💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 18💋

eiHO4LK40803-1f942ece

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 18💋

அத்தியாயம் 18

 

பல வருடங்கள் கழித்து காணக் கிடைத்த தந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் வீட்டிற்கு வந்தனர். 

 

வீட்டிற்கு வந்து முதல் வேலை வேர்லினிடம் தந்தையின் படத்தை காட்டினாள். வேர்லின் பார்த்தவுடன் சந்தோசமடைந்தாள். ஆனால் பூரித்து போகவில்லை. “இப்போவாவது கிடச்சாரே அது வரைக்கும் நிம்மதி” என்றாள். 

 

“என்ன வேர்லின் அப்படி பேசுற, டாடி கிடச்சது உனக்கு சந்தோஷம் இல்லயா?” தந்தை கிடைத்த மகிழ்ச்சி அவளிடம் அவ்வளவாக தெரியவில்லை என்று பியானா விளம்பினாள்.  

 

“சந்தோஷம்தான் அக்கி, நீதான் இந்தியாக்கு வந்து ரிஸ்க் எடுத்து டாடிய தேடின, என்னையும் படிக்க வச்ச, நீயே எனக்கு மம்மி டாடியா இருந்ததனால எனக்கு பெருசா ஏக்கம் இல்ல அக்கி, நீ  பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடச்சிட்டு அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம்” என்று வேர்லின் கூறினாள். 

 

****

மறுநாள் காலை மணி ஒன்பது, “பியூ, வேர்லின் கிளம்பலாம்” என்றான் புறஞ்சேயன்.  

 

வேர்லின் முடியாத நிலையில் இருந்தாலும் மாத்திரைகளை உண்டு விட்டு கிளம்ப, தம்பதியரும் தாயராகியிருந்தனர். 

சீருந்தை செலுத்திக்கொண்டே வேர்லினிடம் பேசினான் புறஞ்சேயன், “இதுக்கு அப்பறம் இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்காத வேர்லின்” என்று எடுத்துரைத்தான். 

 

“ஓகே மாம்ஸ், லக்ஷு அக்காவ காப்பாத்த வேற வழி தெரியல அதான் அப்படி பண்ணேன்” என்று கூறினாள் வேர்லின். 

 

“உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது குட்டி” என்று அக்கறையுடன் கேட்டாள் பியானா.

 

“ஒரு தடவை குடிச்சா ஒன்னும் ஆகாதுன்னு தெரிஞ்சிதான் குடிச்சேன் அக்கி” 

 

“டாக்டருக்கு படிக்கிறேனு கண்டதையும் இதுக்கு அப்புறம் பண்ணாத குட்டி ” என்று கூறினாள் பியானா. 

 

“சரி” என்று தலையை ஆட்டினாள் வேர்லின்.

 

சிறிது நேரத்தில் மருந்துவமனையை அடைந்தனர். 

வேர்லினுக்கு முதலிலேயே தந்தையின் நிலை பற்றி பியானா கூறியிருந்தாள். ஆதலால் நேராக கோப்புகளை பார்வையிட சென்றிருந்தாள் வேர்லின். 

 

தந்தையை மருத்துவமனைக்கு சேர்த்த பாதுகாவலர் வருதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்க, இவர்களை காத்திருக்குமாறு மருத்துவர் கூறினார். 

 

“அக்கி, டாடிக்கு ஒன்னும் இல்ல. நிறைய கவலைகள் அவருக்குள்ள இருக்கு. அதான் அப்படி இருக்காரு  அதர்வைஸ் நோ ப்ராப்ளம்” வேர்லின் கூறியதை கேட்டு பியானாவிற்கு சற்று நிம்மதி. 

 

சிறுவயதில் தந்தையை பார்த்திருந்த வேர்லினுக்கு அவ்வளவாக தந்தையின் முகம் நினைவில் இல்லை. பார்த்தவுடன் பியானா தந்தை என்று கூற “ஹெல்லே… டாட்!” என்று கைகளை குலுக்குவதற்கு நீட்டினாள். 

 

அவரோ பிரம்மை பிடித்தாற்போல் வேறுபுறத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். 

 

“கைகூட கூடுக்கமாட்டாரா?” என்று வாயை பிதுக்கி கண்களை விரித்தாள் வேர்லின். 

 

“டாடி…, அன்வி வந்துருக்கா, பாருங்க டாடா” என்றாள் பியானா. 

