நேச தொற்று-5b
நேச தொற்று-5b
“ஆரு”
” ம்ம்ம்ம் “
“எங்க அம்மா கிட்டே நான் இரண்டு நாளுக்கு மேலேலாம் பேசாம இருந்ததே இல்லை. என்ன நடந்தாலும் அம்மா கிட்டே சொல்லிடுவேன். “
“சரி சொல்லு… நான் என்ன உன்னை சொல்லக்கூடாதுனு தடுத்தேனா?”
“ஐயோ அது இல்லை ஆரு. என் போன் தண்ணில விழுந்துடுச்சு. “
“இப்போ என்ன, நான் போய் நீச்சலடிச்சு எடுத்துட்டு வரணுமா?”
“ஐயோ அந்த அளவுக்கு லாம் stunt பண்ண வேண்டாம். உன் போனை தந்தா மட்டும் போதும்.அம்மா கிட்டே பேசிட்டு தந்துடுவேன்.” என சொல்ல
“இதுக்கு சுத்தா வளைக்காம, அம்மா கிட்டே பேசணும்னு போனை கேட்டு இருக்கலாம். ” என்றபடி தன் போனை எடுத்து அவனிடம் தந்தாள்.
போனை வாங்கியவன் வேக வேகமாக அவனுடைய அம்மாவிற்கு அழைப்பு விடுத்தான்.
இரண்டு ரிங்கிலேயே அழைப்பு ஏற்கப்பட்டது.
சந்தோஷமாக அம்மா என்றான்.
“என் குஞ்சப்பா ” என்று அவன் அம்மா சொல்லியது ஆருவின் காதுகளை எட்டியது.
பட்டென்று சிரித்து விட்டாள்.
“அம்மா ” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே.
“என் குஞ்சப்பா சாப்பிட்டிங்களா? என்ன பண்ற… ஏன்டா எனக்கு ரெண்டு நாளா போன் பண்ணல. உனக்கு அந்த அளவுக்கு ஆகிடுச்சா? வீட்டுக்கு வா அம்மா உனக்கு சூடு வைக்கிறேன்.”
“அம்மா நான் வளர்ந்துட்டேன்… என்னை இன்னும் சின்ன குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதே மா…
உடம்பை பார்த்துக்கோ.. நான் போனை வைக்கிறேன். “
“டேய் டேய் என்ன டா டக்குனு போனை வைக்கிறே பேசு டா.. ” என அவன் அம்மா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அலைபேசியை துண்டித்துவிட்டு ஆருவிடம் போனை நீட்டினான்.
அவள் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அவளை மீறி இதழ்கள் புன்னகையை சிந்திக் கொண்டு இருந்தது.
அதை மறைக்க கீழே குனிந்து கொண்டே போனை வாங்கினாள்.
” தேங்க்ஸ் ஆரு.”என்று அவன் சொல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“பரவாயில்லை குஞ்சப்பா.” என்றாள் இதழ்களில் துளிர்த்த சிரிப்பை அடக்கியபடி.
“அடிங்க யாரு குஞ்சப்பா.”
“நீ தான் குஞ்சப்பா. நீ தான் குஞ்சப்பா. “
“போடி குஞ்சாயி…”
“என்னது குஞ்சாயி யா. நானா?”
“நான் குஞ்சப்பனா… நீ குஞ்சாயி தான்”
“அடிங்க உன்னை கொல்லாம விட மாட்டேன்”என அவள் துரத்த இவன் ஓட, ஏதோ இடறி அவனின் கால்கள் தடுமாறி கீழே விழப் போனான்.
சட்டென்று அவனது சட்டையை பிடித்து கீழே விழாமல் இழுத்து தாங்கிப் பிடித்துவிட்டாள் அவள்.
அரை சென்டிமீட்டர் இடைவெளியில் தெரியும் அவளது முகத்தையை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தவனை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது அவளது குரல்.
“மூதேவி எவ்வளவு நேரம் தாங்கிப் பிடிக்கிறது ஒழுங்கா நின்னு தொலை டா… எப்போ பார்த்தாலும் வடிவேலு கணக்கா தரையிலே பரப்பிக்கிட்டு விழறதையே வேலையா வெச்சு இருக்கே.”
“அதான் விழுந்தா என்னை தாங்க நீ இருக்கேல குஞ்சாயி.. “
“என்னது குஞ்சாயியா.” என்றவள் சட்டென அவனை விட பொத்தொன்று ஐயோ அம்மா என்ற குரலோடு தரையில் விழுந்து கிடந்தான்.
“ஐயோ ஆரு ஏன்டி இப்படி கீழே போட்ட… ஐயோ ஏற்கனவே அடிப்பட்ட இடத்துலயே அடிப்பட்டுடுச்சே. என்னாலே நகர கூட முடியலயே.” என்று அவன் கத்த அவளது மனம் இளகியது.
