நேச தொற்று -epi1
நேச தொற்று -epi1
” ஆரு “
“என்ன டா?”
“கபசூர குடிநீர் குடிக்க வேண்டிய டைம் இது ஆரு.”
“போடா மூணு நாளா அதைக் குடிச்சு குடிச்சு வாயே கசந்து போச்சு. அதான் கொரானாவுக்கான ஆன்டிபாடி தான் என் உடம்புல அதிகம் சுரக்க ஆரம்பிச்சுடுச்சல. இனி எனக்கு கொரானாலாம் வராது. அதனாலே நான் குடிக்க மாட்டேன்”
“ஆரு அடம்பிடிக்காதே. ஒழுங்கா குடி இல்லாட்டி இந்த ஆதியோட கோபத்தை பார்ப்ப. “
“அந்த கோபத்தை பார்க்க தான் நானும் பல நாள் வெயிட்டிங் டா. ப்ளீஸ் ஆதி கோபப்படு. நான் அதை இன்னைக்கு பார்த்தே தீரணும். ப்ளீஸ் ஆதி. கோபப்படு. கோபப்படு. உன்னாலே முடியும். கோபப்படு ஆதி. கோபப்படு.”
“அட இரு ஆரு. நானும் அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.” என்று சொல்லியவன் கண்கள் இரண்டையும் உருட்டி முறைத்தபடி ஆருவைப் பார்த்தான். பின்குறிப்பு (கோபப் பார்வை)
“என்ன ஆதி பச்சை மிளகாய் ஏதாவது சாப்பிட்டியா? ஏன் இப்படி கண்ணு ரெண்டையும் கோலி குண்டு மாதிரி உருட்டிப் பார்க்கிற?”
“ஹே ஆரு இது தான் டி கோபப்பார்வை.” என்று சொல்ல ஆரு திருத்தினாள்.
“இது கோபப்பார்வை இல்லை ஆதி. சிரிப்புப் பார்வை. ஐயோ மறுபடியும் மறுபடியும் இப்படி கண்ணை உருட்டாதே. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது ஆதி. ” என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ஆரு ஏன் நான் கோபமா பார்த்தா, இப்படி சிரிக்கிறே.” என்றான் பரிதாபமான குரலில்.
“நீ கோபமா பார்த்தா நான் பயப்படுவேன்.. இப்படி சிரிப்பு பார்வை பார்த்தா சிரிப்பு தானே வரும். “
“அம்புட்டு சிரிப்பாவா இருக்கு?”
“இதை நான் சொல்லித் தான் உனக்கு தெரியணுமா?” என்று சொல்ல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி நின்றான் ஆதி.
“அச்சோ என் குஞ்சப்பாக்கு என்ன ஆச்சு?ஏன் முகத்தை இப்படி தூக்கி வைச்சு இருக்க குஞ்சப்பா? உனக்கு கோபப்பட சொல்லித் தரணும் அவ்வளவு தானே சீக்கரமா சொல்லிக் கொடுத்துடலாம்”
“ஆரு ஃபர்ஸ்ட் டைம் நான் உன் கூட சண்டைப் போட்டு கோச்சிக்கிட்டு போனேன் இல்லை. அன்னைக்கு நான் கோபப்பட்டேன் தானே. அப்போ என் முகம் கோவமா தானே இருந்துச்சு?”
“கோவமா லாம் இல்லை. நல்லா கோட்டான் மாதிரி தான் முகம் இருந்துச்சு”
“இன்சல்ட் க்ரேட் இன்சல்ட்”
“இது என்ன உனக்கு புதுசா ஆதி?”
“ஆமாம் நான் ஏன் இப்போ முதல் வாட்டி இன்சல்ட் ஆகுறா மாதிரி ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன். ” என்று அவன் கேட்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்ட புன்னகையுடன் ஆரு எழுந்து சென்று ஜன்னலருகேப் போய் நின்றாள்.
அவள் பார்வையும் புன்னகையும் அவனை ஏதோ செய்தது.
அவள் காதல் சொல்லிய பின்பு ஓரிடத்தில் நிற்காத பெண்டுலமாய் அவன் இதயம் ஆடிக் கொண்டு இருந்தது.
