நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-7
நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-7
அவன் ஐம்பது என்று சொன்னதை கேட்டவுடன் தலை தட்டாமாலை சுற்ற,”மறுபடியும் என்னாது?”என்று கேட்டிருந்தாள்,தேவின் மில்கி.
“ஜம்பது!ரொம்ப கம்மியா இருக்கோ?”என்றானே பார்க்கணும்.
கத்தியேவிட்டாள் ஆத்மி”உனக்கு அறிவுன்னு எதாச்சும் இருக்க இல்லையா? ஐம்பதே பாஸிபில் இல்லை இதுல …”என்று பற்களை நறநறத்தாள்.
“என் அறிவை நீ சோதனை பண்றது இருக்கட்டும்!உனக்காக கூடை செய்வது எப்படினு ஒரு வீடியோ காட்டலாம்னு தான் இருந்தேன்.பட், நீ என்னையவே எதிர்த்துப் பேசிட்ட,சோ,உனக்கு நோ வீடியோ.மார்னிங்குக்குள்ள எனக்கு ஐம்பது கூடை வேணும்”என்றான்.
“இங்க பாரு ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க,எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு”என்றாள்.
“அந்த லிமிட்டை உருவாக்கியவனே நான் தான்னு உனக்கு இன்னுமா புரியலை”என்றான்.
‘பரதேசி,பன்னாட,நாதாறி,நீ எல்லாம் உருப்படவே மாட்ட’வழக்கம் போல் மனதில் தான்.
“என்ன என்னைய திட்டி முடிச்சுட்டியா?”என்றவனை கண்டவள்.
தன்னை தானே நொந்துக்கொண்டு பின்,”சாரி ப்ளீஸ்,முன்னபின்ன நான் கூடைப் பின்னியதே கிடையாது,சோ அந்த வீடியோவை ஒரே ஒரு முறை காட்டு”என்றாள்.
“முடியாது,இத்தெல்லாம் முன்னையே நீ யோசிச்சிருக்கணும்!”
“மில்கி,எனக்கு தூக்கம் வருதே.சோ,குட் நைட்,ஹவ் எ ஸ்லீப்லெஸ் நைட் என்றவனோ”பெட்ஷீட்டால் தன் முகத்தை மூடிக்கொண்டான்.பெட்ஷீட்டை முகத்தில் இருந்து எடுத்தவன்,” நான் தூங்கும்போது நீ என்னப் போட்டு தள்ளிட்டா?
‘ஆமாமா அப்படியே விட்டுருவ எதுக்கும் எதாச்சும் யோசிச்சு வச்சிருப்ப சொல்லித்தொலை’ஆத்மியின் மனது.
“என்ன பதிலையே காணோம், சரி இந்த ரூம்க்குள்ள நீ என்னை போட்டு தள்ளுற மாறி எதுவுமே இருக்காது, சோ டோன்ட் ட்ரை!அப்புறம் நீ ஐம்பது கூடை பின்னாட்டி அதுக்கும் மச்சான் பனிஷ்மெண்ட் வச்சிருக்கேன் மில்கி,என்று கண்ணடித்தவனோ,குட் நைட் ஸ்வீட்டி”என்றுவிட்டு உறக்கத்தை தழுவிக் கொண்டான்.
குளிரில் உடல் நடுங்க,நிற்க திராணியின்றி கீழே சட்டென அமர்ந்தவள்,தன் ஆடைகளை பிழிந்து தண்ணீரை எடுத்தாள்.’பசிக்குதே மலை மாடு மாதிரி தூங்கறான் பாரு!எருமை,கொரங்கு,நல்லா கொட்டிக்கிட்டு இவன் மட்டும் தூங்கறான்,ஐயோ நாளைக்கு என்ன பனிஷ்மெண்ட்டோ’என்று நினைத்தவள்.