“சாரி ஆதி… நீ குஞ்சாயினு சொன்னதும் கோபத்துல பொத்துனு போட்டுட்டேன். நீ எழுந்துடு. நான் pain relief spray கொண்டு வரேன்.”
“என்னாலே ஒரு இன்ச் கூட நகர முடியல ஆரு. இதுல எப்படி எழுந்துக்கிறது. ” என அவன் சொல்ல ஆரு அவனது தோளைப் பிடித்து எழுப்பினாள்.
அவனும் அவளது தோளைப் பற்றிக் கொண்டு எழுந்தான்.
அப்போது அவனது தாடை அவளது தோளை உரசியது.
அவள் உடல் கூசி சிலிர்ப்பதை அவனால் உணர முடிந்தது.
அவளை மேலும் சங்கடப்படுத்தாமல் அவனது தாடையை பட்டென்று இழுத்துக் கொள்ள அவள் சட்டென திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவளின் கண்கள் ஏதோ சொல்லியது.
ஆனால் என்ன என்று அவனால் மொழிப் பெயர்க்க முடியவில்லை.
அப்படி மொழிப் பெயர்த்து அவளிடம் மொத்து வாங்கவும் அவன் உடலில் இப்போதைக்கு போதிய அளவு தெம்பு இல்லை.
ஆதலால் பின்னொரு நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று தன் திருவாயை மூடிக் கொண்டான்.
அவனை தாங்கியபடி அவன் அறையில் விட்டுவிட்டு pain relief spray எடுத்து வந்தவள் அவனை திரும்பி படுக்க சொல்லி செய்கை செய்தாள்.
“இல்லை வேணாம் ஆரு… நானே அடிச்சுக்கிறேன்.”
“இடுப்புல அடிப்பட்டு இருக்கு. எப்படி உன்னாலே திரும்ப முடியும். பரவாயில்லை நானே அடிக்கிறேன்.”
“இல்லை ஆரு உனக்கு சங்கடமா இருக்கும்ல. நானே manage பண்ணி அடிச்சுக்கிறேன். ” என்று சொல்ல அவள் இதழோரத்தில் புன்னகை…
ஆனாலும் குரலை கடினமாக வைத்துக் கொண்டு
“இங்கே பாரு ஏற்கனெவே கரப்பான் பூச்சி கணக்கா குப்புற விழுந்து கிடக்கிற… இதுல நீயே ஸ்ப்ரே அடிச்சுக்கிறேனு சொல்லி கட்டில் மேலே இருந்து கீழே விழுந்து தொலைச்சு வைக்காதே. கூட்டிட்டு போக பக்கத்துல க்ளினிக் கூட கிடையாது.” என்று சொல்லியவள் அவனது ஷர்ட்டை தூக்கிவிட்டு ஸ்ப்ரே அடித்தாள்.
அவனுக்கு எரிந்தாலும் சுகமாய் இருந்தது.
கண்களை மூடிக் கொண்டான்..
“படுத்து ரெஸ்ட் எடு ஆதி. நான் போய் சமைச்சுட்டு வரேன். ” என்று சொல்லி கிச்சனுக்குள் நுழைய வாயில் ஓசை அடித்தது.
நிவியும் அபியும் தான் நின்று கொண்டு இருந்தனர்.
“ஆதி அங்கிள் எங்கே ஆரு அக்கா “
“உள் ரூம்ல இருக்காங்க நிவிமா.. ” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.
உள்ளே நுழைந்த அபி குப்புற கவிழ்ந்து கிடந்த ஆதியின் முதுகின் மீது பட்டென்று ஏறி உட்கார
“ஐயோ அம்மா ” என்று கதறினான்.
“அட என்ன அங்கிள் என் தம்பி வெயிட்டை கூட தாங்க முடியாம இப்படி கத்துறீங்க. அபி நீ வேகமா ஏறி உட்காரு டா. அங்கிள்க்கு ப்ராக்டீஸ்க்கு கொடுப்போம்.” என சொல்ல அவன் பல மடங்கு அலறினான்.
“அடேய் அபி நானே இப்போ தான் செத்து பிழைச்சு வந்து இருக்கேன் டா… என் கதையை ஓரேயடியா முடிச்சுடாதே. அங்கிள் பாவம் டா.மேலே இருந்து இறங்கு. “
“நோ நோ அங்கிள்… என்னை மேலே வெச்சுட்டு push ups எடுங்க. “
‘ஐயோ மனுஷனோட அவஸ்தை புரியாம இவன் வேற படுத்துறானே…’ என மனதுக்குள் கோபம் துளிர்த்தாலும் அதை குழந்தையிடம் காட்ட அவனுக்கு தோன்றவில்லை.