 

“மாமா இப்படிதான் இருக்காரு, பியூவும் எவ்வளவோ பேசி பார்த்துட்டா எந்தவித ரியாக்ஷனும் இல்ல” என்று கைகளை தளர்த்தினான் புறஞ்சேயன். 

“டாட், உங்களுக்கு பிசிகல்லி நோ ப்ராப்ளம். நீங்க கொஞ்சம் எங்கள ஞாபகப்படுத்தி பாருங்க. டிரை பண்ணுங்க” என்றுரைத்தாள் வேர்லின். 

 

வேர்லின் கூறுவதை கேட்டு எழுந்து நின்ற ஜான், “எனக்கு யாரையும் தெரியாது. என்னை நிம்மதியா இருக்கவிடுங்க” என்று சத்தமாக சொல்லிவிட்டு மீண்டும் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்து கொண்டார். 

 

மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  நேற்று வரை ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. வேர்லின் பேசியது அவ்வளவு கோபத்தை மூட்டியது அவருக்கு. 

 

“நான் என்னத்த கேட்டுட்டேன் அதுக்கு ஏன், டாட் இப்படி கத்துறாரு?” என்றவளுக்கும் சலனம். தான் பேசியதில் தந்தை கோபம் அடைந்தது. 

 

“விடுடா, அவங்க ஏதோ தெரியாம பேசுறாங்க” என்றாள் பியானா. 

 

அதற்கு பிறகு வேர்லின் எதுவும் பேசுவதாக இல்லை. 

 

அங்கு வேலைபார்க்கும் ஒருவரிடம் பியானாவையும் புறஞ்சேயனையும் அழைத்து வருமாறு மருத்துவர் கூறியிருந்தார். 

 

“கார்டியன் வந்துட்டாரு போல வா போயிட்டு வரலாம்” என்று புறஞ்சேயன் தன்னவளின் கையை பிடித்து கொண்டு வந்தான். வேர்லின் தந்தையுடன் அமர்ந்துகொண்டாள். 

 

அங்கு சென்று பார்த்தால், “நீங்க இப்படி உட்காருங்க. கார்டியன கூப்பிடுறேன்” என்றார் மருத்துவர்.

 

“சார் உள்ள வாங்க…” என்று பாதுகாவலரை உள்ளே அழைத்தார். 

 

உள்ளே நுழைந்தவரை பார்த்து இருவரும் அதிர்ந்தனர். 

 

“அப்பா… நீங்க எங்க இந்தபக்கம்!” என்றான் புறா.

 

“நான் வாரது இருக்கட்டும். நீங்க ஏன் மென்டல் ஆஸ்பிடல் வந்தீங்க?” என்று வினவினார் புகழ். 

 

என்ன இது குழப்பம் புகழ்முரசன் அங்கு வந்ததன் நோக்கம் என்னவாக இருக்கும். 

 

“பியானாட அப்பா கிடச்சிட்டாங்க. அப்பா” என்று புறஞ்சேயன் கூறினான். 

 

“அப்படியா, எவ்வளோ நல்ல விஷயம். கேக்கும் போது சந்தோஷமா இருக்கு” என்று கூறிமுடித்தார் புகழ்.

 

“நீங்க ஏன், இங்க வந்தீங்க அப்பா?”  என்று வினவினான் புறஞ்சேயன். 

 

“இங்க நான் ஒரு பேஷன்ட்ட எட்மிட் பண்ணேன் பா. அதான் இங்க வந்தேன்” 

 

“நல்லாத போச்சு இவங்கதான் உங்க அப்பாவா? நீங்க தேடிவந்த    பேஷன்டோட கார்டியன் கூட இவர்தான்!” என்று கூறினார் வைத்தியர். 

 

பியானாவும் புறஞ்சேயனும் அதிர்ந்திருக்க, “அப்பா…!” என்றாள் புகழ்முரசனை பார்த்து. 

 

“என்னமா” என்றார் புகழ்.

 

“என் டாடிய உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று வியந்து சாதுவாக கேட்டாள். 

 

“நீ உன் அப்பாவ என் கண்ணுல காட்டவே இல்லயே” என்றார் புகழ்.

 

“இல்லப்பா” என்று புகழிடம் நடந்தவற்றை தெள்ளத்தெளிவாக கூறினான் புறஞ்சேயன். 

