விழிகள் 04

விழிகள் 04
மனதை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்த மூச்செடுத்து, கைகளை மேலே உயர்த்தி, உடலை வளைத்து சக்கராசன யோகா இருப்பில் இருந்தாள் ஆத்விகா. யோகா செய்வதில் அவளுக்கோ அலாதி பிரியம்.
மனதின் கவனத்தை சிதறவிடாது அவள் யோகாவில் கவனத்தைச் செலுத்த, மாடியின் சுவருக்குப் பின்னால் நின்றவாறு தன்னவளையே இமைக்காதுப் பார்த்திருந்தான் மஹி. தற்போது அவளுக்கிருக்கும் நிதானம் எதனால் என்று இப்போது அவனுக்கு புரிந்தது.
சிறுவயதில் விடாது பேசிக்கொண்டு துறுதுறுவென்று இருப்பவளின் கோபத்தைப் பார்த்து மஹியே பயந்திருக்கிறான். அதுவும், அவளுடைய சண்டைகள் எப்போதும் அகஸ்டினுடன்தான். ஆனால், இப்போது வேலை வேலையென்று பொறுப்புடன் இருப்பது மட்டுமன்றி, அளந்து அளந்து அவள் பேசும் விதத்தில் சற்று அவனே ‘தன்னவள்தானா இது?’ என்று வியந்துதான் போனான்.
சுவற்றில் சாய்ந்து நின்று ஏதேதோ யோசித்தவாறு மஹி ஆத்விகாவையே பார்த்திருக்க, சரியாக மஹியின் அலைப்பேசிக்கு வந்த அழைப்பின் ஒலியில் திடுக்கிட்டு திரும்பினாள் ஆத்வி.
‘ச்சே! எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கு பாரு!’ முணங்கியவாறு எரிச்சலாக அழைப்பைத் துண்டித்தவன், “சோரி ஆதி.” என்றவாறு நிமிர, அவசர அவசரமாக நழுவியிருந்த ஆடையை சரி செய்தவாறு சங்கடத்துடன் எழுந்து நின்றாள் அவள்.
அதில் நாக்கைக் கடித்து சிரித்துக்கொண்டவன், அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளெதிரே சென்று நிற்க, “என்ன இந்த பக்கம் தீரா?” தன்னை சுதாகரித்துக் கேட்டாள் அவள். காலை வெயிலில் உடற்பயிற்சி செய்ததன் விளைவாக முகத்தில் வியர்வை முத்துக்கள் பூத்திருக்க, தேவதையாக ஜொலித்தவளின் முகத்திலிருந்து அவனால் பார்வையைத் திருப்ப முடியவில்லை.
“உன்னைப் பார்க்கதான். இன்னைக்கு மியூசியம் போகலாம்னு யோசிச்சேன். நீ ஃப்ரீயா இருந்தேன்னா…” மஹி விழிகளில் ஆர்வத்துடன் இழுக்க, “அது…” என்று புருவத்தை நீவி விட்டவாறு இழுத்தவளை குறுக்கிட்டு, “தேங்க்ஸ் ஆதி.” பட்டென்று குறும்பாகச் சொன்னான் அவன்.
அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு தன் அத்தை மாயாவின் நியாபகம்தான் வந்தது. “அப்படியே அத்தை மாதிரியே இருக்க.” சிரித்துக்கொண்டு சொன்னவள், “ஒன்னும் பிரச்சினை இல்லை தீரா, பட்… அகி ஆஃபீஸுக்கு போனதிலிருந்து நான் ஆஃபீஸ் பக்கமே போகல. ஃபோட்டோ ஷூட் அப்படி இப்படின்னு ரொம்ப பிஸியா இருந்தேன். நான் ஆஃபீஸ் போயிட்டு வந்ததும்…” என்று கேட்க வர, அவனே இடையிட்டு அதற்கும் பதிலளித்தான்.
