நிரல் மொழி 9.1

PhotoGrid_1598875920177

நிரல் மொழி 9.1

அடுத்த நாள் 

ஷில்பாவின் அலுவலகம்…

அன்று வந்த மின்னஞ்சலில் கூறியபடி, ‘வைஸ் ப்ரெசிடென்ட்’  உடனான சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. 

ஷில்பா மற்றும் அந்த ப்ரொஜெக்ட் சம்மந்தப்பட்ட முக்கியமான சிலரும் இருந்தனர்.

‘ரூட் காஸ் அனாலிசிஸ்’ நடந்தது, அதன் பின்னர் கஸ்டமருடன் நடந்த சந்திப்பு…  என எல்லாவற்றையும் சொல்லி முடித்திருந்தனர்.

நிறைய கேள்விகள் கேட்டகப்பட்டன. 

சில கேள்விகளுக்குப் பதில் சொல்லியும்… பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலும்… நேரம் கடந்து கொண்டிருந்தது.

கடைசியில், யாருக்கும் திருப்தி இல்லாமல் சந்திப்பு முடிவடைந்தது. 

எல்லாரும் சென்றதும்,

தனியாக ‘வைஸ் ப்ரெசிடெண்டுடன்’ ஷில்பா பேச ஆரம்பித்தாள். 

ஒரு அரைமணி நேரம் எடுத்துக் கொண்டு, பொறுமையாக நேற்று நடந்ததை ஷில்பா கூறி முடித்தாள்.

அவள் கூறியதை முழுதாகக் கேட்டு முடித்ததும், அந்த அறையில் ஓர் அமைதி நிலவியது. 

கேட்டவர் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்!!

“சார்” என்று அழைத்தாள்.

“ஷில்பா… இது எப்படி? இஸ் இட் பாசிபிள்?” என்று கேட்டார். 

“சார், ப்ராடைக்ட் செக் பண்ணிப் பார்த்தாச்சு. ரீசனே இல்லாம, பாய்லர் ப்ரஸ்ஸர் இன்கிரிஸ் ஆகுது. ஸோ, மால்வேர் அட்டாக்-க்கு பாசிபிலிட்டி இருக்கு” என்றாள்.

மீண்டும் இருவரும் யோசித்தனர். பின் நிறைய நேரம் விவாதித்தனர். 

சில முடிவுகள் எடுத்தனர். 

அதிலுள்ள சிக்கல்கள் குறித்துப் பேசினர். அதனால் வரும் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தனர். 

கடைசியில், “ஓகே ஷில்பா. டூ ஒன்திங்க்! கஸ்டமருக்கு ஒரு கிளியர் மெயில் அனுப்புங்க. அதுல கேப் டீடெயில்ஸ் மென்ஷன் பண்ணி, மால்வேர் அட்டாக்-ன்னு டவுட் பண்ணறோம்னு சொல்லிடுங்க” என்றார். 

“ஓகே சார்” 

“அன்ட் ப்ராப்பர் செக்கிங் வேணும்னு ஒரு ரெக்வஸ்ட் பண்ணுங்க. அவங்க சைடு-ல என்ன ரிப்லே  பண்ணறாங்கன்னு பார்க்கலாம்”

“ஓகே சார்”

“நான் மேனேஜ்மென்ட்-ல… கம்பெனி லீகல் அட்வைசர்-கிட்ட… இதுபத்தி டிஸ்கஸ் பண்றேன்” 

“ஓகே சார்”

“மால்வேர் அட்டாக்-னாலும் ப்ராடைக்ட் ஸ்கிராப்-தான். எ பிக் லாஸ்! பட், ஏன் இப்படி பண்ணறாங்க? உங்களுக்கு ஏதும் கெஸ் இருக்கா?”

“இல்லை சார்! அது தெரியலை”

“அப்புறம் எப்படி உங்களுக்கு ஆப்ரேட்டர்-கிட்ட கேட்கணும்னு தோணிச்சு?”

“சார்” என்று தடுமாறியவள், “ப்ராப்ளம் எங்கன்னு கண்டுபிடிக்க முடியலை. ஸோ, நான் இந்த மாதிரி இருக்கலாமேன்னு ஒரு கெஸ் பண்ணேன்” என்று சமாளித்ததாள்.

தன் நண்பன் உதவினான் என்று சொல்ல முடியாதில்லையா?! ஆதலால் சமாளித்தாள்!! 

“ஓ!” என்றவர், “அன்ட் ஒன் மோர் திங். இனிமே இன்ஃபார்மலா எதுவும் பண்ண வேண்டாம்” என்றார். 

“ஸூயர் சார். பண்ணமாட்டேன்”

“நான் திரும்பவும் கேட்கிறேன். ஆர் யூ ஸூயர் அபௌட் திஸ்?” என்றார். 