 

“என்ன சொல்லுற,  நான்  ஆஸ்பிடல்ல சேர்த்த பேஷன்ட் பாப்பாவோட அப்பாவா!” என்றவர் வியந்து நின்றார் புகழ். 

 

“ஆமா அப்பா” என்றாள் பியானா. 

 

“ஊட்டில பிசினஸ் விஷயமா போயிட்டு வரும் போது போர்ட் ஹவுஸ் பக்கம் போயிருந்தேன். அங்கதான் உங்க அப்பாவ பார்த்தேன். மயங்கி கீழ கிடந்தாரு. என்ன ஏதுன்னு தெரியல விட்டுட்டு வரவும் மனசு வரல. என்ன நடந்தாலும் பரவால்லன்னு ஊட்டி ஆஸ்பிடல்ல எட்மிட் பண்ணி பார்த்தேன். எதும் பேசமாட்டாரு என்னை எப்போ பார்த்தாலும் நன்றி சொல்லுவாரு. அவருக்கு பழசு எதுவுமே ஞாபகம் இல்லனு சொல்லுவாரு.  நான் அடிக்கடி ஊட்டிக்கு போக மாட்டேன். அதான் சென்னைக்கு மாத்திட்டேன். மன்னிச்சிருமா, எனக்கு உன்னோட அப்பானு தெரியாதுமா, தெரிஞ்சா முன்னாடியே சொல்லிருப்பேன்” என்று வருந்தினார் புகழ்.

 

அவர் முன்னாடி நின்ற பியானா புகழை பார்த்து கை எடுத்து கும்பிட்டு, “எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலப்பா,  ஜீசஸ் எம்முன்னாடி நிக்கிற மாதிரி இருக்கு. நீங்க டாடிய காப்பாத்துட்டீங்க சோ இப்போ கிடச்சாரு. இல்லன்னா இந்நேரம் எங்க இருப்பாரு எப்படி இருப்பாருன்னு சொல்ல தெரியல.

நானும் நெடுங்காலம் தேடிக்கிட்டு கூட இருந்திருப்பேன். உங்களுக்கு என்ன கைமாறு பண்ணபோறேனு தெரியலப்பா” என்று அவள் இதயம் கனிந்து நன்றி கூறினாள். 

 

“எனக்கு பண்ண வேண்டிய கைமாறு ஒன்னே ஒன்னுதான்!” என்று புகழ் சிரித்த வண்ணம் கூறினார். 

 

“என்னனு சொல்லுங்கப்பா. கண்டிப்பா பண்ணுறேன்” என்ற பியானா எதுவாக இருந்தாலும் செய்திடலாம். என்று எண்ணிக்கொண்டாள்.

 

“என் பையன் கூட சந்தோஷமா இருமா அது போதும்” என்று புன்னகைந்தார். 

 

மருத்துவருக்கு நன்றி கூறிவிட்டு அறையை விட்டு நகர்ந்தனர். 

 

வேர்லினிடம் நடந்தவற்றை கூறி மகிழ்ந்தான் புறஞ்சேயன்.

 

ஜானிடம் புகழ், “இப்போ சந்தோஷமா இருக்கீங்களா, உங்க பசங்க எல்லாம் வந்துட்டாங்கதானே” என்று அவர் மகிழ்ச்சியோடு கூறினார். 

 

“நீங்க என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி, எனக்கு பசங்க இருக்காங்களா, அப்படி ஒன்னும் ஞாபகம் இல்லயே!” என்று தன்னிலை மறந்ததால் அப்படி கூறினார் ஜான். 

 

பியானாவிற்கு வேர்லினிற்கும் தந்தை கூறிய வார்த்தை கூர்மையாய் நெஞ்சை குத்தியது. 

தந்தை என்றோ ஒரு நாள் பழைய நிலையிற்கு திரும்புவார் என்று நினைத்துக்கொண்டாள் பியானா. 

 

வேர்லினோ, “இதுக்கு டாடி கிடக்காமலே இருந்து இருக்கலாம்” என்று கூற,

 

“வேர்லின்…!” என்று கோபமாக வேர்லினை அதட்டினாள் பியானா. 

 

“நீ சும்மா கத்தாத, எங்கள தெரியலனு சொன்னாலும் பரவாயில்ல. அதுக்கு ஏன் இப்படி எரிஞ்சு விழனும். நான்தான் உங்க அப்பாவானு கேட்டா அது நியாயம்.  பட், டாடி அப்படி கேக்கலயே…” என்றாள் வேர்லின்.

