கிட்காட்-13

கிட்காட்-13
கிட்காட்-13
“ஐ லவ் யூ தாரா” என்ற வார்த்தையில் திரும்பிய சித்தாராவின் விழிகளில் அத்தனை ஒரு கோபம். அவளது கோபத்தைக் கண்ட சித்தார்த் அவளது கையை இன்னும் இறுக்கமாகப் பற்றினான்.
எழுந்தவன், “எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்?” என்று அவன் அவளது கையைப் பிடித்தபடியே தன்மையுடன் அவளருகில் செல்ல, அவளோ பின் நகர்ந்தாள்.
“கையை விடு சித்தார்த்” என்றாள்.
“சரி விட்டுட்டேன்” என்று அவளது கைகளை விடுவித்தவன், “இப்ப சொல்லு என்ன கோபம்” என்று வினவினான்.
“ஆமா கோபம்தான். ஆனா, என்மேல” என்றவள் தன் இதழை உள்ளங்கையால்
தேய்த்தாள்.
“நான் கிஸ் பண்ணது உனக்கு பிரச்சினை. அப்படித் தானே?” சித்தார்த் கோபமான குரலில் வினவ, அவளோ அமைதியாய் நின்றாள்.
“அப்ப கிஸ் பண்ணும் போதே தள்ளி விட்டிருக்க வேண்டியது தானே” என்றவன்,
“தள்ளி விட்டிருந்தா இந்நேரம் உன் லிப்ஸை இப்படி தொடச்சிருக்க வேண்டிய
அவசியமில்ல” என்றான் இறுகிய குரலில்.
அவள் இதற்கு என்ன பதில் சொல்வாள். அவள் கண்மூடி ரசித்துப் பாடிக் கொண்டிருந்த வேளையில் அவன் அருகில் வந்ததைக் கூட கவனிக்கவில்லையே. ஆனால், முதலில் மறுத்தவள் பின் ஏன் அவனிடம் மூழ்கினாள் என்பது அவளிற்கே
புரியவில்லை. அதுவும் அவன் கேட்ட கேள்வி தவறை அவள் மேல் திசை திருப்புவது போல இருந்தது.
“அப்ப நான் தடுத்திருந்தா நீ கிஸ் பண்ணியிருக்க மாட்ட? அப்படித்தானே?” என்று அவள் நேராக அவனைப் பார்த்து வினவ,
“அப்படின்னு சொல்லமுடியாது” என்று உதட்டை மடித்து அவன் சிரிக்க, “ச்சை
சரியான டார்ச்சர்” என்று அவள் நகர அவளது முழங்கையைப் பிடித்து இழுத்தவன்,
“அப்ப நான் கிஸ் பண்ணது மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுதா. நான் சொன்ன, ‘ஐ லவ் யூ’ உனக்கு மண்டைல ஏறலையா தாரா” என்றான் அவளை தன்
அருகில் இழுத்தபடி.
“உன் லவ்வை எல்லாம் எப்படி நம்ப சொல்ற” என்று முறைத்தாள்.
“ஏன் என் லவ்வை நம்பறக்கு என்ன?” சித்தார்த் கேட்க,
“பர்ஸ்ட் என் அக்காவை லவ் பண்ணிட்டு உடனே என் பக்கம் வர்ற… இப்ப என் மேல வந்த லவ் போயிட்டா?” என்று அவள் வினவ,
“இங்கபாரு அதையவே பேசிட்டு இருக்காதே. சின்மயை நான் லவ் பண்றேன்னு சுத்துனவன்தான். ஆனா, இப்ப அவ என் அண்ணன் வைஃப். அதாவது சின்மயி என் அண்ணி தாரா. நான் லவ் பண்ணது சின்மயிக்கு கூட தெரியாது. கிஷோருக்கும் தெரியாது. தேவையில்லாம அதை மறுபடியும் பேசாதே” என்று எச்சரித்தான்.
பொறுமையாக பேசியபோதும் அவனது குரல் எச்சரித்ததை உணர்ந்தாள் அவள்.
