தாழையாம் பூமுடித்து🌺23

தாழையாம் பூமுடித்து🌺23

23                        

  “ஏன் எங்கிட்ட மட்டும் சொல்லல.” என்றவளது கேள்வியில் கோபத்தின் சாயலோடு சரிபாதி ஏக்கமும் விரவி இருந்ததை கவனிக்கவில்லை அவன். அவளது முகத்தில் எதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. தனிமையிலாவது தன்னிடம் காதலை சொல்வான் என எதிர்பார்த்திருந்தது கன்னி மனது. 

தீபிகாவின் வாய்வழி தெரிந்த தன் மீதான தன்னவனது காதல், அவன் வார்த்தைகளாகவும் கேட்க மனம் ஆவல் கொண்டது.

பச்சை வயல்களின் மத்தியில், உள்ளங்கையின் மருதாணி வட்டமாய்… சூரியனின் அடிவிளிம்பு பூமியை முத்தமிட்டு நின்ற நேரம். அந்தி மயங்கும் நேரம் மட்டும் அல்ல. மதி மயங்கும் நேரமும் கூட. 

வண்டியை தோப்பு வீட்டின் முன் நிறுத்தினான். வரும் வழியெங்கும் அமைதியே இருவருக்கும். எதுவும் பேசிக் கொள்ளாமல், ஒருவித மோனநிலை. தனிமையில் ஒரு சிறு தவிப்பு இருவருக்குள்ளும். வீட்டினுள் செல்லாமல், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மெதுவாக தோப்பு நோக்கி நடக்க ஆரம்பிக்க, அவளும் உடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள். 

இருவரும் விவரம் புரியாதவர்கள் அல்ல. வயது கற்றுக்கொடுத்த பாடம் அறிந்தவர்கள் தான். எனினும் உள்ளுக்குள் ஆரம்பகட்ட படபடப்பு இருவருக்குள்ளும். 

“இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் இங்க வர்ற இல்ல.” என்றான் தொண்டையைச் செருமிக் கொண்டு.

“இல்ல… சின்னப் பிள்ளையில ஒரு தடவை வந்த ஞாபகம் இருக்கு. ஏதோ ஒரு விசேஷம். சரியா ஞாபகம் வரல. ஆனா ரொம்ப மாறியிருக்கு.”

“ஆமா! நாங்க தாத்தாவோட இருந்தப்ப, சித்தப்பா குடும்பம் அப்பத்தாவோட இங்கதான் இருந்தாங்க. சொத்து பிரிக்கும் போது தென்னந் தோப்போட இந்த பங்கு நமக்கு வந்துருச்சு. சித்தப்பாவுக்கு அந்த மாந்தோப்புல இருந்து, அதுக்கு அங்கிட்டு இருக்குற பாகம் வந்துச்சு. அப்ப வண்டிப்பாதை இருந்துருக்கும். இப்ப தோப்புக்குள்ள வர்றதுக்கு நாமளும், சித்தப்பாவும் சேந்து தனியா ரோடு போட்டுக்குட்டோம். அது அவங்க தோப்பு.” என அடுத்து இருந்த வருண் தோப்பை காட்டினான். 

அங்கிருந்தே எதெது அவர்களது வயல், தோப்பு, அதில் என்னென்ன வெள்ளாமை என, வரப்பின் மீது ஒரு காலை வைத்து, கை காட்டி பேசிக் கொண்டு இருந்தவனை, கையைக் கட்டிக்கொண்டு தென்னை மரத்தில் சாய்ந்து நின்றவாறே, அவன் மீது வைத்த கண்ணை எடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

காற்றில் களைந்தாடும் முடியைக் கோதி விட மனம் பரபரக்க, பார்வை முகத்திற்கு இறங்கியது. அடர்ந்த புருவத்திற்கு மத்தியில் இருந்து இறங்கும் கூர்நாசி, நாசியின் முடிவில் அழகாக, அளவாக நறுக்கிய அடர்த்தியான மீசை, ஏனோ… திருவிழாவில் பார்த்தது போல் சற்று முறுக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என மனம் எண்ணியது. 

அகன்ற தோள்களில் கைகளை மாலையாகக் கோர்க்க பெண்ணவள் மனதோரம் சிறு ஆசை துளிர் விட… சட்டையின் இடைவெளியில் மார்பின் மத்தியில் தொங்கிய மீன் டாலர் மீது சற்று பொறாமையும் கூடவே எழ, காலையில் முகம் புதைத்த இடம் நினைவிற்கு வர… கன்னியின் இதழ்களில் கணநேரம் சிறு நாணப்பூ பூத்தது. 

அவனும் பேச்சை நிறுத்தி இருந்தான் அவளது பார்வையின் ரசனையை பார்த்துவிட்டு. சட்டென்று நிமிர்ந்து பார்க்க,

“என்ன… பேசியே போர் அடிக்கிறேனா?” என புன்னகை விரியக் கேட்டவனிடம், ஆமாம் என்பது போல் தலை ஆட்டி வைத்தாள். அவன் வாய் விட்டு சிரிக்க, 

“காலையில நீ இருந்த அவசரத்துக்கு, வந்தவுடனே வீட்டுக்குள்ள இழுத்துட்டு போயி கதவச் சாத்துவேன்னு எதிர்பாத்தே.” எனக் கூறியவள் மெதுவாகப் புன்னகைக்க,

“அப்ப… நாந்தான் சொதப்பிட்டேனா?” 

