மகிஷவர்த்தினி 8

20211105_085322-1b2b0823

மகிஷவர்த்தினி 8

வெங்கடேஷ் சோர்ந்த முகத்துடன் ஆதியின் வீட்டுனுள் வர, மயூரா அவரை அமைதியாகப் பார்த்தாள். மற்றவர்கள் ஒரு வித ஆர்வத்துடன் பார்க்க ஆதி அவரையும் மயூராவையும் நக்கலாகப் பார்க்க அதிலேயே புரிந்தது மகிஷா உண்மையைத் தான் கூறியிருக்கிறாள். சலனமற்ற பார்வையுடன் மகிஷாவைப் பார்த்தாள். அவளோ மயூராவை ஏளனமாகப் பார்த்தாள்.

“என்ன ஆதி? ரிசல்ட் என்னாச்சு?”

“நான் சொன்னது தான் அப்பா நடந்தது. மயூரா கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை. எனக்குத் தெரியாதா! நீங்க யாரும் தான் என்னை நம்பலை.” என்று ஆதி கூற, கிரிஜாவிற்கு அதிர்ச்சி. மற்றவர்களுக்கு எப்படி ரியாக்ட் செய்ய என்று தெரியவில்லை.

கிரிஜா வேகமாகச் சென்று மயூராவின் கண்ணத்தில் சப்பென்று அறைந்து,”சொல்லு டி அப்போ உன் கர்ப்பத்துக்கு யார் காரணம்?”

“ஆதி தான் காரணம்.” என்று ஸ்திரமாகச் சொல்ல, ஆதிக்கு கோபம் வந்துவிட்டது.

“ஏய் அதான் ரிப்போர்ட் தெளிவா சொல்லுதே நான் இதுக்கு காரணம் இல்லைனு. அப்புறமும் என்னையே சொல்ற! என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு? இளிச்சவாயன் மாதிரி தெரியுறேனா?” கடுமையாக வினவ,

மயூரா மகிஷாவை கோபமாகப் பார்த்து,”எல்லாம் உன்னோட புது ப்ரண்ட் பண்ண வேலை. அவளைக் கேள் அவ தான் இந்த ரிப்போர்ட்டை மாத்தி வச்சுருக்கா.” என்று கோபமாகக் கூற, எல்லோரும் அதிர்ச்சியாக மகிஷாவை பார்க்க, அவளோ மயூராவை சாதாரணமாகப் பார்த்து,”உனக்கு என்னைப் பிடிக்காதுனு எனக்கு நல்லா தெரியும் மயூரா. அதுக்காக இவ்ளோ பெரிய பழியை நீ என் மேல சுமர்த்தி இருக்க வேண்டாம். உன்னோட தப்பை மறைக்க நீ என் மேல பழி போட்டு தப்பிக்கிப் பார்க்கிறா. உன்னோட சந்தேகப் புத்தியால தான் ஆதி உன்னை விட்டு போனான். ஆனால் அதுக்கு என்னைத் தான் காரணம்னு சொன்ன. இப்போ நீ பண்ணத் தப்புக்கும் என்னைத் தான் காரணம்னு சொல்ற. அதையும் ஆதி பார்த்துட்டு தான் நிக்கிறான். அப்போ அவனுக்கு என் மேல சந்தேகம் போல. சரி நான் இனிமேல் இந்த வீட்டுல இருக்கவே மாட்டான். நீ சந்தோஷமா இருக்கலாம்.” என்று வராது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் போக அடி எடுத்து வைக்க, ஆதி அவள் கையைப் பிடித்துக் கொண்டு,”மகி நான் பேசுறதுக்கு முன்னாடி நீ பேசிட்ட அதுக்காக நான் இவளை நம்புறேன்னு அர்த்தம் இல்லை. நீ சொன்ன மாதிரி அவளோட தப்பை மறைக்க உன் மேல பழி போடுறா. அவளுக்காக நீ என்னையும் இந்த வீட்டையும் விட்டுப் போகக் கூடாது.” என்று ஆதி கூற,

