KV-14

14

விஜயின் கால்கள் ஒருவித உணர்வை அவனுக்கு ஏற்படுத்த, எப்போதும் போல ஒரு லயித்த நிலையில் இருந்தாள் ஜானவி. இருவரும் அவரவர் எண்ணங்களில் மூழ்கி இருக்க அந்த இருள் அவர்களை உள்வாங்கிக் கொண்டது.

ஜானவிக்கு அந்த இருள் புதிதல்ல, பல முறை யாரும் அறியாமல் வந்திருக்கிறாள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவள் புதிதாகவே உணர்வாள். விஜய்க்கு இது புத்தம் புது அனுபவம், என்றாலும் அவன் அந்த இருட்டுக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் சென்ற பிறகு அந்த இருள் அவனுக்குப் பிடிபட்டது. அதற்குள் இருப்பவை கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. சுற்றிலும் அந்தச் சுவர்களில் கற்களின் மேடு பள்ளங்கள் மட்டும் இருக்க, ஒரு சிறிய , மிகச் சிறிய சரிவில் அவன் கால்கள் பதிந்தது. சமதளம் இல்லை அது என்பதை உணர்ந்தான். ஆனால் அந்த சரிந்த பகுதி அவனை அந்த நாக பந்தக் கதவுகளிடம் ஒப்படைத்தது. கண்டான்! கண்ணாரக் கண்டான்! அவன் நினைவில் பதிந்த அந்த இரண்டு நாகங்கள் எதிரெதிரே இருந்த கதவை அவனது கண்களால் கண்டான்.

அவனால் ஆச்சரியப் படாமல் இருக்கவே முடியவில்லை. அச்சு அசல் அவன் கண்ட அந்த காட்சி இப்போது நேரில் காண்கையில் அவனுக்குப் புல்லரித்தது.அருகில் சென்றான். அவன் செல்வதைக் கண்ட ஜானவி உடனே அவன் அருகில் சென்றாள். அவளது உடமையை அவன் காண்பது அவளுக்கு ஒரு பொசசிவ்நெஸ் உணர்வைக் கொடுக்க, ‘என் அனுமதி இன்றி நீ தொடக் கூடாதுஎன்பது போலப் பார்த்தாள்.

அவள் இப்படி அருகில் வருவதைக் கண்டு முறைத்தவன், “வாட்?” என்க,

இதுக்கு மேல யாராலையும் போக முடியாது.இது தான் அந்தக் கதவு. இதுக்கு சாவியும் இல்ல. அதை திறக்க வழியும் இல்லை.” கதவின் முன்னே வந்து நின்றாள்.

அதைக் கண்டுபுடிக்கத் தான் நான் வந்திருக்கேன் மிஸ்.” கையைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

கிருஷ்ணமாச்சரியை வைத்து இவனை தன்வசப் படுத்தும் முன் அவனை அந்தக் கதவிடம் நெருங்க விடக் கூடாது என்று பயந்தாள்.

அது எனக்குத் தெரியும். ஆனா இந்தக் கல் பாறை கதவைத் தவிர ஒண்ணுமில்ல.” மீண்டும் அவள் அதையே கூற,

நீங்க கொஞ்சம் நகருங்க. அத நான் பாத்துகறேன்.” அவனுடைய குரல் அவளைச் சற்று தள்ளியே நிறுத்தியது. அவளை வேறு வழியின்றி ஒதுங்க வைத்தது. அவன் தனியாக வரவில்லையே. கையில் அரசாங்க உத்தரவோடு அல்லவா வந்திருந்தான். அவளுக்கு வேறு மார்க்கம் இல்லை. இந்த நேரத்தில் இந்த கிருஷ்ணனனி வேறு எப்படி அழைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்குத் தெரியவில்லை. அவரும் அரூபமாக அங்கேயே தான் இருக்கிறார் என்று.

ஆம்! கிருஷ்ணமாச்சாரி இவர்கள் இருவரும் சந்திக்கப் போவதை அறிந்து அவரும் தன்னுடைய வேலை நடக்க, அங்கே தான் உலவினார். வழக்கம் போல் தன்னுடைய உடலை பத்திரமாக விட்டுவிட்டு வந்திருந்தார்.