“அப்படி இழுத்துட்டுப் போயிருந்தா தான் சொதப்பியிருப்ப. தாங்க்ஸ்.” என்றவளின் ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள். 

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவன் எப்பொழுதும் பெண்ணின் மனதில் ஒருபடி மேலோங்கி தான் நிற்கிறான். அவனும் நின்றான்.

மங்கையின் வார்த்தைகளில் மனதிற்குள் சற்று பெருமிதம் பொங்க, அளவாக சிரித்தவனை ஆசையாக கண்ணுக்குள் வாங்கி மனதிற்குள் பூட்டிக் கொண்டாள். 

‘இப்பவாவது சொல்றானா பாரு…’ என மனம் ஏங்க, கண்களிலும் அது தெரிந்தது. ‘இப்போதைக்கு இவன் சொல்ற மாதிரி தெரியல.’ எனத்தோன்ற… இவளே வாய் விட்டு கேட்டே விட்டாள்.

”ஆனா… நான் வேற ஒன்னும் எதிர்பாத்தே. இன்னும் எங்கிட்ட சொல்லணும்னு தோணலைல.”

“எதச் சொல்லணும்னு எதிர் பாத்த?” என புருவம் சுருக்கி சந்தேகமாகக் கேட்டவன், சட்டென பிரியா விஷயம் நினைவுக்கு வர,

“உனக்கு யாரு சொன்னது?” என்றான்.

“கிட்டத்தட்ட என்னத் தவிர எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கு.”

“நான் எல்லார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு சொன்னேனே?”

“எங்கிட்ட கூடவா?”

“நானே நேர்ல போயி சங்கரிகிட்ட சொல்லிக்கிறேன்னு தானே சொல்லிட்டு வந்தே. அதுக்குள்ள சின்ன மாமா சொன்னாரா? இல்ல அம்மாச்சியா? இல்லைனா பிரியாவே ஏதும் சொன்னாளா சிவா?” எனக் கேட்க,

“அவங்களுக்கெல்லாம் தெரியுமா? அப்ப என்னத் தவிர எல்லாத்துக்கிட்டயும் சொல்லியிருக்கியா?” என அவள் கோபமாகக் கேட்ட பிறகு தான் இவள் கேட்பது ஏதொ வேறு விஷயம் என்பது சட்டென உரைக்க,

“நீ எதப்பத்தி கேக்குற?” என்றான் சந்தேகமாக.

“நீ எத எங்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்ன. மொதல்ல அத சொல்லு.” என சாய்ந்து நின்றவள், சடுதியில் நிமிர்ந்து நிற்க,

“நீ எதக் கேக்குற. நானாத்தான் உளறிட்டேனா?” என அப்பொழுது தான் அவன் சரியாக சொதப்பினான்.

“எத எங்கிட்டயிருந்து மறைக்கிற?” எனக் கேட்டவளிடம் இனியும் மறைத்து பிரயோஜனம் இல்லை, எப்படினாலும் சொல்லித்தானே ஆக வேண்டும் என அவள் தங்கைக்கு நடந்ததனைத்தும் கூற, முழுதும் கேட்டவள், ஆத்திரமும் கோபமுமாக நடையைக் கட்ட, கை பிடித்து தடுத்தவன், 

“எங்க போற?” என்றான்.

“இவ்ளோ நடந்திருக்கு. எனக்கு யாருமே சொல்லல. அவங்க சம்மதம் கேக்காம, நான் கல்யாணத்துக்கு சரி சொன்னதுனால என்னைய அப்படியே தண்ணி தெளிச்சு விட்டுறுவாங்களா? நான் யாரோ தானா?” என கோபத்தில் படபடக்க,

“நான் தான்டி சொல்ல வேண்டாம்னு சொன்னே.”

“எதுக்கு… நான் இப்பவே பிரியாவ பாக்கணும். உடனே சென்னைக்குப் போகணும். நீ கூட்டிப் போறீயா? இல்ல நானே போய்க்கவா?” என ஆத்திரத்தில் அவசரப்பட்டவளிடம்,

“இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன் சிவா. உங்கிட்ட சொன்னா உடனே போகணும்னு கிளம்பி வருவ. ஏன் எதுக்குனு கேள்வி வரும். இது கிராமம். எப்படினாலும் விஷயம் வெளிய தெரிஞ்சுறும். அதனால தான் பிரச்சினை ஆறட்டும்னு சொல்லல. பிரியா கிட்ட வேணும்னா ஃபோன் பண்ணி பேசு. இப்ப நார்மல் ஆயிட்டா. பொம்பளப் புள்ள விவகாரம். உன்னைய மாதிரி அவசரப்படக் கூடாது.”