“ஆதி எனக்கும் என்ன ஆசையா உன்னையும் இந்த வீட்டை விட்டும் போறதுக்கு. இந்த இரண்டு நாள் நான் உன் கூடத் தான இருந்தேன். எங்கேயாவது வெளில போனேனா நான்? இல்லைல. அப்புறம் நான் எப்படி ரிப்போர்ட் மாத்திருக்க முடியும்? அதைவிட எனக்கு உன்னையும் இந்த குடும்பத்தையும் தவிர இந்தியால யாரையும் எனக்குத் தெரியாது. அப்படியிருக்க மயூரா இப்படி அபாண்டமா என் மேல பழி போடுறா” என்று மகிஷா கேட்க,

“ஆமா ஆதி மகிஷா எங்கேயும் வெளில போகலை. மயூரா நீ இப்படி நடந்துப்பனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. நேத்து கூட மகிஷா என்கிட்ட வந்து ஆதிக்கு பிடிச்ச டிஷ் சொல்லுங்க ஆண்டி நான் அவனுக்கு சமைக்கிறேன்னு சொல்லி ரொம்ப நேரம் கிட்சன்ல தான் இருந்தா.” என்று ஆதியின் அம்மா துர்கா கூற மயூராவிற்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்தாள்.

“இங்க இருந்து எங்க மானத்தை வாங்கினது போதும். நம்ம வீட்டுக்குப் போகலாம் வா.” என்று மயூராவை கிரிஜா இழுத்துக் கொண்டு செல்ல மயூரா எதுவும் பேசாமல் அவர் பின்னேயே சென்றாள். வெங்கடேஷோ மகிஷாவை யோசனையாகப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

“ஆதி மயூராவா இப்படினு எனக்கு அதிர்ச்சியா இருக்கு பா. எப்படி அவளுக்கு உன் மேல குற்றம் சாட்ட மனசு வந்துச்சு. அவ தான உன் மேல சந்தேகப்பட்டு என்ன என்னமோ பண்ணா. இப்போ இப்படி ஒரு பழியை வேற போடுறா. பாவம் நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு நம்மனால தேவையில்லாத பிரச்சனை தான்.”

“அய்யோ ஆண்டி மயூரா பண்ணத் தப்புக்கு நீங்க எதுக்கு வருத்தப்பட்டு பேசுறீங்க. அதலாம் வேண்டாம் ஆண்டி நீங்க இப்படி பேசுறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.” என்று மகிஷா அவரை ஐஸ் வைத்துப் பேச,

“இல்லை மா நீ என்ன சொன்னாலும் எங்களால உனக்குத் தான் கஷ்டம். என்னங்க நீங்க எதுவும் பேசாமல் அமைதியா இருக்கீங்க?” துர்கா சம்பத்திடம் கேட்க,

“எனக்கு இங்க என்ன நடக்குதுனு சுத்தமா புரியலை துர்கா. மயூராவா இப்படினு அதிர்ச்சியா இருக்கு. கொஞ்ச நாள் போயிருந்தா நானே வெங்கடேஷ்கிட்ட பேசலாம்னு நினைச்சேன். ஆனால் நடக்குறது எல்லாம் தப்பாவே இருக்கு துர்கா. எதுக்கு மயூரா இப்படி ஆதி மேல பழி போடனும்? அதுக்கு என்ன மோட்டிவ் இருக்கு?”

“அங்கிள் நான் இதைச் சொல்லக் கூடாதுனு தான் நினைச்சேன். ஆனால் இப்போ நீங்க கவலைப்படறனால சொல்றேன். மயூராவுக்கு நான் இங்க இருக்கிறது பிடிக்கலை. ஆதியை நான் அவகிட்ட இருந்து பிரிச்சுட்டேன்னு நினைக்கிறா. அதனால என்னை வீட்டை விட்டு அனுப்பத் தான் இப்படி பொய் சொல்லிருக்கா அங்கிள். அதுவும் ஆதியே என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளனும்னு அவ ஆசைப்பட்டா அதான் இப்படிலாம் பொய்ச் சொல்லிருக்கா அங்கிள்.”

“என்ன மா சொல்ற? இதை மயூராவே சொன்னாளா?”