ஆனால், அதற்கெல்லாம் அடங்குபவளா அவள்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. என் மேல இவ்வளவு சீக்கிரம் வந்த லவ்
போயிடுச்சுன்னா?” என்று கேட்க,
“இதுக்கு பத்திரமா எழுதி தர முடியும் சொல்லு. எனக்கு இந்த சினிமா, நாவல்ல
வர மாதிரி டயலாக் எல்லாம் அடிக்கத் தெரியாது. நான் உன்னை லவ் பண்றேன்.
அதான் உண்மை. என்ன ஆனாலும் நீயும் நானும் தான் கல்யாணத்துக்கு அப்புறம்”
என்றான் தெளிவாக.
“ஓஹோ. கல்யாணம் நிச்சியம் ஆன தைரியத்துல தான் இப்படி பண்ணியா” என்று கேட்டவளின் பேச்சில் உள்ளே நுழைந்தவன், “ஃபார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன். நீயும் தான் என்னை கிஸ் பண்ணே” என்று அவன் புன்னகையை
கட்டுப்படுத்தியபடி பேச,
“சரி. ஆனா, நானா எதுவும் ஆரம்பிக்கல அதை முதல்ல தெரிஞ்சுக்க” என்றவள்,
“கல்யாணம் நிச்சியம் ஆகிட்டா நான் அந்தக் காலத்து பொண்ணுங்க மாதிரி,
உடனே உன் பக்கம் சாஞ்சு உன்கூட டூயட் பாடுவேன்னு நினைக்காதா” என்று
அவள் விரலை நீட்டிப் பேச,
“உடனே வேணாம். போகப் போக” என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கும்
நோக்கத்தோடு சித்தார்த் பேச,
“ச்சை சரியான காஜ்ஜூ கிட்ட சிக்கிட்டேன்” என்று முணுமுணுத்தாள் அவளோ. அது கேட்டாலும் கேட்காதது போல இருந்தவன், “நம்ம ஹனிமூனுக்கு எங்க போலாம்” என்று வினவ,
“ஆங். காசிக்கு போலாம்” என்று அவள் கடுப்பில் பொரிய,
“நீ இப்படியே ‘உர்’னு இருந்தா நான் காசிக்கு தான் போகணும் போல” சித்தார்த் சொல்ல சித்தாராவிற்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“ஐ ஹேட் யூ” என்றாள் அவனை முறைத்தபடி.
“தேங்க்யூ” என்று ஆங்கிலேயர் பாணியில் அதை குனிந்து ஏற்றான். நிலவு மகளோ, “ச்ச சப்புன்னு முடிஞ்சிருச்சே” என்று இவர்களது ஊடல் விரைவில்
முடிந்ததிற்கு ஆதங்கப்பட்டாள்.
“சரி இரு வரேன்” சித்தார்த் நகர, “தனியா விட்டுட்டு எங்கடா போறே” என்று
வினவினாள்.
தனது சுண்டு விரலை தூக்கிக் காண்பித்தவன், “இதுக்கு தாண்டி போறேன்” என்று நகர்ந்தான். அவன் நகர இவளிற்கோ தாகம் எடுத்தது. அவனது பேக்கை அவள் ஆராய பெப்சி பாட்டில் சிக்கியது.
வேலையை முடித்துக்கொண்டு விசில் அடித்துக்கொண்டே வந்த சித்தார்த்
சித்தாரா இல்லாமல் இருக்க டென்ட்டிற்குள் பார்த்தான். அங்கும் அவள் இல்லை. “தாரா” என்று அவன் குரல் கொடுக்க அவளின் சுவடே அவனிற்கு அங்கு தெரியவில்லை. சுற்றும் முற்றும் தேடியவன் தனது பேக்கில் இருந்த டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தான் சுற்றி இருக்கும் இடத்தில்.
அவள் காணவில்லை என்ற பதட்டமும் தன் மேலே கோபமும் ஒன்றுசேர,
“சித்தாராரா” என்று சித்தார்த் வானை நோக்கிக் கத்த அவனது குரல் எதிரொலித்தது. ஏதோ நெஞ்சை அடைப்பது போல உணர்ந்தான்.
