தீங்கனியோ தீஞ்சுவையோ – 11

தீங்கனியோ தீஞ்சுவையோ – 11

” சாரி வினய்.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டனா?”

“அதெல்லாம் இல்லை உத்ரா..  சரி வா தியேட்டர்க்குள்ளே போகலாம்.. “

“உன் கிட்டே தான் டிக்கெட் இருந்துதுல வினய்.. உள்ளே போய் இருக்கலாம்ல”

“உன்னைவிட்டு போக மனசு வரல உத்ரா.. ஒன்னாவே போகலாம் வா” என அவன் சொல்ல அவள் உள்ளம் சட்டென்று ப்ரணவ்வை நோக்கி ஓடியது.

அன்று ஒரு நாள் அவனுக்காக தான் காத்து இருந்து காட்சியை தவறவிட்டது நியாபகத்தின் நிழலில் ஆடியது. அவள் செயலற்று நின்று இருந்த நேரம் அவளது கைப்பற்றி உள்ளே திரையரங்கிற்கு கூட்டிக் கொண்டு போனான். அவள் நடைபிணமாய் அவன் பின்னால் போனாள்.

இருக்கையில் அமர்ந்து திரையை பார்த்தவளுக்கோ கவனம் படத்தின் மேல் இல்லை ப்ரணவ்வின் மீது தான் இருந்தது.

அன்று ஒரு நாள் இதே போல தானே நானும் அவனும் ஒன்றாய் திரைப்படத்திற்கு வந்தோம். அவன் தோளில் சாய்ந்த போது உணர்ந்த  கதகதப்பு, அவனின் வாசனை இன்னும் கூட என்னை சுற்றி வீசி கொண்டு இருக்கிறதே. காலம் இவ்வளவு வேகமாக செல்லுமா?

அவனின் அணைப்பு அவனின் வாசனை மீண்டும் எனக்கு கிடைக்காதா?

ப்ரணவ் உடனான என் வாழ்க்கையை என்னால் மீட்டு கொள்ள முடியாதா? என் ப்ரணவ் எனக்கு திரும்ப கிடைக்க மாட்டானா?

எண்ணங்கள் அவளை சுழற்றி அடித்துக் கொண்டு இருந்த நேரம் வினய் அவள் கைகளைப் பற்றினான். விதிர்த்துப் போய் நிமிர்ந்தாள்.

“ஏன் டாம் இப்படி இருக்க??.. உன் மனசை கொஞ்சம் ஆறுதல்படுத்துறதுக்காக தான் உன்னை கஷ்டப்பட்டு தியேட்டர்க்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன்..  இங்கே வந்தும் கூட இப்படி முகத்தை வெச்சு இருக்கியே டா.. வடிவேலு காமெடிக்கு மொத்த தியேட்டரும் சிரிக்கும் போது நீ மட்டும் இப்படி உம்முனு உட்கார்ந்துட்டு இருக்கிறதை பார்க்க சகிக்கல.. ப்ளீஸ் உத்ரா சிரி ” என அவன் கேட்க அவள் ஒப்புக்கு சிரித்தாள்.

“நான் கேட்டது நிஜ சிரிப்பை உத்ரா… இது போலி சிரிப்பு” என அவன் சொல்ல தலையை குனிந்து கொண்டாள்.

என் நிஜ சிரிப்பையும் சரி நிஜ அழுகையையும் சரி  ப்ரணவ் ஒருவனால் மட்டுமே வர வைக்க முடியும். வினய் உனக்காக உன் மனம் காயப்படக்கூடாது என்பதற்காக நான் சிரித்தால் அது போலியாக தான் இருக்கும். உன்னை காதலிக்க முயன்றாலும் அப்படியே. அது போலிக் காதலாக மாறிவிடும் வினய். உன்னை காயப்படுத்தவும் என்னால் முடியவில்லை. காதலிக்கவும் முடியவில்லை. சித்ரவதையாக இருக்கிறதே. திரும்பி வினய்யைப் பார்த்தாள்.

“என்னாலே முடியல வினய்??”

“என்ன ஆச்சு உத்ரா??” என்று பதற்றமாக கேட்டான். அந்த பதற்றத்தில் சொல்ல வந்ததை முழுங்கிவிட்டு

“இல்லை வினய்.. இங்கே என்னாலே உட்கார்ந்து படம் பார்க்க முடியல… வெளியிலே போலாமா?” என்றாள்.