“யெஸ் சார். ஐ அம் ஸூயர்”

“ஓகே ஷில்பா! இஃப் ஸோ, நீங்க மெயில் சென்ட் பண்ணிடுங்க” 

“ஓகே சார். ஐ வில் டூ” என்றவள்,” “தேங்க் யூ சார்” என்று விடைபெற்றுக் கொண்டு, ஷில்பா வெளியே வந்தாள். 

தனக்கு உண்டான அறைக்குள் சென்றாள். 

முதல் வேலையாக மின்னஞ்சல் தட்டச்சு செய்தாள். 

எல்லா விவரங்களையும் சேர்த்துவிட்டு…  கடைசியில், நிகில் கேட்ட கேப் குறுஞ்செய்தி-யையும் கேட்டிருந்தாள். 

மீண்டும் ஒருமுறை கவனமாக எல்லாவற்றையும் வாசித்துவிட்டு, மின்னஞ்சலை அனுப்பிவிட்டாள்.

பின், நிகில் எதற்காக இந்தக் குறுஞ்செய்தியைக் கேட்டான்? என்று தனக்குள் கேள்வி கேட்டாள். 

விடை தெரியவில்லை! 

அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் 4.00 என்று காட்டியது.

இன்று சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டும் என்ற ஆசை வந்தது.

இதுநாள் வரை அலுவலகத்தில் இருந்து கிளம்பவே நேரமாயிவிடும். 

அதன்பின் நிகில் வீட்டிற்குச்  சென்றாலும், இந்தப் பிரச்சனையின் காரணமாகச் சந்தோஷமான சந்திப்பாய் இருப்பதில்லை.  

மிலாவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். 

மிலாவைக் கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நிகிலிடம், இந்த விடயத்தைச் சொல்ல வேண்டும்.

ஜெர்ரியுடன் விளையாட வேண்டும்.

முக்கியமாக, வெகு நேரம் பாமினி அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

இப்படி நிறைய ‘வேண்டும்’-கள்!

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், நிரம்ப நாட்களுக்குப் பின்னர் ஷில்பாவின் முகத்தில் ஒரு புன்னகை வந்தது.

அவ்வளவுதான்! அதற்கு மேல் தாமதிக்கவில்லை!!

உடனே கிளம்பிவிட்டாள், நிகில் வீட்டிற்கு!!

நிகில் வீடு 

நிகில், அலுவலகத்திலிருந்து வருவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. 

தினந்தோறும் இந்த மாலை நேரப் பொழுதுகள், ஜெர்ரிக்கும் மிலாவிற்குமானது! 

இருவரும் விளையாடுவார்கள்.

சேர்ந்து சிற்றுண்டி உண்பார்கள்.

ரைம்ஸ் பார்ப்பார்கள்.

இன்று… 

வாக்கரில் அமர்ந்து கொண்டு, ஜெர்ரி இங்கே… அங்கே… என வீட்டிற்குள் ஓடிக் கொண்டிருந்தான். 

அவன் பின்னேயே மிலாவும் ஓடிக் கொண்டு, மாலை உணவை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

அக்கணம் அழைப்பு மணி ஓசை!

‘யார் இந்த நேரத்தில்?’ என்று யோசித்த மிலா, ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு போய் கதவைத் திறந்தாள்.

ஷில்பாதான்!

“ஹே! ஷில்பா!! நீ என்ன இந்த நேரத்தில?” என்றாள் மிலா ஆச்சரியமாக.

“இன்னைக்கு கொஞ்சம் ஃபிரி! அதான்” என்றாள், ஜெர்ரியை மிலாவிடமிருந்து வாங்கிக் கொண்டே!

இருவரும் வீட்டிற்குள் வந்து, சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.

ஜெர்ரியை மடியில் உட்கார வைத்து… அவனுக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தாள், ஷில்பா. 

“ஃபேஸ்ல ஒரு ஹேப்பிநெஸ் தெரியுது” என்று கேட்டுக்கொண்டே, மிலா ஜெர்ரிக்கு ஊட்டினாள்.

ஷில்பா சிரிக்க மட்டும் செய்தாள்!

சிறிது நேரம், ஷில்பாவுடன் பேசிக் கொண்டே, ஜெர்ரிக்கு ஊட்டி முடித்திருந்தாள்.  

பின், “இரு ஷில்பா! ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வர்றேன்” என்று மிலா சமயலறைக்குள் சென்றாள்.

“மிலா, ஷாப்பிங் போகலாமா?” என்று சமயலறையில் இருப்பவளுக்கு கேட்கும்படி, ஷில்பா கத்திக் கேட்டாள். 

“நாளைக்கு ஹோலி ஷில்பா. கொஞ்சம் ஸ்நாக்ஸ் பண்ணனும்னு நினைச்சேன்” என்றாள், கைகளைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்து.

