தேன் பாண்டி தென்றல் – 15

தேன் பாண்டி தென்றல் – 15

 
15
 
‘நான்சென்ஸ் ஆஃப் த ஸ்டுப்பிட் ஆஃப் த இடியட் ஆஃப் த ஆஷ்;’ என்ற தொண்டை வரை வந்ததை 
“ப்ளீஸ் டோண்ட் வேஸ்ட் அவர் ஆபீஸ் டைம் ஆன்ட் மைன்ட் யுவர் பிசினஸ்” என்று சொல்லி முடித்து போனை வைக்க மறுபடி போனை அடித்தாள் அவள். உடனே போனை எடுத்தவன்-
 
“அதர்வைஸ் ஐ வில் கம்ப்ளைன்ட் டூ யுவர் மேனேஜ்மென்ட்” என்ற குண்டைப் போட்டுவிட்டு வேலையில் ஆழ்ந்தான்.
 
மறுபடி சில நாட்கள் அவளைக் காணவில்லை. அவனும் ஓரளவு மறந்திருந்தான் இந்த நிகழ்சிகளை.
அதிலிருந்து அடுத்த வாரம் அவன் அலுவலகத்தில் நுழைந்தவுடன் அவனை வரச் சொன்னார் மானேஜர்.
 
‘என்னவாயிருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே எதற்கம் இருக்கட்டும் என்ற நோட்பேடை கையில் எடுத்துக் கொண்டான். பேனாவைத்தான் சட்டைப் பையில் எப்போதும் வைத்திருக்கிறானே?  
பவ்வியமாக அங்கே போய் நிற்க சிசிடிவி மூலம் அலுவலக நடைமுறையை கண்காணித்துக் கொண்டு இருந்த மானேஜர் சரவணன் இவனை ஏற இறங்க பார்த்துவிட்டு எரிந்து விழுந்தார்.
 
“உன்னை சும்மாதானே வரச் சொன்னேன்? எதுக்கு நோட்பேட்? நானே ரிலாக்ஸா இருக்கனும்னு பாத்தாலும் நீ விட மாட்ட போல. “ என்று கடுகடுத்தார்.
 
“என்ன சார் ஆச்சு?” என்றான் இலகுவாக.
 
“என்னத்தை சொல்ல? மயிலாடுதுறையில நம்மளோட  ஒரு வில்லேஜ் பிராஞ்ச்ல  ஏதோ பிரச்சனையாம். என்னை போய் பாக்க சொல்றாங்க.” என்றார் சலிப்பாக.
 
“அட எம்.எல்.ஏ.வாலயே முடியலியாம். என்ன பாக்க சொல்றாங்க _ மாடுலேசன்ல சொல்லுங்க சார்” என்ற இவன் சிரிக்க அவரும் மெல்ல புன்னகைத்துவிட்டு  தனது நாற்காலியில் தளர்வாக அமர்ந்தார்.
 
“இதுக்குதான் உன்னைக் கூப்பிட்டேன்.ரொம்ப டென்ஷனா வந்தேன்.இப்ப பெட்டரா இருக்கு” என்றவாறு அருகில் இருந்த கணிணியில் பார்வையை பதித்தார். 
 
“அப்புறம் சார்?” கேள்வியாக நிறத்தியவனை- 
 
 “பக்கத்துல சர்க்கஸ் போட்ருக்காங்களாம். வர்றியா பாண்டி? போய் பார்த்துட்டு வரலாம்? டிக்கெட் நான் எடுக்கறேன். இன்னிக்கு பாங்க் குளோஸ் பண்ணதும் என்கூடவே வந்திடு. இங்க என் பேச்சிலர் ரூம் போய்ட்டு ரெப்ரஸ் ஆகிட்டு கிளம்பலாம்”  என்று சொல்லி அவன் அறைக்கு  துரத்திவிட்டார்.
 