“நீங்க என்னை நம்புறீங்களானு எனக்குத் தெரியலை அங்கிள். ஆனால் நான் சொன்னது அத்தனையும் உண்மை. உங்களுக்கும் நான் இங்க இருக்கிறது பிடிக்கலைனா சொல்லிடுங்க நான் ஜெர்மனிக்கே போய்டுறேன்.” என்று கூறிவிட்டு அவர்களது பதிலை எதிர்பார்க்காமல் அழுது கொண்டே அதாவது அப்படி நடித்துவிட்டு அங்கிருந்து மகிஷா சென்றுவிட்டாள்.

“பாவம்ங்க இந்தப் பொண்ணு. நேத்து ஆதி சோகமா இருக்கான்னு அவனுக்காகப் பார்த்துப் பார்த்து சமைச்சா. ஆதி நீ கூட சூப்பரா இருக்குனு சொன்னியே அது மகிஷா சமச்சது தான். ஆனால் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா. எனக்கு இந்தப் பொண்ண வந்தப் புதுசுல பிடிக்கலை தான் ஆனால் இத்தனை நாள்ள ஆதிக்கு எவ்ளோ உதவியா இருந்துருக்கா. ஆனால் மயூரா இந்த மாதிரி எப்போவாவது இருந்திருக்காளா? நல்ல வேளை அவளோட உண்மையான குணம் தெரிஞ்சு போச்சு. இல்லாட்டி எவ்ளோ பெரிய பாவம் பண்ணிருப்போம்! நம்மளோட பையன் வாழ்க்கையே அழிஞ்சுருக்கும்.” என்று துர்கா உணர்ச்சிவசப்பட்டுப் பேச சம்பத்துக்குமே துர்கா கூறுவது சரியானதாகத் தோன்றியது. ஆதி சிந்தனையுடன் தன் அறைக்குச் சென்றான்.

இதையெல்லாம் வீட்டுக்கு வந்த விஷ்வா வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனது உள் மனசு மயூரா உண்மையைத் தான் கூறுகிறாள் என்று அப்பட்டமாகக் கூறியது. ஏன் என்றால் மகிஷா மயூராவை சவாலாகப் பார்த்ததை விஷ்வா பார்த்துவிட்டான். மகிஷா மயூராவை ஆதியிடம் இருந்து பிரிக்கவே இவ்வாறு செய்துள்ளாள் என்று நினைத்து மகிஷாவை கவுக்க தக்க தருணத்தை எதிர்பார்த்து அதே யோசனையுடன் அவனது அறைக்குச் சென்றான்.

மயூராவை இழுத்துக் கொண்டு வந்த கிரிஜா அவளைக் கோபத்துடன்,”சொல்லு மயூரா உன் கர்ப்பத்துக்கு யார் காரணம்?”

“அம்மா நீ என்னை நம்பலையா? ஆதி தான் மா இதுக்கு காரணம் ஏன் நீயும் அவங்களை மாதிரி பேசுற?”

“அப்புறம் ஏன் ரிப்போர்ட் அப்படி வந்துருக்கு?”

“அம்மா அதான் நான் சொன்னேன்ல அந்த மகிஷா தான் இது எல்லாத்துக்கும் காரணம். என்னை நம்பு மா. அவளே என்கிட்ட வந்து சொன்னா மா அப்பாவும் ஆதியும் ஹாஸ்பிட்டல் போன போது. என்னை நம்பு மா நான் உண்மையைத் தான் சொல்றேன்.”

“கிரி மயூ உண்மையைத் தான் சொல்றா. அந்தப் பொண்ணோட நோக்கம் சரியில்லை. அங்க மயூராவை அவ எப்படி பார்த்தா தெரியுமா? மத்தவங்க அவளைப் பார்க்கும் போது அழுகிற மாதிரியும் அவங்க பார்க்காத போது மயூராவா நக்கலாவும் பாரத்தா. அதை நானும் பார்த்தேன். ஆனால் ஏன் இப்படி பண்ணனும் அது தான் எனக்குச் சுத்தமா புரியலை.”

“என்னங்க நீங்க என்ன என்னமோ சொல்றீங்க? அங்கேயே சொல்லிருந்தா பிரச்சனையைச் சரி பண்ணிருக்கலாமே!”

