மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 11

 

அந்த ஊரே அந்த மண்டபத்தில் தான் கூடியிருந்தது. (லாக் டவுன்ல எப்படி இப்படி கூட்டத்தை சேர்க்கலாம்னு யாரு என்னை கேட்கக் கூடாது சொல்லிட்டேன்.‌ மீ பாவம்)…

சூர்யா பட்டு வேட்டி சட்டையில் மாப்பிளைக்குறிய கம்பீரத்துடன் நிற்க, தியாவின் கைவண்ணத்தில் டிசைன் செய்த பட்டுபுடவையில் தாமரை வானத்து தேவதை போல் ஜொலிக்க, மனது முழுவதும் சந்தோஷமும், முகம் முழுவதும் வெட்கத்தோடு சூர்யா அருகில் நின்றிருந்தாள்… 

 

அன்று காலையில் தான் ஸகுலதெய்வம் கோவிலில் அவர்கள் கல்யாணம் முடிந்திருந்தது. சூர்யாவிற்கு தங்கை ஸ்தானத்தில் இருந்து தியா தான் அனைத்து சடங்குகளும் செய்திருந்தாள். அன்று மாலை அவர்கள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. மாலை போல் அனைத்து கொண்டாட்டங்களும் முடிய, தாமரை சூர்யா வீட்டிற்கு கிளம்பினாள். சூர்யாவும், தாமரையும் ஹனிமூனுக்கு பத்து நாள் கனடா செல்ல, தியா அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்க, கல்யாணம் முடிந்த மறுநாளே அவர்கள் கனடா கிளம்ப வேண்டி இருந்தது. அதனால் மற்ற சம்பிரதாயங்களை அவர் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தாமரையை சூர்யா வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்து, சொந்தங்கள் அனைத்து ஆனந்த கண்ணீரோடு அவளை வழியனுப்பி வைத்தனர். 

 

ஒரு வேளை சூர்யா அங்கிருந்தால் தியாவை அந்த வீட்டை வெளியே செல்ல விடாமல் செய்திருப்பான். என்ன செய்வது நடப்பது நடந்து தான் தீரும்.

 

தாமரையை வழியனுப்பி விட்டு அகிலா பாட்டி கண்ணீரோடு திரும்ப, அங்கு மூச்சு விட கஷ்டப்படும் தன் கணவரை பார்த்தவர். “அய்யோ” என்று கத்திகொண்டே அவரின் ஓட அந்த இடமே பரபரப்பானது…

டாக்டர் வந்து பார்த்து விட்டு, “இப்ப அவருக்கு பரவாயில்ல, பேத்தி தீடிர்னு பிரிஞ்சு போனது அவருக்கு கஷ்டமாகிடுச்சு, அதான் இப்டி. முடிஞ்ச வரை அவரை சந்தோஷமா இருக்க மாதிரி பாத்துக்கோங்க, எந்த அதிர்ச்சியான விஷயமும் அவர்கிட்ட சொல்தீங்க. ஏற்கனவே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு, கொஞ்சம் கவனமா இருங்க” என்ற டாக்டர் அங்கிருந்து கிளம்பி விட, தியா மெல்ல அகிலா பாட்டி அருகில் வந்தவள், “டாக்டர் என்ன பாட்டி சொல்றாரு, தாத்தாக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்க, எப்ப பாட்டி? இத ஏன் நீங்க என்கிட்ட சொல்லல?” என்று கோபப்பட, பேத்தி தலையை ஆதரவாக கோதி பாட்டி, “என்னைக்கு உங்கப்பன் கல்யாணம் பண்ணிட்டு வந்து இந்த வீட்டு வாசல்ல நின்னனோ, அன்னைக்கு தான்டா இவருக்கு அந்த பழப்போன அட்டாக் வந்துது, அதுல இருந்து அவர் பொழச்சி வந்ததே நம்ம குலசாமி தயவு தான்.” என்று சொல்ல, தியாவுக்கு மனது கனத்து விட்டது. தனது தந்தையால் தான் தாத்தாவுக்கு இந்த நிலைய’ என்று யோசித்தபோது அகரன் ஏன் இன்றளவும் தன் தந்தை மீது கோபமாக இருக்கிறன் என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது. இனி அந்த வீட்டில் அவளால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைத்தவள் ஒரு முடிவோடு அங்கிருந்து சென்றாள்.