“எது… என் தங்கச்சி அங்க கை கட் பண்ணிட்டு ஹாஸ்பிடல்ல இருந்துருக்கா. அவள நான் பாக்கணும்னு சொல்றது அவசரமா? நீ தான் உன் தங்கச்சி ஆஸ்பிடல் போனதையே எங்கிட்ட சொல்லாம போனவனாச்சே.” என தீபிகாவை பிரசவத்திற்கு அட்மிட் பண்ணியதைப்பற்றி இவளிடம் சொல்லாததை இப்பொழுதும் இழுத்துப் பேச, 

“ஏன்டி, தீபிகா பிரசவத்துக்கு போனதும், பிரியா சூசைட் அட்டெம்பட் பண்ணி ஹாஸ்பிடல் போனதும் ஒன்னா?” எனக் கேட்டவனிடம்,

“அவகிட்ட பேசிட்டு உன்ன வச்சுக்குறே!” என வேகமாக நடந்தவள் கையை இழுத்துப் பிடித்து தனது ஃபோனை கொடுத்தான். 

தங்கையை ஃபோனில் அழைக்க… பிரியா அழைப்பை ஏற்ற அடுத்த நொடி,

“ஹாய் மாம்ஸ்! எப்படி இருக்கீங்க?” என குரலில் துள்ளலோடு விசாரிக்க,

“ஏன்… மாம்ஸ் மட்டும் தான் கண்ணுக்கு தெரிவாரா? நான் ஒருத்தி இருக்கறது எல்லாத்துக்கும் மறந்துருச்சா?” என ஆத்திரத்தில், அழைத்தது அவனது நம்பர் என்பதையும் மறந்து விட்டு கத்த, 

“அக்கா இது மாமா நம்பர். அது தான் மாமா தான்னு…” என இழுக்க,

“ஏம் பிரியா… ஆளு யாருன்னு கண்டு புடிச்சு, அவன கண்டதுண்டமா வெட்டுறத விட்டுட்டு உன் கைய வெட்டி இருக்க. உனக்கு அறிவிருக்கா?” என தங்கையை காய்ச்சி எடுக்க, அக்காவின் பேச்சைக் கேட்டவள், எதிர் முனையில் கலகலவென சிரித்தாள்.

“நான் என்ன உனக்கு ஜோக்கா சொன்னே. எவ்ளோ டென்ஷன்ல இருக்கேன் தெரியுமா? நீ என்னடான்னா சிரிக்கிற?” என்றவளது பேச்சில் கோபத்தின் டெசிபல் எகிறியது.

“அக்கா, கூல்… ஊர்ப்பக்கம் போனாலும் போன… பேச்சுல வெட்டு, குத்துன்னு மண்வாசனை தூள் பறக்குது போ.” என அக்காவை தங்கை கேலி பேசி சிரித்தாள்.

தங்கையின் குரல் எப்பொழுதும் போல சாதாரணமாக ஒலிக்க, அதில் சற்று சமாதானம் அடைந்தவள், 

“எத்தனை தடவ ஃபோன் பண்ணினே. நீயாவது எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. அவன சும்மாவா விட்டீங்க.”

“இல்லக்கா… உன் தம்பி கராத்தே, ஜிம்முனு கத்துக்கிட்டத அவன் கிட்ட தான் காமிச்சான். சும்மா சொல்லக் கூடாதுக்கா… நம்ம உடன்பிறப்பு அவன புரட்டி எடுத்துட்டான்.” என உடன்பிறப்பின் துதி பாடியவள், மாமன் செய்ததனைத்தும் கூறியவள், 

“மாமா சொன்னது சரிங்கவும் தானேக்கா, அப்பாவே அவன சும்மா விட்டுட்டாரு.” என்று அக்காவிடம் நடந்தவைகளை பொறுமையாக எடுத்துக் கூறியவள், 

அவன் மாமனார் வீட்டில் தங்காததையும், மாமனார் மருமகனை உபசரிக்காததையும் உபரித் தகவலாக கூற, தணிந்த கோபம் மேலும் உச்சம் பெற்றது.

“அப்பா வீட்ல இருக்காரா?” என்றாள் சற்று வேகமாக.

“ம்ம்ம்… கீழ இருக்காரு க்கா.”

“அப்பாட்ட ஃபோனக் கொடு.” என கட்டளை போட,

“ஏங்க்கா?”

“மொதல்ல போய் கொடு.” என அதட்ட, பிரியாவும்,

“அப்பா, அக்கா உங்க கிட்ட பேசணுமாம்.” என்றவாரு இறங்கி வந்து தந்தையிடம் ஃபோனைக் கொடுக்க,

“சங்கரி…” என தந்தை அழைத்த அடுத்த நொடி,

“ஏம்ப்பா… மக வீட்டுக்கு வரணும்ங்கற நெனப்பு இருக்கா இல்லையா?” என எடுத்தவுடன் டாப் கியர் போட, பேசுவது தன் மகள் தானா என ஃபோனை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டார் சக்திவேல். 