கொரானா தொற்று தனக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவள் படும் பாடு போதாதென்று நானும் அவளை தீண்டி அவள் உணர்ச்சிகளையும் அவள் பயத்தையும் இன்னும் தீண்டிவிட வேண்டுமா என்று தான் அமைதியாக இருந்தான்.
இதயத்தையும் சூழ்நிலையும் தன் கட்டுக்குள் வைக்க நினைத்தாலும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வேகமாய் அவள் பின்னால் சென்று நின்றவன் மெதுவாய் அவள் கழுத்தடியில் முகம் புதைத்தான். அவள் சிலிர்த்து நிமிர்ந்தாள்.
“ஐ லல் யூ” என்றான் காதலின் வர்ணத்தை மொழியில் பூசி.
“ஐ லவ் யூ டூ ஆதி ” என்று அப்படியே பின்னால் அவன் மார்பில் சாய்ந்தவள் தன் ஆட்காட்டி விரலை நீட்டி தூரத்தில் எதையோ சுட்டிக் காண்பித்தாள். அவன் புரியாமல் அவளைப் பார்த்தான்.
“அதோ அங்கே தெரியுதுல. அது தான் நான் படிச்ச காலேஜ் ஆதி” என்றாள் ஒரு கல்லூரியைக் காட்டி.
“ஆரு அப்போ நீ படிச்சதே கேரளாவுல தானா? நான் வேலை பார்க்க தான் நீ கேரளா வந்ததா நினைச்சேன்”
“நீ நினைச்சது கரெக்ட் தான்.. நான் வேலைப் பார்க்க தான் கேரளாவுக்கு வந்தேன். என் கேரியர்ல நான் இன்னும் முன்னேறனும்ன்றதுக்காக பார்ட் டைம்ல M.A படிச்சேன்.” என்று அவள் சொல்ல ஆதியோ இறங்கிய குரலில் ” சாரி ” என்றான்.
“எதுக்கு டா சாரி சொல்ற?”
“இல்லை ஆரு உன் கனவுக்காக நீ அத்தனை கஷ்டப்பட்டு ஒரு பாதையை உருவாக்கி வெச்சு இருக்கும் போது திடீர்னு நான் இடையிலே
வந்து இந்த பாதை உனக்கு வேணாம், நான் சொல்ற பாதையிலே தான் நீ வரணும்னு வற்புறுத்துறது எவ்வளவு தப்பு. அந்த தப்பை நான் முன்னாடி பண்ணிட்டேன். ஆனால் இனி பண்ண மாட்டேன். உன் கனவு உன் லட்சியம் எதையும் தடுக்கவும் எனக்கு உரிமை இல்லை. அனுமதிக்கவும் உரிமை இல்லை. நீ உனக்கு பிடிச்சதை பண்ணு ஆரு. நான் உன் பக்கத்துல நின்னு உனக்கு சப்போர்ட் பண்றேன்”
“எனக்கு தெரியும் ஆதி.நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பேனு. நீ முதலிலே பேசினது அறியாமையிலே. உனக்கு கொஞ்சம் கூட ஈகோ இல்லை தெரியுமா ஆதி. நீ சோ genuine. அதான் எனக்கு உன் கிட்டே ரொம்ப பிடிக்கும். காதல்ன்றது என்ன தெரியுமா ஆதி? நமக்கு பிடிச்சவங்களுக்கு எது எதுலாம் பிடிக்காதோ அது அது எல்லாம் பண்றது. என்ன செஞ்சா கோபப்படுவாங்களோ அது எல்லாம் செஞ்சு அப்போவும் நீ என்னை காதலிக்கிறியானு பார்க்கிறது. இந்த காதல்ன்றது ஒன்னும் இல்லை. எவ்வளவு அடிச்சாலும் நீ தாங்குவீயா? கோபம் வரமா இருப்பியானு உன்னோட தாங்குதிறனை பரிசோதிக்கிறது தான் காதல். அதுல நீ distinction ல பாஸ் ஆகிட்ட டா. என் குஞ்சப்பா” என்று அவள் சொல்ல அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அவன். அவனது அணைப்பின் காதல் வாசம் அவள் உயிரை நிறைத்தது.
