வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 13

விஷ்ணு வரவும் இடத்தை விட்டு எழுந்த ரிஷி வெளியே வந்தான். கீர்த்தியைப் பார்க்கும் பொழுது எப்பொழுதும் தோன்றும் எண்ணம் இப்பொழுதும் தோன்றியது.

அன்று பார்ட்டியில் முதல் முதலாக அவளைப் பார்த்ததும் அவன் மனதில் அவள் ஆழ பதிந்து விட்டாள் என்பது என்னவோ உண்மைதான்.

கண்டதும் காதல் இதெல்லாம் அவன் நம்பியது இல்லை. ஆனால் இவளைக் கண்டதும் ஏதோ ஒரு உணர்வு அவனுள் எழுந்தது. அது காதலா? இல்லை வேறு எதுவோ அவன் யோசிக்க விரும்பவில்லை.

இந்த உணர்வே போதும் என்ற எண்ணத்தில்தான் அவன் பார்வை அவளையே வட்டமிட்டது. மூர்த்தியைக் கூட அவன் அன்று கண்டுக்கொள்ளவில்லை.

சரிந்துக் கொண்டிருந்த அவரது தொழிலை தூக்கி நிறுத்தி நல்ல இடத்தில் கொண்டு வந்தவள் என்ற எண்ணம் எல்லார் மனதிலும் உண்டு.

ஆனால், வந்த சில மாதங்களிலே அவள் விஷ்ணு ஆர்டரை எல்லாம் கை பற்றியதுதான் அவனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இருவருக்கும் எதுவோ இருக்கிறது என்ற எண்ணம் கூட அவனுக்கு உண்டு.

ஆனால், எப்படி? அதுதான் அவனுக்கு தெரியவில்லை.

மூர்த்திக்கும், தியாகராஜுக்கும் நல்ல நட்பு உண்டு. காரிகை அவரை விட்டு பிரிந்த பின் அவருக்கு பக்க பலமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்தான்.

ரிஷிபாவுக்கு, விஷ்ணுவை திருமணம் பேசிய பின் அப்படியே விலகி கொண்டார் தியாகராஜ். ரிஷி அவரை எங்காவது கண்டால் எப்பொழுதும் போல் நன்றாகவே பேசுவான்.

அன்று அவளைக் கண்டதில், இவரைக் கண்டுக்கொள்ளவில்லை.

இவன், இவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இவள் எழுந்து விஷ்ணுவை நோக்கி சென்றாள்.

இருவரின் கண்களிலும் தெரிந்த ஏதோ ஒன்றில் அவர்களை ஊன்றிக் கவனித்தான் ரிஷி.

‘இருவருக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது’ என்று எண்ணிதான் இவளுடன் பேச வந்தான்.

ஆனால், இடையில் விஷ்ணு வந்துவிட்டான். இப்படி பல வகையான  எண்ணத்துடன்  காரை செலுத்திக் கொண்டிருந்தான் ரிஷி.

***

தனது காரில் சோளகாட்டில் வந்திறங்கினாள் கீர்த்தி. எங்கும் பச்சை பசேல் என்று இருந்த அவளின் ஊர் நடுபகுதி பாதி அழிந்த நிலையில் காட்சி தந்தது. பட்டறை கட்ட வேண்டிய இடத்தை மட்டும் முள் வேலியிட்டு அடைத்திருந்தனர். காரிகை கார்மெண்ட்ஸ் சார்பாக.

இவளை கண்டதும் தேஷிகா ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். “அண்ணி எப்படி இருக்க… எங்களை எல்லாம் மறந்துட்டல்ல“

“உன்னை மறப்பேனாடி தங்கம்“ அவளை அணைத்துக் கொண்டு பார்வையைத் திருப்ப. அவள் பார்வை வட்டத்தில் விழுந்தனர் அவளின் உறவுகாரர்கள். கூடவே அகில் தேவும்.

“யம்மாடி கீர்த்தி“ அவளின் அத்தை தங்கம் அவள் அருகில் வர. செந்தூரோ தூரமாய் நின்று கொண்டான்.