வயர்களை ஆராய எங்கிருந்து ஆரம்பிக்க என்றே தெரியாது விழி பிதுங்கி நின்றாள்.திரும்ப திரும்ப முயற்சித்தும் அவளால் எதையும் செய்ய முடியவில்லை .அதோடு மூன்று மணி நேரம் போராடியவள் சோர்ந்து போய் அப்படியே உறங்கியிருந்தாள் மயங்கி இருந்தாள் என்பதே சரியோ!
அதிகாலை 5 மணி,
சட்டென முழிப்பு வர எழ முயற்சித்தவளால் எழ முடியாதுப் போகவே,கண்கள் இருட்டிக்கொண்டு வர,தலை கணக்க,உடல் நெருப்பாய் தகித்தது,ஆம் காய்ச்சலில் சுருண்டிருந்தாள் பெண்.அப்படியே கண்களை மூடியும் கொண்டாள்.
காலை முதலில் எழுந்தவன்,அவள் உறங்குவதை கண்டு கடுப்பானவன்,இந்த முறை ஒரு கண்ணாடி டம்ப்ளரை அவளின் பக்கத்தில் போட்டு உடைக்க.கண்களை சிரம்மப்பட்டு திறந்தவளை கண்டவனோ,
“கெட் அப்!”என்று கத்தினான்.
எழ முயற்சித்தாள் முடியவேயில்லை,சுவற்றை பிடித்து மிகவும் கஷ்டப்பட்டு எழுந்தவளைக் கண்டவன்,
“ம்ப்ச்,என்னாச்சு என்றான்”.
ஒன்றும் பேசாது அவள் நின்றதையும்,அவள் ஒரு கூடைக் கூட செய்யாததையும் கண்டு கடுப்பானவன்.
“வாட் தி ஹெல்?ஒன்னுக் கூட நீ பண்ணலையா?”என்று கேட்க.
அதற்கும் அவள் பேசாமடந்தையாகவே நிற்க,”எவ்வளவு திமிரு உனக்கு?கேக்குறேன்,நீ என்னடா கேக்குறதுனு இருக்கியோ!” என்று கேட்டுக்கொண்டே அவளை “பளார்”என்று அறைந்திருந்தான்.அவளின் கன்னத்தின் சூடு இப்பொழுது இவனையும் சுட.
அவன் அடித்ததில் சுருண்டு விழுந்திருந்தாள் மங்கை அப்பொழுதுமே கத்தினாள் இல்லை.
“என்ன இப்படி சுடுது,தண்ணியைக் கொண்டு வந்து வெச்சா செம்ம சூடாகிடும் போலவே”என்றான் கேலியாக.
இப்பொழுது மட்டுமே,அவளிடம் எதிர்வினை வந்தது அவள் கண்களில் கண்ணீர்.அதனைக் கண்டவன் என்ன நினைத்தானோ!வெளியே சென்றுவிட்டான்.
பெண்ணவளின் நிலை- நம் உடலில் பலம் இருந்தால் எதிர்த்து நிற்கும் துணிவும் கூடவே இருக்கும்.உடல் நலனில் மாறுதல் ஏற்படும்போது,மனது அன்பிற்காக ஏங்கும்,நம்மை தாங்கிக்கொள்ள யாரும் இல்லையே எனக் கண்ணீர் வடிக்கும்.
‘அத்தனை நேரம் அவளின் இந்நிலை கண்டால் அவன் சிறிதேனும் மனம் இறங்குவான் என்றே இவளும் நம்பியிருந்தாள்.ஆனால்,நடந்ததோ,வேறல்லவா! தான் யார் அவனுக்கு என்னைப் பற்றி அவன் கவலைப்பட என்பது இப்பொழுது அவளுக்கு புரிந்தது’.
‘எதிரியாய் இருந்தாலும் அவர்களின் உடல் நலன் குன்றும்போது “இப்பொழுது எப்படி இருக்கு?நலம்தானே”எனக்கேட்கும் ஒரு உத்தம நாடு நம்நாடு! இங்கே, நான் இப்படி இருக்கும்போதும் என்னை கிண்டல் செய்யும் இவனெல்லாம் மனுச ஜென்மமே இல்லை!’