அவன் தனது ஜாக்கெட்டை மாற்றிக்கொண்டு காட்டிற்குள் கிளம்ப, “பயந்துட்டியா சித்தார்த்” என்று மரத்தின் உள்ளே இருந்து வெளியே வந்தாள் சித்தார்த். மரத்தின் கீழ் இருந்த பிளவில் மறைந்திருந்தாள் அவன் என்னதான் செய்கிறான் என்று பார்த்தபடி. அவளின் குரலில் திரும்பியவன் அவள் அந்த பெரிய மரத்தின் பின் இருந்து வருவதைக் கண்டான்.
கோபம் தலைக்கேற, “அறிவிருக்காடி” என்று திட்ட, “இது கூட நீ காலைல சொன்ன மாதிரி அட்வென்ச்சர் தான். எப்படி மாஸா” என்று கேட்டவள் பெப்சி பாட்டிலை வாய்க்குள் முழுதாக கவிழ்க்க,
“ஏய் தாரா” என்று அவளருகில் மின்னலென சென்றவன் அதைப் பிடுங்குவதற்குள் அவள் அதில் இருந்த அரை பாட்டிலையும் முழுதாக முடித்திருந்தாள்.
“என்னடா இது பழசு போல. பூச்சி மருந்து மாதிரி இருக்கு” என்றவளிடம், “பழசு
இல்லடி. நேத்து வாங்குனா ஓல்ட் மான்க் ரம் வித் பெப்சி மிக்ஸ்ட்” என்று சித்தார்த்
சிரிப்பை அடக்க முடியாமல் சொல்ல,
“என்னது?” என்று தொண்டையைப் பிடித்துக்கொண்டவள், “அதுதான் தொண்டைலாம் எரியற மாதிரி இருந்துச்சா” என்று வினவினாள்.
திடீரென்று ஞாபகம் வந்தவளாக, “டேய் உனக்கு குடிக்கிற பழக்கமெல்லாம்
இருக்கா?” என்று வினவ, “ஏன்டி அரை பாட்டில முழுசா காலி பண்ணிட்டு என்னைக் கேக்கறியா. இதுல மட்டும் நீங்க எல்லாம் தெளிவா இருங்கடி” என்றவன்,
“எனக்கெல்லாம் இந்தப் பழக்கம் இல்லை. இது அந்த ரமணா நேத்து யாருக்கும்
தெரியாம எடுத்திட்டு வந்தது. நேத்து அவன் பாதி குடிச்சான். இப்ப நீ பாதி. நல்ல அண்ணன் நல்ல தங்கச்சி. வாவ்” என்றவன் வாய்விட்டு சிரிக்க,
“சித்தார்த் என்னமோ பண்ணுதுடா” என்றவள் கண்களை மூடிமூடி முழித்தாள்.
அவள் தள்ளாடத் தொடங்கும் முன் அவளைத் தன் கையில் சித்தார்த் ஏந்த,
“என்னடா பண்ற?” என்று வினவினாள் அரை போதையில்.
“உன்னை என்ன பண்ணனும்னு சொல்லு” என்று இருஅர்த்தத்தில் சித்தார்த் கேட்க,
“டபுள் மீனிங்ல பேசுன செருப்பால அடிப்பேன்டா” என்று முணுமுணுத்தவள் அவன் நெஞ்சில் முடியாமல் சாய, “நல்லா இந்த வாய் மட்டும் கிழியற மாதிரி பேசு” என்றவன் டென்ட்டுக்குள் அவளை அலுங்காமல் படுக்க வைக்க அவளோ
பூனைக் குட்டியாய் சுருண்டாள்.
அவளிற்கு போர்த்திவிட்டவன் அவளது நெற்றியில் இதழ் பதிக்க, “ஏய்” என்று
முனகினாள் அவள். தூங்கும்போது கூட அவளிடமிருந்து எச்சரிக்கை உணர்வாக
வந்த இச்செய்கையைக் கண்டு சிரித்தவன், “இம்சைடி நீ” என்று அவளது
கீழ்உதட்டை தன் விரலால் பிடித்துக் கொஞ்சி தானும் நித்திரையில் ஆழ்ந்தான்.