இவளை பார்க்கும் நேரம் எல்லாம் அவனின் தங்கை துரைச்சியே நினைவில் வருவாள். அவளைப் போலவே இவளும் பெரும் சேட்டைக்காரி. ஆனால் தேவ் தன் மகன் இந்த மண்ணை விட்டு சென்றபிறகு எல்லாம் வெறுத்து போய் இருந்தவளை தேற்றியது தேஷிகா. மருதுவின் உயிர் நண்பன் ராஜாவின் வளர்ப்பு மகள்.

கீர்த்தி என்ற ஒற்றை குழந்தைக்காய் திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர்.

தேவ் போன பிறகு. ஒடுங்கி இருந்தவளை. மீண்டும் எழ வைத்து. வேலைக்கு அனுப்பியது தேஷிகா.

அவளைப் பார்த்தபடி அவளின் அப்பத்தா காமாட்சி ஒரு ஒரத்தில் நின்றிருந்தார். அவரின் அருகில் சென்றவள் “அப்பத்தா“ என அவரை அணைத்துக் கொண்டாள்.

“எங்களை எல்லாம் விட்டுட்டு எங்கத்தா போனா? எங்களை எல்லாம் உனக்குப் பார்க்கவே பிடிக்கலியா? “ சிறு கண்ணீர் துளியுடன் கேட்டார் அவர்.

அவளும் சென்னை போய் ஒரு வருடம் கடந்த நிலையில், தேவ்வை இவர்கள் கண் முன் கொண்டு வந்த பிறகு தான் அவள் கிராமத்துக்கு வர வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால், இப்பொழுது எல்லாம் கெடுத்துவிட்டான் விஷ்ணு காரிகை. அவனுக்குப் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அதே நேரம் திடீரென அங்கு ஒரு கார் வந்து நிற்க. எல்லார் பார்வையும் வாசல் பக்கம் திரும்பியது.

அதிலிருந்து மூர்த்தியும். ஸ்வேதாவும் இறங்கினர். ‘இவர்களை யார் அழைத்தது’ யோசனையுடன் கீர்த்திப் பார்த்து நிற்க.

“அம்மா“ அகில் ஸ்வேதாவை நோக்கி சென்றான்.

கீர்த்தி வெகுவாக அதிர்ந்தாள். அகில் ஸ்வேதா ஆன்ட்டி பையனா? அவளால் நம்பமுடியவில்லை.

தனக்கு ஒரு பையன் இருக்கிறான். ஐந்து வருடங்களாக இவர்களை விட்டு பிரிந்து இருக்கிறான் என்று மட்டும் அவளிடம் கூறினார்கள். அவளும் மேலும் அதைப் பற்றி விசாரிக்கவில்லை.

சுற்றுபுறம் உறைக்க. வந்தவர்களை வரவேற்கும் விதமாக, “வாங்க அங்கிள். வாங்க ஆன்ட்டி“ என்றபடி அவர்களை அழைத்து வீட்டின் உள்ளே சென்றாள்.

அவளின் பின்னே தேஷிகாவை பார்த்துக் கொண்டே அகில் தேவ் சென்றான்.

   அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு கொடுத்த தேஷியை அழைத்துத் தன் அருகில் அமர்த்திக் கொண்டார் ஸ்வேதா.

கீர்த்தியும். அவள் வீட்டினரும் யோசனையாக அவர்களைப் பார்க்க. “என் பையன் அகில்க்கு உங்க வீட்டுப் பொண்ணைத் தருவீர்களாக?” என நேரடியாகக் கேட்டார் ஸ்வேதா.

ஸ்வேதா வரவுமே, அவர் அருகில் சென்ற அகில், “அம்மா தேஷிகா. எனக்குப் பிடிச்சிருக்கு“ என்று மட்டும் தான் கூறினான். மேற்படி அவரே பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் விலகி நின்றுக் கொண்டான் அகில்.

கீர்த்தி அப்படியே அதிர்ந்து நின்றாள். ‘ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறது’ அவளின் உள் மனது அடித்துக் கூறியது.

தன் மகனின் ஆசைக்கு என்றும் குறுக்கே நின்றதில்லை ஸ்வேதா. அகில் படிப்பை முடித்து இங்கு வந்ததும், “அம்மா நான் விஷ்ணு கார்மெண்ட்ஸ்ல ஜாயின் பண்ணிக்கிறேன். அவனுக்கு என்னைப் பற்றிய எந்த உண்மையும் தெரியவே கூடாது. அதனால் நான் உங்களைப் பார்பதோ. பேசுவதோ மிகவும் கடினம். அவனுக்கு எந்தச் சந்தேகமும் வரமாதிரி நாம நடந்து கொள்ளக்கூடாது.