“அங்க யாரும் மயூராவை நம்பலை. அந்தப் பொண்ணை தான் நம்புறாங்க. எந்த ஆதாரமும் இல்லாம நம்மனால ஒன்னும் பண்ண முடியாது கிரிஜா.”

“ஆமா அப்பா நீங்க சொல்றது உண்மை. ஆதி அவ வந்ததுக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டான். நான் இது வரைக்கும் ரொம்ப அவசரப்பட்டுடேன். ஆனால் இனிமே நிதானமா அவளை கண்காணிக்கனும். கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல தப்பு பண்ணுவா அப்போ கையும் களவுமாகப் பிடித்து ஆதிகிட்ட ஒப்படைக்கனும் அப்பா. அப்போ ஆதி என்கிட்ட தான் வந்தாகனும் அப்போ அவனை நான் வேண்டாம்னு தூக்கிப் போடனும். அப்போ தான் என அருமை அவனுக்குப் புரியும் அப்பா.” என்று கோபமாகக் கூறிவிட்டு மயூரா அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

“என்னங்க இவ இப்படி சொல்றா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் ஆதி தான் வேணும்னு அழுது கரைஞ்சா. இப்போ இப்படி பேசிட்டு போறா.”

“அப்புறம் அவளும் என்ன பண்ணுவா கிரிஜா. மயூ என்ன செஞ்சாலும் நான் அவளுக்கு துணையா இருப்பேன்.” என்று தீர்மானமாக வெங்கடேஷ் கூற, கிரிஜாவுக்கு கவலையாக இருந்தது. எங்கே தன் பெண்ணின் வாழ்க்கை வீணாகப் போய்விடுமோ என்று.

மகிஷாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவள் நினைத்தது எல்லாம் இவ்ளோ சீக்கிரம் நடைபெறும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் நடக்கிறது. அவளுக்குத் தெரியும் ஆதியை மயூராவிடம் இருந்து சுலபமாகப் பிரித்துவிடலாம் என்று. அதே போல் செய்தும் காட்டிவிட்டாள். அவளது சந்தோஷத்தின் அளவை அதிகரிக்கவே அங்கு வந்தான் ஆதி.

“மகி ஆர் யூ ஓகே?”

“நான் அதை உன்கிட்ட கேட்கனும் ஆதி. நீ எப்படி இருக்க? நான் இங்க வந்துருக்கவே கூடாது ஆதி. என்னால தான மயூரா இப்படிலாம் பண்ணிருக்க?”

“ம்ச் என்ன மகி பேசுற? அப்படிலாம் பேசாத. அவ மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுறாளா? ஏன் நான் இல்லை? என்னைப் பத்தி மட்டும் யோசி மகி.”

“உன்னைப் பத்தி மட்டும் தான் நான் யோசிச்சேன். அதனால தான் நான் இப்படி பேசுறேன் ஆதி. நீ மயூரா இப்படி பண்ணது நினைச்சு ரொம்ப வருத்தப்படுற. ம்ச் இதலாம் என்னால தான?”

“மகி அவளோட உண்மை முகம் தெரிஞ்சதுனு நானே ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்போ அவ இரண்டு மாசம் கர்ப்பமா இருக்கானா என்னை லவ் பண்ணிட்டே எவன் கூடவோ போய்ருக்கா. சை நினைச்சாலே அருவருப்பா இருக்கு. அவளுக்காக நான் வருத்தப்படவே இல்லை. ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன். நீ இதை எல்லாம் நினைச்சு வருத்தப்படாத.”

“ம் சரி ஆதி.”

“ம்ச் மகி நான் தான் சொல்றேன்ல. பீ ஹாப்பி சரி அதை விடு எனக்காக நீ நேத்து சமைச்சியா?”

“ஆமா ஆதி உனக்காகத் தான் நான் நேத்து சமைச்சேன். ம்ச் ஆண்டிகிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன் அவங்க சொல்லிட்டாங்க.”

“ஏன் சொல்ல வேண்டாம்னு சொன்ன?”