அவர் குடும்பம் கோவையில் வசிக்கிறது. வாரம் ஒரு நாள் சென்று வருவார். சென்னை டூ கோவை பயணம் அவருக்கு சுலபமாக இருந்தது. அடுத்து அவர் கோவைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்க அவருக்கு வந்த தகவலில் நொந்து போய் இருந்தார்.
அவருக்கு இங்கே சொந்த வீடு இருந்தது. எப்போதாவது அவரது குடும்பத்தினர் இங்க வந்தால் வீடு இரண்டுபடும். அதனால்தான் இவன் தனது அப்பார்ட்மென்டிற்கு அவரை அழைப்பதில்லை. தனது குடும்பத்தார் ஞாபகங்கள் இருக்கும் வீட்டை அவரை விட்டுவிட்டு வர  மாட்டார் என்று தெரியம்.
 
கையில் கொண்டுபோன நோட்பேடை வலது சுட்டுவிரலில் சுழற்றியவாறே வெளியே வர ஸ்பெசல் பீஸ் கட்டிக் கொண்டு இருந்த தென்றல் கண்களில் பட்டாள்.
 
அதைக் கட்டாமல் தீராது என்று அவளது கிளாஸ் மேம் சொல்லி விட்டதால் அவளைப் போல நாளது தேதிவரை தொகை செலுத்தாத தனது நண்பிகள் கூட்டத்துடன் வந்திருந்தாள்.
 
கல்லூரி என்னதான் ட்ரஸ்ட் மூலம் நடந்தாலும் மாணவிகளிடம் ஓரளவு கட்டணம் வகூலிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. 
 
தென்றலின் அம்மா அவளை இங்கே சேர்க்க இது ஒரு பெண்கள் கல்லூரி என்பது மிக முக்கிய காரணம்.
 
பணம் கட்ட வரிசையில் நின்ற தென்றலும் இவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைத் திருப்பிக் கொண்டாள். ‘எதற்கு வம்பு? படிக்க வந்த இடத்தில் படிப்பதை விட்டு விட்டு  நமக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை?’ என்பதாக இருந்தது அவள் நினைப்பு. 
 
அது அவள் முகத்திலும் எழுதி ஒட்டி இருந்ததுதான் பூதப்பாண்டியனுக்கு எரிச்சலைத் தந்தது. பார்க்க முடியாதாமா இவனை? அப்புறம் என்ன தைரியத்தில் பேரை கேட்டாளாம்?
 
எரிச்சலுடன் இவன் இரண்டு எட்டு எடுத்து வைக்க அவன் அறை வந்திருந்தது. அதற்குள் நுழைந்தவனுக்கு வேறு எந்த எண்ணமும் எழ வாய்பபுகள் கொடுக்காமல் வேலை அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.
அதோடு விட்டுவிட்டால் நன்றாக இருந்திருக்கும். 
ஆனால் அதே சர்க்கஸிற்கு அவளும் வருவாள் என்று அவன் கனவா கண்டான்?
 
ஆனால் நனவில் நடந்த அந்த சந்திப்புதான் அவர்கள் வாழ்வை மாற்றியது என்றும் சொல்லலாம்.
 
மாணவிகளை அவர்கள் காலேஜ் பஸ்ஸில் அதே சர்க்கஸிற்கு அழைத்து வந்திருக்க திருவிழாவை வேடிக்கை பார்க்கும் சிறுமியாக அவள் கண்கள் அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தன. இன்னும் டிக்கெட் எடுத்து உள்ளே செல்லவில்லை. அதற்கு கவுண்டர் ஓப்பன் ஆகவேண்டும் அல்லவா? ஆர்வக் கோளாறில் நிகழ்சி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் முன்னதாகவே இவர்கள் வந்திருந்தனர். 
 
இவர்களுடன் வந்திருந்த ஹாஸ்டல் வார்டன் கம் ப்ரபசர்களில் ஒருவர்  “கேர்ல்ஸ் எல்லோரும் ஒரே இடமா இருங்க. டிக்கெட் நான் வாங்கிப்பேன். ஸ்னாக்ஸ் வாங்கனும்னா மணி கலெக்ட் பண்ணிட்டு  ரெண்டுபேர் மட்டும் என்கூட வாங்க. பிசிக்ஸ் மேம் மத்த கேர்ல்ஸ் கூட நிப்பாங்க. வாங்க.வாங்க  அங்க இங்க சும்மா நிக்க கூடாது. “ அவர் கஷ்டம் அவருக்கு. இத்தனை வயதுப் பெண்களை ஒரு பொது இடத்திற்கு கூட்டி வந்து பத்திரமாக அழைத்துச் செல்வது பெரிய சவால்தான். 
 