என்னால் விஷ்ணு இழந்ததை அவனுக்குக் கொடுக்கணும். அதுக்கு நீங்க உறுதுணையாய் இருக்கணும். விஷ்ணுவுக்கு அவன் குடும்பம் முழுசா கிடைக்கணும். மூர்த்தி அங்கிளை நாம அவங்க கூடச் சேர்த்து வைக்கணும்“ தன் தாயிடம் கூறி விஷ்ணுவிடம் வந்து சேர்ந்தான்.

“பாவம் மூர்த்தி அவன் பையனை நினைத்து ரொம்ப ஏங்கி விட்டான். அவனைப் பழையபடி குடும்பமா பார்க்க தவம் இருக்கேன் அகில். ரொம்ப நல்ல காரியம் பண்ணுறடா“ உடனே அவனுக்கு முழு ஆதரவையும் தந்தாள்.

ஸ்வேதாவின் முழு பெயர் முத்து ஸ்வேதா, அவளது கணவனின் பெயர் ரவிச்சந்திரன். இந்த விபரங்கள் விஷ்ணுவுக்கும், காரிகைக்கும் தெரியாது. அதனால்தான் இவன் மேல் எந்த சந்தேகமும் வராமல் இவனை தன்னுடன் இணைத்துக் கொண்டான் விஷ்ணு.

இப்பொழுதும் மகன் “தேஷியை தனக்குப் பிடித்திருக்கிறது“ எனவுமே அவனுக்கு அவளை அளிக்க எண்ணி தான் பெண் கேட்டாள்.

அவள் மனதில் சிறு யோசனை மூன்று வருடங்களுக்கு முன் அகில் இங்கு வந்திருக்கிறான். அப்பொழுது இருவருக்கும் பழக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான். அவள் உடனே அவன் கூற்றுக்குச் சரி என்று கூறினாள். தன் மகன் கோடு போட. இவள் ரோடு போட்டு முடித்தாள்.

எல்லாரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர். அதே நேரம் தேசிகாவையும் கவனிக்கத் தவறவில்லை. கீர்த்தி அமைதியாக நடப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

தேஷிக்கு பார்க்கும் மாப்பிள்ளையை எல்லாம் ஏதோ காரணம் காட்டி தவிர்த்துக் கொண்டிருந்தாள் அவள். அதன் காரணம் கீர்த்திக்கு மட்டுமே தெரியும்.

எல்லாரும் தேஷி முகத்தைப் பார்க்க “எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லை“ என்றவள் யாரையும் ஏரெடுத்துப் பார்க்காமல் அவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

மூர்த்தியோ ‘என்ன ஸ்வேதா இது’ என்னும் விதமாகப் பார்க்க.

“நான் ஒண்ணும் பண்ணலடா. எல்லாம் இந்த அகில் பைய பார்த்த பார்வை“ என்பதாக ஸ்வேதா பதில் கூறினார்.

‘என்ன கீர்த்தி இதெல்லாம்’ என்பதாகக் காமாட்சி அவளைப் பார்க்க.

அவளோ, யாரையும் கவனிக்காமல் ‘மாமா உங்க பதில் என்ன’ என்பதாக ராஜாவை பார்த்து நின்றாள். அவரின் மகள் அல்லவா அவர் தானே முடிவெடுக்க வேண்டும்.

செந்தூர் எதுவும் கூறாமல் அகில் முகத்தையே பார்த்திருந்தான். அவன் இவர்களிடம் பேச தயங்குவது போல் தெரிய “தம்பி நீங்க ஏதாவது சொல்லணுமா?“ எனக் கேட்டார்.

“நான் கொஞ்சம் தேஷிகாவிடம் பேசலாமா” மெதுவாக வினவினான். அவன் இங்கிருந்த ஒரு மாத காலமும் அவளை நன்கு கவனித்திருகிறான். அவளிடம் பேசினாலே எல்லாம் புரிந்துக் கொள்வாள் என எண்ணியே அவளிடம் பேச எண்ணினான்.