💐💐💐💐💐💐💐💐
“டேய் குல்பி மண்டையா. அங்கே என்னடா பண்ணிட்டு இருக்க? சாப்பிட வா”
“இரு தர்ஷி. செத்துட்டு வரேன் “
“செத்துப் போன அப்புறம் எதுக்கு டா உனக்கு சாப்பாடு. என் வென்று. “
“அதான் தர்ஷி தர்ஷி அதே தான். வென்று வென்று தான். நான் வென்று விட்டேன்.. pubg இல் வென்றுவிட்டேன்”
“அடச்சீ வெண்ணெய் வெட்டி.. ஒழுங்கா சாப்பிட வா டா. அபி நிவி எல்லோரும் அந்த pubg ஐ ஆப் பண்ணிட்டு சாப்பிட வாங்க” என சொல்ல எல்லோரும் உணவு உண்ண அமர்ந்தனர்.
எல்லோருக்கும் பரிமாறிவிட்டு தர்ஷியும் உண்டு முடித்தாள். அந்த நேரம் தர்ஷியின் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள்.
அபி நிவியின் அம்மா அப்பா தான் வீடியோ காலில் அழைத்து இருந்தனர். புன்னகையுடன் அழைப்பை ஏற்று “ஹாய் ” என்றாள்.
“ஹாய் தர்ஷி மா எப்படி இருக்க??… அபி நிவி ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா? உன்னை ரொம்ப தொல்லை பண்றாங்களா? இல்லை சமத்தா இருக்காங்களா?”
“அக்கா அபி நிவி ரெண்டு பேரும் ரொம்ப சமத்து. எதுவும் தொல்லையே பண்ணல. நீங்க கவலையேப்படாதீங்க. நான் பத்திரமா அவங்களை பார்த்துக்கிறேன்.” என்று அவள் சொல்ல நிம்மதியாகப் புன்னகைத்தனர் அந்த பெற்றோர்கள்.
அபி தர்ஷியிடம் இருந்து போனை பிடுங்க அவனிடம் இருந்து நிவி போனை பிடுங்கி கொண்டு பால்கனி பக்கம் ஓடினர்.
செல்லும் அவர்களையே சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருந்த ஆதவ்வை பார்த்தாள் தர்ஷி.
அவன் என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்க, ” ஏன்டா டேய். ஒரு லவ் ஃபெலியர் ஆகி இருக்கு. இன்னும் தாடி வளர்க்கல. சோக கீதம் வாசிக்கல. ஃபீல் பண்ணல.
இப்படி கெக்க பெக்கே கெக்க பெக்கேனு சிரிச்சுக்கிட்டு இருக்கே.”
“லவ் ஃபெயிலியர் ஆனா தானே அதை பண்ணனும். எனக்கு தான் லவ் ஃபெயிலியர் ஆகலயே”
“ஏன்டா கோழிக்கூடை தலையா என்னை ஏன்டா இப்படி குழப்புற? அப்போ உன் லவ் இன்னும் ஃபெயிலியர் ஆகல ஆரு கூட நீ சேருவனு இன்னுமா நம்புற? ஏன்டா இப்படி கன்ஃப்யூஸ் பண்றே”
“நான் எங்க தர்ஷி உன்னை கன்ஃப்யூஸ் பன்றேன். நீயா தான் ஏதேதோ நினைச்சு கன்ஃப்யூஸ் ஆகிட்டு இருக்க. நான் உண்மையா ஆருவைக் காதலிக்கவே இல்லை தர்ஷி. “
“என்னது ஆருவை நீ காதலிக்கலயா?” என்று தர்ஷி அதிர்ச்சியாய்க் கேட்க அவன் தீர்க்கமாக இல்லை என்று தலையசைத்தான்.
தான் சொன்ன பதிலைக் கேட்டு விக்கித்து நின்றவளை ரசித்துப் பார்த்தான் ஆதவ்.