அந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து தியாவுக்கு மனது சரியில்லாத சமயத்தில், மேல் மாடியில் உள்ள பெரிய ஊஞ்சலில் கொஞ்சம் நேரம் படுத்திருப்பது அவள் பழக்கம். ஏனோ தான் தந்தை சின்ன வயதில் விளையாடிய அந்த பழங்காலத்து ஊஞ்சலில் படுக்கும் போது அவள் தந்தை மடியில் படுத்த உணர்வு அவளுக்கு தோன்ற அவள் மனது அமைதியாகும். அதேபோல் இன்றும் ஊஞ்சலில் படுத்தவள் ஏற்கனவே அகரன், அரும்பு கல்யாணம், இன்றைய தாத்தாவின் நிலை என்று அனைத்தும் சேர்ந்து அவளை முடக்கிப்போட தன்னை மறந்து அசந்து உறங்கிவிட அவள் ஃபோன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. 

 

அழைத்தது ஜெசி தான் அன்று அகரன் திருமணம் பற்றி சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தவள். அதான் பின் ஜெசியின் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை. எங்கு அவள் குரல் கேட்டால் தன்னையும் மீறி அழுதுவிடுவோமே என்ற பயத்திலேயே அவளிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். ஜெசிக்கும் இது புரிந்ததால் அவளும்‌ தியாவை அதான் பின் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் இன்று தியா, ஜெசிக்கு அனுப்பி இருந்த மெயிலை படித்தவளுக்கு, தியாவிடம் பேசியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் தொடர்ந்து கால் செய்து கொண்டே இருந்தாள்.

 

ஏதோ வேலையாக மாடிக்கு வந்த அரும்பு, விடாமல் அடித்துக் கொண்டிருந்த ஃபோனையும், தியாவை மாறி மாறி பார்த்தவள்… “இங்க ஃபோன் கொழயடி சண்டகாரி மாதிரி லபலபான்னு கத்திட்டு இருக்கு… இவ என்னடான்னா கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு இருக்க, இவளா எல்லா என்ன பண்றது” என்று வாய்க்குள் வறுத்தெடுத்தவள். 

கத்திக்கொண்டிருந்த தியாவின் ஃபோனை எடுத்து பார்க்க. ஃபோன் டிஸ்ப்ளேயில் ஜெசி என்று‌ பெயர் தெரிய, ஃபோன் வால் பேப்பரை அழகாய் சிரித்துக் கொண்டிருந்த அகரன் ஃபோட்டோ அலங்கரித்து…”ம்க்கும் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” என்று தாடையை தோளில் இடித்துக்கொண்ட அரும்பு, ஃபோனை அட்டென் செய்து காதில் வைத்து ஹலோ சொல்லும் முன்னமே ஜெசி கடகடவென பேச தொடங்கி விட அமைதியாக அனைத்தையும் கேட்ட அரும்பு, மெதுவாக ஃபோனை கட் செய்து  தியா அருகில் வைத்துவிட்டு உறங்கி கொண்டிருந்தவளை  ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள்.  இரண்டடி நகர்ந்து பின் திரும்பி தியாவை பார்த்தவள் அவள் அருகில் வந்து உறங்கும் தியாவின் நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தவள். “சாரி க்கா” என்று கலங்கிய கண்களுடன் சொன்னவள் அங்கிருந்து சென்று விட்டாள். 

 

ஒரு நாள் அமைதியாக கழிய, அடுத்த நாள் காலையில் “திரவியா” என்று வீடே அதிரும் படி கத்திய தாத்தாவின் குரலில் தியா அவசரமாக கீழே ஓடி வர, அங்கு தாத்தா அருகில் நின்றிருந்த விஷ்வாவை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. விஷ்வாவையும், தாத்தாவை மாறி மாறி பார்த்தபடியே அவள் தாத்தா அருகில் வர, அதற்குள் மொத்த குடும்பமும் ஹாலில் கூடிவிட்டது. 

 

தியா விஷ்வாவை முறைத்தபடி அமைதியாக நிற்க, தாத்தா விஷ்வாவை சுட்டிக் காட்டியவர், ” இவன் யாரு?” என்று கோபமாக கேட்க தியா என்ன சொல்வதென்று புரியாமல் தவித்து நிற்க, “உன்கிட்ட தான் கேக்குறேன் திரவி… இவன் யாரு? இவன் சொல்றதெல்லாம் உண்மையா?” என்று சத்தம் போட்டு கத்த, எங்கு அவருக்கு மறுபடியும் எதுவும் ஆகிவிடுமோ என்று பயந்த தியா, “அது தாத்தா, இவன் இவன்” என்று இழுக்க, 

 