கீர்த்திக்கும் அது சரியாகத் தான் பட்டது. அவளின் வாழ்கையை இப்படி ஆக்கியது அவன் தான் அப்படி இருக்கையில் அவன் அவளிடம் பேசினால் தான் சரியாக இருக்கும் என எண்ணியவள். காமாட்சி “வேண்டாம்“ என்று கூற வாய் எடுக்கும் முன் “சரி“ என்று கூறி தேஷியை அழைக்கச் சென்றாள். போகும் அவளையே யோசனையாகப் பார்த்திருந்தார் காமாட்சி.

அந்த மாலை நேரம் அமைதியாகத் தேஷி முன்னால் செல்ல. அவளைத் தொடர்ந்து சென்றான் அகில். அணிந்திருந்த தாவணியை இழுத்து கழுத்துவரை போர்த்தியிருந்தாள். மாலை காற்றுச் சுகமாக வீசி மேனியை மெல்லியதாக நடுங்க வைத்துக்கொண்டிருந்தது.

அந்த ஆலமரத்தில் கைகளைக் கட்டி சாய்ந்து நின்றவளை. பார்வையால் இதமாகக் கோதியவன். அவளைப் பார்த்து ஆற்றின் ஓரம் இருந்த சிறிய பாறையில் அமர்ந்தான். அவளை இங்கு அழைத்து வருவதற்குள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டான் அகில்.

“யாரிடமும் பேசவிரும்பவில்லை” என்று அறைக்கதவை சாற்றி உள்ளே சென்றவளை கீர்த்தி எத்தனை அழைத்தும் வெளியில் வரவே இல்லை.

மெதுவாக அவள் அறை அருகில் சென்றவன் “ஒரே ஒரு நிமிஷம் தேஷி. அன்னைக்கு நான் செய்த செயலுக்குக் காரணம் மட்டும் சொல்லிவிடுகிறேன். அதன் பிறகு உன் இஷ்டம்” என்றவன் எல்லாரையும் பார்க்க. எல்லாரும் அவனைத் தான் பார்த்து நின்றனர். அவர்களுக்கு ஏதோ புரிவதாய்.

கொஞ்ச நேரத்தில் கதவை திறந்து அவள் வெளியில் வர. பின்னோடு கிளம்பி இதோ வந்து விட்டனர்.

” இது சோகம் ஆனால் ஒரு சுகம்

நெஞ்சின் உள்ளே பரவிடும்

நாம் பழகிய காலம் பரவசம்

அன்பே.

இதம் தருமே. “

“தேஷி”

“என்ன சொல்லணுமோ அதை மட்டும் சொல்லுங்க” முகத்தை அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.

அவனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் உள்ள கடந்த காலத்தைக் கூற ஆரம்பித்தான் அகில்.

***

                                                                     

அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர விடுதி மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இன்று விஷ்ணுவின் நிச்சயதார்த்தம். அவனின் ஆசைப்படி. அவன் கூறியிருந்த அந்தக் குறிப்பிட்ட ஹோட்டலில் அதற்கான வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது.

தங்க நிற ஷர்வானியில் ராஜகுமாரன் போல் அழகுற மேடையில் நின்றிருந்தான் விஷ்ணு. படிய வாரி முடியை ஒற்றை பாண்டில் அடக்கி இருந்தான்.

அதே தங்க நிற புடவையில் தேவதையென மேடையில் ஏற வந்த ரிஷிபாவை நோக்கி தன் கைகளை நீட்டினான் விஷ்ணு.

அவனது செயலில், அவளது கண்கள் ஒருநிமிடம் விரிந்து, இதழில் புன்னகை பரவியது.

தன் கையை அவனின் கை மேல் வைக்க, அவளின் கையைப் பிடித்து மேடையில் தன் அருகில் நிறுத்திக் கொண்டான் விஷ்ணு.

மேடையை அலங்கரித்த பச்சை நிற விளக்குகளும், தங்க வண்ண உடைகளுமாக  பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.

மேடையில் நின்றிருந்த ரிஷிபாவின் கண்கள் தன் அண்ணனையே நோக்கியது ‘இவனுக்கா என் மேல் காதல் வராது என்று கூறினாய் இப்பொழுது பார்’ கர்வமாகப் பார்த்துக் கொண்டது.