‘பசங்க சும்மா இருந்தாலும் இந்த வாலுங்க சும்மா இருக்காதே?’ நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது அவருக்கு. 
 
தென்றலின் சுற்றி வந்த வட்டக் கண்கள் ஓரிடத்தில் நிலைபெற அங்கே பாப்கார்ன் விற்றுக் கொண்டு இருந்தார்கள். 
 
“ஐ பாப்கார்ன்!” என்று துள்ளினாள்.
 
“ஏற்கனவே ஸ்னாக்ஸ் வாங்க போயாச்சு. இப்ப மறுபடியும் சொல்ல முடியாது. “ என்றவர்களை ஒதுக்கிவிட்டு ஸ்னாக்ஸ் வாங்கப் போனவளுக்கு போனைப் போடலாம் என்று கையில் எடுத்தவள் மறுபடி உள்ளே வைத்தாள். அதற்கு  வேறு தனியாக வாங்கிக் கட்ட வேண்டும். 
 
“பாப்கார்ன் இல்லாம பச்சத் தண்ணி குடிக்க மாட்டேன்” என்று இவள் கால்களை உதைக்க தோழிகள் சிரிப்புடன் சமாதானப்படுத்த முயல அந்த நேரம் அங்கே பூதப்பாண்டியன் இரண்டு பாக்கெட் பாப்கார்னுடன் இவர்களைக் கடந்தான். 
சும்மா போயிருந்தால் பரவாயில்லை. அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டே போனது அவளை சீண்டி விட்டது.
 
அவன் இத்தனை நேரம் இவள் செய்த அக்குறும்பை பார்த்துக் கொண்டுதானே இருந்தான். ‘அறுந்த வாலு. ஹாஸ்டல் மேனேஜ்மென்ட் இவ்வளவு இறுக்கிப் பிடிக்கலின்னா இவ யாரையும் விட்டு வச்சு பாத்திருக்க மாட்டா’  
 
“ஏய் அங்க பாருடி. அதோ அந்த சார் கையில பாப்கார்ன் வச்சிருக்காரு. வாங்கிட்டு காசைக் குடு” தனக்குத் தெரிந்த தத்துவத்தை சொன்னாள் ஒரு அரை வேக்காடு.
 
“ச்சே. அதுலாம் தப்புடி” என்ற சொல்லிக் கொண்டு இருந்தாலும் – 
இவனைப் பார்த்துவிட்ட தென்றல் எப்படியும் தெரிந்தவர்தானே  என்ற தைரியத்தில்  “ அசிஸ்டன்ட் மேனேஜர் சார். தாங்க் யூ சார்” என்றவாறு அவன் கையில் இருந்த பாப்கான் பாக்கெட்டுகளில் ஒன்றை அவன் சுதரிப்பதற்குள் உருவி விட்டாள். 
 
உடன் இருந்த மேம் காண்டாகி “வாட் இஸ் திஸ் தென்றல்? ஐ நெவர் எக்ஸ்பெக்ட் ப்ரம் திஸ். கிவ் இட் டூ ஹிம்“ என்று இவளைத் திட்டி விட அதை காதிலேயே வாங்காமல் அந்த கும்பல் பாப்கார்னை ஆட்டையைப் போட  “ சாரி சார். ப்ளீஸ் கெட் த மணி பார் தட் சார்” எனறு பம்மிக் கொண்டே இருபது ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டியவர் அவன் முகத்தில் தெரிந்த கோபாக்னியைக் கண்டு தயங்க அதற்கு மேலுமா அவன் அங்கே நிற்பான்?
 