“நானும் வரேன்.” மஹி பட்டென்று சொல்ல, ‘அய்யோ! என்ன இவன் வரேன்னு சொல்றான்!’ மானசீகமாக யோசித்தவாறு, “அது ஆங்…” என்று தயங்கிய ஆத்விகா, “ஷுவர்.” என்றுவிட்டு நகந்திருக்க, ‘இன்னைக்கு எப்படியாச்சும் நம்ம லவ்வ சொல்லிரணும்.’ இதயம் படபடக்க நினைத்துக்கொண்டான் மஹேந்திரன்.
ஐரா அலுவலகத்தில்,
“ச்சே! என்ன பண்ணணும், ஏது பண்ணணும்னு ஒரு மண்ணும் புரியல. அவங்க இஷ்டத்துக்கு டேபிள்ல பேப்பர வச்சிட்டு போயாச்சு. யேசப்பா… என்னை காப்பாத்து!’ கையிலிருந்த கோப்பை எரிச்சலாக புரட்டியவாறு மேனேஜரின் அறையை நோக்கி அகஸ்டின் விறுவிறுவெனச் செல்ல, அதற்குள் அதே மேனேஜர் சுந்தரின் கத்தும் சத்தம்!
“கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா? எவ்வளவு முக்கியமான பேப்பர்ஸ், குழந்தையாட்டம் கோஃபிய கொட்டி வச்சிருக்க. ரெகெமென்டேஷன்ல வேலைக்கு சேர்ந்து எங்க உயிரை வாங்க வேண்டியது!” சுந்தர் கத்த, சத்தம் வந்த திசையை நோக்கியவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கின. காரணம், சுந்தரத்திடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்த கருப்பும் நிற தேவதையே!
கைகளை பிசைந்தவாறு தலை குனிந்து நின்றிருந்தவளின் கூந்தல் அவள் வதனத்தை மறைத்திருக்க, ‘இந்த ஷேப்ப நான் எங்கேயோ பார்த்திருக்கேனே!’ தீவிரமாக யோசித்தவாறு சட்டை கையை மடித்து விட்டுக்கொண்டு சுந்தரத்தின் அருகில் சென்றான். ஆனால், அவள் முகத்தை கவனிக்கவில்லை அகஸ்டின்.
“மிஸ்டர்.சுந்தர், இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாமா?” அகஸ்டின் கேட்க, சுற்றியிருந்தவர்களின் பார்வையோ அகஸ்டினின் மேல்தான். அதுவும், பெண்களின் பார்வையை பற்றி சொல்லவே வேண்டாம்.
அகஸ்டின் சட்டென்று வந்து கேட்டதில் ‘இவன் எதுக்கு தலையிடுறான்?’ என்ற ரீதியில் ‘ஙே’ என அவனை ஒரு பார்வைப் பார்த்தவர், குரலை செறுமி “முக்கியமான ரிபோர்ட். அதுல கோஃபிய கொட்டிட்டா. என்ட், பண்ற வேலையும் தப்புத் தப்பா பண்றா. நமக்குன்னு வந்து வாய்ச்சிருக்குதுங்க.” எரிச்சலாக சொல்லி முடிக்க, “சோரி சொல்லுங்க மிஸ்டர்.சுந்தர்!” என்றான் அகஸ்டின் அழுத்தமாக.
அதில் அதிர்ந்தவர், “வய் ஷுட் ஐ? ஹவ் டேர் யூ…” மன்னிப்புக் கேட்கச் சொன்ன ஆத்திரத்தில் அகஸ்டினிடம் சுந்தர் கத்த, அவனுடைய பார்வை மட்டுமின்றி குரலிலும் நிதானமே பிரதிபலித்தது.
