் என்னை பாருடி… ஏதோ உணர்ச்சி வசப்பட்டு தப்பு பண்ணிட்டேன்…உனக்கு என்னை இப்படி எல்லாம் பார்க்க பிடிக்கல தான….? தப்பா இருந்தா ,ரெண்டு அடி கூட அடிச்சுக்க, இப்படி அழாத , “

சொன்னவனின் கண்களில் இருந்தும் கண்ணீர்….

ஆராவிற்கே புரியாத கேள்வியை கேட்டுவிட்டதால் , பதில் சொல்ல முடியாத பயத்தில் இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்…

அப்புறம் நிமிர்ந்து பார்த்தால், திரும்பவும்  பிடிக்கலையா… ன்னு கேட்டால் பதில் என்ன சொல்வது…? 

 

தன்னை சுற்றியிருந்த ஆராவின் கைகளை பிரித்தெடுத்து , அவளின் முகத்தை நிறுத்தியவன்,

“என்னை கொஞ்சம் பாரு லட்டு…,”

விழி விரித்தவளிடம்,

“இனிமே இப்படி நடக்காது… உன்னை ஹர்ட் பண்ணவே மாட்டேன்… உன் பக்கத்தில கூட வர மாட்டேன்… முடிஞ்சா தூரமாய் போயிடறேன்…. சரியா…? எனக்கு நீயும் நானும்  சேர்ந்து வாழறதை விட ,நீ சந்தோஷமா வாழ்றதுதான் முக்கியம் லட்டு.”

 

கடைசியாய் அவள் கைகளை எடுத்து ,காயம் பட்ட இதயத்திற்கு மருந்து போல தன் நெஞ்சோடு அழுத்தி, கண்களை மூடியபடி சில நொடிகள் , பலமாய் சுவாசித்து விட்டு வெளியே போய்விட்டான்….

ஆராவிற்கு, முத்தம் தந்ததுக்கு அழுததை விட அஞ்சு டோஸ் அதிகமாக அழுகை பொங்கியது….

‘நான் என்ன பிடிக்கலைன்னா சொன்னேன்…’

பிடிச்சிருக்குன்னும் நீங்க சொல்லலையே மேடம்….

அழுது அழுது தூங்கியே போனாள்…

புரண்டு புரண்டு படுத்தும் மனசு ஆறாம, கண்ணு மூடலை இளாவுக்கு…

‘அவளை கிட்ட வச்சுயிருந்தால், நம்ம மனசை கட்டுபடுத்த முடியாது இனிமே. அது மட்டும் நிச்சயம்… அவளை தள்ளி வைக்க முடியாது…. தூரமாய் நாம பொய்டுவோம்….

மூடியும் வைக்க முடியல, திறந்தும் விட முடியல…நெஞ்சை நெருப்பாய் எரிக்குதுடா சாமி …. இந்த காதல்….

இதுவரை சுகமாய் மட்டுமே புரிந்திருந்த இந்த காதல், எனக்கு இன்னொரு பேர் இருக்கு… என்று இப்போ  வலியையும் காட்டிக்கொண்டிருந்தது…

இல்லை இனிமே தேங்கி கிடந்தால் செத்துருவோம்… ஓடனும் நிற்காம ஒடனும்…’

யோசித்தபடி லேசாய் கண் மூடியவனை, களைப்பு தூங்க வைத்தது…

 

காலையில எழுந்ததும், ஆராவை நிமிர்ந்து பார்க்கவேயில்லை… காபியோடு காரிடாரில் வந்து கொண்டிருந்த கிருஷிடம்,

“மச்சான்…

ஆசிர்வாத் தோட எல்லா பிரான்ச்செஸ்க்கும் ஒரு விசிட் போடணும்… லாபம் கம்மியா கிடைக்குற பிரான்ச்சுல கொஞ்ச நாள் தங்கி ,பிரச்சனைகளை சரி பண்ணனும்… திருப்பூர்ல ஒரு  யார்ன் புரொடக்ஷன் யூனிட் விலைக்கு வருதுன்னு கேள்வி பட்டேன்… நாம வாங்கலாமான்னு போயி பார்க்கணும்…”

 

“என்னடா திடீர்னு…? எங்கேயோ கிளம்புற மூடை ஃபிக்ஸ் பண்ணிட்டு , எங்க லாம் போகனும்னு இடத்தை ஃபில் பண்ணினது போல பேசுற….”