அடுத்தநாள் காலை எழுந்த சித்தாரா, சித்தார்த் இன்னும் உறங்குவதைக் கண்டு
“எந்திரிடா” என்று உதைத்தாள். அவள் உதைத்தில் தூக்கம் கலைந்து எழுந்தவன்,
“உனக்கு என்னடி பிரச்சினை? நல்லா சரக்கு அடிச்சு தூங்கிட்டு வந்துட்டு என்னை உதைக்கறா” என்று மீண்டும் அவன் உறங்கச் செல்ல அவனது சட்டையைப் பிடித்தவள், “கிளம்பலாம். சீக்கிரம் போலாம் போலாம்” என்று கத்த ஆரம்பிக்க,
“சரிடி சரிடி. போலாம்” என்றவன் எழ இருவரும் கிளம்பத் தயாராகினர். “சித்தாரா சாப்பிட எதுவும் இல்லை. போற வழியில தண்ணி மட்டும் தான் சரியா” அவன் சொல்ல, “ம்ம். சரி” என்றாள்.
இருவரும் காலை எட்டு மணிக்கே கிளம்ப, மாலை ஐந்து மணிக்கு வெளியே வந்து
சேர்ந்தனர். “சித்தார்த் முடியலடா. என்னால இதுக்கு மேல ஒரு இன்ச் கூட நகரமுடியாது. கிஷோர் மாமாக்கு ஃபோன் பண்ணி காரை எடுத்திட்டு வர
சொல்லுடா” என்றவள் அங்கிருந்த ஒரு மைல் கல்லில் உட்கார்ந்துவிட்டாள்.
தனது ஃபோனை எடுத்துச் சித்தார்த் பார்க்க… சிக்னல் ஓரளவு காட்டில் இருந்து
வெளியே வந்தவுடன் கிடைத்திருந்தது. கிஷோருக்கு ஃபோன் செய்தவன்,
“கிஷோர், இந்தம்மா இதுக்கு மேல நடக்க மாட்டாங்களாம். நீ கொஞ்சம் வாயேன்”
என்று இருக்கும் இடத்தைச் சொன்னவன் அவள் அருகில் வந்து நின்றுகொண்டான்.
சிறிது நேரம் நின்றவன் வேண்டுவென்றே உட்கார்ந்திருந்தவள் தலையில் கைவைத்து நிற்க, “கையை எடுடா” என்றவள், “டோன்ட் டச் மீ” என்றாள். சித்தார்த் நடந்ததை நினைத்து சிரிக்க, அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்தவளோ முகத்தை வேறுபக்கம் திருப்பி சிரிப்பை அடக்கினாள்.
கிஷோர் வந்துவிட, “நான் தான் முன்னாடி நான் தான் முன்னாடி” என்று முன்னிருக்கையில் சித்தாரா ஏற சித்தார்த்தை தள்ள, “எப்பா சாமி. ஏறுடி
மாரியாத்தா” என்றவன் பின்னால் ஏறிக்கொள்ள கிஷோர் காரை எடுத்தான்.
“சித்தார்த், உன் பிரண்ட்ஸ் எல்லாம் எங்க வீட்டுல தான்டா இருக்காங்க. அவங்க
மட்டும் போனா தேவை இல்லாம கேள்வி வரும்னு, அங்க நம்ம வீட்டுலையே இருக்க வச்சிட்டேன்” என்றான்.
