மை ஸ்வீட் ஹேட்டர் 4

மை ஸ்வீட் ஹேட்டர் 4

       அத்தியாயம் 4

“ஆரு உனக்கு நம்மளோட முதல் சந்திப்பு ஞாபகம் இருக்கா?” என்று அந்த பிரம்மாண்ட மேடையில் ஏகப்பட்ட கேமராக்கள் சுற்றிவளைக்க, மக்களின் கரகோசத்தினிடையே, நிரம்பி வழிந்த காதலுடன் ஒலித்தது யாதவ் கிருஷ்ணாவின் குரல்.

“ஹா ஹா ஹா… நல்லா ஞாபகம் இருக்கே நான் உன்னை அறைஞ்சேன். நீ என்னை அறைஞ்சே. அப்ப எல்லாம் உன்னை பார்த்தாலே இல்லை இல்லை யாராச்சும் உன்னை பத்தி பேசுறதை கேட்டாலே செம கடி ஆவும்…” என்று ஆருஷா கூற மக்களிடையே ஒஹ்ஹ்ஹ் என்ற சத்தம் வர,

“ஹே நிஜமா தான். எனக்கும் இவளை பார்த்தா அவ்வளவு கோவம் வரும்.” என்று யாதவ் கூற மீண்டும் மக்களிடையே சிரிப்பும் அதிர்ச்சி கூவல்களும் வந்தது.

“நான் இவனை பார்க்குறதுக்கு முன்னாடி வரை என்ன நினைச்சிருந்தேனா? ஹீ இஸ் எ ஜெர்க்… அப்புறம் பணக்கார திமிர்பிடிச்ச சீன் பார்ட்டி அப்படின்னு தான். இவன் பக்கத்துல நெருங்க நெருங்க தான் தெரிஞ்சது. ஹீ இஸ் எ ஸ்வீட் பேபின்னு. இவனோட இன்னசன்ஸ் ரொம்ப என்னை அட்மையர் பண்ணுச்சு. ரொம்ப கலாய்ப்பேன். என்ன சொன்னாலும் அப்படியே நம்பி கதை கேட்குறப்ப ‘ஹௌ ஸ்வீட் ஆப் யூ டார்லிங்க்?’ அப்படின்னு கொஞ்ச தோனும் ஆனால் காமிச்சிக்க மாட்டேன். அப்புறம் கொஞ்ச நாளுல ஐ ஃபால் இன் லவ் வித் ஹிம்.” என்று ஆருஷா கூற அவளை நெருங்கி அணைத்துக்கொண்டன் காதல் பொங்கும் கண்களுடன் அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.

அதற்கும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க சிரித்தவன் அவளை கைவளைவில் வைத்துக்கொண்டே, “ இவளை பத்தி எந்த விதமான ப்ரீ ஜட்ஜ்மெண்ட்மும் என்கிட்ட இல்லை தான். ஆனால் ஒவ்வொரு தடவையும் இவளை நெருங்க நெருங்க ‘என்ன பொண்ணுடா இவ?’ன்னு என்னை ஆச்சரியம் பட வைச்சிக்கிட்டே இருந்தா. ஐ பவுண்ட் மை ஃபேஷன்,லவ்,லைப் எவரிதிங்க் இன் ஹெர் ஐய்ஸ்… ஷீ இஸ் தி ஆப்பிள் ஆப் மை ஐய்(she is the apple of eye)” என்று யாதவ் கூறிமுடிக்க அவனது மார்ப்பில் வலிக்காமல் குத்தினாள் ஆருஷா.

“அவர் ரிலேஷன்சிப் இஸ் லைக் எ ரோலர்கோஸ்டர் ரைட். வீ ஃபைட் நியர்லி எவரி ஒன் ஹவர், பட் தென் வீ ஆல்வேய்ஸ் கிஸ் அண்ட் மேக் அப் (Our relationship is like a roller-coaster ride. We fight nearly every hour, but then we always kiss and make up)”. என்று ஆருஷா பேசிக்கொண்டிருக்கும் போதே திடிரென்று அந்த இடத்தில் சிறு சலசலப்பு ஏற்பட இருவரும் தங்களது இடப்புறம் பார்த்தனர்.