 

இத்தனை வருஷ நட்பு, கண்ணாடியாய் எதிரில்…

 

இளா அமைதியா இருக்க…,

 

“என்னவோ இருக்குன்னு புரியுதுடா மாப்பிள…. போ …. எங்க போனாலும் ஆராவையும் எங்களையும் விட்டுட்டு உன்னால ரொம்ப நாள் இருக்க முடியாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்…. மனசு சரியானதும் திரும்ப வா. “

 

பதில் பேசாமல் கட்டிகொண்டான் நண்பனை….

 

“நானும் கூட வந்திடுவேன்… ரோஜா இப்படி இருக்கிறப்ப தனியா விட முடியாது… பார்த்துக்கோடா உன்னை…”

 

“தெரியும் டா… ஆரா பார்த்துக்கோ… ரோஸ் கிட்டயும் என் டாலிகிட்டயும் வம்பு பண்ணாத.” இளநகை ஒன்று இளாவிடம்…

 

“ஆரா அப்போ இங்கேயே இருக்கட்டும்… ரோஜாக்கும் ரிலாக்ஸா இருக்கும்.”

 

“சரி டா…”

 

எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு, 

ஆராவிடம் போய்,

 

“லட்டு….”

அவள் கண்களை பார்த்து,

“நேத்து நைட்டு நடந்ததுக்கு சாரி லட்டு… நான் வேலையா வெளியில போறேன்…. அதனால ஒரே ஒரு முறை மட்டும்.,”

 

வேகமாய் இழுத்து அணைத்து கொண்டவன் , சில நொடிகளில் விடுவித்து ,

“தாங்க்ஸ் டா… பத்திரம்…”

 

திரும்ப பார்க்காமல் ரூமை விட்டு வெளியேறி விட்டான்….

 

“அம்மா அவன் ஏதோ பிரச்சனையில்…”, வேதாவிடம் கிருஷ் சொல்ல முற்பட,

 

“அவன் மூஞ்சை பார்த்தாலே தெரியுதுடா நல்லா… எங்க போனாலும் ஆராகிட்ட வந்துதான் ஆகணும்… போகட்டும் விடு…”

சகஜமான மனநிலையில் வேதா…

 

ஆராவால் தான் அவன் செல்வதை தடுக்கவும் முடியாமல் விடைகொடுக்கவும் முடியாமல் ஏதோ ஒன்று உள்ளுக்குள் சுழன்றடித்தது….

 

அடுத்த நாளின், விடிந்தும் விடியாததுமாய் இருந்தது அந்தக் காலைப் பொழுது…

தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தாள் ரோஜா…

 

“ஏய் … ஜா… என்னடி பண்ணுது…? ஏன் இப்படி உருளுற…? அம்மாவைக் கூப்பிடட்டா…?”

 

“மனசுக்கு என்னவோ…”

 

“எதுவும் பயம்மா இருக்காடி..?”

 

“இல்லை கிருஷ்… எங்கம்மாப்பா இருந்திருந்தா, இந்நேரம் வளைகாப்பு முடிஞ்சு ஊர்ல எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க தான…? எல்லாரும் வந்தாங்க, சாப்பிட்டுட்டு போயிட்டாங்க…அவ்வளவு தான் இல்லை…?”

 

“என்ன ஆச்சுடி உனக்கு…இங்க என்ன குறை…? எங்கம்மாக்கு நீன்னாதான் உசிரு…நீயே இப்படி ஃபீல் பண்ற…?”

 

“ஏன்டா இப்படி மீ கூட என்னை கோர்த்து விடற…? எனக்கும் மீ மட்டும் தான் உலகம்… இந்த உலகத்திலேயே உனக்கு அப்புறம் அவங்கதான் எனக்கு எல்லாம்… இன்ஃபேக்ட் சில டைம் உன்கிட்ட  ஷேர் பண்ண முடியாத விஷயங்களை கூட அவங்க கிட்ட ஷேர் பண்ண முடியும்… ஆனா இது வேறடா…”

“இப்படி நான் ஒரு குழந்தைய சுமக்குற நேரத்துல, நான் கருவாகி பிறந்து வளர்ந்த என் வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன்…என் அம்மாவை இல்ல… இப்ப புரிஞ்சுதா…?”