 

வேர்லின் கூறுவதை நியாயமாய் உணர்ந்தான் புறஞ்சேயன், “ஓகே இப்போ இதெல்லாம் பேச வேணாம். கொஞ்சநாள் போகட்டும் பார்த்துக்கிலாம்” என்று அந்நிலையை அமைதி படுத்தினான். 

 

புறஞ்சேயன் வினயிற்கு அழைப்பை விடுத்து நடந்த நற்செய்தியை கூற,வினையும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்.

 

தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு எற்பாடுகளை செய்திருக்க, அதனை தந்தை மறுத்துவிட்டார். “நான் இங்க தான் இருப்பேன். நான் யார் வீட்டிற்கும் வரமாட்டேன். எனக்கு யாருமே கிடயாது” என்று தீவிரமாக கூறிவிட்டார் ஜான். 

 

‘இத்தன நாள் நான்தான் யாரும் இல்லனு சொல்லிட்டு இருந்தேன். இப்போ டாடி இப்படி சொல்லிட்டு இருக்காரு’ என்று எண்ணிக்கொண்டாள் பியானா. 

 

இப்படியே நாட்கள் சென்றிருக்க, தினம் தினம் வந்து தந்தையை பார்வையிடுவது வழக்கமாக கொண்டனர் பியானாவும் புறஞ்சேயனும். வேர்லின் அவ்வப்போது தலையை காட்டுவாள்.

 

****

 

தம்பதியர் அறையில், பியானாவின் முகத்தில் சலனத்தை உணர்ந்தவன் தந்தையின் நிலையை எண்ணிதான் இப்படி இருக்கிறாள் என்று உறுதி செய்துகொண்டான். 

 

“ஓய் பொண்டாட்டி…” என்று தேன் இனிக்கும் குரலில் அழைத்தான் தன்னவளை.

 

“என்ன சார்?” என்றாள் சாதூவாக பியானா.

 

“என்னாது, சாரா… இத்தன நாள் சார்னு கூப்பிட்ட நான் சும்மா இருந்தேன். இப்போதான் அப்பா கிடச்சிட்டாரே இன்னும் என்ன? சாரு, மோரு, தயிரு, பாலுனு கடைஞ்சி கிட்டு இருக்க. உன் செல்ல புருசன செல்லமா கூப்பிடலாம் தானே… யாரும் கூப்பிடதா மாதிரி செல்லாமா கூப்பிடேன் எனக்கும் உன் வாயால கேக்க ஆசையா இருக்காதா?” என்றவன் கண்களால் தன்னவளை ஈர்த்து ஏக்கத்தோடு கேட்டான்.

 

‘ஐயையோ… இவர் திடீர்னு இப்படி கேக்குறாரே’ ஆழ்ந்து சிந்திந்தவள்.

“என்னங்கனு கூப்பிடட்டுமா?” என்று அவனிடம் அப்பாவியாய் கேட்டாள். 

 

“ஐய்யோ… எவ்ளோ செல்லமா இருக்கு” அவனோ பெரும்பாவி அவள் தலையில் குட்டு வைத்தான்.

 

“இஸ்ஸ்… வலிக்குது” 

 

“செல்லமா கூப்பிடுனு சொன்னா, என்னங்கனு கூப்பிடுவாளாம். வேற ஏதாவது யோசி பியூ” பணிந்தான் கூறினான்.

 

‘வேற ஏதாவது சொல்லாட்டி அதுக்கும் குட்டுவானே’ என்று மனதில் எண்ணியவள். 

 

“ஹா.. ஒன்னு கிடச்சிருச்சி…” 

 

“சொல்லு… சொல்லு” ஆர்வமாய் ஏங்கி நின்றான். 

 

“சேயா… இது எப்படி இருக்கு?” என்றவள் கண்கள் விரிந்தது.

 

“சேயா… மலபார் சாயா…, நல்லாவே இல்ல. நான் உன்ன எப்படி எல்லாம் கூப்பிடுறேன். பியூ, பியோர் கோல்ட், பொண்டாட்டி. இப்படி எத்தன கூப்பிடுறேன். உனக்கு ஒன்னு கூடவா தோனல” என்று தன்னவளை சிந்தனையில் ஆழ்த்தினான். 