“அட இவ்வளவு தானா? நான் கூட ஏதாவது உடம்பு சரி இல்லையோனு பயந்துட்டேன். வா உத்ரா வெளியே போகலாம்.. ” என்றான்.

அவள் வினய்யையே விழியகலாது பார்த்தாள். இந்த இரு வாரங்களாக அவன் அவள் மீது எடுத்துக் கொண்ட அக்கறையும் அரவணைப்பும் அவளை கண்கலங்க வைத்தது.

இந்த அக்கறைக்கு எல்லாம் நான் கொஞ்சம் கூட தகுதியானவள் இல்லை. நீ என்னை மகாராணியாக தான் நடத்துகின்றாய் வினய். என்னை என் மனதை புரிந்து கொண்டு ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து தான் செய்கின்றாய். ஆனால் என் மனதால் தான் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என் சந்தோஷத்திற்காக நீ செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நான் பதிலுக்கு கோபப்படுகிறேன்.

ப்ரணவ்வின் மீதான வருத்தம் உன் மீது கோபமாய் வெளிப்படுகிறது. உன் அன்புக்கு நான் தகுதியானவள் இல்லை என்ற குற்றவுணர்வு தான் உன் மீது கோபமாய் வெளிப்படுகிறது.  மன்னித்துவிடு வினய்.. என்று எண்ணிய படி அவன் பைக்கின் பின்னால் அமர்ந்தாள்.

அவன் பைக்கை எடுக்கவும் அவளது அம்மா இவளுக்கு போன் செய்யவும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் சொல்லு மா என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

” வெளியிலே போறேனு என் கிட்டே சொல்லிட்டு போனியே,, அப்போ கண்டிப்பா ப்ரணவ் கூட தானே போய் இருப்ப..உத்ரா ப்ரணவ் கிட்டே போனை குடேன்.. அவன் ரெண்டு வாரமா எனக்கு போனே பண்ணல… அவனை திட்டணும்”  என்று அவளது அம்மா சொல்ல விக்கித்துப் போனாள்.

உண்மையை உடைக்க வேண்டிய தருணம். குரலில் இல்லாத தைரியத்தை வரவழைத்து கொண்டு

“உன் கூட மட்டும் இல்லை அம்மா.. என் கிட்டே கூட ரெண்டு வாரமா அவன் பேசல. இனி பேசவும் மாட்டான் மா.. நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டோம். ” என்றாள் கமறிய குரலில்.

அதைக் கேட்டு அவரது தாய் பதிலுக்கு எதுவும் பேசவில்லை. இவளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் அதிர்ச்சியானது போல அவரும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார் அதனால் தான் பேசவில்லை என்று எண்ணி மேலும் எதுவும் பேசாமல் வைத்துவிட்டாள்.

அவளது கவனம் பாதையின் மீதோ பயணத்தின் மீதோ பதியவில்லை . ப்ரணவ்வுடன் கைக்கோர்த்து நடந்தவரை தான் அவளுக்கான பாதை இருந்தது. எப்போது அவன் இவளது கையைவிட்டு சென்றுவிட்டானோ அப்போதே அவளது பாதையும் பயணமும் அறுபட்டுப் போனது. அங்கேயே அப்படியே நின்றுவிட்டாள்.

ஏதேதோ எண்ணிக் கொண்டு இருந்தவளின் எண்ணத்தை கலைத்தது வினய் போட்ட சடென் ப்ரேக்.

நிமிர்ந்துப் பார்த்தாள். பார்த்தவளது கண்களில் மீண்டும் கண்ணீர் நிறைந்துவிட்டது.

ப்ரணவ்வும் அவளும் எப்போதும் வரும் உணவகத்திற்கு தான் வினய் அழைத்துக் கொண்டு வந்து இருந்தான்.

அவன் முன்னே செல்ல இவள் எதுவும் பேசாமல் பின்னே தொடர்ந்தாள். அவர்கள் எப்போதும் அமரும் இருக்கையை நோக்கி வினய் செல்ல இவள் செயலற்று போனாள்.

எத்தனை எத்தனை நினைவுகள் புதைந்து கிடக்கின்றது, அந்த இருக்கையில்.

உணவை விட்டுவிட்டு கண்களை விழுங்கிய தருணங்கள்.  யாரும் அறியாமல் சட்டென்று கைப்பற்றி அவனது உள்ளங்கை வெட்பத்தை கடன் வாங்கிய தருணங்கள்..  எல்லாம் அவள் நெஞ்சை வதைத்தது. அந்த நினைவுகளின் கணத்தை அவளால் தாங்க முடியவில்லை.