“நாளைக்கா ஹோலி?? மறந்தே போயிடுச்சு மிலா” என்றாள் ஷில்பா வருத்தமாக.

“பரவால்ல… விடு, உனக்கு வொர்க் டென்ஷன்”

“ஹோலிக்கு டிரஸ் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருந்தேன்-ல. அதைக் கூட மறந்துட்டேன் பாரு”

“அட! விடு ஷில்பா”

“விடலாம் முடியாது! நம்ம கண்டிப்பா ஷாப்பிங் போறோம். அப்படியே ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்திடலாம்” என்றாள் சந்தோஷமாக.

“எனக்கும் இது ஓகேதான்” என்று இழுத்தாள் மிலா. 

“அப்புறம் என்ன? கிளம்பு! போகலாம்”

“இரு ஷில்பா! நிகில்கிட்ட சொல்லிடலாம்” என்று நிகிலிற்கு அழைத்து, சற்று நேரம் பேசிவிட்டு… அழைப்பைத் துண்டித்தாள். 

அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், 

“என்ன சொன்னான்?” என்று கேட்டாள் ஷில்பா. 

“வீட்டுக்கு வர்றேன்னு சொல்றான்”

“எதுக்கு?” 

“நம்ம ரெண்டு பேர மட்டும் ஷாப்பிங் போகச் சொல்றான்”

“ஜெர்ரி??”

“அவன் வந்து பார்த்துப்பானாம்” 

“அதுவும் சரிதான்!” 

“சரி, நீ ஜெர்ரியைப் பார்த்துக்கோ. நான் வேற டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என்று, மிலா அறைக்குள் சென்றாள்.

ஷில்பா, மீண்டும் ஜெர்ரிக்கு விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தாள். 

சற்று நேரத்தில், அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது!

ஷில்பா சென்று கதவைத் திறந்தாள். 

நிகில்தான்!

உடனே, ஜெர்ரி ஷில்பாவிடமிருந்து நிகிலிடம் தாவினான். நிகிலும் ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டான். 

நிகில், ஷில்பா இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.

ஷில்பாவின் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு, “என்ன ஃபேஸ் பிரைட்டா இருக்கு?” என்று நிகில் கேட்டான்.

“மேனேஜ்மென்ட்-ல பேசிட்டேன். பார்க்கலாம் என்ன நடக்கும்னு?” 

“ம்ம்ம்” என்றவன்… சோஃபாவில் அமர்ந்து, ஜெர்ரியை மடிமேல் வைத்துக் கொண்டான்.

ஷில்பா, சாப்பாட்டு மேசையிலிருந்த சிற்றுண்டியைக் கொரித்துக் கொண்டிருந்தாள். 

“ஷில்பா, நான் ஒரு மெசேஜ் கேட்டிருந்தேன்ல… அது?” என்று கேட்டான்! 

“கஸ்டமர்கிட்ட கேட்டிருக்கேன் நிகில். பட், அந்த மெசேஜ் எதுக்கு?”

“உங்களுக்கு யூஸாகும்னு தோணுது. பார்க்கலாம்!” என்றவன், “நாளைக்கு லீவ் எடுக்கிறியா?” என்று கேட்டான்.

“இப்பதான் ஹோலி ன்னு தெரியும்! ஸோ, ஹாஃப் டே லீவ் எடுக்கணும்” என்றவள், “நீ?” என்று அவனிடம் கேட்டாள்.

“நான் வீட்ல இருக்கணும்னு மிலா ஆசைப்படுவா. ஸோ, லீவ்தான்”

இப்படி… இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, மிலா அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“வந்திட்டியா நிகில்? திரும்ப ஃபோன் பண்ணனும்னு நினைச்சேன்” என்று சொல்லி, ஒரு ‘சிப்பரில்’ தண்ணீர் கொண்டு வந்து நிகிலிடம் கொடுத்தாள். 

“இப்போதான் சாப்டானா?” என்று கேட்டுக் கொண்டே, மகனுக்குத் தண்ணீர் கொடுக்க ஆரம்பித்தான்.

“ஹாங் நிகில்” என்று சொல்லி, நிகிலின் அருகில் அமர்ந்தாள். 

“மிலா! நான் கார் எடுத்திட்டு, கீழ வெயிட் பண்றேன். நீ வந்திடு” என்றாள் ஷில்பா.

“ஷாப்பிங் எங்க ஷில்பா?” என்று கேட்டான் நிகில்.

“டிசைட் பண்ணலை நிகில்” என்று சொல்லி, தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

“ரொம்ப லேட் பண்ணிடாத” 

“சரி… சரி பை” என்று சொல்லிவிட்டு, ஷில்பா கிளம்பினாள்.