“பாராட்டுக்கள பொதுவா சொல்லணும். தப்பு பண்ணா அதை தனிப்பட்ட முறையில சொல்லணுங்கிற பேசிக் செனஸ் கூட இல்லாத நீங்க அந்த பொண்ணுக்கிட்ட சென்ஸ் பத்தி பேசுறீங்களா? என்ட், இது ஒன்னும் சில்லறை கடை கிடையாது. ஐரா கம்பனீஸ் வெறும் சில பேப்பர்ஸ்ஸ நம்பி பொழப்பு நடத்த மாட்டாங்க.” நிதானமாகச் சொன்னவன், “மிஸஸ்.மாயா ரோஹன் வர்க்கர்ஸ் மேல வச்சிருந்த மரியாதையாலதான் ஐரா கம்பனீஸ் பிஸ்னஸ் உலகத்துல முதலாவதா இப்போ வரைக்கும் இருக்கு.” சற்று பெருமிதத்துடனே சொன்னான்.
அகஸ்டினுக்கு தன் அத்தை மாயாவின் உழைப்பின் மீதுள்ள கர்வம் அப்படி!
தன்னெதிரே நின்றிருந்த பெண்ணை ஏறிட்டவர், ‘புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்?’ உள்ளுக்குள் பொறுமியவாறு அங்கிருந்து கோபமாக நகர, “மன்னிப்பு கேட்டுட்டு போங்…” என்று பேச வந்த அகஸ்டினின் வார்த்தைகள், “தேங்க்ஸ்.” என்ற மெல்லிய குரலில் சட்டென நின்றன.
திடுக்கிட்டு அந்தப் பெண்ணை அகஸ்டின் நோக்க, அவனெதிரே புன்னகையுடன் நின்றிருந்தாள் அலீஷா. “நீ… நீ அந்த வைட் சுடி பொண்ணுதானே?” பின்னந்தலையை தட்டியவாறு யோசித்து, அவள் சிரிப்புடன் தலையசைத்ததும், “ஓ… நீ இங்கதான் வேலை பார்க்குறியா?” அவளின் அனுமதி கூட கேட்காது அவள் கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையை தூக்கிப் பெயரைப் பார்த்தான்.
“அலீஷா…” அவனிதழ்கள் முணுமுணுக்க, அகஸ்டின் சட்டென்று நெருங்கி நின்றதில் ஒருவித படபடப்புடன் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் அலீஷா.
“ஆர் யூ ஓகே அலீஷா?” அவளின் பதட்டத்தில் சற்று அக்கறையுடனே அவன் கேட்க, “அது… அது பசிக்குது” விழிகளை தாழ்த்தி மெல்லிய குரலில் அவள் சொன்னதும், “கேன்டீன் போகலாம்.” என்றுவிட்டு அவன் பாட்டிற்கு முன்னேச் செல்ல, “அது… நான்…” என்று தடுமாறியவள், அவன் செல்வதைப் பார்த்து ஓடாத குறையாக பின்னால் வேகவேகமாக நடந்தாள்.
இரண்டு சேன்ட்வீச் தட்டுகளுடன் அவள் முன் அமர்ந்த அகஸ்டின், ஒன்றை அவளிடம் தள்ளிவிட்டு நாடியை நீவி விட்டவாறு அலீஷாவை ஆழ்ந்து நோக்க, வேகமாக அதை சாப்பிட ஆரம்பித்தவளுக்கு தன்னெதிரே ஒருவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதே மறந்துதான் போனது.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் விழிகளை மட்டும் உயர்த்தி தன்னெதிரே அமர்ந்திருந்தவனை அவள் ஏறிட்டுப் பார்க்க, “நீ ஏன் அப்படி கேட்ட?” அகஸ்டின் சட்டென்று கேட்டதும், அவளோ புரியாது விழித்தாள்.
“ச்சே! அதான் அன்னைக்கு ராத்திரி… நியாபகம் இருக்கான்னு…” அவன் அலீஷாவுக்கு புரிய வைக்க முயல, முதலில் அதிர்ந்து பின் திருதிருவென விழித்தவள், பதில் பேசாது சாப்பிடுவதில் கவனமானாள். வார்த்தைகள் எதுவுமின்றி விழிகளாலே அவள் வெளிப்படுத்தும் பாவனையில் அசந்து போய்விட்டான் அகஸ்டின்.