காரிகை இருவரின் ஜோடி பொருத்தத்தையும் மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ‘தன் மகன் இனி அவனைப் பற்றி யோசிக்கமாட்டான்’ என்று முழுமையாக நம்பி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தியாகராஜுக்கு கைகால் புரியாத சந்தோசம். எவ்ளோ பெரிய மாப்பிள்ளையை பிடித்துவிட்டேன் என்ற கர்வம் அவரது நடையில் தெரிந்தது.

“மோதிரம் மாத்திக் கொள்ளுங்க“ அய்யர் குரல் கொடுக்க.

தன் அன்னை கொடுத்த மோதிரத்தை புன் சிரிப்புடன் கையில் வாங்கிய விஷ்ணு “பேபி“ என்றபடி அவளைப் பார்த்து நின்றான்.

அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தவள் தன் கையை அவனை நோக்கி நீட்ட, மெதுவாக அவளின் கையைப் பற்ற அவனுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு அவனை ஆக்ரமித்தது. அதைப் புறந்தள்ளியவன் அவளுக்கு மோதிரத்தை அணிவித்தான்.

அதுமட்டும் இல்லாமல், அவளது கரத்தைப் பிடித்து அவளது கையை நோக்கி குனிந்த அவனது இதழ்கள் அவளது மோதிரத்தோடு  விரலையும் தீண்டியது.

அவளில் பொங்கிய உணர்வுகளை பெரும் பாடுபட்டு அடக்கினாள் ரிஷிபா.

அவளிடம் ஐயர் மோதிரத்தை அவனுக்கு அணிவிக்கக் கூற. அவள். அவன் கையைப் பிடித்து அவனுக்கு மோதிரத்தை அணிவித்து அவன் கையில் மெலிதாக முத்தமிட்டு விலகினாள் ரிஷிபா.

கர்வம் தலைக்கேற கூட்டத்தைப் பார்த்து மெதுவாக புன்னகை சிந்தினாள்.

அவளிடம் ஏதோதோ சிரிக்கப் பேசினான் விஷ்ணு. அவன் இந்த அளவுக்கு மாறியதை கண்டு அவளுக்கு ஆச்சரியமே!

எல்லாத்தையும் ஒரு பக்கம் நின்று யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. இப்பொழுது வரை விஷ்ணு நடிப்பதாகவே அவனுக்குப் பட்டது.

அவன் இதுவரை எந்தப் பெண்ணையும் மதித்ததாக அவன் சரித்திரதிலையே இடம் இல்லை. அப்படி இருக்கையில் அவன் தங்கையிடம் மட்டும் எப்படி இப்படி இருக்கிறான்.

ஒருவேளை உண்மையாகவே தன் தங்கையைப் பிடித்துத் தான் திருமணத்திற்குச் சம்மதம் கூறினானா?

விஷ்ணு அப்படித் தான் இருந்தான். அவளிடம் நன்றாகப் பேசினான். சிரிக்கச் சிரிக்கப் பேசினான். அவனுக்குச் சிரிக்கத் தெரியும் என்று இன்று தான் ரிஷி அறிந்து கொண்டான்.

விஷ்ணு ஆராய்ச்சியில் இவன் மூழ்கி இருக்க, அவனுக்கு அருகில் யாரோ வந்து நிற்பதுப் போல் தெரிய, திரும்பியவன் அருகே நின்றிருந்தாள் கீர்த்தி.

“என்ன இவ்ளோ லேட்” என்றான் அவளைப் பார்த்து.

“ஊருக்கு போயிட்டு வந்தேன் ரிஷி” அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

ஆம். முயன்றாள்தான். ஆனால் அவளால் சிரிக்க முடியவில்லை.

“ஆர் யூ ஓகே?”

“யா… ஐ ஆம் ஓகே” என்றவள் கண்கள் மேடையை விட்டு அங்கும் இங்கும் நகரவில்லை.

  அவளது பார்வையை தொடர்ந்து, இவனதுப் பார்வையும் மேடையை நோக்கி பாய, விஷ்ணுவிடம், ரிஷிபா ஏதோக் கூற பல் தெரிய சிரித்தான் அவன்.

அதிசயமாக அவனைப் பார்த்திருந்தான் ரிஷி. விஷ்ணு இப்படி சிரித்து அவன் பார்த்ததே இல்லை. ஏன் காரிகையிடம் கூட அவன் அப்படி சிரித்ததில்லை.