குரலில் மென்மையை கொண்டு வந்து “கீழே இறங்குங்க அபி செல்லம் அங்கிளாலே முடியல…” என அவன் பொறுமையாக சொல்லிக் கொண்டு இருந்த நேரம் ஆரு உள்ளே நுழைந்தாள்.
“டேய் அபி கீழே இறங்குடா. ” என்று கத்திக் கொண்டே அவனருகில் வந்தாள்.
“மாட்டேன் ஆரு அக்கா. “
“நீ இப்படி சொன்னாலாம் கேட்க மாட்டே. அந்த குச்சியை எடுத்தா தான் சரிப்பட்டு வருவ. ” என்று அவள் குச்சியை தேட அபியும் நிவியும் ஓடிவிட்டனர்.
“ஐயோ அம்மா ” என்று வலியில் அலறிக் கொண்டே இருந்தான் ஆதி.
“குஞ்சப்பா வலிக்கிதா??”
” ஐயோ ஆரு நான் இந்த வலியைக் கூட தாங்கிப்பேன்… அந்த குஞ்சப்பாவை மட்டும் சொல்லாதே. தாங்க முடியல.”
“சரி சரி குஞ்சப்பா சொல்லல… “
“ஐயோ ஆரு.. ” என்று பெட்டில் குத்தினான்.
“சரி சரி சொல்லல… ஐயோ ரொம்ப வலிக்கிதா? ஏன் இப்படி நெளிஞ்சுக்கிட்டு இருக்கே. அபி ஏறி உட்காரும் போதே அதட்டி இருக்கலாம்ல இல்லைனா கோபமா கத்தி இருந்தா அவன் அப்பவே இறங்கி இருந்து இருப்பான் இல்லை.”
“நம்ம வலிக்கு ஏன் ஆரு குழந்தையை திட்டணும். அவன் தெரியாம தானே பண்ணான். எதனாலே அதட்டணும்? நாமே காரணமே இல்லாம கோவப்பட்டா குழந்தைங்க காரணமே இல்லாம வருத்தப்படும். எனக்கு குழந்தைகளை திட்டவோ அதட்டவோ மனசே வராது ஆரு. அதான் பொறுமையா எடுத்து சொன்னேன். ஆனால் அவன் என் குறுக்கெலும்பை உடைச்சுட்டு போயிட்டான் ” என்று மீண்டும் அலற அவள் சட்டென்று தைலத்தை எடுத்து வந்து அவன் தடுப்பதை பொருட்படுத்தாமல் தடவி விட்டாள்.
அவள் கைகள் அவன் முதுகை தீண்டிய அடுத்த நிமிடமே கண்மூடியவன் உறங்க ஆரம்பித்துவிட்டான்.
அவனின் மீது போர்வையை போத்திவிட்டவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து உணவை தயார் செய்தாள்.
எல்லா வேலையும் முடித்து அவள் சோபாவில் அமர்ந்த நேரம் வாயில் மணியோசை அழைத்தது.
கதவை திறந்து பார்க்க நேற்று மாடிப்படியில் பார்ந்த அந்த நெடியவன் நின்று கொண்டு இருந்தான்.
அவள் கேள்வியாய் பார்த்தாள்.
“hai I’m ஆதவ்.. may i know ur sweet name ” என்று தன் தலையைக் கோதியபடியே கண்களில் சிரிப்போடு கேட்டான்.
“I’m ஆருஷா”
“என்ன ஆரு… வாசலிலே நிற்க வெச்சு தான் பேசுவிங்களா? வீட்டுக்குள்ளே கூப்பிட மாட்டிங்களா?”
“ஓ சாரி சாரி ஆதவ். please come in ” என்று அவனுக்கு வழிவிட்டபடி நின்றவளது துப்பட்டா அவனது ஷீவிற்கு இடையில் மாட்டிகொண்டது.
இதையறியாமல் அவள் நடக்க எத்தனித்த போது தடுமாறி கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தான் அவன்.
அவனது கரங்கள் அவளது இடையில் அழுத்தமாய் பதிந்தது.
அவளையே மயக்கும் சிரிப்போடு பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆரு அவனிடம் விடுப்பட்டு நிற்க முயன்ற நேரம் பார்த்து தூக்கம் கலைந்து வெளியே வந்த ஆதியின் கண்களில் இந்த காட்சிப்பட்டது.
ஆரு திரும்பி ஆதியைப் பார்த்தாள்.
அவளது பார்வையை பின்பற்றியபடி ஆதவ்வும் ஆதியை பார்த்தான்.
என்ன செய்வான் ஆதி?