அதுவும், அவள் பதிலளிக்காது சாப்பிடுவதில் அவனுக்கு சற்று எரிச்சலாக, விரலை நீட்டி ஏதோ பேச வந்தவன், “என்னை நிஜமாவே மறந்துட்டீங்களா?” சாப்பிடுவதை நிறுத்தி மீண்டும் அதே கேள்வியை அவள் கேட்டதில் திடுக்கிட்டுப் பார்த்தான்.
“எனக்கும் நம்மளோட மீடிங் முதல் தடவையா தோனல. இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கோமா என்ன?” அகஸ்டின் யோசித்தவாறு கேட்க, ஒருகணம் விரிந்த அவள் விழிகள் அடுத்தகணம் புன்னகைக்கு தாவ, “ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்!” சட்டென்று அலீஷா சொல்லவும், அதன் அர்த்தம் புரியாது ‘ஙே’ என ஒரு பார்வைப் பார்த்தான் அவன். “
“ஆழமா யோசிச்சா எல்லாமே புரியும்.” பொடி வைத்து அவள் பேசியதில் குழம்பிப் போனவன், நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொள்ள, அவனுடைய பாவனையில் கிளுக்கி சிரித்துவிட்டாள் அலீஷா.
மீண்டும் அவளை கூர்ந்து நோக்கியவாறு, “அலீஷா… நேம் ரொம்ப வித்தியாசமா இருக்கே!” சேன்ட்விச்சை வாயில் திணித்தவாறு கேட்க, “அம்மா தமிழ்நாடு, அப்பா ராஜஸ்தான். அலீஷா அப்பாவோட அம்மா பேரு.” புன்னகையுடன் சொன்னாள்.
“ஓஹோ! என் அப்பா இந்தியா, அம்மா இத்தாலி. அவங்க கூட…” தன் தாயைப் பற்றி சொல்ல வந்த அகஸ்டின், பின்னரே உணர்ந்து ‘அய்யய்யோ! கன்ட்ரோல் அகி’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பேச்சை நிறுத்தினான். பின், “போகலாமா?” என்று கேட்டு அவன் பாட்டிற்கு எழுந்து முன்னோக்கி நடக்க, கைகளை தட்டியவாறு மீண்டும் ஓடாத குறையாக வேகவேகமாக நடந்து சட்டென்று அவன் கரத்தை பற்றிக்கொண்டாள் அலீஷா.
அவள் கரத்தை பற்றியதில், அகஸ்டின் புரியாது நோக்க, “இது பல ஜென்ம பந்தம் தினு.” என்ற அவளின் வார்த்தைகளில் ‘என்ன உளறுது இந்தப் பொண்ணு?’ என்றுதான் அகஸ்டினுக்கு நினைக்கத் தோன்றியது.
ஆனால், இங்கு இருவரின் விடாத பார்வையையும் பற்றியிருந்த கரத்தையும் ஒரு ஜோடி விழிகள் சற்று கடுப்போடு பார்த்துக்கொண்டிருந்தது.
“ஆதி…” என்ற அழைப்பில் சட்டென திரும்பிய அந்த விழிகளுக்குச் சொந்தமான ஆத்விகா, மஹியைப் பார்த்ததுமே முகபாவனையை மாற்றி புன்னகைக்க, “அந்த பக்கி அவனோட இடத்துலயே இல்லை ஆதி…” என்று சொல்லிக்கொண்டே வந்தவன், அப்போதுதான் கரத்தைக் கோர்த்து நெருங்கி அலீஷாவுடன் நின்றிருந்த அகஸ்டினை கவனித்தான்.
“அடங்கொப்புரானே! இவன் இன்னுமா திருந்தல்ல!” மஹி வாயிலே கை வைத்துக்கொள்ள, ஆத்வியிடம்தான் எந்த பதிலுமில்லை. இறுகிய முகமாக அவர்களின் நெருக்கத்தை பார்த்திருந்தவளுக்கு, ஒருகட்டத்தில் முடியாமல் போக, விறுவிறுவென நடந்து முன்னோக்கிச் சென்றாள்.