“நீங்க உங்க அத்தை வீட்டுக்கு வரவேண்டாம். தங்கச்சி வீடுன்னும் வரவேண்டாம். ஆனா… என் வீட்டுக்கு எங்க அப்பா வரணும்னு எனக்கும் ஆசை இருக்காதா ப்பா.” என குரல் தழுதழுக்க மகள் கேட்க, மகளின் அந்தத் தொணியில் சக்திவேலிற்கும் மனம் கணத்துப் போயிற்று. 

“நாளப்பின்ன பேச்சி அம்மத்தாவுக்கு ஏதாவது ஒன்னுனா அப்ப நீங்க கண்டிப்பா வந்து தானேப்பா ஆகணும். எங்க அப்பா என் வீட்டுக்கு மொத மொதன்னு வரும் போது நல்ல காரியமா, சந்தோஷமா வரணும்னு ஆசப் படுறே. இப்படி வீடு வரைக்கும் வந்த மருமகனக் கூட தங்கச் சொல்லலைனா, எனக்கு இங்க என்ன மரியாதை கெடைக்கும் சொல்லுங்க.” என அழுகையோடு மகள் படபடக்க,

பேசுவது தன் மகளா என மலைத்துப் போய் கேட்டுக் கொண்டு இருந்தார். அவரைப் பொறுத்து வரை சங்கரி சாது. விபரம் தெரியாத பொண்ணு. எல்லா பெற்றோருக்கும் அப்படி தானே. சக்திவேலும் அப்படியே தன் மகளைப் பற்றி எண்ணிக் கொண்டு இருக்க, இப்படி கேட்கும் மகளிடம் என்ன சொல்வது என்றே புரியாமல் தந்தைக்கும் கண்கள் பனிக்க, அண்ணனைப் பார்த்த முத்துவேல், ஃபோனிற்கு கை நீட்டினார். சக்திவேலும் எதுவும் பேசாமல் தம்பியிடம் கொடுத்து விட்டார்.

“டேய் சிவா, என்னடாம்மா… அப்பா கிட்ட என்ன கேட்ட?” என பொறுமையாக விசாரிக்க,

“நீங்க பேசாதீங்க சித்தப்பா. அதுக்குள்ள எல்லாரும் என்னைய மறந்துட்டீங்க.” என சித்தப்பனிடம் மீண்டும் சலுகையாக அழ ஆரம்பிக்க,

“ஹேய்… சிவா, என்னடி இது. பிரச்சின எல்லாம் சரி பண்ணியாச்சு. அவங்கள ஏன் மறுபடியும் டென்ஷன் பண்றே.” என ஈஸ்வரன், அவள் அழுவது பொறுக்க மாட்டாமல் அருகே வந்தான். கைபேசியை வாங்கியவன் சின்ன மாமனிடம் பேச ஆரம்பித்தான். பிரியா விஷயத்தை அவளிடம் சொல்லாததால் கோபமாக இருப்பதாகவும், தான் பார்துக்கொள்வதாகவும், அவர்களை சமாதனப் படுத்தி விட்டு அழைப்பை துண்டித்தான்.

“என்னடீ, கல்யாணம் ஆன பத்து பதினஞ்சு நாள்ல இப்படி டிபிக்கல் பொண்ணா மாறிட்ட. உன்னோட சேந்து எனக்கும் தான்டி கல்யாணம் ஆச்சு?” என சற்று கேலி போல் கேட்க,

“ஆனா… நாந்தான் பொறந்த வீட்டவிட்டு வந்திருக்கே. நீயா வந்த? நீ தான் மாமனாரக்கூட மதிக்காம அங்க வீட்ல தங்காம வந்துருக்க. ஆனா, நா… நீ கூப்புட்டவுடனே உம்பின்னாடியே வந்தேன்.” என கோபத்தின் அளவைக் குறைக்காமல் இவனிடம் மடை திருப்பினாள்.

இது பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்ணின் மனநிலை. வீடு வரைக்கும் சென்று விட்டு தன் வீட்டில் கணவன் தங்கவில்லை என்பதும், வீடு வரை வந்தவனை மதித்து அப்பா வீட்டில் தங்க சொல்லவில்லை என கணவனுக்கும், தந்தைக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் பெண்ணாக அவள் இருக்க, பெருமூச்சு வாங்க அவளைப் பார்த்தவன்,

“உனக்காக தான் சிவா நான் அங்க தங்கல.” என்றவனை ஏறிட்டுப் பார்க்க,

“நான் அங்கே சகஜமாகிட்டா உங்க அப்பா நம்ம வீட்டுக்கு வரவே மாட்டாரு. தம்பி தான் போறான்லனு அப்படியே இருந்துருவாருடி. இப்ப நான் முறுக்கிக்கிட்டு வந்துட்டேன்ல. அவர் இறங்கி வந்து தானே ஆகணும்.”