        சிவப்பு நிற கப்பிள் ஆடையோடு சித்தார்த்தும் கனிஷ்காவும் இவர்களை நோக்கி ஒடி வந்துக்கொண்டிருந்தனர்.

அவர்களை நோக்கி சிரித்த ஆருஷா யாதவ் காதிலே எதுவோ கூற அவனும் சிரித்தான்.

“இந்தா வந்துட்டாங்க ஒரிஜினல் டாம் அண்ட் ஜெர்ரி பேர். மேரேஜ்க்கு முன்னாடி எழுபது தடவை பிரேக் அப் பண்ணிருக்காங்க. கல்யாணம் ஆன மூனு வருசத்துல ஏழு தடவை டிவோர்ஸ்க்கு அப்ளே பண்ணி இருக்காங்க…” என்று யாதவ் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனை நெருங்கி இருந்தனர்.

“வர கொஞ்சம் நேரம் லேட் ஆன போதுமே உங்க காவிய காதலை ஓட்ட ஆரம்பிச்சிருவீங்களே. இதுகளோட காதல் கதையை தெரிஞ்சுக்கனும்னா யது வெட்ஸ் ஆருன்னு ஒரு நாவல் இருக்கு அதை படிச்சி தெரிஞ்சுக்கோங்க.” என்று கனிஷ்கா கூற,

“ஹே ஏன் லேட்?” யாதவ்

“இந்த மூஞ்சியில நாப்பது கோட்டிங் அடிச்சிட்டு வர லேட் ஆயிருச்சு.” சித்தார்த்

“எது நானா? உன் மூஞ்சில இருக்க மேடு பள்ளத்தை நிரப்ப தான் இவ்வளவு நேரம். முப்பத்தி இரண்டு வயசுல இருபது வயது மாதிரி தெரியனும்னு அந்த மேக்கப் வுமனை நீ படுத்தின பாடு பாவம். இவனால தான் லேட்” என்று இருவரும் சண்டைப்பிடிக்க ஆரம்பிக்க அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.

இது அனைத்தையும் பார்த்த பூஜா “அடேய்களா. ஷோவோட பெயரையே சொல்லாம இவங்க குடும்ப பிரச்சினை எல்லாம் பேசிட்டு இருக்காங்களே…” என்று கடுப்பானவள்

அவர்களது காதிற்குள் கட்டளைகளை இட ஆரம்பித்தாள்.

அதற்கு செவிசாய்ந்தவர்கள் “மை ஸ்வீட் ஹேட்டர்… இதுலயே புரிஞ்சிருக்கும் வெறுக்குறவங்களை விரும்ப வைக்கிறது தான் ஷோ.” யாதவ்

“அதாவது எப்படின்னா எங்களை மாதிரி டாம் அண்ட் ஜெர்ரி பேரை உள்ள விட்டு அவங்க ஹேட் லவ்வா மாறுதா இல்லை இன்னும் வெறுப்பா மாறுதான்னு 21 நாள் பிடிச்சி வைச்சு 30 கேமரா உதவியோட கூர்ந்து பார்க்குறது தான் இந்த ஷோ. ” என்று ஆருஷா பேசிக்கொண்டிருக்கும் போதே,

“வெல்கம் யாஷா பேர் அண்ட் சித்ஷ்கா பேர்…” என்று ஆளை மயக்கும் காதல் நிரம்பி வழியுமாறு ஒரு ஆண் இயந்திர குரல் கேட்க, திடிரென்று கேட்ட அந்த குரலில் சிலர் பயந்து, அரங்கமே சுற்றிமுற்றிப்பார்த்தது.

“ரொம்ப நன்றி… நீங்க யாரு?” என்று கனிஷ்கா கேட்க, அந்த குரல் பதிலளித்தது.

“நான் கியூபிட்… காதலின் கடவுள் கனிஷ்கா டியர்…” என்று கூற அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது.

சில சம்பிராதய பேச்சுகளுக்கு பின்பு ஆருஷா விஜய் தேவ்கனை வரவேற்று புகழ்ந்து மேடைக்கு அழைத்தாள்.

மேடை நோக்கி வந்தவனை யார் பார்த்தாலும் இரு நொடிகள் இரசித்துவிட்டே கண்களை திருப்ப முடியும் அப்படியொரு கம்பிரமான அழகில் மிளிர்ந்தான் விஜய் தேவ்கன்.