 

மூக்கை பிடித்து ஆட்டியவள் கிருஷின் நெஞ்சிலேயே உறக்கம் கொள்ள, புரிந்தும் புரியாமலும் கிருஷ் முழித்து கொண்டிருந்தான்…

 

அவளை கட்டிலில்  படுக்க வைத்து விட்டு,  கீழே வந்தவன், நேராக சென்றது கிட்செனை உருட்டி கொண்டிருந்த வேதாவிடம் தான்…

 

“ஆளே இல்லாத ஊருல யாருக்கும்மா டீ ஆத்துற…?”

 

“ம்…….நான் பெத்து போட்ட எரும கிடாவும், வளர்த்து விட்ட எருமை கன்னுகுட்டியும்  காலையில எழுந்ததுமே , கழநித் தண்ணி முகத்துலதான் முழிக்குங்க… அப்ப காலா காலத்தில கழநித் தண்ணியை காய்ச்சி வச்சாத்தானே ரெண்டு எருமைங்களையும்  மேய்க்க முடியும் அதான்….”

 

“எப்படியோ நீ போடுற டீ கழநித் தண்ணின்னு ஒத்துகிட்டியே….”

“இது போதும் எனக்கு இது போதுமே…

வேறென்ன வேண்டும் ,  கழுவிய தண்ணி போதுமே…” பாடிக்கொண்டே நகர,

 

 

“காலையிலேயே வம்பு வளர்த்துகிட்டு… போட்டென்னா பாரு…”

“ரோ எங்கடா…? இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே…? உடம்பு சரியில்லையா…? எதுவும் பிரச்சனையா இருந்தா என்ன கூப்பிட வேண்டியது தானே… தண்டத்துக்கு பிறந்திருக்கு பாரு…முதல்ல மேயரது முக்கியம் உனக்கு”

 

மாடிக்கு செல்ல எத்தனித்தவரை நிறுத்தி….,

“தாய்க்கிழவி நில்லு… இன்னும் உனக்கு பதினாறு வயசு பருவ மங்கைன்னு நினைப்பா …. பாய்ஞ்சுகிட்டு படியேர்ற…? சொல்றதை கேளு ஃபர்ஸ்ட்….”

“அவள நாம இவ்வளவு கவனிச்சும் ,சொந்த ஊர சொந்த வீட்டை ரொம்ப மிஸ் பன்றாளாம்…அவ பெத்தவங்க இருந்திருந்தா கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு ரொம்ப ஃபீலிங்….தூக்கம் வராமல் புரண்டு இப்போ தான் தூங்குறா… இதுக்கு மேல எப்படித்தான் பார்த்துக்கிறது இந்த கிறுக்கிய…”

 

“வாய் மேலயே போடுவேன் , கிறுக்கின்னு சொல்லிட்டு இருந்தால்…., இதுலாம் புள்ளத்தாச்சியா இருந்திருந்தால் தான்டா தெரியும்… நீ வயித்துல இருக்கும் போது எங்க ஊரு மணியண்ணன் கடை இனிப்பு போண்டா வேணும்னு ஆசைப்பட்டென்னு , என் கோந்து கார் வச்சு கூட்டிட்டு போய் வாங்கி கொடுத்தாரு…”