 

இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, “பேசாமா நானும் புறானு கூப்பிடட்டா?” என்று மென்மையாய் கேட்டாள். 

 

“கேக்கல..” என்று அவளை சீண்டினான். 

 

“புறானு கூப்பிடட்டா?” என்றாள் சத்தமாக பியூ.

 

“எனக்கு காது கேக்காது பியூ” 

 

“புறா…” என்றாள் நான்கு சுவரை முட்டி எதிரொலிக்கும் வகையில் கூறினாள். 

 

“ஏன்… புறானு கூப்பிடனும்” என்று எதிர்பாரா விதமாக அவள் தோள்ப்பட்டையின் புறம் இருக்கும் மேல் ஆடையை கீழே இழுத்து உள்ளாடையை கையில் பற்றி, “இப்படி கூப்பிடேன்” என்றான்.

 

அவன் கையை தட்டி விட்டவள் உடனே ஆடையை சரிபடுத்தினாள்.

“எ..எ…என்ன சார் பேட் டச் பண்றீங்க” என்ற கூறிமுடிக்க இதயம் படபடத்து ஓரிரண்டு  மூச்சு வாங்கியது பாவைக்கு. 

 

“அப்புறம், செல்லமா கூப்பிடுனு சொன்னா புறா, …. சொல்லிட்டு இருக்க” என்று தன்னவளை வம்பிழுப்பதற்காக திட்டினான்.

 

“அப்படி, எப்படி கூப்பிட முடியும்! அதுக்காக என்னைய பேட் டச் பண்ணாதீங்க” என்று தலை குனிந்தவாறு கூறினாள். 

 

“தெரியுதுல அப்படி கூப்பிட முடியாதுன்னு. யாருமே என்னைய கூப்பிடாத மாதிரி கூப்பிட சொல்லுறேன். நீ புறானு சொல்லுற அப்போ எனக்கு கோபம் வராதா, எது பேட் டச், நான் உன்ன தொட்டதா, யார் சொன்னா?” என்றவனுக்கு பொண்டாட்டியை அப்படி தொட்டது தப்பாக தோனவில்லை.

 

“எங்க அம்மா சின்ன வயசுல சொல்லி குடுத்தாங்க” என்று பெதும்பை போல் கூறினாள்.

 

“அப்போ நீ சின்ன புள்ள, இப்போ எனக்கு பொண்டாட்டி, கட்டின புருசன் தொட்டா பேட் டச் கிடயாது” 

 

“இல்ல அது பேட் டச் தான் எனக்கு தெரியும்” என்றவள் பிடிவாதமாய் நின்றாள். 

 

“நோ புருசன் தொட்டா அது குட் டச்”

 

“இல்ல பேட் டச்” என்று இருவரும் வாதாடிக்கொண்டிருந்தனர். இவற்றை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தான் புறா.

 

“அப்போ இது” என்று தன்னவள் இடையை பற்றி தன்னோடு அணைத்துக்கொண்டான்.  பாவையோ பாவமாய் அவன் பிடியில் சிக்குண்ட மீனாய்  பதிலின்றி துடித்தாள்.

 

“புருசன் பொண்டாட்டிகுள்ள ஆயிரம் டச் இருக்கும் அதெல்லாம் பேட் டச்னு சொல்லக்கூடாது. உங்க அம்மா சின்ன வயசுல கத்துக் குடுத்ததெல்லாம் ஓகே. குமரினு நினைச்சு கல்யாணம் பண்ணினா நீ குழந்தையா இருக்கியே. இனி நான் கொஞ்சம் கொஞ்சமா குட் டச், பேட் டச்  கத்து தாரேன். இப்போ நான் புடிச்சிருக்கிறது குட் டச் ஓகே வா” என்றவன் மெல்லிய குரலில் கூறி நுண்ணிடையை கூர்ந்து பார்த்தான். 

 

அவள் தலை குனிந்தவாறு நிற்க, “எங்க… எனக்கு இன்னும்  செல்லப்பேர் வைக்கல. நீ எனக்கு செல்லபேர் வச்சாதான் இந்த இடத்த விட்டு நகரலாம்” என்று தீவிரமாக கூறிவிட்டு அவள் இதழ் கூறும் செல்லப்பெயரை கேட்க காத்திருந்தான் காதலன். 

 

***

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!