ப்ரணவ் இருக்கும் உலகம் கோபமற்றதாக வெறுப்பற்றதாக இருந்தாலும் அவன் இல்லாத உலகம் இவ்வளவு  வெறுமையானதாக தோன்றுகிறதே.

என்னால் அவனுடைய கோபத்தை வெறுப்பை கூட தாங்கி கொள்ள முடியும். ஆனால் அந்த வெறுமையை சுத்தமாக தாங்கி கொள்ள முடியவில்லையே.. உள்ளம் அரற்றியது…

எதுவும் பேசாமல் கருத்தில் எதுவும் நிறையாமல் அமர்ந்து இருந்தவளது உள்ளம் சட்டென்று பரபரப்பானது,  அவளுக்கு தெரியும் இது ப்ரணவ்வின் வாசனை என்று.. இங்கே எங்கோ இருப்பதை போல தோன்ற வேகமாய் திரும்பி பார்த்தாள்.

அவளுடைய ப்ரணவ் தான் அந்த உணவகத்திற்குள் நுழைந்து கொண்டு இருந்தான். விழியகலாது அவனையே பார்த்தாள். இந்த இரண்டு வாரத்தில் அவனுடய தோற்றமே மாறிப் போய் இருந்தது.

மனத்தளர்வால் ஏற்பட்ட உடல் தளர்வு போல. கண்களில் எப்போதும் இருக்கும் அந்த மின்னல் இல்லை. ஒளியற்றுப் போய் இருந்தது. உதடுகளில் எப்போதும் இருக்கும் அந்த சிரிப்பு இல்லை. சோகம் ததும்பி இருந்தது. அவளுடைய ப்ரணவ்வை அப்படி காண சகிக்கவில்லை. சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.

வெயிட்டர் வந்து உணவுகளை ஆர்டர்  கேட்க இவள் எப்போதும் போல ப்ரணவ்விற்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்து இருந்த ப்ரணவ் என்ன ஆர்டர் செய்கிறான் என்று உற்று கேட்டாள். அவன் அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து கொண்டு இருந்தான். பல நாட்கள் கழித்து உத்ராவின் இதழ்களில் புன்னகை கீற்று தோன்றியது.

உணவு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிய  ப்ரணவ் அப்போது தான் உத்ராவையும் வினய்யையும் பார்த்தான். அவர்களை ஒன்றாய் கண்டவுடன் இதயம் சுக்குநூறாய் உடைந்து சிதறியது. அவள் அருகில் இருக்கும் போது வெளிப்படாத இந்த பேரன்பும் அதீத காதலும் அவள் வேறு ஒருவருடன் நெருங்கும் போது உக்கிரமாய் தன்னை வெளிப்படுத்திவிடுகிறது.

அவளை, அவள் அன்பை அடைய எனக்கு இனி தகுதியில்லையா? வாய்ப்பில்லையா? உள்ளம் கதறியது.

அவனது அந்த மௌன கதறல் அவளது காதுகளுக்கு கேட்டுவிடக்கூடாது என்று எண்ணி வேகமாய் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டான்.

செல்லும் அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை வினய் அழைத்தான்.

” உத்ரா நீ அன்னைக்கு என் கிட்டே ஐ லவ் யூ னு சொல்லிட்டேன்றதுக்காக ” என்று அவன் சொல்ல வந்த  வாக்கியத்தை முழுவதாய் சொல்லி முடிக்கும் முன்பே உத்ராவின் அலைபேசி அலறியது. எடுத்து காதில் வைத்தவள் அதில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டு  அதை விட பன்மடங்காய் அலறினாள்.

💐💐💐💐💐💐💐💐💐💐

அலைபேசியை சிதறவிட்டு விட்டு வெறித்துப் போய் அமர்ந்து இருந்த உத்ராவை வினய் உலுக்கினான்.

“ஹே ஹே என்ன ஆச்சு டாம்?  ஏன் இப்படி சிலை மாதிரி அதிர்ச்சி ஆகி உட்கார்ந்து இருக்க சொல்லு டாம். என்ன ஆச்சு? எனக்கு ரொம்ப பயமா இருக்கு உன்னை இப்படி பார்க்க… “

“அம்மா இறந்துட்டாங்க வினய்” என்றவளது குரலில் உயிரற்று இருந்தது.

அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை. அப்படியே சிலையாகி சமைந்து இருந்தாள்.