‘என்ன இவ அவ பாட்டுக்கு போறா?’ ஆத்விகா செல்தைப் புரியாதுப் பார்த்து யோசித்தவன், “ஏய் ஆதி…” கத்தியவாறு அவள் பின்னால் ஓடி அவள் முழங்கையைப் பிடித்து இழுத்தெடுத்தான். அதில் அவன் மார்பில் முட்டி மோதி நின்றவள், “ஷ்ஷ்… வாட்?” கோபத்தில் கத்திவிட, மஹிக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“சோ…சோரி” திணறலோடு அவன் வார்த்தைகள் வெளிவர, அப்போதுதான் தான் நடந்துக்கொண்ட விதத்தை உணர்ந்த ஆத்வி, “தீரா, ஐ அம் சோரி. அது ஏதோ டென்ஷன்ல…” தயக்கமாக மன்னிப்பு வேண்ட, “தட்ஸ் ஓகே ஆதி, உடம்புக்கு ஏதும் முடியலயா? வீட்டுக்கு போகலாமா?” காதல் கலந்த அக்கறையோடு அவள் கன்னத்தை தாங்கியவாறு கேட்டான் மஹி.
ஆனால், கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் காதலுக்காக ஏங்குபவள், சற்றும் அவளெதிரே இருந்த காதலை உணரவேயில்லை.
ஒருவித அசௌகரியத்தில் அவனின் கையை தட்டிவிட்டவள், “வீட்டுக்கு போகலாமா?” தீவிரமாக யோசித்தவாறுக் கேட்க, சரியாக அலைஸிடமிருந்து ஆத்விகாவுக்கு வந்த குறுஞ்செய்தியில் மஹியை இழுத்துக்கொண்டு அலைஸின் கேபினிற்குச் சென்றாள் அவள்.
மஹி உள்ளே நுழைந்ததுமே, “வெல்கம் டூ யூவர் ப்ளேஸ் மஹேந்திரன் சீ.ஈ.ஓ ஆஃப் ஐரா” அலைஸ் உற்சாகமாக வரவேற்க, புன்னகைத்தவன் தன் அப்பாவைப் போல் ஒரே வார்த்தையில், “நொட் இன்ட்ரஸ்டட்.” என்று முடித்து, “அதான் அகி இருக்கானே!” என்று குறும்பாகச் சொன்னான்.
“ஓ கோட்! இத்தாலில சீ.பீ.ஐ ஆ இருந்தப்போ நிறைய கேஸ் ஹேன்டில் பண்ணியிருக்கேன். எத்தனையோ க்ரிம்னல்ஸ்ஸ பார்த்திருக்கேன். சமாளிச்சிருக்கேன். ஆனா, இவனை சமாளிக்குற அளவு எதுவும் எனக்கு கஷ்டமா இருந்தது கிடையாது. இட்ஸ் சோ டிஃபிகல்ட் டூ ஹேன்டில் ஹிம்.” இருபக்கமும் சலிப்பாக அலைஸ் தலையாட்ட, முன்னிருந்த மனநிலை மாறி ஆத்விக்கு கூட லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“ஆனா…” ஏதோ யோசித்தவாறு இழுத்த அலைஸ், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேனேஜர் சுந்தர் அகி மேல கம்ப்ளைன்ட் மேல கம்ப்ளைன்ட் பண்றாரு. பட், கீதாக்கிட்ட நான் விசாரிச்ச வரைக்கும், அந்த பொண்ணுக்காக அவன் பேசினது தப்பு கிடையாது. என்ட் மஹி, உன் அப்பாவோட வாழ்க்கைய மாத்தினது உன் அம்மாதான். மாயா மாதிரி யாராலேயும் இருக்க முடியாது. ஷீ இஸ் அ பெஸ்ட் லவர். அதேமாதிரி ஒருவேள, அகி வாழ்க்கையோடு டர்னிங் பொய்ன்ட் கூட ஒரு பொண்ணு கையிலதான் இருக்கோ என்னவோ?” புன்னகையுடன் சொல்லி முடித்தார்.