“அட போ ஆதி எனக்கு ஒரு மாதிரி ஷையா இருக்கு.” என்று கூறிவிட்டு பால்கனிக்குச் சென்றாள் மகிஷா. ஆதி விசில் அடித்துக் கொண்டே பின்னாடியே வந்தான்.

“மகி பேசிட்டு இருக்கும் போது இங்க வந்துட்டா எப்படி? சொல்லு எதுக்கு ஷையா இருக்கு?” ஆதி கேட்க, மகிஷா சொல்வதற்கு முன் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி அங்கு வந்து,”தம்பி பெரிய ஐயா உங்களைக் கீழே வரச் சொன்னார்.”

“சரி நீங்க போங்க நான் வரேன்.” என்று அவரிடம் கூறிவிட்டு மகிஷாவை பார்த்து,”வந்து உன்கிட்ட பேசிக்கிறேன்.” என்று கூறிவிட்டு கீழே சென்றான். மகிஷா அவன் சென்றவுடன்,”லூசு நம்ம என்ன செஞ்சாலும் நம்புது. இப்படி நீ மாறத் தான் நான் ஆசைப்பட்டேன். கூடிய சீக்கிரம் நான் இங்க வந்த வேலை முடிஞ்சுரும் போல.” என்று தனக்குத் தானே பேசி விட்டு கீழே என்ன பேசுகிறார்கள் என்று தெரிய கீழே சென்றாள் மகிஷா.

சம்பத் ஆதியிடம் கத்திக் கொண்டிருந்தார்,”இங்க என்ன நடக்குது ஆதி? நம்ம பிஸ்னஸ் நல்லா போகுதுனு பார்த்தா இப்போ என்ன என்னமோ கம்ப்ளைன்ட்ஸ் வருது.”

“என்னாச்சு அப்பா?”

“நாலு நாள் முன்னாடி உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? மும்பைக்கு நாம அனுப்ப வேண்டிய பேக்கேஜ்ஜை அனுப்பிடுனு சொன்னேன்ல?”

“ஆமா அப்பா சொன்னீங்க. நானும் அனுப்பி வச்சுட்டு தான் அப்பா வீட்டுக்கே வந்தேன்.”

“இது தான் நீ பிஸ்னஸ் பார்க்கிற லட்சணமா? அனுப்பி வச்சா மட்டும் போதுமா? டெலிவரி ஆகிடுச்சானு பார்க்க மாட்டியா?”

“என்னாச்சு அப்பா? ஏதாவது பிரச்சனையா?”

“ஆமா உன்னால எவ்ளோ லாஸ் ஆக போகுதோ தெரியலை. அவங்களுக்கு பேக்கேஜ் எதுவும் போய் சேரலை.” சம்பத் கூற ஆதிக்கு அதிர்ச்சி.

“என்ன பா சொல்றீங்க? பேக்கேஜ் போய் சேரலையா?”

“ஆமா நடுவுல நம்ம சரக்குலாம் எங்க போய்ருக்கும்? லாரி டிரைவர்க்கு ஃபோன் போட்டா அவன் நான் நீங்க சொன்ன அட்ரெஸ்ல டெலிவரி பண்ணியாச்சுனு சொல்றான். யாரை நான் நம்புறது?” சோர்ந்து போய் சம்பத் கூற,

“இங்க ஏதோ தப்பு நடத்துருக்கு. நாம நேர்ல போய் விசாரிச்சா தான் இதுக்கு முடிவு என்னன்னு யோசிக்க முடியும்.” என்று விஷ்வா கூற,

“அப்போ நீயே போய்ட்டு வா விஷ்வா. ஆதியை நம்புனா அவ்ளோ தான். நான் இந்த விஷயத்தை உன் கிட்ட சொல்லிருக்கனும் விஷ்வா. தப்பு பண்ணிட்டேன் ஆதி முடிச்சுடுவான்னு நினைச்சு அப்படியே நானும் விட்டுட்டேன்.”