எப்பொழுதும் அடர்ந்து மண்டி வளர்ந்திருந்த தாடியுடன் திரிபவன் இப்பொழுது அழகாக மீசை வைத்து மிக கொஞ்சமாக நான்கு நாள் தாடியுடன், முன்னுச்சி முடி நெற்றியில் புரண்டு விளையாட கருப்பு நிற கோர்ட் சூட் அவனது வெண்மை நிற தேகத்தை தூக்கிகாட்ட ஆறடி ஆணழகனாய் வந்தான் விஜய்.

என்ன தான் அவனை தமிழ்நாட்டுக்கே தெரிந்து இருந்தாலும் அவர்களுடன் முறையாக அறிமுகம் ஆகிக்கொண்டவன், நால்வரது சிறந்த படங்களை பற்றியும் இரண்டோரு வார்த்தை கூறி அவர்களை பெருமைப்படுத்தினான்.

“உண்மையை சொல்லனும்னா நான் உங்களோட பேன். கேமராக்கு பின்னாடி இருந்து எப்ப முன்னாடி வருவீங்க ஷா?” என்று ஆருஷாவிடம் வழிய யாதவ் அவனை கொலைவெறியுடன் பார்த்தான். இதைக்கேட்டு  கனிஷ்கா கண்டுக்கொள்ளமால் திரும்ப அதை கவனித்தவன்,

“கனி மேம் உங்க அடுத்த படம் எப்போ ரீலிஸ்? உங்களை பிக் ஸ்கீரின்ல பார்க்குறதே ஒரு தனி பீல் தான்….” என்று அவளுக்கும் பிட்டை போட இப்பொழுது சித்தார்த்தும் அவனை முறைத்தான்.

யாதவ், சித்தார்த்தை டீலில் விட்டவன் இன்னும் இரண்டு நிமிடங்கள் கனி மற்றும் ஆருவிடம் பேசி விட்டு அரங்கத்தை நோக்கி பேச ஆரம்பித்தான்.

“ஹாய்! ஹாய்! இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமான விசயம்… வேற என்ன சொல்லன்னு எனக்கு நிஜமாவே தெரியல… பார்ப்போம். வர்றவங்களை விரும்ப வைக்குறேன்னா இல்லை இன்னும் வெறுக்க வைக்குறேன்னா அப்படின்னு…” என்று இவன் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்துக்கு பின் நம் நாயகி பதட்டத்துடன் பூஜா கூறுவதை மறுத்துக்கொண்டிருந்தாள்.

“பூ அக்கா… என்னால கண்டிப்பா முடியாது. உனக்கு தெரியும் தானே ஐ லவ் வினோ…”

“ஹையோ ஆமா… எனக்கு தெரியும். யார் இல்லைன்னு சொன்னது? உன்னை விடியை உண்மையா லவ் பண்ண சொல்லலை. சும்மா நடி அப்படின்னு தான் சொல்றேன். அதுவும் ஆரம்பத்துல இருந்தே இல்லை. ஷோ முடியப்போக ஒரு வாரம் இருக்கப்ப. கட்டிபிடிச்சு கிஸ் அடிச்சு மூச்சுக்கு முந்நூறு தடவை ஐ லவ் யூ சொல்லு அப்படின்னு எல்லாம் சொல்லலை. ஜஸ்ட் உன் கண்ணுல அவனை பார்த்ததும் வரும்ல ஒரு வெறுப்பு அதை மட்டும் கட் பண்ணிட்டு ஒரு லவ்வப்பிள் லுக் கொடு போதும். மத்த எல்லாத்தையும் விடி பார்த்துக்குவார் பேபி… ப்ளீஸ்..” என்று பூஜா கெஞ்ச, இருவரையும் வேடிக்கை பார்த்தவாறு கடும் கோபத்துடன் நின்றிருந்தாள் நிவி.

ஏனெனில் அவளது ஒன்று இல்லை மூன்று கனவு கண்ணன்கள் ஒரே மேடையில் நின்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை பார்க்கவிடாமல் இந்த கிறுக்கியை சரி என்று சொல்ல வைக்க இவளையும் கூட நிற்க வைத்திருந்தாள் பூஜா.