“இப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லப் போறியா இல்லயா?” என்று அவர் மேலும் கத்த, அகிலா பாட்டி அவர் அருகே ஓடி வந்தவர், “எங்க கொஞ்சம் மெதுவா பேசுங்க, இன்னும் உங்க உடம்பு சரியாகல, ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போகுது” என்று அவர் நெஞ்சை தடவ. “இன்னும் ஆக என்ன இருக்கு அகிலா… அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே” என்று தியாவை முறைத்தவர், விஷ்வாவை காட்டி, ” இவன் யாரு தெரியுமா அகிலா. இவன் இதோ நிக்குறளே உன் பேத்தி திரவி இவளோட அப்பன்… உன் புள்ள அரவிந்தன் இவளுக்கு நிச்சயம் பண்ணியிருக்க மாப்பிள்ளையாம்… கூடிய சீக்கிரம் இவங்களுக்கு கல்யாணமாம்” என்றது தான் தியா முதலில் அதிர்ந்தவள், பின் விஷ்வாவை தீயாக முறைக்க… விஷ்வா தலையை குனிந்து கொள்ள, அகரன் முழுதாக உடைந்து நின்றான். அந்த குடும்பம் இப்டி ஒரு தருணத்தை எதிர்பார்க்காதவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் நிற்க…

 

“என்ன தியா இதெல்லாம்? இவன் சொல்றதெல்லாம் உண்மையா?. நீ இவனை உன் ஃப்ரண்ட் னு தானா சொன்ன, நா அன்னைக்கு கேட்டேன் இல்ல. இவன் யாருன்னு நீ எனக்கு சொல்ல வேணாம், அதுல நீ தெளிவ இருந்த போதும்னு… இப்ப நீ அமைதியா இருக்கிறது எனக்கே பயமா இருக்கு தியா, ப்ளீஸ் தியா எதாவது சொல்லு…” என்று நிலவன் அவள் பிடித்து உலுக்க… அவள் அப்போதும் விஷ்வாவை தான் எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்…

 

“அவ எப்டி பேசுவா நிலவா, அவ இங்க வந்தில் இருந்து நம்ம கிட்ட சொன்னது எல்லாமே பொய் தான். ஒரு வாட்டி கூட இவ நம்ம கிட்ட உண்மையே பேசல. இவ இங்க வந்த அன்னைக்கு என்ன சொன்னா?, இன்னும் ஒரு வாரத்துல இவ அப்பா, அம்மா இங்க வருவாங்கன்னு தானே சொன்னா? ” என்று கத்தியபடி தியா அருகில் வந்தவர், 

 

“உங்கப்பனுக்கு இன்னும் என்மேல இருக்க கோவம் போகல இல்ல. அவன் இங்க வரமாட்டான் இல்ல. உன்னையும் இங்க வரக்கூடாதுனு சொல்லி இருக்கான் இல்ல” என்று கோபமாக ஆரம்பித்து இயலாமையுடன் முடிக்க, அதுவரை விஷ்வாவை முறைத்துக் கொண்டிருந்தவள், புருவம் சுருங்க எதையே யோசித்தவள் முகம் மெல்ல இயல்பாக மாற திரும்பி தாத்தாவை பார்க்க, அவர் கண்கள் கலங்கி இருந்தது. ஆம் திரவிய பாண்டியன் அழுகிறார்… யாருக்கும் வளைந்து கொடுக்காத இரும்பு மனிதர் இன்று கலங்குகிறார் அவர் மகனை நினைத்து, அதை பார்க்கவே தியாவுக்கு அத்தனை வலித்தது. ஆனால், அந்த சூழ்நிலையில் அவள் செய்ய ஒன்றும் இல்லாமல் போக அவள் அமைதியாகவே இருந்தாள். 

 

“என்ன தியாம்மா அமைதியா இருக்க?, தாத்தா சொல்றது உண்மையா?, உங்கப்பனும், அம்மாவும் இங்க வரமாட்டாங்களா? இன்னும் அவனுக்கு கோவம் போகலயா? என்று அகிலா பாட்டி ஆற்றாமையுடம் கேட்க, “அவகிட்ட என்ன கேக்குற அகிலா, இவளும் அப்டியே அவங்கப்பன் மாதிரி தான். அவன் இங்க வரமாட்டேன், நீயும் போகக்கூடாதுனு இவகிட்ட சொன்னது. உம் பேத்தி எனக்கு என் தாத்தா, பாட்டி வேணும். நா தாத்தா வீட்டுக்கு போறேன். நா வேணும்னா நீங்க அங்க வாங்கன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு யாருக்கும் சொல்லாம கொள்ளாம இவ இங்க வந்திருக்க… இவ அப்பன் அங்க இவள இல்லாம கலங்கி போய் உக்காந்திருக்கான். இவளை திரும்பி அங்க கூட்டி வர தான் இந்த பையனை விஷ்வாவை இங்க அனுப்பி வச்சிருக்கான்‌. பொண்ணை கூட்டி போக கூட அவனுக்கு இங்க வர விருப்பம் இல்லை போல. அதான் அவளுக்கு நிச்சயம் பண்ண பையனை அனுப்பி வச்சிருக்கான்.” என்றவள் தளர்ந்து அமர்ந்து விட, தியா அவர் அருகில் செல்ல போக, “வேணாம்” என்று கைகாட்டியவர்… நீ உடனே உங்கப்பன் கிட்ட போய்டு. பெத்த புள்ளையா பிரிஞ்சி இருக்குறது எவ்ளோ பெரிய வலின்னு, அதை இத்தனை வருஷம் அனுபவிச்ச எனக்கு தான் தெரியும். அந்த வலி என் புள்ளைக்கும் வேணாம். அந்த உயிர்வலிய அவன் தாங்க மாட்டான். நீ போ… நீ போய்டுமா. அவன் ஆசைபடி இந்த பையனை கல்யாணம் பண்ணிக்க. என்னைக்காவது உங்கப்பனுக்கு என் மேல இருக்க கோவம் கொறஞ்ச, அப்ப நா உயிரோட இருக்கனோ, இல்லயோ அவனை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வாம்மா. அப்ப தான் என் ஆத்மா நிம்மதியாகும்” என்று அழுதவரை  கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்த தியா என்ன நினைத்தாளோ, “சரி தாத்தா. நா போய்டுறேன்” என்றவள் அங்கிருந்து வேகமாக தன் அறைக்கு சென்று விட குடும்பம் மொத்தமும் அவர்கள் ஆசையாய் கட்டிய கனவு கோட்டை கண்முன் சுக்கு நூறாக உடைவதை கண்டு கலங்கி நிற்க. அகரன் நெஞ்சம் முழுவதும் நெருப்பாக தகித்தது.