“அப்ப… எங்க அப்பா உங்கிட்ட எறங்கி வரணும்னு எதிர் பாத்துருக்க.” என மேலும் எகிறிக் கொண்டு கேட்க,

“எந்தப் பக்கம் போனாலும் கேட் போட்டா என்னதான்டி பண்றது? நீ கோபமா இருக்க. முதல்ல மலையிறங்கு அப்புறமா பேசிக்கலாம். இன்னைக்கு நைட் கரண்ட். நான் போயி மோட்டார் போட்டுட்டு வர்றேன்.” என அருகில் இருந்த பம்ப்செட்டிற்கு சென்று விட்டான்.

அவன் திரும்பி வரும் வரைக்கும் கோபமாக வரப்பில் அப்படியே அமர்ந்திருந்தாள். இப்பொழுதும் கோபம் தான். ஆனால் இது வேறுவகை.

தன் முன் காலடி தெரிய, நிமிர்ந்து பார்த்தவள், “மோட்டார் போட்டுட்டியா? அதுக்கு தானே இங்க கூட்டி வந்தே.” என சீறிவிழ, கத்தி போய் வாள் வந்த கதை அவனுக்கு.

“என்னதான்டி பண்ணச் சொன்ன? முன்னாடியே இருந்தா கோபம் அதிகமாகும்னு தான் கொஞ்ச நேரம் தனியா யோசிக்கட்டும்னு விட்டுட்டுப் போனேன் சிவா.” என அவளை ஆற்றுப்படுத்த முனைய, 

அவன் கூறியது போல்… தங்கை சொன்னது, ஈஸ்வரன் கூறியது, எல்லாவற்றையும் சற்று அலசிப் பார்த்தவள், தனக்கு தெரிந்து இருந்தால் அவசரப்பட்டு கிளம்பி இருப்போம், எல்லாருக்கும் பிரியா விஷயம் தெரிந்து இருக்கும். இப்பொழுது கிளம்பிச் சென்றாலும் ஏன் என்ற கேள்வி வரும். எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். 

இப்ப இவன் அங்கே தங்காததால, அப்பாவும் மனம் இறங்கி வர வாய்ப்பு இருக்கு.’ என யோசித்தவளது கோபம் சற்றே மலை இறங்கி இருந்தது.

“அப்ப நான் கோபமா இருந்தா நீ மலையிறக்க மாட்ட. எக்கேடோ கெட்டுப் போன்னு அப்படியே விட்டுட்டு போயிருவ. அப்படித்தான?” எனக் கேட்டதில், கண்ணக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கே, என அவன் உள்ளுக்குள் குமைந்து போக,

 ’உன்னயக் கல்லக் கட்டி கெணத்துல போடலைல்ல. அந்தளவுக்கு சந்தோஷப் பட்டுக்கோ. டேய் மடையா… பொண்ணுங்க சந்தோஷமா இருந்தாலும் நீதான் கொஞ்சணும். கோபமா இருந்தாலும் நீ தான் மலையிறக்கணும். இது கூட தெரியல. நீயெல்லாம் என்னத்த…’ என தலையில் அடித்துக் கொண்டு அவனை தண்ணியில்லாமல் கழுவி ஊற்றியது சாத்சாத் நம்ம மனசாட்சியார் தான் மக்களே.

”என்னாடீ… முன்னாடி போனா முட்டுற, பின்னாடி வந்தா உதைக்கிற. நான் என்னதான் பண்ணட்டும்?” என உதாரணமும் அவசரத்தில் தவறாக வந்துவிழ,

“அப்ப… நான் கழுதையா?” என வேகமாக எழுந்தவளை, 

“ம்ம்கூம்… இப்படியே விட்டா நீ சரிப்பட்டு வரமாட்ட.” என அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் பம்ப் செட் நோக்கி போக, 

“ஹேய்ய்… எங்க தூக்கிட்டுப் போற.” எனக் கேட்டு கைகளில் துள்ளினாள்.

“ரொம்ப சூடா இருக்க. கொஞ்சம் கூலாகலாம் வா.”

“நான் வரல. இருட்டப் போகுது. என்னைய கீழவிடு.” எனத் துள்ள,

“ரொம்பத் துள்ளாத. வரப்புல உன்ன தூக்கிட்டு நடக்கறதே பெரிய விஷயம். ரெண்டு பாக்கமும் வயல்ல தொழி அடிச்சு வச்சுருக்கு. விழுந்தா இன்னைக்கு சேத்துக் குளியல் தான் தெரிஞ்சுக்கோ.” எனக் கூறிவிட்டு அவன் சிரிக்க, அவள் வீம்பாக மீண்டும் துள்ள, சற்று தூரம் சென்றவன், அவளது துள்ளல் அதிகமாக, பொத்தென்று வயலுக்குள்ளே போட்டுவிட்டு வரப்பில் நின்று கொண்டான். 