ஆனால் இப்பொழுது?

விஷ்ணுவை பார்த்த கீர்த்திக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அதிலும் அவனது, அந்த சிரிப்பு அப்படியே தேவ்வை நினைவுப் படுத்தியது.

அவனுக்கு இப்படி மட்டும்தான் சிரிக்க தெரியும். மெல்லிய சிரிப்பு, மில்லி மீட்டர் சிரிப்பு இதெல்லாம் அவனுக்கு வரவே வராது. அவனது சிரிப்பு எப்பொழுதும் இப்படிதான் பெரிதாக விரிந்த சிரிப்பாக இருக்கும்.

ஆனால் இப்பொழுது அவன் சிரிக்கும் நிலை?

அவளால் தாங்க முடியவில்லை. தலையை அழுந்தப் பிடித்துக் கொண்டாள்.

“என்னாச்சு கீர்த்தி”

“ஜர்னி டயர்ட் ரிஷி. நீங்க ரொம்ப வற்புறுத்தி கூப்ட்டதுனாலதான் வந்தேன் ” என்றாள் மெதுவாய்.

விஷ்ணு, ரிஷிபா கையை முத்தமிடும் பொழுதே அங்கு வந்து விட்டாள் கீர்த்தி. அவனின் செயலைக் கண்டு அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள்.

‘என் மச்சானா… இன்னொரு பெண்ணின் கையில் முத்தமிடுவது’ அவளால் தாங்க முடியவில்லை. அவளுக்கு, இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடியவில்லை…

முடியவில்லை என்பதை விட அதனைக் காணும் சக்தி இல்லை. அதுதான் அங்கிருந்து நகர எண்ணியவள், ரிஷியை காணவும் அவனை நோக்கி வந்தாள்.

ஆனால் அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன், அவளை இப்படி பலஹீனம் செய்தால் அவளால் என்னதான் செய்ய முடியும். பாவம்.

“சரி… சாப்ட்டு போங்க கீர்த்தி”

“இல்ல… இல்ல ரிஷி. நான் இன்னொரு நாள் வருகிறேன்” என்றவள் அவனைப் பாராமல் விலகி நடந்தாள்.

 செல்லும் அவனையே யோசனையாக பார்த்து நின்றான் ரிஷி.

“இங்க என்ன பண்ணுற ரிஷி” தியாகராஜ் அழைக்கவே,

“நத்திங் டாட்” என்றவன் அவருடன் சென்றான்.

ரிஷிபாவிடம் எதுவோ கூறிக் கொண்டிருந்தவனின் கண்கள் தற்செயலாய் வாசல் பக்கமாய் செல்ல, வாசல் பக்கம் நின்று இவனை பார்த்து நின்றிருந்த கீர்த்தி, அவன் இவளைப் பார்க்கவும் வேகமாய் வெளியே சென்றாள்.

‘இவ ஏன் இப்படி பார்த்தா?’ அவளது பார்வைக்கான அர்த்தம் அவனுக்கு புரியவேயில்லை.

“எல்லாம் ரொம்பச் சிறப்பா நடந்து முடிந்தது. ரொம்பச் சந்தோசம் தியாகராஜ் “ காரிகை தியாகராஜுடன் கூற. சந்தோசத்துடன் தலையை ஆட்டிக் கொண்டார்.

காரிகைக்கு மனம் நிறைந்துப் போனது. அவளின் ஆசை நிறைவேறிக் கொண்டிருந்தது.

தன் அப்பார்ட்மெண்ட் சென்று கட்டிலில் வந்து விழுந்த கீர்த்திக்கு மனம் மிகவும் பாரமாய் இருந்தது.

டேபிள் மேல் இருந்த போட்டோவில் தேவேந்திரன், அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

‘எப்படி மச்சான் உன்னால் மட்டும் இப்படி சிரிக்க முடியுது’ மனதில் அரற்றியவள், அவனை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

கொ(வெ)ல்வாள்.

நிலவை உரசும் மேகம் அந்த நினைவை நினைத்தே உருகாதா?

உயிரை பருகும் காதல் அது ஒரு நாள் உன்னையும் பருகாதா?

நீ முடிந்த பூவிலொரு இதழாய் வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்…

Leave a Reply

error: Content is protected !!