‘இதுவும் வேண்டுமடா உனக்கு இன்னமும் வேண்டுமடா’ என்ற நொந்தவாறே சரவணனை அடைந்தான். அவருக்கு ஒரு பாக்கெட்டை கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்தான்.
 
அப்படி முன்னதாக வந்தவர்கள் உட்கார ஒரு அரங்கத்தில் போடப்ட்டிருந்த நாற்காலிகளில் அமர்நதிருந்தனர் அவர்கள்.
 
“எங்கப்பா உனக்கு பாப்கார்ன்?”
 
“ஒரு குரங்கு கையில இருந்து பிடுங்கிருச்சு”
 
“சர்க்கஸ்லதானே குரங்கு வரும்னு சொல்லி இருந்தாங்க. வெளியவே இருக்கா என்ன?” என வியந்தவருக்கு – 
 
“இப்ப வரும் பாருங்க. “ இவன் பதில் சொல்லி முடிக்கவும் அவள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. 
 
“பிங்க் கலர் டாப்ஸ்ல மங்கி வந்திருக்கு பாருங்க” என்ற காதோடு இவன் முணுமுணுக்க –
நிமிர்ந்து பார்த்தவர் சிரித்து விட்டார். “ நம்ம காலேஜ் பிள்ளைகளா? இந்த வயசுல அப்டித்தான்பா இருப்பாங்க”
 
 
“அது சரி. நீங்கதான் புள்ளைங்களைப் பெத்த புண்ணயவான் ஆச்சே. வேற எப்படி சொல்லுவீங்க?”
 
சரவணனுக்கு அவரது மகள் நினைவுக்கு வர மீண்டும் குடும்பத்தை நினைத்து ஏங்கிப் போனார். 
அவர் முகத்தைப் பார்த்தவன் “இவர் வேற சின்னக் குழந்தை மாதிரி வீட்டுக்குப் போகனும் வீட்டுக்குப் போகனும்னு அழுதுகிட்டு  “என்று செல்லமாக சலித்துக் கொண்டான். 
 
அவர் குடும்பத்தை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் குடும்பத்தில் தானும் ஒருவனாகி விட அவனுக்கு ஆசையாக இருக்கும். 
 
தென்றலின் பட்டாளங்கள் அதற்குள் பாதி தீனிகளைத் தின்று முடித்திருந்தனர். 
 
“சர்க்கஸ் டைம்ல சாப்பிட ஸ்னாக்ஸ் பத்தாதடி” என்ற இவள் கவலைப்படுவது இங்கிருந்தே தெரிந்தது. 
 
“இதுங்களுக்குத் தீனி வாங்கிப் போட்டே காட்டிக்கிறவன் ஓட்டாண்டி ஆகிடுவான்”
 
“சிறுசுங்க சாப்பிடறதை கண்ண வைக்காதப்பா. சரி. ஸ்க்ரீன் எடுத்துட்டான். வா. உள்ள போய் உக்காருவோம். “ என்ற இவனைக் கிளப்பிக் கொண்டு போனார் சரவணன்.
 
இத்தோடு முடிகிறதா என்றால் அதுவும் இல்லை.
 
அவர்கள் எல்லோரும் ஒரே வரிசையில் அமர இவர்கள் இருவரும் அதற்கு முன் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
 
சர்க்கஸ் ஆரம்பித்துவிட பின்னே ஒரே வளவளவென்று வேச்சுக் குரல் கேட்கவும் இவனுக்கு எரிச்சலானது.
 
“சார் கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க சார்” என்று சரவணனிடம் சொல்ல –
 
“அடாடாடா.. குரங்கு எப்படி சைக்கிள் ஓட்டுது பாரு” என்று வியந்து கொண்டிருந்தார் மனிதர். அடிக்கடி கண்ணை வேறு தட்டி தட்டி விழித்தார்.
 
“ சார் வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க சார். சின்னக் குழந்தை மாதிரி ஆச்சிர்யப்பட்டுகிட்டு?  இதுவரை நீங்க குரங்கு சைக்கிள் ஒட்டி பாத்ததே இல்லியா?” என்று குமுறினான்.
 
“என்ன பிரச்சனை உனக்கு?” 
 