“டேய்ய்.” என கத்திக்‌கொண்டே விழுந்தவள், வயல் சேற்றில் முக்குளித்து எழ… பார்த்தவன் வாய்விட்டு சிரிக்க, அவனை முறைத்துப் பார்த்தவள்,

“நீ மட்டும் ஷேஃபா நின்னுக்கிட்டயா? இப்ப பாரு…” என சேற்றிலிருந்து தட்டுத்தடுமாறி எழுந்தவள் அவனைத் துரத்த ஆரம்பிக்க, வேகமாக ஓடிச்சென்று தண்ணீர் தொட்டி அருகே நின்று கொண்டான். தடுமாறி ஓடி வருபவளைப் பார்த்து சிரித்தவனை, வேகமாக சென்று இறுக்கி கட்டிப் பிடித்தவள், தன்‌ மீதிருந்த சேறு முழுவதும் அவன் மீதும் படும்படி தன் உடலாலே பூசியவள், அப்படியும் மனது ஆறாமல் தன் முகத்திலிருந்த சேற்றையும் எக்கி அவனது கன்னத்தில் தன் கன்னம் கொண்டே இழைந்து பூசியவள், எப்படி எனும் தோரணையில் அவனை நிமிர்ந்து மிதப்பாகப் பார்க்க, அவனோ கண்களில் தெறித்த மின்னல் சிரிப்போடு, அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன்,‌ “நானும் இதைத் தான் எதிர்பார்த்தேன் சிவா.” என்றான் குறும்பாக. 

“அடப்பாவி.” என வாய்பிளந்து நின்றவள், அப்பொழுது தான், அவள் செய்த காரியம் உரைக்க, விலகச்சொல்லி வெட்கம் ஆணையிட, ஆசை அதற்கு அணை போட, தயக்கத்தை தள்ளி வைத்து, மேலும்  இறுக்கிக் கட்டிக் கொண்டவளை, தூக்கி தண்ணீர் தொட்டிக்குள் போட்டவன், தானும் உள்ளே எகிறிக் குதித்தான். 

பம்ப்செட்டில் தண்ணீர் நுரைத்துப் பொங்கி ஊற்றிக் கொண்டிருக்க, தூக்கிப் போட்ட வேகத்தில், மூச்சடைத்து வேகமாக எழுந்தவள், பெருமூச்சு வாங்கி நின்றாள். 

அவனும் மூழ்கி முக்குளித்து எழ, 

மூச்சு வாங்கி நின்றவளைப் பார்த்தவன் பார்வை பாவையைத் துளைத்து நின்றது.

மேலாடை ஒதுங்கிய பாலாடை மேனி, பார்த்தவனை பரிதவிக்க வைக்க, அவனது பார்வை மாற்றம் கண்ட பாவையும், தன் நிலை உணர, ஈரச் சேலை அவள் இழுவைக்கு ஒத்துழைக்க மறுக்க,

இடையில் இளைப்பாறியவன் பார்வை சற்றே மேலேற, மூச்சுத்திணறிலில் திக்கு முக்காடிப் போனான் வஞ்சியின் வஞ்சகமில்லா இளமையில். 

மன்னவனின் பார்வைச்சூட்டில் உருகிய மங்கை, பரிதவித்து திரும்பிக் கொள்ள, இளமையின் ஏகபோக செழிப்பாய் பின்னழகில் பித்துப்பிடித்தவன் கண்களில் சட்டென இரத்தவரியோட, குப்பென காதுகள் அடைத்துக் கொண்ட காளையனுக்கு… தண்ணீருக்குள் இருந்தும் தாகம் எடுத்தது.

திரும்பி நின்றவளை தொட்டித் திட்டோடு அழுத்தி பின்னோடு இறுக்கி அணைக்க, கன்னியின் பாதங்கள் ஒன்றன் மீது ஒன்று ஏறி பிண்ணிக் கொள்ள, தவிப்பாய் கண்மூடி அவன் மார்பில் சாய்ந்தவள் செம்பருத்தியாய் சிவந்து பூத்துக் கிடந்தாள். இருவரின் இதயத் துடிப்பும் ஒத்திசைந்து பறைகொட்ட, இறுக்கியவனின் இறுக்கமும், பின்கழுத்தில் உரசிய அவனது அனல் மூச்சுக்காற்றும், இதழ்கள் நடத்திய முத்த ஊர்வலமும், தன்னவன் தாபத்தின் அளவை தன்னவளுக்கு கடத்த… வெந்து தணிந்தது இருவரின் இளமைக்காடும்.

ஓஹோ காதல் என் கவியே

நீ என் அருகில் வந்தாலே

உலகம் ஏன் இருளுது

பகல் இரவாய் மாறுது

வளைவினில் எல்லாம்

வளைந்து தொலைந்து

போவேன் நானே

நீயே வெண்பனியே

தீயின் சுவையும் நீயே

 மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

தவறுகள் இனி சரி என மாற

தொலைவுகளை தொலைப்போம்

ஒன்றாய் வா

அடி ராட்சசியே கூச்சம் காணலையே ஓ

உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே ஓ

ஒரு வேதியல் மாற்றம் என்னுள்

உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே

உன் இடையில் ஊர்வலம் செல்ல

என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே 

விடு விடு என்றே 

உதடுகள்தான் கெஞ்ச

உனை கொஞ்சி தீருமோ ஆசையே

முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற

மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

தவறுகள் இனி சரி என மாற

தொலைவுகளை தொலைப்போம்

ஒன்றாய் வா… 

தொட்டித் தண்ணீரில் வெள்ளிப் பாலமாய், நிலவொளி தகதகக்க, முத்தப் பேனா கொண்டு முகவுரை எழுதத் தொடங்கியவன், முடிவுரை எழுத மறந்தான். 