 

தியா அமைதியாக அமர்ந்திருக்க அகரன் சீரான வேகத்தில் காரை இயக்கிக் கொண்டிருந்தான். நிலவன், அரும்பு, சரண்யா, அருள் என்று நால்வரும் வாடிய முகத்துடன் தியாவையே பார்த்திருக்க… அவள் முகமோ உணர்சிகளை மொத்தமாக தொலைத்து இறுகி இருந்தது.

 

ஏர்போர்ட்டில் அனைத்து வழிமுறைகளையும் முடித்து வந்த தியா அனைவரையும் பார்த்து கையாட்டியவள், “போய்டு வரேன்” என்று ஆரம்பித்து, இழுத்து பெருமூச்சு விட்டவள், “போறேன்” என்றவள் அங்கிருந்து நகர, அதுவரை அமைதியாக இருந்த அரும்பு, தீடிரென் “தியாக்கா” என்று கத்தியபடி தியாவிடம் ஓடியவள் அவளை இறுக்கி கட்டிக்கொண்டு ஓவென கதறிவிட அகரன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி. இதுநாள் வரை தியாவை பார்த்தாளே திட்டிக்கொண்டு இருந்தவள் இன்று அவள் பிரிவை நினைத்து பொது இடத்தில் இப்டி அழுவது அவர்களுக்கே வியப்பாக இருந்தது.

 

இங்கு தியாவை கட்டிக்கொண்டு அழுத அரும்பு, “சாரிக்கா, ரொம்ப சாரி… நா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ரொம்ப சாரிக்கா” என்று அழுதவள் தலையை மெதுவாக வருடி தியா, “அப்டி எல்லாம் ஒன்னும் இல்லடா… நீ என் தங்கச்சி, நீயே நெனச்சாலும் உன்னால என்னை காயப்படுத்த முடியாது. ஏன்னா நம்ம ரெண்டு பேர்குள்ள இருக்க உறவு அப்டி… சோ யூ டோண்ட் வொறி, நீ எப்பவும் என் செல்ல தங்கச்சி தான்” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்த தியா திரும்பி அகரனை ஒரு நிமிடம் பார்த்தவள். “அகரன் ரொம்ப நல்லவர் அரும்பு, ஏனோ எனக்கு அவரை குடுத்து வைக்கல, ஆனா, அந்த அதிஷ்டம் என் தங்கச்சிக்கு கிடைச்சிருக்குன்னு நெனைக்கும் போது எனக்கு சந்தோஷம் தான்… என்னால உங்க கல்யாணத்துக்கு வரமுடியாது. சோ இப்பவே சொல்லிடுறேன். ஐ விஷ் யூ போத் ஹேப்பி மேரிட் லைப்” என்றவள் வேகமாக சென்றுவிட, இங்கு அரும்பு சிலையாக நின்றாள்.

 

சூர்யா விட்ட அறையில் கன்னத்தை அழுத்தி பிடித்தபடி விஷ்வா நிற்க, கோவத்தில் கொதித்துக் கொண்டிருந்த சூர்யாவை பார்த்து திரவியம் தாத்தாவுக்கே சற்று வியப்பாக தான் இருந்தது. இதுவரை அவன் அவர் முன்பு அதிர்ந்து பேசியது கூட இல்ல. அப்படிப்பட்டவனை இன்று இப்டி பார்க்க அனைவருக்குமே வியப்பு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!