“உத்ரா உத்ரா அழு அழுதுடு. ” என்று அவன் எவ்வளவு கெஞ்சியும் அழுதபாடில்லை. விக்கித்து அமர்ந்து இருந்தவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு அவளது வீட்டிற்கு சீறிப் பாய்ந்தான்.

ஏற்கனவே தன் மகளை பற்றி கவலைக் கொண்டு இருந்த அந்த தாய் மனம் அவர்கள் பிரிந்து விட்ட செய்தியைக் கேட்டு வருத்தப்பட்டு இதய அதிர்ச்சியில் இறைவனிடம் சென்று சேர்ந்து இருந்தது.

வினய் வண்டியை நிறுத்த நடைப்பிணமாக வந்தவள் இறந்து கிடந்த தாயின் முகத்தையே பார்த்தாள். அவள் மூளை அவளுக்கு அழ சொல்லி கட்டளையிடவே இல்லை.  செயலற்று அமர்ந்து இருந்தவளுக்கு திடீரென்று உயிர் வந்தது. மீண்டும் அவளுக்கு பழக்கப்பட்ட வாசனை நாசியை நிறைத்தது.

திரும்பி பார்த்தாள்.

ப்ரணவ் தான் வந்து இருந்தான்  கண்களில் கண்ணீரோடு. அதுவரை செயலற்று நின்று கொண்டு இருந்தவளுக்கு திடீரென்று உயிர் வந்து இருந்தது. ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டாள். அவனும் பதிலுக்கு இறுக்கி அணைத்தான்.

“ப்ரணவ் ப்ரணவ் உன் மீனு குட்டி என்னை விட்டு போயிட்டா.. ஏன் போனானு கேட்டு சொல்லு டா.. ” என்று அவனிடம் வாதிட்டபடி தன் தாயின் உடலருகே கூட்டி சென்றாள். செயலற்று அவனும் அவள் பின்னாலேயே போனான்.

“அம்மா இங்கே பாரு.. உன் மருமகன் வந்து இருக்கான்.. இரண்டு வாரமா உன் கிட்டே பேசலல மா அவன்.. வா மா எழுந்து வந்து அவன் கூட சண்டை போடு ” என தாயைப்  பிடித்து உலுக்கினாள். ஆனால் தாயின் நிலையில் மாற்றம் இல்லை. அதைக் கண்டு கண்கள் குளம் கட்ட மீண்டும் ப்ரணவ்விடம் திரும்பினாள்.

“அம்மாவை எழுந்துக்க சொல்லு ப்ரணவ்” என்று அவனது தோளின் மீது சாய்ந்து கதறினாள்.

பதில் மொழி பேசாது அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு தலையை வருடிக் கொடுத்தான்.

அவளுக்கு ஆறுதல் சொல்ல  அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. தன் செயலின் மூலம் அவளுக்கு ஆறுதல் கொடுத்து கொண்டு இருந்தான். அவன் தோளில் சாய்ந்து அழுதவள் அதுவரை சேர்த்து வைத்து இருந்த மொத்த அழுகையையும் வடித்து கொட்டினாள்.

அவளது தாய் மீனாட்சியை இடுகாட்டிற்கு அழைத்து செல்ல முற்பட்ட போது அவள் அன்னையை கட்டிக் கொண்டு எடுக்கவிடாமல் தடுத்தவளை கண்களில் திரையிட பார்த்தான். அவளது கைகளைப் பற்றி கொண்டு

“என் அம்மு இல்லை.. அம்மா உன் கூட தான்டி இருக்காங்க.. இருப்பாங்க… இப்போ போறது மீனுவோட உடம்பு மட்டும் தான்.. உயிர் இல்லை புரியுதா??.. தயவு செய்து அம்மாவோட இறுதி சடங்கை முறையா பண்ண விடு டா… ” என்றவனது சொல்லிற்கு கட்டுப்பட்டு அவள் அன்னையிடம் இருந்து விலகியவள் தன் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டாள்.

எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டு திரும்பிய ப்ரணவ் சாத்தி இருந்த அவளது அறைக்கதவை தட்டினான்.  பதில் இல்லை.

உத்ரா என்று மெதுவாக அழைத்தான்.  உடனே கதவு திறந்து கொண்டது.  சோக சித்திரமாய் காட்சியளித்தவளை கண்டதும் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“எல்லாம் சரியாகிடும் அம்மு.. மீனுக்குட்டி எங்கேயும் போகல.. உன் பக்கத்துல தான் உன்னை சுத்தி தான் இருப்பாங்க.. அழக்கூடாது சரியா…” என அவன் சொல்ல அவள் தலையை மேலும் கீழுமாக அசைத்து சரி என்றாள்.