‘முதலில் என் உறவுகளை பிரித்தான்,என் ஆசைகளை அழித்தான்,என் கனவுகளை கலைத்தான்,சிறை வைத்தான்,இன்னும் என்ன வேண்டும் இவனுக்கு?என் உயிரா?கற்பா?இவ்விரண்டை தவிர என் கையிலும் எதுவும் இல்லையே!’
‘என்னிடம் அத்துமீறினான் தான். ஆனால், அதில் காமம் இல்லையே,என்னிடம் அவன் வன்மையையும் காட்டவில்லை!என்னை வெறுப்பேத்த மட்டுமே செய்திருக்க வேண்டும்!எனில் அவனின் தேவை அதுவல்ல’.
‘அப்படியென்றால்,என் உயிர் தான் வேண்டுமோ?கொடுத்து விடுகிறேன். ஆனால்,காரணம் தெரியவேண்டும்,என் தவறு அதில் நிரூபிக்கப்பட வேண்டும்,இல்லை நான் நிரபராதி என விடுவிக்கப்பட வேண்டும்.காத்திருப்பேன்!’
*************
வெளியே வந்தவன் ஹரியை அழைத்தான்.
“சொல்லுங்க சார்”-ஹரி
“ஒரு நல்ல லேடி டாக்டர் அரேஞ் பண்ணு!”
“சரிங்க சார்”.
“அவங்களை நீயே கூட்டிட்டு வந்திடு,வரும்போது சாப்பிட எதாச்சும் வாங்கிக்கோ”
“சரிங்க சார்”.
இது தான் ஹரி,கடந்து நான்கு வருடங்களாகவே,தேவோடு இருப்பவன்.”எள் என்றால் எண்ணையாய் நிற்பவன்”ஏன்? எதற்கு?என்றெல்லாம் அவன் கேள்வியே கேட்டது கிடையாது! பொதுவாக தேவ் மாறி ஆட்களுக்கு ஹரி போன்றோரை மிகவும் பிடிக்கும் தான் செய்யும் எதையும் கண்டுக்கொள்ளாது தன்னோடு இருப்பான் என்பதால்.அதேபோல் விசுவாசத்திலும் சரி அப்படியே”.
சிறிது நேரம் அந்த இரண்டு வீட்டையும் இணைக்கும் சிறு கார்டனில் அமர்ந்தவனின் மனம் அவளை இரண்டாவதாக சந்தித்த நிகழ்விற்க்கு அழைத்து சென்றது.
***********
சென்னை!
தீம் பார்க்.
அங்கே பள்ளி குழந்தைகள் டூர் வந்திருந்தார்கள்.
அதில் நம் ஆத்மியும் இருந்தாள் பத்து வயதே ஆன வாயாடியாக.அவளோடு சேர்ந்து மொத்தம் ஐம்பது குழந்தைகள் இருந்தனர்.
அதே நாள் அதே நேரம் சரியாக ஏன் அவனும் அங்கு வரவேண்டும்?
தன் நண்பர்களோடு சென்னையை சுற்றிப்பார்க்க வந்திருந்தான் அவன் அதுவும் அவனுடைய பதினைந்தாவது வயதிலே!
தன் நண்பர்கள் நால்வரோடு வந்திருந்தான்.
காலையில் ட்ரை கேம்ஸ் தண்ணீர் அல்லாத விளையாட்டுக்கள் என முடிவாகியிருந்தது.அவரவர்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களை பத்திரமாக வைக்க லாக்கர் கொடுக்கப்படும்.அப்படி கொடுப்பதில் ஆத்மிக்கோ அறுபது என் வந்தது.