“ புள்ளைக்கு அப்பனா பாசம் காட்டுற யார் வேணும்னாலும் இருந்திடலாம்டா ஆனா கடைசி வரை நல்ல துணையா இருக்க, கொஞ்சமாச்சும் அவள் இருக்கிற இடத்தில இருந்து யோசிக்க தெரிஞ்சிருக்கணும்… இது ரெண்டு பேருக்கும் பொருந்தும்… நாம குடுத்த வாழ்க்கையில தான் வனப்பா வாழுறாங்கிற இறுமாப்பு தெரியுது உன் பேச்சுல….இது நல்ல வளர்ப்புக்கு அழகு இல்லை…அவ உன்னை கட்டிக்கிடலன்னா நீ காலம் முழுக்க மொட்டை பையன் டா…   ஒரு நாயி உன்னை மதிச்சிருக்காது… இப்ப குடும்பஸ்தனா   யோக்கியனா நடந்துக்க, இன்னும் நான் என்னுதுதான் பெருசுன்னு நினைப்போட திரிஞ்ச , ரோ கிட்ட, உன்னை டைவேர்ஸ் பண்ண சொல்லிடுவேன் பார்த்துக்க….”

 

“ஆனா ஒன்னு , அவ கிறுக்கி தான்டா…. இவ்வளவு நாளா என்னடி ஆசைன்னு  வளைச்சு வளைச்சு கேட்டுட்டு இருந்தேன்… அப்படியெல்லாம் கேட்ட என்கிட்ட சொல்லாம கேணகிறுக்குப்பய உன்கிட்ட சொன்னா பார்த்தியா…? என்ன செய்யலாம் அவளை…?”

 

“இந்தா பாரு தாய்க்கிழவி , சரி தப்பு பண்ணிட்டேன் நான் ஒத்துக்கிறேன்… அதுக்குன்னு கேணை கோனைன்னு  கழுவி ஊத்தாம ,என்ன செய்யறதுன்னு சொல்லு… உன் ஆளு அவர் ரேஞ்சுக்கு காரு வச்சு அழைச்சுட்டு போனாரு…, என் ரேஞ்சுக்கு கப்பல் வச்சு அழைச்சுட்டு போலாம்னா , இவ ஏரியால கடல் இல்லை… பேசாம குழி தோண்டி கால்வாய் அமைச்சுரவா…?”

 

“ஆமாம் பெருசா காவாய் நோண்ட வந்துட்டான்….,ஒரு வாய்க்கால் கூட நொண்ட முடியாது ,வாயைப் பாரேன்…”

“நான் முடிவு பண்ணிட்டேன்… ரோ வை தஞ்சாவூர் கூட்டிட்டு போயி , பிரசவம் முடியற வரை அங்கேயே வச்சிருந்து, பேரப்புள்ள கூட தான் இந்த வேதா ரிட்டர்ன்ஸ்…” ,

 

“ஆமா உன்னை அங்க ஆரத்தி எடுத்து வரவேற்க வரிசை கட்டி நிக்குறாங்க அவ மாமா, பெரியம்மா எல்லாம்… நடக்குற காரியத்த பேசும்மா…”

 

“ரோ ஆசைப்பட்டது ,அவ பெத்தவங்களோட வாழ்ந்த இடம் தான்… பூட்டி கிடக்கிற அவ அப்பா அம்மா இருந்த வீட்டை சரி பண்ணி, டாய்லெட் பாத்ரூம் கட்டணும்…இவளுக்கு தோதுவா இருக்கிற மாதிரி பண்ணனும்…குறிப்பா இவளுக்கு நல்ல ஹாஸ்பிட்டாலா பார்க்கணும்… நான், ரோ,லட்டு மூணுப் பேரும் தஞ்சாவூருக்கு போறோம்… நீ இங்கேயே இருந்து மேய்க்க வேண்டிய கழுதைகளை மேய்ச்சிட்டு இரு…”

 

“வாங்களேன்…. அஸ்க்கு… புஸ்க்கு… நீங்க எல்லாரும் கிளம்பி அங்க போயிட்டா ,நான் மேய்க்க கழுதைக்கு எங்க போவேன்… மரியாதையா என்னையும் கூட்டிட்டு போங்க…”

 

“இளாவும் ஊர்ல இல்லை, ஆசிர்வாத், வேதாஸ்ன்னு ரெண்டையும் கவனிக்கணும் அதோட சாருக்கு பொண்டாட்டி ஆசைப்பட்டதை நிறைவேத்துற அளவுக்கு டைமும் மனசும் இருக்குதோ என்னவோ… அங்க வந்து உக்கார்ந்துகிட்டு இவளால ஏழு கோடி நஷ்டம்,எட்டு எடத்துல குஷ்டமுன்னு சவுண்ட் உட்டு சீனைப் போடுவ… நீ ஆணியே புடுங்க வேணாம் சாமி…”