“வீட்டுல எதும் ஃபோன் வரலையா?” என்று சித்தார்த் கேட்க, “நம்ம ட்ரைவரை
சின்மயி அப்பாக்கிட்ட போய் அவங்க எல்லாருமே இன்னொரு நாள் இருந்துட்டு
தான் வருவாங்கனு சொல்ல சொல்லிட்டேன்” என்று கிஷோர் சொல்ல,
“அப்பா ட்ரைவர் கிட்ட நீங்க எப்படி கான்டாக்ட் பண்ணீங்கனு கேக்கலையா
மாமா” என்று வினவ,
“உன் அப்பனுக்கு ஏதுடி அவ்வளவு அறிவு” என்றான் சித்தார்த் பின் சீட்டில்
ஜம்மென்று அமர்ந்தபடி. அவனைத் திரும்பி பார்த்து பார்வையால் எரித்தவள்,
“நீ இன்னொரு தடவை பேசிப்பாரு. அப்புறம் இருக்குடா உனக்கு” சித்தாரா
சொல்ல நக்கலாகச் சிரித்தவன் கிஷோரிடம் எஸ்டேட் விஷயங்கள் சிலதை பேச ஆரம்பித்தான்.
கிஷோரின் வீடு வந்து இரவு உணவை முடித்துக்கொண்டவர்கள் அனைவரும்
கிளம்பினர். சித்தாராவை வீடு வரை சென்று விட்ட சித்தார்த், “உள்ள வான்னு
கூப்பிட மாட்டியாடி”, “அட்லீஸ்ட் மிஸ் யூ கூட இல்லியா” என்று சித்தார்த் கேட்க,
“சித்தார்த் சீக்கிரம் வா” என்று அந்தப் பக்கம் காம்பவுண்டில் இருந்து வர்ஷினி
குரல்கொடுக்க, “வரேன் வரேன்” என்றவன் சித்தாராவிடம் திரும்ப,
“ஐ ஹேட் யூ” என்று படாரென்று கதவை அடைத்தாள். ‘நல்லாதானே வந்தாள்…
திடீர்னு திடீர்னு அந்நியன் மாதிரி பண்றாலே’ என்று யோசித்தபடி வந்தவன்
எதிரே, வெளியே போயிருந்த கேசவனும் தேவியும் வந்தனர்.
“வாங்க மாப்பிள்ளை” என்றழைத்த இருவரிடமும் நின்றவன், “ஸாரி கொஞ்சம் ஒரு நாள் லேட் ஆகிடுச்சு. ஈவ்னிங்கே வந்துட்டோம். கிஷோர் வீட்டுல டின்னர் முடிச்சிட்டு வந்தோம்”, “சித்தாராவை வீடு வரைக்கும் விட வந்தேன்” என்றவன் அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவன் நேரே தாத்தா பாட்டியிடம் செல்ல அவர்களோ ஆளுக்கொரு திசையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன் ரமணாவிடம் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, அவனோ தோளைக் குலுக்கினான், ‘தெரியாது’ என்பது போல.
“என்ன ஆச்சு ப்யூட்டி” என்று சித்தார்த் வினவ, அவரோ அழ ஆரம்பித்தார்.
“ஹே! ப்யூட்டி ஏன் அழறீங்க?” என்று பதட்டமாக அவன் கேட்க, “அவரைக் கேளு”
என்றார்.
அவன் தாத்தாவிடம் திரும்ப, “நான் எதுமே பண்ணலைப்பா” என்று அவர் சொல்ல
சொர்ணாம்பாளோ வெகுண்டு எழுந்தார். ரமணாவைத் தவிர மற்ற எல்லோரும்
வெளியே விளையாடிக்கொண்டு இருக்க பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது
உள்ளே.
“என்ன எதுவும் பண்ணலையா?” என்று கணவனிடம் சீறியவர், “உங்க தாத்தன்
நேத்து ஒருத்திக்கு கை காட்டி ஏதோ சைகை செஞ்சிட்டு இருக்கார்” என்று
சொல்லி சித்தார்த்தின் மேல் சாய்ந்து அவர் அழ,
“கமலாவா?” என்று சித்தார்த் வினவ தாத்தா தலை ஆட்டினார். “அது யாரு?” என்று பாட்டி பேரனிடம் கண்ணீருடன் கேட்க,
“பாட்டி. அது தாத்தாவோட பழைய க்ரஷ்” என்றான். “பழைய பிரஷு மாதிரி
தலையை வச்சிட்டு இந்த ஆளுக்கு க்ரஷு வேற” என்று பொரிந்தார்.