அவள் அங்கே சென்று பார்க்க,ஏற்கனவே,அதில் யாரோ பொருட்களை வைத்திருக்க,”யாருடா அவன்?என் லாக்கரில் திங்க்ஸ் வெச்சவன்!இடியட்”என்று திட்டிவிட்டு அதை எடுத்து கீழே போட.
அதை பிடித்தவனோ,”இடியட்டா?அப்படினா என்னனு சொல்லு பார்ப்போம்”என்றிருந்தான் அவன்.
பேந்த பேந்த முழித்தவள்,இருந்தும் சமாளிக்கவே”தெரியாம தான் சொன்னேனா?மீனிங் தெரியாத வேர்ட்ஸ்லாம் நான் பேசுறது இல்ல”
“ஓஹோ!சரி மா, எனக்கு தெரியாது, நீங்க சொல்லுங்க?என்றான்.
“தெரியாதத சொல்லிக் கொடுக்க நான் என்ன உங்க டீச்சரா?உங்க மிஸ் கிட்ட போய் கேளுங்க?”என்றிருந்தாள்.
அவளின் சமாளிப்பை கண்டுக்கொண்டவன் ” திட்டுறது எல்லாம் சரி யாரை திட்டனும்னு தெரிஞ்சுட்டு திட்டுங்க!”
அவள் புரியாது நோக்க.”நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே லாக்கர் கொடுத்தவன் தான் இடியட் நானில்லை” என்றிருந்தான்.
தலையை தாழ்த்திக் கொண்டவள் “சாரி “என்றுவிட்டு ஓடியிருந்தாள்.
அன்றிலிருந்து அவள் யாரையும் காரணம் இன்றி திட்டுவது இல்லை!
சொன்னவன் நியாபகம் இல்லை,சொன்னது நியாபகத்தில் இருந்தது.
அவளின் சாரியில் புன்னகைத்தவன் “நீ மாறவே இல்லை மில்கி,யூ ஆர் ஆல்வேஸ் க்யூட்”என்று முணுமுணுத்தான்.சிறு வயதிலும் சரி இப்பவும் சரி,ஒன்றை தவறு எனக் கூறிப்பிட்டதும் அவள் என்றும் சாரி சொல்ல தவறியதில்லை.
காதலால் அவளை திக்கமுக்காட வைக்க வேண்டும் என்று இவன் நினைக்க,விதியோ வேறு நினைத்து விட்டது!
(எல்லாம் இந்த விதி பயபுள்ளைனால் தான் மக்களே)
*********
ஹரியின் அழைப்பு வர அதை எடுத்தவன்,”வந்துட்டியா ஹரி “என்றான்.
“யெஸ் சார்”
“இதோ வரேன்”என்று அழைப்பை துண்டித்தவன்,அங்கே சென்றான்.டாக்டரை கண்டு முகமன் தெரிவித்தவன் “ஒரு நிமிடம் நான் போய்ட்டு வந்து உங்கள கூப்பிடுறேன்”என்று உள்ளே சென்றவன்.
அவளைக் காண அதே இடத்தில் வாடிய கொடியாக கிடந்தாள் தவறு வெட்டப்பட்டு வாடிய கொடியாய் கிடந்தாள்.அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அவளை பெட்டில் கிடத்தி,பெட்ஷீட்டால் கழுத்து வரை போத்திவிட்டான்.
வெளியே சென்று டாக்டரை அழைத்தவன்,ஹரி நீ இங்கையே இரு என்றுவிட்டிருந்தான்.உள்ளே வந்த டாக்டர் அவளை பரிசோதிக்க,ஓரமாய் நின்று கைகளை கட்டியவாறு நின்றுக் கொண்டான்.
அவளை பரிசோதித்தவர் “நேத்திலிருந்து எதுவும் சாப்பிடலை போல தெரியுது? ஹை பீவர் இருக்கு” என்றவர்,ஓ ஆர் எஸ் பவுடரை சிறிது தண்ணீரில் கலந்துக் கொடுத்தார்.