நூலாடை விலக்கி நீராடை உடுத்த, வெட்கம் களைவது எளிதாயிற்று இருவருக்கும். நீருக்குள் இருவரும் கரைந்து ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து போயினர். தொலைந்தவர்களின் தேடல் அதிகமாக,

சாரல் மழையாய் குளிர்வித்து சூடேற்றியவன், புயலாய் உருமாறி, அவளை வாரிச்சுருட்டி அள்ளிக்கொண்டவன், அலைகடலாய் ஆர்ப்பரிக்க, 

“ஈசா…” எனும் ஒற்றை அழைப்பில்,‌ அவனை அணைத்து ஆலிங்கனம் செய்து, ஆற்றுப்படுத்தியவள், ஈசனின் ருத்ரதாண்டவத்தை ஆனந்த தாண்டவமாய் மாற்றி, ஆழ்கடலாய் தனக்குள் அடக்கிக் கொண்டாள் அவனது சிவசங்கரி. அடுத்து அங்கு ஒலித்தது எல்லாம் ஈசா… எனும் பேதையின் பிதற்றல்களே. அவனுக்கும் சிவா… எனும் உச்சரிப்பே.

நீருக்குள் துவங்கிய புனலாட்டம், பள்ளியறையில் தொடர்ந்து கொண்டிருந்தது. முத்தங்கள் கொண்டு முடிவுரை எழுத, அம்முத்தங்களே மீண்டும் முன்னுரை ஆனது. 

ஆதி மனிதனின் ஆரம்ப படைப்பு அங்கே அரங்கேறிக் கொண்டு இருந்தது கால வரையறையின்றி. யாரோ இன்றோடு உலகம் தன் இயக்கத்தை முடித்துக்கொள்ளும் என்று கூறியிருப்பார்கள் போலும்.

விடியலின் துவக்கம் அவர்களுக்கு உறக்கத்தின் ஆரம்பம் ஆகியிருந்தது. 

     **********

“என்னடீ… அப்படிப் பாக்குற.‌ எனக்கே ஒரு மாதிரியா இருக்கு.” என கிணற்றுத் திட்டில் அமர்ந்து இருந்தவள் மீது, நீருக்குள் மிதந்தவாறே தண்ணீரை அள்ளி வீசி கேட்க,

“நைட்டு இதையே தான் நான் சொன்னே. நீ கேட்டியா? நீ உன் வேலையைப் பாரு. நா… என் வேலையப் பாக்குறே.”

“உன் வேலையா?”

“ஐத்த மகன சைட்டடிக்கிற வேலை.” என கூறிவிட்டு, கால்சட்டையுடன் நீருக்குள் அசராமல் நீந்திக் கொண்டிருந்தவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் கண்களில் சிறு பயமும் இருந்தது. 

பயத்தில் கிணற்றுக்குள் இறங்க மறுத்தவளை மல்லுக்கட்டி, படி வழியே அழைத்து வந்து திட்டில் அமர வைத்திருந்தான். திட்டு வரைக்குமே தண்ணீர் அலைமோதியது. கால் வரை மட்டும் உள்ளே வைத்து படியில் அமர்ந்து இருக்க, அவனோ மீண்டும் கிணற்றின் மேலே ஏறி அங்கிருந்து வேங்கைப் பாய்ச்சலாய் உள்ளே குதித்து, ஆழம் சென்று மேலே வரும் வரை படபடப்பாக பார்த்தவளைத்தான் கேள்வி கேட்டுக் கொண்டே நீந்தினான்.

 அவள் அருகில் நீந்தி வந்தவன், “சிவா… இப்ப நீ நகம் கடிக்கிறது இல்லையா?” எனத் திட்டில் அமர்ந்து இருந்தவளை, காலால் நீரில் அலைந்தவாறே இடையோடு அணைத்துக் கொண்டு கேட்க, 

“நீ தான் திட்டுறியே. உனக்குப் பயந்துட்டு தான் நகம் கடிக்கிறது இல்ல. அதுக்குனே மருதாணி வச்சுக்கறே.” என அவன் கேட்டதின் அர்த்தம் புரியாமல், அவன் முன் கைவிரல் விரித்துக் காண்பிக்க, 

“நகம் கடிக்கத்தானே கூடாது. வெட்டலாம்ல?” எனக் கேட்டுக்கொண்டே, சுண்டுவிரல் பிடித்து மென்மையாகக் கடித்து நகப்பூ கொய்தவன்,

“தண்ணி பட்டதும் அங்கங்க எரியுதுடி.” என கிசுகிசுப்பாக, பாவமாய்க் கூற,‌ 

கேள்வியாய்ப் பார்த்தவளை, புருவம் தூக்கி கண்சிமிட்ட, அப்பொழுதுதான் அவளுக்கும் சட்டென மூளைக்குள் பல்பு எரிய,

“எரும, லூசு, பிசாசு உனக்கு கொஞ்சமாவது விவஸ்த்தை இருக்கா?” என சரமாரியாக தோளில் அடிக்கக்கத் தொடங்க, 

“ஏய்ய்… சிவா!” என்றவன் அவளது கைகளை இறுக்கிப் பிடித்து கழுத்தோடு கட்டிக் கொண்டான். 

