தயக்கம் ஏனடி பூந்தளிரே 1

தயக்கம் ஏனடி பூந்தளிரே 1

தயக்கம்  ஏனடி பூந்தளிரே – 1

தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ஒன்றான கோயமுத்தூரின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஊர் தொண்டாமுத்தூர். இப்பகுதி, ஒரு புறம் தன்னை வளர்ந்த நகரமாக காட்டிக் கொண்டாலும், அதன் இன்னொரு பகுதி இன்னும் பழமை மாறா கிராமிய மனம் வீசும்.

அவ்வூரின் முக்கிய தலைகளில் ஒருவரான ராமனின் இல்லமே அன்று பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. சமையல் அறையில் “ஏன் பொன்னி, இன்னைக்கு ஊரையே கூட்டி இப்படி விஷேசம் வச்சுருக்காங்களே? இந்த இடமும் தகையிலைனா இவுங்க என்ன பண்ணுவாங்க?” என்று புரளி பேசுவதையே தன் முக்கிய தொழிலாகவும் வயித்துப்பாட்டுக்கு வீட்டு வேலை என செய்யும் வானதி, அவ்வீட்டின் மற்றொரு வேலையாள் ஆன பொன்னியிடம் கேட்க,

பொன்னியோ “அது நமக்கு தேவை இல்லாத விசயம் வானதி. இந்த இடமாவது தகைஞ்சு அந்த புள்ளைக்கு ஒரு விடிவுக்காலம் வரணுமுனு வேண்டதான் முடியும் நம்மனால” என்று அவள் சொல்லவும் அவ்வீட்டின் முதலாளியான ராமனின் மனைவி சீதா அவ்விடத்திற்கு வரவும் சரியாக இருந்தது.

வந்தவர் “என்ன செஞ்சுட்டு இருக்கீங்க இரண்டு பேரும்? இன்னும் சமையல் வேலையே முடியலை. மத்த வேலை எல்லாம் எப்ப பார்க்கிறதா உத்தேசம் அம்மணிங்களுக்கு? உங்களை பார்க்கிறதுக்குனே ஒரு ஆளை போட்டு தான் வேலை வாங்கணும் போல”. என்று புலம்பியவர்

“பொன்னி, நீ போய் அவ ரெடியாகிட்டாளானு பாரு. இந்த சனியன வீட்டை விட்டு தொரத்தி விட்டா என் கஷ்ட காலம் போயிருமுனு பார்த்தா, இவ காலை சுத்துன பாம்பு போல இங்கையே இருக்கா, எல்லாம் என் தலை எழுத்து” என்று இன்று விழா நடக்கும் நயகியை திட்டியவர், இன்னும் பொன்னி அங்கயே நிற்பதை பார்த்து அடுத்து அவர் தன் வாயை திறக்கும் முன் பொன்னியே,

 

“அம்மா பாப்பா இன்னும் வரலை. கோயிலுக்கு விடியக்காலை போன பொண்ணு,” என்று சொல்ல “சுத்தம், இவ இப்படி கோயில் கோயிலா சுத்திட்டு இருக்கிறதுக்கு எங்கையாவது ஒட்டு மொத்தமா தொலைஞ்சுட்டான்னா நிம்மதி” என்று மறுபடியும் திட்டியவர்,

வானதியிடம் திரும்பி “வானதி நீ போய் அவளை கொஞ்சம் பாரு. எந்த குளத்துக்கிட்ட உட்காந்துட்டு இருக்காளோ? அவளை போய் இழுத்துட்டு வா இந்த மனுஷன் வரதுக்குள்ள, இல்லைனா இவர் என்னை புடிச்சுக்குவாரு, நான் போய் ஐசுவ பார்க்கிறேன்” என்று சொல்லி தன் பெருத்த தேகத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மாடி நோக்கி சென்றார், அவ்வீட்டின் இளைய மகளை எழுப்ப.

அவர் சென்றதும் பொன்னி, வானதியிடம் “சீக்கிரம் போ வானு, பெரிய ஐயா வரதுக்குள்ள நிலாம்மாவை கூட்டிட்டு வந்துரு” என்க, பொன்னியும் “போறேன் பொன்னி. அந்த புள்ளை எங்க இருக்குதோ? எனக்கு இந்த வீட்டுல இதே வேலையா போச்சு” என்று புலம்பிக் கொண்டே அவ்வூரில் இருக்கும் கோயிலுக்கெல்லாம் நிலா என்று விளிக்கப்பட்ட நம் நாயகியை தேடி சென்றாள்.