அதை சிறுக சிறுக குடித்து முடித்தவளுக்கு,சற்றே தெம்புவர எழுந்தமர்ந்தாள்.”ஏன்மா,படிச்ச பொண்ணு மாதிரி தான் இருக்க,இப்படியா பட்டினி கிடப்ப?என்று அவளை கடிய”.
ஒன்றும் பேசாது அனைத்தையும் வாங்கிக் கொண்டாள்.”ஊசி போடுறேன்”,என்க.திடுக்கிட்டவள் “வேணாம் டாக்டர்,எனக்கு ஊசினா பயம் நான் இதுவரை ஊசியே போட்டது இல்ல” என்க.
“நல்ல பொண்ணு போ,வலிக்காம இருந்து பழகிட்ட போல”என்றவரை பார்த்து ‘அதுக்கு தான் இப்போ வலிக்க வலிக்க அடிவாங்கிட்டு இருக்கேன் போல’என்று நினைக்க.
“சரி டாப்லட் எழுதி தர்றேன்”என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே,”அவளுக்கு ஊசி போடுங்க டாக்டர்”என்றான் அவன் கட்டளையாக!.
‘இந்தா ஆரம்பிச்சுடான்ல நான் எது வேண்டாம்னு சொல்றேனோ அது எல்லாம் இவனுக்கு வேணும்! இவனை வச்சுக்கிட்டா சொன்னேன் என்னைய எதைக் கொண்டு அடிக்க’ என்று தன்னையே காறி துப்பிக் கொண்டவள்.டாக்டரை உணர்ச்சியற்ற பார்வை பார்க்க.அவரும் வேறு வழியில்லாது ஊசியை போட துடித்துவிட்டாள் பெண்.கண்ணில் ஒருதுளி கண்ணீர்.
டாக்டரை அனுப்பிவிட்டு வந்தவன்.ஹரியோடு வர,அவளுக்கு உணவை பறிமாறினான் ஹரி ‘வேண்டாம் என்று ரோஷத்தோட சொல்ல நினைத்தவள் வயிற்றை கருத்தில் கொண்டு அதை விட்டிருந்தாள்’.
இரண்டு இட்லிகளை இரண்டு மணி நேரம் சாப்பிட்டாள்.பிறகு போதும் என்றிட,அவளை சாப்பிடு என்று வற்புறுத்தவும் யாரும் இல்லாததால் அத்தோடு கையை கழுவியவளுக்கும் சற்றே தெம்பு வந்தது.
ஹரி வெளியே சென்றிட… இவள் அவனின் முகத்தை பார்க்க.அதில் பல சிந்தனை முடிச்சுகள்.’சும்மா இருந்தாலே ஏடாகூடமா யோசிப்பான்!இப்போ இப்படி யோசிக்குறேன்,இவன் என்ன மூட்ல இருந்தாலும் பாதிப்பு எனக்குத் தான்.’என்று நினைக்க.
தொண்டையை செறுமியவன்,”நீ ஒரு கூடைக் கூட செய்யல சோ,உன்னோட பனிஷ்மெண்ட”என்று நிறுத்தியவன்.அவளை ஆழப்பார்த்தான்.
இவள் புரியாது விழிக்க,’இப்போ என்னச் சொல்லி தொலைய போறானோ!’என்று நினைத்தவள்,அவனை நோக்க.
“நமக்கு கல்யாணம்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட.
“வாட் நான்சென்ஸ்”என்று கத்தினாள் அவள்.
(டாலிஸ்,இதுவரைக்கும் கதை நல்லாவே போகுதுனு நம்புறேன்,கூடிய விரைவில் இவங்க ரெண்டுப்பேருக்கும் டும் டும்,பையன் நம்மள கூப்பிட மாட்டேன்.சோ,நம்மளாவே வந்துருவோம்.நன்றி டியரஸ்)