“என்னதிது… சிவான்னு கூப்புடயில ஆம்பள மாதிரி தெரியலையா உனக்கு?” என்ற ஆகப்பெரிய சந்தேகம் இப்பொழுதுதான் உதித்தது அவளுக்கு.

“எனக்கே நைட்டு லைட்டா சந்தேகம் வந்துச்சுடி.” என வில்லங்கமாய் சிரித்தவனை முறைக்க மட்டுமே முடிந்தது. ஏனெனில் அவளது கைகள் இப்பொழுது அவனது கைப்பிடிக்குள். 

மோகம் கொண்ட ஆணுக்குள் சிறு நாணம் கலந்த பெண்மையும், தாபம் கொண்ட பெண்ணிற்குள் நாணம் களைந்த ஆண்மையும் நாசுக்காய் பூத்த தருணம் அது.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்ற அர்த்தநாரி தத்துவம் அரங்கேறிய சமயமும் அது தான். அங்கு ஈசன் சகம் வழங்கவில்லை தன் சகிக்கு. சக்தியிடம் இருந்து சகம் பெறுகிறான்.

உலகில் உயிர்கள் உருவாக்கத்தின் மூலாதாரமே கடவுளாக உருவம் கொடுக்கப்பட்டுள்ளன. கோவிலில் இருக்கும் கற்ப கிரகத்திற்கும் கருவறை(பெண்வடிவம்) என்று தான் பெயர். அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இறை வடிவிற்கும் லிங்கம்(ஆண்வடிவம்) என்று தான் பெயர்.

பெண்ணின்றி ஆண் இல்லை. ஆணின்றி பெண் இல்லை. கோவிலாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி. 

இங்கு தோற்பவனே வெற்றி பெறுகிறான். இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தோற்று தொலையவே விழைந்தனர்.

“ஈசா… எப்படி இவ்வளவு கரெக்டா ட்ரெஸ் எடுத்துட்டு வந்துருக்க.” என பேச்சை திசைமாற்ற எண்ணியவள், அவன் சென்னையில் இருந்து வாங்கி வந்த புது சல்வார் பற்றி கேட்டாள். 

காலையில் அவளை எழுப்பியவன், குளிக்குமாறு கூற, “ட்ரெஸ் வேணுமே, ஈர ட்ரெஸ் காயட்டும். அதுவரைக்கும் தூங்கிக்கறே.” என, சாக்கு சொல்லிவிட்டு மீண்டும் போர்வைக்குள் சுருண்டவளை,

“சாப்பாட்டுப் பையோட இன்னொரு பேக் இருந்தத பாக்கலியா?” என அட்டைப் பெட்டி ஒன்றை கொடுத்தான். சென்னையில் இருந்து அவளுக்காக வாங்கி வந்தது. இளமஞ்சள் நிறத்தில் இளஞ்சிவப்பு பூக்கள் தெளித்த சல்வார், இளஞ்சிவப்பு கலர் பேன்ட், அதே கலரில் துப்பட்டா. குளித்துவிட்டு அணிந்து வர, வெடித்த தென்னம்பாலை நிறத்து மேனிக்கு அவ்வளவு அழகாய்ப் பொருந்திப் போயிற்று, அளவு உட்பட. 

“இந்தவாட்டி தான் இங்கேயே குளிக்க விட்டே. அடுத்தவாட்டி வரும் போது கெணத்துல தான் குளிக்கணும். அதுக்குள்ள நீச்சல் பழகுற.” எனக் கூறிவிட்டு தான் அவளை கிணற்றுக்கே அழைத்துப் போனான். 

ஆடை அளவு பற்றி அவள் கேட்க, “கண் அளக்காததையா கை அளக்கப் போகுது? வேணும்னா இன்னொரு தடவ அளந்து பாக்கட்டுமா?” என்றவனின் சில்மிஷப் பேச்சில், அவனது கண் அளந்ததும், கை அளந்ததும் நினைவிற்கு வர,

“ச்ச்சீ… உனக்கு கொஞ்சங்கூட வெக்கமே இல்ல…” என, செவ்வானமாய் பொய்க்கோபத்தில் சிவந்து நின்றவளை, தண்ணீர் விட்டு மேலே வந்தவன் கைகளில் அள்ளிக் கொண்டு படியேற, இந்த முறை சமத்தாக கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 

துள்ளினால் கீழே இருப்பது கிணறாயிற்றே. இறக்கமே இல்லாமல் நீச்சல் பழகிட்டு வா என உள்ளே போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தான். 

error: Content is protected !!