“என்ன தர்ஷி குழம்பிட்டியா? நீ குழம்ப வேண்டாம் நானே எல்லாத்தையும் தெளிவா சொல்றேன். எனக்கு ஆருவைப் பிடிக்கும் அது உண்மை. ஆனால் நான் அவளை காதலிக்கல. முதலிலே ஆருவைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஈர்ப்பு உருவாச்சு. அவளைப் பிடிக்கவும் ஆரம்பிச்சுது. எனக்கு ஒரு habit இருக்கு. எனக்கு பிடிச்சவங்களுக்குலாம் என்னையும் பிடிக்கணும்னு நான் நினைப்பேன் அதுக்காக நிறைய மெனக்கெடவும் செய்வேன். அதனாலே ஆருவை பிடிக்க வைக்கிறதுக்காக நிறைய சாகசம் பண்ணிட்டு இருந்தேன். ஆருவுக்கும் என்னைப் பிடிக்கும்னு ஓரளவுக்கு புரிஞ்சுடுச்சு. என்னோட curiosity அடங்கி நான் அமைதியாகிட்டேன்.. அப்போ தான் நீ வந்தே. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது தெரியுமா தர்ஷி. ஆனால் மத்தவங்க கிட்டே பண்ணா மாதிரி என்னை பிடிக்க வைக்க நான் எந்த சாகசமும் உன் கிட்டே பண்ணல. என்னை என் இயல்போட உனக்கு பிடிச்சு இருக்கானு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். என் ஆசையும் நிறைவேடுச்சு. உனக்கும் என்னை பிடிச்சுப் போயிடுச்சு.”
“அது எப்படி அப்படி உறுதியா சொல்ற? எனக்கு போய் எப்படி இந்த ஓநாய் வாயனை பிடிக்குமா? உன்னை எனக்கு பிடிக்காது டா. ” என்று சொல்லியவள் சட்டென திரும்பி நின்றுக் கொண்டாள்.
அவள் புறம் நெருங்கி வந்தவன் அவளது தாடையை உயர்த்தி தனது பார்வையை சந்திக்க வைத்துவிட்டு பிறகு அழுத்தமாக அவளைப் பார்த்து கேட்டான்.
“என்னை நிஜமாவே உனக்கு பிடிக்காது?” என்றுக் கேட்க அவளது குரலில் முன்பு இருந்த வேகம் இல்லை.
தொண்டை கமறியது.
“இல்லை” என்றாள் திக்கித் திணறி.
அவன் மீண்டும் அழுத்தமாய் “அப்போ நிஜமாவே என்னைப் பிடிக்காதா” என கேட்க இந்த முறை அந்த பொய்யை மறைத்து வைக்க முடியவில்லை.
அவனை நேராகப் பார்த்தாள். அவள் கண்களில் காதல் கசிந்துக் கொண்டு இருந்தது.
“உன்னை பிடிக்கும் டா என் tomato மண்டையா?” என்று சொல்ல அவன் வாய்விட்டு சிரித்தான்.
அவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க “ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவன் திரும்பி வரும் போது ஒரு நோட்டோடு வந்தான்.
அவள் என்ன என்பதைப் போல பார்க்க
” நீயே திறந்து பாரு தர்ஷி.. ” என்று அவள் கைகளில் நோட்டைக் கொடுத்தான்.
திறந்து பார்த்தவள் அதில் எழுதி இருந்தவைகளைக் கண்டு முதலில் அதிர்ந்தவள் பின்பு சிரித்தேவிட்டாள்.
“தர்ஷி. இது என்னைத் திட்டி நீ சொன்ன பேர்களோட லிஸ்ட். நோட்டே முடியப் போதுது. இதே மாதிரி நான் ஓராயிரம் நோட்டு வாங்கப் போறேன். அது முழுக்க நீ என்னைத் திட்டுன பேரை எல்லாம் எழுதணும். வாழ்க்கை முழுக்க எனக்கு பட்டப் பெயர் வைக்க உனக்கு சம்மதமா?” என அவன் கேட்க அவள் தலை அவளது சம்மதமில்லாமல் ஆடி தன் சம்மதத்தை தெரிவித்தது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஒரு வாரம் கழித்து.
ஆருவும் ஆதியும் நிவியின் பெற்றோர்களும் சிகிச்சை முடிந்து அந்த அப்பார்ட்மெண்ட் கீழ்த்தளத்தில் வந்து நின்றனர்.
மேலே பால்கனியில் நின்று இருந்த அந்த அத்தனை அப்பார்ட்மென்ட் வாசிகளும் கைத்தட்டி அவர்களை வரவேற்றனர்.