“பின்னாடி பேசிட்டே இருக்காங்க சார்.
 
 
“பேசக் கூடாதுன்னு நீ சொல்லு. நீதான் தைரியமான ஆளாச்சே. நீ சொல்லு. அப்புறம் பாண்டி வர்ற வழியில லஸ்ஸி எனக்கு குடிச்சது கண்ணைக் கட்டுதுய்யா. இப்படியே தூங்கிட்டா சர்க்கஸ் முடிஞ்சதும் எழுப்பு”என்றார்.
 
“ சார் கலாய்க்காதீங்க சார். நான் சொன்னா மதிக்க மாட்டாங்க.  எக்ஸ்ராவாத்தான் பேசவாங்க. லஸ்ஸிய குடிச்சு தூங்கி வழியறதுக்கு எதுக்கு இங்க வந்தீங்க. அதுவும் என்னையும் கூட்டிட்டு?”
 
இவன் பேசப் பேச சரவணனுக்கு வேறு கண்கள் சொருக ஆரம்பித்து விட்டது. 
 
 
இவர்கள் இங்கே பேசி முடிப்பதற்குள் தென்றல் பின்னிருக்கையில் இருந்து கொஞ்சம் முன்னே வந்து “  சார் கொஞ்சம் தலையை சரிச்சு உட்காரீங்களா சார். மறைக்குது” என்று புகார் சொல்லவும் –
 
“அராத்து” என்று திட்டிவிட்டான். அவன் என்னவோ மெதுவாகத்தான் சொன்னான். ஆனால் அவள் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது. அடிக்கடி இப்படி திட்டு வாங்கியிருப்பாள் போல. அதுதான் உடனே கேட்டு விட்டது. 
 
தென்றல் சின்ன வயதில் இருந்து தந்தை இல்லால் வளர்ந்தவள்;. அதற்காக முதலில் பலர் அவளை அனுதாபமாகப் பார்க்க அது அவளுக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பேச்சுகளைத் தவிர்க்கவே அவள் குறும்புப் பெண் ஆனாள். அவள் வயதும் அதற்கு ஒத்து ஊத  எப்போதும்  அவளுக்கு ஒரு கேங்க் வேறு. ஆனால் நெருங்கிய தோழி என்ற யாரும் இருக்கவில்லை. தனது உள் மனதைச் சொல்லும் அளவு யாரையும் அவள் நெருங்க விடவில்லை. 
 
பள்ளியில் மல்லிகா டீச்சர் மகள் என்பதால் அனைத்து ஆசியர்களிடமும் சலுகை உண்டு. அத்தோடு நன்கு படிப்பவளும் கூட என்பதால் இப்பொருள் குறித்து அவள் தனியாக எதுவும் கவலைப்பட்டதில்லை.
 
கல்லூரிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகள்தான் அவள் தன்னை உருவேற்றிக் கொள்ள எடுத்த காலம். அதில் தன்னம்பிக்கையை அதிகம வளர்த்துகு கொண்டாள். நன்கு அறிகமானவர் தவிர யாரிடமும் சென்ற பேசவும் பயந்து கொண்டு இருந்தவள் அப்படி இருக்கக் கூடாது. பேசினால் என்ன தலையை சீவியா விடுவர்கள் என்றுதான் துணிந்து அன்று பூதப்பாண்டிக்கு போன் செய்தாள். 
 
அவன் மானேஜ்மென்ட்டில் புகார் செய்வேன் என்றதும் அப்படி செய்தால் அம்மா வரவேண்டி இருக்கும் என்றுதான் விட்டுவிட்டாள்.
 
கல்லூரியில் பெண்கள் படிப்பதும் கலர் கலராக உடை அணிவதுதான் பெரும்பாலும் மக்களுக்குத் தெரியும். 
 
அதுவரை பெற்றவர்களின் கைக்குள் இருந்தவர்களை திடீரென சமூகத்தை எதிர்கொள்ளும் போது  அது எத்தனை சின்ன விசயமாக இருந்தாலும் அதற்காக அவர்கள் தங்களை – தங்கள் மனதை தயார் செய்வது சாதாரணம் அல்ல.
 