 

“என்னப் பேச்சு இது…? ஒரு பெரிய மனுஷன் செஞ்ச தப்பை ஒத்துகிட்டு சரெண்டர் ஆனா,அதை மதிக்காம,அவனை சல்லிப்பய மாதிரி வச்சு பேசறது… நீயும் அந்த சோத்து மூட்டையும் இங்கேயே இருங்க…நானும் என் டார்லிங்கும் என் மாமியார் ஊட்டுக்கு போறோம்… எனக்கு புள்ளை பொறந்ததும் உன் கிட்ட இருந்தா, அந்த பிஞ்சு மனசுலயும் நஞ்சை கலந்து உன் டீம்ல சேர்த்துப்ப, போ… நாங்க போறோம் ஊருக்கு…”

 

“சரி எல்லாரும் போலாம்… வேணும்னா திருச்சி யில இருந்து, ஃப்ளைட் புடிச்சு வந்து சென்னையில எல்லாத்தையும் பார்த்துக்க… லட்டுவையும் திருச்சி ஆராஸ் க்கு டெய்லி கார்லயே அனுப்பிடலாம்… தஞ்சாவூரில் இருந்து ஒரு மணி நேரம் தான் ஆவும் அங்க போக… அதுவும் சும்மா , வீட்டுலயே பொத்தி வச்சா பொறுப்பு இல்லாம போயிடும்…”

 

“அப்போ ஆக வேண்டிய ஏற்பாட்டை கவனிக்கிறேன்… சர்ப்பிரைசா செய்வொம்மா… குறிப்பா ரோஜா அடிச்சு கேட்டாலும் நான் தான் இவ்வளவும் பிளான் பண்ணி அவளுக்காக பண்ணினேன்னு சொல்லணும் நீ…  இதை மட்டும் செஞ்சு, எனக்கு அம்மாவாக தாங்கள் பிறந்ததுக்கு இந்த  ஒரு முறை மட்டுமாவது சந்தோஷப்படும் வாய்ப்பை தாருங்கள்…”

 

அதற்கு மேலே அங்கே நிற்காமல், கையில் காபியை எடுத்துகொண்டு ஜூட் விட்டு விட்டான். வேதாவிற்கு முகம் முழுக்க புன்னகை அப்பியிருந்தது…

 

ரோஜாவின் சொந்த ஊரில் வீடு புதுப்பிக்கும் வேலை ஜரூராக  நடந்தது… ஆனால் இளாவின் தலைமையில்…

ஒரு வார நாடோடி வாழ்க்கைக்கு பிறகு , கொஞ்சமா மனசு அமைதியாக, தேடி தேடி வேலை செஞ்சிட்டு இருந்த இளாகிட்ட ,கிருஷ் ரோஜாவின் ஆசையை சொன்னதும் நானே ரோஸ்க்காக இதை பன்றேண்டான்னு சொல்லி வேலையில் இறங்கிட்டான், வீட்டை பலப்படுத்தி புதுபிச்சதோட இல்லாம, ரோஜா குழந்தையா இருந்தபோது அந்த வீட்டில என்னென்ன இருந்ததோ , அதையெல்லாம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, தூரத்து சொந்தக்காரங்ககிட்ட கேட்டு, கிட்டத்தட்ட கட்டில்,சேர்,ஊஞ்சல்ன்னு நிரப்பிட்டான்…

 

குறிப்பா அவன் ஆளு ரூம்லயும்  , ஆராவுக்கு தேவையான டூல்ஸ், டிஸைனர் டேபிள், பின் போர்டு, மெஷின், டிசைன் பண்ணின டிரெஸ்ஸை போட்டுப் பார்க்க டம்மி மாடல்ன்னு ,அங்கங்க லவ் டச் பண்ணவும் மறக்கல… அதாவது காதலால் மனசை தொடுறராமா…