“சரி வா சாப்பிடலாம்” என்று அவன் அழைக்க வேண்டாம் என்று மறுத்தாள்.
என் உத்ரா இல்லை.. வாடி சாப்பிட ” என அவன் மன்றாட அவள் அப்போதும் வேண்டாம் என மறுத்தாள்.

இவளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தால் சரிப்பட்டு வர மாட்டாள் என எண்ணியவன் நேராக சாப்பாட்டை போட்டுக் கொண்டு வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

கன்னத்தில் ஆடிய முடியை காதோரம் சொருகிவிட்டு ஒவ்வொரு கவளமாய் எடுத்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

அவளையே விழியகலாது பார்த்து கொண்டு இருந்தவளுக்கு திடீரென விக்கல் எடுக்க தண்ணீர் புகட்டினான். குடித்தவள் அவன் மார்பில் ஆதுரமாய் சாய்ந்து கொண்டாள்.

“ஏன் ப்ரணவ் அம்மா என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க ” என்றவளை கோபமாக பார்த்தான்.

“அப்போ நான் இல்லையாடி உனக்கு..  எதுக்கு தனியா விட்டுட்டு போனாங்கனு சொல்ற.. “

“ஆனால் நீ தான் நான் போறேனு சொல்லும் போது கூட என்னை தடுக்காம அப்படியே போக விட்டுட்டியே.. வினய்யை என் கூட வெச்சு பார்க்கும் போது உனக்கு கோபமே வரலயா டா… ”  என அவள் கேட்க அவன் சட்டென்று நின்று அமர்ந்தான்.

வினய் என்ற பெயர் அவனை கல்லாக மாற்றி இருந்தது. அவர்களுக்குள் இருந்த பிரிவு அப்போது தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது.

அவள் கண்ணீரை கண்டதும் பிரிவைப் பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை ஓடிச் சென்று அவளை கட்டிக் கொண்டான். அவளும் அப்படி தான்.. இடையில் வினய் என்ற ஒருவன் இருப்பதே அவர்களது நியாபகத்தில் எழவே இல்லை.

நியாபகம் வரும் போது இருவரும் விதிர்த்துப் போய் அமர்ந்து இருந்தார்கள். ஆமாம் எங்கே போனான் இந்த வினய் என்று தோன்ற அவசர அவசரமாக வினய்யை அழைத்தாள்.

“வினய் எங்கே இருக்க??”

“வீட்டுக்கு வெளியிலே இருக்கிற கடையிலே நின்னுட்டு இருக்கேன்… “

“சரி.. வீட்டுக்குள்ளே வா வினய்.. “

“இதோ வரேன் உத்ரா.. “என்று சொன்னவன் அவளது முன்பு வந்து நின்றான். அவள் முகம் முழுக்க ஒரு விதமான இறுக்கம்.

அவளுடைய சஞ்சலப்பட்ட முகத்தை காண சகியவில்லை வினய்யிற்கு.

செல்லும் முடிவெடுத்து இருக்கிறாள்..  ஆனால் நான் வருத்தப்படுவேனோ என்று தயங்குகிறாள். புரிந்தது அவனுக்கு. அவளை மேலும் வருத்த முயற்சிக்கவில்லை அவன்.

அவளுடன் இருப்பதை விட அவள் சந்தோஷமாக இருப்பதை தான் அவன் பெரிதும் விரும்புகிறான். அவளது கலங்கிய முகமும் மதில் மேல் இருக்கும் பூனையின் நிலையையும் இதற்கு மேல் பார்க்க முடியாது. ஒரு முடிவோடு அவனாகவே முதலில் பேசினான்.

“உத்ரா எனக்கு புரியுது.. அன்னைக்கு  என் கிட்டே do you love me னு கேட்டது என் மேலே இருக்கிற காதலாலே இல்லை… ப்ரணவ் மேலே இருக்கிற கோபத்தாலானு எனக்கு தெரியும் உத்ரா.. அதனாலே நீ என்னை காதலிக்கிறேனு சொன்னதை நான் பெருசா எடுத்துக்கவும் இல்லை.. நம்பவும் இல்லை… அதனாலே எனக்கு பெருசா எந்த வலியும் இல்லை உத்ரா.. நீ நான் கஷ்டப்படுவனோனு நினைச்சு குற்ற உணர்வோட என் கூட இருக்க வேணாம்… எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்.. நீ ஹேப்பியா இருந்தா போதும் டா.. நான் கஷ்டப்படவே மாட்டேன்..