ஜானவி விலகியதும் அந்தக் கதவை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தான் விஜய். உடலுக்குள் ஒரு அதிர்வலை பரவ ஆரம்பித்தது. அன்று வள்ளிக்காட்டில் கேட்ட ஓம் ஒலி எங்கோ ஒலிப்பது போல இருந்தது. இருண்டு இருந்த அறையில் வெளிச்சம் பரவி பாம்புகள் இரண்டும் வழிவிட, அந்தக் கதவு திறப்பதும் , மற்றும் அங்கே நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஃபார்வர்ட் (farward) செய்தது போல வேகமாக அவன் முன் ஓடியது. மீண்டும் அந்தக் கதவு மூடிக் கொண்டது. பாம்புகள் இரண்டும் ஒருமுறை சீறி அடங்கியது. மீண்டும் இருள் சூழ்ந்தது. அனைத்தும், இவை அனைத்தும் ஒரே நொடியில் கடந்துவிட்டது. விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவன் உடலில் ஏற்ப்பட்ட அதிற்வு அடங்கியது. எல்லாமே ஷனப் பொழுதில் தோன்றி மறைய, அவனுக்கு இது எங்கோ அவனை அழைத்துக் கொண்டு போகப் போவதை உணர்ந்தான்.

தான் கண்டது நிஜமா என்று அவன் குழம்ப, அங்கே நின்று கொண்டிருந்த மற்ற இருவருக்கும் அவனுக்கு நடந்தது எதுவும் தெரியவில்லை. சக்தி வாய்ந்த கிருஷ்ணமாச்சாரிக்கு கூட அவன் உணர்வதை அறியமுடியவில்லை.

அவரையும் மிஞ்சிய சக்தி ஒன்றை அவர் எதிர்கொள்ள உள்ளதை புரியாமல் உணர்வுகளுக்கு ஆட்பட்டு நிற்கும் விஜய்யை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

விஜய்க்கு புரிந்தது. அந்த இடம் அவனுக்கு எதோ வழியைக் காட்ட முற்படுகிறதென்று ஆனாலும் எப்படித் தெரிந்து கொள்வது என்று திக்குத் தெரியாமல் நின்றான். ஒருவேளை அடுத்த அடி எடுத்து வைத்தால், மீண்டும் அந்தக் காட்சிகள் வருமா என சந்தேகத்தோடு, அடுத்த அடி எடுத்து வைக்க , இம்முறை ஏமாந்தான். எதுவும் முன்பு போலத் தெரியவில்லை.

சில நொடி தயங்கியவன், மனதில் அனந்துவை நினைத்துக் கொண்டு, அந்தக் கதவுகளை நோக்கி நடந்தான். அவனுடன் கதவுகளை நோக்கி நடக்க இருந்த தனது கால்களை முயன்று கட்டுப்படுத்தினாள் ஜானவி.

அந்தக் கதவில் இருந்த பாம்புகள் இரண்டும் அவனையே பார்ப்பது போல உணர்ந்தான். கதவிற்கு அருகில் வந்ததும் அதை தீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்ள, மெல்ல தனது கையை அதில் வைத்தான். ஒரு காற்று அல்லாத விசை அவனைத் தாக்க, அவனது மேல் அங்கவஸ்திரம் பறந்தது. அவனது உடல் மொத்தமும் வெந்தது போன்ற உணர்வு. யாரோ அவனை பிடித்து கதவுக்குள் இழுப்பது போல அவனது கைகள் வலி எடுத்தது. கையை எடுக்கவும் முடியாமல் வாய் திறந்து கத்தவும் முடியாமல் திணறினான்.

உடனே அருகில் வந்த ஜானவி அவனைப் பிடித்து இழுக்க அனைத்தும் அடங்கியது. நிலை தடுமாறி கீழே அமர்ந்தான். அவளும் அவனுடன் கீழே விழ,

ஜானவிக்கு பரபரப்பு,

என்ன ஆச்சு?” அவனை ஆவலாகப் பார்த்துகொண்டிருந்தாள்.

விஜய் தன்னை சமன் படுத்த சில நொடி எடுத்தவன், பின்பு நத்திங்என எழுந்து கொண்டான். அவளை உதாசீனம் செய்து மீண்டும் கதவில் சென்று கை வைத்தான். அது பழக்கப்பட்டது போலத் தோன்ற, அவனுக்கு மீண்டும் காட்சிகள் வந்து போனது, எதையும் தெளிவாகப் பார்க்க முடியாதபடி அது வேகமாக ஓடியது. எதையாவது முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று அவன் கண்களுக்குள் அதைத் தேட, அது ஒருநிலைக்கு வந்து அரண்மனைக்குள் சென்று ஜான்வி ஒளித்து வைத்திருந்த அந்தப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் வந்து நின்றது.