கொரானா வந்தவர்களை தனியாக இருக்க சொன்னார்களே தவிர ஒதுக்கி வைக்க சொல்லவில்லை என்பதை முழுவதாய் உணர்ந்த மனிதர்கள் சூழ இருப்பது தங்களது பாக்கியம் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர் அவர்கள்.
நிவியும் அபியும் ஓடி வந்து தங்களது பெற்றவர்களை கட்டிக் கொண்டனர்..
தர்ஷியும் ஆதவ்வும் நட்பாய் ஆருவையும் ஆதியையும் பார்க்க அவர்களும் நட்பாய் புன்னகைத்தனர்.
இருவருக்கு இடையே உள்ள நெருக்கத்தைப் பார்த்து ஆதி கேலியாய்ப் புருவத்தைத் தூக்க தர்ஷி ஆதவ்வின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“ஹே பியூட்டி வெட்கப்படுறீயா?”
“சீ போ ஹேன்ட்சம். ” என சொல்லி ஆதவ்வின் பின்னே இன்னும் நெருங்கி நிற்க ஆருவும் ஆதியும் மனதாரப் புன்னகைத்தபடி தங்களது அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தனர்.
உள்ளே நுழைந்தது தான் தாமதம்.
ஆதி வேகமாய் கதவைச் சாத்திவிட்டு அதில் ஆருவைச் சாய்த்தான்.
மாஸ்க் அவள் முகத்தை மூடியிருக்க அவள் கண்கள் மட்டும் மருண்டு அவனை விழித்தது.
அவனும் மாஸ்க் போட்டுக் கொண்டு தான் இருந்தான்.
அதைக் கழற்றாமலேயே அவளின் உதடுகளை தன் உதடுகளோடு பொருத்திக் கொண்டான்.
அவன் அவளது உதடுகளின் சுவையை அறிந்து கொண்டு இருந்த நேரம் பின்னிருந்து, “குஞ்சப்பா” என்று ஒரு குரல் ஒலித்தது.
திடுக்கிட்டு இருவரும் விலக அங்கே ஆருவின் அம்மாவும் ஆதியின் அம்மாவும் நின்று கொண்டு இருந்தனர்.
“அம்மா” என்று அவன் அதிர்ச்சியோடு சொல்ல அவரோ அவனது காதுகளை பிடித்து இழுத்தார்.
“அம்மா அம்மா விடு மா.. காது வலிக்குது..” என்று அவன் சொல்ல அங்கோ ஆருவின் காதுகளை அவள் அன்னை பிடித்து இருந்தார்.
“ஏன்டி எனக்கு இந்த பையனே வேண்டாம்னு சொன்னியே டி. அவனை கல்யாணமே பண்ணிக்க மாட்டேனு சொன்னியே டி. இப்போ என்ன ஆச்சு?”
“அம்மா அது அப்போ. எனக்கு இப்போ ஆதி ஒருத்தனை மட்டும் தான் பிடிக்கும்.”
“உன் கேரியர் கன்டினியூ பண்ண முடியாதுனு ஏதேதோ சொன்னியே ஆரு.”
“அம்மா என் ஆபிஸ்ல எல்லாருக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்துட்டாங்க. அதனாலே இனி நான் இங்கே இருந்து ஆபிஸ்க்கு போகணும்னு அவசியம் இல்லை மா. அங்கே சிங்கப்பூர்க்கு போய் கூட வீட்ல இருந்தே வேலைப் பார்த்துக்கலாம்.” என ஆரு சொல்ல அவளது தாய் வாயைப் பிளந்து அவளைப் பார்த்தார்.
இதுவரை வந்த எல்லா வரன்களையும் அவள் தட்டிக் கழித்தது வரமாக இந்த மாப்பிள்ளை கிடைக்க தானா என நினைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
“டேய் குஞ்சப்பா அன்னைக்கு போன்ல என்னவோ எனக்கு இந்த பொண்ணை பிடிக்கல. அவளுக்கு முடியை மாதிரி வாயும் நீளம்னு சொன்ன. இன்னைக்கு என்ன டா ஆச்சு?”
“அவளோட முடி மாதிரி மனசும் நீளம்னு தெரிஞ்சுக்கிட்டேன் மா. கூடவே கொஞ்சம் கையும்.” என்று சொல்ல ஆரு அவனைப் பார்த்து முறைக்க அவன் சிரித்து மழுப்பி வைத்தான்.