நான் எப்பவும் உன் டாம் தான் ஜெர்ரி.. உனக்கு என் மேலே காதல் வரலனா கூட உன் மேலே எனக்கு இருக்க காதல் போகாது.. ஆனால் நான் ப்ரெண்டா என் லிமிட்டை க்ராஸ் பண்ண மாட்டேன்.. u can trust me… ” என்று அவன் சொல்ல ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டாள். இப்போதும் அந்த அணைப்பில் வெறும் தோழமை தான் இருந்தது.

“ஜெர்ரி உன் மேலே ட்ரஸ்ட் இருந்ததாலே தான் நான் உன் கிட்டே பேசிட்டு இருக்கேன்.. நான் உன்னை ரொம்ப நம்புறேன்…
ரியலி சாரி ஜெர்ரி… உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. தேவையே இல்லாம நான் எடுத்த அந்த முடிவு நம்ம மூணு பேரையும் கஷ்டப்படுத்திடுச்சு.. ஐ யம் ரியலி சாரி ” என்றவளது தலையில் தட்டினான்.

“ஹே லூசு.. நீ எதுக்கு இப்போ இத்தனை சாரி சொல்ற. உண்மையா நான் கஷ்டப்படல ஜெர்ரி.. நீ ஹேப்பியா இருக்கிற வரை நான் கண்டிப்பா கஷ்டமே பட மாட்டேன்.. ” என்று பேசியவனது தோளை தொட்டான் ப்ரணவ். திரும்பி வினய் பார்க்க அவனை நோக்கி பேசத் தொடங்கினான் ப்ரணவ்.

“சாரி வினய்.. நீங்க அவளுக்கு propose பண்ணது அவள் மறுத்தது எல்லாம் எனக்கு தெரியும்.. உத்ரா என் கிட்டே எல்லாமே சொல்லி இருக்கா… அன்னைக்கு நான் உண்மையா உங்க ரெண்டு பேரையும் தப்பா நினைச்சு கோவப்படல வினய்.. உங்க நட்பு மேலே சத்தியமா நான் சந்தேகமே படல.. என் கோவம் எல்லாம் நான் அவளுக்கு பொருத்தமா இல்லாதவனா ஆகிட்டேனேன்ற ஆற்றாமையிலே வெளியே வந்த கோபம் தான்… ” என்ற ப்ரணவ்வை கண்களில் சிரிப்போடு பார்த்தான்.

“கண்டிப்பா ப்ரணவ்… உங்களை நான் தப்பாவே நினைக்கல.. எந்த பையனும் தான் காதலி வேற ஒருத்தனை அணைக்கிறதை பார்த்தா லைட்டா பொறாமைப்பட்டு கோபப்படுவான் தான்.. அந்த கோபம் தான் முதலிலே உங்களுக்கு வந்தது.. ஆனால் அடுத்து வந்த எந்த வார்த்தையிலேயும் நீங்க எங்க நட்பை கலங்கப்படுத்தி பேசவே இல்லை.. உங்க கோபத்துக்கான காரணம் எல்லாம் உத்ரா உங்களை  புரிஞ்சுக்கலயேன்ற ஆற்றாமையில வந்த வெளிப்பாடுனு என்னாலே புரிஞ்சுக்க முடியாது.. ” என்று அவன் சொல்ல

“தேங்க்ஸ் நண்பா என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு” என்று சொல்லிய ப்ரணவ் வினய்யை அணைத்துக் கொண்டான்.

“ஹேய் என் ஜெர்ரி எனக்கு மட்டும் தான் ப்ரெண்ட்.. உனக்கு லாம் ப்ரெண்ட் இல்லை… போ ப்ரணவ்.. ” என்று சொந்தம் கொண்டாடியவளின் தலையில்  தட்டிய ப்ரணவ் ” இனி அவன் எனக்கும் ப்ரெண்ட் தான் ” என்று சொல்லி   வினய்யை நோக்கி கைநீட்ட அந்த கைகளை பற்றிக் கொண்டான் வினய்.

தன் காதலனும் நண்பனும் ஒன்றாய் சேர்த்துக் கைகோர்த்து கொண்டு இருந்த அந்த காட்சியை கண்களில் பொங்கிய ஆனந்த கண்ணீரோடு பார்த்தாள்.

Leave a Reply

error: Content is protected !!