அது கிழித்து வைத்திருப்பது அவனுக்குப் புரிந்தது. அந்தப் புத்தகமும் அவனுக்குத் தெரிந்தது. பிறகு காட்சிகள் மறைந்து இருள் சூழ , மிகவும் சாதாரணமாக அதிலும் தெளிவாக வந்த விஜயை ஜானவியும் கிருஷ்ணமாச்சாரியும் கண்டனர்.

கிருஷ்ணமாச்சாரிக்கு ஏதோ அசௌகரியம் ஏற்பட்டது. அதற்குமேல் கிருஷ்ணனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. அவரது உடலில் தீ பட்டது போல உணர்ந்தார். அதனால் ஆவியை உடனடியாக உடலில் புகுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயம் அவருக்கு வந்தது. உடனே வேறு சிந்தனை எதுவும் இல்லாது அந்த இடத்தை விட்டு மறைந்தார்.

விஜய் தன்னை உதாசீனப் படுத்தி சென்றது ஜானவிக்குக் கோபத்தைத் தர அவனிடம் எதுவும் இம்முறை கேட்கக் கூடாது என்று விறைப்பாக நின்றாள்.

அவள் எதிரே மேல் அங்கவஸ்திரம் இல்லாமல் விஜய் வந்து நிற்க, அவள் இரண்டடி பின் நகர்ந்தாள். அவளது கண்களை கூர்ந்து நோக்கியவன்,

மார்த்தாண்ட வர்மா… தொண்டையை செருமியவன், “மார்த்தாண்ட வர்மா கைப்பட எழுதின புத்தகம் வேணும்.” அவளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.

ஜானவிக்கு இத்தனை நேரம் இருந்த தைரியம் போய் வியர்த்து நடுங்க ஆரம்பித்தது. இவன் முதலிலேயே வேறை அசைப்பான் என கொஞ்சமும் அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் என்னவெல்லாம் அவனை வைத்து திட்டம் போட்டிருந்தாள், ஆனால் அவனோ இவளை வேறு வழியில் நகர்த்திக் கொண்டிருந்தான்.

விஜயை தன்வசப் படுத்தி அவனை ஒரு பொம்மை போல ஆட்டி வைக்க நினைத்தவளுக்கு இப்போது அவன் தன்னை ஆட்டிவைக்கப் போவதாகத் தோன்றியது. மனதில் அனைத்தையும் மறைத்துக் கொண்டு அவனிடம் தெரியாதது போல நடந்துகொண்டாள்.

என்ன.. என்ன புக்? எனக்குத் தெரியாதே? லைப்ரரில கிடைக்குமா?” அப்பாவி போல அவள் கேட்க, அவனுக்கு நரம்பு புடைத்துக் கொண்டு கோபம் வந்தது. கை முஷ்டி இருக்க கையை மூடி , பல்லைக் கடித்து கோபத்தை அடக்கினான்.

நீ ரொம்ப ஸ்மார்ட்னு எனக்குத் தெரியும். ஆனா என்கிட்ட அதையெல்லாம் ட்ரை பண்ணாத. நீயாவே குடுத்தீனா பெட்டர், இல்லனா நீ அத எங்க வச்சிருக்கன்னு கூட சொல்லனுமா?” அவன் அவளை ஒருமையில் அழைத்து மிரட்டினான்.

ஹல்லோ..என்ன சொல்றீங்க. எனக்கு எதுவும் தெரியாது. கொஞ்சம் மரியாதையா பேசுங்க.” பதிலுக்கு எதிர்த்து நின்றாள்.

சரி வா, உங்க அரண்மனைக்குப் போய் தேடலாம். அப்ப தெரிஞ்சிடும்.”

அவ்வளோ ஈசியா எல்லாரும் அரண்மனைக்குள்ள நுழைய முடியாது.” ஏளனப் புன்னகை புரிய,

என்னால முடியும்.” எதுவேண்டுமானாலும் செய்யும் துணிவு அவனிடம் தெரிந்தது.

நீங்க எந்த புத்தகத்தை பத்தி கேக்கரீங்கன்னே எனக்குப் புரியலன்னு சொல்லிட்டு இருக்கேன்.” அவனிடம் வாக்குவாதம் செய்ய

ஹேய்!” கத்திவிட்டான். பின் பொறுமையாக கண்ணை மூடித் திறந்தவன்,

இங்க பாரு. என் பொறுமைக்கு ஒரு லிமிட் உண்டு. ஆனா இப்ப கொஞ்ச நாளா அந்த பொறுமை கூட இல்லாம தான் இருக்கேன். ரொம்ப பேசினா அப்பறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. என்னை அனாவசியமா கோவப் படுத்தாத. நீ அந்த கடைசி பக்கத்த கிழிச்சு வச்சிருக்கறது கூட எனக்குத் தெரியும். சோ சொல்லிடு.” விஜய் தன்னுடைய பொறுமையை இழந்தான்.