“பூ அக்கா… நான் இங்கே வர விசயத்தை வினோகிட்ட சொல்லவே இல்லை. அன்னைக்கு அவன் கூட சண்டை போட்டு மறுநாளே எல்லாம் சரி ஆகிட்டாலும் சொன்னா மறுபடியும் சண்டை வந்துருமோன்னு நான் சொல்லாம வந்துட்டேன். அதுவே எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. இதுல நீ அந்த பர்ஸ் வாயனை லவ் லுக் விட சொல்லுற? வினோ என்ன நினைப்பான்?” என்று ஜீவிதா தன்பக்க நியாத்தை அவளுக்கு விளக்க கொலைவெறி மோடுக்கே சென்றுவிட்ட நிவி பொங்க ஆரம்பித்திருந்தாள்.

“நீ பண்றதுக்கு பேர்லாம் லவ்வு… நீ லவ் பண்றவன்லாம் ஒரு மனுசன்… சரியான கிரிஞ் கூடாரம் உன் லவ். உன் லவ்வரு ஒரு சைக்கோ டேஷ்… ஒரு வருசமா நான் சாகப்போறேன்னு சொல்லி சொல்லியே உன்னை கைக்குள்ள வைச்சிருக்கான். இதுக்கு இவ்வளவு சீன் தேவையில்லை. பூ அவ அதெல்லாம் பண்ணுவா… நீ போய் உன் வொர்க் பாரு ” என்று கூறிவிட்டு ஜீவியை கையோடு அழைத்துக்கொண்டு போய் கண்ணாடி முன்விட்டு அவளுக்கு டச் அப் செய்யுமாறு அழகுகலை நிபுணரிடம் கூற அவரும் செய்துவிட்டார்.

அப்பொழுது சரியாக ஜீவியின் தாயும் தந்தையும் வர, ஜீவிதாவை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தனது கனவு கண்ணன்களை பார்க்க சென்றாள்.

ஜீவிதா தனது பெற்றோரைப் பார்த்து அதிர்ச்சி ஆகி எழுந்திரித்து நின்றவள் சில நொடிகளில் அதிர்ச்சி விலக  அவர்களை அணைத்துக்கொண்டாள்.

“பா… மா… வர முடியாதுன்னு சொன்னீங்க?”

“என் பொண்ணு அவ கனவில முதல் படியில காலை வைக்குறா அப்ப நாங்க கைப்பிடிக்காம இருப்போமா குட்டிமா…” என்று கூறி அவளது தந்தை நெற்றியில் முத்தமிட அவளுக்கு கண்கள் கலங்கியது.

“ஹே… அழாத டி… மேக் அப் கலைஞ்சுற போகுது. அப்புறம் உன் மூஞ்சிய பார்த்துட்டு  என் டார்லிங் பயந்து ஒடிற போறான். பேய்யோட எல்லாம் ஷோ பண்ண முடியாதுன்னு…” என்று அவளது தாய் கூற அவரை முறைத்து பார்த்தாள் ஜீவிதா.

நிஜமாகவே அவளது தாய் வெறித்தனமான விடி பேன். அவராலயே ஜீவிதாக்கு விஜயை பாதிபிடிக்காமல் போய்விட்டது என்று கூறலாம்.

“அம்மா… ரொம்ப ஒவர் இதெல்லாம். உன் டார்லிங்க் பீல் அவுட் ஆகப்போறான் போலயே??” என்று நக்கலடிக்க,  அவரது தந்தை கதிரேசன் ஜீவிக்கு ஹை-பை கொடுத்தார்.

“இட்ஸ் டூ மச் கதிர்… என் டார்லிங்க் இந்த ஷோக்கு அப்புறம் பாலிவுட் போகப்போறான். மார்க் மை வேர்ட்ஸ்…”

“அவன் மீடியா பார்த்து மிடில்பிங்கர் காமிச்சதுக்கு தமிழ்ல பீல்டு அவுட் ஆகாம இருக்குறனான்னு பாரு சிவு பேபி …” என்று கதிர் கூற,

“ஹேய்… கொஞ்சம் அப்டேட் ஆகுங்க ஒல்டு ஹெட்மாஸ்டரே… நேத்தே எல்லா மீடியா பிப்பிளையும் கூப்பிட்டு என் டார்லி பகிரங்க மன்னிப்பு கேட்டு, எல்லாருக்கும் பார்ட்டி வைச்சு கிப்ட் எல்லாம் கொடுத்து எல்லாரையும் கவுத்திட்டான். இன்னைக்கு காலையில கூட தி ஹிந்துல அவனை புகழ்ந்து ஒரு காலன் போட்டு இருந்தாங்க.”