ஷில்பா வெளியே சென்றதும், 

“டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்” என்று மிலாவிடம் ஜெர்ரியைக் கொடுத்துவிட்டு, நிகில் எழுந்தான். 

“உனக்கு டீ போடவா, நிகில்?” என்று கேட்டாள். 

“அப்புறமா பார்த்துக்கிறேன்” என்றவன், சாப்பாட்டு மேசையில் கைப்பேசியை வைத்துவிட்டு, அறைக்குள் சென்றான். 

அவன் சென்றதும், 

‘டிரஸ் ஃபுல்லா தண்ணி கொட்டிருக்க ஜெர்ரி?’ எனச் சொல்லிக் கொண்டே, ஜெர்ரியின் உடைகளைக் கழட்டினாள். 

அக்கணம், நிகிலின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. 

எழுந்து சென்று, மிலா கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். 

இலக்கங்கள் ஏதும் தொடு திரையில் வரவில்லை! ஆனால், ‘காலிங்’ என்று மட்டும் வந்தது!! 

மிலாவிற்கு, அது வித்தியாசமாகத் தெரிந்தது. 

‘ஒருவேளை நிகில்தான் இப்படி மாற்றி இருக்கிறானோ?’ என நினைத்து… அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றாள். 

மறுமுனை அமைதி காத்தது. 

மீண்டும், மீண்டும் ‘ஹலோ’ என்று சொல்லிப் பார்த்தாள். 

மறுமுனையில் அமைதி மட்டுமே! 

அழைப்பைத் துண்டித்துவிட்டு, மிலா ஜெர்ரிக்கு உடை மாற்றினாள். 

இரண்டு நிமிடங்களில்… நிகில் வெளியே வந்தான். 

அவளிடமிருந்து ஜெர்ரியை வாங்கிக் கொண்டு, “பார்த்துப் போயிட்டு வரணும்” என்றான்.

“அதான் ஷில்பா இருக்காளே! அவ பார்த்துப்பா” என்று சிரித்தாள்.

அக்கணம், நிகிலின் கைப்பேசிக்கு மீண்டும் அழைப்பு வந்தது.

எடுத்துப் பார்த்தான்.

இம்முறையும் இலக்கங்கள் ஏதும் திரையில் வரவில்லை. 

நிகில் யோசித்துக் கொண்டே நின்றான். 

“யார் நிகில்?” என்றாள் மிலா, அவன் யோசித்து நிற்பதைப் பார்த்து! 

“தெரியலையே” என்றான், இன்னும் யோசித்த நிலையில் நின்று! 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியும் இப்படித்தான் வந்தது” என்றாள், அவன் கைப்பேசியின் தொடுதிரையைக் காட்டி! 

“நீ அட்டன் பண்ணியா?” என்றான் சட்டென! 

“ஹாங்! நான் ‘ஹலோ’ சொன்னேன். ஆனா, அவங்க பேசவேயில்லை” 

“மிலா! இந்தமாதிரி கால்ஸ் வந்தா, அட்டன் பண்ணக் கூடாது. சரியா?” என்று கொஞ்சம் அழுத்தமாக, அறிவுரை போல் சொன்னான். 

மேலும்… கைப்பேசி அழைப்பை ஏற்காமல், நிகில் அழைப்பைத் துண்டித்தான். 

“நீ கஸ்டமைஸ்டு மொபைல்-ன்னு ஏதோ சொல்லுவே-ல. அந்த மாதிரி ஒன்னுன்னு நினைச்சுதான் அட்டன் பண்ணேன். சாரி நிகில்” என்று தன்னிலை விளக்கம் தந்தாள். 

“சாரி எதுக்கு மிலா? இதெல்லாம் நீ தெரிஞ்சிக்கணும்னு சொன்னேன். அவ்வளவுதான்” என்று எப்பொழுதும் போல் எடுத்துச் சொன்னான்! 

“நான் ஃபோன் அட்டன் பண்ணதால வேற ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?” என்று கொஞ்சம் பயந்து போய் கேட்டாள். 

“அதெல்லாம் ஒன்னுமில்லை மிலா” என்றவன், “நீ கிளம்பு. அப்புறம் ரிட்டர்ன் வர்றதுக்கு லேட்டாகும்” என்றான் சிரித்துக் கொண்டே!

மிலாவும் சிரித்து, “சரி” எனச் சொல்லிக் கிளம்பிவிட்டாள்.

அவள் கிளம்பியதும், 

ஜெர்ரி விளையாடும் மனநிலையில் இருந்ததால், தன் அப்பாவுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில், மீண்டும் நிகிலின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. 

அப்போது மிலா இருந்ததால் அழைப்பை ஏற்காதவன், இப்போது சட்டென அழைப்பை ஏற்றான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!