“அம்மா எனக்கு ஆருவைப் பிடிச்சு இருக்கு மா. ப்ளீஸ் கட்டி வை மா”
“அன்னைக்கு கட்டிக்க மாட்டேனு சொன்ன.”
“அது அன்னைக்கு. இது இன்னைக்கு ப்ளீஸ் மா.” என அவன் கெஞ்ச அந்த தாய் சிரித்தே விட்டார்.
“சரி சரி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடலாம் ” என அந்த இரண்டு தாயும் சொல்ல
அவர்கள் சந்தோஷமாகப் புன்னகைத்தனர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வீட்டில் அதிக ஆடம்பரம் இல்லாமல் படோபடம் இல்லாமல் ஒரு ஐயரை வைத்து நடந்துக் கொண்டு இருந்தது ஆதி ஆருவின் கல்யாணம்.
ஆதியோ ஐயர் சொன்ன மந்திரங்களை தப்பு தப்பாக சொல்ல அவரோ நிமிர்ந்து அவனை முறைத்தார்.
“கோச்சிக்காதீங்க ஐயரே முதல் தடவை இல்லையா அதான் இப்படி தப்பு தப்பா சொல்றேன். அடுத்த தடவை கல்யாணம் பண்ணும் போது கரெக்டா சொல்லிடுவேன். ” என சொன்னவனை ஆரு திரும்பி அவனை முறைத்தாள்.
“டேய் உனக்கு நான் ஒன்னே பெருசு. இதுல நீ மறுபடியும் வேற கல்யாணம் பண்ணிக்க போறியா?”
“அது ஆரு மா. லைட்டா tongue slip ஆகிடுச்சு. “
“இப்போ பாரு நீயே எப்படி ஸ்லிப் ஆகப் போறேனு.”
“நான் தான் எப்பவோ உன் கிட்டே ஸ்லிப் ஆகிட்டனே ஆரு மா. “
“இப்படி பேசி பேசியே கவுத்துடு டா.” என ஆரு சொல்லவும் ஐயர் கெட்டிமேளம் சொல்லவும் சரியாக இருந்தது. ஆதி மங்களநாணைப் பூட்டி ஆருவைத் தன்னவளாக்கிக் கொண்டான்.
“டேய் பட்டர் வாயா. இதே மாதிரி நமக்கும் கல்யாணம் நடக்கும்ல.. “
“ஆமாம் தர்ஷி. ஆனால் ஒரு இரண்டு வருஷம் கழிச்சு. நான் இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகணும்.” என்று சொல்ல
“சரிடா டப்பரா மண்டையா ” என சொல்லி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“பார்ரா ஆதி அங்கிள் விட்ட அம்பு ஆரு அக்கா ஹார்ட்ல பச்சக்குனு ஒட்டுனா மாதிரி ஆதவ் அங்கிள் விட்ட அம்பும் தர்ஷி அக்கா ஹார்ட்ல பச்சக்குனு ஒட்டுக்கிச்சு பாரு டா அபி” என்று நிவி சொல்லியது ல் தாமதம்
“அடிங்க.” என்ற ஒலியோடு ஆதவ் நிவியையும் அபியையும் துரத்த அந்த இடமே சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.
போட்டோகிராபர் கேமராவோடு மணமக்களை புகைப்படம் எடுக்க வர ஆதியும் ஆருவும் ஒட்டி நின்றனர்.
“sir keep social distancing ” என அந்த போட்டோகிராபர் சொல்ல
“அடப்பாவி தள்ளி இருக்கிறதுக்கு நான் ஏன்டா கல்யாணம் பண்ணனும். ” என்று மனதுக்குள் நினைத்தவன் இரண்டடி விட்டு தள்ளி நிற்க ஆதவ்வும் தர்ஷியும் அபியும் நிவியும் மொத்தக் குடும்பமும் அவர்களின் பின்னே இடைவெளியுடன் நின்றது.
கொரானாவால் அழிக்க முடியாத பெருஞ்சிரிப்பு எல்லோரின் இதழ்களிலும் மிளிர அந்த புகைப்படம் அதை பதிவு செய்வதாய்.
நேசத் தொற்று தொற்றியது.