அதிகாலை வேளையில், மக்கள் அனைவரும் சுருசுருப்பாக இயங்கி கொண்டே தன் நாளை தொடங்க, கோவில் தெப்பக் குளத்தின் படியில், சிறுமியும் அல்லாத வயதுப் பெண்ணும் என்று சொல்ல முடியாத உயரத்தில் ஒரு பெண் தன் பட்டு பாவடை தழைய தழைய மீன்களுக்கு பொறி போட்டுக் கொண்டிருந்தாள்.

அவ்வூர் மொத்தமும் தேடி களைத்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்த வானதி குளக்கரையில் அப்பெண்ணை கண்டுக் கொண்டு ‘ஹப்பா, இங்கதான் இருக்காங்களா? காலையிலே எவ்ளோ நேரம் அலையிறது?’ என்று தனக்குள் பேசிக்கொண்டே சத்தமாக,

“நிலாமா..” என்று கூப்பிட, அப்பெண்ணும் தன்னை அழைத்த குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள். உருவம் சிறுமியாக தோற்றமளித்தாலும் நானும் பருவ மங்கை தான் என சொல்லும் அளவிற்கு உடலிலும் முகத்திலும் முதிர்ச்சி தெரிந்தது. வானதியை கண்டு கொண்ட நிலா “என்ன வானதிக்கா? எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்டுக் கொண்டே தன் கையில் இருக்கும் மொத்த பொறிகளியும் குளத்தில் போட்டவள், தன் இருகைகளையும் தட்டிக்கொண்டே தன் பாவடையை  தூக்கிப் பிடித்து வானதி இருக்குமிடம் வந்தாள்.

“நிலாமா.. வாங்க வீட்டுக்கு போலாம். பெரிய ஐயா வரதுக்குள்ள நாம போயிறலாம்.” என்று சொல்ல,

நிலாவோ “ப்ச்” என்று தன் அதிருப்தியை முகத்தில் காட்டியவள், “இதுக்குதான் என்னை தேடி வந்தீங்களா? யாரு சீதாம்மாவா உங்களை அனுப்பி விட்டது?” என்று கேட்டுக் கொண்டே முன்னே நடக்க,

வானதியும் “ஆமா நிலாமா. இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாரும் வந்துருவாங்க. சீக்கிரம் கூட்டிட்டு வானு என்னை அனுப்பினாங்க” என்று சொல்ல,

“நீங்க போங்க வானதிக்கா. எனக்கு இப்ப அங்க வர மனநிலை இல்லை. நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று சொல்ல, வானதியோ கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.

அவள் நிற்கும் தோரணையிலையே “உங்களை யாரும் எதும் சொல்லாம பார்த்துக்கிறேன் நான். இப்போ என்னை கொஞ்சம் தொந்தரவு பண்ணாம கிளம்புங்க இங்கிருந்து” என்று சத்தமிட, வானதியும் சென்று விட்டாள்.

நிலா இவள் தான் ராமனின் மூத்த மகள். ஆம் ராமனிற்கு மட்டுமே மகள். ஊரிலையே நல்ல வளமிக்க குடும்பத்தில் பிறந்த நிலா தன் மழலை பருவத்தில் தாயை இழக்க, ராமன் மறுமணம் செய்து கொண்டவர் தான் சீதா. ஆரம்பத்தில் அனைத்தும் சரியாக செல்ல, நிலாவின் பதின்ம வயதில் அவளின் ஹார்மோன்களின் குறைப்பாட்டினால் அவளின் வளர்ச்சி தடை பெறவும் அனைத்தும் ஆரம்பமாகியது.

எதற்கும் அவ்வீட்டில் முதலில் இருக்கும் நிலா, இதன் பின் அனைத்திலும் சீதாவால் ஒதுக்கி வைக்கப்பட, ஆரம்பத்தில் ‘இதுல என் தப்பு என்ன இருக்குனு என்னைய ஒதுக்கிறாங்க?’ என்று அழுது கரைந்தவள்,

வயது ஏற ஏற அவள் அனைவரையும் தன்னை விட்டு தள்ளிவைத்தாள். இதில் சந்தோசப்பட்டது சீதா மட்டுமே. அவருக்கு எப்பொழுதுமே இருந்த எண்ணம், தன் மகளான ஐஷ்வர்யா இருக்கும் பொழுது அனைத்திலும் முன்னிருத்தப்பட்ட நிலாவின் மீது கொஞ்ச கொஞ்சமாக துவேசம் கிளம்பியது. அவர் எண்ணப்படியே நிலாவின் வளர்ச்சி குறைபாட்டினால் “போயும் போயும் இவகிட்ட முதல் முதலா கொடுத்து தொடங்கற காரியம் இவள மாதிரியே பாதில நின்னு போறதுக்கா?” என்று குடும்பத்தின் முன்னிலையிலையே பேச ஆரம்பித்தார்.