“அப்பா அவன் தப்பா டெலிவரி பண்ணா நான் என்ன பண்றது?” கோபமாக ஆதி கேட்க,

“ஆதி நான் எப்பவும் நம்ம பேக்கேஜ்ல ஒரு ஜீ.பி.எஸ் ஃபிக்ஸ் பண்ணி தான் அனுப்புவேன். அப்போ தான் அது கரெக்ட்டா டெலிவரி ஆகுதானு நாம செக் பண்ண முடியும். மும்பை ப்ராஜெக்ட் நம்ம நிறுவனத்துக்கு எவ்ளோ முக்கியம்னு உனக்கே நல்லா தெரியும். அது நம்முடைய முதல் பெரிய ப்ரஜெக்ட். அதான் பெரியப்ப இவ்ளோ கோபப்படுறார்.” ஆதிக்கு புரியும்படி விஷ்வா கூற, மகிஷா முன் தன்னை மட்டும் தட்டுவதாக ஆதி நினைத்து,”இங்க பார் விஷ்வா உனக்குத் தான் எல்லாம் தெரியும் மத்தவங்களுக்கு எதவும் தெரியாத மாதிரி நீ பேசாத. எங்களுக்கும் எல்லாம் தெரியும். நீ உன் வேலையை மட்டும் பார்.”

“ஆதி இப்போ எதுக்கு அவன் மேல கோபப்படுற? உண்மையைச் சொன்னால் உனக்கு கசக்குதா? உனக்குக் கொடுத்த வேலையை ஒழுங்கா செய்யாம இப்போ அவனை முறைச்சோ திட்டியோ எந்த ப்ரியோஜனமும் இல்லை. விஷ்வா நீ சீக்கிரம் மும்பை கிளம்பி அங்க என்ன நடந்துச்சுனு பார்.” என்று கூறிவிட்டு சம்பத் அங்கிருந்து சென்றுவிட்டார்.

“ம் சரி.” என்று கூறிவிட்டு ஆதியை நக்கல் பார்வை ஒன்று பார்த்துவிட்டு மகிஷாவிடம் திரும்பி,”மகிஷா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் நீ இந்தியா வந்ததுல இருந்து இங்கேயே தான் இருக்க. அதுவும் முக்கால்வாசி நேரம் வீட்டுல தான் இருக்க. நீ ஏன் என் கூட மும்பை வரக் கூடாது?”

“மகி எங்கயும் வர மாட்டா. நீ உன் வேலையை மட்டும் பார்.” ஆதி கோபமாகக் கூற,

“ஆதி அதை மகிஷா சொல்லனும். நீ ஒன்னும் அவளோட மௌத் பீஸ் கிடையாது.”

“அச்சோ என்னால சண்டை வேண்டாம். விஷ்வா நீ மும்பைக்கு வேலை விஷயமா போற! நான் அங்கு வந்தும் சும்மா தான இருக்கனும்? அதுக்கு நான் இங்கேயே இருக்கேன்.” என்று மகிஷா கூற,

“இந்த வேலைலாம் எனக்குச் சுலபமானது. அதை ஒரு நாள் இல்லை இல்லை பாதி நாள் போதும் முடிச்சுடுவேன். நாம கூட ஒரு நாள் அங்க இருந்துட்டு வரலாம். என்ன சொல்ற?”

“ஓகே, மும்பைக்கு பக்கத்துல தான புனே? சரி ஓகே வரேன்.”என்று மகிஷாவும் கூற ஆதிக்கு பயங்கர கோபம். எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

“சரி அப்போ நான் டிக்கெட் போட்டுறேன். நீ போய் உன் திங்க்ஸ்லாம் பேக் பண்ணி வைச்சுடு. லேட் பண்ணிடாத.” என்று விஷ்வா கூற, மகிஷாவும் சரி என்று கூறிவிட்டு அவளது அறைக்குச் சென்றாள்.

“வா மகிஷா. உன்னோட திட்டம் என்னனு இந்த இரண்டு நாள்ள நான் கண்டுபிடிக்கிறேன். என்னோட திட்டத்துக்கு இடஞ்சல்லா நீ இருந்தா உன்னை அப்புறப்படுத்த என்ன என்ன செய்யனுமோ எல்லாம் பண்ணுவேன்.” என்று விஷ்வா மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பத் தயாராகப் போனான்.