“இல்ல பாட்டி. அவங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க. அவங்களுக்கு குழந்தையும் இல்ல. அதுதான் தாத்தா நம்ம எஸ்டேட்ல கணக்கு வேலை குடுத்து உதவி செய்றாரு. இது எனக்கு முன்னாடியே தெரியும். நான் சும்மா இவரை ஓட்டுவேன் அப்பப்போ. இதுதான் பாட்டி முழுக்கதை” என்று அவன் சொல்ல அவரோ, “என்கிட்ட ஏன் மறைச்சீங்க” என்று கணவரிடம் குறையாகக் கேட்டார்.
“நீ தான் ஓவர் பொஸசிவ்வே ப்யூட்டி” என்று சித்தார்த் கேலி செய்ய, “அப்ப
எதுக்கு நேத்து கை காட்டுனாரு இவரு?” என்று மீண்டும் கேட்க சித்தார்த்தும்
தாத்தாவைப் பார்த்தான்.
“சும்மா ஒரு ‘ஹாய்’ காமிச்சேன்” என்று அவர் வாயெல்லாம் பல்லாகச் சொல்ல,
“இதெல்லாம் நல்லதுக்கு இல்லையாமா” என்ற ரமணா,
“ப்யூட்டி விடு. நீ என் கூட வந்திடு” என்று அவன் சொல்ல, “வேணாம். ‘அரசனை
நம்பி புருஷனைக் கைவிட்ட கதை’ ஆகிடும் சொர்ணம்” என்று ராஜகோபாலன் எச்சரிக்க நால்வருக்கும் சிரிப்பு வந்தது.
பின் இரவு உணவு தயாரிப்பதாகச் சொன்ன பாட்டியிடம், “நாங்க சாப்பிட்டாச்சு பாட்டி. நீங்க இரண்டு பேரும் சாப்பிடுங்க” என்றவன் வெளியில் வர அவனுடைய படை எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தது.
“டேய் டெட்ஸ் ப்ளே எ கேம்” என்று நந்திதா ஆரம்பிக்க… அது இது என்று கடைசியாக, ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்தனர்.
சித்தார்த்தே ஆரம்பித்தான், “டிங் டிங்”.
“யாரது?” என்றனர் மீதமிருந்த அனைவரும்.
“பேயது”
“என்ன வேண்டும்?”
“நகை வேண்டும்”
“என்ன நகை?”
“கலர் நகை”
“என்ன கலர்?”
நீண்ட நேரம் சித்தார்த் யோசிக்க எல்லோரும் ஓடத் தயாராக இருந்தனர். “டார்க் ப்ளூ” என்று சொல்ல எல்லோரும் ஆளுக்கொரு திசையில் “ப்ளூ” கலரைத் தேடி சிதறினர்.
ரமணா அந்த நிற ட்ரௌசரை அணிந்திருக்க, எல்லோரும் அவனது ட்ரௌசரை பிடிக்க வர்ஷினி தனியாக மாட்டிக்கொண்டாள் சித்தார்த்திடம்.
“டேய் அவ ஔட் ஆகிட்டா டா. எல்லோரும் விடுங்க. ட்ரௌசரை கழட்டிடாதீங்க”
என்று அனைவரையும் அவன் தள்ளிவிட சித்தார்த் வர்ஷினியின் தலையில்,
“ஔட்” என்று அடிக்க… “போடா” என்று அவளும் திருப்பி அவனை அடித்து
சண்டையிட, தனது வீட்டின் ஜன்னல் வழியே நடப்பவை எல்லாவற்றையும்
சித்தாரா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் ‘சுருக்’கென்று வலி
ஏற்பட்டது. வர்ஷினி ரமணாவின் அருகில் இருந்தும் வேறுபக்கம் சென்று
சித்தார்த்தின் கைகளில் சிக்கியது அவளால் நன்கு உணரமுடிந்தது. ஜன்னலை மூடிவிட்டு தனது படுக்கையில் வந்து விழுந்தவளுக்கு மனம் குழம்பியது. அவளை அதிகம் குழம்ப விடாமல் காலையில் இருந்து நடந்து வந்த அயர்வில் தூக்கம் அவளை அரவணைப்பாகத் தழுவியது.