ஆயினும் ராமன் மனம் கேளாமல் விவசாயத்திற்கு முதல் விதை தூவும் பணியை நிலாவை வைத்து துவங்க, அடை மழையால் அனைத்தும் நாசமாகியது அப்பொழுது. அதன் பின் அனைத்தும் அவளை வைத்து செய்த காரியங்கள் யாவும் இடையிலையே நின்று விட அனைவர் மனதிலும் நிலா ராசி கெட்டவளாக உருமாறினாள். இன்று வரை அந்த கண்ணோட்டம் மாறவில்லை.

இதோ இப்பொழுது கூட தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தும் அதை பற்றி துளி யோசனை கூட இன்றி மறுபடியும் குளத்தின் அருகிலையே வந்து அமர்ந்துவிட்டாள்.

அதே நேரம், கோவையின் மற்றொரு மூலையில் இருக்கும் ஊரான மதுக்கரையில் நம் நாயகன் தன் வீட்டில் சந்தோசமாக தயாராகிக் கொண்டிருந்தான். இன்று அவனின் முதல் நாள், தன் பணிக்கு. கோயமுத்தூரின் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தில் தன் ஆசிரியர் பணியை துவங்க அந்நாளை மகிழ்ச்சியாக தொடங்கினான்.

தன் அறையை விட்டு வெளியில் வந்தவனிடம் “ஆதவா, போய் சாமி கும்பிட்டுட்டு வா சாப்பிடலாம்” என்று அவனின் அம்மா தேவகி கூற, தன் கன்னக்குழி குழைய சிரித்த ஆதவன், “சரிம்மா. நீ தேவாவுக்கு ஹாய் சொல்லிட்டியா என்ன? காலையிலையே ஒரே சந்தோசமா இருக்க? என்ன சொன்னார் உன்னோட தேவா? என்று தேவகியிடம் கேட்க,

ஆதவை கண்டன பார்வை பார்த்துக் கொண்டே “எத்தணை தடவை சொல்றது ஆதவ் உனக்கு? இப்படிதான் அப்பாவை பெயர் சொல்லி கூப்பிடுவியா நீ? அதும் சாமியா போன மனுசனை..” என்று திட்ட.

“அச்சோ சும்மா தமாசுக்கு மா.. இன்னைக்கு நான் ரொம்ப நல்ல மன நிலையில் இருக்கேன். காலையிலையே திட்டாத என்னை. நானும் போய் சாமிக்கும் தேவாக்கும் ஹாய் சொல்லிட்டு வரேன்., எனக்கு நீ நல்ல மொறு மொறுனு தோசை சுட்டு வை” என்று சொல்லி பூஜை அறை நோக்கி சென்றான்.

தேவகியும் ஆதவை திட்டிக் கொண்டே காலை பதார்த்தங்களை டேபிளில் வைக்கத் தொடங்கினார். சாமி கும்பிட்டு வந்த ஆதவன் சாப்பிட அமர தேவகியும் அவனுடன் அமர்ந்தவர், “ஆதவ் இன்னைக்கு கொஞ்சம் நேரமா வா தம்பி. நாம ஹாஸ்பிட்டல் போலாம் இன்னைக்கு” என்று சொல்ல,

“சரிமா.. இன்னைக்கு மோஸ்ட்லி எந்த வேலையும் இருக்காது எனக்குனு நினைக்கிறேன். ஒரு நாலு மணிக்கு நான் வரேன். நீங்க ரெடியா இருங்க” என்று தன் காலை உணவை முடித்துக் கொண்டு தன் வாகனத்தில் கிளம்பினான் தன் கல்லூரியை நோக்கி.

எந்த கவலையும் இல்லாமல் சிறகடித்து பறக்கும் ஆதவும், தன் சிறு வயது முதல் அனைத்து கஷ்டங்களையும் தாங்கி அதில் வாழ்ந்து பழகிய நிலாவும் வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டால்?

தேய்பிறையாக இருக்கும் நிலாமகளை தன் அன்பு கரம் கொண்டு வளர்பிறையாக மாற்றுவானா ஆதவன்?

error: Content is protected !!