ஜானவிக்கோ இனி அவனிடம் எதையும் மறைக்க முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டாள். அவளிடம் அந்தப் புத்தகம் இருப்பது மட்டுமல்லாமல் அதை அவள் கிழித்தது முதற்கொண்டு அவன் சொல்வது ஆச்சரியமாகவும் இருந்தது. அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

அதனால் அவன் வழியில் சென்று காரியத்தை முடிப்பது தான் சிறந்தது என்று தீர்மானித்து,

சரி..ஒத்துக்கறேன். ஆமா அந்த புக் இருக்கு. ஆனா அது எங்க குடும்பம் மட்டும் அறிஞ்ச ஒன்னு. அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.?”

இந்த மட்டிலுமாவது ஒதுக்கொண்டாளே என்று இருந்தது அவனுக்கு.

எனக்கு இந்த கதவைத் தொட்டதும் சில விஷன் (vision) வந்தது, அதுல தான் தெரிஞ்சுகிட்டேன். அநேகமா அந்த புத்தகத்துல தான் இந்தக் கதவைத் திறக்கும் மார்க்கம் இருக்கும். அதை நான் பாத்தாகணும்.”

அந்த புக்க நான் உங்களுக்குக் காட்றேன். ஆனா எனக்கு நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ணனும்.” பழையபடி பேச ஆரம்பித்தாள்.

என்ன?”

அந்தப் புத்தகத்துல இருக்கறபடி நீங்க இந்த கதவைத் திறக்கனும்னா, அதுக்கு நீங்க பல இடங்களுக்குப் போகவேண்டி இருக்கும். ஆனா நீங்க எங்க போனாலும் நானும் வருவேன். இந்தக் கதவு திறக்கற வரை நானும் கூட இருப்பேன். அது எவ்வளவு கஷ்டமான பயணமா இருந்தாலும் சரி. என்னை நீங்க சகிச்சுக்கிட்டு இருக்கணும். ஓகே வா?” அவளின் நோக்கம் நிறைவேற அவளுக்கு இதுதான் சரியான வழியாகப் பட்டது.

சிறிது நேரம் யோசித்தவன், “அப்போ அல்ரெடி அதைப் படிச்சு நீ பல இடங்களுக்கு போயிருக்க அப்படித் தானே?” அவளை சரியாக கணித்தான்.

எஸ். ஆனா இது வரைக்கும் நான் சரியான இடத்துக்குப் போகல. உங்களுக்குத் தெரியுதா பாக்கலாம். என்னோட டீல் உங்களுக்கு ஓகே தான..?” மீண்டும் அங்கேயே வந்து நிற்க, அவனும் சரியென தலையாட்டினான்.

கிருஷ்ணமாச்சாரியின் உடல் மீது அருகே இருந்த விளக்கு சரிந்து அதற்கு தீ காயம் ஏற்பட்டு இருந்தது. அந்த எரிச்சலில் இவர்களின் இந்த வாக்குவாதங்களையும் முடிவுகளையும் அவர் அறியாமல் இங்கு வந்திருந்தார்.

ஆனால் அதை செய்தது சாட்சாத் அனந்துவே தான். விஜய்க்கு அந்த இடத்தில் தெரிந்த அனைத்தும் அவரது சக்தியால் தான். எப்படியும் அவனுக்கு உதவ அருகேயே இருக்கவேண்டும் என முடிவு செய்திருந்தார்.

விஜய்யை அரண்மனைக்கு அழைத்துச் சென்றால் ஜானவி. கேட்டவர்களுக்கு அவர் ஒரு அரசாங்க அதிகாரி என்றவரையில் மட்டும் பதில் தந்தாள். அரண்மனைக்கு உள்ளே செல்லாமல், முன் முற்றத்தில் இருந்த அவர்களது அலுவலக அறையில் அவனை இருக்கச் சொல்லிவிட்டு அவள் அந்தப் புத்தகத்தை ஒரு பையில் போட்டு மறைத்து எடுத்து வந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும் கதவைத் தாழிட, விஜய்க்கு அந்தப் புத்தகம் யார் கண்ணிலும் படாமல் காக்கத் தான் செய்கிறாள் என்று புரிந்துகொண்டான்.

அவனுக்கு முன் இருந்த டேபிளில் அந்த பரம்பரை புத்தகத்தை எடுத்து வெளியே வைத்தாள்.

error: Content is protected !!