என்னத்த தொட்றப்பா நீ…ஒரு ஃபீலிங் சையும் காணோமே அந்தம்மா கிட்ட,

அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா, ஆராகிட்ட  ஒரு மாற்றம்…, அடுத்தவன் கொட்டாவி உட்டா ஏன் எதுக்குன்னு தெரியாமலேயே தானா வாயைப்  பொளக்கிறது போல, அடுத்தவன் புளியங்காய் தின்னா ஏன் எதுக்குன்னு தெரியாமலேயே  நமக்கு நாக்கு கூசுறாப் போல, ஏதோ ஒரு தடுமாற்றம்… எதுக்குன்னு சுத்தமா ஆராக்கு புரியல…

 

ஒரு நல்ல நாளில் சர்பிரைசாக சொந்த வீட்டிற்க்கு அழைத்து வரப்பட்ட ரோஜா,ஆனந்தத்தில் அழுது தீர்த்து விட்டாள்…கிருஷ்சிர்க்கும் வேதாவுக்குமே மிகவும் சந்தோஷம்… வீட்டில் ரோஜாவுக்காக பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்த இன்டீரியர்,வேதாவின் அறை என்று  எல்லாம் ஆச்சர்யம்…

 

ஆராவோட ரூமுக்கு போயி பார்த்த கிருஷ் அசந்துவிட்டான்…அவ ரூமில மட்டும் மாடர்ன் இன்டீரியர்… அதுவும் அவளுக்கு டிசைனிங்கிற்கு தேவையானபடி அமைக்கப் பட்டிருந்ததை பார்த்து,

 

உடனே இளாவுக்கு ஃபோனை போட்டு, 

“டேய் , டுபாக்கூர்…. உண்மைய சொல்லுடா…? ஏன் ஆளுக்காக வீட்டை ரெடி பண்ணியா இல்ல உன் ஆளுக்காக மெனக்கெட்டு பண்ணியா…?”

………..

 

“என்னது என்னா பிரச்சனையா…? கொய்யால, என் ஆளு ரூமை விட உன் ஆளு ரூமுக்கு ரெண்டு டோஸ் மேக் அப் கூட இருக்கு… என் மாமியார் ஊட்டை என் பொண்டாட்டிக்காக ரெடி பண்ண கொடுத்தா ,அதுல நீங்க உங்க போண்டா டீ க்கு தாஜ்மஹால் கட்டப் பார்த்திருக்கீங்க மிஸ்டர் இளமாறன்….”

…….

 

“ஆனா அந்தம்மா கிழிக்கிற கிழிக்கு வீட்டுல ட்ரெஸ் டிசைனர் செட் அப் வச்சதுக்கு பதிலா டிசைன் டிசைனா நாலு தட்டு வாங்கி கொடுத்திருக்கலாம்….அவ பார்க்கிற வேலைக்கு பொருத்தமா இருந்திருக்கும்….ஹி…ஹி…ஹி…”

 

…. ஃபோன் கட்டாகிவிட… 

 

“அதானே ,நம்ம ஹியூமர் சென்ஸ் டெவலப் ஆனா இந்த வீட்டுல யாருக்கும் பிடிக்காதே….”

சொல்லிக்கொண்டே போய் விட…. பின்னால் நின்று கொண்டிருந்த ஆராவிற்க்கு இனம் புரியாத வெட்கம்… மலர்ந்த புன்னகையை நிரப்பியிருந்தது அவள் முகம் …

 

ஃபோனில் கூட,  இளா , ஆராவிடம் அதிகம் பேசாததால்,

இளாவுக்காக இளவுக்காத்த கிளி வாட்ஸ் ஆப்பிலேயே வெயிட்டிங் , ஸ்லீப்பிங் எல்லாம்… ஆனா சாரோட மொபைல், பிரைவசி மோடில, ஏன்னா சாருக்கு எதிலும் சுத்தமா மூடில்ல… அவன் பாட்டுக்கு உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் ஓடிக் கொண்டிருக்க…

 

உண்மையில் இளாவின் அருகாமைக்கு ஏங்க ஆரம்பித்திருந்தாள் ஆரா… பழைய நினைவுகளை மனதுக்குள் ஓட்டியபடியே …

 

 

 

சாஷா…