ஒரு சில சமயங்களில் இப்படி வழங்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்டாலும் அதன் பின்விளைவுகளை தாங்கி நிற்பதும் சாதாரண விசயம் அல்லதான். 
 
சற்று கண்ணைத் தட்டி விழித்த சரவணன் ‘எதும் பிரச்சனையா?’ என்பதாக இவனைப் பார்க்க ‘அதுலாம் ஒன்னுமில்லை’ என்ற இவன் பார்த்து வைக்க அவர் தன் வேலையைத் தொடர்ந்தார்.
 
“சார் சாரி சார். நான் பாப்கார்ன் காசை குடுத்திடறேன். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏரியால வேற ரவுடியா ஃபார்ம் ஆகிட்டேன். அதான் வாங்குனேன். இனி இப்படி செய்ய மாட்டேன்” என அதற்குதான் திட்டுகிறான் என்று மன்னிப்பைக் கேட்டு நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
 
 “நீ எனக்கு காசைக் குடுக்கிறியா? எனக்கு காசுலாம் வேணாம்.” 
 
“வேற?”
 
“இன்னொரு பாக்கெட் பாப்கார்ன் வாங்கிக் குடுத்திரு” என்றான் சிரித்துக் கொண்டே. 
 
“இப்ப எப்படி வாங்குறது”
“அடுத்த தடைவ வாங்கிக் குடு”
 
“அடுத்த தடவையா?”
 
இவர்கள் இங்கே கடலை வறுத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருக்க ஆசையாக சர்க்கஸ் பார்க்க வந்திருந்த சரவணன் சேரில் இருந்தவாறே தூங்கி இருந்தார். அவரைப் பார்த்தவன் 
 
“ஆமா அடுத்த தடைவ. நாளைக்கு ஒரு பேட்ச் வருதுல உங்க ஹாஸ்டல்ல இருந்து. நீயும் வந்திரு”
 
‘அடேய். என்ன நினைச்ச பே இருக்க?’ என்று இவள் முறைக்க –
 
“டீல்” என்று வலது பெருவிரலை உயர்த்தினான். அவன்.
 
அவள் அதிர்ந்துவிட சர்க்கஸ் டியும் வரை பின்பக்கம் இப்போது அமைதியாகி விட்டது. கடைசியில் இவனும் சரவணனை எழுப்பி “சார் சர்க்கஸ் முடிஞ்சிருச்சு” என்று எழுப்பிக் கொண்டு போனான்.
 
உண்மையில் அவர்கள் போனது சர்க்கஸிற்கு அல்ல. அங்கே பக்கத்தில் ஒரு லஸ்ஸி கடை சரவணனின் ஃபேவரைட் கடை. அங்கே லஸ்ஸி குடித்து விட்டு ஊரை ஒரு ரவுண்டு வந்துவிட்டு வீட்டிற்குப் போனால் நிம்மதியாகத் தூக்கம் வரும் அவருக்கு. இன்று கூடுதலாக சர்க்கஸையும் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனால் பாண்டியை வெறுப்பேற்றியபோதும் சர்க்கஸ் போரடித்துவிட்டது. அதனால் இங்கேயே தூக்கம் வந்திருந்தது. 
 
அந்த நேரத்தில் பூதப்பாண்டியன் தன் மனதில் சில முடிவுகள் எடுத்தான். அதற்கு காரணமும் அவன் மனம்தான். 
அவை எப்படி ஒத்து வரும் என்ற யோசிக்க அந்தப் பொழுதை பயன்படுத்திக் கொண்டான். 
 
அவ்வப்போது பின்னால் இருந்து ‘ஹை’ என்ற சத்தம் வந்தாலும் இவனைப் பார்த்து விட்டு வாயை அடக்கிக் கொண்டார்கள். 
 
தென்றல் அவர்களிடம் இவனை பயங்கர ‘டெர்ரர்’ என்ற சொல்லி இருப்பாள் போல. இருக்கட்டும் இருக்கட்டும். அதுதான் நல்லது என நினைத்துன் கொண்டான். 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!