அன்று இரவு படுக்கையில் விழுந்த சித்தார்த்திற்கு சித்தாராவின் ஞாபகங்களே. சண்டையிட்டாலும் அவளின் அருகாமையையே தேடியது அவன் மனம். நேற்று நடந்ததை மனதில் நினைத்து புன்னகைத்தவன் ஹெட் செட்டை காதில் மாட்டிவிட்டு ப்ளேலிஸ்டை ஆன் செய்ய,
இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா
தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி
கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே
ஓ நுறையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே
காதோரம் காதல் உரைக்க
ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க
என்னுயிறே மறு பார்வை போதும் பிறக்க
என்று ஜிவி பிரகாஷ் பாட அதில் ஒவ்வோரு செல்லும் உருக நனைந்தவன், கண்களை இசை தந்த சுகத்திலேயே மூடினான்.
நாட்கள் உருண்டோட “கெட்டிமேளம்”, “கெட்டிமேளம்” என்று குரலும்… மங்கள
வாத்தியங்கள் அனைத்தும் முழங்க, அழகு தேவைதையாய் ரோஜா சிவப்பு
நிறப் பட்டுப்புடவையில் தன்னருகில் அமர்ந்திருந்த சித்தாராவின் பொன்
கழுத்தில் மஞ்சல் கயிற்றில் கோர்க்கப்பட்டத் தங்கத் தாலியை மூன்று முடிச்சிட்டு அணிவித்து அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் சித்தார்த். சித்தார்த்திற்கு ஏதோ உலகத்தைத் தன் வசமாக்கிய உணர்வு. அக்னியை அவளது
கையை இறுகப் பற்றி வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என அனைத்துச் சடங்குகளும் ஸ்ரீ சாய் விவாஹ மஹாலில் பிரம்மாண்டமான முறையில் நடந்தது கொண்டிருந்தது.
காஞ்சிவரம் பட்டு வேஷ்டியில் கம்பீரமாகவும் வசீகரமாகவும் இருந்தவனை சித்தாரா பார்க்க, “என்ன?” என்று வினவினான்.
“இல்லை. எனக்கு வயசு ஆகறதுக்குள்ள தாலி கட்டிட்டே அதான் பாத்தேன்” என்று
அவள் கேலி செய்ய அசடு வழிந்தான். பின்னே தாலி கட்டச் சென்றவன், பெண்மையே உருவமாய் அமர்ந்திருந்தவளை கண்டு இமைக்க மறந்து ஐந்து நொடி ப்ரீஸ் ஆகிவிட்டான். அதன் பிறகு ரமணா தோளைத் தொடவே தாலியைக் கட்டி முடித்தான். ஒவ்வொரு சம்பிரதாயமும் தமிழ் முறைப்படி தடபுடலாக ஊரார் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது.
அனைத்து சடங்குகளும் முடிய அன்றைய இரவிற்கான அறையை ஃபைவ் ஸ்டார்
கும்பல் வைபோகமாக தயார் செய்து முடித்துக்கொண்டு கிளம்பினர். வைலட்
நிற புடவையில் சின்மயி தங்கையை சித்தார்த்தின் அறையில் விட்டுவிட்டுத்
திரும்ப, அவளோ காட்டில் விட்டது போல நின்றாள்.
உள்ளே வந்தவள் சுற்றியும் பார்க்க சித்தார்த்தைக் காணவில்லை. அறையின் அலங்காரத்தைப் பார்த்தபடி அவள் நிற்க, பாத்ரூமில் இருந்து வேஷ்டி சட்டையை
கலைந்துவிட்டு தனது டி சர்ட் ட்ரௌசருடன் வெளியே வந்தவன்,
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி
வை
மேகம் கொண்டுவா மெத்தை போட்டு
வை
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி
வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல்
வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை
நம்பினேன்
இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு
உணவு..
என்று சித்தாராவைப் பார்த்து பாடிக்கொண்டே சித்தார்த் நெருங்க அவளோ சிலையாகி நின்றாள்.