மகிஷாவும் தன் அறையில் கிளம்ப தேவையானவற்றை பேக் செய்ய ஆரம்பித்தாள். அப்பொழுது அங்க வந்த ஆதி கோபமாக மகிஷாவிடம்,”என்ன மகி நான் நீ வர மாட்டனு அவன்கிட்ட சொல்றேன் ஆனால் நீ அதை எதையும் காதுல வாங்கமா அவன் சொன்னதுக்கு சரினு சொல்ற! அதுவுமில்லாம அவன் என்னை எவ்ளோ நக்கலா பார்த்துட்டு போனான் தெரியுமா? பார் நீ சொல்றதை அவ கேட்கலை நான் சொன்னதைத் தான் அவ கேட்குறானு. எனக்கு அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?”

“இங்கப் பார் ஆதி நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். எனக்கு என்ன தோனுதோ அதை மட்டும் தான் செய்வேன். உனக்கே நல்லா தெரியும் நான் என்னோட அம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க. இருந்தாலும் நான் இந்தியா வரனும்னு அவங்க எப்படி இருக்காங்கனு கூடப் பார்க்காம நான் கிளம்பி வந்துட்டேன். ஸோ என்னோட லைஃப்ல நான் எடுக்கிறது மட்டும் தான் டெசிஷன். நானும் விஷ்வா சொன்ன மாதிரி இங்கேயே தான இருக்கேன். எனக்கும் கொஞ்ச செயிஞ்ச் கிடைக்கும். அதான் நான் போறேன். விஷ்வா சொன்னனால இல்லை. புரியுதா?” என்று ஆதியிடம் சொல்ல,

“சரி அப்போ நான் உன்னை கூட்டிட்டு போறேன். நீ அவன் கூடப் போக வேண்டாம்.”

“ஆதி உனக்கு என்னாச்சு? இப்போ நான் விஷ்வா கூட போறனால உனக்கு என்ன ப்ராப்ளம்? ஆதி இப்போ நீ மயூரா மாதிரி நடந்துக்குற. அன்னைக்கு அவ எப்படி உன்னை என் கூட பேசக் கூடாதுனு சொன்னாளா அதே மாதிரி இப்போ நீ பண்ற! உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை ஆதி. சரி உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா நான் போகலை.” என்று மகிஷா கூற, ஆதி சுதாரித்தான். அவனுக்கும் தோன்றியது தான் மயூரா மாதிரி நடந்து கொள்கிறோம் என்று.

“மகி என்னைப் போய் நீ அந்த மயூரா கூட கம்பேர் பண்ணிட்டியே! சரி விடு உன் மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை. விஷவாவுக்கும் உனக்கும் ஒத்துப் போகாது. அவன் உன்னை எதாவது பேசிட்டா என்னால தாங்கிக்க முடியாது. அதுக்கு தான் சொன்னேன். வேற எதுவும் இல்லை. அப்புறம் இன்னொரு வாட்டி இப்படிச் சொல்லாத எனக்கு உன் மேல நூறு சதவிகிதம் நம்பிக்கை இருக்கு.”

“தாங்கஸ் ஆதி. நீ என்னைப் பத்தி கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். விஷ்வானால என்னை ஒன்னும் பண்ண முடியாது.” என்று நம்பிக்கையாகக் கூற, மனதே இல்லாமல் சரியென்று ஆதி கூறினான்.

“தாட்ஸ் மை ஆதி.” என்று மகிஷா அவனது கண்ணத்தைத் தட்ட ஆதிக்கு சந்தோஷமாக இருந்தது. அதே சந்தோஷத்துடன் அவளுக்கு பேக் செய்ய உதவி செய்தான்.

அன்று இரவு நேர ஃப்ளைட் என்பதால் விஷ்வாவும் மகியும் வீட்டிலே சாப்பிட்டு விட்டு கிளம்பிட்டு விட்டார்கள் மும்பைக்கு. இந்த மும்பை பயணம் இருவரின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது என்று தெரியாமல் பயணத்தைத் தொடங்கினார்கள் விஷ்வாவும் மகிஷாவும்.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!