ஆம் நேற்று பூஜா அந்த நிகழ்வுக்கு கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் விஜயிற்கு பிடிக்கவே இல்லையென்றாலும் கேட்டிருந்தான்.

அவர் அந்த இயக்குநர் கோபி அவனுக்கு குரு. குரு மட்டுமா? அனைத்தையும் தாண்டிய உறவு ஒன்று இருவருக்குமிடையில் இருக்கிறது. அவரை தவறாக பேசியவர்களை அடிக்காமல் விட்டு வந்ததே பெரிது என்று நினைத்துக்கொண்டிருந்தான். அவர் மட்டும் இப்பொழுது இங்கே இருந்திருந்தால் இந்த பிரச்சினை எதுவுமே விஜயை அண்டவிடாமல் பார்த்திருப்பார். ஆனால் அவர் இப்பொழுது இங்கு இல்லை. எங்கே சென்றிருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. எப்பொழுதும் இப்படி தான் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் படம் படம் என்றே பேயாய் உழைப்பவர் இந்த இரண்டு மாதங்கள் எங்காவது இந்த திரைத்துறையின் நிழலை படியாத இடத்திற்கு சென்று விடுவார்.

அவருக்கு குடும்பம் என்று ஒன்று உள்ளதா என்றே இங்கு யாருக்கும் தெரியாது விஜய் ஒருத்தனை தவிர. அதைப்போன்று தான் விஜய்யின் பின்புலம் அவன் குடும்பம் என்று எதுவுமே இந்த எட்டு வருடத்தில் அவன் யாரிடமுமே கூறியது இல்லை. அவன் நிழல் போலவே கூடவே திரியும் கரணிற்கு கூட அவனது குடும்பம் மற்றும் பின்புலம் தெரியாது.

விஜயின் பின்பெயர் மூலமாக அவன் ஒரு வடஇந்தியாவை சேர்ந்தவன் என்பது அறியக்கூடியதாக இருந்தாலும் அவனிடம் தெரியும் அந்த திராவிட ஜாடை நான் ஒரு தமிழன் என்று அடித்துக்கூறும். அவன் ஒரு வட தென் இந்திய பெற்றோருக்கு பிறந்திருப்பான் என்று கரண் நினைத்துக்கொள்வான்.

“பாரேன். எனக்கு தெரியவே இல்லை. சரி விடு… எதுக்கு இப்படி கோவப்படனும்? அப்புறம் எதுக்கு இப்படி மன்னிப்பு கேட்கனும்?” என்று கூப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பதைப்போன்று கதிர் கூற, சிவகாமி அவரது கையிலிருந்த கைகுட்டையை வைத்து அவரது முகத்தை துடைத்துவிட,

கதிர், “என்ன சிவு பேபி பண்றீங்க? மாமாக்கு வேர்க்கவெல்லாம் இல்லையே?” என்க.

“ஹான். அசடு வழியுது கதிர்… அதான்.” இருவரையும் வெறித்து பார்த்தவாறு தன்னை மறந்து நின்றிருந்தாள் ஜீவி.

இந்த மாதிரி ஒரு நாளாவது தானும் வினோவும் இருந்திருக்கோமா கடந்த ஒரு வருடத்தில் எந்தவித கிரிஞ்சும் இல்லாமல் ஒருவருக்கொருவர் காலை வாரிவிட்டு ஜாலியாக பேசி இருக்கோமா என்று தனது நினைவடுக்கில் தேடி பார்த்தவளுக்கு விடை என்னமோ பூஜ்ஜியம் தான்.

அவளது முகமாற்றத்தை கவனித்த பெற்றோர் இந்த நிகழ்ச்சியை நினைத்து பயப்படுகிறாளோ என்று நினைத்து தைரியம் கூற ஆரம்பித்தனர்.