அலைஸ் சொன்ன வார்த்தைகள்தான் முன்சீட்டில் மஹி பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்வியின் எண்ணம் முழுவதும். கூடவே, அலீஷாவுடன் அகியை நெருக்கமாக பார்த்த காட்சியும்தான் அவளின் மனக்கண்ணில் விம்பமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த மஹியின் விழிகளோ தன்னவள் மீதுதான். மனமும் ‘காதலைச் சொல்!’ என்று அவனை உந்த, இதயம் படபடவென அடித்துக்கொண்டது.
‘மஹி, ஆல்ரெடி டூ லேட். இப்போவாச்சும் சொல்லுடா! ஆல் த பெஸ்ட். கம் ஆன்.’ தனக்குத்தானே சொன்னவாறு காரை வீதியோரமாக நிறுத்தியவன், “ஆதி… அது வந்து…” எப்படி சொல்வதென்று தெரியாது திணற, “ஐ ஹேவ் டூ சே சம்திங், ஐ லவ் அகி.” பட்டென்று சொன்னாள் ஆத்வி.
முதலில் அவள் சொன்னதில் கேள்வியாக நோக்கியவன், அடுத்து அவள் சொன்ன விடயத்தில் ஆடிப் போய்விட்டான். அதிர்ந்து விழித்தவனுக்கு, வாழ்வே சூனியமானது போலாகிவிட்டது . ஆனால், ஆத்வி கொஞ்சமும் அவனின் முகத்தை கவனிக்கவில்லை. கூடவே, அவளின் வார்த்தைகளால் கதறியழும் அவன் மனதையும்.
அவனை நோக்கி உடலை வளைத்து அமர்ந்தவள், “தீரா, ப்ளீஸ் ஹெல்ப் மீ. சின்னவயசுல அவன் கூட அடிக்கடி சண்டை போடுவேன். பட், எப்போ காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியல. அவன்கிட்ட என்ன பிடிச்சிப்போய் காதலிச்சேன்னு கூட எனக்கு தெரியல. பட் ஐ க்னோ, ஐ லவ் ஹிம்.” வெட்கச் சிரிப்போடு சொல்லி முடிக்க, பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான் மஹேந்திரன். இதயத்தை கசக்கி பிழியும் காதல் வலியை முதல் தடவை உணர்கிறான்.
“என்ன அமைதியா இருக்க? ஏதாச்சும் சொல்லு! அவனுக்கு என்னை பிடிக்கும்ல?” அவள் ஒருவித எதிர்ப்பார்ப்போடுக் கேட்க, அவனுக்கு வார்த்தைகள் வந்தால் தானே!
இதயத்திலிருந்து தொண்டையை ஏதோ அடைப்பது போலிருக்க, எச்சிலை விழுங்கி அந்த வலியை முயன்று தாங்கிக்கொண்ட மஹி, புன்னகைக்க முயல, இதழ்கள் கூட பொய்யாக விரிய மறுத்தன.
“அவ…அவன் கண்டிப்பா புரி…ஞ்சிப்பான் ஆதிம்மா. நா…நான் இருக்கேன் உனக்காக.” வார்த்தைகளை கோர்த்து அவன் திக்கித்திணறிச் சொல்ல, அவனைத் தாவி அணைத்த ஆத்விக்கோ சந்தோஷம் தாளவில்லை.
“தேங்க் யூ சோ மச் தீரா. ஆஸ் அ ஃப்ரென்டா ஐ லவ் யூடா.” அத்தனை சந்தோஷத்தோடு அவளின் வார்த்தைகள் வெளிவர, “தட்ஸ் மை ப்ளெசர் ஆதிம்மா.” அவன் இதழ்கள் சொன்னாலும், மனமோ ‘ஏன் ஆதிம்மா என்னை பிடிக்கல. முடியலடி, ரொம்ப வலிக்குது.’ ஊமையாகக் கதறியழுதது.