“டேய்… நீ நீயா இரு… அது போதும். உனக்கு என்ன தோணுதோ அது பண்ணு. அதுனால என்ன தப்பு ஆனாலும் நாங்க உங்கூட இருப்போம். வீ ஆர் ஆல்வேய்ஸ் தேர் பார் யூ டா மா… ஜாலியா எஞ்சாய் பண்ணு கேர்ள்…” என்று கூற அவளுக்கு ஐயோவென்று ஆனது.

ஜீவி அவள் பெற்றோர்களிடமிருந்து மறைக்கும் ஒரு விசயம் இருக்குமென்றால் அது வினோவை இவள் விரும்புவது தான். வினோ சொல்லவே விடமாட்டேன் என்கிறான். அவன் ஒரு நிலையில் வரும் வரை சொல்ல வேண்டாம் என்று தடுத்திருந்தான்.

இனியும் சொல்லாமல் இருக்க ஜீவிதாவால் முடியவில்லை. சொல்லிவிடலாம் என்று ஜீவிதா வாய் திறக்கும் போதே அரங்கத்திற்கு அடுத்து அவள் தான் செல்லவேண்டும் என்று இரு பெண்கள் வந்து அழைக்க இருவரையும் அணைத்து விடைப்பெற்றவள் அரங்கத்தை நோக்கி சென்றாள்.

அந்த செட்டிற்குள் சென்றவனுக்கோ  அந்த இடம் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. கண்ணை கவரும் வர்ண கலவையில் பிக்பி செட்டைப் போன்றே கண்ணாடி தடுப்பான் கொண்ட படுக்கையறை அளவு சிறியதாக இருந்தது ஆறு படுக்கைகள் இருந்தன.

அடுத்து ஒரு லிவிங்க் ரூம்… அதில் நாற்பது இஞ்ச் டிவி. அடுத்து சமயலறை அதற்கு இடப்புறத்தில் ஒரு அறை அது தான் பிக்பி யில் வருவது போன்று பிக்பியுடன் பேசும் அறையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அடுத்து வெளியே வந்தால் பெரிய முன்வெளி… புற்கள் இருப்பது போன்று செயற்கை புற்கள் வைத்த கார்பெட்டால் வடிவமைக்கப்பட்டிருந்தது. நீச்சல் குளம் அதில் நீரும் இருந்தது. அங்கு அமர்ந்து பேச பெரிய குடையின் கீழ் நீளமான சோபா இருந்தது.

அடுத்து இந்த பக்கம் திரும்பினால் அவன் கேட்டு கொண்டதற்கிணங்க ஜிம் பொருட்கள், திரெட் மில் வைக்கப்பட்டிருந்தது. 

கழிப்பறை குளியலறை உடைமாற்றும் அறை என்று இருந்தது. ஒய்வுஅறையை தவிர அதாவது கழிப்பறை குளியலறை உடைமாற்றும் அறையை தவிர அனைத்து இடத்திலும் கேமரா இருந்தது. பற்றாகுறைக்கு குளியலறைக்கு வெளியே இருக்கும் கண்ணாடிக்கு அருகில் கூட கேமரா இருந்தது. கிட்ட்தட்ட அனைத்தும் பிக்பி செட் போன்று தான் ஆனால் இரண்டு வித்தியாசம் இருந்தது.

ஒன்று பிக்பி செட்டைப்போன்று பெரிதாக இல்லாமல் ஐந்து பேர் தாராளமாக புழங்குவதற்கு ஏற்றவாறு சிறிதாக இருந்தது. அடுத்து எங்கு திரும்பினாலும் லவ்-ஹேட் வாசகங்களும், கியூபட்டும் அம்புமாக வரைந்து தள்ளிருந்தனர்.

அவன் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் போதே உள் நுழையும் கதவு திறக்கும் சத்தம் கேட்டவன்  ஆர்வத்தை அடக்க முயற்சித்தாலும் முடியாமல் சட்டென்று திரும்பி பார்த்தவனின் விழியில் விழுந்தவளை நம்ப முடியாமல் பார்த்தான்.

“நீயாஆஆஆஆ?” என்று அதிர்ச்சியுடன் வாயை  பிளந்தவாறு கேட்டான் விஜய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!